சுவனம் நுழைவதற்கான வழி

- நதா பின்து நவ்பான் 

من اسباب دخول الجنة
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى»، قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَمَنْ يَأْبَى؟ قَالَ: «مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى
(اخرجه البخاري)

நபி ஸல்லல்லாஹு அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். எனது உம்மத்தில் மறுத்தவர்களை தவிர அனைவரும் சுவனம் நுழைவார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே யார் தான் (சுவனம் நுழைய ) மறுப்பார்கள் என நபி தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் யார் எனக்கு கட்டுப்பட்டாரோ அவர் சுவனம் நுழைந்துவிட்டார். யார் எனக்கு மாறு செய்தாரோ அவர் நிச்சயமாக (சுவனம் செல்ல) மறுத்துவிட்டார் என்று கூறினார்கள்
(ஆதாரம்: புகாரி)


அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) பற்றிய அறிமுகம்:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறந்த ஆண்டு ஹிஜ்ரி 12 ஆகும் 
· இவர் எமன் நாட்டைச் சேர்ந்தவர்
· இவர் சுமார் 5,374 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
· அறிவைத் தேடுவதில் அதிக ஆர்வம் கொண்ட அதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த நபித்தோழர்களில் இவரும் ஒருவர்
· இஸ்லாத்தை ஏற்க முன் இவருடைய பெயர் அப்துஷ்ஷம்ஸ் (சூரியனின் அடிமை).
· இவர் இளைஞராக வாழும் காலகட்டத்தில் ஒரு செல்வ பெண்மணியிடம் பணியாளராக இருந்தார்கள்.
· இஸ்லாத்தில் இணைந்த பின் நபிகளார் அப்துல் ரஹ்மான்  என்று பெயரிட்டார்.
· இவருக்கு அபூஹுரைரா (பூனையின் தந்தை) என்று நபிகளார் புனை பெயர் சூட்டினார்கள்.
·
· கலிபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சியின் போது பஹ்ரைனின் ஆளுநராக பணியாற்றினார்.
· அபூஹுரைரா (ரழி) ஹிஜ்ரி 57 இல் தமது 78வது வயதில் மதினாவில் மரணமுற்றார்.
· இவர்  பகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
இந்த ஹதீஸ் மூலம் பெற்றுக்கொண்ட படிப்பினை
நாம் நபியவர்களை அல்லாஹ்வின் தூதர் என சாட்சி கூறினால் நான்கு விடயங்கள் கடமையாகும்
1) அவர் அறிவித்தவற்றை உன்னை படுத்துதல்
 2) அவர் ஏவியவற்றை எடுத்து நடத்தல்
 3)அவர் தடுத்தவற்றை விட்டும் விலகி வாழ்தல் 
4) அவர் காட்டிய விதத்தில் மட்டுமே அல்லாஹ்வை வழிபடுதல்

இந்த அடிப்படையில் சுன்னாவை பேணி நடப்பது என் மீது கடமையாகும் சுவனம் செல்வதற்கு சுன்னாவை பின்பற்றுவது சரியான வழியாகும் .சுன்னாவுக்கு மாறு செய்வது சுவனம் செல்வதற்கு தடையாக அமையும். சுன்னாவை பின்பற்றாதவர் நான் சுவனம் செல்ல மாட்டேன் என மறுப்பவராக இந்த ஹதீஸ் கூறுகிறது.
 எவர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்யாமல் அவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களின் சுன்னாக்களை (வழிமுறைகளை) சரிவர பின்பற்றி அவர்கள் எமக்கு ஏவிய விடயங்களை எடுத்து நடந்து அவர்கள் எம்மை எதை விட்டும் தடுத்தார்களோ அவைகளைத் தவிர்த்து நடந்தால் மாத்திரம் இலகுவாக சுவனம் செல்ல முடியும். எவர் நபி (ஸல்) அவர்களுக்கு கீழ்படியாமல் மாறு செய்து நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை எடுத்து நடக்காமல் அவர்கள் காட்டித்த தராத விடயங்களை யார் செய்கின்றாரோ அவர் சுவனம் செல்வதற்கு மறுத்துவிட்டார். நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்யாமல் வழிபடுவது சுவனம் செல்வதற்குரிய வழியாக அமைகின்றது.

சுன்னாவைப் பேணி சுவனம் செல்ல முயல்வோமாக!
أحدث أقدم