அல்குர்ஆனில் மிகவும் அச்சப்பட வேண்டிய வசனம் எது ?

أخوف_آية_في_كتاب_الله
மிகவும் அச்சப்பட வேண்டிய குர்ஆனிய வசனம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட அஸ்ஸுமர் அத்தியாயத்தின் 48 வது வசனம் என்ற ஒரு டுவிட்டர் பதிவின் விளக்கம் பற்றித் தேடியபோது அது பற்றிய பின்வரும் தெளிவைப் பெற முடிந்தது.

அந்த வசனம்  தீயவர்கள் , இணைவைத்தோர்    போன்றோருக்கு நடக்கவுள்ள அவர்களின் எண்ணங்களுக்கு எதிர்மறையான படுபயங்கரமான விளைவுகள், திடுக்கிடச் செய்யும் அல்லாஹ்வின் முடிவுகள் பற்றிப் பேசுகின்றது.
அதுதான்:
وَبَدَا لَهُمْ سَيِّاٰتُ مَا كَسَبُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏

(அன்றியும்) அவர்கள் சம்பாதித்த தீமைகள் அவர்களுக்கு வெளிப்படும், மேலும், எதைக் கொண்டு அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.(அஸ்ஸுமர் : 48). என்ற வசனமாகும்

இந்த வசனத்தை விளக்கும் தஃப்ஸீர் துறை அறிஞர்கள் பல விதமாக விளக்கி உள்ளனர்.

قال التابعي مجاهد: "عملوا أعمالًا توهّموا أنّها حسنات فإذا هي سيئات ."
அவர்கள் நன்மை என எண்ணிக்கொண்டவைகள் அந்தோ!  அவை மறுமையில் தீமைகளாக இருக்கும்  (இமாம் முஜாஹித் ரஹி )

وقال السدي: "عملوا أعمالًا توهّموا أنّهم يتوبون منها قبل الموت، فأدركهم الموت قبل أن يتوبوا".
 தமது பாவங்களுக்கு தவ்பா செய்து மீளலாம் என அவர்கள் தப்பெண்ணம் கொண்டிருந்த வேளை -தவ்பா- பாவமன்னிப்புக் கோராதிருந்த நிலையில் மரணம் அவர்களை பிடித்துக் கொண்டது. (இமாம் அஸ்ஸூத்தீ ரஹி).

وقال الإمام ابن كثير في تفسيره رحمه الله تعالى: - أي وظهر لهم من الله من العذاب والنكال بهم ما لم يكن في بالهم ولا في حسابهم
அவர்களின் மனங்களில் அவர்கள்  நினைத்துப் பார்க்காத அல்லாஹ்வின் தண்டனையும் வேதனையும் அவர்களை வந்தடைந்துள்ளது . (இமாம் இப்னு கஸீர் ரஹி)
 
மேற்படி வசனம் இணைவைப்போர், மறுமையை நம்பாதவர்கள் இந்த உலகில் நன்மை என நினைத்து செய்தவைகள் அவர்களின் இதைவைப்பு குஃப்ர் காரணமாக அதன் முடிவு தலைகீழாக காண்பிக்கப்படும் என்பதை விபரிக்கப்படுகின்றது.

இறைமறுப்பாளர்கள் மனச் சங்கடமான, பதட்டமான ஒரு நிலையை சந்தித்த பின்பே மேற்கண்ட திகிலான நிலை நடந்தேறும் என்பது பற்றி இணைவைப்பாளர்கள் உணர்த்தப்படுவார்கள் என்பதாக அதற்கு முன்னால் உள்ள வசனத்தில் விளக்குகிய பின்பே இடம் பெறுவது அதன் சந்தர்ப்ப நிலையை விளக்குவதாக அமைகின்றது.

அந்த வசனசம்:
وَلَوْ اَنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا مَا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ مِنْ سُوْٓءِ الْعَذَابِ يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ وَبَدَا لَهُمْ مِّنَ اللّٰهِ مَا لَمْ يَكُوْنُوْا يَحْتَسِبُوْنَ‏ (الزمر /47)

மேலும், அநியாயம் செய்தவர்களிடம் இப்பூமியிலுள்ள அனைத்தோடும், அது போன்றதும் இருக்குமானால்  கியாம நாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்திட திட்டமாக அவர்கள் நாட்டம் கொள்வார்கள். (அஸ்ஸூமர்: 47) 

எனக் குறிப்பிடுவது  இந்த நிலையை இன்னும் படு பயங்கரமாக்கி காட்டுவதாக அமைகின்றது.

இந்த பொருளை ஒத்த மற்றொரு வசனத்தில் இதை விட படு பயங்கரமாக வர்ணிப்பதை  அறிய முடிகின்றது .
 وَلَا يَسْأَلُ حَمِيْمٌ حَمِيْمًا ۖۚ‏
 உற்ற  நண்பன் தனது மற்றொரு  நண்பன் பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.
 يُّبَصَّرُوْنَهُمْ‌ؕ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِىْ مِنْ عَذَابِ يَوْمِٮِٕذٍۢ بِبَنِيْهِۙ‏
 وَ صَاحِبَتِهٖ وَاَخِيْهِۙ 
அவர்கள் கண் எதிரே  காண்பிக்கப்படுவார், (இருந்தும் ஒருவர் மற்றவரை விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் இறை தண்டனைக்கு ஈடாகத் தன் மனைவி, மக்களையும் சகோதரனையும்
 وَفَصِيْلَتِهِ الَّتِىْ تُــْٔوِيْهِۙ‏
அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-

 وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ۙ ثُمَّ يُنْجِيْهِۙ‏
 இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான். ( அல்மஆரிஜ்: 10-14 வரையான வசனங்கள். ).

இது முஃமின்களைக்
குறிக்காது.  மாறாக முஷ்ரிக்கள், இறை மறுப்பாளர், கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களைக் குறிக்கும் வசனங்களாகும்.

ஏனெனில் முஃமின்களிடம்: 
اُدْخُلُوا الْجَنَّةَ اَنْتُمْ وَاَزْوَاجُكُمْ تُحْبَرُوْنَ‌‏ ( الزخرف /70) 
நீங்களும், உங்கள் மனைவியரும்  சுவர்க்கத்தில் நுழையுங்கள். அங்கு நீங்கள் கண்ணியப்படுத்தப்படுவீர்கள் (என்று மறுமையில்  கூறப்படும்).( அஸ்ஸுக்ருஃப்: 70) 

"وَالَّذِيْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِاِيْمَانٍ اَلْحَـقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَاۤ اَلَـتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَىْءٍ‌ؕ  (الطور /٢١)
எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியினரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விடவும் மாட்டோம் - அத்தூர்/21)
இங்கு மறுமையில் இணைவைப்போர் சந்திக்க உள்ள மிகக் கேவலமான நிலையும் 
ஈமான் கொண்டோரின்  மகிழ்ச்சியான நிலையும் தெளிவுபடுத்தப்படுகின்றது.

اللهم توفنا مسلمين وألحقنا بالصالحين. 

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
أحدث أقدم