துல்கஃதாஹ் மாதம்

நான்கு புனிதமான மாதங்களில் முதல் மாதம் துல் க’தா (அல் அஷ்ஹுர் அல் ஹுரும்). மற்ற மூன்றும், துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மற்றும் ரஜப். இந்த நான்கு மாதங்களும் சூரா தவ்பாவில், 36ஆவது வசனத்தில் (9:36) குறிப்பிடப்பட்டுள்ளன.  இந்த புனித மாதங்களில் செயல்களுக்கான வெகுமதிகளும், தண்டனைகளும் பன்மடங்காக்கப்படுகின்றன, சுபஹானல்லாஹ்!

குறிப்பாக, அல்லாஹ் (அஸ்ஸவஜல்), இந்நாட்களில் நமக்கு நாமே அநீதி இழைப்பதைப் பற்றி எச்சரிக்கிறான்.

துல் க’தாவை “உட்காருதல்” அல்லது “ஓய்வாக இருத்தல்” என மொழிபெயர்க்கலாம்.  ஏனென்றால், மக்கள் அம்மாதத்தில் ஒருவரோடொருவர் போர் செய்வதை நிறுத்தி விடுவார்கள்.  வாக்குவாதங்களையும், மன சங்கடங்களையும் நிறுத்துவதற்கு இது ஒரு தூண்டுகோலாக இருக்கட்டும்!

இஸ்லாமிய மாதங்கள் நிலவின் (சந்திர மாதங்கள்) இயக்கங்களின் அடிப்படையில் உள்ளன.  இருப்பினும், ஆண்டுக்கணக்கு, இஸ்லாமிய சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக இருந்த ஹிஜ்ரா[நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு, மதினாவுக்கு புலம் பெயர்ந்து சென்ற நிகழ்வு]விலிருந்து தொடங்குகிறது. அதனால் அது ‘ஹிஜ்ரி நாள் காட்டி’ என அழைக்கப்படுகிறது.  உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு இரண்டரை ஆண்டுகள் கழித்து இது நடைமுறைபடுத்தப்பட்டது.

இந்த புனித மாதம் உங்களுக்கு என்னவாக இருக்கிறது?

[وقال علي بن أبي طلحة، عن ابن عباس قوله: {إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا} الآية {فَلا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ} في كلِّهن، ثم اختص من ذلك أربعة أشهر فجعلهن حراما، وعَظم حُرُماتهن، وجعل الذنب فيهن أعظم، والعمل الصالح والأجر أعظم]
“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்’ என்பதிலிருந்து, ‘ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்;’ என்பது வரையுள்ள வசனத்தைப் பற்றி அலி பின் அபுதாலிப் (ரலி) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்,  அல்லாஹ் (சுபஹ்), எந்த மாதத்திலும் என்று கூறிய பிறகு, அவன் அவற்றில் நான்கு மாதங்களைக் குறிப்பிட்டு அவற்றை புனிதமானவைகளாக செய்து, அவற்றின் புனிதத்தை வலியுறுத்துகிறான்.  மேலும், அம்மாதங்களில் செய்யப்படும் பாவங்களின் தண்டனையை அதிகரித்து, நற்செயல்களின் நற்கூலியையும் அதிகமாக்கியுள்ளான்.” என விளக்கம் கூறினார்கள்.   [தஃப்சீர் இப்னு கஸீர் 4/148]

வரிசையாக வரும் மூன்று புனிதமிக்க மாதங்களின் முதல் மாதம் துல் க’தா. அதைத் தொடர்ந்து துல் ஹிஜ்ஜாவும், முஹர்ரம் மாதங்களும் வருகின்றன.  இதன் பொருள், அடுத்த மூன்று மாதங்களும் நீங்கள் செய்யும் நற்செயல்களுக்கு அதிகமான கூலியும், நீங்கள் புரியும் பாவங்களுக்கு அதிகமான தண்டனையும் கிடைக்கும் காலம் என்பதாகும்!
أحدث أقدم