عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللّهُ عَنهُ ، قَالَ :
قَالَ رَسُولُ اللَّهِ(ﷺ) :
" بَدَأَ الْإِسْلَامُ غَرِيبًا، وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا، فَطُوبَى لِلْغُرَبَاءِ ".
صحيح مسلم (١٤٥)
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள் ,
நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள் :
இஸ்லாம் அந்நியமான ஒன்றாக (ஒரு மார்க்கமாக) துவங்கியது ; அது, அந்நியமாக துவங்கியது போலவே (மீண்டும் அதே நிலைக்கே) திரும்பும் ; அந்நியர்களுக்கு (அந்த குரபாக்களுக்கு) கூலி "சொர்க்கம்" ஆகும்.
(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 145)
குறிப்பு : "طوبى"(தூபா) என்றால் , "சொர்க்கம்" ஆகும் ; மேலும், சில ஹதீஸ்களில் "சொர்க்கத்தில் உள்ள ஒரு மரம்" என்றும் வந்துள்ளது.
قال الإمام ابن القيم رحمه الله :
بعض صفات الغرباء...
1) التمسك بالسنة إذا رغب عنها الناس،
2) ترك ما أحدثوه وإن كان هو المعروف عندهم،
3) تجريدهم للتوحيد وإن أنكر ذلك أكثر الناس,
4) أنهم لا ينتسبون إلى غير السنة وإلى غير السلف.
مدارج السالكين (٢٠٥/٣)
இமாம் இப்னுல் கய்யிம் )ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள் :
குரபாக்களின் சில முக்கிய பண்புகளாவன :
1) மக்கள் ஸுன்னாவை விட்டும் திரும்பும் பொழுது, அவர்கள் (குரபாக்கள்) அந்த ஸுன்னாவை பலமாக பற்றிப் பிடிப்பார்கள்.
2) மக்கள் எந்த ஒரு புதுமையான விடயத்தை ஏற்படுத்தினாலும், அதை விட்டு விடுவார்கள்; அது, அவர்களிடையே அறியப்பட்ட ஒன்றாக (பிரபலமாக) இருந்தாலும் சரியே..!
3) அந்த குரபாக்கள் தவ்ஹீதிற்காக தங்களை (தூய முறையில்) ஒப்படைப்பார்கள்; அதிகமான மக்கள் அ(ந்த விடயத்)தை மறுத்தாலும் சரியே..!
4) அவர்கள் "ஸுன்னா" அல்லாத, மேலும், "ஸலஃபிய்யா" அல்லாத, வேறு எந்த ஒன்றையும் (இயக்கத்தையும்) சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.(அதாவது அவர்கள் ஸுன்னாவையும், ஸலஃபிய்யாவையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்).
நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன் (205/3)
தொகுப்பு : அபூ நுஹா அப்துர் ரஹ்மான்