ஹுத் ஹுத் பறவையின் தேசப்பற்று

சுலைமான் நபியின் ஹுத் ஹுத் பறவை சபஃ நாட்டில் இருந்து திரும்பியதும், அது அந்நாட்டின் வளர்ச்சியைப் பற்றியோ! அல்லது அவர்களின் நகரத்தின் செழிப்பைப் பற்றியோ! பேசவில்லை, மாறாக.... ஹுத் ஹுத் மிகவும் வெறுத்து  வியப்புடன்  சுலைமான் நபியிடம் கூறியது

“அவளும்( சபஃ நாட்டு அரசியும்) அவளது மக்களும் அல்லாஹ்வை வணங்குவதற்கு பதிலாக சூரியனை வணங்குவதை நான் கண்டேன்" என்று கூறியது 

இன்று சிலர், மேற்கத்திய நாடுகளில் இருந்து தனது நாட்டுக்குத் திரும்பினால்.. காலையிலும் மாலையிலும் அவர்களைப் புகழ்ந்து, அவர்களில் பரிபூரணத்தைக் கண்டு, அந் நாட்டின் வளர்ச்சியைக் கண்டு,தங்கள் நாட்டைச் சபித்து, தங்கள் மக்களை வெறுத்தும் கூறுகிறார்கள்.. இதுவல்ல விடயம்..

ஏகத்துவத்தின் மீதான ஹுத் ஹுத் வின் அக்கறை.... இன்று பல முஸ்லிம்களின் அக்கறையை விட அதிகம்.

(நூல் :வரலாற்றின் பக்கங்களில் இருந்து)
أحدث أقدم