திசை மாறும் ஹபாயாக்களும், ஹிஜாப்களும்

~ அ(z)ஸ்ஹான் ஹனீபா ~

இன்றைய நவீன யுகத்தில் ஹிஜாப் மற்றும் ஹபாயாவின் நோக்கம் அலங்காரமாக அடையாளப் படுத்தப்பட்டு வருகின்றது, இது மேற்கத்தியவர்களின் சதி, சூழ்ச்சி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இஸ்லாம் பெண்கள் வெளியில் செல்லும் பொழுது தமது அழகுகளையும், அலங்காரங்களையும் மறைக்குமாறு கட்டளையிடும் அதே வேளயில் எமது பெண்கள் இவற்றில் பொடுபோக்காகவும், அலட்சியமாகவும் நடந்துகொள்கின்றனர்.

இன்று ஹபாயாக்கள் விதம் விதமாக தயாரிப்பாகி  சந்தையில், கடைகளில் விற்பனையாகின்றன..

பார்ப்பவர்களின்  பார்வைகளை சுண்டி இழுக்கும் வண்ணம் அமைந்திருப்பது தான் மன வருத்தம் தருகின்றது.

 இறுக்கமான, ஒட்டிய ஹபாயாக்கள் 

இவற்றை அணிவதும் ஒன்றுதான் ஆடையின்றி நிர்வாணமாக, பிறந்த மேனியுடன் வெளியில் செல்வதும் ஒன்று தான், ஏனெனில் இவற்றை அணிவதால் பெண்ணின் ஒவ்வொரு அவயவங்களும் பார்ப்பவர்களுக்கு அவற்றின் அளவுகளோடு படம் பிடித்து காட்டுகின்றன. இதனால் இப்பெண்கள் மற்றவர்களை விபச்சாரத்திற்கு ஆளாக்குகின்றனர் .

இரு புறங்களிலும் வெட்டிய designs

ஹபாயா என்பது முழுக்க மறைக்க உள்ள ஒரு இஸ்லாம் ஏவிய ஆடை முறை 
ஆனால் இன்று அந்நோக்கம் திசை மாறி இருப்பதை எல்லோராலும் அவதானிக்க முடிகின்றது, 
வெட்டப் பட்டிருக்கும் பகுதிகளில் அவளது அழகு, கால்கள் தென்பட்டு ஏனையோரை பாவத்திற்கு உள்ளாக்குகின்றாள் 

ஹபாயா முழுவதும் மின்னும் designs, பெண்ணின் பால் பார்வைகளை பறிக்கும் அலங்காரங்கள்

ஹபாயா இன்று அலங்காரங்கள், designs நிறைந்ததாக காட்சியளிப்பது, இஸ்லாம் விதித்துள்ள சட்ட விதி முறைக்கு முரனானது.

இவற்றை தைப்பவர்கள், ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், கடைகளில் விற்பனை செய்பவர்கள், அதனை தம் மனைவிக்கு, பிள்ளைகளுக்கு, சகோதரிகளுக்கு வாங்கிக் கொடுப்பவர்கள், அத்தோடு இவற்றை அணிந்து வெட்கமின்றி வெளியில் உலாவும் பெண்கள் அனைவருக்கும் இப்பாவம் வந்து சேரும். அதாவது விபச்சாரத்திற்கு உடந்தையாக, உதவியாக இருந்த குற்றம் நிச்சயமாக அனைவரையும் வந்து சேரும்.

எனவே அனைவரும் இவ்விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.

வல்லவன் அல்லாஹ் எமது பெண்களை இவ்வாறான இழிவான செயலில் இருந்து பாதுகாப்பானாக . ஆமீன். 



أحدث أقدم