முப்பெரும் அறிஞர்கள் ஒரு மஜ்லிஸில் சந்தித்தபொழுது

அல்லாமா ஸாலிஹ் உஸைமின், அல்லாமா நாஸிருத்தீன் அல்பானி, அல்லாமா பின் பாஸ் ரஹிமஹுமுல்லாஹ் மூவரும் ஹஜ்ஜுடைய காலங்களில் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

இந்த ஹஜ் உடைய காலத்தில்தான்
அல்லாமா நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இறுதியாக ஹஜ் செய்தார்கள், மஜ்லிஸின் தலைவராக அல்லாமா பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் இருந்தார்கள், அப்பொழுது அவர்களிடம் வினவப்பட்ட மார்க்க ரீதியான கேள்விகளை பெற்றுக் கொண்டிருந்தார்கள், ஃபிக்ஹு சார்ந்த கேள்விகள் கிடைக்கப்பெற்றால் அல்லாமா ஸாலிஹ் உஸைமினிடம் அனுப்பிவிடுவார்கள்,
ஹதீஸ்கள் சார்ந்த கேள்வியாக இருந்தால் அல்லாமா நாஸிருத்தீன் அல்பானியிடம் அனுப்பிவிடுவார்கள், அகீதா (இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள்) சார்ந்த கேள்வியாக இருந்தால் அவர்களே பதிலளிப்பார்கள்.

அப்பொழுது லுஹர் தொழுகையின் நேரம் வந்தது, மினாவில் தொழுகையாளிகள் அனைவரும் யார் தொழுக வைக்கப் போகிறார்கள் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர், அப்பொழுது அல்லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ் ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள் ,
ஷேக் அல்பானி அவர்களை பார்த்து தாங்கள் எங்களது இமாமாக இருக்கிறீர்கள், தாங்கள் தொழுகை நடத்துங்கள் என்று சொன்னார்கள், அதற்கு நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களோ, இல்லை ...தாங்கள் தான் எங்களது "ஷேக்", தாங்களே தொழுக வையுங்கள் என்று கூறினார்,

அதற்கு பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ்
அவர்கள் நாம் அனைவரும் குர்ஆனை மனனம் செய்த விடயத்தில் சமமாக இருக்கிறோம், நீங்கள்தான் எங்களைவிட ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்றவராக இருக்கிறீர்கள் எனவே எங்களுக்கு தொழுக வையுங்கள் என்று கூறினார்,

நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாமாக முன்நின்று பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ்வை பார்த்து ....

அல்லாவின் தூதர் ﷺ அவர்களின் தொழுகையை போன்று தொழ வைக்கவா ? அல்லது மக்களுக்கு எளிமையான முறையில் தொழ வைக்கவா? என்று கேட்டார்கள்,

அதற்கு பின் பாஸ் அவர்கள் 
அல்லாவின் தூதர் ﷺ அவர்களின் தொழுகையை சொல்லிக்கொடுங்கள் எவ்வாறு தொழுதார்கள் என்று தெரிந்து கொள்கிறோம் என்றார்கள் !!!

சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வமான தலைமை முஃப்தியான (தலைமை காஜி ) பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சபை ஒழுக்கத்தையும்,அடக்கதையும் பாருங்கள்....

(இன்று நம்மில் சிலர் ஒரு சில நபி மொழிகளை அல்லது குர்ஆன் வசனங்களை மனனம் செய்து விட்டு தன்னை மிகப்பெரிய அல்லாமாவாக கருதுகிறார்கள் , அதேபோல் இன்றைய காலத்தில் ஒரு மஜ்லிஸில் 3 அறிஞர்கள் இருந்தால் அங்கு அமைதி நிலவுவது என்பது மிகப்பெரிய கேள்வி ஆகிவிடும்!! )

"எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள்",
ஷேக் அவர்களே என்று பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்பானி அவர்களை பார்த்து சொன்னது தான் நமது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அறிஞர்களுக்கு மத்தியில் காணப்பட சபை ஒழுக்கமும், நற்குணங்களும் ஆகும்.

நாம் எந்த அளவுக்கு நமது நற்குணத்தை சரி செய்வதில் இந்த அறிஞர்களின் பாதையில் 
நடைபோட தேவையுடையவர்களாக இருக்கிறோம் என்று சற்று சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.


- அஷ்ஷேக் முஹம்மத் ஹஸ்ஸான் ரஹிமஹுல்லாஹ்
(அல்லாமா பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவர்)


 عندما يلتقي ثلاثة علماء في مجلس واحد !!!!

🔖 الشيخ العلامة صالح آل عثيمين رحمه الله
🔖 الشيخ العلامة الألبانى رحمه الله 
🔖 الشيخ العلامة بن باز رحمه الله
كان فى موسم حج وكانت هذه هى آخر سنةوحج فيها الشيخ المحدث الألباني رحمه اللٌه .
وكان أمير الجلسة هو الشيخ العلامة بن باز 
وكانت الأسئلة تعرض فيتلقاها الشيخ رحمه اللٌه فإن كان السؤال متعلقاً بأمرٍ فقهي أحاله للشيخ العلامة صالح آل عثيمين 
وإن كان متعلقاً بمسألة حديثية أحاله الشيخ إلى الشيخ الألباني
وإن كان السؤال متعلقاً بمبحث من مباحث الإعتقاد أجاب الشيخ بن باز .

وأنتظرو المصلين من يصلى بهم الظهر وكانوا في مٍنى !؟
وإذ بالشيخ عبد العزيز رحمهُ اللٌه يقول للشيخ الألباني :
تقدم يا أبا عبد الرحمن صلى بنا أنت إمامنا .

فيرد الشيخ الألباني قائلاً : لا لا أنت شيخنا
وإذ بالشيخ بن باز رحمه اللٌه يقول له :
كلنا فى القرآن سواء وأنت أعلمنا بحديثِ رسول اللٌه تقدم يا أبا عبد الرحمن.

ويتقدم الشيخ الألباني ليؤمهم
وإذ به يلتفت إلى الشيخِ بن باز ويقول له : 
يا شيخنا أصلى بالناس صلاة رسول اللٌه أم أخفف !!؟
فيرد عليه قائلاً :
صل بنا صلاةَ رسول اللٌه 
علمنا يا شيخ كيف كان يصلي رسول اللٌه !؟
أنظروا إلى الأدب !!؟

ابن باز يقول للألباني : علمنا يا شيخ !!
هذا هو الأدب بين العلماء أهل السنة و الجماعة وهذه هي أخلاق العلماء أهل التوحيد .
فما أحوجنا إلى أن نتأسى بهؤلاء الأفاضل ونسير على دربهم فى الأدب والخلق والتواضع فيما بينهم .


-الشيخ محمد حسان رحمه الله
أحدث أقدم