சிரியா டமஷ்கஸில் வாழ்ந்து வந்த அஸ்ஸாஃப் என்ற கிரஸ்தவ தீவிரவாதி ஒருவன் எங்கள் நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் திட்டி, விமர்சனம் செய்து திரிவதாகவும் அவன் அலவிய்யா தரீக்காவாதி ஒருவனிடம் பாதுகாப்பு தஞ்சம் கோரி ஒளிந்திருப்பதாகவும் இமாம் இப்னு தைமிய்யாவிற்கு ஹிஜ்ரி 693 (.கி.பி. 1294) ல் செய்தி கிடைத்தது.
அவர்கள் டமஸ்கஸ் நகர தாருல் ஹதீல் முதல்வரான ஷைகுல் ஹதீஸ் அவர்களோடு டமஷ்கஸின் துணை முதலாவரை நேரில் கண்டு அவனைப் பற்றி முறைப்பாடு செய்தனர் .
அவனை விசாரணைக்காக அழைத்த போது அவன் ஒரு முரட்டுக் கிராமவாசியோடு சமூகமளித்தான். மக்கள் அவனைக் கண்டதும் அவனைத் திட்டித் தீர்த்தனர். தாக்க முயற்சித்தனர்.
அப்போது அந்தக் கிராமவாசி உங்கள் அனைவரையும் விட இவன் மேலானவன் எனக் கூறவே மக்கள் கொத்தளித்து அவ்விருவரையும் கல்லால் தாக்கினர்.
அதனால் அஸுவாஃப் கடுமையாக பாதிக்கப்பட்டான். பொதுமக்களை கலவரத்திற்கு தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் இமாம் இப்னு தைமிய்யாவும் ஷைகுல் ஹதீஸ் முதல்வரும் மக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்டனர். அஸ்ஸாஃப் பிறகு தன்னை குற்றவாளியாக ஏற்று இஸ்லாத்திலும் இணைந்தான். திமஷ்க் துணை முதல்வர் இமாம் இப்னு தைமிய்யாவிடமும் தாருல் ஹதீஸின் முதல்வரிடமும் மன்னிப்புக் கோரினார் . பின்னர் இப்னு தைமிய்யா இமாமவர்கள் இறைத் தூதரை விமர்சிப்போருக்கான இஸ்லாமிய சட்டத்தை விளக்கி தனது 31 வயதில்
الصارم المسلول على #شاتم الرسول
"இறைத் தூதரை விமர்சிப்போருக்கு தயாராக உள்ள வாள்" என்ற தலைப்பில் நூலை எழுதினார்.
இந்த இப்னு தைமிய்யாதான் ஸியாரத் இரண்டு வகை
(1) ஒன்று ஷரீஆ அனுமதித்த ஸியாரத்,
(2) ஷரீஆ அனுமதிக்காத பித்ஆ மற்றும் ஷிர்க் சார்ந்த ஸியாரத் என இரண்டாக வகுத்து சுன்னத்தான ஸியாரத்தை ஊக்குவித்தவர்.
தரீக்காக்கள், சூஃபிகள், அவ்லியாக்கள் பேரில் இயங்கும் பலர் விலாசமற்றோருக்கு ஆரிஃப் பில்லாஹ், பக்தாதி நாயகம், ஹுஸைன் வலியுல்லாஹ், வாப்பா நாயகம், நாகூர் ஆண்டகை, ஹயாத்து அப்பா வலியுல்லாஹ் போன்ற பெயர் நாம் சூடி அவர்கள் மரணித்தாலும் அல்லாஹ்வின் நாட்டப்படி கப்ரில் இருந்து தேவைகளை நிறைவேற்றுவார்கள் என முக்கி முக்கி ஆதாரம் சொல்லி மக்களை வழிகெடுப்பதைப் பார்க்கின்றோம்.
கழுதைகளையும் இறைநேசர்களாக்கி தமது இணைவைப்பிற்கு தூணையாளர்களாக எடுத்து கப்ரு ஸியாரத் பற்றிய ஷாஃபிஈ மத்ஹபின் போதனைகளை புறம் தள்ளி கப்ராளிகளை தேவைகளை நிறைவேற்றுவோராக எடுத்துள்ள பலர் இந்த நூல் பற்றி வாசிப்பதால் இப்னு தைமிய்யா இமாம் பற்றி தமக்கு ஊப்பட்ட தவறான கருத்துக்களைச் சீர் செய்து சீர் பெற்று வாழ வழி பிறக்கும்
إن شاء الله
- எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி