மாத்ரூதிய்யாக்கள்

இவர்கள் அஷ்அரிய்யாக்களைப் போலவே தங்களை அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆக்கள் என வாதிடுகின்றனர். ஆயினும் இவர்கள் அஷ்அரிய்யாக்களைப் போலவே அகீதாவில் வழிதவறிய ஒரு பிரிவினர் ஆவர். அஷ்அரியாக்களில் பெரும்பான்மையினர் எவ்வாறு ஷாபி, மாலிகி மத்ஹப்பினராக காணப்படுகிறனரோ அவ்வாறே இவர்களில் பெரும்பான்மையினர் ஹனபி மத்ஹப்பை பின்பற்றக் கூடியவர்களாக காணப்படுகின்றர். ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் சமர்கந்திற்கு அருகில் உள்ள மாத்ரூத் எனும் இடத்தில்  பிறந்த இமாம் அபூ மன்ஸூர் அல்-மாத்ரூதியின் பெயரால் இவ் அகீதாவானது அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் அறியப்பட்டது.  

அஷ்அரிய்யாக்களின் அகீதாவை ஒத்த இவ் அகீதாவானது அதன் கிளை அம்சங்களில் சிற்சில வேறுபாடுகளுடன் (சுமார் 50 வேறுபாடுகள்) காணப்படுகிறது. ஆயினும் அஷ்அரிய்யா, மாத்ரூதிய்யா ஆகிய இவ்விரு அகீதாக்களுமே முஃதஸிலாக்கள் மற்றும் ஜஹமிய்யாக்களின் கோட்பாடுகிளிலிருந்து பிறந்தவையே ஆகும்.

இமாம் அபூ மன்ஸூர் அல்-மாத்ரூதி அவர்களும் முஃதஸிலாக்கள் மற்றும் ஜஹமிய்யாக்களின் கொள்கைகளினால் அதிக தாக்கமுற்றவராக காணப்பட்டார்.

மாத்ரூதிய்யாகிளின் பிரதான கொள்கைகளில் சில: 

1. அல்லாஹ்வுடைய உருவம், பண்புகள் விடயத்தில் அவனால் அல்குர்ஆனில் அவனுடைய உருவம், பண்புகள் பற்றி கூறப்பட்டுள்ள வசனங்களுக்கு கருத்து தெரியாது அல்லது அதன் கருத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான் என கூறுகின்றனர். உதாரணமாக அல்லாஹ்வின் கை என்று வரக்கூடிய அல்குர்ஆன் வசனத்தின் கருத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான் என கூறுகின்றனர். 

ஆனால் இதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் கை என்று வரக்கூடிய அல்குர்ஆன் வசனத்தின் கருத்தை அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் அதனுடைய யதார்த்தத்தை அதாவது அவனுடைய கை எவ்வாறான விதத்தில் இருக்கும் என்பதை அவன் மட்டுமே அறிவான் என்பதே அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரது நிலைப்பாடாகும். விரிவாக அறிய

2. கலாமுன் நஃப்ஸ் அதாவது பேச்சு என்பது அல்லாஹ்விலிருந்து வெளிப்படையாக உருவாகவில்லை. அல்லாஹ் மனதிற்குள் மட்டுமே பேசுவான். அவ்வாறு அவன் மனதிற்குள் பேசியதை ஒரு படைப்பாக படைத்து ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கொடுத்தான் அதுவே அல்குர்ஆன் ஆகும்.

3. இவர்களும் அஷ்அரிய்யாக்களைப்போல் அல்லாஹ்வுக்கு ஏழு பண்புகளோடு ஒரு பண்பை மாத்திரம் அதிகப்படுத்துகின்றனர். எட்டாவதான அது உருவாக்குதல் என்ற பண்பாகும். ஏனைய பண்புகளில் அவனை இயலாமையில் ஆக்கிவிட்டனர்.

4. ஈமான் குறையும் என்று கூறக்கூடாது.

5. அல்லாஹ் இவ்வுலகில் அழகிய உருவங்களில் காணப்படும் அனைத்திலும் தோன்றுகிறான். (இக்கருத்து பிற்காலத்தில் முல்லா அலி காரி என்பவரால் மாத்ரூதிய்யா அகீதாவில் இணைக்கப்பட்டது). ஒரு அழகிய வாலிபனையோ அல்லது யுவதியையோ காணும்போது ‘இவர் சிலவேளை அல்லாஹ்வாக இருக்கலாம்’ என சர்வ சாதாரணமாக கூறக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறாக ஜஹமிய்யா, முஃதஸிலா, முர்ஜியா, சூபித்தும் என பல வழிகெட்ட கொள்கைகளின் கூட்டுக்கலவையாக மாத்ரூதிய்யா அகீதா தற்காலத்தில் திகழ்கிறது.

தேவ்பந், பின்நூரி போன்ற பிரபலமான மத்ரஸாக்களில் இவ்வகீதா பாடமாக போதிக்கப்படுகிறது.
أحدث أقدم