அஸ்மா வஸ்ஸிஃபாத் - நூல்


நூலாசிரியர்: அஷ்ஷெய்க் எம்.ஜே.எம் ரிஸ்வான் மதனி

வெளியீடு : ஸாஜிதா புக் சென்டர்


அணிந்துரை

கண்ணியமும் பூரணத்துவமும் மிக்க பண்புகளைக் கொண்டு வர்ணிக்கப்பட்ட அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் உரித்தானது, மனித குலத்திற்கு அருளாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மீதும், நன்மை நாடி அன்னாரை பின்பற்றியோர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் உண்டாகட்டுமாக!

அல்லாஹ்வைப் பற்றிய அறிவானது இஸ்லாமிய ஷரீஆ போதிக்கின்ற அறிவுகளில் அதி சிறந்த அறிவாகக் கொள்ளப்படுகின்றது. அது மாத்திரமின்றி, அது அந்தஸ்தால் உயர்ந்ததும், தராதரத்தால் உயர்வானதுமாகும். 

இந்தக்கல்வி அறிவானது மனிதர்களால் அறியப்பட்டவனாகிய அல்லாஹ்வைப் பற்றிய அறிவை உள்ளடக்கி இருப்பதும் இதற்கான சிறப்பின் மற்றொரு பிரதான காரணியாகும். 

மனித இனம் படைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கமும் இதற்காகவே. இதற்காகத்தான் பாடுபடவேண்டியவர்கள் தம்மை அர்ப்பணம் செய்து பாடுபாட்டார்கள், போட்டி போட்டு முந்திச் செல்ல வேண்டியவர்கள் முந்தியும் சென்றார்கள். 

பல சிறப்புக்களை உள்ளடக்கிய இந்தக் கல்வி அறிவு பற்றி பல்லாயிரக்கணக்கானோர் பேசுகின்ற தமிழ் மொழியில் இதுவரைக்கும் ஒரு நூல் வெளிவராதிருப்பது துரதிஷ்டமே! இது சார்ந்துள்ள அறிவில் மனிதர்களிடம் பல வழிகேடுகள் உள்ளன என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். 

மதீனாப் பல்கலைக்கழகத்தில் ஹதீஸ் கலை பிரிவில் சிறப்பு பட்டதாரியான மதிப்புக்குரிய எனது சகோதரர் எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி அவர்கள் இந்த துறையில் எழுதியுள்ள இந்நூலில் அவர் தனது இலக்கினை உண்மையில் எட்டிக் கொள்ள அல்லாஹ் அருள் செய்துவிட்டான் என்றே நினைக்கின்றேன். 

ஏனெனில் அவர், அஸ்மா ஸிஃபாத் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள், மற்றும் அவனது உயர்ந்த பண்புகள் பற்றி தனது நூலில் அல்லாஹ்வின் பேச்சாகிய அல்குர்ஆனில் இருந்தும், ஆதாரபூர்வமான நபிமொழிகளில் இருந்தும், நன்மக்களான முன்னோர்களின் கருத்துக்களில் இருந்தும் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆ பிரவினர் இது பற்றிக் கொண்டுள்ள நம்பிக்கை தொடர்பாக பொருத்தான தலைப்புக்களையும், சான்றுகளையும் தேர்வு செய்து உள்ளடக்கி உள்ளார். 

நான் இவரது நூலை ஆரம்பம் முதல் இறுதிவரை வாசித்தேன். நூல் ஆசிரியர் அவர்கள் தனது பாரிய முயற்சியின் பயனாக ஆதாரமாகக் கொள்ளப்படுகின்ற அறிஞர் பெருமக்களான இமாம்களின் கருத்துக்களை இந்நூலில் ஒன்று சேர்த்துள்ளார். 

அல்லாஹ்வின் உதவியால் அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக கல்விபடிக்கும் மாணவர் சமூகத்திற்கும் இது மிகவும் பயனுள்ள ஒரு நூலாக நான் காண்கின்றேன். 

நூல் ஆசிரியர் இதனை மிகவும் எளிய நடையிலும், அனைவரும் புரியும் விதமாகவும் தொகுத்தளிக்க மேற்கொண்ட முயற்சிக்கு அல்லாஹ் நற்கூலிவழங்குவதோடு, மறுமையில் அவரது நன்மைத்தராசில் அதன் பயனுக்குரிய கூலியை ஆக்கிடவும் அல்லாஹ் அருள் செய்வானாக! என்று பிரார்த்திக்கின்றேன். 

இந்நூல் மூலம் எதிர்பார்க்கப்படும் உச்சகட்டப் பயனை முஸ்லிம்களுக்கும் குறிப்பாக மாணவர்களுக்கும பயனுள்ளதாக அல்லாஹ் ஆக்கிடவும் வேண்டுகின்றேன். 

இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் அவரது தோழர், கிளையார் அனைவர் மீதும் அல்லாஹ் தனது அருளைப் பொழிவானாக! 

- அஷ்ஷெய்க். முபாரக் மஸ்ஊத் மதனி


முன்னுரை

புகழ்‌ அனைத்தும்‌ அகிலங்களின்‌ அதிபதியாகிய அல்லாஹ்‌ ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும்‌, சாந்தியும்‌ இறுதித்தூதர்‌ முஹம்மத்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மீதும்‌, அவர்களின்‌ குடும்பத்தவர்‌, ஸஹாபாக்கள்‌, இமாம்கள்‌, முஸ்லிம்கள்‌, அல்லாஹ்வின்‌ வழிகாட்டலுக்கு அடிபணிய விரும்பும்‌ அனைவர்‌ மீதும்‌ நிலையாக உண்டாகட்டுமாக!

மதிப்புக்குரிய இஸ்லாமியச்‌ சகோதர, சகோதரிகளே!

அஸ்மா, ஸிஃபாத்‌ - அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌- பற்றிய நம்பிக்கை இஸ்லாத்தின்‌ அடிப்படை நம்பிக்கைகளுள்‌ ஒன்றாகும்‌. எனவே, அவை பற்றித் தெளிவாகவும்‌, விரிவாகவும்‌ அறிந்திருப்பது நம்மனைவர்‌ மீதும்‌ கடமையாகும்‌.

அல்லாஹ்வின்‌ இலக்கணங்கள்‌, பெயர்கள்‌, பண்புகள்‌,
அவனுக்குரிய தனித்தன்மை பற்றி ஓர்‌ முஸ்லிம்‌ அறிவது, அவனைச்‌ சீராகப்‌ புரிந்து அவனைச்‌ சரியாக வணங்கிட வழிவகுக்கும்‌ என்பதில்‌ சந்தேகமில்லை.

இஸ்லாத்தின்‌ பெயரால்‌ உருவாகிய பிரிவுகள்‌ மத்தியில்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ பற்றிய விஷயத்தில்தான்‌ பெரும்‌ வழிகேடுகள்‌ தோன்றியுள்ளன என்பதை இஸ்லாமிய நம்பிக்கைக்‌ கோட்பாடு தொடர்பான ஆய்வுகள்‌ வெளிப்படுத்துகின்றன.

அஸ்மா, ஸிஃபாத்‌ பற்றிய தெளிவின்மை படித்தவர்‌, பாமரர்‌, மெளலவிகள்‌ என்ற வித்தியாசமின்றி அனைவர்‌ மத்தியிலும்‌ பொதுவாகக்‌ காணப்படுவதைப்‌ பார்க்க முடிகின்றது. இந்நிலை இஸ்லாமிய அழைப்பாளர்கள்‌ மத்தியில்‌ காணப்படுவது மிகப்‌ பெரிய துர்பாக்கியமாகும்‌.

அது மட்டுமின்றி, இறையியல்‌ கோட்பாட்டில்‌ பிரதான இடத்தை வகிக்கும்‌, அஸ்மா, ஸிஃபாத்‌ பற்றிய தெளிவின்மையே அல்லாஹ்வுடன்‌ அவனது படைப்புகளை இணையாக்கவும்‌, அத்வைதச்‌ சிந்தனையின்‌ வலையில்‌ முஸ்லிம்கள்‌ மீண்டும்‌ வீழ்ந்திடவும்‌ வழிவகுத்துள்ளது.

ஆகவே அகிலங்களின்‌ இரட்சகனாகிய அல்லாஹ்‌ தன்னைப்‌ பற்றி அறிமுகம்‌ செய்திருப்பது போன்றும்‌, அவனுடைய இறுதித்தூதர்‌ முஹம்மத்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ அவனைப்‌ பற்றி அறிவித்துத்‌ தந்த பிரகாரமும்‌ அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது முஃமின்கள்‌ அனைவர்‌ மீதுமுள்ள கடமையாகும்‌. அதற்கான அடிப்படையை நோக்கிய நகர்வு ஒன்றிற்கான நூலாக இது அமைய வேண்டும்‌ என்பது எனது ஆழ்மனதில்‌ உதித்த எண்ணமாகும்‌.

இந்த முயற்சியின்‌ மூலம்‌ அல்லாஹ்‌ அனைத்துப்‌ படைப்பினங்களையும்‌ எழுப்பி விசாரணை செய்யும்‌ நாளில்‌ அவனைக்‌ காணும்‌ போது சஜ்தா செய்யும்‌ பாக்கியம்‌ பெற்றவனாக நான்‌ இருக்கவும்‌, இம்மையிலும்‌, மறுமையிலும்‌ அவனது அன்பையும்‌, அருளையும்‌ பெற்றுக்கொள்ள அவன்‌ எனக்கு அருள்‌ செய்ய வேண்டும்‌ என்பதும்‌ எனது மற்றோர்‌ அவாவும்‌, எணணமுமாகும்‌.

இந்த ஆய்வில்‌ அல்லாஹ்வைப்‌ பற்றிய கோட்பாட்டில்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ விஷயத்தில்‌ ஸலஃபுஸ்ஸாலிஹீன்களான நபித்தோழர்கள்‌, தாபியீன்கள்‌, இமாம்களின்‌ நிலைப்பாடு பற்றிச்‌ சுருக்கமாகவும்‌ தெளிவாகவும்‌ இயன்ற அளவு தொகுத்து முன்வைக்கப்பட்டிருக்கின்றது என்று நான்‌ நம்புகின்றேன்‌.

இதில்‌ ஆய்வு செய்து, முன்வைக்கப்படும்‌ செய்திகள்‌, அல்லது விதிகள்‌ என்பன நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களதும்‌, அவர்களின்‌ தோழர்களதும்‌, அவர்கள்‌ வழி நடந்த இமாம்களினதும்‌ “இஸ்லாமிய நம்பிக்கைக்‌ கோட்பாடு” எவ்வாறு இருந்தது? நமது நம்பிக்கைகள்‌ எவ்வாறு இருக்கின்றன? என்பதை உரசிப்பார்ப்பதற்கு ஒர்‌ உறைகல்லாக அமையும்‌ என்பதில்‌ சந்தேகமில்லை.

இந்நூலில்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ விஷயத்தில்‌ முன்வைக்கப்படும்‌ கருத்துகள்‌ ஹிஜ்ரி‌ முதலாம்‌ நூற்றாண்டு முதல்‌ இன்றுவரை உள்ள இஸ்லாமிய அறிஞர்‌ பெருமக்களைத்‌ தழுவி முன்வைக்கப்பட்டிருப்பதால்‌ நமது நிலைப்பாடு புதிதாகக்‌ கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை வாசகப்‌ பெருமக்கள்‌ உணரக்‌ கடமைப்பட்டுள்ளனர்‌.

ஸலஃபுகளின்‌ அகீதா கோட்பாடானது குர்‌ஆனுக்கும்‌, சுன்னாவுக்கும்‌ உடன்பாடானதாக இருப்பதன்‌ அடிப்படையில்‌ அதை நாம்‌ சரிகண்டுள்ளோம்‌. அத்தோடு, பகுத்தறிவும்‌, விஞ்ஞானமும்‌ அகீதா கோட்பாடுகளுடன்‌ முரண்படுமானால்‌ அவற்றைப்‌ புறம்‌ தள்ளி, அல்லாஹ்வின்‌ கூற்றிற்கும்‌, இறுதித்தூதர்‌ முஹம்மத்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ கட்டளைக்கும்‌ முன்னுரிமை தந்துள்ளோம்‌.

இந்தத்‌ தலைப்பை எழுதுகின்ற போது அகிலங்களின்‌ அதிபதியாகிய அல்லாஹ்வின்‌ விஷயத்தில்‌ மனம்போன
போக்கில்‌ எழுதவில்லை. மாறாக, அஸ்மா, ஸிஃபாத்‌ பற்றிய அணுகுமுறைகள்‌ சமூகத்தில்‌ வழிகேடுகளைத்‌ தோற்றுவித்துள்ள காரணத்தால்‌ அல்லாஹ்வை அஞ்சியவனாகவே அணுகியுள்ளேன்‌ என்பதை அல்லாஹ்‌ நன்கு அறிவான்‌ என்று இங்கு நினைவுபடுத்திக்‌ கொள்கின்றேன்‌.

இவ்வாய்வு சிறப்பானதாக வெளிவரவேண்டும்‌ என எனக்கு ஆலோசனைகள்‌ வழங்கிய அன்பர்கள்‌, நண்பர்கள்‌, சகோதரர்கள்‌ அனைவருக்கும்‌ எனது பிரார்த்தனைகளும்‌ நன்றிகளும்‌ உரித்தாகும்‌.

இதனை முழுமையாக வாசித்து திருத்தம்‌ செய்து தந்த சகோதரர்களான ஏ.எல்‌ பீர்முஹம்மத்‌ காஸிமி, (எம்‌.ஏ) மற்றும்‌ எம்‌.எல்‌.எம்‌. முபாரக்‌ (ஸலஃபி, மதனி, (எம்‌.ஏ), மடவளை நண்பர்‌ ரஸீன்‌ அக்பர்‌ (மதீனா பலகலைக்கழகம்‌) ஆகியோருக்காகவும்‌ இந்நூல்‌ வெளிவரக்‌ காரணமான அச்சகத்தாருக்கும்‌, நிதி உதவி வழங்கிய சகோதரர்களுக்கும்‌, அனைவருக்கும்‌ ஆழ்மனதால்‌ பிரார்த்திப்பதோடு, எனது நன்றிகளையும்‌ உரித்தாக்குகின்றேன்‌.

நீங்கள்‌ எனது அணுகுமுறையில்‌, அல்லது நான்‌ முன்வைக்கின்ற விளக்கத்தில்‌ தவறுகளைக்‌ காணும்‌ பட்சத்தில்‌ அவற்றை எனக்குச்‌ சுட்டிக்காட்டுவது, நான்‌ என்னை திருத்திக்‌ கொள்ளவும்‌, சமூகத்தை நான்‌ தவறான பாதையில்‌ வீழ்த்தாதிருக்கவும்‌ உதவியாக இருக்கும்‌ என்பதை உங்கள்‌ மேலான கவனத்திற்குக்‌ கொண்டுவருகின்றேன்‌.

அல்லாஹ்‌ நம்‌ அனைவரையும்‌ ஈருலகிலும்‌ மன்னிப்பானாக!

இவன்:
எம்‌.ஜே.எம்‌. ரிஸ்வான்‌ மதனி


அஸ்மா வஸ்ஸிஃபாத்

“அல்லாஹ்‌ இருக்கின்றானா?” மனிதன்‌ கேட்கிறான்‌.

குறிப்பிட்டதொரு பொருள்‌ என்று கூற முடியாதிருந்த நிலையில்‌ அல்லாஹ்‌ மனிதனைத்‌ தனது அற்புதமான ஆற்றலால்‌ உருவாக்கினான்‌. முதல்‌ மனிதர்‌ ஆதம்‌ (அலை) அவர்களை மண்ணில்‌ இருந்தும்‌ பின்னர்‌, மனித இனத்தைக்‌ கலப்பு இந்திரியத்தில்‌ இருந்தும்‌ படைத்ததாக அல்குர்‌ஆன்‌ குறிப்பிடுகின்றது.

புலக்காட்சிகளை நம்பிப்‌ பழகிப்போன மனிதன்‌ அல்லாஹ்வை நேரடியாகக்‌ காணாததன்‌ காரணமாக அப்படி ஒருவன்‌ இருந்தால்‌, அவன்‌ வெளிப்பட்டு மக்களுக்கு நானே உண்மையான உங்கள்‌ கடவுள்‌ என்று அறிவித்திருக்கலாமே எனக்‌ கேட்பது அவனது பரம்பரை இயல்பாக மாறி இருக்கின்றது.

மனிதன்‌ தன்னைப்‌ பற்றி ஆழமாகச்‌ சிந்திக்க வேண்டும்‌ என்பதற்காக அல்லாஹ்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றான்‌

நீங்கள்‌ உங்களுக்குள்ளும்‌ (உடல்‌ அமைப்பு பற்றிச்‌) சிந்தித்துப்‌ பார்க்கவேண்டாமா? உங்களுக்குரிய ஆகாரங்களும்‌, நீங்கள்‌ வாக்களிப்படும்‌ (ஏனையவையும்‌) வானில்தான்‌ இருக்கின்றன. வானம்‌, பூமியின்‌ இரட்சகன்‌ மீது சத்தியமாக, நிச்சயமாக அது (அவன்‌) நீங்கள்‌ பேசுவது போன்று உண்மையாகும்‌ (அத்தாரியாத்‌: 21-23)

படைப்பாளனாகிய அல்லாஹ்‌ மனிதப்‌ படைப்பில்‌ 360 மூட்டுக்களைப்‌ பொருத்தியுள்ளான்‌. அவனுள்‌ இதயம்‌, ஈரல்‌, கல்லீரல்‌, நுரையீரல்‌, மண்ணீரல்‌, சிறுநீரகம்‌, மூளை, நரம்பு மண்டலம்‌ போன்ற விலைமதிப்பிட முடியாத பல அற்புதங்களைக்‌ கொண்டு அவனை அலங்கரித்துள்ளான்‌. இருந்தும்‌ மனிதன்‌ அவனை நிராகரித்து நடப்பவனாகவே இருக்கின்றான்‌. இவ்வாறான மனிதர்களில்‌ மூன்று பிரிவினர்களை இங்கு முக்கியமாக அடையாளப்படுத்த முடியும்‌.

அல்லாஹ்வைக்‌ கண்ணால்‌ காணாததன்‌ காரணமாக அப்படி ஒருவன்‌ இருக்கவே முடியாது எனக்‌ காரணம்‌ காட்டி அவனை நிராகரிக்கும்‌ நாத்திகர்கள்‌.

கடவுளைக்‌ காணாமல்‌ வணக்கம்‌ சாத்தியமற்றது என்ற காரணத்தை முன்வைத்து அல்லாஹ்வுக்கு இணையான தெய்வங்களைக்‌ கற்பனை செய்து அவனுக்கு இணைவைப்பதோடு உயர்ந்த கடவுளர்களில்‌ ஒருவனாக அவனை நம்பிக்கை கொள்கின்ற ஆத்திகர்கள்‌.

அவனைக்‌ காணாதபோதும்‌ நாத்திகர்கள்‌, ஆத்திகர்கள்‌ ஆகிய இரு பிரிவினருக்கும்‌ இடையில்‌ அப்படி ஒருவன்‌ இருக்கின்றான்‌. அல்லாஹ்‌ ஒருவன்‌ இருக்கின்றானா? என்பதை அறிவாராய்ச்சி மற்றும்‌ பிரபஞ்ச அத்தாட்சிகள்‌ போன்ற பிற ஆதாரங்களைக்‌ கொண்டு அறியும்‌ இயல்பிலேயே மனிதர்கள்‌ படைக்கப்பட்டுள்ளனர்‌ என்பது இஸ்லாத்தின்‌ நிலைப்பாடாகும்‌.

(புவியில்‌ பிரசவிக்கப்படுகின்ற) ஒவ்வொரு குழந்தையும்‌ முஸ்லிமாகவே பிறக்கின்றது. அக்குழந்தையை அவனது பெற்றோர்கள்தாம்‌ யூதனாகவோ, அல்லது கிறிஸ்தவனாகவோ, அல்லது நெருப்பு வணங்கியாகவோ மாற்றுகின்றனர்‌ என நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ குறிப்பிட்டார்கள்‌. (புகார்‌, முஸ்லிம்‌)

எனது அடியார்களை நேரியவழி நடப்பவர்களாகவே நான்‌ படைத்துள்ளேன்‌. ஷைத்தான்கள்தாம்‌ அவர்களை (அவ்வழியை விட்டு) வழிதவறச்‌ செய்தனர்‌. (நூல்‌ : முஸ்லிம்‌) என மற்றோரு ஹதீஸ்‌ குறிப்பிடுகின்றது.

இந்த அடிப்படையில்‌ பார்க்கின்ற போது படைப்பினங்களை ஆதாரமாகக்‌ கொண்டு அல்லாஹ்வை அறிவது என்பது இரண்டாம்‌ நிலையில்‌ வைத்து நோக்கப்படுகின்ற ஓர்‌ அம்சமாகும்‌ என்பதை நாம்‌ கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌.

அல்லாஹ்‌ ஒருவன்‌ இருக்கின்றான்‌ என்பதை இயல்பாக ஏற்றுக்கொண்ட மனிதனுக்குத்‌ துணையாகத்தான்‌ பிரபஞ்ச அத்தாட்சிகளின்‌ ஆய்வு அவசியமாகின்றது. அவற்றின்‌ மூலம்‌ அல்லாஹ்வின்‌ இருப்பை அவன்‌ உறுதி செய்ய முடியும்‌.

அதற்காக இவ்வுலகையும்‌, அதிலுள்ள கோடானகோடி படைப்பினங்களையும்‌ பற்றிச்‌ சிந்திப்பதால்‌ படைத்தவன்‌ ஒருவன்‌ இருக்கின்றான்‌ என்ற உண்மையைக்‌ கலங்கமற்ற மனித இயற்கை எப்போதுமே ஏற்றுக்‌ கொள்ளும்‌ என்பதில்‌ சந்தேகமில்லை.

கிராமப்புற அரபியர்களுள்‌ ஓர்‌ மனிதரிடம்‌, இறைவனின்‌ உள்ளமை பற்றி வினவப்பட்ட போது அவர்‌ கூறிய பதில்‌ அற்புதமானது.

தூய்மையாவைனான அல்லாஹ்வே! ஒட்டகத்தின்‌ சாணம்‌ ஒட்டகம்‌ இருப்பதைக்‌ காட்டுகின்றது; பாதங்களின்‌ சுவடுகள்‌ நடையைக்‌ காட்டுகின்றன; விண்ணில்‌ பல மண்டலங்கள்‌, புவியில்‌ காணப்படும்‌ விசாலமான பல வழிகள்‌ (துருவங்கள்‌, திசைகள்‌) அலைகள்‌ நிரம்பிய கடல்கள்‌ இவை யாவும்‌ நுட்பமும்‌, விவேகமும்‌ நிறைந்த ஒருவன்‌ இருப்பதாகத்‌ துல்லியமாகக்‌ காட்டவில்லையா? எனப்‌ பதிலளித்தார்‌. (தஃப்சீர்‌ இப்னு கஸீர்‌ : பாகம்‌: 1 பக்கம்‌: 51)

அறியாமைக்‌ காலத்தில்‌ வாழ்ந்த ஓர்‌ மனிதனின்‌ அற்புதமான இந்த விளக்கம்‌ நவீன காலத்தில்‌ வாழும்‌ நாத்திகர்களுக்கும்‌. விஞ்ஞானமே கடவுள்‌ என வாதிடுபவர்களுக்கும்‌ எதிராக எவ்வளவு பெரும்‌ நுட்பமான மறுப்பைத்‌ தாங்கி நிற்கின்றது என்பகைச்‌ சிந்தித்துப்‌ பாருங்கள்‌.

உலகில்‌ வாழ்ந்த தீர்க்கதரிசிகள்‌, துறவிகள்‌, நல்லடியார்கள்‌ போன்றோர்‌ மீது மனிதர்கள்‌ ஆன்மிகக்‌ காதல்‌ கொண்டு அவர்களின்‌ போதனைகள்‌, தத்துவங்களைத்‌ திரித்து அவற்றின்‌ மூலம்‌ மதங்களை உருவாக்கி, பின்னர்‌ அவர்களைக்‌ கடவுள்‌ நிலையில்‌ வைத்து வணங்குகின்றனர்‌. அவ்வாறு வணங்கப்படுபவர்களை “அல்லாஹ்‌” என்று நாம்‌ இங்கு குறிப்பிட வரவில்லை.

மாறாக, அவர்களையும்‌ உலகையும்‌ படைத்து பின்னர்‌ அனைவரையும்‌ மரணிக்கச்‌ செய்து, அனைவரையும்‌ விசாரணைக்காக எழுப்ப ஆற்றல்‌ மிக்கவனாகிய, ஏழு வானத்திற்கும்‌ அப்பாலுள்ள அர்ஷின்‌ மீதிருக்கின்ற அகிலங்களின்‌ அதிபதியாகிய அல்லாஹ்வைப்‌ பற்றியும்‌, அவனது இலக்கணங்கள்‌ பற்றியும்தான்‌ பேச விளைகின்றோம்‌.

ஆம்‌! ஓர்‌ பிரச்சினை, சோதனை என்று வருகின்ற போது அல்லாஹ்வைத்‌ தூய்மையாக நம்ப மறுக்கும்‌ மனிதன்‌கூட, வானின்‌ பக்கமாகத்‌ தனது இருகண்‌ புருவங்களையும்‌ தலையையும்‌ உயர்த்தி, கைகளை நீட்டிய வண்ணம்‌, “என்‌ நாயனே! என்னைப்‌ பாதுகாப்பாயாக!” என்று சுட்டிக்காட்டி, இறைஞ்சுகின்ற அந்த வல்லவனைத்தான்‌ அல்லாஹ்‌ எனக்‌ கூறி அவனைப்பற்றியே விளக்கிட முனைகின்றோம்‌.

அல்லாஹ்வைத்‌ தவிர வேறு யாரையும்‌ நமது இதயத்தில்‌ கடுகு அளவும்‌ கடவுளாக நாம்‌ நினைக்கவில்லை என்பதற்கு அவனைச்‌ சாட்சியாக்குகின்றோம்‌.

அஸ்மா, ஸிஃபாத்‌ பற்றிய அறிமுகத்திற்குள்‌ நுழைவதற்கு முன்னால்‌ அல்லாஹ்வைப்‌ பற்றியும்‌ அவனது இலக்கணங்கள்‌ பற்றியும்‌ இங்கு நோக்குவது பொருத்தமானதாகும்‌. அவை அல்லாஹ்வின்‌ தனித்தன்மை, கெளரவம்‌, கண்ணியம்‌, அவனது எண்ணில்‌ அடங்கா மகத்துவம்‌ ஆகியவற்றைப்‌ படம்‌ பிடித்துக்காட்டும்‌ சான்றுகளாகும்‌. 


அல்லாஹ்வின்‌ இலக்கணங்கள்‌

அகிலங்களையும்‌ அவற்றிலுள்ள அனைத்தையும்‌ படைத்த படைப்பாளனாகிய அல்லாஹ்வின்‌ உயரிய இலக்கணங்கள்‌ பற்றி அறிவது அவனைப்‌ பற்றிய நம்பிக்கையை அதிகரிக்க உதவும்‌ என்பதில்‌ சந்தேகம்‌ கிடையாது. அவை பற்றிச்‌ சுருக்கமாக இங்கு முன்வைக்கப்படுகின்றது.

ஆரம்பமானவன்‌

இப்பேரண்டத்தையும்‌, அதிலுள்ள உயிரினங்களையும்‌ படைப்பதற்குப்‌ பலகோடி வருடங்களுக்கு முன்பிருந்தே அல்லாஹ்‌ இந்த உலகில்‌ இருந்து வருகிறான்‌. அவனது இருப்பு என்பது என்றும்‌ நிலையானதாகும்‌. அதற்குரிய கால அளவு
பற்றி எவராலும்‌ அறிந்து கொள்ள முடியாது.

எமன்‌ தேசத்தவரான “பனூ தமீம்‌” கோத்திரத்தினர்‌ நபி (ஸல்‌) அவர்களிடம்‌ வந்தபோது நடைபெற்ற உரையாடவலில்‌ அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ தூதரை நோக்கி, “உங்களிடம்‌ அல்லாஹ்வைப்‌ பற்றியும்‌ இந்த உலக அமைப்பு பற்றியும்‌ கேட்க வந்தோம்‌” எனக்‌ கூறியபோது “எப்பொருளும்‌ இல்லாத நிலையில்‌ அல்லாஹ்‌ மட்டும்‌ இருந்தான்‌. அவனது (அர்ஷ்‌) சிம்மாசனம்‌ நீரின்மேல்‌ இருந்தது. ஏட்டில்‌ சகலத்தையும்‌ அவன்‌ பதிவு செய்தான்‌. அடுத்து, வானங்களையும்‌, பூமியையும்‌ படைத்தான்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ பதில்‌ கூறினார்கள்‌. (நூல்‌: புகாரீ ஹதீஸ்‌ எண்‌: 6982)

நபி (ஸல்‌) அவர்கள்‌ தமது பிரார்த்தனையில்‌ இக்கருத்தை உணர்த்தும்‌ வகையில்‌, தமது வலப்பக்கமாகச்‌ சாய்ந்து, படுக்கும்‌ வேளையில்‌ :

“அல்லாஹ்வே நீதான்‌ ஆரம்பமானவன்‌; உனக்கு முன்‌ எதுவும்‌ இருந்ததில்லை; நீதான்‌ இறுதியானவன்‌; உனக்குப்‌ பின்‌ எதுவும்‌ இருப்பதில்லை; நீதான்‌ வெளிரங்கமானவன்‌; உனக்கு மேலாக எதுவும்‌ கிடையாது; நீதான்‌ அந்தரங்கமானவன்‌; உன்னை அன்றி எதுவும்‌ இல்லை. எனப்‌ பிரார்த்தனை செய்வார்கள்‌. (நூல்‌: முஸ்லிம்‌)

அல்லாஹ்வை பற்றிய சந்தேகம்‌ மனதில்‌ எழுந்தால்‌

அல்லாஹ்வைப்‌ பார்த்தவர்‌ யார்‌? கண்டவர்‌ யார்‌? என்ற கேள்விகளின்‌ பின்னால்‌ அவனை யாரும்‌ காணவில்லையே! அதனால்‌ அப்படியான ஒருவன்‌ இருக்கமுடியாது என்ற முடிவிற்கு மனிதர்கள்‌ வருவது போன்று அல்லாஹ்‌ என்பவன்‌ எல்லாவற்றிற்கும்‌ முதலாமவனா? அப்படியானால்‌ அவனுக்கு முதலாவதாக இருந்தவர்‌ யார்‌? என்ற கேள்வி எழுப்பி அவனை நிராகரிப்போரும்‌ இருக்கின்றனர்‌.

அல்லாஹ்‌ இந்தப்படைப்பினைப்‌ படைத்தான்‌; என்று மனிதர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ கேட்டுக்கொண்டு, அல்லாஹ்வைப்‌ படைத்தது யார்‌ என்று கேட்கப்படும்‌ வரை கேள்வி கேட்டுக்‌ கொண்டே இருப்பார்கள்‌. அப்படியான ஒன்றை யாராவது உணர்ந்தால்‌, “ஆமன்துபில்லாஹ்‌” நான்‌ அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டுவிட்டேன்‌ என்று கூறிக்கொள்ளட்டும்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (நூல்கள்‌ : புகாரீ. முஸ்லிம்‌)

என்றும்‌ நிலையானவன்‌

உலகில்‌ காணப்படும்‌ அல்லாஹ்வின்‌ அதிசயப்‌ படைப்புகளான சூரியன்‌, சந்திரன்‌, இதர கோள்கள்‌ அனைத்தும்‌ வீரியத்தை இழந்து, ஒன்றுடன்‌ ஒன்று முட்டி மோதிக்‌ கொள்ளும்‌ போது உலகம்‌ முழுமையாக அழிக்கப்படும்‌. இவை அனைத்தையும்‌ அழித்த பின்பும்‌ அல்லாஹ்‌ மட்டும்‌ எஞ்சியிருப்பான்‌.

அதன்‌ (புவியின்‌) மீதிருக்கும்‌ அனைவரும்‌ அழிவைச்‌ சந்திப்பர்‌. சங்கையும்‌, மகத்துவமும்‌ உடைய உமது இரட்சகனின்‌ முகமே எஞ்சியிருக்கும்‌ (அர்ஹ்மான்‌: 26-27)

அவனது (அல்லாஹ்வின்‌) முகத்தைத்‌ தவிர அனைத்துப்‌ பொருள்களும்‌ அழியக்‌ கூடியவையே! சட்டம்‌ (இயற்றும்‌ அதிகாரம்‌) அவனுக்குரியதாகும்‌. (மரணத்திற்குப்‌ பின்‌) நீங்கள்‌ அவனிடம்‌ மீட்டப்படுவீர்கள்‌. (அல்கஸஸ்‌. வச: 88)

“சூர்‌ (ஊதுகுழலில்‌) ஊதப்பட்டால்‌ அல்லாஹ்‌ நாடியோரைத்தவிர வானில்‌ இருப்போரும்‌, பூமியில்‌ இருப்போரும்‌ மூர்ச்சை ஆகுவர்‌. பின்னர்‌ மற்றோரு தடவை அதில்‌ ஊதப்படும்போது அந்தோ அவர்கள்‌ (அனைவரும்‌ கேள்விக்காக) எழுந்து காத்துக்‌ கொண்டிருப்பார்கள்‌. (அஸ்ஸுமர்‌: 68)

இறையாசனத்தை எட்டுப்பேர்‌ (வானவர்கள்‌ தமது தோள்களில்‌) சுமப்பார்கள்‌. (அல்ஹாக்கா:17)

வணக்கத்திற்குத்‌ தகுதியானவன்‌ அல்லாஹ்வைத்‌ தவிர வேறு யாரும்‌ இல்லை. (அவன்‌) என்றும்‌ உயிருள்ளவன்‌; என்றும்‌ நிலையானவன்‌. அவனைச்‌ சிறுதூக்கமோ, பெரும்‌ உறக்கமோ பீடிப்பதில்லை. (அல்பகரா: 225) மேற்கண்ட வசனங்களில்‌ என்றும்‌ நிலையானவன்‌ அல்லாஹ்‌ மட்டுமே, என்பதை அறியலாம்‌.

சத்தியமானவன்

அல்லாஹ்‌ என்பவன்‌ கற்பனைக்‌ கதாப்பாத்திரமோ, நினைவில்‌ நிழலாடும்‌ ஒருவனோ கிடையாது. மாறாக, அவன்‌ உண்மையானவன்‌; சத்தியமானவன்‌. அவனையன்றி! உலகில்‌ வணங்கப்படுகின்ற அனைத்து வகையான தெய்வங்களும்‌ பொய்யானவை.

அல்லாஹ்வாகிய அவனே சத்தியமானவன்‌. அவனை அன்றி அவர்கள்‌ அழைக்கின்றவை யாவும்‌ அசத்தியமானவை. நிச்சயமாக அல்லாஹ்‌ உயர்ந்தவனும்‌, மிகப்பெரியவனும்‌ ஆவான்‌ (லுக்மான்‌. வச: 30 )

நபி (ஸல்‌) அவர்கள்‌ இரவில்‌ “தஹஜ்ஜுத்‌” தொழுகைக்காக எழுகின்ற போது கேட்கின்ற நீண்ட பிரார்த்தனையில்‌ :

“அல்லாஹ்வே நீ உண்மையானவன்‌, உனது வாக்கு உண்மையானது. உன்னைச்‌ சந்திப்பும்‌ உண்மையானது” எனப்‌ பிரார்த்தனை செய்வார்கள்‌. (புகாரீ:1053-5842).

அணுவைக்‌ கண்டுபிடித்தவன்‌, மின்சாரத்தைக்‌ கண்டு பிடித்தவன்‌, விமானத்தைக்‌ கண்டுபிடித்தவன்‌, மோட்டார்‌ வாகனத்தைக்‌ கண்டுபிடித்தவன்‌, வானொலிப்‌ பெட்டியைக்‌ கண்டு பிடித்தவன்‌ என உலகில்‌ பல கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளர்கள்‌ இருக்கிறார்கள்‌ என்றால்‌ இப்பேரண்டத்தை ஓர்‌ கட்டுப்பாடுடனும்‌, ஒழுங்குடனும்‌ நிருவகிக்கும்‌ ஒருவன்‌ இல்லை என வாதிடுவது ஓர்‌ பக்கம்‌ அதிசயமாக இருந்தாலும்‌, மறுபக்கம்‌ அவன்‌ பேரில்‌ புரிகின்ற அந்தியாகத்‌ தெரியவில்லையா?

முன்னுதாரணமின்றி இப்பேரண்டத்தை உருவாக்கியவன்‌ இப்பேரண்டத்தையும்‌, அதிலுள்ள உயிரினங்களையும்‌ முன்னுதாரணமின்றிப்‌ படைத்தவன்‌. அவனே இவ்வுலகினதும்‌, அதில்‌ காணப்படும்‌ படைப்புகளினதும்‌ அதிபதி.

மனிதர்களே! நீங்கள்‌ இறையச்சமுடையோராய்‌ மாறுவதற்காக உங்களையும்‌, உங்களுக்கு முன்‌ வாழ்ந்தோரையும்‌ படைத்த உங்கள்‌ இரட்சகனை வணங்குங்கள்‌. அவனே உங்களுக்குப்‌ பூமியை விரிப்பாகவும்‌, வானத்தை முகடாகவும்‌ அமைத்தான்‌. உங்களுக்கு உணவாக இருக்கும்‌ பொருட்டு வானில்‌ இருந்து நீரை இறக்கி, அதன்‌ மூலம்‌ கனிவர்க்கங்களை உற்பத்தி செய்தான்‌. ஆகவே நீங்கள்‌ அறிந்த நிலையில்‌ அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதீர்கள்‌. (அல்பகரா: வச: 21-22)

சந்ததிகள்‌ அற்றவன்‌.

அல்லாஹ்வுக்கு மனைவி, மக்களோ, குழந்தை குட்டிகளோ இல்லை. அவனுடன்‌ மனைவி, மக்களை இணைத்துக்‌ கூறுவதை வானங்களும்‌, பூமியும்‌ இடிந்துவிடும்‌ அளவுக்குரிய பெரும்‌ குற்றச்‌ செயலாக அல்லாஹ்‌ நோக்குகின்றான்‌. இது பற்றி அல்குர்‌ஆன்‌ பல இடங்களில்‌ எச்சரிக்கை செய்கிறது.

அவர்கள்‌ அர்ரஹ்மான்‌ குழந்தையை எடுத்துக்‌ கொண்டான்‌ எனக்‌ கூறுகின்றனர்‌. நிச்சயமாக நீங்கள்‌ பெரும்‌ அபாண்டத்தைக்‌ கொண்டு வந்துள்ளீர்கள்‌. அர்ரஹ்மானுக்கு (அல்லாஹ்வுக்கு) (குழந்தை இருப்பதாக இவர்கள்‌ வாதிடுவதால்‌) வானங்கள்‌ வெடித்து, இந்தப்பூமியும்‌ பிளந்து, மலைகளும்‌ சுக்கு நூறாகிவிடும்‌ போலும்‌! (மர்யம்‌: 88 - 92)

“அல்லாஹ்‌ தனக்கு குழந்தையை எடுத்துக்‌ கொண்டான்‌ என அவர்கள்‌ (கற்பனையாகக்‌) கூறுகின்றனர்‌. அவன்‌ அதிலிருந்து தூயவன்‌, அவன்‌ எவ்விதத்‌ தேவையும்‌ அற்றவன்‌. வானங்களிலும்‌, பூமியிலும்‌ இருப்பவை அவனுக்குரியவையாகும்‌. (இவ்வாறு கூறுவதற்கு) உங்களிடம்‌ எவ்விதச்‌ சான்றும்‌
கிடையாது. நீங்கள்‌ அறியாத ஒன்றை அல்லாஹ்வினமீது இட்டுக்‌ கட்டிக்‌ கூறுகின்றீர்களா? (யூனுஸ்‌: 68 ).

வானங்கள்‌ மற்றும்‌ பூமியை முன்னுதாரணமின்றிப்‌ படைத்தவன்‌. அவனுக்கு மனைவி இல்லாத நிலையில்‌ குழந்தை எவ்வாறு இருக்கும்‌? அவனே அனைத்துப்‌ பொருள்களையும்‌ படைத்தவன்‌. அவனே அனைத்தையும்‌ பற்றி நன்கறிந்தவன்‌. (அல்‌அன்‌ஆம்‌. வச: 101)

ஆதமின்‌ மகனுக்கு எவ்வித அதிகாரமும்‌ இல்லாத நிலையில்‌ அவன்‌ என்னைப்‌ பொய்ப்பித்துள்ளான்‌. அவனுக்கு அதிகாரம்‌ இல்லாத நிலையில்‌ என்னை அவன்‌ திட்டித்தீர்க்கின்றான்‌. அவன்‌ மரணித்த பின்‌ நான்‌ அவனைத்‌ திரும்பவும்‌ மீட்டமாட்டேன்‌ எனக்‌ கூறுவது என்னை அவன்‌ பொய்ப்பிப்பதாகும்‌. நான்‌ தேவையற்றவனாகவும்‌, யாருக்கும்‌ பிறக்காதவனாக, யாராலும்‌ பெற்றெடுக்கப்படாதவனாக, எனக்கு நிகராக யாரும்‌ இல்லாதிருக்கும்‌ நிலையிலும்‌ “அல்லாஹ்‌ தனக்குக்‌ குழந்தையை எடுத்துக்‌ கொண்டான்‌” என ஒருவன்‌ கூறுவது என்னை அவன்‌ திட்டுவதாகும்‌ என அல்லாஹ்‌ கூறுவதாக நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறியதை அபூஹுரைரா (ரழி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌. (ஆதாரம்‌ நூல்‌: புகாரீ‌. ஹதீஸ்‌ இல: 4690, 4691)

“உமது இரட்சகனுக்குப்‌ பெண்மக்களும்‌, அவர்களுக்கு ஆண் மக்களுமா? என்று (நபியே!) நீர்‌ அவர்களிடம்‌ விளக்கம்‌ கேட்பீராக! அல்லது அவர்கள்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கையில்‌ வானவர்களைப்‌ பெண்மக்களாக நாம்‌ படைத்தோமா? அவர்கள்‌ அல்லாஹ்‌ குழந்தையைப்‌ பெற்றெடுத்தான்‌ என அபாண்டமாகவே கூறுகின்றனர்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்ளுங்கள்‌. நிச்சயமாக அவர்கள்‌ பொய்யர்கள்‌, ஆண்மக்களை விட்டு விட்டுப்‌ பெண்மக்களை அவன்‌ தெரிவு செய்தானா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு (பொய்யான) தீர்ப்புக்‌ கூறுவீர்கள்‌? நீங்கள்‌ சிந்திக்க மாட்டீர்களா? அல்லது உங்களுக்கு ஏதாவது தெளிவான சான்றுகள்‌ இருக்கின்றனவா? நீங்கள்‌ உண்மையாளர்களாக இருப்பின்‌ உங்கள்‌ வேதத்தில்‌ இருந்து (அத்தாட்சியைச்‌) சமர்ப்பியுங்கள்‌. (அஸ்ஸாஃப்பாத்‌: 149-175 )

தனித்தவன்

அகிலங்களின்‌ அதிபதியாகிய அல்லாஹ்‌ தனித்தவன்‌; அவன்‌ ஒருவனே. மக்காவாழ்‌ காஃபிர்கள்கூட அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில்‌ அவன்‌ ஒருவன்‌ என்பதையும்‌ ஓர்‌ வகையில்‌ நம்பிக்கை கொண்டிருந்தனர்‌.

பலகோடி தெய்வங்கள்‌ இருப்பதாக நம்புகின்ற மனிதர்களும்‌ அல்லாஹ்‌ ஒருவன்‌ இருப்பதை நம்புகின்றனர்‌.

இஸ்லாமிய நம்பிக்கையின்‌ அடிப்படையில்‌ அல்லாஹ்‌ ஒருவன்‌; அவன்‌ தனித்தவன்‌; அவனது மெய்மை பன்முகத்தன்மைக்கு அப்பாற்பட்டதாகும்‌. வானவர்கள்‌ அவனுடைய துணையாளர்கள்‌ கிடையாது. மாறாக அவனது கட்டளைக்குக்‌ கட்டுப்பட்டு முழுமையாக அடிபணிந்து நடக்கின்ற அடியார்களாவர்‌.

அவன்தான்‌ அல்லாஹ்‌; (அவன்‌) தனித்தவன்‌; அடக்கி ஆள்பவன்‌ (ஸுமர்‌: 04)

வாஹித்‌-தனித்தவன்‌- என்ற சொல்‌ அல்குர்‌ஆனில்‌ பல இடங்களில்‌ இடம்‌ பெற்றிருக்கின்றது. அவ்வாறே அஹத்‌-ஒருவன்‌- தனித்தவன்‌. என்ற பொருளில்‌ பல சொற்பிரயோகங்களும்‌ இடம்‌ பெற்றிருப்பதைக்‌ காண முடிகின்றது.

அவன்‌ என்றும்‌ தனித்தவனாக இருந்து வருவது போன்று வணக்கத்திலும்‌ அவன்‌ தனிமைப்படுத்தப்பட்டு, இணைவைப்பில்‌ இருந்து தூய்மைப்படுத்தப்பட்டவனாக வணங்கப்படுவதையே அவன்‌ விரும்புகின்றான்‌. அதுதான்‌ அவனது கட்டளையும்கூட. வணக்கவழிபாடுகளில்‌ அவனுக்கு இணை கற்பிப்பது அவனது தனித்தன்மைக்கு குந்தகம்‌ விளைவிப்பதாகும்‌.

நிச்சயமாக (வணங்கப்பட வேண்டிய) உங்களின்‌ கடவுள்‌ ஒருவனே! (அஸ்ஸாஃப்பாத்‌: 04)

எனது இரட்சகனையே நான்‌ பிரார்த்தனை செய்கின்றேன்‌. நான்‌ அவனுக்கு யாரையும்‌ இணைவைக்கமாட்டேன்‌ என்று நபியே! நீர்‌ கூறுவீராக! (அல்ஜின்‌: 20).

(நபியே!) அவன்‌ அல்லாஹ்‌; அவன்‌ ஒருவனே என்று நீர்‌ கூறுவீராக! (அல்‌இக்லாஸ்‌: 01)

ஆண்‌, பெண்‌ பாலினத்திற்கு அப்பாற்பட்டவன்‌

அல்லாஹ்‌ என்பவன்‌ ஆணும்‌ இல்லை; பெண்ணுமில்லை. அவன்‌ அரவாணியும்‌ கிடையாது. உலகில்‌ மனிதனை வைத்து அல்லாஹ்‌ இப்படித்தான்‌ இருப்பான்‌ என முடிவு செய்ய முடியாது. ஏனெனில்‌ அவனுக்கு நிகர்‌ யாரும்‌ இல்லை.

அல்லாஹ்வுக்கு -தாத்‌- எனப்படும்‌. உள்ளமையின்‌ யதார்த்த அமைப்பு உண்டு. அவனுக்கு எது தகுதியான பண்போ அதைக்‌ கொண்டு அவன்‌ வர்ணிக்கப்படுகின்றான்‌. எவை எல்லாம்‌ அவனது தகுதிக்கு தகுதி அற்றவையோ அவற்றை விட்டு அவன்‌ தூய்மையானவன்‌. ஒருவர்‌ அல்லாஹ்வைச்‌ சுட்டிக்காட்டிப்‌ பேசும்‌ போது “அவன்‌” என்று கூறினாலோ, அல்லது “அவர்‌” என்று கூறினாலோ அதில்‌ தவறில்லை.

அரபுமொழி வழக்கில்‌ அவன்‌ என்பதைக்‌ குறிக்கப்‌ பயன்படுத்தப்படும்‌ “ஹுவ” அவன்‌, அவர்‌ என்ற சொல்‌ அல்லாஹ்வைக்‌ குறிக்க உபயோகிக்கப்படுவதைக்‌ கவனத்தில்‌ கொண்டு முஸ்லிம்கள்‌ அல்லாஹ்வை அவன்‌ என அழைக்கின்றனர்‌.

தமிழ்மொழிவழக்கில்‌ அவன்‌ என்று சொல்வது இகழ்ச்சியான ஓர்‌ நடைமுறை அல்ல. சிலபோது புகழுக்குரியதாகவும்‌, மரியாதைக்குரியதாகவும்‌ கொள்ளப்படுவதுண்டு.

வள்ளுவன்‌ சொன்னான்‌; கம்பன்‌ பாடினான்‌ போன்ற வார்த்தைப்‌ பிரயோகங்கள்‌ இன்றும்‌ வழக்கில்‌ உள்ளன. அதை யாரும்‌ அவமரியாதையாக நோக்குவதில்லை. மொழி என்பது புரிதலுக்குரிய ஊடகமே தவிர பாராட்டிக்‌ கொண்டு, பெருமை பேசுவதற்குரியது அல்ல.

அல்லாஹ்வை நாம்‌ அவன்‌ என்று குறிப்பிடுகின்ற போது முஸ்லிமல்லாத சகோதரர்கள்‌ அது மரியாதைக்‌ குறைவாக இருக்கிறதே என நினைத்தாலும்‌ காரணம்‌ இதுதான்‌. அவர்‌ என்ற சொல்லைப்‌ பயன்படுத்தி ஒருவர்‌ அல்லாஹ்வைச்‌ சுட்டிக்காட்டுவாரானால்‌ அதனைத்‌ தவறாக எடுக்க முடியாது.

சிந்தனையால்‌ கற்பனை செய்ய முடியாத அழகிய தோற்றமுடையவன்‌

அல்லாஹ்‌ என்பவன்‌ சுத்த சூனியம்‌ என்று விளங்கிவிடக்‌கூடாது. நமது அறிவுக்கும்‌, கற்பனைக்கும்‌ அப்பாற்பட்ட அவனுக்கென்று ஓர்‌ தோற்றம்‌ இருக்கிறது. அதனை நம்மால்‌ கற்பனை செய்ய முடியாது என்பதற்காக உருவமற்றவன்‌ என வாதிடுவது அவன்மீது அறிவின்றி, அபத்தமான ஒன்றைக்‌ கூறியதாகவும்‌ மார்க்கத்தில்‌ தடுக்கப்பட்ட ஒன்றைப்‌ பொய்யாக அவன்‌ மீது கூறியதாகவும்‌ கொள்ளப்படும்‌.

மானக்கேடானவற்றில்‌ வெளிப்படையானவற்றையும்‌, இரகசியமானவற்றையும்‌, பாவம்‌ செய்வதையும்‌, நியாயமின்றி வரம்பு மீறுவதையும்‌, எது பற்றி அல்லாஹ்‌ எந்த ஆதாரத்தையும்‌ இறக்கிவைக்கவில்லையோ அதைக்‌ கொண்டு அல்லாஹ்வுக்கு இணையாக்குவதையும்‌, நீங்கள்‌ அறியாததை அல்லாஹ்வின்‌ மீது இட்டுக்கட்டிக்‌ கூறுவதையுமே என்‌ இரட்சகன்‌ தடை செய்துள்ளான்‌ என்று (நபியே!) நர்‌ கூறுவீராக! (அல்‌அஃராஃப்‌:33)

அவனை (அல்லாஹ்வை) பார்வைகள்‌ அடைந்து கொள்ளமாட்டாது. அவன்‌ பார்வைகளை அடைவான்‌. அவன்‌ மென்மையானவனும்‌, யாவற்றையும்‌ நன்கு அறிந்தவனும்‌ ஆவான்‌. (அல்‌அன்‌ஆம்‌. வச: 103).

அல்லாஹ்வின்‌ தூதரே! மறுமையில்‌ நமது இரட்சகனை நாம்‌ காணுவோமா? என நபித்தோழர்கள்‌ சிலர்‌ கேட்டனர்‌. மேகமின்றிச்‌ சூரியனைப்‌ பார்ப்பதில்‌ ஏதாவது தடங்கல்‌ இருக்குமா? என நபி (ஸல்‌) அவர்கள்‌ கேட்டார்கள்‌. “இல்லை” அல்லாஹ்வின்‌ தூதரே! என அம்மக்கள்‌ பதில்‌ கூறினர்‌. பின்பு மேகமின்றி முழுச்‌ சந்திரனை பெளர்ணமி இரவில்‌ பார்ப்பதில்‌ ஏதாவது தடங்கல்‌ இருக்குமா? எனக்‌ கேட்டார்கள்‌. இல்லை அல்லாஹ்வின்‌ தூதரே! என அம்மக்கள்‌ பதில்‌ கூறினர்‌. அவ்வாறே, எவ்விதத்‌ தடையுமின்றி நீங்கள்‌ அவனை மறுமையில்‌ பார்ப்பீர்கள்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌. (நூல்‌: புகாரீ: 6088)

எவனது உள்ளத்தில்‌ கடுகு அளவு பெருமை இருக்கிறதோ அவன்‌ சுவர்க்கம்‌ செல்லமாட்டான்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியதைச்‌ செவிமடுத்த ஓர்‌ மனிதர்‌ 'ஒருவர்‌ தமது ஆடையும்‌, பாதணியும்‌ அழகாக இருக்க விரும்புகிறார்‌. அது பெருமையைச்‌ சேர்ந்ததா? எனக்‌ கேட்டார்‌. அதற்குப்‌ பதில்‌ அளித்த நபி (ஸல்‌) அவர்கள்‌:
“நிச்சயமாக அல்லாஹ்‌ மிகஅழகானவன்‌. அவன்‌ அழகை விரும்புகிறான்‌. பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும்‌, மக்களை ஏளனமாகப்‌ பார்ப்பதும்‌” எனக்‌ கூறினார்கள்‌. (நூல்‌: முஸ்லிம்‌: 131)”

இவ்வுலகில்‌ அவனை நேரில்‌ பார்க்க முடியாது

இவ்வுலகில்‌ அல்லாஹ்வை நேரில்‌ பார்ப்பதற்கு மூசா (அலை) அவர்களுக்கு அபரிமிதமான ஆசை இருந்தது. ஆனால்‌ அது கைகூடவில்லை என்பதுதான்‌ உணமை.

மூசா (அலை) அவர்கள்‌ ஆசைப்பட்டு அதற்கான கோரிக்கையை அல்லாஹ்விடம்‌ முன்வைத்தற்காக அல்லாஹ்‌ நிபந்தனையின்‌ பேரில்‌ அனுமதித்தான்‌. அந்த நிபந்தனைக்கு மூசா (அலை) அவர்கள்‌ கட்டுப்பட்டார்கள்‌. அதன்‌ பின்னால்‌ தூர்சீனா எனும்‌ மலையடிவாரத்திற்கு மூசா (அலை) அவர்கள்‌ அழைக்கப்பட்டார்கள்‌.

(குறிக்கப்பட்ட) நமது எல்லைக்கு மூசா வந்த போது, அவரது இரட்சகன்‌ அவருடன்‌ பேசினான்‌. உடனே மூசா, எனது இரட்சகனே! நான்‌ உன்னைப்‌ பார்ப்பதற்கு எனக்கு உன்னைக் காட்டுவாயாக! என்று கோரினார்‌. உன்னால்‌ என்னைக்‌ காணமுடியாது, இருந்தாலும்‌ நீ இந்த மலையை நோக்கிப்பார்‌. அது அதன்‌ இடத்தில்‌ நிலையாக இருக்குமானால்‌ என்னை நீ காணுவாய்‌ என (அல்லாஹ்‌) கூறினான்‌. அவரது இரட்சகன்‌ மலைக்குக்‌ காட்சி தந்தபோது அது அதை சுக்குநூறாக்கியது. மூசாவும்‌ உடனே மூர்ச்சையாகினார்‌. அவர்‌ தெளிவடைந்ததும்‌, “நீ தூயவன்‌. (உன்னைத்‌ துதிக்கின்றேன்‌) நான்‌ உன்னிடம்‌ பாவமீட்சி வேண்டுகிறேன்‌. இன்னும்‌ நான்‌ இறை நம்பிக்கையாளர்களில்‌ முதன்மையானவராக ஆகிவிடுகிறேன்‌” எனக்‌ கூறினார்‌. (அல்‌அஃராஃப்‌: 143)

அல்லாஹ்வின்‌ பிரகாசத்திற்கு முன்னால்‌ மலைக்கே தாக்குப்பிடிக்க முடியாது என்றால்‌ பலவீனமான மனிதனால்‌ அதைத்‌ தாங்கிக்‌ கொள்ள முடியுமா? என்பதை உணர்த்தவே இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்ளுங்கள்‌.

“மிஃராஜ்‌” என்ற விண்வெளிப்‌ பயணம்‌ மேற்கொண்ட நபி (ஸல்‌) அவர்களிடம்‌ நபித்தோழர்‌ அபூதர்‌ (ரழி) அவர்கள்‌ :

“அல்லாஹ்வின்‌ தூதரே! உங்கள்‌ இரட்சகனை நீங்கள்‌ நேரில்‌ கண்டீர்களா? என வினவினார்கள்‌. (அவன்‌) பிரகாசமானவன்‌, எவ்வாறு அவனைப்‌ பார்க்கமுடியும்‌? என நபி (ஸல்‌) அவர்கள்‌ பதில்‌ அளித்தார்கள்‌. (முஸ்லிம்‌ இல: 178).

மற்றோர்‌ அறிவிப்பில்‌:

“அவனது திரை பிரகாசமாகும்‌. அதனை அவன்‌ நீக்கினால்‌ அவனது பிரகாசம்‌, அவனது பார்வை அவனது படைப்பினங்களில்‌ எது வரை சென்றடைகிறதோ அவற்றை அப்படியே அது கருக்கிவிடும்‌ என இடம்‌ பெற்றுள்ளது.

“மஸ்ரூக்‌” என்பவர்‌ குறிப்பிடுகிறார்‌: நான்‌ அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின்‌ வீட்டில்‌ சாய்ந்தவாறு அமர்ந்திருந்தேன்‌. அப்போது என்னை ஆயிஷாவின்‌ தந்தையே! (மஸ்ரூக்‌ அவர்களின்‌ புனைப்‌ பெயர்‌) என என்னை அழைத்த அன்னை அவர்கள்‌ “மூன்று விஷயங்கள்‌ இருக்கின்றன. அதில்‌ ஒன்றையேனும்‌ எவர்‌ ஒருவர்‌ பேசுகின்றாரோ அவர்‌ அல்லாஹ்வின்‌ மீது மாபெரும்‌ அபாண்டத்தைக்‌ கூறியவராவார்‌” எனக்‌ கூறினார்கள்‌. உடனே அவை என்ன என்று கேட்டேன்‌. அதற்கு அவர்கள்‌: “எவர்‌ முஹம்மத்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வை நேரில்‌ கண்டதாகக்‌ கூறுகிறாரோ அவர்‌ நிச்சயமாக அல்லாஹ்வின்‌ மீது அபாண்டத்தைக்‌ கூறியவராவார்‌ எனக்‌ குறிப்பிட்டார்கள்‌. (முஸ்லிம்‌: 177)

அன்பு, கருணை, தயாளம்‌ நிறைந்தவன்‌

அல்லாஹ்வை அன்பு மற்றும்‌ கருணையின்‌ ஊற்று என்று வர்ணித்தாலும்‌ அதில்‌ தவறில்லை எனக்‌ கூறும்‌ அளவு அவனது கருணை பற்றி அல்குர்‌ஆன்‌, அஸ்ஸுன்னாவில்‌ விரிவாகப்‌ பேசப்பட்டுள்ளது.

அர்ஷின்‌ அதிபதியாகிய அல்லாஹ்‌ படைப்புகளின்‌ தீர்ப்புகள்‌ பற்றிய பதிவை முடித்ததும்‌ அவன்‌ தன்னிடம்‌ ஓர்‌ அன்பு ஏட்டை எழுதியுள்ளான்‌. அது அவனிடம்தான்‌ இருக்கின்றது. அதில்‌ அவன்‌, “நிச்சயமாக எனது கருணையானது எனது கோபத்தை மிகைத்துவிட்டது” என்று பதிவு செய்துள்ளான்‌ என நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (புகாரி‌. இல: 3194)

அல்லாஹ்வின்‌ தூதராகிய முஹம்மத்‌ நபி(ஸல்‌) அவர்களின்‌ காலத்தில்‌ நடந்த ஒரு போரில்‌ போர்க்கைதியாகப்‌ பிடிக்கப்பட்ட பெண்‌ ஒருத்தி தனது குழந்தையை இழந்துவிட்டாள்‌. அவள்‌ தன்‌ கண்ணெதிரே தெரிகின்ற எல்லாக்‌ குழந்தைகளையும்‌ தனது நெஞ்சோடு இறுக அணைத்துக்‌ கொண்டு, அவளது மார்பைப்‌ பிழிந்து பால்‌ ஊட்டிக்‌ கொண்டிருந்தாள்‌. இந்த அதிசயக்‌ காட்சி பற்றி அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ எடுத்துக்‌ கூறப்பட்டபோது,

“இந்தப்‌ பெண்‌ அவளது குழந்தையை நெருப்பில்‌ போடவிரும்புவாள்‌ என்று நீங்கள்‌ நினைக்கினறீர்களா?” என்று கேட்டார்கள்‌. “இல்லை அல்லாஹ்வின்‌ தூதரே! அவள்‌ அவ்வாறு செய்யமாட்டாள்‌ என்று சொன்னோம்‌ அப்போது, இப்பெண்‌ தனது குழந்தையுடன்‌ பாசமாக இருப்பதை விட அல்லாஹ்‌ தனது அடியார்களுடன்‌ பன்மடங்கு கருணை உள்ளவன்‌ எனக்‌ குறிப்பிட்டார்கள்‌. (புகாரி‌. இல: 7154).

மனிதர்கள்‌ ஒருவருக்கொருவர்‌ அன்பு காட்டி வாழ்வதும்‌, விஷஜந்துக்கள்‌, மிருகங்கள்‌ தமது குட்டிகளுடன்‌ அன்பாக, பாசமாக இருப்பதும்‌ அல்லாஹ்‌ கொடுத்துள்ள ஓர்‌ கருணையின்‌ வெளிப்பாடாகும்‌.

அல்லாஹ்விடம்‌ நூறு கருணைகள்‌ உள்ளன. அவற்றில்‌ இருந்து ஒன்றை ஜின்கள்‌, மனிதர்கள்‌, கால்நடைகள்‌, விஷஜந்துக்கள்‌ மத்தியில்‌ இறக்கி வைத்துள்ளான்‌. அதைக்‌ கொண்டுதான்‌ அவர்கள்‌ தமக்குள்‌ ஒருவருக்கொருவர்‌ அன்புகாட்டி வாழ்கின்றனர்‌. கால்நடைகள்‌ தமது குட்டிகளுடன்‌ அன்புகாட்டுவதும்‌ அதைக்‌ கொண்டுதான்‌. மற்ற 99 கருணைகளையும்‌ அவன்‌ தன்னிடம்‌ தக்க வைத்துள்ளான்‌. அவற்றைக்‌ கொண்டு அவன்‌ தனது நல்லடியார்களுக்கு மறுமையில்‌ கருணைகாட்டுவான்‌ எனக்‌ கூறினார்கள்‌. (புகாரீ இல: 7153)

மற்றோர்‌ அறிவிப்பில்‌, “ஒட்டகம்‌ தனது குட்டி மிதிபடாமல்‌ அதன்‌ குரையை உயர்த்திக்‌ கொள்வதும்‌ அதைக்‌ கொண்டுதான்‌” என வந்துள்ளது. (புகாரி‌, முஸ்லிம்‌).

சுவர்க்கம்‌ அல்லாஹ்வின்‌ கருணையினால்‌ தோற்றுவிக்கப்பட்ட கருணை இல்லமாகும்‌. அவன்‌ கருணை செய்ய விரும்புகின்ற அடியார்களுக்கு அதை வழங்கி கருணை செய்கின்றான்‌.

அல்லாஹ்‌ சுவர்க்கத்தை நோக்கி, “நீ எனது கருணை ஆவாய்‌. எனவே எனது அடியார்களில்‌ விரும்புபவர்களை நான்‌ உன்னுள்‌ நிரப்புவேன்‌” என்று அல்லாஹ்‌ கூறியதாக நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (புகாரி‌ - 4850)

“அல்லாஹ்வின்‌ கருணை இன்றி மனிதர்கள்‌ சுவர்க்கம்‌ நுழைய முடியாது” என்று நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள் கூறினார்கள்‌.

உலகில்‌ அல்லாஹ்வை நம்புவோர்‌, நம்ப மறுப்போர்‌ அனைவருக்கும்‌ பாகுபாடின்றி, கருணை செய்பவன்‌ என்ற விரிவான பொருள்‌ கொண்ட அர்ரஹ்மான் என்ற சொல்லானது அல்குர்‌ஆனில்‌ 48 இடங்களில்‌ இடம்‌ பெற்றுள்ளது.

இதற்கு “அளவற்ற அருளாளன்‌” என்று அறிஞர்களால்‌ சுருக்கமாக மொழியாக்கம்‌ தரப்படுகின்றது.

அர்ரஹ்மான்‌ என்ற சொல்லைக்‌ கொண்டு ஆரம்பிக்கின்ற ஓர்‌ அத்தியாயம்‌ இடம்‌ பெற்றிருப்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்‌.

அல்லாஹ்வை நம்பி வாழ்ந்த மனிதர்களுக்கென்று மரணத்தின்‌ பின்னர்‌ நடைபெறும்‌ விசாரணை நாளின்‌ போது சிறப்புக்‌ கருணை செய்பவன்‌ என்ற பொருள்‌ தரப்படுகின்ற அர்ரஹீம் என்ற சொல்லானது அல்குர்‌ஆனில்‌ 34 இடங்களில்‌ இடம்‌ பெற்றுள்ளது.

அர்ரஹீம்‌ என்ற இச்சொல்லானது அஷ்ஷுஅரா என்ற அத்தியாயத்தில்‌ மட்டும்‌ ஒன்பது இடங்களில்‌ இடம்‌ பெற்றுள்ளது கவனிக்கத்தக்கதாகும்‌.

அத்துடன்‌ அதன்‌ கிளைகளாக இடம்‌ பெறும்‌‌ “நீங்கள்‌ கருணை செய்யப்படுவீர்கள்‌' என்ற சொல்‌ அல்குர்‌ஆனில்‌ எட்டு இடங்களில்‌ இடம்‌ பெற்றிருக்கின்றது.

அவ்வாறே, “அவன்‌ கருணை செய்வான்‌” என்ற பொருளில்‌ அல்குர்‌ஆனில்‌ பல இடங்களில்‌ இடம்‌ பெற்றிருப்பது அல்லாஹ்‌ பற்றிய அறிமுகத்தில்‌  ‘அர்ரஹ்மான்‌' என்ற சொல்‌ முக்கியப்‌ பங்கு வகிக்கின்றது என்பதை நாம்‌ அறிந்து கொள்ள முடிகின்றது.

அன்பு, கருணை, தயாளம்‌ போன்ற உயர்‌ பண்புகள்‌ பற்றிப்‌ போதித்த ஏசுநாதர்‌, புத்தபெருமான்‌, அன்னை தெரசா போன்ற மனிதர்கள்‌ கடவுளர்களாகச்‌ சித்தரிக்கப்பட்டு வணங்கப்படும்‌ காட்சிகளைப்‌ பார்க்கின்றோம்‌.

அகிலங்களின்‌ அதிபதியாகிய அல்லாஹ்வின்‌ கருணை மனிதர்களின்‌ கருணைகளை எல்லாம்‌ மிஞ்சி இருந்தும்‌ அவனை வணங்குவதை மக்கள்‌ புறக்கணிப்பதானது அவனது கருணையின்‌ ஆழம்‌ பற்றிய அறியாமையாகும்‌.

தன்னிகரற்றவன்

தம்மை இறைவன் எனப்‌ பொய்யாக வாதிட்ட பலர்‌ உலகில்‌ தோன்றியுள்ளனர்‌. மற்றும்‌ பலர்‌ தம்மைக்‌ கடவுளின்‌ அவதாரங்களாகக்‌ கூறிக்‌ கொள்கின்றனர்‌. நானே கடவுள்‌ எனக்‌ கூறியவர்கள்‌ ஓர்‌ சிலரே! அவர்களில்‌ ஃபிர்‌அவ்ன்‌ என்ற கொடிய பாவிதான்‌ பிரபல்யமானவன்‌. அல்லாஹ்வின்‌ மெய்மைக்கோ, அவனது செயல்பாடுகளுக்கோ நிகரானோர்‌ எவரும்‌ இல்லை என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும்‌.

இந்த உண்மையினை சுனாமி, கத்ரீனா (2005 ஆகஸ்ட்‌ இறுதியில்‌ அமெரிக்காவில்‌ வீசிய இராட்சதப்புயலின்‌ பெயர்‌) நிகழ்வுகள்‌ உணர்த்தியுள்ளன. வரும்‌ காலங்களிலும்‌ இவ்வாறான நிகழ்வுகள்‌ மூலம்‌ அவனது உள்ளமையை உலகுக்கு உணர்த்த அவன்‌ வல்லமையுடையவனாக இருக்கின்றான்‌.

இதைத்தான்‌ அல்லாஹ்‌ அல்குர்‌ஆனில்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றான்‌:

“அவனைப்‌ போன்று எதுவும்‌ (யாரும்‌) இல்லை. அவன்‌ நன்றாகச்‌ செவியேற்பவன்‌; நன்கு பார்ப்பவன்‌ (அஷ்ஷுரா வச:11)

அவனுக்கு நிகராக ஒருவரும்‌ இல்லை” (அல்‌-இக்லாஸ்‌:04)

“நிச்சயமாக அல்லாஹ்‌ அனைத்துப்‌ பொருள்கள்‌ மீதும்‌ ஆற்றல்‌ பெற்றவன்‌” (அல்பகரா: 20)

இப்பொருளில்‌ 33-க்கும்‌ அதிகமான இடங்களில்‌ அல்குர்‌ஆனில்‌ இடம்‌ பெற்றிருப்பதைக்‌ கவனிக்க முடிகின்றது.

அல்லாஹ்‌ இப்படிக்‌ குறிப்பிடுகின்றான்‌.

“அல்லாஹ்‌ தனது காரியத்தில்‌ யாவரையும்‌ மிகைப்போனாவான்‌” (யூசுஃப்‌ : 210) எனவே அவனை யாராலும்‌ மிகைக்க முடியாது என்பதே உண்மை.

மனித இனம்‌ கற்பனை செய்ய முடியாத அபார அறிவுள்ளவன்‌

அல்லாஹ்வின்‌ அறிவு, பார்வை. செவிப்புலன்‌ என்பன மனிதர்களின்‌ அறிவு, பார்வை, புலன்‌ ஆகியவற்றிற்கு முற்றிலும்‌ நேர்மாறாகும்‌. அல்லாஹ்வின்‌ புலன்களிலோ, அவனது பண்புகளிலோ எவ்விதக்‌ குறைவும்‌ கிடையாது. படைப்பினங்கள்‌ அவற்றில்‌ கூட்டுச்‌ சேரவும்‌ முடியாது.

அலீம்‌ (நன்கறிந்தவன்‌), சமீஃ (செவியேற்பவன்‌), பஸீர்‌ (பார்ப்பவன்‌) போன்ற சொற்பிரயோகங்கள்‌ அல்குர்‌ஆனில்‌ பல இடங்களில்‌ இடம்‌ பெற்றுள்ளன. அலீம்‌ என்ற சொல்‌ மட்டும்‌ கிட்டத்தட்ட 161 இடங்களில்‌ இடம்பெற்றிருக்கின்றது. அவற்றுள்‌ ஆறு இடங்கள்‌ கற்றறிந்த மனிதர்கள்‌, மனிதர்களில்‌ அறிவுள்ளவன்‌ என்ற பொருள்‌ பற்றியதாக இடம்‌ பெற்றிருக்கின்றது.

அவன்‌ கண்களின்‌ மோசடிகளையும்‌, உள்ளங்கள்‌ மறைத்து வைப்பவற்றையும்‌ அறிகின்றான்‌. (ஙாஃபிர்‌: 19)

ஒவ்வொரு பெண்ணும்‌ கருவறையில்‌ சுமப்பதையும்‌, கற்பப்பைகள்‌ சுருங்குவதையும்‌, விரிவதையும்‌ அல்லாஹ்‌ நன்கு அறிகின்றான்‌. அனைத்துப்‌ பொருள்களும்‌ அவனிடம்‌ நிர்ணயம்‌ செய்யப்பட்டே இருக்கின்றன. (அவன்‌) மறைவானவற்றையும்‌, வெளிப்படையாகத்‌ தெரிவதையும்‌ அறிந்தவன்‌. அவன்‌ மிகப்பெரியவன்‌; மிகவும்‌ உயர்ந்தவன்‌. உங்களில்‌ ஒருவர்‌ தமது பேச்சை இரகசியமாகப்‌ பேசினாலும்‌, பரகசியமாகப்‌ பேசினாலும்‌ சரியே! (அது பற்றி அவன்‌ அறிவான்‌). இன்னும்‌ இரவில்‌ மறைந்திருந்தாலும்‌, பகலில்‌ பயணித்தாலும்‌ (அவன்‌ அறிவான்‌) (அர்ரஃத்‌: 8-10)

அல்லாஹ்‌ உங்களை மண்ணில்‌ இருந்தும்‌, பின்னர்‌ இந்திரியத்‌ துளியில்‌ இருந்தும்‌ படைத்தான்‌. பின்னர்‌, உங்களை அவன்‌ சோடிகளாக ஆக்கினான்‌. எந்தப்‌ பெண்ணும்‌ (தனது கருவில்‌) சுமப்பதும்‌, அவள்‌ பிரசவிப்பதும்‌ அவன்‌ அறியாது நடப்பதில்லை. ஆயுள்‌ வழங்கப்படும்‌ ஒருவர்‌ ஆயுள்‌ வழங்கப்படுவதும்‌, அவரது ஆயுளில்‌ இருந்து குறைக்கப்படுவதும்‌ (அவனது) பதிவேட்டில்‌ இல்லாமல்‌ இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும்‌ இலகுவானதாகும்‌, (பாதிர்: 11)

மறுமையின்‌ அறிவு அவன்பக்கமே மீட்டப்படும்‌. எந்தக்‌ கனிகளும்‌ அதன்‌ தொலிகளைவிட்டு வெளிப்படுவதும்‌, எந்தப்‌ பெண்ணும்‌ (கருவில்‌) சுமப்பதும்‌ அவனது அறிவில்‌ இல்லாமல்‌ இல்லை. (ஃபுஸ்ஸிலத்‌: 47)

அல்லாஹ்‌, சமி - நன்கு செவிறுபவன்‌ - என்று அழைக்கப்படுவது போன்று பதில்‌ தருபவன்‌ என்ற பொருள்‌ கொண்டும்‌ அழைக்கப்படுகின்றான்‌. சமி என்ற சொல்‌ அல்குர்‌ஆனில்‌ 47 இடங்களில்‌ இடம்‌ பெறுகின்றது. அவற்றில்‌ ஓர்‌ இடம்‌ மட்டும்‌ மனிதர்கள்‌ பற்றிக்‌ குறிக்கின்றது.

அதுமட்டுமின்றி, அல்குர்‌ஆனிலும்‌ அஸ்ஸுன்னாவிலும்‌ பல்வேறு இடங்களில்‌ இதன்‌ கிளைச்‌ சொற்களான “அஸ்மஉ” நான்‌ செவியேற்கின்றேன்‌. யஸ்மஉ (அவன்‌ செவியேற்கின்றான்‌) என்ற பொருளில்‌ இடம்‌ பெற்றிருக்கின்றன.

‌ “பிரார்த்தனையைச்‌ செவியேற்பவன்‌”

(நபியே) எனது அடியார்கள்‌ உம்மிடம்‌ என்னைப்‌ பற்றிக்‌ கேட்டால்‌ நிச்சயமாக நான்‌ சமீபாக இருப்பவன்‌. என்னை அழைப்பவன்‌ அழைக்கின்ற போது அழைப்பவனின்‌ அழைப்பிற்குப்‌ பதில்‌ கூறுகின்றேன்‌. எனவே அவர்கள்‌ என்னிடமே பதில்‌ எதிர்பார்த்துப்‌ பிரார்த்தனை செய்யட்டும்‌ (என்று கூறுவீராக) (அல்பகரா: 186)

“அல்லாஹ்‌ அழைப்புகளுக்குப்‌ பதில்‌ தருபவன்‌” என்ற பொருளில்‌ இடம்‌ பெற்றிருப்பதைக்‌ கவனத்தில் கொண்டு அடியார்கள்‌ மரணித்தவர்களிடம்‌ சென்று தமது தேவைகளை மன்றாடத்‌ தேவையில்லை என்பதை உணர்த்தவே இவ்வாறு கூறியுள்ளான்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌.

அல்லாஹ்வின்‌ செவிப்புலனின்‌ விசாலமான தன்மை பற்றி வியக்கத்தக்க செய்தி ஒன்றை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்‌ அறிவிக்கின்றார்கள்‌.

கவ்லா பின்த்‌ ஸஃலபா என்ற பெண்மணியை அவரது கணவர்‌ அவ்ஸ்‌ பின்‌ ஸாமித்‌ (ரழி) அவர்கள்‌ “தாய்க்கு ஒப்பிட்டு” (ஸிஹார்‌) கூறி விட்டு, பின்னர்‌ அவருடன்‌ இல்லற வாழ்வில்‌ இணைந்து வாழ விரும்பினார்‌.

ஜாஹிலிய்யாக்‌ காலத்தில்‌ இந்தப்‌ பிரயோக முறை கணவனிடம்‌ இருந்து மனைவி விவாகரத்துப்‌ பெறுவதாகக்‌ கொள்ளப்பட்டது. இது பற்றிய தீர்க்கமான தீர்ப்பை நபிகள்‌ நாயகத்திடம்‌ பெற்ற பின்னரே மீண்டும்‌ வாழ்வது பற்றிய முடிவு செய்யப்படும்‌ என்று அவரது மனைவி கூறியவராக நபி (ஸல்‌) அவர்களிடம்‌ தீர்ப்பு வேண்டி வந்தார்‌. அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்‌ குறிப்பிடுகின்றார்கள்‌: “அவர்‌ நபியுடன்‌ ஏதோ குசுகுசுத்தார்‌. ஏழு வானங்களுக்கும்‌ மேலால்‌ இருப்பவனாகிய அல்லாஹ்‌ அது பற்றிச்‌ செவியேற்றான்‌”.

இந்த ஆச்சரியமான தகவலை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்‌ பின்வருமாறு பகிர்ந்து கொள்கின்றார்கள்‌.

எவனது கேள்வி சப்தங்களை எல்லாம்‌ வியாபித்துக்‌ கொண்டதோ அந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்‌ எனக்‌ குறிப்பிடும்‌ அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்‌,

நபியே! தனது கணவர்‌ விஷயமாக உம்முடன்‌ விவாதிப்பவளின்‌ பேச்சை நிச்சயமாக அல்லாஹ்‌ செவியேற்றான்‌ என்ற திருமறை வசனத்‌ தொடர்‌ இறங்கியது எனக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌. (புகாரீ 7385).

அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின்‌ மற்றோர்‌ அறிவிப்பில்‌ நபியுடன்‌ தர்க்கிப்பவள்‌ (முஜாதிலா) வந்தாள்‌. நான்‌ வீட்டின்‌ ஓர்‌ ஓரமாக இருந்து கொண்டிருந்தேன்‌. அவள்‌ தனது கணவர்‌ பற்றி முறைப்பாடு செய்து கொண்டு ஏதோ தர்க்கித்துக்‌ கொண்டிருந்தாள்‌. எனது செவிப்புலனைக்கூட அது எட்டவில்லை (அதற்குள்‌ அது அல்லாஹ்வை எட்டியது எனக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌) (இப்னுமாஜா- 188, அஹ்மத்‌- 24241).

அங்க, அவையக்‌ குறைகள்‌ அற்றவன்‌

அகில உலகினதும்‌ அதிபதியாகிய அல்லாஹ்‌ குருடு, செவிடு, முடம்‌, ஊனம்‌ போன்ற மனிதர்களுக்கு ஏற்படும்‌ அங்கக்‌ குறைபாடுகளில்‌ இருந்து முற்று முழுதாக நீங்கியவனாக இருக்கின்றான்‌.

மறுமையின்‌ அடையாளமாகப்‌ பிற்காலத்தில்‌ வரவிருக்கும்‌ கொடியவன்‌ தஜ்ஜாலைப்‌ பற்றி எச்சரித்த நபி (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ பண்பில்‌ இருந்து அவனை வேறுபடுத்தி அல்லாஹ்வின்‌ தனித்துவமான தன்மையை அவனது கண்ணில்‌ உள்ள குறைபாட்டை ஒப்பிட்டுப்‌ பின்வருமாறு விளக்கினார்கள்.

“நிச்சயமாக உங்கள்‌ இரட்சகன்‌ ஒற்றைக்‌ கண்‌ குருடன்‌ இல்லை. ஆனால்‌ (தஜ்ஜாலான) அவன்‌ வலது கண்‌ குருடனாவான்‌. அவனது ஓர்‌ கண்‌ காய்ந்த (சூம்பிப்போன) திராட்சை போன்று தொங்கிக்‌ கொண்டிருக்கும்‌” எனக்‌ கூறினார்கள்‌. (புகாரி‌)

தஜ்ஜாலின்‌ செயற்பாடுகளை நோக்குவோர்‌ அவன்‌ தெய்வீகத்தன்மை உடையவனாய்‌ இருப்பானோ! எனச்‌ சந்தேகிப்பர்‌. அவனது நடவடிக்கைகளால்‌ பலர்‌ வழிகெடுக்கப்படுவர்‌. பலர்‌ அவனைக்‌ கடவுளாக நினைத்து வழிகெடவும்‌ அதிகம்‌ வாய்ப்புள்ளது. அதனால்தான்‌ இரட்சகனின்‌ தனித்தன்மை பற்றி இங்கு நபி (ஸல்‌) அவர்கள்‌ விளக்கியுள்ளார்கள்‌.

குறைபாடுள்ள இவ்வாறான பண்புகளைக்‌ கொண்டு அல்லாஹ்‌ வர்ணிக்கப்பட முடியாது, அவை அவனது தகுதிக்கு அப்பாற்பட்டதாகும்‌ என்பதன்‌ மூலம்‌ அல்லாஹ்‌ பூரணமான பண்புகளை உடையவன்‌ என்பதை உணர்த்தி இருக்கின்றார்கள்‌.

தூக்கம்‌, மறதி, இயலாமை போன்ற பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவன்‌

மறதிக்கும்‌ தவறுக்கும்‌ இடையில்‌ வாழ்ந்து கொண்டிருக்கும்‌ பலரைக்‌ கடவுள்களாக மக்கள்‌ எடுத்து உலகில்‌ வழிபடுகின்றனர்‌. சிலபோது கடவுளர்கள்‌ கற்பனையால்‌ சிற்பிகளால்‌ தம்‌ கற்பனைக்கேற்பச்‌ செதுக்கப்பட்டு வழிபடப்படுகின்றனர்‌.

தற்போது பிரபல மதங்களின்‌ கடவுளர்கள்‌ கண்ணாடிப்‌ பெட்டிக்குள்‌ அடைக்கப்பட்டு, பூட்டுப்போட்டு உறங்க வைக்கப்படுகிறார்கள்‌. நாள்தோறும்‌ அவர்களுக்குத்‌ தேநீர்‌ வழங்கப்படுகின்றது.

இதில்‌ ஆச்சரியம்‌ என்னவென்றால்‌ அல்லாஹ்வை, தனித்தவன்‌. இணைதுணை அற்றவன்‌ என்று நம்பிக்கை கொண்டுள்ளோரின்‌ தர்ஹாக்களில்‌ அடக்கம்‌ செய்யப்பட்டுள்ள அவ்லியாக்‌ கடவுளர்களும்(?)‌ விதிவிலக்கின்றிக்‌ காவல்துறையால்‌ பாதுகாக்கப்படுகின்றனர்‌.

இவர்கள்‌ மறதிக்கும்‌, தவறுக்கும்‌ உட்பட்ட சாதாரண மனிதர்கள்தாம்‌. கடவுளின்‌ அவதாரமாக, அல்லது கடவுள்‌ தன்மை உடையோராக மனிதர்களால்‌ சித்தரிக்கப்படுகின்றனர்‌.

மறதி, தூக்கம்‌, சோர்வு, பசி, தாகம்‌, ஆசை, இயலாமை
போன்ற அவனது தனித்தன்மையில்‌ குந்தகத்தை ஏற்படுத்தும்‌ பண்புகள்‌ இஸ்லாம்‌ கூறுகின்ற அகிலங்களின்‌ அதிபதியான அல்லாஹ்விடம்‌ காணப்பட முடியாத, அவனது தனித்தன்மைக்குக்‌ குந்தகம்‌ விளைவிக்கின்ற, அவனது பண்புகளுக்கு நேரெதிரான பண்புகளாகும்‌. அப்படியான பண்புகளில்‌ இருந்து அல்லாஹ்‌ மிகவும்‌ தூயவனாக இருக்கின்றான்‌.

வணக்கத்திற்குத்‌ தகுதியானவன்‌ அல்லாஹ்வைத்‌ தவிர வேறு யாரும்‌ இல்லை. (அவன்‌) என்றும்‌ உயிருள்ளவன்‌; என்றும்‌ நிலையானவன்‌. சிறு உறக்கமோ, (கண்‌ அயர்வோ) ஆழ்ந்த உறக்கமோ அவனைப்‌ பீடிப்பதில்லை. (அல்பகரா:225).

“உமது இரட்சகன்‌ மறதியாளனாக இருந்ததில்லை” (மர்யம்‌; வச: 6)

வானங்கள்‌ மற்றும்‌ பூமியில்‌ இருப்போர்‌ அவனிடம்‌ வேண்டுகின்றனர்‌. அவன்‌ தினமும்‌ (அவனது) காரியத்தில்‌ ஈடுபட்டவனாகவே இருக்கிறான்‌ (அர்ரஹ்மான்‌: 29)

(நபியே!) நீர்‌ எந்த ஓர்‌ காரியத்தில்‌ இருந்த போதும்‌, குர்‌ஆனில்‌ இருந்து எதை ஓதினாலும்‌, எந்தச்‌ செயலைச்‌ செய்தாலும்‌ நீங்கள்‌ அதைச்‌ செய்கின்ற போது நாம்‌ அதில்‌ கண்காணிப்பாளர்களாக இருக்கின்றோம்‌. (யூனுஸ்‌: 61)

“நிச்சயமாக அல்லாஹ்‌ உறங்கவும்‌ மாட்டான்‌; உறங்க வேண்டிய அவசியமும்‌ அவனுக்கில்லை.” (நூல்‌: முஸ்லிம்‌: இல: 263- 264)

“வானங்களிலும்‌, பூமியிலும்‌ அல்லாஹ்வை எப்பொருளாலும்‌ பலவீனப்படுத்த முடியாது. அவன்‌ யாவற்றையும்‌ அறிபவனாகவும்‌, ஆற்றல்‌ மிக்கவனாகவும்‌ இருக்கின்றான்‌.” (அல்‌ ஃபாதிர்‌: வச: 44)

வானங்களையும்‌, பூமியையும்‌, அவ்விரண்டிற்கும்‌ இடைப்பட்டவற்றையும்‌ ஆறு நாட்களில்‌ நிச்சயமாக நாமே படைத்தோம்‌, ஆனால்‌ (அதில்‌) நமக்கு எவ்விதச்‌ சோர்வும்‌ (களைப்பும்‌) ஏற்படவில்லை. (காஃப்‌. வசனம்‌: 38).

இங்கு இயலாமை, சோர்வு போன்ற குறைபாடுள்ள பண்புகள்‌ இறைத்தன்மைக்கு அப்பாற்பட்டவை என்பது உணர்த்தப்படுகின்றது. 

யாவற்றையும்‌ நன்கறிந்தவன்‌ 

மறைவானவற்றின்‌ திறவுகோல்கள்‌ அவனிடமே உள்ளன. அவனைத்தவிர (எவரும்‌) அவற்றை அறியமாட்டார்‌. தரையிலும்‌, கடலிலும்‌ இருப்பவற்றை அவன்‌ அறிகிறான்‌. அவனுக்குத்‌ தெரியாமல்‌ ஓர்‌ இலைகூட உதிர்வதில்லை. பூமியின்‌ இருள்களில்‌ உள்ளவையானாலும்‌, ஈரமானதோ, காய்ந்ததோ (எதுவானாலும்‌) தெளிவான பதிவேட்டில்‌ இல்லாமல்‌ இல்லை. (அல்‌அன்‌ஆம்‌: வச: 59)

(நபியே!) பூமியிலோ, வானத்திலோ, உம்‌ இரட்சகனை விட்டு அணு அளவும்‌ மறைந்திருக்க முடியாது. அதைவிடச்‌ சிறியதோ, பெரியதோ எதுவானாலும்‌ (அது பற்றிய விவரம்‌) பதிவேட்டில்‌ இல்லாமல்‌ இல்லை. (யூனுஸ்‌: 61) 

அல்லாஹ்வின்‌ விசாலமான அறிவை எடுத்துக்கூறும்‌ பல்வேறு ஆதாரங்கள்‌ குர்‌ஆனிலும்‌, சுன்னாவிலும்‌ இடம்‌ பெற்றிருப்பினும்‌ நாம்‌ மேலே எடுத்தெழுதிய ஆதாரங்கள்‌ யாவும்‌ அல்லாஹ்‌ யாவற்றையும்‌ அறிபவன்‌ என்பதை நிரூபிக்கப்‌ போதுமான சான்றுகளாகும்‌.

சரியாகத்‌ திட்டமிடுபவன்‌ 

அல்லாஹ்வின்‌ நிர்ணயமும்‌, திட்டமிடலும்‌ என்றும்‌ பிழையானதில்லை, பிழையாகப்‌ போவதுமில்லை.

நாத்திகவாதிகளால்‌ “இயற்கை அழிவுகள்”‌ எனக்‌ கூறப்படும்‌ அல்லாஹ்வின்‌ செயல்கள்‌ இதற்குப்‌ பெரும்‌ சான்றுகளாகும்‌.

இந்த உலகைச்‌ சரியாக நிருவகிப்பதற்காக அவன்‌ ஓர்‌ வாழ்க்கைத்‌ திட்டத்தை அமைத்துள்ளான்‌. அதற்கு மாறாக மனிதர்கள்‌ செயற்படுகின்ற போது பல அழிவுகளை நிதர்சனமாகவே சந்திக்க வேண்டியுள்ளது.

அல்லாஹ்‌ தனது படைப்புகளுக்குச்‌ செய்ய வேண்டிய சகலவிதமான ஏற்பாடுகளையும்‌ பல்லாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பாகவே செய்து வைத்துள்ளான்‌.

இதை உணர்த்தும்‌ முகமாகவே‌ “நிர்ணயம்‌ செய்த அவனே, (அதற்கான) வழியையும்‌ அறிவித்துக்‌ கொடுத்தான்‌” எனக்‌ குறிப்பிடுகிறான்‌.

“வானங்களையும்‌, பூமியையும்‌ படைப்பதற்கு ஐம்பதாயிரம்‌ வருடங்களுக்கு முன்பே விதிகளை நிர்ணயம்‌ செய்தான்‌” என நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌. (நூல்‌ திர்மிதீ‌-2082)

தனது படைப்புகள்‌ செய்கின்ற சகல காரியங்களையும்‌
சரியான திட்டமிடலின்‌ அடிப்படையில்‌ வகுத்து வைத்துள்ள அல்லாஹ்வின்‌ திட்டப்படியே இந்த உலகம்‌ இயங்குகின்றது.

அது மட்டுமின்றி, உலகில்‌ சாதாரண எறும்புக்குத்‌ தேவையான அனைத்து உணவு வசதிகளையும்‌ கூட அவனே நிர்ணயித்துள்ளான்‌.

அழகிய பல திருநாமங்களுக்கும்‌ பண்புகளுக்கும்‌ சொந்தக்காரன்‌

உலகில்‌ மனிதர்கள்‌ பலர்‌ பல பெயர்களால்‌ அழைக்கப்படுகின்றனர்‌. அவற்றில்‌ நல்ல பெயர்களும்‌ உண்டு; கருத்துப்பிழையான பெயர்களும்‌ உண்டு; பிறரால்‌ கிண்டல்‌ செய்யப்படும்‌ பெயர்களும்‌ உண்டு. ஆனால்‌ அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ என்பன மிக அழகியதாகும்‌. அல்லாஹ்‌ பல அழகிய பெயர்களுக்கும்‌ பண்புகளுக்கும்‌ சொந்தக்காரனாக இருக்கின்றான்‌. அவை பொருளில்‌ மிக உயர்‌ நிலையில்‌ காணப்படுகின்றன.

அல்லாஹ்‌ என்னும்‌ வார்த்தை அவற்றில்‌ முதல்‌ இடத்தைப்‌ பெற்ற பெயராகும்‌. அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌ மூலம்‌ அவனது பெருமை, கண்ணியம்‌, மதிப்பு, அவன்‌ பற்றிய மரியாதை போன்ற பண்புகள்‌ அவனது அடியார்களுக்கு உணர்த்தப்படுகின்றன.

உதாரணமாக, கண்காணிப்பவன்‌ என்ற பொருளை உடைய “ரகீப்”‌ என்ற பெயரை எடுத்துக்கொண்டால்‌ நம்மை அல்லாஹ்‌ தொடர்ந்து கவனித்தவனாக இருப்பதால்‌ நாம்‌ திருடக்கூடாது; ஏமாற்றக்‌ கூடாது; பொய்‌ பேசக்‌ கூடாது; மோசடி செய்யக்‌ கூடாது என்ற எண்ணம்‌ நம்மை ஆளும்‌. அவ்வாறு ஆளுகின்ற போது உலகில்‌ நாம்‌ குற்றம்‌ செய்யாதவர்களாக வாழ வழிபிறக்கின்றது.

(அவனை) அல்லாஹ்‌ என்றோ, அல்லது அர்ரஹ்மான்‌ என்றோ அழைத்துப்‌ பிரார்த்தியுங்கள்‌. நீங்கள்‌ எவ்வாறு (அவனை) அழைத்துப்‌ பிரார்த்தித்த போதும்‌ அவனுக்கு அழகிய பல பெயர்கள்‌ இருக்கின்றன. (அல்‌இஸ்ரா: 110)

அதாவது பிரார்த்தனை செய்கின்ற போது நீங்கள்‌ யா அல்லாஹ்‌!” என்று பிரார்த்தனை செய்வதும்‌, யா ரஹ்மான்‌ என்று பிரார்த்தனை செய்வதும்‌ சமமே! அது அல்லாஹ்வைத்தான்‌ குறிக்கும்‌ என்பது இதன்‌ பொருளாகும்‌.

அல்லாஹ்வுக்கு அழகிய பல பெயர்கள்‌ இருக்கின்றன. அவை மூலம்‌ அவனை அழையுங்கள்‌; அவனது திருநாமங்களில்‌ திரித்துக்‌ கூறுவோரை நீங்கள்‌ விட்டு விடுங்கள்‌. அவர்கள்‌ எதனைச்‌ செய்து கொண்டிருந்தார்களோ அதற்காக அவர்கள்‌ கூலி கொடுக்கப்படுவார்கள்‌ (அல்‌-அஃராஃப்‌ : 180)

வணக்கத்திற்குத்‌ தகுதியானவன்‌ அல்லாஹ்வைத்‌ தவிர வேறு யாரும்‌ இல்லை. அவனுக்கு அழகிய பல திருநாமங்கள்‌ உள்ளன. (தாஹா: 08)

அவன்தான்‌ அல்லாஹ்‌, படைப்பாளன்‌; உற்பத்தியாளன்‌, உருவம்‌ கொடுப்பவன்‌, அவனுக்கு அழகிய பல திருநாமங்கள்‌ இருக்கின்றன. (அல்ஹஷ்ர்‌: 24)

யார்‌ மறுமை நாளை நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களுக்குத்தான்‌ தீய உதாரணம்‌ உண்டு. ஆனால்‌ அல்லாஹ்வுக்கு உயர்ந்த பண்புகள்‌ உண்டு (அந்நஹ்ல்‌: 60)

வானங்கள்‌, பூமியில்‌ அவனுக்கு அழகிய பண்புகள்‌ (வர்ணனைகள்‌) உண்டு. அவன்‌ யாவற்றையும்‌ மிகைத்தவன்‌; ஞானமிக்கவன்‌. (அர்ரூம்‌: 27)

“நிச்சயமாக அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள்‌ இருக்கின்றன; அவற்றைப்‌ (பொருள்‌ அறிந்து) மனனம்‌ செய்து கொள்வோர்‌ சொர்க்கத்தில்‌ நுழைவார்‌” என நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (புகாரீ, 2531, முஸ்லிம்‌- 4836).

புகாரி‌, முஸ்லிம்‌ உட்பட பல ஹதீஸ்‌ கிரந்தங்களில்‌ இடம்‌ பெறுற்றுள்ள மற்றோர்‌ அறிவிப்பில்‌:

“நிச்சயமாக அல்லாஹ்‌ ஒற்றையானவன்‌; அவன்‌ ஒற்றையை விரும்புகின்றான்‌” என இடம்‌ பெற்றுள்ளது. 

ஓரு‌ சில விஷயத்தில்‌ திறமையும்‌, ஆற்றலும்‌ உடைய சாதாரண மனிதன்‌ பல சிறப்புப்‌ பெயர்களுக்குச்‌ சொந்தக்காரனாகின்றான்‌ என்றால்‌ இந்தப்‌ பேரண்டத்தின்‌ அதிபதியாகிய அல்லாஹ்விற்குப்‌ பல பெயர்கள்‌ இருப்பது குறையா? அல்லது பெருமையா? எனச்‌ சிந்திக்க வேண்டும்‌.

நிவாரணம்‌ அளிப்பவன்‌

நோயற்ற வாழ்வைக்‌ கொண்டவன்‌ அல்லாஹ்‌ ஒருவனே! அவனது படைப்புகளான வானவர்கள்‌ தொடராக அவனை வணங்கிவழிபடப்‌ படைக்கப்பட்டிருப்பதால்‌ நோய்களை அல்லாஹ்‌ அவர்களுக்கு விதிக்கவில்லை.

படைப்புகளான நம்மீது பல நோய்களைப்‌ படைக்கின்றான்‌. அவற்றைக்‌ குணப்படுத்தும்‌ யதார்த்தப்பூர்வமான ஆற்றல்மிக்கவனும்‌ அவன்‌ ஒருவனே!

அல்லாஹ்‌ இறக்கியுள்ள நோய்களுக்கான சிகிச்சைகளையும்‌ அவன்‌ இறக்கி வைத்துள்ளான்‌ என்பது நபி மொழியாகும்‌.

சிகிச்சையளிக்க முடியாது என்று வைத்தியத்துறையினரால்‌ கைவிடப்பட்ட பலர்‌ அல்லாஹ்விடம்‌ பிரார்த்தனை செய்து தமது நோய்களைக்‌ குணப்படுத்தி உள்ளனர்‌. எனவே நிவாரணம்‌ வேண்டி அல்லாஹ்வை நாடுவதோடு அவனது அடியார்களான வைத்தியர்களை நாடிச்‌ செல்ல வேண்டும்‌.

முஸ்லிம்கள்‌ பலர்‌ சிகிச்சை என்ற பெயரில்‌ தர்காக்களில்‌ அடக்கம்‌ செய்யப்பட்டிருப்போரையும்‌, குறிசொல்லும்‌ ஏமாற்றுப்‌ பேர்வழிகளையும்‌, ஜின்னை வசப்படுத்தி, சிகிச்சை அளிப்பதாகப்‌ பித்தலாட்டம்‌ செய்யும்‌ குழப்பவாதிகளையும்‌ நாடிச்‌ சென்று ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளி இறைத்து, இணைவைத்தல்‌ என்ற கொடிய பாவத்திலும்‌ வீழ்ந்து விடுகின்றனர்‌.

உலகில்‌ சிறந்த மனிதராகிய முஹம்மத்‌ (ஸல்‌) அவர்களுக்கு நோய்‌ ஏற்பட்டபோது நிவாரணம்‌ வேண்டி அல்லாஹ்விடம்‌ முறைப்பாடு செய்தார்களே அன்றி, தானே அதனைக்‌ குணப்படுத்திக்‌ கொள்வேன்‌ என்று கூறவில்லை.

மனிதர்களின்‌ இரட்சகனே! நோயைப்‌ போக்கிவிடு; நீதான்‌ குணமளிப்பவன்‌; நீ குணத்தைத்‌ தருவாயாக! உனது நிவாரணத்தை அன்றி வேறு நிவாரணம்‌ இல்லை. நோயை விட்டுவைக்காத குணத்தைத்‌ தருவாயாக! என நோய்க்கான நிவாரணம்‌ வேண்டிப்‌ பிரார்த்தனை செய்வதோடு, அவ்வாறு செய்யுமாறு தம்‌ தோழர்களையும்‌ பணிப்பார்கள்‌.  (நூல்கள்‌: புகாரீ 5243, 5302, 5309, முஸ்லிம்‌ 4061,4062, 4063, அஹ்மத்‌, 533, 3433)

நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டமான எல்லா நிலையிலும்‌ சிகிச்சை, மருத்துவம்‌ செய்வதோடு அல்லாஹ்வின்‌ உதவியையும்‌ நாடுவார்கள்‌; முஸ்லிம்களில்‌ சிலர்‌ தமது வீடுகளில்‌ தனியான மாடம்‌ கட்டி, கூடாரம்‌ அமைத்து, தேசிக்காய்‌ உருட்டி, ஃபால்பார்த்து ஷிர்க்கான வழியில்‌ மருத்துவம்‌ செய்வது இஸ்லாம்‌ காட்டித்தராத
வழிமுறைகளாகும்‌.

ஓர்‌ முஸ்லிம்‌ இன்பம்‌, துன்பம்‌ என்ற எல்லா நிலைகளிலும்‌ அல்லாஹ்விடம்‌ நேரடியாக முறையிட்டுப்‌ பிரார்த்திப்பதே இஸ்லாமிய வழிமுறையாகும்‌.

நபி (ஸல்‌) அவர்களின்‌ வாழ்வில்‌ நடைபெற்ற “உஹத்”‌ போரில்‌ அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை அல்லாஹ்விடம்‌ முறைப்பாடு செய்த நிகழ்வையும்‌, அவர்களுக்குச்‌ சூனியம்‌ செய்யப்பட்டிருந்த போது அன்னை ஆயிஷா (ரழி) அவர்களை நோக்கி “ஆயிஷாவே! நான்‌ அல்லாஹ்விடத்தில்‌ எதற்குரிய தீர்வை வேண்டி நின்றேனோ அந்த விஷயத்தில்‌ அவன்‌ எனக்கு தீர்வைத்‌ தந்துள்ளான்‌” (புகாரீ - 5221, 5223. சூனியம்‌ பற்றிய பாடம்‌) எனக்‌ கூறியதையோ சிந்திக்கும்‌ உண்மையான முஸ்லிம்‌ அல்லாஹ்வே நிவாரணம்‌ அளிப்பவன்‌ என்ற உண்மையை உணர்ந்து கொள்வதோடு, மக்களை ஏமாற்றிப்‌ பணமோசடி செய்யும்‌ ஏமாற்றுப்‌ பேர்வழிகளிடம்‌ தனது ஈமானைப்‌ பறிகொடுக்காது எச்சரிக்கையாக நடந்து கொள்வான்‌.

உணவளிப்பவன்‌, உணவின்‌ பக்கம்‌ தேவை அற்றவன்

கடவுள்‌ என்பவன்‌ உணவு உண்பவனாக, பானங்கள்‌ பருகுபவனாக, தாகம்‌ உடையவனாக பிரபல்யமான பல மதங்களில்‌ சித்தரிக்கப்படுவதால்‌ காலையிலும்‌ மாலையிலும்‌ அந்தக்‌ கடவுளுக்கென பால்‌, தேனீர்‌, பானங்கள்‌, உணவுகள்‌ ஆகியவை வைத்து பூஜை செய்யப்பட்டு, அதற்கு ஆராதனை செய்யும்‌ வழக்கம்‌ சமயம்‌ சார்ந்த மக்களிடம்‌ இதனால்தான்‌ வந்ததோ என எண்ணத்‌ தோன்றுகின்றது.

இஸ்லாமிய மார்க்கத்தில்‌ இதற்கு நேர்‌ முரணான கோட்பாடு காணப்படுகின்றது. கடவுளின்‌ இலக்கணத்தில்‌ அதைப்‌ பார்க்கின்றோம்‌. இஸ்லாமிய நம்பிக்கையில்‌ அல்லாஹ்‌ உணவு உண்பதில்லை. அது அவனுக்கு அவசியமற்றது, மட்டுமின்றி, அவன்‌ யாரிடமும்‌ உணவோ, பானமோ கேட்பதுமில்லை. மாறாக அவனே உணவளிப்பவன்‌.

“அல்லாஹ்‌ அல்லாதவனையா நான்‌ பொறுப்பாளனாக எடுத்துக்‌ கொள்வேன்‌. (அவன்‌) வானங்களையும்‌ பூமியையும்‌ படைத்தவன்‌. அவன்‌ உணவளிக்கின்றான்‌. அவன்‌ உணவளிக்கப்படுவதில்லை என நபியே நீர்‌ கூறுவீராக!” (அல்‌அன்‌ஆம்‌ :14)

அவர்களிடம்‌ இருந்து நான்‌ எந்த உணவையும்‌ விரும்பவில்லை. மேலும்‌ நான்‌ அவர்கள்‌ எனக்கு உணவளிப்பதையும்‌ விரும்பவில்லை. (அத்தாரியாத்‌: வச: 57)

அவன்‌ எத்தகையவன்‌ என்றால்‌ அவனே எனக்கு உணவளிக்கின்றான்‌. இன்னும்‌ அவனே, எனக்கு நீரும்‌ புகட்டுகின்றான்‌. (அஷ்ஷுஅரா:79)

அனைவரையும்‌ குறித்த ஒரு நாளில்‌ ஒன்றிணைக்கும்‌ ஆற்றல்மிக்கவன்‌ 

இது படைப்பாளனாகிய அல்லாஹ்வின்‌ அபரிமிதமான ஆற்றலாகும்‌. மரணத்தின்‌ பின்னால்‌ குறிப்பிட்ட ஓர்‌ நாளில்‌ மனிதர்கள்‌, ஜின்கள்‌, பறவைகள்‌, கால்நடைகள்‌ என அனைத்துப்‌ படைப்பினங்களையும்‌ எழுப்பி நீதியான தீர்ப்பளிப்பதை அவன்‌ தன்மீது கடமையாக்கி உள்ளான்‌.

இது பற்றி அல்குர்‌ஆனில்‌ பல இடங்களில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில்‌ தூதுத்துவத்தைச்‌ சுமந்து வந்த தூதர்கள்‌ அனைவரும்‌ மரணத்தின்‌ பின்னால்‌ மனிதர்கள்‌ எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவதை அடிப்படையான ஒன்றாக முன்வைத்தே தமது போதனையை முன்னெடுத்தனர்‌.

மரணத்தின்‌ பின்னர்‌ மனிதர்கள்‌ அனைவரும்‌ ஓர்‌ நாளில்‌ ஒன்று திரட்டப்பட்டு தமது செயல்கள்‌ பற்றி விசாரிக்கப்படுவர்‌ என்ற கோட்பாட்டை இஸ்லாத்தைத்‌ தவிர வேறு எந்த மதமும்‌ தெளிவுபடுத்தவில்லை.

மறுபிறவிக்கோட்பாடு என்ற பொய்யான, பகுத்தறிவிற்குப்‌ பொருத்தமில்லாத ஓர்‌ கோட்பாட்டைத்தான்‌ சில மதங்கள்‌ முன்வைக்கின்றன. அதனால்தான்‌ அம்மதத்தவர்கள்‌ குறிப்பாக போதகர்கள்‌ உட்பட அனைவரும்‌ பாவங்கள்‌ செய்வதை ஓர்‌ பொருட்டாகக்‌ கூடக்‌ கருதுவதில்லை. அவர்கள்‌ மறுமை அச்சமின்றி வாழ்வதால்தான்‌ விபச்சாரம்‌, சூது, மது, மோசடி, திருட்டு, அபகரிப்பு, நிராகரிப்பு போன்ற பாவங்களைச்‌ சர்வசாதாரணமாகச்‌ செய்கின்றனர்‌.

பெளத்த மற்றும்‌ இந்துச்‌ சகோதரர்களிடம்‌ மரணத்தின்‌
பின்னால்‌ உள்ள வாழ்வு பற்றி வினவினால்‌ அப்படி ஓர்‌ வாழ்வைக்‌ கண்டது யார்‌? காணாததை நம்புவது சரியா? பார்த்தல்‌, கேட்டல்‌, ரசித்தல்‌, சுவைத்தல்‌, தொட்டுணர்தல்‌ போன்ற ஐம்புலன்களின்‌ அடிப்படைக்கு இது முரணாக இல்லையா? அவ்வாறாயின்‌ அது பற்றி நம்ப முடியாது என்றும்‌ வாதிடுகின்றனர்‌. இவர்களைப்‌ போன்றுதான்‌ பலர்‌ உலகில்‌ நபிமார்களிடம்‌ கேள்விகளைத்‌ தொடுத்தனர்‌.

மரணத்தின்‌ பின்னுள்ள வாழ்வு பற்றி மக்காவாழ்‌ காஃபிர்கள்‌ எழுப்பிய சந்தேகங்கள்‌, கேள்விகள்‌, அவற்றிற்கான பதில்கள்‌ அனைத்தும்‌ அல்குர்‌ஆனில்‌ பல இடங்களில்‌ இடம்‌ பெற்றுள்ளன.

மனிதர்களாகிய நாம்‌ மரணித்து, மக்கி, மண்ணுடன்‌ கலந்துவிட்ட பின்னரும்‌ மீண்டும்‌ எழுப்பப்படுவோமா? என்ற கேள்வி காஃபிர்கள்‌ அனைவரும்‌ இன்றும்‌ விடுக்கின்ற கேள்வியாகும்‌.

அரிஸ்டாட்டில்‌, சாக்ரடீஸ்‌, பிளேட்டோ, கேலன்‌ போன்ற கிரேக்கத்‌ தத்துவவியலாளர்கள்‌ இந்த அடிப்படையில்தான்‌ கேள்விகளை எழுப்பினர்‌. இவ்வாறானோரின்‌ தத்துவங்களையும்‌, கோட்பாட்டு விதிகளையும்‌ படித்த சில பெயரளவு முஸ்லிம்கள்‌ இவ்வாறான கேள்விகளை இன்று எழுப்புவது துரதிஷ்டமாகும்‌.

அல்குர்‌ஆன்‌ இறங்கிய காலத்தில்‌ வாழ்ந்தவர்கள்‌ கேட்டது பற்றி அல்குர்‌ஆன்‌ பின்வருமாறு பதிவு செய்துள்ளது.

நீங்கள்‌ மரணித்து, மண்ணாகவும்‌, எலும்புகளாகவும்‌ மாறிய பின்னரும்‌ நீங்கள்‌ (மீண்டும்‌ கேள்விக்காக) எழுப்பப்படுவீர்கள்‌ என்று (முஹம்மதாகிய) அவர்‌ வாக்களிக்கின்றாரா? நீங்கள்‌ வாக்களிக்கப்படுவது தூரமே! தூரமே! நாம்‌ மரணித்து உயிர்வாழ்கின்ற இவ்வுலக வாழ்வைத்தவிர அது கிடையாது. நாம்‌ எழுப்பப்படுபவர்களும்‌ அல்லர்‌. (முஃமினூன்‌: 35- 37)

நாம்‌ மரணித்து, மண்ணாகவும்‌, எலும்புகளாவும்‌ மாறிய பின்னரும்‌ நாம்‌ (மீண்டும்‌) எழுப்பப்படுவோமா? என்று அவர்கள்‌ கேட்கின்றனர்‌. நிச்சயமாக நாமும்‌ நமது மூதாதையரும்‌ இது பற்றி இதற்கு முன்னர்‌ வாக்களிக்கப்பட்டிருந்தோம்‌. இது முன்னோர்களின்‌ கட்டுக்கதைகளே அன்றி வேறில்லை என்று கூறினர்‌. (அல்முஃமினூன்‌: 81-82)

நாம்‌ மரணித்து, மண்ணாகவும்‌, எலும்புகளாவும்‌ மாறிய பின்னரும்‌ நாம்‌ (மீண்டும்‌) எழுப்பப்படுவோமா?

என்று நிராகரிப்பாளர்கள்‌ கேட்கின்றனர்‌. நிச்சயமாக நாமும்‌ நமது மூதாதையரும்‌ இது பற்றி இதற்கு முன்னர்‌ வாக்களிக்கப்பட்டிருந்தோம்‌. இது முன்னோர்களின்‌ கட்டுக்கதைகளே அன்றி வேறில்லை என்று கூறினர்‌. (அந்நம்ல்‌: 67-68)

நாம்‌ மரணித்து, மண்ணாகவும்‌, எலும்புகளாவும்‌ மாறிய
பின்னரும்‌ நாம்‌ (மீண்டும்‌ எழுப்பப்படுவோமா? நமது முன்னோர்களான மூதாதையருமா? (என ஆச்சரியமாகக்‌ கேட்கின்றனர்‌) ஆம்‌! நீங்கள்‌ இழிவடைந்தவர்களாக ஒன்றிணைக்கப்படுவீர்கள்‌ என்று (நபியே!) நீர்‌ கூறுவீராக! அது ஓர்‌ அதிர்வுதான்‌. அப்போது அவர்கள்‌ எதிர்பார்த்த வண்ணமாக இருப்பார்கள்‌. அவர்கள்‌ எங்களுக்கு ஏற்பட்ட கேடே! இது கூலி வழங்கப்படும்‌ நாளாகிவிட்டதே! எனக்‌ கூறுவார்கள்‌. நீங்கள்‌ பொய்ப்பித்துக்‌ கொண்டிருந்த தீர்ப்பு நாள்தான்‌ இது (என்று கூறப்படும்‌). (அஸ்ஸாஃப்பாத்‌: 16-24)

நாம்‌ மரணித்து, மண்ணாகவும்‌, எலும்புகளாவும்‌ மாறிய
பின்னரும்‌ நாம்‌ கூலி வழங்கப்படுவோமா? (எனக்‌ கேட்கின்றனர்‌). (அஸ்ஸாஃப்பாத்‌: வச: 53)

நாம்‌ மரணித்து, மண்ணாகவும்‌, எலும்புகளாகவும்‌ மாறிய பின்னரும்‌ நாம்‌ (மீண்டும்‌) எழுப்பப்படுவோமா? நமது முன்னோர்களான மூதாதையருமா? என அவர்கள்‌ கேட்போராக இருந்தனர்‌. நிச்சயமாக முன்‌ சென்றவர்கள்‌, பின்வருபவர்கள்‌ (அனைவரும்‌) அறியப்பட்ட ஓர்‌ தினத்தின்‌ குறித்த நேரத்தில்‌ ஒன்று திரட்டப்படுவார்கள்‌ என நபியே நீர்‌ கூறுவீராக (அல்வாகிஆ: 47-50)

நபியே! நீர்‌ ஆச்சரியப்படுவதாயின்‌ “நாம்‌ மண்ணாக மாறிய பின்னர்‌, மீண்டும்‌ நாம்‌ புதியதொரு படைப்பாக எழுப்பப்படுவோமா?” என்ற அவர்களின்‌ கூற்றே ஆச்சரியமிக்கதாகும்‌. (அர்ரஃத்‌: 05)

“நாம்‌ மக்கிப்போன எலும்புகளாக மாறிய பின்னர்‌ நாம்‌
புதியதொரு படைப்பாக எழுப்பப்படுவோமா? என்று அவர்கள்‌ கேட்கின்றனர்‌. (அல்‌ இஸ்ரா: 49)

அதாவது (நரகம்‌), அவர்களுக்குரிய கூலியாகும்‌. அவர்கள்‌ நமது வசனங்களை நிராகரித்ததே காரணம்‌. இன்னும்‌ “நாம்‌ மக்கிப்போன எலும்புகளாக மாறிப்போன பின்னரும்‌ நாம்‌ புதியதொரு படைப்பாக எழுப்பப்படுவோமா? என்றும்‌ அவர்கள்‌ கேட்டனர்‌. (அல்‌-இஸ்ரா:98)

நாம்‌ பூமியில்‌ அழிந்துபோன பின்னரும்‌ (மீண்டும்‌) புதியதொரு படைப்பாக இருப்போமா? என அவர்கள்‌ கேட்கின்றனர்‌. அவ்வாறன்று! அவர்கள்‌ தமது இரட்சகனைச்‌ சந்திப்பது பற்றி நிராகரிப்பாளர்களாகவே இருக்கின்றனர்‌. (அஸ்ஸஜ்தா: வச: 10)

நீங்கள்‌ செல்லரிக்கப்பட்டவர்களாக மாறிய பின்னரும்‌ புதியதொரு படைப்பாக இருப்பீர்கள்‌ என்று உங்களுக்கு அறிவிக்கின்ற ஓர்‌ மனிதர்‌ பற்றி நாம்‌ உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என நிராகரிப்பாளர்கள்‌ கேட்கின்றனர்‌. (ஸபஃ : 07)

நாம்‌ முதல்‌ படைப்பின்‌ போது இயலாதவர்களாக இருந்தோமா? இல்லை. (நிராகரிப்பாளர்களான) அவர்கள்தாம்‌ புதிய படைப்பு (மறுமைக்கான மீட்சி) பற்றிய சந்தேகத்தில்‌ இருக்கின்றனர்‌. (காஃப்‌: 15)

நமது தாய்மார்களின்‌ கருவறைகளுக்குள்‌ சிசுக்களாக, இல்லாத நிலையிலிருந்து‌ நாம்‌ எவ்வாறு படைக்கப்பட்டோம்‌? அப்படியான நிலையில்‌ நம்மை அங்கு அழகாக வடிவமைத்த அல்லாஹ்‌ நமது விரல்‌ ரேகைகளில்கூட எவ்வித மாற்றமும்‌ இன்றி! நம்மை மறுமையில்‌ எழுப்புவான்‌.

நாம்‌ எப்படி முதலாவதாகப்‌ பெற்றெடுக்கப்பட்டோமோ அவ்வாறு மண்ணறைகளில்‌ இருந்து மீண்டும்‌ நம்மைப்‌ படைப்பது அல்லாஹ்வின்‌ சபதமாகும்‌.

இந்த மண்ணில்‌ இருந்துதான்‌ உங்களைப்‌ படைத்தோம்‌; அதன்பக்கமே மீண்டும்‌ உங்களை மீட்டுவோம்‌. மீண்டும்‌ அதிலிருந்துதான்‌ மறுமுறை நீங்கள்‌ (கேள்விக்காக) மீட்கப்படுவீர்கள்‌. (தாஹா: 55)

மறுமை நாளின்‌ மீது சத்தியமாக! (மூஃமினைப்‌) பழிக்கின்ற ஆத்மாவின்‌ சத்தியமாக! மனிதன்‌, அவனது எலும்புகளை நாம்‌ ஒன்றுதிரட்டமாட்டோம்‌ என்று எண்ணிக்‌ கொள்கின்றானா? அவ்வாறன்று; அவனது விரல்‌ ரேகையையும்‌ (எதுவித மாற்றமும்‌ இன்றி) சரி செய்வதற்கு நாம்‌ ஆற்றல்‌ உடையவராவோம்‌.
(அல்கியாமா: 1- 4)

இவை அல்லாஹ்வின்‌ மேற்படி கூற்றைக்கொண்டு நம்புகின்ற முஸ்லிம்களின்‌ நம்பிக்கையாகும்‌.

அர்ஷின்‌ மீதிருந்து அறிவாலும்‌, ஆற்றலாலும்‌, உலகத்தை ஆள்பவன்

அல்லாஹ்‌ ஏழு வானத்திற்கும்‌ மேல்‌ இருக்கின்ற அவனது அர்ஷின்‌ மீதிருக்கின்றான்‌ என்பது அல்குர்‌ஆன்‌, மற்றும்‌ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்‌ வலியுறுத்தும்‌ நம்பிக்கையாகும்‌. இதுவே நபித்தோழர்கள்‌, மற்றும்‌ அவர்களின்‌ வழிவந்த அஹ்லுஸ்ஸுன்னா முஸ்லிம்களின்‌ நம்பிக்கையாகும்‌.

இதனை உறுதி செய்கின்ற அல்குர்‌ஆனிய வசனங்கள்‌, ஆதாரப்‌ பூர்வமான நபிமொழிகள்‌ பல உள்ளன.

யார்‌ அல்லாஹ்வையும்‌, இறுதி நாளையும்‌ நம்பி, தொழுகையையும்‌ நிலைநாட்டி, ரமளான்‌ நோன்பையும்‌ நோற்கின்றாரோ அவரைச்‌ சொர்க்கத்தில்‌ நுழையச்‌ செய்வது அல்லாஹ்வின்‌ மீதுள்ள கடமையாகும்‌. அவர்‌ ஹிஜ்ரத்‌ செய்தாலோ, அல்லது அவர்‌ பிறந்த ஊரில்‌ வாழ்ந்தாலோ (மரணித்தாலோ) எதுவானாலும்‌ சரியே! என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியபோது, அல்லாஹ்வின்‌ தூதரே! இதை மக்களுக்கு நாம்‌ அறிவிக்கட்டுமா? எனத்‌ தோழர்கள்‌ கேட்டனர்‌. அப்போது “நிச்சயமாக சுவர்க்கத்தில்‌ நூறு படித்தரங்கள்‌ (வகுப்புகள்) உள்ளன. அல்லாஹ்வின்‌ பாதையில்‌ போர்‌ செய்பவர்களுக்காக அல்லாஹ்‌ அதனைத்‌ தயார்படுத்தி வைத்துள்ளான்‌. அவற்றின்‌ இரு படித்தரங்களுக்கு இடையில்‌ உள்ள அளவு வானம்‌, பூமி ஆகிய இரண்டிற்கும்‌ இடைப்பட்ட அளவாகும்‌. நீங்கள்‌ அல்லாஹ்விடம்‌ வேண்டுகின்ற போது “அல்‌ ஃபிர்தெளஸ்‌” என்ற சொர்க்கத்தை வேண்டுங்கள்‌, அது சொர்க்கத்தில்‌ மத்தியும்‌, அதில்‌ உயர்வானதுமாகும்‌. அதன்‌ மேல்தான்‌ அர்ரஹ்மானின்‌ அர்ஷ்‌ இருக்கின்றது. அதிலிருந்து சொர்க்கத்தின்‌ நதிகள்‌ பெருக்கெடுக்கின்றன என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (புகாரி‌, 2581).

ஏழு வானத்திற்கும்‌ மேல்‌ இருக்கும்‌ “அர்ஷ்‌” என்ற சிம்மாசனத்தின்‌ மீதே அல்லாஹ்‌ உயர்ந்துள்ளான்‌. அவனது இஸ்திவா- உயர்ந்திருத்தல்‌ என்ற முறை பற்றி நாம்‌ அறியமுடியாது. நபி (ஸல்‌) அவர்கள்‌ ஏழு வானங்களையும்‌ கடந்து மிஃராஜ்‌ சென்ற போது அல்லாஹ்வுடன்‌ திரைமறைவில்‌ பேசியதும்‌ இதற்கான மற்றோரு சான்றாகும்‌.

நமக்கு ஏதாவது துன்பம்‌ நிகழும்போது நமது கண்‌ புருவங்கள்‌ மேல்‌ நோக்கி உயர்வதும்‌, இரு கரங்கள்‌ வானின்‌ பக்கமாக உயர்த்தப்படுவதும்‌, சிக்கலான நேரங்களில்‌ நமது சிந்தனை வான்‌ திசையின்‌ பக்கம்‌ உந்தப்படுவதும்‌ அல்லாஹ்‌ அர்ஷில்‌ இருப்பதை உணர்வதற்கு அவன்‌ நமக்கு வழங்கியுள்ள பெரும்‌ சான்றும்‌ இயல்பின்‌ அடிப்படையில்‌ உள்ள ஆதாரமுமாகும்‌.

அதுமட்டுமின்றி, இவை அல்லாஹ்வின்‌ வழிமுறையின்‌ அடிப்படையில்‌ நமது இதயங்கள்‌ மீது அவனால்‌ பதிக்கப்பட்ட இயற்கையான நம்பிக்கை முத்திரையுமாகும்‌.

அல்குர்‌ஆன்‌ அல்லாஹ்வை அர்ஷின்‌ இரட்சகன்‌, மகத்தான அர்ஷின்‌ இரட்சகன்‌ என்றெல்லாம்‌ வர்ணிப்பதை நாம்‌ அறிவோம்‌.

அது கண்ணியமும்‌ உயர்வும்‌ மிக்க அல்லாஹ்வின்‌ அர்ஷைப்பற்றி விளக்கும்‌ வசனங்கள்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌.

அர்ரஹ்மானாகிய அல்லாஹ்‌ அர்ஷின் மீதானான்‌ (தாஹா வச: 5)

அல்லாஹ்‌ அர்ஷின்‌ மேல்‌ உள்ளான்‌ என்பதை நிரூபிக்கும்‌ சான்றுகள்‌ சில 

(தாஹா : வச : 5), (அல்‌அஃராஃப்‌: வச : 54), (யூனுஸ்‌ : வச : 3), (அர்ரஃத்‌ : வச :2), (அல்‌ஃபுர்கான்‌: வச: 59), (அஸ்ஸஜ்தா: வச :4), (அல்ஹதீத்‌: வச:4) ஆகிய இடங்களில்‌ இடம்‌ பெற்றுள்ள வசனங்கள்‌ போன்று, ஹதீஸ்‌ கிரந்தமான புகாரியில்‌ (7418) (3190) (7419) (7421) ஆகிய இலக்கங்களில்‌ இடம்‌ பெற்றுள்ள நபிமொழிகள்‌ உள்ளன.

இறைச்‌ செய்தி வானில்‌ இருந்து இறங்குதல்‌,

வானவர்களுக்கான கட்டளை அர்ஷில்‌ இருந்து பரிமாறப்பட்டு, அடிவானம்‌ வரை வந்தடைதல்‌,

நபி (ஸல்‌) அவர்களின்‌ மிஃராஜ்‌ பயணம்‌,

நபி (ஸல்‌) அவர்கள்‌ “கிப்லா” மாற்றம்‌ வேண்டி தொழுகையில்‌ தமது முகத்தை வானின்‌ பக்கமாக உயர்த்தியமை,

அர்ஷைச்‌ சுமக்கின்ற வானவர்கள்‌,

அர்ஷின்கீழ்‌ இறைவனைத்‌ துதி செய்யும்‌ வானவர்கள்‌,

நல்லமல்கள்‌ அல்லாஹ்வின்‌ பக்கம்‌ உயர்த்தப்படுதல்‌,

கியாமத்‌ நாளில்‌ அல்லாஹ்வின்‌ அர்ஷை எட்டு வானவர்கள்‌ சுமந்து வருதல்‌,

பிரார்த்தனையின்‌ போது மனதை ஓர்முகப்படுத்தி, வானின்‌ பக்கம்‌ கைகளை உயர்த்தி நபி (ஸல்‌) அவர்கள்‌ பிரார்த்தித்துள்ள பல கட்டங்கள்‌,

அரஃபா தின உரையின்‌ போது வானின்‌ பக்கமாக ஆட்காட்டி விரலை உயர்த்தி, பின்னர்‌ பணிந்து மக்களின்‌ சாட்சியத்தை அல்லாஹ்விடம்‌ சைகை செய்து காட்டியமை,

வானவர்கள்‌ அடியார்களின்‌ செயற்பாடுகள்‌ பற்றி எடுத்துரைக்க மேல்வானத்தை நோக்கி அல்லாஹ்வின்‌ அர்ஷை நோக்கி விரைதல்‌,

உயிர்களைக்‌ கைப்பற்றிய வானவர்கள்‌ அல்லாஹ்வின்‌ ஆசீர்வாதம்‌, அல்லது சாபம்‌ என்ற இரண்டில்‌ ஒன்றைப்‌
பெற்றுத்தருவதற்காக வானை நோக்கி உயிரைக்‌ கொண்டு செல்லுதல்‌ போன்ற விளக்கங்கள்‌ அல்லாஹ்‌
அர்ஷின்மேல்‌ உள்ளான்‌ என்பதையே நிரூபிக்கின்றன.

பயணத்தில்‌ பிரார்த்தனை செய்யும்‌ மனிதன்‌ உணவு, பானம்‌, ஆடைகள்‌ அனைத்தும்‌ ஹராமான வழியில்‌ தேடப்பட்ட நிலையில்‌ தனது இரு கரங்களையும்‌ வானின்‌ பக்கமாக உயர்த்தி, வேண்டும்‌ நடைமுறை.

நம்மில்‌ முற்போக்குவாதிகள்‌, சிந்தனையாளர்கள்‌, கல்விமான்கள்‌, சத்திய வழிமுறையைப்‌ பேணி அழைப்பதாக மார்தட்டிக்‌ கொள்வோர்‌, இஸ்லாமிய இயக்கக்‌ காவலர்கள்‌ என்று நாமம்‌ சூடிக்‌ கொண்ட பலர்‌ “அகீதா” பற்றி அலட்சியமாக இருப்பது மட்டுமின்றி, மற்றவர்கள்‌ அது பற்றிப்‌ பேசுவதைக்‌ கூடப்‌ பிற்போக்காகவும்‌, அவசியமற்றதாகவும்‌ கருதுகின்றனர்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ காலத்தில்‌ வாழ்ந்த அடிமைகள்‌ கூட அவசியம்‌ அறிந்திருந்த இஸ்லாத்தின்‌ இந்த அடிப்படை அம்சத்தை விட்டுவிட்டு எதை எதையோ பேசிக்‌ கொண்டிருக்கும்‌ கள அழைப்பாளர்கள்‌ அகீதாவின்‌ முக்கியத்துவத்தை முன்னெடுக்க முயற்சிப்பதும்‌, அல்லாஹ்வின்‌ இலக்கணத்தைச்‌ சரியாக அறிந்து கொள்வதன்‌ ஊடாக அவனை மதிப்பதற்கு வழிகாட்டுவதும்‌ அழைப்புப்‌ பணியின்‌ முக்கியப்‌ பகுதியும்‌ பணியுமாகும்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்வது சிறந்ததாகும்‌.

இது பற்றி அறிவற்ற பலர்‌ அல்லாஹ்‌ தூணிலும்‌ இருப்பான்‌; துரும்பிலும்‌ இருப்பான்‌, “எங்கும்‌ நிறைந்தோன்‌” “எல்லாம்‌ அவனே” “எல்லாப்‌ பொருளிலும்‌ அவனே” என்றெல்லாம்‌ போதிக்கின்றனர்‌. இவர்கள்‌ இவ்விஷயத்தில்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ காலத்தில்‌ வாழ்ந்த அடிமைகளின்‌ அந்தஸ்தில்கூட இல்லாமல்‌ இருப்பது கவலைக்குரிய விஷயமாகும்‌.

முஆவியா பின்‌ அல்ஹகம்‌ அஸ்ஸாலமிய்யி (ரழி) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: எனக்கு ஓர்‌ அடிமைப்‌ பெண்‌ இருந்தாள்‌. அவள்‌ “உஹத்‌” மலையடிவாரத்தின்‌ பக்கமாக உள்ள “அல்ஜவானிய்யா” பகுதியில்‌ ஆடுகளை மேய்த்து வந்தாள்‌. ஓரு‌ நாள்‌ ஓநாய்‌ ஒன்று ஓர்‌ ஆட்டைக்‌ கவ்விச்‌ செல்வதை நான்‌ கண்டேன்‌, (பணியில்‌ குறை செய்த) அவளது கன்னத்தில்‌ ஓங்கி அறைந்துவிட்டேன்‌, -ஆதமின்‌ பிள்ளைகள்‌ வருந்துவது போன்று நானும்‌ வருந்தி, நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களிடம்‌ வந்து விவரத்தைக்‌ கூறினேன்‌. அவர்கள்‌ அதற்காக மிக வன்மையாக (என்னைச்‌) சாடினார்கள்‌, அப்போது “அல்லாஹ்வின்‌ தூதரே! அவளை விடுதலை செய்யவா? எனக்‌ கேட்டேன்‌, என்னிடம்‌ அவளை அழைத்துவா என்று கூறினார்கள்‌, நான்‌ அவளை அழைத்து வந்தேன்‌, அவளிடம்‌:

“அல்லாஹ்‌ எங்கே (இருக்கிறான்‌)?” எனக்‌ கேட்டார்கள்‌, அவள்‌ “வானிலே” (இருக்கிறான்‌) எனக்‌ கூறினாள்‌, பின்‌ நான்‌ யார்‌” எனக்‌ கேட்டார்கள்‌. அவள்‌ “நீங்கள்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌” எனக்‌ கூறினாள்‌. அப்போது நபி (ஸல்‌) அவர்கள்‌,“ அவளை விடுதலை செய்து விடு. அவள்‌ (முஃமினான) விசுவாசியான பெண்‌” எனக்‌ கூறினார்கள்‌. (நூல்‌: முஸ்லிம்‌- 836)

ஹதீஸின்‌ தராதரம்‌:

மேற்‌ கண்ட ஹதீஸ்‌ ஸஹீஹான ஸதீஸாகும்‌. ஷீஆப்‌ பிரிவைச்‌ சேர்ந்தவனும்‌ கப்ரு வணங்கியும்‌, மகா பொய்யனுமான ஜோர்தானைப்‌ பிறப்பிடமாகக்‌ கொண்ட ஸக்காஃப்‌ என்பவனைப்‌ பின்பற்றிய இலங்கை அஷ்‌அரியாக்கள்‌ பலர்‌ இந்த ஹதீஸை கண்மூடித்தனமாக மறுத்துள்ளதைப்‌ பார்க்கின்றோம்‌.

இது முஸ்லிம்‌ கிரந்தத்தில்‌ மட்டுமின்றி, அஹ்மத்‌, அபூதாவூத்‌, மாலிக்‌ போன்ற அறிஞர்களால்‌ அவர்களின்‌
கிரந்தங்களில்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அல்லாஹ்‌ அர்ஷின்மீதுள்ளான்‌ என்பதை நம்ப மறுப்போரின்‌ இடுப்பை முறிக்கின்ற ஹதீஸாகும்‌ என்று இதன்‌ விமர்சகர்கள்‌ கருத்துக்‌ கூறுகின்றனர்‌.

இந்த ஹதீஸைப்‌ பலவீனப்படுத்துவோர்‌ மனோ இச்சைக்கு அடிமைப்பட்டே பலவீனப்படுத்தியுள்ளனர்‌ என்பது நிதர்சனமான உண்மையாகும்‌. இது பற்றி இமாம்‌ தஹபி என்ற அறிஞர்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்‌.

இது சரியான ஹதீஸாகும்‌. இதை முஸ்லிம்‌, அபூதாவூத்‌, நசயி மற்றும்‌ பல ஹதீஸ்கலை வல்லுனர்களான இமாம்கள்‌ தமது கிரந்தங்களில்‌ அறிவித்துள்ளனர்‌. அதில்‌ வந்திருப்பது போன்றே நடத்துவார்கள்‌. அதற்குத்‌ தவறான விளக்கம்‌ கூறியோ, கருத்தைத்‌ திரித்தோ அதற்கு இடைஞ்சல்‌ செய்யமாட்டார்கள்‌. அல்லாஹ்‌ எங்கே என்று கேட்கப்பட்ட அனைவரிடமும்‌ தனது இயல்பான பண்பின்‌ மூலம்‌ அவன்‌ வானில்‌ இருக்கின்றான்‌ என்று கூறும்‌ பதிலைத்தான்‌ கண்டோம்‌. (இமாம்‌ தஹபி அல்‌-உலுவ்வு)

முஸ்லிம்‌ உலகில்‌ இந்த ஹதீஸை மறுத்தவர்களாக ஆரம்பக்‌ காலத்தில்‌ ஐஹ்மிய்யாக்கள்‌, பின்னர்‌ குல்லாபியாக்கள்‌, அஷ்‌அரிய்யாக்கள்‌, ராஃபிழாக்கள்‌ போன்றவர்கள்‌ இருந்தனர்‌.

அவர்களுக்குப்‌ பின்னால்‌ அவர்களின்‌ வழி வந்தவர்களான கெளஸரி, ஸித்தீக்‌ அல்குமாரி போன்றவர்களும்‌ பின்னர்‌ ஜோர்டானைச்‌ சேர்ந்த ஹசன்‌ ஸக்காஃப்‌ மற்றும்‌ விரல்‌ விட்டு எண்ணக்‌ கூடிய அவரது இலங்கை வாழ்‌ அஷ்‌அரிய்ய சூஃபிகள்‌ போன்ற ஓர்‌ சிலருமே கண்மூடித்தனமாக மறுத்துரைத்துள்ளனர்‌ என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்‌.

இந்த ஹதீஸை மறுப்போருக்குப்‌ பின்வருமாறு பதில்‌ அளிக்கப்படுகின்றது:

ஜாரியா- அடிமைப்‌ பெண்‌- தொடர்பான ஹதீஸ்‌ இஸ்லாமியச்‌ சான்றோரின்‌ ஏகோபித்த கருத்தின்படி ஆதாரப்‌ பூர்வமாக அமைந்த ஹதீஸாகும்‌. அதை அறிஞர்‌ பெருமக்கள்‌ பலர்‌ ஸஹீஹான ஹதீஸ்‌ என்று குறிப்பிட்டுள்ளனர்‌. இமாம்‌ முஸ்லிம்‌ தமது “ஸஹீஹ்‌ முஸ்லிம்‌” நூலிலும்‌, இப்னு ஹஜர்‌ அவர்கள்‌ “பத்ஹுல்‌ பாரி” நூலிலும்‌, பைஹகி அவர்கள்‌ “அல்‌அஸ்மா வஸ்ஸிஃபாத்‌” நூலிலும்‌ அத்தஹபி அவர்கள்‌ “அல்‌ உலுவ்வு” என்ற நூலிலும்‌ அல்பானி அவர்கள்‌ “முக்தஸர்‌ அல்‌உலு” என்ற நூலிலும்‌ மேலும்‌ பல இடங்களிலும்‌ இந்த ஹதீஸ்‌ ஸஹீஹானது எனக்‌ குறிப்பிட்டுள்ளனர்‌. இது ஹதீஸ்கலை அறிஞர்கள்‌ மத்தியில்‌ ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட செய்தியாகும்‌ என்றும்‌ ஓர்‌ ஆய்வாளர்‌ சுட்டிக்காட்டியுள்ளார்‌.

இது சரியான- ஸஹீஹான செய்தி என்பதில்‌ அறிஞர்கள்‌ மத்தியில்‌ கருத்து முரண்பாட்டை நாம்‌ காணவில்லை. அத்துடன்‌ அதை பலவீனப்படுத்தியோரையும்‌ காணவில்லை. அத்துடன்‌ இது ஸஹீஹான ஹதீஸ்தான்‌ என்பது ஹதீஸ்‌ மற்றும்‌ சுன்னா ஆய்வாளர்கள்‌ அனைவரினதும்‌ ஏகோபித்த முடிவாகும்‌. அது மட்டுமின்றி, பிற்காலத்தில்‌ தோன்றிய ஜஹ்மிய்யா சிந்தனையில்‌ எச்ச சொச்சங்களான கெளஸரி, ஸித்தீக்‌ அல்குமாரி, மற்றும்‌ ஸக்காஃப்‌ போன்றவர்கள்தாம்‌ தமது மனோ இச்சைக்கு அமைவாகவும்‌, தாம்‌ கொண்ட அஸ்மா, ஸிஃபாத்‌ கொள்கைக்கு உட்படுத்தவும்‌ இதை மறுத்தனர்‌ எனச்‌ சுட்டிக்காட்டியுள்ளார்‌.

மற்றொரு பதில்‌:

முஸ்லிமில்‌ இடம்‌ பெற்றுள்ள மேற்கண்ட அடிமைப்‌ பெண்‌ தொடர்பான ஹதீஸ்‌ “முள்தரிப்” “முன்னுக்குப்‌ பின்‌ முரண்பாடான வகையைச்‌ சார்ந்தது” என்ற காரணத்தை முஹம்மத்‌ ஸாஹித்‌ அல்கவ்ஸரி என்பவர்‌ முன்வைத்து இந்த ஹதீஸை அங்கீகரிக்க முடியாது என்று நிராகரித்திருப்பதை நாம்‌ அறிவோம்‌.

எனவே அது தொடர்பான குற்றச்சரட்டின்‌ உண்மைத்‌ தன்மை பற்றி அறிவது நவீன கால, குறிப்பாக இலங்கை வாழ்‌ அஷ்‌அரிய்யாக்களுக்குப்‌ பதிலாக அமையும்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொண்டு இப்போது அதற்கான பதில்‌ அளிக்கப்படுகின்றது.

குற்றச்சாட்டு: இந்தச்‌ செய்தி “முள்தரிப்‌” முன்னுக்குப்‌ பின்‌ முரண்பாடான வகையைச்‌ சார்ந்ததாகும்‌. அதாவது அடிமைப்‌ பெண்ணிடம்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ கையை நீட்டி எழுப்பிய கேள்வி என்றிருக்க அதனை மாற்றி “வானின்‌ பக்கமாக” என அறிவித்துள்ளனர்‌ என்பது கெளஸரியின்‌ வாதமாகும்‌.

பதில்‌: இது அப்பட்டமான பொய்யாகும்‌. கவ்ஸரி குறிப்பிடுவது போன்று சரியான அறிவிப்பாளர்கள்‌ வரிசைகளில்‌ அவ்வாறு இடம்‌ பெறவில்லை. மாறாக அது பலவீனமான அறிவிப்பாளர்‌ வரிசையில்‌ இடம்‌ பெற்றிருக்கின்ற அறிவிப்பாகும்‌.

அந்தக்‌ குறையும்‌ இரு பிரதான காரணிகளின்‌ அடிப்படையில்‌ தள்ளுபடி செய்யப்படுகின்றது.

1-அறிவிப்பாளர்‌ வரிசை (சனத்‌) : அவர்‌ எடுத்துக்காட்டிய அறிவிப்பாளர்‌ வரிசையில்‌ இடம்‌ பெறும்‌ ஸயீத்‌ பின்‌ சைத்‌ அபுல்‌ ஹசன்‌ அல்பஸரி என்பவர்‌ நசயீ, இப்னுல்‌ கத்தான்‌ போன்ற பல அறிஞர்களால்‌ பலவீனப்படுத்தப்பட்டுள்ளார்‌. அதனால்‌ அந்த அறிவிப்பு தள்ளுபடி செய்யப்பட்டதாகும்‌. (பார்க்க: தக்ரீப்‌)

ஆஹாத்‌ வகை சார்ந்த ஆதாரப்‌ பூர்வமான ஹதீஸ்களை அகீதாவில்‌ எடுத்துக்கொள்ளாதவர்கள்‌ பலவீனமானதை எவ்வாறு எடுக்க முடியும்‌? என்ற கேள்வியும்‌ இங்கு நியாயமானதாகும்‌.

2-(மத்தன்‌) அதாவது ஹதீஸின்‌ உள்ளடக்கம்‌ தொடர்பானது.
நபி (ஸல்‌) அவர்கள்‌ கையால்‌ சைகை செய்து பெண்ணைப்‌ பார்த்துக்‌ கேட்டார்கள்‌ என்று அதே ஸயீத்‌ பின்‌ ஸைத்‌ என்ற பலவீனமான அறிவிப்பாளர்தாம்‌ இதனை அறிவித்துள்ளார்‌.

நம்பகமான, சரியான பல அறிவிப்பாளர்கள்‌ 'வானின்‌ பக்கமாக” என்று அறிவித்துள்ள இவரது அறிவிப்பானது பல நம்பகமானவர்களுக்கு மாற்றமான அறிவிப்பாகும்‌.

இவ்வாறான அறிவிப்பிற்கு ஹதீஸ்‌ கலை அறிஞர்கள்‌ “ஷாத்‌” நம்பகமான பலரின்‌ அறிவிப்புக்கு மாறாக, நம்பகமான ஒருவரின்‌ தனியான அறிவிப்பு என்பதைக்‌ காரணம்‌ காட்டி அதனை ஓரம்‌ கட்டுவர்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்ளட்டும்‌.

3-ஸஹாபியே அதனை தமது விருப்பப்படி கூறியுள்ளார்‌.

இது நபித்தோழர்கள்‌, இமாம்கள்‌ போன்றோர்‌ பேரில்‌ கூறப்படும்‌ மிகப்‌ பெரும்‌ அபத்தமாகும்‌. இப்படி ஓர்‌ கூற்றை நபித்தோழர்கள்‌ பேரில்‌ இட்டுக்கட்டிக்‌ கூறுவதன்‌ நோக்கம்‌ அல்லாஹ்‌ அர்ஷில்‌ இருப்பதை மறுப்பதற்காகவே அன்றி, வேறு எந்த நோக்கமாகவும்‌ இருக்க முடியாது.

இதைத்தான்‌ ஷீஆ போர்வையினுள்‌ மறைந்து வாழும்‌ ஹசன்‌ ஸக்காஃப்‌ என்பவரும்‌ செய்கின்றார்‌. இதனை இலங்கை அஷ்‌அரிய்யாக்களும்‌ ஆய்வின்றி முழுமையாகப்‌ பின்பற்றுகின்றனர்‌.

அஹ்மத்‌ ஸித்தீக்‌ அல்குமாரி என்பவர்‌ அடிமைப்‌ பெண்‌ தொடர்பாக இடம்‌ பெற்றுள்ள அறிவிப்பில்‌ யஹ்யா பின்‌ கஸீர்‌ என்பவர்‌ செவியேற்றது பற்றி முவத்தாவில்‌ (அன்‌அனா) சந்தேகத்தொடராக இடம்‌ பெற்றுள்ளது என்ற மற்றோரு காரணத்தை முன்வைத்து, இந்த அறிவிப்பைத்‌ தள்ளுபடி செய்தாலும்‌ முஸ்னத்‌ அஹ்மதில்‌ “ஹிலால்‌ பின்‌ உஸாமா” என்பவர்‌ வழியாக யஹ்யா அந்தச்‌ செய்தியை நேரடியாகச்‌ செவிமடுத்ததற்கான ஆதாரப்‌ பூர்வமான அறிவிப்பாளர்‌ வரிசையுடன்‌ அது இடம்‌ பெற்றுள்ளது என அறிஞர்களால்‌ சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனால்‌ யஹ்யா பின்‌ கஸீர்‌ அவர்கள்‌ தம்‌ ஆசிரியரிடம்‌ இருந்து ஹதீஸை நேரடியாகச்‌ செவிமடுத்துள்ளார்‌ என்பது இங்கு உறுதி செய்யப்படுவதுடன்‌, அவர்‌ தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகமும்‌ நிவர்த்தி செய்யப்படுகின்றது.

முஸ்லிமில்‌ இடம்‌ பெற்றுள்ள இந்த அறிவிப்பை ஹசன்‌ ஸக்காஃபின்‌ வழிநின்று அஷ்‌அரிய்யா வேதம்‌ பேசும்‌ ஹிஷாம்‌ பத்தாஹி என்பவர்‌ ரஃப என்ற அவரது நூலில்‌ மெளனத்தள்ளுபடி செய்திருப்பது இவர்‌ ஸக்காஃபின்‌ வழியில்‌ பயணித்துள்ளார்‌ என்பதற்கான சான்றாகும்‌.

இவர்‌ அல்பானி (ரஹ்‌) அவர்கள்‌ பேரில்‌ ஸக்காஃப்‌ கூறிய பொய்களை முன்வைத்தே தமது கருத்திற்கு வலுச்சேர்த்துள்ளார்‌ என்பது அவரது நூலில்‌ காணப்படும்‌ தகவல்கள்‌ ஆதாரமாகும்‌.

அல்லாஹ்‌ அல்லாதவர்களை அழைப்பதும்‌, அவர்களிடம்‌ தேவைகளை வேண்டுவதும்‌ இணைவைத்தலாகும்‌. அல்லாஹ்விடம்‌ பிரார்த்தனை செய்யாது புறக்கணித்து நடப்பது நரகத்திற்கு இட்டுச்‌ செல்லும்‌ செயலாகும்‌.

என்னையே நீங்கள்‌ அழையுங்கள்‌. உங்களுக்கு நான்‌ பதில்‌ அளிப்பேன்‌. நிச்சயமாக எவர்கள்‌ என்னை வணங்குவதை (அழைப்பதை) விட்டுப்‌ பெருமையடிக்கின்றார்களோ அவர்கள்‌ இழிவடைந்தவர்களாக நரகத்தில்‌ நுழைவார்கள்‌ என்று உமது இரட்சகன்‌ கூறிவிட்டான்‌. (அல்ஙாஃபிர்‌: 60)

(நபியே)! என்‌ அடியார்கள்‌ என்னைப்‌ பற்றி உம்மிடம்‌ கேட்டால்‌ நிச்சயமாக நான்‌ சமீபமானவன்‌; அழைப்பவன்‌ என்னை அழைக்கின்றபோது நான்‌ அழைப்பவனுக்குப்‌ பதில்‌ அளிக்கின்றேன்‌. எனவே அவர்கள்‌ நேர்வழி பெறும்‌ பொருட்டு என்னிடம்‌ பதிலை எதிர்பார்க்கட்டும்‌. என்னை ஈமான்‌ கொள்ளட்டும்‌. (என்று கூறிவிடுங்கள்‌.) (அல்பகரா: 186)

அல்லாஹ்‌ அடியார்களுக்குச்‌ சமீபமாக இருக்கின்றான்‌. அவனைப்‌ பண்பாடு பேணி அழைப்பதைத்தான்‌ அவன்‌ கற்றுத்தருகின்றான்‌.

நீங்கள்‌ உங்கள்‌ இரட்சகனைப்‌ பணிவோடும்‌. இரகசியமாகவும்‌ அழையுங்கள்‌. நிச்சயமாக அவன்‌ வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. (அல்‌அஃராஃப்‌: 55)

நீங்கள்‌, “அல்லாஹ்‌” என்றோ, அல்லது “அர்ரஹ்மான்‌” என்றோ அழையுங்கள்‌. நீங்கள்‌ எப்படி அழைத்த போதும்‌ அவனுக்கு அழகிய திருநாமங்கள்‌ பல உள்ளன. (நபியே! தொழுகையில்‌) உமது ஓதலினால்‌ சப்தத்தை உயர்த்தவோ, மிகவும்‌ தாழ்த்திடவோ வேண்டாம்‌. அவ்விரண்டிற்கும்‌ இடையிலான ஓர்‌ நிலையைக்‌ கடைப்பிடிப்பீராக! (அல்‌இஸ்ரா:110)

பாவம்‌ செய்வது தவறுகள்‌ புரிவது மனித இயல்பாகும்‌. எனவே அதற்காக அல்லாஹ்விடமே மனிதர்கள்‌ தமது தவறுகளை முன்மொழிந்து மன்னிப்புக்கோர வேண்டும்‌. அல்லாஹ்‌ மன்னிக்க வேண்டிய தவறுகளை அவன்‌ அல்லாதவர்களிடம்‌ மன்னிக்கக்‌ கோருவது இணைவத்தலும்‌, பெரும்‌ குற்றமுமாகும்‌.

என்‌ அடியார்களே! நீங்கள்‌ இரவுபகலாகத்‌ தவறு செய்கின்றீர்கள்‌. நான்தான்‌ தவறுகள்‌ அனைத்தையும்‌ மன்னிக்கின்றேன்‌. எனவே என்னிடமே நீங்கள்‌ மன்னிப்பு வேண்டுங்கள்‌. நான்‌ உங்களுக்கு மன்னிப்புத்‌ தருவேன்‌. (முஸ்லிம்‌-4674) என்பது அல்லாஹ்வின்‌ வாக்காகும்‌.

என்‌ அடியார்களே! உங்களில்‌ ஆரம்பக்காலத்தவர்கள்‌, இறுதியாக வருவோர்‌, மேலும்‌, உங்களிலுள்ள மனித இனம்‌, மற்றும்‌ உங்களிலுள்ள ஜின்கள்‌ அனைவரும்‌ ஓர்‌ திடலில்‌ ஒன்று கூடி, அவர்கள்‌ அனைவரும்‌ என்னிடம்‌ கேட்கின்ற போது அவர்கள்‌ ஒவ்வொரு கேள்விக்கும்‌ நான்‌ கொடுப்பதைக்‌ கொடுத்தாலும்‌ கடலில்‌ ஊசியைப்‌ போட்டு எடுக்கின்ற அளவு எவ்வளவு குறையுமோ அவ்வளவு தான்‌ என்னிடம்‌ உள்ள (கருவூலமும்‌) குறையும்‌ என அல்லாஹ்‌ கூறுவதாக நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (முஸ்லிம்‌- 4674).

அல்லாஹ்வை அழைக்கின்ற போது மெளனமாகவும்‌, பணிவாகவும்‌ அழைப்பது அவனுடன்‌ உரையாடும்‌ ஒழுங்கு முறையில்‌ ஒன்றாகும்‌. இது பற்றி நபி (ஸல்‌) அவர்கள்‌ தம்‌ தோழர்களுக்குப்‌ பின்வருமாறு கற்றுக்‌ கொடுத்துள்ளார்கள்‌.

நாங்கள்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களுடன்‌ (ஓர்‌ பயணத்தில்‌) இருந்தோம்‌. அப்போது நாம்‌ ஓர்‌ பள்ளத்தாக்கைக்‌ காண்கின்ற போது “அல்லாஹு அக்பர்‌” என்று சப்தமிட்டுக்‌ கூறுவோம்‌. இதனைக்‌ கவனித்த அல்லாஹ்வின்‌ தூதர்‌ அவர்கள்‌ எம்மை அழைத்து:

மனிதர்களே! உங்கள்‌ மனதுகளுக்குள்‌ அழைத்துக்‌ கொள்ளுங்கள்‌. நிச்சயமாக நீங்கள்‌ செவிப்புலன்‌ அற்றவனையோ, உங்களை விட்டு மறைந்திருப்பபனையோ அழைக்கவில்லை. மாறாக, உங்களுடன்‌ இருப்பவனையே நீங்கள்‌ அழைக்கின்றீர்கள்‌. நிச்சயமாக அவன்‌, நன்கு செவியுறுபவன்‌; சமீபத்தில்‌ இருப்பவன்‌. அந்த அல்லாஹ்‌ உயர்வும்‌, கீர்த்தியுமிக்கவன்‌ எனக்‌ கூறினார்கள்‌. (புகாரி 5905).

மனிதன்‌ உலகக்‌ கருவூலங்களின்‌ அதிபதியாகிய அல்லாஹ்விடம்‌ உரிமையுடன்‌ மன்றாடித்‌ தனது தேவைகளை அவனிடமே அவன்‌ நேரடியாகக்‌ கேட்டுப்பெற வேண்டும்‌.

நானே அனைத்தினதும்‌ அதிபதி; எனக்கே சகல அதிகாரமும்‌ உண்டு என்று அல்லாஹ்‌ அறிவித்திருக்க அவனை விட்டு விட்டு கப்ரில்‌ அடக்கம்‌ செய்யப்பட்ட மனிதர்களிடம்‌ செல்வோர்‌ நிலை பற்றி என்னவென்பது? இவ்வாறானவர்களுக்குக்‌ கூலி நரகம்தான்‌ என்று அல்லாஹ்‌ எச்சரிக்கின்றான்‌. அல்குர்‌ஆனின்‌ பின்வரும்‌ கூற்றைக்‌ கொஞ்சம்‌ சிந்தியுங்கள்‌.

(மரணித்த) “அவர்களுக்குப்‌ பின்னால்‌ அவர்கள்‌ எழுப்பப்படும்‌ நாள்‌ வரை ஓர்‌ திரை இருக்கும்‌. (அல்முஃமினூன்‌: வச: 100)

(மரணித்த) அவர்களை நீங்கள்‌ அழைத்தால்‌, அவர்கள்‌ உங்கள்‌ அழைப்பைச்‌ செவியுறமாட்டார்கள்‌, அப்படியே செவியுற்றாலும்‌ அவர்கள்‌ உங்களுக்குப்‌ பதில் தரமாட்டார்கள்‌, இன்னும்‌ மறுமைநாளில்‌ உங்களின்‌ இணைவைப்பை அவர்கள்‌ (அல்லாஹ்விடம்‌) நிராகரிப்பார்கள்‌, அறிந்தவனை (அல்லாஹ்வைப்‌ போல்‌ உமக்கு யாரும்‌ (இது பற்றி) உணர்த்தமாட்டார்கள்‌. (அத்தியாயம்‌ : அல்ஃபாதிர்‌ வச:14)

செவியேற்போர்தாம்‌ (அழைப்பிற்குப்‌) பதில்‌ தருவார்கள்‌. மரணித்தவர்களை (விசாரணைக்காக மறுமையில்‌) அல்லாஹ்‌ எழுப்புவான்‌. (அல்‌அன்‌ஆம்‌: 36)

அல்லாஹ்வை அன்றி நீங்கள்‌ யாரை அழைக்கின்றீர்களோ அவர்களும்‌ உங்களைப்‌ போன்ற அடியார்கள்‌தாம்‌. நீங்கள்‌ அவர்களை அழையுங்கள்‌ பார்க்கலாம்‌. நீங்கள்‌ உண்மையாளர்களாக இருப்பின்‌ அவர்கள்‌ உங்களுக்குப்‌ பதில்‌ தரட்டும்‌ (அல்‌அஃராஃப்‌: 194).

இந்தச்‌ சவாலை யாராலும்‌ முறியடிக்கவே முடியாது. அப்படியானால்‌ மரணித்தவர்கள்‌ பதில்‌ தருவார்கள்‌ என்று நம்புவோர்‌ முறியடிக்கலாம்‌ என்று நம்பித்தான்‌ மரணித்தவர்களிடம்‌ பிரார்த்தனையில்‌ ஈடுபடுகின்றனர்‌ என்று பொருள்‌ கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.

அதனால்தான்‌ அவர்கள்‌ அவர்களுக்கு நேர்ச்சைகள்‌ செய்து திருவிழாக்கள்‌ நடத்துகின்றனர்‌. இது எவ்வளவு பெரிய பாவம்‌ என்று சிந்தனை செய்து பாருங்கள்‌.

மகத்துவமானவன்

அல்லாஹ்‌ “அல்‌அளீம்‌” மகத்துவமானவன்‌ என்பதை விளக்கும்‌ வசனங்கள்‌ அல்குர்‌ஆனில்‌ ஏராளம்‌ இடம்‌ பெற்றுள்ளன. அல்‌அளமத்‌ என்பது அதன்‌ பண்பாகும்‌.

இந்தப்‌ பண்புள்ளவனாகிய அல்லாஹ்வை மரியாதைக்‌ குறைவாகப்‌ பேசுவதும்‌, எழுதுவதும்‌ நரகத்தைத்‌ தேடித்தரும்‌ செயல்களாகும்‌.

“மகத்துவமானவன்‌” என்ற பொருள்‌ கொண்ட “அல்‌ அளீம்‌” என்ற சொல்‌ அல்குர்‌ஆனில்‌ முப்பத்து ஆறு இடங்களில்‌ இடம்‌ பெற்றிருப்பதையும்‌ அவற்றில்‌ பதின்‌ மூன்று இடங்களில்‌ அல்லாஹ்வைக்‌ குறிக்க இடம்‌ பெற்றிருப்பதையும்‌ பார்க்க முடிகின்றது. அதிலிருந்துதான்‌ “அல்‌அளமா” “மகத்துவம்‌” என்ற
பண்பு பெறப்படுகின்றது.

மகத்துவமிக்க உமது இரட்சகனின்‌ பெயரைக்‌ கொண்டு துதிப்பீராக! (அல்வாகிஆ: 96)

ஏழு வானங்களினதும்‌, மகத்தான அர்ஷினதும்‌ இரட்சகன்‌ யார்‌ என்று (நபியே) நீர்‌ கேட்பீராக! (அல்முஃமினூன்‌: 86)

கண்ணியமும்‌ மகத்துவமும்‌ நிறைந்தவன்தான்‌ அல்லாஹ்‌. பெருமை, கண்ணியம்‌, ஆகியவை அல்லாஹ்வின்‌ உயரிய பண்புகளாகும்‌. அதில்‌ மனிதர்கள்‌ கூட்டுச்சேரவே முடியாது. அவ்வாறு பெருமையடிப்போர்‌ பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கண்ணியமும்‌ பெருமையும்‌ அவனது மேலாடையாகும்‌.
எனவே யார்‌ அதில்‌ என்னுடன்‌ முரண்பட்டுக்‌ கொள்கின்றானோ அவனை நான்‌ தண்டிப்பேன்‌. (முஸ்லிம்‌- 4752)

அல்லாஹ்‌ மகத்துவமிக்கவன்‌ என்றும்‌, மகத்துவமிக்க
அர்ஷின்‌ இரட்சகன்‌ என்றும்‌ அல்குர்‌ஆனிலும்‌, சுன்னாவிலும்‌ வர்ணிக்கப்பட்டுள்ளான்‌. அவன்‌ மகத்துவமானவன்‌; கண்ணியமானவன்‌. எனவே மகத்துவம்‌ நிறைந்த அல்லாஹ்வோடு கண்ணியமாக நடப்பது முஃமின்கள்‌ மீதுள்ள கடமையாகும்‌.

வணங்கி வழிபட முழுத்தகுதி உடையவன்‌

அகிலங்களின்‌ அதிபதியாகிய அல்லாஹ்‌ மட்டுமே மனிதர்களால்‌ வணங்கப்பட முழுத்தகுதி உடையவனாக இருக்கின்றான்‌ என்பதை அவனது பண்புகள்‌ பற்றிப்‌ படிக்கின்ற போது முடிவு செய்ய முடியும்‌.

படைப்பாளன்‌.

இரட்சகன்‌.

அகிலங்களின்‌ அதிபதி.

அழகிய பல பெயர்கள்‌, பண்புகளுக்கு உரியவன், அழகானவன்‌.

யாவரையும்‌ மிகைத்தோன்‌.

என்றும்‌ நிலையானவன்‌.

வானங்கள்‌, பூமி, இதர படைப்பினங்களின்‌ அதிபதி.

இல்லாமையில்‌ இருந்து உற்பத்தி செய்யும்‌ ஆற்றல்‌ உள்ளவன்‌.

மனிதனைச்‌ சிறு துளி விந்துவில்‌ இருந்து படைத்தவன்‌

உலகக்‌ கருவூலங்களின்‌ அதிபதி.

சூரியன்‌, சந்திரன்‌, நட்சத்திரங்கள்‌, கோள்களைப்‌ படைத்தவனும்‌, ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பில்‌ அவற்றை ஒழுங்குற இயக்குபவனும்‌.

உணமையாளன்‌.

ஒப்பற்றவன்‌.

கேட்பவன்‌, பார்ப்பவன்‌,

மறைவானவை பற்றி முழுமையாக அறிந்தவன்‌.

பல்லாயிரம்‌ பேர்‌ ஒரே நேரத்தில்‌ அவனிடம்‌ கேட்டாலும்‌ அவர்களின்‌ கேள்வியைத்‌ துல்லியமாக அறியும்‌ ஆற்றல்‌ மிக்கவன்‌.

மனித உள்ளங்கள்‌ மறைத்து வைத்திருப்பவை பற்றி நன்கறிந்தவன்‌.

கண்‌ சிமிட்டும்‌ நொடிகள்‌ பற்றியும்‌ அறிந்தவன்‌.

மரணத்தின்‌ பின்னால்‌ மனிதர்கள்‌, ஜின்கள்‌, ஏனைய உயிரினங்கள்‌ அனைத்தையும்‌ எழுப்பி, அவர்களின்‌ செயல்பாடுகள்‌ பற்றி விசாரிப்பதற்காக அவர்களை ஒன்று சேர்க்கும்‌ ஆற்றல்‌ பெற்றவன்‌.

அவனை அன்றி உலகில்‌ கற்பனையாக வழிபாடு செய்யப்படும்‌ விக்கிரகங்கள்‌, சிலைகள்‌, மனிதர்கள்‌, மண்ணறைகள்‌ பொய்யானதும்‌, தெய்வீகத்தன்மை அற்றவையுமாகும்‌. எனவே அவனே வணக்கத்திற்குத்‌ தகுதியானவன்‌; அவனை அன்றி வேறு தெய்வங்கள்‌ இல்லை.

வானங்கள்‌ மற்றும்‌ பூமியின்‌ இரட்சகன்‌ யார்‌ என்று (நபியே) நீர்‌ அவர்களிடம்‌ கேட்டு. (அவற்றின்‌ இரட்சகன்‌) அல்லாஹ்தான்‌ என்று கூறிவிடுங்கள்‌. இவனை விடுத்து வேறு பாதுகாவலர்களை நீங்கள்‌ எடுத்துக்‌ கொண்டீர்களா? என்று கேட்பீராக! அவர்கள்‌ தமக்கே எவ்வித நன்மையோ, தீமையோ செய்ய முடியாதவர்கள்‌. குருடனும்‌, பார்வை உள்ளவனும்‌ சமமானவர்களா? அல்லது இருள்களும்‌, ஒளியும்‌ சமமாகுமா? என்றும்‌, அல்லது அவர்கள்‌ அல்லாஹ்வுக்கு இணையான தெய்வங்களை ஆக்கிக்‌ கொண்டார்களா? அவர்கள்‌ அவனைப்‌ போன்று படைத்து அந்தப்படைப்பு அவர்களுக்கு (அறிய முடியாதவாறு) குழப்பமாகி விட்டதா? என்றும்‌ கேட்பீராக! அவர்களிடம்‌ அல்லாஹ்தான்‌ அனைத்தையும்‌ படைப்பவன்‌; தனித்தவனும்‌, அனைவரையும்‌ அடக்கி ஆள்பவனும்‌ என்று கூறுவீராக! (அர்ரஃத்‌: 16)

பல்வேறுபட்ட தெய்வங்கள்‌ சிறந்ததா? அல்லது தனித்தவனும்‌, அடக்கி ஆள்பவனுமாகிய அல்லாஹ்‌ சிறந்தவனா? (யூசுப்‌: 39) என்ற குர்‌ஆனிய வசனத்தினைச்‌ சரியாக நம்பிக்கை கொள்வதே அல்லாஹ்‌ ஒருவன்தான்‌ உண்மையாக வணங்கப்படவேண்டியவன்‌ என்ற நிலையை உருவாக்கும்‌.

அல்குர்‌ஆன்‌, அஸ்ஸுன்னாவைப்‌ படிக்கின்ற ஓர்‌ முஸ்லிம்‌ இவற்றை விட அதிகமான பண்புகளைக்‌ அங்கு காணமுடியும்‌. நாம்‌ அல்லாஹ்வின்‌ முக்கிய இலக்கணங்கள்‌ பற்றி இங்கு எடுத்தெழுதி இருக்கின்றோம்‌. அவை அவனது இலக்கணங்கள்‌ பற்றிய அறிவிற்கான வாயில்களாக அமைய வேண்டும்‌ என்பது எமது பிரார்த்தனையாகும்‌


அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ பற்றிய அறிமுகம்

அகிலங்களின்‌ படைப்பாளனாகிய அல்லாஹ்‌ ஒருவனே. அவன்‌ பல சிறப்புமிக்க அழகிய பெயர்களுக்கும்‌ பண்புகளுக்கும்‌ உரித்தானவனாக இருக்கின்றான்‌. அவை அவனது மகத்துவத்தையும்‌ கண்ணியத்தையும்‌ உயர்த்திக்‌ காட்டும்‌ ஓர்‌ அம்சமாக விளங்குகின்றன.

மனிதர்கள்‌ பலர்‌ பல சிறப்புப்‌ பெயர்கள்‌ கொண்டு அழைக்கப்படுவதையும்‌, சிலர்‌ தாழ்ந்த நிலையில்‌ உள்ள பெயர்கள்‌ கொண்டு அழைக்கப்படுவதையும்‌ காண்கின்றோம்‌.

ஆனால்‌ அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ என்பன அவ்வாறான எந்தக்‌ குறைபாடும்‌ அற்றதாகும்‌. மாறாக அவை அழகும்‌ பூரணத்துவமும்‌ நிறைந்ததாகும்‌.

அல்லாஹ்வுக்கு அழகிய பல திருநாமங்கள்‌ இருக்கின்றன. அவற்றைக்‌ கொண்டு அவனை நீங்கள்‌ அழையுங்கள்‌. (அல்‌அஃராஃப்‌: 180).

அல்லாஹ்‌ என்று அழையுங்கள்‌. அல்லது அர்ரஹ்மான்‌ என்று அழையுங்கள்‌. நீங்கள்‌ எவ்வாறு அழைத்த போதும்‌ அவனுக்கு அழகிய பல திருநாமங்கள்‌ இருக்கின்றன. (அல்‌ இஸ்ரா: வசனம்‌: 110).

வணக்கத்திற்குத்‌ தகுதியானவன்‌ அந்த அல்லாஹ்வைத்‌ தவிர வேறு யாரும்‌ இல்லை. அவனுக்கு அழகிய பல திருநாமங்கள்‌ இருக்கின்றன. (தாஹா: வசனம்‌: 08).

மேற்கண்ட வசனங்கள்‌ அல்லாஹ்வுக்குப்‌ பல பெயர்கள்‌ இருக்கின்றன என்றும்‌ அவை அனைத்தும்‌ அழகிய பெயர்கள்‌ என்றும்‌ குறிப்பிடுகின்றன. அல்லாஹ்‌ மகத்துவம்‌ நிறைந்த அழகிய பல பெயர்கள்‌, பண்புகளைக்‌ கொண்டு அவன்‌ தனித்து விளங்குவதுடன்‌, அவற்றை அவனது அருள்மறைக்‌ குர்‌ஆனிலும்‌, நபிமார்களில்‌ இறுதியான முஹம்மத்‌(ஸல்‌) அவர்கள்‌ மூலமும்‌ அறிவித்துத்‌ தந்துள்ளான்‌. இந்தக்‌ கோட்பாட்டை உறுதியாக நம்புவதை “தவ்ஹீதுல்‌ அஸ்மா வஸ்ஸிஃபாத்‌” எனக்‌ கூறப்படும்‌.

அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள்‌ இருக்கின்றன, அவற்றை (பொருள்‌ அறிந்து) மனனம்‌ செய்து கொள்வோர்‌ சுவர்க்கத்தில்‌ நுழைவார்‌ என நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (புகாரீ, 2531, 6843 முஸ்லிம்‌, 4835,4836).

புகாரீ‌, முஸ்லிம்‌, முஸ்னத்‌ அஹ்மத்‌ ஆகிய கிரந்தங்களில்‌ இடம்‌ பெறுற்றுள்ள மற்றோர்‌ அறிவிப்பில்‌:

“அல்லாஹ்‌ ஒற்றையானவன்‌. அவன்‌ ஒற்றையை விரும்புகின்றான்‌” என இடம்‌ பெற்றுள்ளது.

இவற்றை வெளிப்படையான பொருள்களில்‌ நம்புவதுதான்‌ ஸலஃபுகளின்‌ போக்காகும்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌. அஸ்மா வஸிஃபாத்‌ கோட்பாடு பற்றிய பகுதியில்‌ இது பற்றி விரிவாகத்‌ தரப்பட்டுள்ளது.

தவ்ஹீதின்‌ வகைகள்‌

அஸ்மா, ஸிஃபாத்‌ பற்றி விளக்கமாக அறிவதற்கு முன்னால்‌ ஓரிறைக்‌ கோட்பாடு பற்றியும்‌, அதன்‌ வகைகள்‌ பற்றியும்‌ சுருக்கமாக நோக்குவது பொருத்தமானதாகும்‌. அதன்‌ வகைகள்‌ பெரும்பாலான அறிஞர்களால்‌ மூன்றாக வகுத்து நோக்கப்படுகின்றது.

1) தவ்ஹீதுர்‌ ருபூபிய்யா
2) தவ்ஹீதுல்‌ உலூஹிய்யா (தவ்ஹீதுல்‌ இபாதா)
2) தவ்ஹீதுல்‌ அஸ்மா வஸ்ஸிஃபாத்‌

முதலாவது: தவ்ஹீதுர்‌ ருபூபிய்யா

“ருபூபிய்யா” என்னும்‌ வார்த்தையானது“ எஜமான்‌ “பராமரிப்பவன்‌” “இரட்சிப்பவன்‌” எனும்‌ பொருள்களைத்‌ தரும்‌ “ரப்‌” எனும்‌ அரபுப்‌ பதத்திலிருந்து பெறப்பட்டதாகும்‌.

அல்லாஹ்வை அவனது செயற்பாடுகளில்‌ ஓர்மைப்படுத்துவதுடன்‌, இப்பேரண்டத்தைப்‌ படைத்தவனும்‌, அதன்‌ அதிபதியும்‌, அதில்‌, தான்‌ விரும்பியவாறு நடந்து கொள்பவனும்‌, தனது நாட்டங்களை அவன்‌ விரும்பியவாறு நடைமுறைப்படுத்துபவனும்‌ அவனே என்று ஏற்றுக்‌ கொள்வதை அகீதா துறைசார்ந்த அறிஞர்கள்‌ “தவ்ஹீதுர்‌ ருபூபிய்யா” என அழைக்கின்றனர்‌.

“அல்லாஹ்வின்‌ ஆளுமைப்பண்புகளில்‌ அவனை ஒருமைப்படுத்துதல்‌” எனச்‌ சுருக்கமாகக்‌ கூறப்படும்‌. படைப்பது, அழிப்பது, காப்பது, உலகை நிர்வாகம்‌ செய்வது, அதில்‌ பாகுபாடின்றி அனைவருக்கும்‌ உணவளிப்பது, அனைத்துப்‌ படைப்பினங்களையும்‌ தனது பிரத்தியேகமான அருளால்‌ நிர்வகிப்பது, மரணிக்கச்‌ செய்தல்‌, உயிர்ப்பித்தல்‌ போன்ற அம்சங்களில்‌ அல்லாஹ்வுக்குப்‌ பிற படைப்பினங்களைப்‌ பங்காளர்களாக்காது அவனைத்‌ தனித்த இரட்சகனாக நம்புவதற்கு “தவ்ஹீத்‌ அர்ருபூபிய்யா” எனக்‌ கூறப்படுகின்றது.

மனித இயல்புகள்‌ பூரண தெய்வீகத்தன்மை உள்ள அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளும்‌ வகையிலும்‌, அவனை நிராகரிக்க முடியாதவாறும்‌ அவனால்‌ படைக்கப்பட்டிருக்கின்றன.

பிர்‌அவ்னும்‌, அவனது சகாக்களும்‌ மற்றும்‌ குறிப்பிட்ட சிலருமே இதனை உலகில்‌ ஏற்க வெளிப்படையாக மறுத்தனர்‌. இருப்பினும்‌ பிர்‌அவ்ன்‌ தனது உயிர்‌ பிரிக்கப்படுகின்ற போது அல்லாஹ்வை நம்பிக்கைகொள்வதாக அறிவித்தும்‌ அது பயனற்றுப்‌ போனது.

(நபியே!) நேரியவழி நடப்பவராக உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின்‌ இயற்கையான மார்க்கம்‌. இதன்‌ மீதே மனிதர்களை அவன்‌ இசைவாக்கி வைத்துள்ளான்‌. அல்லாஹ்வின்‌ படைப்பில்‌ எந்த மாற்றமும்‌ இல்லை. இதுவே நேரான மார்க்கம்‌. எனினும்‌ மனிதர்களில்‌ அதிகமானோர்‌ (இது பற்றி) அறியமாட்டார்கள்‌.(அர்ரூம்‌. வச: 30)

இயற்கை மாசுபடுத்தப்படாத குழந்தைகள்‌ பற்றி விளக்கிய நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌:

பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும்‌ இயற்கை மார்க்கத்தில்‌ (இஸ்லாத்தில்‌) தான்‌ பிறக்கின்றது. அதன்‌ பெற்றோர்களே அதனை யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ, நெருப்பு வணங்கியாகவோ மாற்றி விடுகின்றனர்‌ எனக்‌ கூறினார்கள்‌.
(நூல்கள்‌ : புகாரீ.1270,1271, முஸ்லிம்‌, 4808,4805)

படைப்பாளன்‌ ஒருவன்‌ இருப்பதை ஏற்றுக்‌ கொள்கின்ற மனோநிலையில்‌ தான்‌ மனிதர்கள்‌ உலகில்‌ பிறக்கின்றனர்‌. பின்னர்தான்‌ அந்தச்‌ சிந்தனையில்‌ மாற்றம்‌ ஏற்படுகின்றது என்பதை இந்த நபிமொழி விளக்குகின்றது. இது இன்றும்‌ பொய்ப்பிக்க முடியாத கூற்றாக விளங்குகின்றது.

அவன்தான்‌ உங்கள்‌ இரட்சகனாகிய அல்லாஹ்‌. வணங்கிவழிபடத்‌ தகுதியானவன்‌ அவனைத்தவிர வேறு யாரும்‌ இல்லை. அவன்‌ அனைத்துப்‌ பொருள்களையும்‌ படைத்தவன்‌. எனவே அவனையே நீங்கள்‌ வணங்கி வழிபடுங்கள்‌. அவன்‌ அனைத்துப்‌ பொருட்களினதும்‌ பாதுகாவலனாவான்‌.
(அல்‌அன்‌ஆம்‌: 102).

உங்களையும்‌, நீங்கள்‌ செய்கின்றவற்றையும்‌ (செயல்களையும்‌) அல்லாஹ்தான்‌ படைத்தான்‌.
(அஸ்ஸஃப்பாத்‌: 96)

இந்தச்‌ சமுதாயத்தில்‌ உள்ளவர்கள்‌ அனைவரும்‌ உனக்குப்‌ பயனளிப்பதற்காக ஒன்று சேர்ந்தாலும்‌ அல்லாஹ்‌ உனக்குச்‌ சாதகமாக எழுதியவற்றை கொண்டே அன்றி அவர்களால்‌ உனக்குப்‌ பயனளிக்க முடியாது. இந்தச்‌ சமுயாதத்தில்‌ உள்ளவர்கள்‌ அனைவரும்‌ ஒன்றிணைந்து உனக்கு எந்தத்‌ தீங்கிழைக்க நாடினாலும்‌ அல்லாஹ்‌ உனக்குப்‌ பாதகமாக எழுதியவற்றை கொண்டே அன்றி அவர்களால்‌ உனக்குத்‌ தீங்கிழைக்க முடியாது. பேனாக்கள்‌ உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள்‌ காய்த்து, விட்டன. நிச்சயமாக அல்லாஹ்‌ என்பவன்‌ சத்தியமானவன்‌. நிச்சயமாக அவன்‌ மரணித்தவர்களை உயிர்ப்பிப்பான்‌. நிச்சயமாக அவன்‌ அனைத்துப்‌ பொருள்கள்‌ மீதும்‌ ஆற்றல்‌ மிக்கவன்‌. நிச்சயமாக மறுமை வந்தே தீரும்‌. அதில்‌ எவ்விதச்‌ சந்தேகமும்‌ இல்லை. நிச்சயமாக அல்லாஹ்‌ மண்ணறைவாசிகளை (விசாரணைக்காக) எழுப்புவான்‌. (அல்ஹஜ்‌:6-7)

இவ்வாறு அல்லாஹ்வின்‌ தனித்தன்மையுடன்‌ தொடர்பான பல அம்சங்களை நம்பிக்கை கொள்வது “தவ்ஹிதுர்‌ ரூபூபிய்யா” எனக்‌ கூறப்படும்‌. இதில்‌ பிற படைப்புகளைக்‌ கூட்டுச்‌ சேர்ப்பது இணைவைப்பாகும்‌.

மக்கா வாழ்‌ காஃபிர்கள்‌ “இவ்வுலகைப்‌ படைத்தவன்‌, வானங்களில்‌ இருந்து மழை பொழிவிப்‌பவன்‌, அதிலிருந்து உணவளிப்பவன்‌ அல்லாஹ்தான்‌” என்று ஏற்றுக்‌ கொண்டாலும்‌ தமது வணக்க வழிபாடுகளில்‌ -தவ்ஹீதுல்‌ உலூஹிய்யாவில அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த காரணத்தால்‌ அல்லாஹ்‌ அவர்களைக்‌ காஃபிரகள்‌ என அறிவித்துள்ளான்‌.

வானங்களையும்‌, பூமியையும்‌ படைத்தவன்‌ யார்‌ என்று (நபியே) நீர்‌ அவர்களிடம்‌ கேட்டால்‌, அவர்கள்‌ நிச்சயமாக அல்லாஹ்தான்‌” என்று கூறுவார்கள்‌. புகழ்‌ அனைத்தும்‌ அல்லாஹ்வுக்கே உரித்தானது. எனினும்‌ அவர்களில்‌ பெரும்பாலோர்‌ (இது பற்றி) அறியமாட்டார்கள்‌ என்று நபியே நீர்‌ கூறுவீராக! (அஸ்ஸுமர்‌ : 38)

அவர்களைப்‌ படைத்தவன்‌ யார்‌ என்று (நபியே!) நீர்‌ அவர்களிடம்‌ கேட்டால்‌ நிச்சயமாக “அல்லாஹ்‌” தான்‌ எனப்‌ பதிலளித்துக்‌ கூறுவார்கள்‌. அவர்கள்‌ (இக்கோட்பாட்டைவிட்டு) எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்‌? (அஸ்ஸுக்ருப்: 87).

இவர்களை நோக்கி அல்லாஹ்வை நீங்கள்‌ நேரடியாக அழைத்தால்‌ என்ன? அல்லாஹ்வுக்கும்‌ உங்களுக்கும்‌ இடையில்‌ தரகர்களை ஏன்‌ ஏற்படுத்திக்‌ கொள்கின்றீர்கள்‌? மரணித்த மனிதர்களுக்காக ஏன்‌ நேர்ச்சை செய்கின்றீர்கள்‌? கற்களை, சிலைகளை, சிற்பங்களை, மரம்‌ மட்டைகளை ஏன்‌ வணங்குகின்றீர்கள்‌? அவற்றை ஏன்‌ பூஜிக்கின்றீர்கள்‌? நன்மை தீமைகளை அவற்றிடம்‌ ஏன்‌ ஆதரவு வைக்கின்றீர்கள்‌? எனக்‌ கேட்டால்‌ அவர்கள்‌ என்ன பதில்‌ கூறுவார்கள்‌ என்பதையும்‌ அல்லாஹ்‌ பின்வருமாறு கூறுகின்றான்‌:

அவற்றை, எமது முன்னோர்கள்‌ வணங்கக்‌ கண்டோம்‌
என்று கூறுவார்கள்‌. (அல்‌அன்பியா : 53)

நமது முன்னோர்களை நிச்சயமாக ஓர்‌ வழியில்‌ (செல்வதை) நாங்கள்‌ கண்டோம்‌, நாங்கள்‌ அவர்களின்‌ அடிச்சுவடுகளைப்‌ பின்பற்றிச்‌ செல்பவர்கள்‌ என்று கூறுவர்‌.
(அல்ஸுக்ருஃப்‌: 23 )

இது கலப்பு நம்பிக்கையுடன்‌ இறை நம்பிக்கையைச்‌ சுமந்த மனிதர்களிடம்‌ காணப்பட்ட பழைமைவாதமாகும்‌. அல்லாஹ்வை அவர்கள்‌ நம்பி இருந்தும்‌ தமது இணை தெய்வங்களை விட்டுக்‌ கொடுக்கத்‌ தயார்‌ நிலையில்‌ இருக்கவில்லை என்பதையே இது உணர்த்துகின்றது.

இரண்டாவது : தவ்ஹீத்‌ அல்‌ - உலூஹிய்யா

உண்மையாக வணங்கி வழிபடத்‌ தகுதியானவன்‌ அல்லாஹ்தான்‌ என்பதை உறுதியாக நம்புவதோடு அல்லாஹ்வின்‌ அடியார்களான மனிதர்கள்‌ தமது செயற்பாடுகளாலும்‌ எண்ணங்களாலும்‌ வணக்கவழிபாடுகள்‌ தொடர்பான நடவடிக்கைகளாலும்‌ அவனை ஓர்மைப்படுத்தி, தூய முறையில்‌ அவனை வணக்கத்திற்குரியவனாக்கிச்‌ செயல்படும்‌ இந்த நடைமுறை தான்‌ இஸ்லாமிய வழக்கில்‌ “தவ்ஹீத்‌ அல்‌- உலூஹிய்யா” அல்லது “தவ்ஹீதுல்‌ இபாதா” எனக்‌ கூறப்படுகிறது.

இந்தக்‌ கோட்பாட்டை உலக மனிதர்களில்‌ பெரும்பான்மையினர்‌ நிராகரித்ததன்‌ காரணமாக அவர்களது மனங்களில்‌ அந்தக்‌ கோட்பாட்டை விதைக்க அல்லாஹ்‌ தூதர்களை அவ்வப்போது அனுப்பி, வணக்கத்தில்‌ அவனைக்‌ கலப்பற்றவர்களாக, இணை கற்பிக்காதவர்களாக வணங்குமாறு கட்டளையிட்டான்‌.

தூதர்களின்‌ வரிசையில்‌ இறுதியாக வந்த முஹம்மத்‌ நபி (ஸல்‌) அவர்களும்‌ இந்தப்‌ போதனையைத்‌ தமது சமுதாயத்தவரிடம்‌ கொண்டு சென்றபோது பல எதிர்ப்புகளைச்‌ சந்தித்தார்கள்‌; காயப்படுத்தப்பட்டார்கள்‌; ஊர்விலக்கல்‌ செய்யப்பட்டார்கள்‌; இம்சிக்கப்பட்டார்கள்‌. “பைத்தியம்‌” “சூனியக்காரர்‌” “சூனியம்‌ செய்யப்பட்டவர்‌” “ஜோதிடக்காரர்‌”, “கவிஞர்‌” என்றெல்லாம்‌ நாகரிகமற்ற வார்த்தைகளால்‌ விமர்சிக்கப்பட்டார்கள்‌.

மக்கா காஃபிர்கள்‌ “ஹஜ்‌”, “உம்ரா”, “தவாஃப்‌” போன்ற கிரியைகளைச்‌ செய்தபோதிலும்‌, வானத்திலிருந்து மழை பொழிவிப்பவன்‌, பூமியில்‌ தானியங்களை முளைப்பிக்கின்றவன்‌ அல்லாஹ்தான்‌ என்று ஏற்றுக்‌ கொண்டிருந்தும்‌ வணக்கவழிபாடு, நேர்ச்சை செய்தல்‌, அறுத்துப்பலியிடுதல்‌ தேவைகளை வேண்டுதல்‌ போன்ற அல்லாஹ்வுக்குரிய வணக்க வழிபாடுகளில்‌ லாத்து, உஸ்ஸா, மனாத்‌, ஹுபல்‌, துல்கலஸா போன்ற குரைஷியரின்‌ பரம்பரை தெய்வங்களையும்‌, பிற்காலத்தில்‌ அரபுக்களிடம்‌ இறக்குமதி செய்யப்பட்ட நூஹ்‌ நபியின்‌ காலத்துச்‌ சிலைகளான வத்து, சுவா, யகூஸ்‌, யவூக்‌, நஸ்ர்‌ போன்ற தெய்வங்களையும்‌ அல்லாஹ்வுக்கு நிகரான இணை தெய்வங்களாக எடுத்து வழிபட்டு வந்தனர்‌. இதன்‌ காரணமாக அவர்கள்‌ “குஃப்பார்‌” (இறைநிராகரிப்பாளர்கள்‌) “முஷ்ரிகூன்‌” (இணைவைப்பாளர்கள்‌) என அழைக்கப்பட்டனர்‌.

அவனை (அல்லாஹ்வை) அன்றிப்‌ பாதுகாவலர்களை எடுத்துக்கொண்டோர்‌ “அல்லாஹ்வின்பால்‌ தம்மை நெருக்கி வைப்பார்கள்‌ என்பதற்காகவே தவிர நாம்‌ இவர்களை வணங்கவில்லை (எனக்‌ கூறுகின்றனர்‌). (ஸுமர்‌: வசனம்‌: 3)

அதாவது இந்த தெய்வங்கள்‌ அல்லாஹ்வின்‌ பக்கம்‌ தம்மை நெருக்கி வைக்கின்றன என்று அவர்கள்‌ நம்பினர்‌.

மக்கா காஃபிர்கள்‌ “தவாப்‌ செய்யும்‌ போது “லெப்பைக்‌
லாஷரீக்க லக்‌” உனக்கு வழிபட்டோம்‌; உனக்கு இணையாளர்‌ யாரும்‌ இல்லை எனக்‌ கூறுபவர்களாக இருந்தனர்‌. இவர்களை நோக்கி அல்லாஹ்வின்‌ தூதர்‌ அவர்கள்‌ இத்துடன்‌ போதுமாக்கிக்‌ கொள்ளுங்கள்‌; இத்துடன்‌ போதுமாக்கிக்‌ கொள்ளுங்கள்‌ (இல்லாத போது) உங்களுக்கு நாசம்தான்‌ எனக்‌ கூறுவார்கள்‌, இவர்களோ உனக்காக நீ சொந்தமாக வைத்திருக்கும்‌ ஓர்‌ தெய்வத்தையும்‌, அது உரிமையாக்கி வைத்திருக்கும்‌ மற்றோர்‌ இணை தெய்வத்தையும்‌ தவிர என இதன்‌ பின்னரும்‌ (இணை தெய்வங்களைத்‌ தரகர்களாக்கிக்‌) கூறுவார்கள்‌ என இப்னு அப்பாஸ்‌ (ரழி) அவர்கள்‌ அறிவிக்கின்றார்கள்‌. (முஸ்லிம்‌, 2032).

தற்காலத்தில்‌ தர்காக்களில்‌ அடங்கியுள்ள மனிதர்களை அழைத்தும்‌, நேர்ச்சைகள்‌ செய்தும்‌ அவ்லியா வழிபாட்டை ஆதரித்து புர்தா, மெளலிதுகள்‌ ஓதி கந்தூரி நடத்துவோரும்‌ மேற்கண்ட வாதங்களையே முன்வைக்கின்றனர்‌.

இம்மக்கள்‌ அல்லாஹ்வின்‌ திருநாமங்கள்‌, பண்புகள்‌, அவனது வல்லமைகள்‌ பற்றிய தெளிவான விளக்கமின்மை காரணமாகவே இவ்வாறான இணைவைப்பில்‌ வீழ்ந்திருக்கின்றனர்‌.

அன்றைய மக்காவாழ்‌ முஷ்ரிகுகள்‌ அல்லாஹ்வை அறிந்து தூய்மையாக வணங்க மறுத்தார்கள்‌. இன்றைய முஸ்லிம்களோ அறியாமை காரணமாக ஏகத்துவக் கலிமாவை ஏற்று, அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றார்கள்‌ என்பதுவே அன்றைய முஷ்ரிக்களுக்கும்‌ இன்றைய முஸ்லிம்களுக்கும்‌ இடையில்‌ காணப்படும்‌ வேறுபாடாகும்‌. அதனால்‌ இது
பற்றிய தெளிவு அவர்களிடம்‌ முன்வைக்கப்படுவது காலத்தின்‌ கட்டாயமாகும்‌.

மூன்றாவது வகை: தவ்ஹீத்‌ அஸ்மா, வஸ்ஸிஃபாத்‌

அல்குர்‌ஆனிலும்‌, ஆதாரப்‌ பூர்வமான ஹதீஸ்களிலும்‌ இடம்பெறுகின்ற அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌,
குணாதிசியங்கள்‌ அனைத்தையும்‌ அல்லாஹ்வின்‌ தகுதிக்கும்‌, அவனது கண்ணியத்திற்கும்‌ அமைவாக அல்லாஹ்வும்‌, அவனது தூதர்‌ முஹம்மத்‌ நபி (ஸல்‌) அவர்களும்‌ வர்ணித்திருப்பது போன்று, எவ்வித கூட்டுதல்‌ குறைத்தலுமின்றி, பொருள்‌ சிதைவின்றி, அவனது படைப்புகளின்‌ பண்புகளுக்கு ஒப்பிடாது, அவற்றின்‌ வெளிப்படையான பொருளில்‌ நிலைப்படுத்துவதையும்‌, அல்லாஹ்வுக்கு இருக்க முடியாத பெயர்கள்‌, பண்புகளை அல்லாஹ்வும்‌, அவனது தூதரும்‌ புறம்‌ தள்ளியது போன்று புறம்‌ தள்ளி நடப்பதையும்‌ அஹ்லுஸ்ஸுன்னா இமாம்களால்‌ தவ்ஹீதுல்‌ அஸ்மா வஸ்ஸிஃபாத்‌ என்று அழைக்கப்படுகின்றது.

இது முந்தைய பகுதிக்குள்‌ உள்ளடக்கப்பட்டிருப்பினும்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ கோட்பாடு விரிவாகத்‌ தெளிவுபடுத்தப்பட வேண்டிய பகுதியாகும்‌. இதில்‌ சரியான புரிதல்‌ இல்லாத காரணத்தால்தான்‌ பலர்‌ வழிகெட்டனர்‌. அவர்களுள்‌:

கத்ரியா, (அல்லாஹ்வின்‌ விதியை -கத்ரை- மறுப்போர்‌)

ஜபரிய்யா, (மனிதன்‌ தேர்வு, சுதந்திரம்‌, சுய விருப்பம்‌ இன்றிப்‌ படைக்கப்பட்டவன்‌, அல்லது செயல்கள்‌ புரிவதற்கு நிர்ப்‌பந்திக்கப்பட்டவன்‌, சுதந்திரம்‌ பறிக்கப்பட்டவன்‌ என வாதிடுவோர்‌. இது ஜஹமிய்யாக்களின்‌ சிந்தனையாகும்‌).

ஜஹ்மிய்யா (மேற்கண்ட பண்புகளை ஒன்றிணைத்திருப்பதுடன்‌, அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகளை நிராகரிப்போர்‌, அல்லது அஸ்மா ஸிஃபாத்தில்‌ ஜஹ்ம்‌ பின்‌ ஸஃப்வான்‌ என்பவனது கோட்பாட்டைச்‌ சரிகண்டோர்‌.)

கவாரிஜ்‌ (இஸ்லாமிய அரசுக்கு எதிராகக்‌ கிளர்ச்சி செய்வோர்‌)

“முர்ஜிஆ” (ஒருவர்‌ அல்லாஹ்வையும்‌, நம்பிக்கை தொடர்பான பல அம்சங்களையும்‌ ஈமான்‌ கொண்டால்‌ மட்டும்‌ போதுமானது, ஈமானுடன்‌ பாவம்‌ பாதிப்பதில்லை எனவாதிடுவோர்‌)

“முஃதஸிலா”(அஸ்மா, ஸிஃபாத்தை நிராகரித்து, வாஸில் பின்‌ அதா என்பவனின்‌ சிந்தனையைச்‌ சரிகண்டோர்‌, அல்லது தமது பகுத்தறிவை முதன்மைப்படுத்தி அல்குர்‌ஆன்‌, சுன்னாவை விளங்க, விளக்க முற்படுவோர்‌).

குல்லாபிய்யா, (ஸயீத்‌ பின்‌ குல்லாபின்‌ கோட்பாட்டை
பின்பற்றுவோர்‌)

“ராஃபிழா” (ஷீஆ) நபி (ஸல்‌) அவர்களின்‌ மரணத்தின்‌ பின்னால்‌ அலீ (ரழி) அவர்களே ஆட்சிக்கு முதல்‌ தகுதி பெற்றவர்‌ என்றும்‌, அவருடன்‌ தாம்‌ நம்பிக்கை கொள்கின்ற இன்னும்‌ பதினொரு இமாம்களும்‌ அதன்‌ பின்‌ ஆட்சிக்குத்‌ தகுதி பெற்றவர்கள்‌ என்றும்‌, அவர்கள்‌ அனைவரும்‌ தவறுக்கும்‌ மறதிக்கும்‌ அப்பாற்பட்டவர்கள்‌ என்றும்‌, கலீஃபாக்கள்‌ மதம்‌ மாறியோர்‌ என்றும்‌ நம்பி வழிப்படுவோர்‌)

“அஷாயிரா”(அஷ்‌அரிய்யா) (அல்லாஹ்வுக்கு ஏழு பண்புகள்‌ மட்டும்‌ இருப்பதாக நம்புவோர்‌, அல்லது இமாம்‌ அபுல்‌ ஹசன்‌ அஷ்‌அரியைப்‌ பின்பற்றுவோராகக்‌ கூறிக்‌ கொள்வோர்‌)

“மாத்ரூதிய்யா” (அபூ மன்சூர்‌ அல்மாத்ரூதி என்பவர்‌ முன்வைத்த அல்லாஹ்வுக்குரிய எட்டுப்‌ பண்புகள்‌ கோட்பாடு பற்றி நம்புவோர்‌) போன்ற முக்கியப்‌ பிரிவினர்‌ இங்கு மிக முக்கியமானவர்கள்‌. இவர்கள்‌ பற்றி வரும்‌ தொடர்களில்‌ விரிவாகப்‌ பார்க்க இருக்கின்றோம்‌.


அஸ்மா, ஸிஃபாத்‌ கோட்பாடும்‌ பிரிவுகளின்‌ நிலைப்பாடும்

நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக பாடம் படித்த ஸஹாபாக்களின் மத்திப மற்றும் இறுதி காலப்பகுதிகளில் அஸ்மா, ஸிஃபாத்தில் சறுகிய சிந்தனைகள் துளிர்விட ஆரம்பித்தாலும் ஸஹாபாக்கள் மூலமாக அவை முறியடிக்கப்பட்டன.

« أصول البدع أربع : الروافض ، والخوارج ، والقدرية ، والمرجئة ،
الشريعة للآجري – (1 / 24)

ராபிழாக்கள், கவாரிஜ்கள், கதரிய்யா, முர்ஜிய்யா ஆகிய நான்கு பிரிவினர்தாம் பித்அத்தின் அடிப்படைக் குழுக்களாகும்.

ஸஹாபாக்கள் மத்தியில் ‘அஸ்மா ஸிஃபாத்’ விஷயத்தில் எவ்வித தவறான அணுகுமுறைகளும் இருக்கவில்லை. அவர்களின் பிற்பட்ட காலத்தில்தான் அனைத்து பிரிவுகளும் தோற்றம் பெறத்தொடங்கின என்பதை இது உணர்த்துகின்றது

நபித்தோழர்களின் மரணத்தின் பின்னால் ஆட்சிக்கு வந்த பனு உமையாக்களின் இறுதிக்காலத்திலும், அப்பாஸியர் ஆட்சியிலும்தான் (இல்முல் கலாம்) எனப்படும் பகுத்தறிவைக் கொண்டு சான்றுகளை அணுகும் தர்க்கவியல் முறை உருவானது.

இதன் பின்னர் அஸ்மா, ஸிஃபாத் விவகாரத்தில் பல கோட்பாடுகளையும், சிந்தனைகளையும் உள்ளடக்கிய பிரிவுகள் தோற்றம் பெற்றன என்பது ஆய்வின் போது அறியமுடிகின்றது.

முதலாவது பிரிவினர்: அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விஷயத்தில் வந்துள்ள அல்குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் தகுதிக்கு அமைவாக, அவற்றில் கூட்டல், குறைத்தல், பொருள்களை சிதைத்தல், திரிபு செய்தல், முறைமை கற்பித்தல், உருவகப்படுத்தல் என்ற தன்மைகளுக்கு அப்பால் நின்று அவற்றின் வெளிப்படையான பொருளில் அந்தப் பெயர்கள், பண்புகளை நிலைப்படுத்துவோர். இவர்களை ஸலஃபுகள் (அகீதா விவகாரங்களில் ஸஹாபாக்களின் வழி நடப்போர்) என்ற பொருளில் அழைக்கின்றனர்.

ஸலஃபுகள் எனப்படுவோர் ஷரீஆவின் சான்றுகளை அணுகும் விதத்தில் குறிப்பாக நம்பிக்கை கோட்பாடுகளில் ஸஹாபாக்களையும் அவர்களின் வழி நடந்த ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய துறைசார் இமாம்களையும், அவர்களின் வழி நடப்போரையும் ஆய்விற்குப் பின் பின்பற்றும் பிரிவினர்தான் இன்று ஸலஃபிகள் என அடையாளப் படுத்தப்படுகின்றனர்.

ஸலஃபுகளின் சிந்தனையைப் பிரதிபலிக்கும் இப்பிரிவினர் அல்குர்ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் இடம் பெறும் அஸ்மா, ஸிஃபாத் (அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் சார்ந்த) வசனங்களை திரிவுபடுத்தாது, அதன் வெளிப்படையான கருத்தில் விளக்குவதுடன், தவறான விளக்கத்திலும் மூழ்காது, அவற்றிற்கு தவறான தோற்றமோ, வடிவமோ கற்பிக்காது, உயர்மிகு அல்லாஹ்வின் தகுதிக்கு அமைவானதாக அவற்றை விளக்குவதை வழியாகக் கொண்டனர்.

இவர்கள், அல்லாஹ்வை அறிமுகப்படுத்தும் விஷயத்தில் பௌதீகவியல் சார்ந்த அவனது அத்தாட்சிகளை புற ஆதாரங்களாக எடுத்துக் கொள்வது போன்று, பகுத்தறிவு சார்ந்த ஆதாரங்களையும் பயன்படுத்தி அல்லாஹ்வின் உள்ளமையை நிறுவினர். இருப்பினும் அகீதா விவகாரத்தில் முடிவைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை பகுத்தறிவுக்கு வழங்காது அதைப் புறம் தள்ளினார்கள்.

ஏனெனில், பகுத்தறிவானது -தக்லீஃப்- கட்டளையிடப்பட்டதை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு உட்பட்டதாகும். அதனால் பகுத்தறிவை மார்க்கத்தின் ஒரு நீதியரசராக ஏற்க முடியாது என முடிவு செய்தனர். ஏனெனில் பகுத்தறிவுக்கு சட்டத்தை இயற்றும் அதிகாரம் கொடுக்கப்பதானது வஹியின் அடிப்படையில் இருந்து தூரமாக்கவே வழி அமைக்கும் என்றும் அவர்கள் கண்டறிந்தனர். அதன் காரணமாக பகுத்தறிவை அகீதா தொடர்பான கருத்துக்களில் அவர்கள் ஏற்கவில்லை

கண்மூடித்தனமாக தனிமனிதர்களைப் பின்பற்றும் நவீன தக்லீத்வாதிகள் சிலர் நேர்வழி நடக்கும் ஸலஃபுகளை வழிகேட்டில் இருப்பவர்கள் போலவும், தாமே சுவனத்தின் வாரிசுகள் போலவும் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் செய்வது பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டாவது பிரிவினர்: ‘அஸ்மா, ஸிஃபாத்’ தொடர்பாக வந்துள்ள அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின் சான்றுகளை அதன் வெளிப்படையான பொருளில் கையாளும் இவர்கள், அவைகளை மனிதர்களின் பண்புகளுக்கு ஒப்பிட்டு விளக்குவர்.

உதாரணமாக கை, முகம் என இடம் பெறும் அல்லாஹ்வின் பண்புகளை மனிதர்களின் கரத்திற்கும், மனிதர்களின் முகத்திற்கும் ஒப்பிட்டு விளக்குகின்றனர். இதனால் இவர்கள் அல்லாஹ்வை அவனது தகைமைக்கு அமைவாக மதிக்கத் தவறியவர்களாக இருப்பதுடன், இறை நெறி தவறியவர்களாகவும் அல்லாஹ்வை அவனது படைப்பினங்களுக்கு ஒப்பிட்டவர்களாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இருந்தாலும் இவர்கள், அல்லாஹ்வின் யதார்த்தமும், மனிதர்களின் யதார்த்தமும் வேறுபட்டவை என்பதை ஒப்புக்கொள்கின்றனர். அதாவது: படைப்பாளனின் யதார்த்தமும் படைப்புக்களின் யதார்த்த நிலைகளும் வேறுபட்டிருப்பதால் படைப்பாளனின் பண்புகளும், அவனது படைப்புக்களின் பண்புகளும் வேறுபட்டே காணப்படுவது இயல்பாகும்.

படைப்பாளன், மற்றும் படைப்புக்கள் ஆகியவற்றின் யதார்த்தங்களுக்கிடையில் வேறுபாடு காணப்படுவதை அங்கீகரிப்பதன் மூலம் இவர்கள் தமக்குள் முரண்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை. அல்லாஹ்வின் பண்புகளான கை, முகம், பேச்சு போன்ற பண்புகள் படைப்பினங்களின் பண்புகளில் இருந்து வேறுபட்டே காணப்படும். மனித படைப்புக்களின் பண்புகள் அவற்றைப் போன்றவை எனக் கூறுவது அறியாமையின் உச்சகட்டமாகும்.

இவர்களைத்தான் அகீதா துறைசார் அறிஞர்கள் الممثلة ‘அல்முமஸ்ஸிலா’ படைப்பினங்களுக்கு நிகராக அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிப்போர்’ அல்லது ‘ஒப்பிட்டு நோக்குவோர்’ எனப் பெயரிட்டுள்ளதோடு, இந்த சிந்தனையானது மிகப்பொரும் வழிகேடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். நானும் அல்லாஹ், ‘நீயும் அல்லாஹ்’ என்ற அத்வைதக் கோட்பாட்டுக்கு வழிவகுத்த சித்தாந்தமாகவும் இது கொள்ளப்படுகின்றது.

وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ [الزمر : 67]

அவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதித்து நடக்கவில்லை. பூமிகள் அனைத்தும் மறுமையில் அவனது பிடிக்குள் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தால் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் பரிசுத்தமானவனும், உயர்ந்தவனும் ஆவான். (அஸ்ஸுமர்: 67)

மூன்றாவது பிரிவினர்: வெற்றுச் சிந்தனையுடன் அகீதாக் கோட்பாட்டை அறிய முற்படுவோர். ஆரம்ப காலத்தில் இவர்கள் அல்ஃபலாஸிஃபா (Philosophers) தத்துவவியலாளர்கள், தர்க்கவியலாளர்கள், அல்லது மெய்யியலாளர்கள் என்று வரையறுக்கப்பட்டு அறியப்பட்டனர்.

இவர்கள் தமக்குத்தாமே -ஹுகமா- தத்துவமேதைகள், ஞானிகள் என்று பெயர் சூடிக்கொண்டதோடு, இவர்களின் கருத்துக்களை அங்கீகரிக்க மறுத்தவர்களையும், குறைகண்டவர்களையும் ‘அல்அவாம்’ எதுவும் அறியாப் பாமரர்கள் எனவும் இகழ்ச்சியாக அழைத்தனர்.

இவர்கள் பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் போன்ற கிரேக்க தர்க்கவியல் மேதைகளின் கருத்துக்களால் உந்தப்பட்டதன் விளைவாகவே இந்நிலைக்கு ஆளாகினர்.

அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள் இவர்களை ஜதலிய்யூன்- தர்க்கவியலாளர்கள்- என அடையாளப்படுத்தி அழைத்தனர். இவர்கள், அல்லாஹ்வையும், அவனது பண்புகளையும், புலனுக்குத் தென்படாத மறைவான நம்பிக்கை கோட்பாடுகளையும் நம்புவதற்கு விவாதத்தையும் பகுத்தறிவையும் ஒரு கருவியாகக் கொண்டனர். அத்தோடு, ஸலஃபுக்கள் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளை அவற்றின் வெளிப்படையான பொருளில், இப்படித்தான் என்ற முறை குறிப்பிடாது நம்பிக்கை கொள்ள வேண்டும் எனக் கூறியதை வேதம் கொடுக்கப்பட்ட பாமரர்களைப் போன்று பொருள் அறிவின்றி நம்புவதுதான் ஸலஃபுகளின் வழியோ? என்று கிண்டலும் செய்தனர். தாம் அவ்வாறானவர்கள் அல்லர் என்றும், ஸலஃபுகளை விட அறிவில் நாமே மேலானவர்கள், தத்துவஞானிகள், மாமேதைகள் என்றும் வாதிட்டனர்.

نحن أهل العلم والحكمة இந்த அடிப்படையில்தான் இவர்கள் தம்மை ஹுகமா (ஞானிகள்) எனப் பெருமையாக அழைத்துக் கொண்டனர். இவர்கள் தமது வழிமுறை பற்றிக் குறிப்பிடுகின்றபோது طريقة الخلف أعلم وأحكم ‘பிற்காலத்தவரின் வழிமுறையானது அறிவார்ந்ததும், நுட்பமானதுமாகும்’ எனக் கூறி ஸலஃபுகளின் அறிவையும், அவர்கள் சென்ற வஹியின் வழியையும் கிண்டல் செய்தனர். இந்தப் பிரிவினரே கிரேக்க தர்க்கவியலாளர்கள் போன்று அல்லாஹ்வை காட்சிப் புலங்களால் நம்புவதை முதன்மைப்படுத்தினர்.

ஸலஃபுகளை கிண்டல் செய்யும் இவர்கள் போன்றோரின் உண்மைக்குப் புறம்பான போக்கு தவறானது என்பதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.

طَرِيقَة السَّلَف أَسْلَمَ وَطَرِيقَة الْخَلَف أَحْكَم ‘ஸலஃபுகளின் வழிமுறையானது ஈடேற்றமானதாகும். ஆனால், பிற்காலத்தவரின் வழிமுறையானது அறிவார்ந்ததும், நுட்பமானதுமாகும்’ என்ற கோட்பாட்டை முன்வைக்கும் கருத்தானது நேர்த்தியானது அல்ல.

… لِأَنَّهُ ظَنَّ أَنَّ طَرِيقَة السَّلَف مُجَرَّد الْإِيمَان بِأَلْفَاظِ الْقُرْآن وَالْحَدِيث مِنْ غَيْر فِقْه فِي ذَلِكَ ، وَأَنَّ طَرِيقَة الْخَلَف هِيَ اِسْتِخْرَاج مَعَانِي النُّصُوص الْمَصْرُوفَة عَنْ حَقَائِقهَا بِأَنْوَاعِ الْمَجَازَات ، فَجَمَعَ هَذَا الْقَائِل بَيْن الْجَهْل بِطَرِيقَةِ السَّلَف وَالدَّعْوَى فِي طَرِيقَة الْخَلَف ، وَلَيْسَ الْأَمْر كَمَا ظَنَّ … (فتح الباري لابن حجر – (منقول من الشاملة)

ஏனெனில் இப்படி நம்புபவன் ஸலஃபுகளின் வழி என்பது குர்ஆனிய சொற்களையும் ஹதீஸையும் அதன் விளக்கம் பற்றி அறியாது வெளிப்படையாக நம்பிக்கை கொள்வது என்றும் நம்புகின்றான். கலஃபுகளின் வழியானது யதார்த்தமான பொருளில் இருந்து பொருள் மாற்றப்பட்ட சான்றாதாரங்களை பல்வேறுபட்ட சிலேடையான வார்த்தைகளால் விளக்குவதாகும் என்றும் நம்புகின்றான். இவன் முன்னோர்களின் வழிமுறை பற்றிய அறிவீனம், மற்றும் கலஃபுகளின் (பின்வந்தோர்) வழிமுறையில் உள்ள வெற்றுவாதம் ஆகிய இரண்டு பண்புகளை ஒன்றிணைத்துள்ளான். ஆனால் அவன் தவறாக எண்ணிக் கொள்வது போல் அல்ல விஷயம்…

… بَلْ السَّلَف فِي غَايَة الْمَعْرِفَة بِمَا يَلِيق بِاَللَّهِ تَعَالَى ، وَفِي غَايَة التَّعْظِيم لَهُ وَالْخُضُوع لِأَمْرِهِ وَالتَّسْلِيم لِمُرَادِهِ ، وَلَيْسَ مَنْ سَلَكَ طَرِيق الْخَلَف وَاثِقًا بِأَنَّ الَّذِي يَتَأَوَّلهُ هُوَ الْمُرَاد وَلَا يُمْكِنهُ الْقَطْع بِصِحَّةِ تَأْوِيله (فتح الباري لابن حجر / (منقول من الشاملة)

மாற்றமாக, அல்லாஹ்வை அவனது தகுதிக்கு அமைவாக அறியும் விஷயத்தில் ஸலஃபுகள் உச்ச நிலையில் காணப்பட்டனர். அவனுக்கு மரியாதை செலுத்தி, அவனது கட்டளைக்கு அடிபணிந்து அவனது நோக்கத்திற்குரியவாறு அவனுக்கு கட்டுப்படுவதிலும் அவர்கள் உயர் நிலையில் இருந்தனர். (கலஃபுக்கள்) பின்வந்தோர் வழி நடப்போர் தமது விளக்கம்தான் நாடப்பட்ட கருத்து என்பதில் கூட உறுதி அற்றவர்களாகவும், தமது விளக்கம் சரியானதுதான் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாதவர்களாகவும் உள்ளனர். (ஃபத்ஹுல் பாரி)

கலஃபுகளின் அறியாமைதான் ஸலஃபுகளைப் பற்றிய தவறான இந்த புரிதலுக்கு காரணம் என கலஃபுகளில் ஒருவராக விளங்கும் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் சுட்டிக்காட்டி இருப்பது இங்கு சிந்திக்கப்பட வேண்டிய வரிகளாகும்.

قَالَ الشَّافِعِيّ رحمه الله : “ما فسد النَّاس إلا لما تركوا لسان العرب، واتبعوا لسان أرسطو ( مقدمة شرح العقيدة الطحاوية للحوالي )

அரபு மொழியை புறம் தள்ளிவிட்டு, அரிஸ்டாடலின் தத்துவத்தை பின்பற்றியதன் விளைவாகத்தான் மக்கள் வழிகெட்டுப்போனார்கள்’ என்ற இமாம் ‘ஷாஃபி (ரஹ்) அவர்களின் கூற்று சிந்திக்கத்தக்கதாகும்.

ஆரம்பகால அறிஞர்கள் பற்றி விமர்சனக் கருத்தை வெளியிடுகின்றபோது ‘ஸலஃபுகள் அரபுச் சொற்களின் கருத்துக்கள் மீது மாத்திரம் தங்கி இருப்போர் என்றும், அவர்கள் அகழ்ந்தெடுக்கும் திறன், ஆற்றல் இல்லாதவர்கள் என்றும் விமர்சிக்கும் போக்கை தற்கால அஷ்அரிய்யா அரபு மத்ரஸாக்களின் பாடநூல்களிலும், நவீனகால பகுத்தறிவுவாதிகளிடமும் பொதுவாகக் காண முடிகின்றது.

அஷ்அரிய்யா சிந்தனையுடைய அரபுக் கல்லூரிகள் பல அல்லாஹ்வைப் பற்றி சுத்த சூனியமாகவே இன்றுவரை போதித்து வருகின்றன என்பதை அவற்றின் பாடவிதானங்களில் இணைக்கப்பட்டுள்ள نور الظلام மற்றும் جوهرة التوحيد போன்ற நூல்கள் மூலமும், அந்தக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற மௌலவிகளின் குர்ஆன், மற்றும் ஹதீஸ் மொழியாக்கம், உரைகள், ஆக்கங்கள் மூலம் அறிய முடிகின்றது.

இந்தக் கோட்பாட்டாளர்கள் அஸ்மா ஸிஃபாத் பற்றி வந்துள்ள அல்குர்ஆன் மற்றும் ஹதீஸில் வந்துள்ள சான்றுகளை வெளிப்படையான கருத்தில் அணுகுவதைத் தவிர்த்து, தமது பகுத்தறிவால் கண்டுபிடித்துக் கொண்ட சொற்களை அஸ்மா, ஸிஃபாத்தில் புகுத்தி புதியதொரு கோட்பாட்டை உருவாக்கியுள்ள இவர்களின் நிலை சதுப்பு நிலத்தை தண்ணீரால் குழைத்த கதையாகி விட்டது.

உதாரணமாக அல்லாஹ்வை அவனது உயர்ந்த பெயராகிய ‘ الله’ என்ற பெயர் கொண்டு அழைப்பதற்குப் பதிலாக ‘العلة الفاعلة’ செயற்கைக் காரணி, அல்லது الفعال இயக்கச் சக்தி, அல்லது உலகை இயக்கும் வல்லமையுள்ள ஒரு சக்தி என்ற பொருளில் அழைத்தனர்.

அவ்வாறே, உற்பத்தி செய்த உலகுக்கு உற்பத்தியாளன் இருந்தாக வேண்டும் என்ற பொருளில் அல்லாஹ் என்பவன் واجب الوجود வாஜிபுல் உஜுத்- ‘உள்ளமையில் அவசியம் இருந்தாக வேண்டியவன்’ என்றனர்.

அவ்வாறே படைப்பாளன் என்ற பரந்த பொருளைத்தரும் خالق என்ற சொல்லைக் கொண்டு அழைக்காமல் செறிவற்ற பொருள் கொண்ட صانع உற்பத்தியாளன் என்ற சாதாரண சொல்லைப் பிரயோகித்தனர்.

ஆரம்பமானவன் என்பதைக் குறிக்கின்ற அல்குர்ஆனிலும், சுன்னாவிலும் வந்துள்ள الأول என்ற சொல்லை புறம் தள்ளிவிட்டு قديم பழமையானவன் என்ற பொருள் குன்றிய வார்த்தை கொண்டு அழைத்தனர்.

அவ்வாறே இவர்கள் அல்லாஹ்விற்கென யதார்த்தமான பேச்சு என்பது கிடையாது என்று வாதிட்டதுடன், அவனது திருநாமங்களில் ஒன்றாக இடம்பெறாத ’முதகல்லிம்’ பேசுபவன் என்ற பெயர்ச்சொல் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று என்றனர்.

குர்ஆன், சுன்னாவில் இடம் பெறாத இவ்வாறான பெயர்கள், பண்புகளையும் சரிகண்ட பல நூல்கள் இலங்கை போன்ற அரபுக் கல்லூரிகளில் இன்றும் போதிக்கப்படுவதானது, அகீதா துறையில் பின்னடைவையும், பிற்காலத்தில் தோன்றிய புதிய சிந்தனைப் பிரிவுகளின் கோட்பாடுகளில் தமது மூளைகளை அடகுவைத்து, தெளிவற்ற ஒரு பாடத் திட்டத்தினைக் கொண்டு கல்லூரி மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுவதையும் புலப்படுத்துகின்றது.

அல்லாஹ்வை நாம் எப்படி தெளிவற்றமுறையில் நம்பி இருக்கின்றோமோ அவ்வாறே தமது சீடர்களும் அறிந்து செல்ல வேண்டும் போன்ற நிலையானது மாணவர்களின் நம்பிக்கை கோட்பாட்டில் இளைக்கப்படுகின்ற பெரும் அநீதியாகும்.

இவர்களின் இந்த நிலைப்பாடானது ஆரம்ப காலங்களில் அஹ்லுல்கலாம் -தர்க்கவியலாளர்கள், முஃதஸிலாக்கள் போன்றவர்களின் நிலைப்பாடாக இருந்தாலும், பிற்காலத்தில்தான் அஷ்அரிய்யா சிந்தனையாளர்களிடம் இந்த சிந்தனை ஊடுருவி இருக்கின்றது. இவர்கள் சுன்னாவை நம்பகத்தன்மை அற்ற ஆதாரமாகவே இன்றும் நோக்குகின்றனர்.

நான்காவது பிரிவினர்: அஸ்மா, ஸிஃபாத் தொடர்பாக இடம் பெறும் வசனங்களுக்கு பொருள் தர மறுப்போர், அல்லது மௌனம் காப்போர்.

இவர்கள் مفوضة’ முஃபவ்விழா’ ஒப்படைப்பவர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் பார்வையில் அல்குர்ஆன், ஹதீஸ்களில் வரும் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் பற்றிய வசனங்கள் வெளிப்படையில் உள்ளவாறு பொருள் கொள்ள முடியாத மூல மந்திரமாகும்.

சுருக்கமாகக் கூறுவதானால், பிற மொழி அறிவில்லாதவர்கள் ஒரு மொழியை பொருள் அறியாது படிப்பது போன்று அஸ்மா, ஸிஃபாத்தை அணுக வேண்டும் என வாதிடுகின்றனர்.

அவை, இறை வசனங்கள் என்பதை ஈமான் கொள்கின்றோம், ஆனால் அவை பொருளற்ற சான்றுகள் தாம் என்பதே நமது நிலைப்பாடாகும் என்றும் வாதிடுகின்றனர்.

சட்டம் சார்ந்த வசனங்களை விளங்க முடியுமானால் இவற்றை விளங்குவதில் என்ன பிரச்சினை என வினாத் தொடுக்கப்பட்டால் அவை அல்லாஹ்வுடன் தொடர்புடையதாச்சே என்கின்றனர். இந்தப் போக்கு குர்ஆன் சிந்திப்பதற்காக இறக்கப்பட்டது என்று கூறும் வசனங்களுக்கு நேர்மாற்றமான போக்காகும்.

(كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ (ص : 29

(இது) வேதமாகும். அவர்கள் அதன் வசனங்களை சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் அதில் படிப்பினை பெறுவதற்காகவும் இதனை நாம் உம்மளவில் இறக்கி வைத்தோம். (ஸாத்: 29)

அல்லாஹ்வின் வசனங்கள் அனைத்தும் அவனது அடியார்கள் புரிந்து கொள்ளும் விதமாகவே அமைந்துள்ளன. அவற்றில் இடம் பெறும் அஸ்மா ஸிஃபாத் பற்றிய வசனங்களின் பொருள் புரியாது என வாதிடுவது அறியாமையாகும்.

படைப்பினங்கள் தொடர்பான வசனங்கள் புரிகின்றது, படைப்பாளன் பற்றிய வசனங்கள் புரியவில்லை என வாதிடும் இப்பிரிவினரின் நிலைப்பாடு ஆச்சரியமளிக்கின்றது.

ஐந்தாவது பிரிவினர்: அஸ்மா, ஸிஃபாத் தொடர்பான வசனங்கள் விஷயத்தில் எவ்வித விளக்கமும் கூறாது மௌனம் காப்போர்.

இவர்களுக்கும் முஃபவ்விழாக்களுக்கும் இடையில் காணப்படும் பிரதான வேறுபாடு என்னவெனில் முஃபவ்விழாக்கள் அஸ்மா, ஸிஃபாத் தொடர்பான வசனங்கள் விஷயத்தில் விளக்கம் தர முழுமையாக மறுப்பார்கள். இருந்தாலும், அஸ்மா, ஸிஃபாத்திற்கு வெளிப்படையான பொருள் கொள்ள வாய்ப்புள்ளது, அதற்கு மாற்றமாகவும் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது எனக் கூறுவார்கள்.

இவர்களது பார்வையில் அவை அல்லாஹ்வுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இது பற்றி நாம் எதையும் பேசமாட்டோம். இதுவே இவர்களின் நிலைப்பாடாகும்.

ஆறாம் பிரிவினர்: இது பற்றிய சிந்தனையே நமக்கு வேண்டாம். நம்மை நமது அமல்களுடன் விட்டுவிடுங்கள். எம்மைத் தொல்லைப்படுத்தாதீர்கள் எனக் கூறுவோர்.

அவை, எதுவாகவும் இருக்கட்டும். நாம் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விஷயத்தில் எதையும் விளங்க முற்படத் தயாரில்லை. குர்ஆனை ஓதுவோம், அல்லாஹ்வை வணங்குவோம். அதன் பொருள் பற்றி அலட்டிக் கொள்ளமாட்டோம். அது நமக்கு அவசியமும் இல்லை போன்ற பொறுப்பற்ற, கடமை உணர்வில்லாத நிலைப்பாடே இவர்களது கொள்கையாகும்.

இவர்கள் நபித்தோழர்களின் போக்கில் இருந்து மிகவும் தூரமானவர்கள் என்பதே நமது நிலைப்பாடாகும். ஏனெனில் ‘யூத மத குருக்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து முஹம்மதே! நிச்சயமாக அல்லாஹ் வானங்களை ஒரு விரலிலும், பூமிகளை ஒரு விரலிலும், மரங்களை ஒரு விரலிலும், நீரையும், ஈரலிப்பான மண்ணையும் ஒரு விரலிலும், ஏனைய படைப்புக்களை ஒரு விரலிலும் ஆக்கி நானே அரசன் எனக் கூறுவான் என்று எமது வேதத்தில் காண்கின்றோமே எனக் கூறியதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அதை உண்மைப்படுத்தும் முகமாக தனது கடவாய்ப் பற்கள் தெரிகின்றவரை சிரித்தார்கள் பின்னர்,

وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ [الزمر : 67]

அவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதித்து நடக்கவில்லை. பூமிகள் அனைத்தும் மறுமையில் அவனது கைப்பிடிக்குள் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தால் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் பரிசுத்தமானவன், மிக்க மேலானவன். (அஸ்ஸுமர்: 67) என்ற திருமறை வசனத்தை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நபித்தோழர்களிடம் ஓதிக் காண்பித்தார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

இங்கு நபித்தோழர்கள் இஸ்பஃ என்ற சொல்லின் பொருளை அல்லாஹ்வின் தகுதிக்கு அமைவாக நம்பினார்களே அன்றி அதற்கு மாற்றமாக இஸ்பஃ (விரல்) எப்படிப்பட்டது? மனிதனுக்கும் விரல் உண்டே! அதனால் விரல் என்பது அல்லாஹ்வுக்கு எப்படி இருக்க முடியும் என்ற கேள்வியையும் தவிர்த்துள்ளார்கள். (இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்களின் ”ரஹுல் அகீததிஸ் ஸஃபாரீனிய்யா’ எனும் நூலில் இருந்து சிறுமாற்றத்துடன் தரப்படுகின்றது)

நபி (ஸல்) அவர்கள் தெளிவான அரபு மொழியில்தான் நபித்தோழர்களோடு உரையாடினார்கள். அவற்றின் வெளிப்படையான பொருளில்தான் அவர்கள் அவற்றைப் புரிந்து கொண்டார்கள். இதற்கு ஏராளமான சான்றுகளை குர்ஆனிலும், ஹதீஸிலும் காணமுடியும்.

‘உங்கள் இரட்சகன் இரு கண் பார்வை அற்ற குருடன் இல்லை. மாற்றமாக, தஜ்ஜால் என்பவன்தான் ஒற்றைக்கண் குருடன்’ (புகாரி, முஸ்லிம்)

‘இரு மனிதர்களைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கின்றான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அது எப்படி என நபித்தோழர்கள் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த நபி (ஸல்) அவர்கள் ‘அவர்களில் ஒருவன் மற்றவனைப் போரில் கொலை செய்கின்றான். அதனால் அவன் சுவனத்தில் நுழைந்து விடுகின்றான். பின்னர் (கொலையாளியான) இவன் இஸ்லாத்தில் இணைகின்றான். அல்லாஹ் அவனை மன்னித்து விடுகின்றான். பின்னர் அவன் போரில் வீரமரணம் அடைகின்றான் என பதிலளித்தார்கள் (புகாரி, முஸ்லிம்)

‘சுவனவாதிகளில் இறுதியாக சுவனம் செல்லும் மனிதனைப் பார்த்து அல்லாஹ் சிரிப்பான்’ (புகாரி, முஸ்லிம்).

‘அல்லாஹ் அடியானுடன் நேரடியாகப் பேசுவான். அவனுக்கும், அவனது இரட்சகனுக்கும் இடையில் யாதொரு திரையோ, மொழி பெயர்ப்பாளர்களோ இருக்கமாட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

இவையும், இவை போன்ற நபி (ஸல்) அவர்களின் மற்றும் பல வார்த்தைகளையும் நபித்தோழர்கள் வெளிப்படையான பொருளில் புரிந்ததன் காரணமாகவே அல்லாஹ் சிரிப்பானா எனக் கேட்பதை விடுத்து, சம்மந்தப்பட்ட விஷயம் தொடர்பாக விளக்கம் கேட்டார்கள்.

அவர்கள் அல்லாஹ்வின் சிரிப்பு, கண், அவனது இருகரங்கள், அவனது வருகை போன்ற அவனுடன் தொடர்பான பண்புகளை நம்மைப் போன்று பொருள் மாற்றிப் புரிய வாய்ப்பே இல்லை என்பதை அவை பற்றிய அவர்களின் மௌனம் சிறந்த ஆதாரமாகும்.

மனிதர்களிடம் காணப்படும் இவ்வாறான உறுப்புக்கள், பண்புகள் அல்லாஹ்வின் பண்புகளாக அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவில் வர்ணிக்கப்பட்டு, பேசப்பட்டால் அவற்றை எவ்வித குறைகளும் அற்ற, படைப்புக்களின் பண்புகளுக்கு ஒப்பிடாது பாழடிக்காது, நிலைப்படுத்தாது அல்லாஹ்வின் பண்புகள் விஷயத்தில் புரிந்து கொள்ள வேண்டும். அதன் முறை பற்றிய கேள்வி என்பது பண்புகள் பற்றிய அறியாமையாகும். இந்த நடைமுறைக்கு மாற்றமானவர்களாக இப்பிரிவினர் காணப்படுகின்றனர்.


அஸ்மா, ஸிஃபாத்‌ பெயரால்‌ தோன்றிய பிரிவுகள்‌

அல்லாஹ்வுடைய, அஸ்மா, ஸிஃபாத் பகுதியை மறுத்துரைக்கும்‌ கொள்கை என்பது நபித்தோழர்களின்‌ இறுதிக்கால கட்டத்தில்‌ உருவாகிய வழிகெட்ட சிந்தனையாகும்‌ என்பதை முன்னர்‌ நாம்‌ குறிப்பிட்டுள்ளோம்‌.

இதற்கு மாற்று மதங்களில்‌ இருந்து இஸ்லாத்தில்‌ இணைந்தோர்‌, இஸ்லாத்தைச்‌ சிதைக்க உருவாக்கப்பட்டோர்‌, இஸ்லாத்தை அரையும்குறையுமாக விளங்கியோர்‌ போன்றவர்கள்‌ முக்கியக்‌ காரணிகளாகவும்‌ முன்னோடிகளாகவும்‌ விளங்கினர்‌.

இமாம்‌ ஆஜுர்ரீ (ரஹ்‌) அவர்கள்‌, அஸ்மா, ஸிஃபாத்தில்‌ மாற்றம்‌ செய்யும்‌ தலையான பித்‌அத்‌ பிரிவுகள்‌ பற்றி அவர்களது ஷரீஆ என்ற நூலில்‌ பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்‌.

ராஃபிழாக்கள்‌, கவாரிஜ்கள்‌, கத்ரிய்யா, முர்ஜிய்யா ஆகிய நான்கு பிரிவினர்தாம்‌ பித்‌அத்தின்‌ அடிப்படைக்‌ குழுக்களாகும்‌.

ஸஹாபாக்கள்‌ மத்தியில்‌ “அஸ்மா, ஸிஃபாத்‌” விஷயத்தில்‌ எவ்வித தவறான அணுகுமுறைகளும்‌ இருக்கவில்லை. அவர்களின்‌ பிற்பட்ட காலத்தில்தான்‌ அனைத்துப்‌ பிரிவுகளும்‌ தோற்றம்‌ பெறத்தொடங்கின என்பதை இது உணர்த்துகின்றது.

உதாரணமாக கத்ரை மறுத்துரைக்கும்‌ சிந்தனைப்‌ பிரிவான கத்ரிய்யாப்‌ பிரிவினரை எடுத்துக்‌ கொள்ளலாம்‌. அது ஈராக்கில்‌ இருந்து தோன்றிய பிரிவாகும்‌. இவர்களின்‌ காலத்தில்‌ நபித்தோழர்கள்‌ பலர்‌ உயிர்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்கள்‌. அவர்களில்‌ அப்துல்லாஹ்‌ பின்‌ உமர்‌ பின்‌ கத்தாப்‌ (ரழி) அவர்கள்‌ முக்கியமானவர்‌.

குலஃபாவுர்ராஷிதூன்களின்‌ இறுதிக்‌ காலத்தில்‌ கவாரிஜ்‌, மற்றும்‌ ஷீஆக்குழுக்கள்‌ தோன்றின. நபித்தோழர்களின்‌ இறுதிக்‌ காலத்தில்‌ கத்ரிய்யா சிந்தனையும்‌, அதைத்‌ தொடர்ந்து முர்ஜிய்யா சிந்தனையும்‌ தோற்றம்‌ பெற்றன. தாபியீன்களில்‌ முதியோர்களின்‌ இறுதிக்காலத்தில்‌ கத்ரிய்யா, முர்ஜிய்யா ஆகிய இரு சிந்தனைகளையும்‌ இணைத்துக்‌ கொண்டு ஜஹ்மிய்யாக்கள்‌ தோன்றினர்‌.

பாரஸீக, மற்றும்‌ ரோம்‌ நூல்கள்‌ அரபுக்கு மொழியாக்கம்‌ செய்யப்பட்ட போது பாரஸீகப்‌ பண்பாட்டுத்‌ தாக்கம்‌ சமூகத்தை ஆக்கிரமித்து. இந்தியாவில்‌ காணப்பட்ட தர்க்கவியல்‌ துறை நூல்கள்‌ பாரஸீகம்‌ வழியாகவும்‌, கிரேக்க நூல்கள்‌ ரோமாபுரி வழியாகவும்‌ முஸ்லிம்கள்‌ மத்தியில்‌ வந்து சேர்ந்தன. இதன்‌ மூலம்‌ நெருப்பு வணங்கிகளான மஜுஸிகளினதும்‌, புலக்காட்சியின்‌ அடிப்படையில்‌ நடக்கும்‌ கிரேக்கர்களின்‌ நாத்திகத் தத்துவமும்‌ முஸ்லிம்கள்‌ மத்தியில்‌ ஊடுருவின. எவ்வாறாயினும்‌ சிறிய இளம்‌ நபித்தோழர்களின்‌ இறுதிக்காலத்தில்தான்‌ முர்ஜியா சிந்தனையின்‌ உருவாக்கமாகும்‌.

ஹிஜ்ரி‌ 80களுக்குப் பின்னரே இவர்களின்‌ இந்தச்‌ சிந்தனைகள்‌ தோற்றம்‌ பெற்றன என்று சிலர்‌ அடையாளப்படுத்துகின்றனர்‌.

இப்படி வெளிப்பட்ட சிந்தனைகளையும்‌ சிறந்த நூற்றாண்டில்‌ வாழ்ந்தவர்களின்‌ சிந்தனைகளையும்‌ ஒப்பிட்டு, சிறந்த நூற்றாண்டு மக்களான ஸஹாபாக்களின்‌ சிந்தனை சிறந்தது என்ற முடிவிற்கு அக்காலத்தவர்‌ வந்தனர்‌.

(الدرر السنية என்ற இணையதளத்தில்‌ இருந்து பெறப்பட்டது.)

முர்ஜிஆ

சொல்‌ விளக்கம்‌;

முர்ஜிஆ என்ற சொல்‌ இர்ஜாஃ என்ற அடிச்சொல்லில்‌ இருந்து பிறந்ததாகும்‌. அதற்கு தாமதித்தல்‌, பிற்படுத்துதல்‌ போன்ற பொருள்‌ கொள்ளப்படும்‌. இதன்படி முர்ஜிஆ என்பதற்குப்‌ பிற்படுத்துவோர்‌ என்ற பொருள்‌ தரப்படுகின்றது.

அஷ்ஷுஅரா அத்தியாயத்தில்‌ “அர்ஜிஹ்‌” என்ற சொல்‌ 36வது வசனமாக இடம்‌ பெறுகின்றது. அதற்கு வழங்கப்படுகின்ற பிற்படுத்தல்‌ என்ற பொருள்‌ தரும்‌ சொல்லைக்‌ கொண்டு இந்தப்‌ பிரிவினர்‌ அறிமுகப்படுத்தப்படுகின்றனர்‌.

தோற்றப்‌ பின்னணி:

முர்ஜிஆ சிந்தனைக்கு நிறுவனர்கள்‌ கிடையாது. அது வெறும்‌ தத்துவக்கோட்பாடாகும்‌. கவாரிஜ்கள்‌, முஃதஸிலாக்கள்‌ போன்றோரின்‌ கடும்‌ போக்குச்‌ சிந்தனை இவர்களின்‌ தோற்றத்திற்கு வழியமைத்தது எனலாம்‌.

ஷரீஆவின்‌ கண்ணோட்டத்தில்‌:

உலகில்‌ ஒருவர்‌ முஸ்லிமாக இருந்து கொண்டு பெரும்பாவம் செய்தோர்‌ நிராகரிப்பாளர்கள்‌ என்று கவாரிஜ்கள்‌ குறிப்பிட்ட போது, பெரும்பாவம்‌ செய்பவன்‌ குப்ர்‌, இறை மறுப்பு ஆகிய இரு நிலைகளுக்குமிடையில்‌ உள்ள ஓர்‌ நிலையில்‌ இருப்பான்‌ என்று முஃதஸிலாக்கள்‌ குறிப்பிட்டனர்‌.

பெரும்பாவம்‌ செய்தோர்‌ மறுமையில்‌ நிரந்தர நரகில்‌ இருப்பார்கள்‌ என இவ்விரு சாராரும்‌ முடிவாகக்‌ குறிப்பிடுகின்றனர்‌. இந்தக்‌ போக்கு சமகாலத்தில்‌ முர்ஜியா சித்தாந்தக்‌ கோட்பாட்டிற்கு வழிகோலியது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஓர்‌ அம்சத்தை வெளிப்படையாக நம்பிக்கை கொள்பவரை முஃமினாகவே நோக்க வேண்டும்‌, அவனைப்‌ பாவியாக நோக்கலாது, ஈமான்‌ என்ற நம்பிக்கை மட்டும்‌ கொண்ட நிலையில்‌ ஒருவர்‌ பாவம்‌ செய்வது தவறில்லை. அதனால்‌ அதற்கு எவ்வித பாதிப்பும்‌ ஏற்படாது என்ற எதிர்மாறான சிந்தனைகளை முர்ஜியாக்கள்‌ முன்வைத்தனர்‌.

இதனால்‌ அபூதாலிப்‌ போன்றவர்களும்‌ முஃமின்கள்‌ என்ற நிலைக்குள்ளானார்கள்‌.

ஆரம்ப நூற்றாண்டுகளில்‌ வாழ்ந்த முர்ஜிஆக்கள்‌ அலீ (ரழி) மற்றும்‌ உஸ்மான்‌ (ரழி) ஆகியோர்‌ விவகாரத்தில்‌ எதுவிதத்‌ தீர்ப்பும்‌ கூறாது தாமதித்ததை இர்ஜா அல்லது முர்ஜிஆ என அறிஞர்களால்‌ அழைக்கப்பட்டதாக இவர்கள்‌ பற்றிய வரலாற்று ஆய்வுகள்‌ குறிப்பிட்ட போதும்‌ அது அங்கீகரிக்க முடியாத ஓர்‌ கருத்தாகும்‌.

ஏனெனில்‌ அலீ (ரழி) அவர்களுக்குப்‌ பிற்பட்ட காலங்களில்‌ ஈமான்‌ என்பது வார்த்தையால்‌ மொழிவது மட்டுமே என்றும்‌, அமல்‌ செய்வது அவசியமற்றது என்ற கருத்தும்‌ பரவியது.

பெரும்‌ பாவம்‌ செய்வோர்‌ காஃபிர்கள்‌ என்ற கவாரிஜ்களின்‌ கடும்‌ போக்கு இந்தப்‌ பிரிவினரைத்‌ தோற்றுவித்ததாகச்‌ சிலர்‌ குறிப்பிடுவது இங்கு கவனத்தில்‌ கொள்ள வேண்டியதாகும்‌.

முர்ஜிஆ சிந்தனை கவாரிஜ்களின்‌ தோற்றத்தின்‌ பின்னரான சிந்தனை என்பதை இது உணர்த்துகின்றது.

புகஹாக்கள்‌ என்போர்‌ ஈமான்‌ என்பது வாய்மொழிச்‌ சொல்‌ சார்ந்ததுதானே அன்றி, அது செயல்‌ சார்ந்த ஒன்றல்ல என்று வாதிட்டனர்‌.

அமல்கள்‌ ஈமானில்‌ ஓர்‌ அங்கம்‌ என்ற நிலையில்‌ இதுவரை நம்பிக்கை கொள்ளப்பட்டு வந்த நிலையில்‌ அமல்கள்‌ என்பது கூடுதல்‌, குறைதல்‌ என்ற தன்மைக்கு அப்பாற்பட்டவை என்ற புதிய சித்தாந்தம்‌ இஸ்லாமிய நம்பிக்கைச்‌ சிந்தனையில்‌ சர்ச்சையைத்‌ தோற்றுவித்த முதலாவது புதிய சித்தாந்தம்‌ என வர்ணிக்க முடியும்‌.

இதன்‌ பின்னர்தான்‌ ஈமான்‌ என்பது அல்லாஹ்வைப்‌ பற்றி ஒருவர்‌ மனதால்‌ அறிவது என்ற மற்றோரு புதுச்‌ சிந்தனை ஜஹமிய்யாக்களால்‌ முன்வைக்கப்பட்டது. இது அபூதாலிப்‌, ஃபிர்‌அவ்ன்‌ போன்ற இறை மறுப்பாளர்களை முஃமின்‌ என்று சொல்லாமல்‌ சொல்கின்றது.

இவர்களைத்‌ தழுவியே கர்ராமிய்யாக்கள்‌ என்போர்‌ ஈமான்‌ என்பது நாவினால்‌ மொழிந்தால்‌ மட்டும்‌ போதுமானது என்ற கோட்பாட்டை முன்வைத்தனர்‌.

யஹ்யா பின்‌ ௭ஃமர்‌ என்பவர்‌ இவ்வாறு குறிப்பிடுகின்றார்‌:

பஸராவில்‌ கத்ரை மறுத்துப்‌ பேசியவன்‌ மஃபத்‌ அல்ஜுஹனீ என்பவன்தான்‌. நானும்‌, ஹுமைத்‌ பின்‌ அப்திர்ரஹ்மான்‌ அல்ஹிம்யரி என்பவரும்‌ ஹஜ்ஜுக்காகச்‌ சென்றிருந்தோம்‌. நபித்தோழர்களில்‌ யாராவது ஒருவரைச்‌ சந்தித்து, அவரிடம்‌ இவர்கள்‌ கத்ரில்‌ கூறுவது பற்றி விசாரித்தறிந்தால்‌ என்ன என்று எங்களுக்குள்‌ பேசிக்‌ கொண்டோம்‌. அந்தத்‌ தருணத்தில்‌ அப்துல்லாஹ்‌ பின்‌ உமர்‌ பின்‌ கத்தாப்‌ (ரழி) அவர்களைப்‌ பள்ளியினுள்‌ காண நேர்ந்தது. அவரை நானும்‌ என்‌ நண்பரும்‌ வலதும்‌ இடதுமாகச்‌ சுற்றி நின்றோம்‌. என்‌ நண்பர்‌ என்னிடம்‌ பேச்சைச்‌ சாட்டியுள்ளார்‌ என நினைத்த நான்‌, உடனே அபூஅப்திர்ரஹ்மான்‌ (இப்னு உமரின்‌ புனைப்பெயர்‌) அவர்களே! எங்கள்‌ மத்தியில்‌ ஓர்‌ பிரிவினர்‌ தோன்றியுள்ளனர்‌. அவர்கள்‌ குர்‌ஆனை ஒதுகின்றார்கள்‌. அறிவு ஆராய்ச்சியில்‌ அதிகப்படியான ஈடுபாடு காட்டுகின்றார்கள்‌. இவர்கள்‌ இறைவிதி (கத்ர்‌) என்பது இல்லை. ஓர்‌ நிகழ்வு நடந்ததும்தான்‌ அல்லாஹ்‌ அது பற்றி அறிகின்றான்‌ என்று நம்புகின்றனர்‌ எனக்‌ கூறினார்‌. இதைக்கேட்ட இப்னு உமர்‌ (ரழி) அவர்கள்‌ அவர்களில்‌ ஒருவரிடம்‌ உஹுது மலை அளவு தங்கம்‌ இருந்து அதைச்‌ செலவு செய்தாலும்‌ அவர்‌ கத்ரை நம்பிக்கை கொள்கின்ற வரை அவரிடம்‌ இருந்து அல்லாஹ்‌ அதை அங்கீகரிக்கமாட்டான்‌ என்று கூறிவிட்டு, ஈமானின்‌ முக்கிய அம்சங்களில்‌ நன்மை, தீமை, என்பது அவனது விதிப்படி நடக்கின்றது என்று நம்புவதாகும் என்ற நபிமொழிக்கு இது மாற்றமான சிந்தனையாகும்‌. எனவே அவர்களை நீங்கள்‌ சந்தித்தால்‌ இப்னு உமர்‌ உங்களின்‌ சகவாசத்தில்‌ இருந்து விலகிக்‌ கொண்டார்‌ என்றும்‌, அவர்கள்‌ என்னில்‌ இருந்து விலகியவர்கள்‌ என்றும்‌ அறிவித்து விடுங்கள்‌ எனப்‌ போதனை செய்தார்கள்‌. (முஸ்லிம்‌ : 09)

இந்த ஜஹ்மிய்யாக்கள்தாம்‌ பிற்காலத்தில்‌ கத்ரியாக்கள்‌ என அழைக்கப்பட்டனர்‌. அறிஞர்கள்‌ குறிப்பிடும்‌ முக்கிய நான்கு பிரிவுகளில்‌ கத்ரிய்யாக்கள்‌ என்போர்‌ ஓர்‌ பிரிவினராவர்‌.

நேர்வழி நடந்த கலீஃபாக்களான அபூபக்கர்‌, உமர்‌ (ரழி) ஆகிய இருவரின்‌ காலத்தில்‌ கவாரிஜ்‌, ஷீஆ, கத்ரிய்யா ஆகிய பிரிவுகள்‌ தோற்றம்‌ பெறவில்லை என்றும்‌, அவை இறுதி இரண்டு கலீஃபாக்களின்‌ காலத்திலும்‌, நபித்தோழர்களின்‌ இறுதிக்‌ காலத்திலும்தான்‌ தோன்றின என்றும்‌ அறிஞர்கள்‌ சுட்டிக்காட்டுகின்றனர்‌.

மார்க்க அடிப்படைகள்‌ தொடர்பான பித்‌அத்‌ பற்றிய தொகுப்பாக்கம்‌ முதல்‌ இரண்டு கலீஃபாக்கள்‌ காலத்திலும்‌ இடம்‌ பெறவில்லை என இமாம்‌ இப்னு ஹஜர்‌ அவர்கள்‌ (ஃபத்ஹுல்‌ பாரி) குறிப்பிடுவதைப்‌ பார்க்கின்ற போது அகீதாவிற்கு முரணான வழிதவறிய சிந்தனைப்‌ போக்குகள்‌ ஹிஜ்ரி 35ற்குப்‌ பின்னர்‌ தான்‌ தோற்றம்‌ பெறத்‌ தொடங்கியுள்ளன என்ற முடிவிற்கு வரமுடியும்‌.

அதனால்தான்‌ கவாரிஜ்‌, முஃதஸிலா, ஜஹ்மிய்யா (கத்ரிய்யா, ஜப்ரிய்யா)), ஷீஆ ஆகிய நான்கு பிரிவுகளும்‌ நபித்தோழர்களின்‌ இறுதிக்‌ காலத்தில்‌ தோற்றம்‌ பெற்ற முக்கியப்‌ பிரிவுகளாக அல்பக்தாதி அவர்களால்‌ அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்த நான்கில்‌ இருந்தும்‌ பல்வேறு கிளைப்‌ பிரிவுகள்‌ தோன்றியுள்ளன.

முஃதஸிலா; 

இவர்கள்‌ முதலாம்‌ நூற்றாண்டின்‌ ஆரம்பக்காலத்தில்‌ தோன்றினார்கள்‌. இவர்களின்‌ சிந்தனை கவாரிஜ்களின்‌ சிந்தனையின்‌ பரிணாமம்‌ என்றே கூறப்படுகின்றது.

கவாரிஜ்‌ பெரும்பாவம்‌ செய்தோர்‌ இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள்‌ மறுமையில்‌ நிரந்தர நரகில்‌ நிரந்தரமாக இருப்பார்கள்‌ என்று கூறிட, முஃதஸிலாக்களோ, இல்லை இல்லை பெரும்‌ பாவம்‌ செய்வோர்‌ குஃப்ர்‌, இஸ்லாம்‌ என்ற இரு நிலைகளுக்கும்‌ இடையில்‌ கணிக்கப்படுவர்‌ ஆனால்‌ மறுமையில்‌ நிரந்தர நரகில்‌ நுழைவார்கள்‌ என்று கூறினர்‌.

இதற்கான காரணம்‌ முஸ்லிம்கள்‌ விஷயத்தில்‌ இறங்கிய குர்‌ஆன்‌ வசனங்களையும்‌, காஃபிர்கள்‌ பற்றிய வசனங்களையும்‌ பெரும்பாவம்‌ செய்தோர்‌ விஷயத்தில்‌ நடைமுறைப்படுத்த முடியாது என்பதனாலாகும்‌ எனக்‌ கூறினர்‌.

பெரும்‌ பாவம்‌ செய்தோர்‌ மறுமையில்‌ நரகத்தில்‌ இருப்பார்கள்‌ என்பதில்‌ இவ்விரு பிரிவினரும்‌ உடன்படுகின்றனர்‌ என்பது பற்றி முன்னர்‌ சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இக்குழுவினர்‌ அல்லாஹ்வின்‌ பேச்சு, மறுமையில்‌ அவனைப்‌ பார்த்தல்‌ போன்ற அம்சங்களை மறுத்துரைத்ததோடு, குர்‌ஆனிய வசனங்கள்‌ பகுத்தறிவிற்கு முரண்படுவதாகக்‌ காரணம்‌ காட்டி:

பாவங்கள்‌ மன்னிக்கப்பட்டவர்களாக நரகில்‌ இருந்து முஃமின்கள்‌ வெளியேறுதல்‌,

பாவிகளுக்குரிய நபி (ஸல்‌) அவர்களின்‌ பரிந்துரை,

சூனியம்‌, மற்றும்‌ அது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள்‌,

ஹவ்ளுல்‌ கவ்ஸர்‌ பற்றி வந்துள்ள ஹதீஸ்கள்‌,

அல்லாஹ்வை மறுமையில்‌ காணுதல்‌,

அகீதா அம்சங்களில்‌ ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்படும்‌ ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்கள்‌ போன்ற பல விஷயங்களை நிராகரித்தனர்‌.

புதிய சிந்தனையின்‌ புது முகங்கள்‌

நபி (ஸல்‌) அவர்களின்‌ மரணத்தின் பின்னர்‌ பொய்‌ நபிமார்கள்‌, மற்றும்‌ நபியின்‌ பெயரில்‌ ஹதீஸ்கள்‌ கூறி பொய்‌ உரைப்போர்‌, பொய்க்கதைகள்‌ கூறுவோர்‌, கொள்கை ஓன்றை உருவாக்கி அதற்காகப்‌ பொய்யுரைப்போர்‌ எனப்‌ பலர்‌ தோன்றி மறைந்தனர்‌.

இவர்களில்‌ சான்றுகளைக்‌ கொண்டு வழிகெட்டவர்களான கவாரிஜ்‌, முஃதஸிலா, ஜஹ்மிய்யா, (கத்ரிய்யா, முர்ஜிஆ), அஹ்லுல்கலாம்‌, ஷீஆ (ரவாஃபிழ்‌) பிரிவுகள்‌ முக்கியமானவையாகும்‌.

இத்தகையோரில்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ நிராகரிப்பு வழிகேட்டில்‌ ஊறித்‌ திழைத்தவர்கள்‌ பற்றிய சுருக்கமான பார்வைதான்‌ இங்கு தரப்படுகின்றது.

ஜஃத்‌ பின்‌ திர்ஹம்‌: 

இந்த ஜஃத்‌-தான்‌ மூசா நபியுடன்‌ அல்லாஹ்‌ பேசவில்லை என்ற கருத்தை முதன்முதலில்‌ பரப்பினான்‌. அதன்‌ காரணமாக ஓர்‌ ஹஜ்ஜுப்‌ பெருநாள்‌ தினத்தில்‌ உமய்யா ஆட்சியாளர்‌ மர்வானின்‌ ஆளுநர்களுள்‌ ஒருவராக இருந்த காலித்‌ பின்‌ அப்தில்லாஹ்‌ அல்குஸரி என்பவரால்‌ ஹிஜ்ரி 120 இற்குப்‌ பிறகு சிரத்தசேதம்‌ செய்யப்பட்டான்‌ என்று வரலாற்றில்‌ சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஜஃத்‌ பின்‌ திர்ஹம்‌ பற்றி இமாம்‌ இப்னு ஹஜர்‌ அல்‌ அஸ்கலானி அவர்கள்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்‌.

அவன்‌ பித்‌அத்வாதியும்‌, வழிகேடனும்‌ ஆவான்‌. அல்லாஹ்‌ இப்ராஹீம்‌ நபியை நண்பனாக எடுக்கவில்லை, மூசா நபியுடன்‌ அவன்‌ பேசவும்‌ இல்லை என்று எண்ணியவன்‌. அதனால்‌ அவன்‌ ஈராக்கில்‌ ஓர்‌ ஹஜ்ஜுப்‌ பெருநாள்‌ தினத்தில்‌ கொலை செய்யப்பட்ட சம்பவம்‌ வரலாற்றில்‌ பிரபல்யமாகப்‌ பேசப்படுகின்றது.

இப்படிப்பட்ட ஜஃதுதான்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளை நிராகரிக்கின்ற கூற்றை இஸ்லாமிய உலகில்‌ முதன்‌ முதலில்‌ பரப்பினான்‌.

ஜஹம்‌ பின்‌ ஸஃப்வான்‌:

இவன்‌ ஜஃத்‌ பின்‌ திர்ஹமின்‌ மாணவனாவான்‌. அல்ஹாரிஸ்‌ பின்‌ ஷுரைஹ்‌ என்பவருடன்‌ இணைந்து ஹிஜ்ரி 28ல்‌ பனூ உமய்யாக்களுக்கு எதிராகக்‌ கிளர்ச்சி செய்தான்‌. இந்த ஜஹ்ம்‌ அல்லாஹ்வின்‌ அனைத்துப்‌ பண்புகளையும்‌ நிராகரிப்பவனாகவும்‌, முர்ஜியாக்களில்‌ ஒருவனாகவும்‌ இருந்தான்‌.

அதாவது ஈமான்‌ என்பது இதயத்தில்‌ உள்ள நம்பிக்கைதானே அன்றி, அதற்குச்‌ செயற்பாடுகள்‌ அவசியமற்றதாகும்‌. பாவம்‌ செய்வது ஈமானில்‌ குறைவை உண்டு பண்ணாது; பாவம்‌ ஈமானுக்கு எதிரானதும்‌ அல்ல” என்ற முர்ஜியாக்களின்‌ கொள்கை பரப்புச்‌ செயலாளராகவும்‌ இருந்தான்‌.

தர்க்கவியலில்‌ புலமை பெற்று விளங்கிய இந்த ஜஹ்முக்கு மார்க்க அறிவில்‌ ஆழம்‌ இருக்கவில்லை என்பதே உண்மை.

காளைமாடு வணங்கிகளான இந்தியர்கள்‌ சிலர்‌ இந்த ஜஹ்மைச்‌ சந்தித்து நீ அல்லாஹ்வைக்‌ கண்டாயா?அவனைத்‌ தொட்டுப் பார்த்திருக்கின்றாயா? அவனை நுகர்ந்துணர்ந்ததுண்டா? எனப்‌ பல கேள்விகள்‌ கேட்ட போது விடையளிக்க முடியாது, வாயடைத்துப்‌ போன ஜஹம்‌ நாற்பது நாள்கள்‌ தலைமறைவாக இருந்தான்‌. பின்னர்‌ அவர்கள்‌ மத்தியில்‌ தோன்றி அவன்‌ காற்றைப்‌ போன்றவன்‌; அவனைக்‌ காணமுடியாது; தொடமுடியாது; அவனுக்கு எவ்விதப்‌ பண்பும்‌ இல்லை எனப்‌ பதில்‌ அளித்தான்‌. அப்போதிருந்துதான்‌ அல்லாஹ்வின்‌ பண்பை நிராகரிக்கின்ற சிந்தனை விஷ்வரூபம்‌ பெற்றதாகக்‌ கூறப்படுகின்றது.

ஜஹ்ம்‌ பின்‌ ஸஃப்வான்‌ அபூ முஹர்ரிஸ்‌ அஸ்ஸமர்கந்தி என்பவன்‌ பித்‌அத்வாதியும்‌, வழிகேடனும்‌, ஜஹ்மிய்யாக்களின்‌ தலைவனும்‌ ஆவான்‌. இவன்‌ இளம்‌ தாபியீன்கள்‌ காலத்தில்‌ மரணித்தான்‌. அவன்‌ ஹதீஸ்கள்‌ அறிவித்தது பற்றி எனக்குத்‌ தெரியாது. இருப்பினும்‌, பெரும்‌ தீமையை அவன்‌ விதைத்துள்ளான்‌. மற்றும்‌ இந்த ஜஹ்ம்‌ ஹிஜ்ர்‌ 128ல்‌ கொலை செய்யப்பட்டான்‌. (லிசானுல்‌ மீஸான்‌)

இவனிடம்‌ இருந்து அப்துல்லாஹ்‌ பின்‌ ஸயீத்‌ பின்‌ குல்லாப்‌ அல்கத்தான்‌ அல்பஸரி என்பவர்‌ அவனது சிந்தனையைப்‌ பெற்றார்‌. இவரே அஷ்‌அரிய்யா சிந்தனையின்‌ உண்மையான நிறுவனராவார்‌.

இதனால்தான்‌ இமாம்‌ அஹ்மத்‌ (ரஹ்‌) அவர்கள்‌ இவரை
வெறுத்தார்கள்‌. இருந்தாலும்‌, இவர்‌ ஜஹ்மைப்‌ போன்று அனைத்து ஸிஃபாத்துகளையும்‌ நிராகரிக்கவில்லை. பகுத்தறிவால்‌ நிலைப்படுத்த முடியுமான ஸிஃபத்துகளை நிலைப்படுத்தியதுடன்‌ நிராகரிக்க வேண்டியவற்றை நிராகரித்தார்‌.

ஜஹ்மிய்யா: 

ஐஹ்ம்‌ இப்னு ஸஃப்வான்‌ என்பவனது சிந்தனையைப்‌ பிரதிபலிப்பதால்‌ இந்தப்‌ பெயர்‌ கொண்டு இப்பிரிவினர்‌ அழைக்கப்படுகின்றனர்‌. இவனது ஆசிரியரான ஜஃத்‌ பின்‌ திர்ஹம்‌ என்பவனே இப்புதிய சிந்தனையின்‌ முன்னோடியாகும்‌.

ஜஃதின்‌ சிந்தனைகளை முழுமையாகப்‌ பரப்பிய பெருமை அதுவும்‌ அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகளைப்‌ பாழடித்த தீய வழிமுறையை உலகுக்கு அறிமுகம்‌ செய்த கெட்ட நடைமுறை யூதப்‌ பரம்பரையில்‌ வந்த ஜஹ்ம்‌ பின்‌ ஸஃப்வானையே சாரும்‌.

அல்லாஹ்‌ இப்ராஹீம்‌ நபியை நண்பனாக எடுத்துக்‌ கொள்ளவில்லை,

அல்லாஹ்‌ மூசா நபி (அலை) அவர்களுடன்‌ பேசவில்லை,

அல்குர்‌ஆன்‌ படைக்கப்பட்டது போன்ற கருத்துகளை முதலில்‌ கூறியவன்‌ ஜஃத்‌ பின்‌ திர்ஹம்‌ என்பவனாகுவான்‌.

ஜஹம்‌ பின்‌ ஸஃப்வான்‌ இந்தச்‌ சிந்தனையை முன்‌ நின்று பரப்பியதன்‌ மூலம்‌ இஸ்லாமியச்‌ சமூகத்தில்‌ அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ விஷயத்தில்‌ முதலாவது பித்‌அத்வாதியாக ஜஹ்ம்‌ அடையாளப்படுத்தப்படுவதோடு இந்தச்‌ சிந்தனையைப்‌ பிரிதிபலிப்போர்‌ ஜஹ்மிய்யா பிரிவினர்‌ என அவனது பெயரில்‌ அழைக்கப்படுகின்றனர்‌.

இவனது சிந்தனையைத்‌ தழுவியே முஃதஸிலா, மற்றும்‌ பிற்கால ராஃபிழாக்கள்‌ அஷ்‌அரிய்யா, மாத்ரீதிய்யா போன்ற பிரிவினர்‌ அல்லாஹ்வின்‌ ஸிஃபத்துகளை மறுத்தும்‌, திரித்தும்‌, பாழடித்தும்‌ பேசத்‌ தொடங்கினர்‌.

மறுமையில்‌ அல்லாஹ்வைப்‌ பார்க்க முடியாது, குர்‌ஆன்‌ படைக்கப்பட்டுள்ளது, அல்லாஹ்‌ உலகுக்கு மேலாலும்‌ இல்லை; கீழாலும்‌ இல்லை; வானிலும்‌ இல்லை; பூமியிலும்‌ இல்லை; எங்கும்‌ இல்லை. அறிவு, ஆற்றல்‌, வாழ்க்கை, கேள்வி, பார்வை, பேச்சு, நாட்டம்‌, நேசம்‌, அன்பு, கருணை போன்ற பண்புகள்‌ எதுவும்‌ அல்லாஹ்வுக்கு இல்லை. எல்லாம்‌ வெறும்‌ சூனியம்‌ என இவர்கள்‌ வாதிட்டனர்‌. இருப்பினும்‌ படைப்பாளனின்‌ உள்ளமை என்பது உண்மை எனக்‌ கூறுகின்றனர்‌.

அந்த வகையில்‌ மேற்படி பிரிவினர்கள்‌ அனைவரும்‌ நுஃபாதுஸ்ஸிஃபாத்‌ (அஸ்மா, ஸிஃபாத்தை முழுமையாக நிராகரிப்போர்‌) என்று அடையாளப்படுத்தப்படுகின்றனர்‌.

அல்லாஹ்வின்‌ அஸ்மா, ஸிஃபாத்துகளை மறுப்போர்‌ ஜஹ்மிய்யாக்கள்‌ என்றே பொதுவாக அழைக்கப்பட்டனர்‌.

இதனால்தான்‌ முஃதஸிலாக்களின்‌ தவ்ஹீதுதான்‌ ஜஹ்மிய்யாக்களின்‌ தவ்ஹீத்‌ என அறிஞர்கள்‌ குறிப்பிடுகின்றனர்‌. அதாவது ஸிஃபாத்துகளை இரு சாராரும்‌ முழுமையாக நிராகரிப்பதால்‌ இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்‌.

இமாம்களான புகாரி‌, அபூதாவூத்‌, இமாம்‌ புகாரியின்‌ ஆசிரியரான அஹ்மத்‌, இமாம்‌ தாரமி‌ போன்ற அறிஞர்கள்‌, “ஜஹ்மிய்யாக்களுக்கான மறுப்பு” எனும்‌ தலைப்பிட்டு பல நூல்கள்‌ எழுதி, ஸிஃபாத்‌- பண்புகள்‌ விஷயத்தில்‌ தமது நிலைப்பாடு அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ நிலைப்பாடுதான்‌ என்பதைத்‌ தெளிவாக விளக்கியுள்ளார்கள்‌.

அக்காலங்களில்‌ இமாம்களால்‌ வெளியிடப்பட்ட அதிகமான நூல்கள்‌ “ஜஹ்மிய்யாக்களுக்கான மறுப்பு” எனத்‌ தலைப்பிடப்பட்டு எழுதப்பட்டதன்‌ இரகசியமும்‌ இதுதான்‌.

அல்லாஹ்வின்‌ ஸிஃபாத்துக்களை (பண்புகளை) மறுப்பது, அல்லது அவற்றிற்குத்‌ தவறான விளக்கம்‌ தருவது போன்ற நிலைப்பாட்டில்‌ இருந்தவர்களுக்கும்‌, நவீன காலத்தவருக்கும்‌ போதுமான மறுப்புகள்‌, தக்க பதில்கள்‌ அவற்றில்‌ தரப்பட்டிருப்பதைக்‌ காணலாம்‌.

ஜஹ்மியாக்கள்‌ என்போர்‌ அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகளை முழுமையாக நிராகரிப்பவர்களாவர்‌. இப்னுல்‌ கய்யிம்‌ (ரஹ்‌) அவர்கள்‌ இவர்களைப்‌ பற்றி அவரது நூனிய்யா வரிகளில்‌ இவ்வாறு குறிப்பிடுகின்றார்‌:

பல்வேறு பிரதேசத்திலும்‌ உள்ள ஐந்நூறு அறிஞர்கள்‌ இவர்களைக்‌ காஃபிர்களாகக்‌ கணிக்கின்றனர்‌.

இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ ஜஹ்மிய்யாக்கள்‌ என்போர்‌ பற்றிப்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்‌. அவர்கள்‌ மூன்று படித்தரங்களைக்‌ கொண்டவர்கள்‌.

அவர்களில்‌ அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகளை ஒட்டுமொத்தமாக நிராகரிப்போர்‌ மிகவும்‌ தீயவர்களாவர்‌. அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ அழகிய பெயர்களில்‌ உள்ள ஏதாவது ஓர்‌ பெயரைக்‌ குறிப்பிட்டுச்‌ சொல்லப்பட்டால்கூட அவை சிலேடையானது என்பார்கள்‌. இவ்வாறானவர்கள்‌ அல்லாஹ்வை சூனியம் என்பார்கள்‌. அத்தோடு அவர்கள்‌ அல்லாஹ்வை,

உயிருள்ளவனாக,

யாவற்றையும்‌ அறிந்தவனாக,

ஆற்றல்‌, வல்லமை மிக்கவனாக,

யாவற்றையும்‌ செவியுறுபவனாக,

யாவற்றையும்‌ நன்கு பார்ப்பவனாக,

பேசுபவனாக அங்கீகரிப்பதில்லை.


இரண்டாவது படித்தரம்‌:

முஃதஸிலா, மற்றும்‌ அவர்களின்‌ வழிநடப்போரான ஜஹ்மிய்யா சிந்தனையாளர்களின்‌ வழிமுறையாகும்‌. அவர்கள்‌ பொதுப்படையாக அல்லாஹ்வின்‌ பெயர்களை அங்கீகரிப்பார்கள்‌. இருந்தாலும்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளை நிராகரிப்பார்கள்‌. அவ்வாறிருந்தும்‌ இவர்கள்‌ அல்லாஹ்வின்‌ அனைத்துப்‌ பெயர்களையும்‌ அதன்‌ உண்மையான வடிவில்‌ அங்கீ்கரிப்பதில்லை என்பதே யதார்த்தமாகும்‌. அவற்றில்‌ அதிகமான பெயர்கள்‌ சிலேடையானவை என்றே அவர்கள்‌ வாதிடுகின்றனர்‌. இவர்களைத்தான்‌ (மக்கள்‌ மத்தியில்‌) பிரசித்தி பெற்ற ஜஹ்மிய்யாக்கள்‌ எனக்‌ கூறப்படுகிறது.

மூன்றாவது படித்தரம்‌: 

அஸ்மா ஸிஃபாத்தை நிலைப்படுத்தி தவறான விளக்கமளிக்கும்‌ பிரிவினர்‌.

உதாணரமாக அல்குர்‌ஆன்‌ அல்லாஹ்வின்‌ பேச்சு என்று குறிப்பிடுவதைக்‌ குறிக்கலாம்‌. இதனை அவனது தகுதிக்குத்‌ தோதுவான யதார்த்தமான பேச்சாக விளக்காது படைக்கப்பட்ட அல்லாஹ்வின்‌ பேச்சு என்று விளக்கம்‌ தருவார்கள்‌.

அஷ்ஷைக்‌ முஹம்மத்‌ பின்‌ ஸாலிஹ்‌ அல்‌ உஸைமீன்‌ (ரஹ்‌) அவர்கள்‌ ஜஹ்மிய்யாக்கள்‌ பற்றிக்‌ குறிப்பிடுகின்ற போது:

ஜஹ்மிய்யாக்கள்‌ மூன்று ஜீம்களுக்குரியவர்களாவர்‌. அவை அனைத்தும்‌ தீமையான ஜீம்களாகும்‌.

முதலாவது அல்ஜஹம்‌ என்பதைக்‌ குறிக்கின்ற ஜீமாகும்‌. இது அல்லாஹ்வின்‌ பண்புகளை நிராகரிப்பதோடு தொடர்பானதாகும்‌.

இரண்டாவது ஜீம்‌ -ஜப்ர்‌- என்பதாகும்‌. இது கத்ரை நிராகரிப்பதோடு தொடர்புடையது.

மூன்றாவது ஜீம்‌ அல்‌இர்ஜா என்பதில்‌ இடம்‌ பெறும்‌ (ஈமானுடன்‌ பாவம்‌ செய்யலாம்‌ என்ற கோட்பாட்டைக்‌ கொண்ட ஜீமாகும்‌.) இது இறை நம்பிக்கை தொடர்பானதாகும்‌. இந்த மூன்று ஜீம்களிலும்‌ எவ்வித நலவும்‌ கிடையாது.(ஷரஹால்‌ அர்பயீனன்‌ நவவிய்யா)

முஃதஸிலா:

பெரும்பாவம்‌ செய்தோர்‌ விஷயத்தில்‌ இமாம்‌ ஹசன்‌ அல்பஸரீ அவர்களுடன்‌ முரண்பட்டு அவரது அறிவுச்‌ சபையில்‌ இருந்து வெளியேறிச்‌ சென்ற வாஸில்‌ பின்‌ அதா அல்கஸ்ஸரல்‌ (பிறப்பு: 80-131) என்பவரது தவறான சிந்தனையைப்‌ பிரதிபலிக்கும்‌ பிரிவினர்‌.

இவர்கள்‌ ஆரம்பத்தில்‌ முஃதஸிலா (அஹ்லுஸ்ஸுன்னாக்களை விட்டு விலகி வாழ்வோர்‌) என்ற பொருளில்‌ அழைக்கப்பட்டனர்‌.

தோற்றப்‌ பின்னணி:

பெரும்பாவம்‌ செய்தோரின்‌ நிலை பற்றி இமாம்‌ ஹசன்‌ அல்பஸரீ (ரஹ்‌) அவர்களிடம்‌ அவரது மாணவர்களில்‌ ஒருவர்‌ கேள்வி எழுப்பிய போது இமாம்‌ அவர்கள்‌ எதுவும்‌ கூறாது மெளனமாக இருந்தார்கள்‌. “அவர்கள்‌ காஃபிர்களும்‌ அல்லர்‌, முஸ்லிம்களும்‌ அல்லர்‌. அவ்விரண்டும்‌ அல்லாத இரு நிலைகளுக்கிடையில்‌ இருப்பார்கள்‌” எனப்‌ பதில்‌ அளித்த வாஸில்‌, அவர்களின்‌ மஜ்லிஸில்‌ இருந்து ஒதுங்கி பஸராப்பள்ளி ஒன்றின்‌ தூண்‌ ஒன்றில்‌ சாய்ந்தவாறு சபையில்‌ இருந்து வெளிநடப்புச்‌ செய்தவராக நின்று கொண்டிருந்தவரைப்‌ பார்த்து இமாம்‌ ஹசன்‌ அல்பஸரீ அவர்கள்‌:

இஃதஸல்‌ அன்னா வாஸில்‌ “வாஸில்‌ நம்மை விட்டு ஒதுங்கிக்‌ கொண்டார்‌” எனக்‌ கூறினார்கள்‌. அன்றிருந்தே அவர்கள்‌ முஃதஸிலா என அழைக்கப்பட்டனர்‌. (அல்மிலல்‌ வந்நிஹல்‌)

கிதாபுத்தவ்ஹீத்‌, அல்மன்ஸிலா பைனல்‌ மன்ஸிலதைன்‌ போன்ற நூல்களை வாஸில்‌ எழுதி இருந்தார்‌ என்று இமாம்‌ தஹபி அவர்கள்‌ ஸியர்‌ அஃலாமின்‌ நுபலா என்ற நூலில்‌ சுட்டிக்காட்டுகின்றார்கள்‌.

வாஸிலின்‌ சிந்தனையால்‌ கவரப்பட்டவர்களில்‌, அம்று பின்‌ உபைத்‌ என்பவர்‌ முக்கியமானவர்‌. இவர்‌, அல்‌அத்ல்‌, அத்தவ்ஹீத்‌, அர்ரத்து அலல்‌ கத்ரிய்யா போன்ற பல நூல்களை எழுதி தமது வாதங்களை நியாயப்படுத்தினார்‌.

கத்ரிய்யாக்கள்‌ என்று இங்கு இவர்‌ குறிப்பிடுவது கத்ரை நம்புகின்ற அஹ்லுஸ்‌ ஸுன்னாக்கள்‌ என்பது கவனிக்கத்தக்கதாகும்‌. (முஹம்மத்‌ அஹ்மத்‌ லூஹ்‌, ஜினாயதுத்‌ தஃவீலில்‌ ஃபாஸித்‌)

பெயர்கள்‌:

முஃதஸிலாக்கள்‌ பல்வேறு பெயர்கள்‌ கொண்டு அறிமுகப்படுத்தப்படுகின்றனர்‌. அவற்றில்‌ பின்வரும்‌ பெயர்கள்‌ முக்கியமானவையாகும்‌.

அல்வயீதிய்யா. (பெரும்பாவம்‌ செய்தோர்‌ மறுமையில்‌ நரகத்தில்‌ நிரந்தரமாக இருப்பர்‌ என்பதனால்‌...)

அல்ஜஹ்மிய்யா. (ஜஹம்‌ பின்‌ ஸஃப்வானின்‌ கொள்கையை அங்கீகரித்தமையால்‌...)

அல்கத்ரிய்யா (பிற்காலத்தில்‌ இறைவிதியை மறுத்தமையால்‌...)

முஃதஸிலாக்களின்‌ ஐந்து அடிப்படைக்‌ கோட்பாடுகள்:‌

அத்தவ்ஹீத்‌ (அஸ்மாக்களை நம்பி ஸிஃபாத்துகளை நிராகரித்தல்‌. அவற்றை நம்பி நிலைப்படுத்துவோர்‌ முஷ்ரிக்‌ என்ற தத்துவம்‌)

அல்‌அத்ல்‌ (இறைவிதியை நம்புவது அநீதியாகும்‌. அதனால்‌ அதை மறுப்பதே அநீதியாகும்‌. அல்லது அடியார்களின்‌ செயற்பாடுகளை அல்லாஹ்‌ படைக்கவில்லை. மாறாக அடியார்களே தமது செயல்பாடுகளைப்‌ படைத்துக்‌ கொள்கின்றனர்‌ என்ற கோட்பாடு)

அல்வஃது வல்வயீத்‌ (பெரும்‌ பாவங்கள்‌ புரிந்த நிலையில்‌ மரணிப்பவர்‌ நிரந்தர நரகில்‌ இருப்பர்‌)

அல்மன்ஸிலா பைனல்‌ மன்ஸிவதைன்‌ (பாவிகள்‌, உலகில்‌ காஃபிர்‌, முஃமின்‌ என்ற இரு நிலைகளுக்கிடையில்‌ இருப்பர்‌)

அல்‌அம்று பில்‌ மஃறூஃப்‌, வன்னஹ்யு அனில்‌ முன்கர்‌ (இணைவைத்தல்‌ இல்லாதபெரும்‌ பாவம்‌ செய்கின்ற முஸ்லிம்‌ ஆட்சியாளர்களுக்கு எதிராகக்‌ கிளர்ச்சி செய்தல்‌)

((குறிப்பு: இஸ்லாத்தின்‌ பெயரால்‌ தோன்றிய பிரிவுகள்‌“என்ற தலைப்பில்‌ வெளிவந்த நமது நூலில்‌ இது பற்றிய தெளிவைப்‌ பெறலாம்‌)).

அஸ்மா ஸிஃபாத்தில்‌ முஃதஸிலாக்களின்‌ நிலைப்பாடு

முஃதஸிலாக்கள்‌ அல்லாஹ்வின்‌ (அஸ்மா) பெயர்களைப்‌ பொருள்‌ இன்றி நிலைப்படுத்துவதோடு, அவனது ஸிஃபாத்துகளையும்‌ முழுமையாக நிராகரிக்கின்றனர்‌.

அல்லாஹ்வுக்குப்‌ பொருள்கொள்ள முடியாத பல (அஸ்மா) பெயர்கள்‌ இருப்பதாக வாதிடும்‌ இப்பிரிவினர்‌, அவற்றில்‌ இருந்து ஸிஃபாத்துகள்‌ எடுக்கப்படுவதை முழுமையாக மறுக்கின்றனர்‌.

அர்ரஹ்மான்‌ - கருணையாளன்‌- என்ற பெயரில்‌ இருந்து பெறப்படும்‌ (அர்ரஹ்மா) கருணை என்ற பண்பு, அஸீஸ்‌-கண்ணியம்‌ மிக்கவன்‌- என்ற பெயரில்‌ இருந்து பெறப்படும்‌ (இஸ்ஸத்‌) கண்ணியம்‌ என்ற பண்பு, அல்ஹய்யு - உயிருள்ளவன்‌ என்ற பெயரில்‌ இருந்து பெறப்படும்‌ (அல்ஹயாத்‌), அஸ்சமீஃ செவியேற்பவன்‌ என்ற பெயரில்‌ இருந்து பெறப்படும்‌ (அஸ்ஸம்வு) ஆகிய பண்புகள்‌ உடையவனாக அல்லாஹ்‌ விளங்குகின்றான்‌ என்ற அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ நம்பிக்கைக்‌ கோட்பாட்டை இவர்கள்‌ மறுக்கின்றனர்‌. அதாவது பெயர்களுக்குச்‌ சொந்தக்காரனாக இருப்பவன்‌ பண்புகளுக்கும்‌ உரிமையாளனாக இருப்பான்‌. அதைத்தான்‌ அரபு மொழியும்‌ உறுதி செய்கின்றது என்பது ஸல‌ஃபுகளின்‌ நிலைப்பாடாகும்‌.

முஃதஸிலாக்களோ  அல்‌அலீம்‌ போன்ற அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, வெறும்‌ அடையாளப்‌ பெயர்களின்‌ அந்தஸ்தில்‌ உள்ளனவே அன்றி, அஹ்லுஸ்ஸுன்னாக்கள்‌ கூறுவது போன்று அவை வாழ்வு, அறிவு, வல்லமை போன்ற இன்னோரென்ன பண்புகள்‌ பற்றி அறிவிப்பதில்லை என்றும்‌, அவை தொன்று தொட்டு ஆதிமுதல்‌ அல்லாஹ்விடம்‌ இருந்து வந்ததில்லை. மாறாக, அவை இல்லாமல்‌ இருந்து பின்னர்‌ படைக்கப்பட்ட பண்புகளாகும்‌. எனவே படைக்கப்பட்ட பண்புகள்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளாக இருக்க முடியாது என்றும்‌ வாதிடுகின்றனர்‌.

மேலும்‌, அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌ பற்றி வந்துள்ள அதிகமான அறிவிப்புகள்‌ ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்படும்‌ ஆஹாத்‌ வகை சார்ந்ததாகும்‌. அந்த வகையினை அகீதாவில்‌ எடுத்துக்‌ கொள்ள முடியாது என்றும்‌ வாதிடுகின்றனர்‌. இது அஹ்லுஸ்ஸுன்னாக்களால்‌ அங்கீரிக்கப்பட்ட ஓர்‌ வழிமுறை அல்ல என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌.

இந்தப்போக்கு ஸைதிய்யா, மற்றும்‌ பிற்கால ராஃபிழாக்கள்‌ போன்ற பிரிவினரிடமும்‌, கவாரிஜ்களில்‌ ஓர்‌ சாராரிடமும் காணப்பட்டது. இப்னு ஹஸ்ம்‌ போன்றோர்‌ இந்தச்‌ சிந்தனைத்‌ தாக்கத்திற்கு உட்பட்டவர்களாகவே கொள்ளப்படுகின்றனர்‌.

ஒவ்வொரு முஃதஸிலாவாதியும்‌ ஜஹ்மி ஆவான்‌. அனைத்து ஜஹ்மியாக்களும்‌ முஃதஸிலாக்கள்‌ அல்லர்‌. ஆனால்‌ ஜஹம்‌ என்பவன்‌ கடுமையான பாழடிப்பாளனாகக்‌ காணப்பட்டான்‌. ஏனெனில்‌ அவன்‌ அஸ்மா, ஸிஃபாத்தை அல்லாஹ்வை விட்டு விலக்கினான்‌. முஃதஸிலாக்களோ ஸிஃபாத்துகளை மறுத்து, அல்லாஹ்வின்‌ பெயர்களை நிலைப்படுத்தினர்‌.
(இப்னு தைமிய்யா : மின்ஹாஜுஸ்ஸுன்னா அந்நபவிய்யா)

இருப்பினும்‌, அல்லாஹ்‌ ஆதிமுதல்‌ இருந்து வருபவனாக, அறிந்தவனாக, சக்தி, வல்லமை ஆற்றல்‌ பொருந்தியவனாக, உயிருடன்‌ இருப்பவனாக இருந்து வருகின்றான்‌ எனக்‌ குறிப்பிட்டு அல்லாஹ்வின்‌ உள்ளமை என்பதுடன்‌ அவன்‌ யாவற்றையும்‌ அறிந்தவன்‌, வல்லமைமிக்கவன்‌, உயிருள்ளவன்‌ ஆகிய நான்கு பண்புகளை முஃதஸிலாக்கள்‌ அங்கீகரிப்பதாக அபுல்‌ ஹசன்‌ அல்‌ அஷ்‌அரி‌ (ரஹ்‌) அவர்கள்‌ சுட்டிக்காட்டுகின்றார்கள்‌.

முஹ்தஸிலாவின்‌ முக்கியச்‌ சிந்தனைகள்‌:

அல்லாஹ்வின்‌ பண்புகளை நிராகரித்தல்‌,

அல்குர்‌ஆன்‌ அல்லாஹ்வின்‌ யதார்த்தமான பேச்சு அல்ல, மாறாக அது படைக்கப்பட்டது என்ற வாதம்‌,

மறுமையில்‌ அல்லாஹ்வைக்‌ காணமுடியாது,

மண்ணறை வேதனை என்பது இல்லை,

ஹவ்ளுல்‌ கவ்ஸர்‌ அடிப்படை அற்றது,

ஷபாஅத்‌ எனப்படும்‌ பரிந்துரை குர்‌ஆனுக்கு முரண்பாடானது

சூனியம்‌ என்பது வெறும்‌ கற்பனை

அடியார்களே தமது செயற்பாடுகளைப்‌ படைத்துக்‌ கொள்கின்றனர்‌; அல்லாஹ்வின்‌ நாட்டத்திற்கும்‌ அவர்களின்‌ செயல்பாடுகளுக்கும்‌ எவ்விதத்‌ தொடர்பும்‌ கிடையாது.

கத்ர்‌ (இறைவிதி) என்பது இல்லை 

போன்ற இன்னும்‌ பல நம்பிக்கை உடையோராக இருக்கின்றனர்‌.

இமாமிய்யாக்களின்‌ அஸ்மா ஸிஃபாத்‌ கோட்பாடு

“இமாமிய்யா” என்பது ஷீஆக்களின்‌ பெயர்களில்‌ ஒன்றாகும்‌. நபி (ஸல்‌) அவர்களின்‌ மரணத்தின்‌ பின்னால்‌ ஆட்சிக்குத்‌ தகுதியானவர்கள்‌ அஹ்லுல்பைத்தினரில்‌ ஒருவரான அலீ (ரழி) அவர்களும்‌, அவர்களின்‌ வழித்தோன்றல்களான பன்னிரண்டு இமாம்கள்‌ மட்டுமே என்ற கோட்பாட்டால்‌ இந்தப்‌ பெயர்‌ அவர்களுக்கு வந்தது.

ராஃபிழா, ஷீஆ, இஸ்னா அஷரிய்யா போன்ற இன்னும்‌ பல பெயர்களால்‌ அறிமுகப்படுத்தப்படும்‌ ஷீஆக்கள்‌ மத்ஹபில்‌ மிகவும்‌ அசிங்கமானதையும்‌, ஷைதானுக்கு நெருக்கமானதையும்‌, யூத, கிறிஸ்தவ மற்றும்‌ நெருப்பு வணங்கிகளின்‌ கலவைச்‌ சிந்தனைகளையும்‌ எடுத்துக்‌ கொள்வார்கள்‌ என்று ஓர்‌ ஆய்வாளர்‌ குறிப்பிடுகின்றார்‌.

இவர்கள்‌ ஸஹாபாக்களை (முர்தத்‌) மதம்மாறியோராக நோக்குகின்றனர்‌. அஹ்லுஸ்ஸுன்னா முஸ்லிம்களைக்‌ காபிர்களாகப்‌ பார்ப்பதில்‌ கவாரிஜ்களை விட ஓர்‌ படி மேலே இருக்கின்றார்கள்‌.

அஸ்மா, ஸிஃபாத்‌ (அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌) விவகாரத்தில்‌ தமது முன்னோர்களான ஜஹமிய்யாக்களையும்‌ விட உயர்‌ நிலையில்‌ காணப்படுகின்றனர்‌.

ஒவ்வொரு ஜஹ்மியும்‌ முஃதஸிலி ஆவான்‌. ஆனால்‌ ஒவ்வொரு முஃதஸிலியும்‌ ஜஹ்மி கிடையாது என்பது அறிஞர்களின்‌ கூற்றாகும்‌.

அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகளாக வந்திருப்பது தமது இமாம்களைச்‌ சுட்டிக்காட்டித்தான்‌ என்று ராஃபிழாக்கள்‌ நம்புகின்றனர்‌.

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள்‌ உண்டு; அவற்றைக்‌ கொண்டு அவனைப்‌ பிரார்த்தியுங்கள்‌ (அல்‌அஃராஃப்‌: வச: 180) என்ற வசனம்‌ தமது இமாம்களைக்‌ குறிப்பதாக அவர்களது இமாம்‌ கூறியதாக ஷீஆக்கள்‌ வாதிடுகின்றனர்‌. உஸுலுல்காஃபி என்ற ஷீஆக்களின்‌ பிரதான நூல்‌ இதனைப்‌ பின்வருமாறு உறுதி செய்கின்றது.

நாமும்‌ அல்லாஹ்வும்தான்‌ (அல்லது அல்லாஹ்வின் சத்தியமாக நாமே) அழகிய திருநாமங்களாகும்‌. நம்மைப்‌ பற்றிய அறிவற்றவர்களின்‌ அமல்களை அல்லாஹ்‌ அங்கீரிக்கமாட்டான்‌. (அகாயிதுல்‌ இமாமிய்யா போன்ற ஷீஆக்களின்‌ நூல்களில்‌ காணப்படும்‌ விளக்கமாகும்‌)

இவ்வாறான விளக்கத்தைத்தான்‌ அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள்‌ “தஃப்சீர்‌ பாதினி” மறைவான பொருள்‌ தரும்‌ தஃப்சீர்‌ என்று அழைப்பார்கள்‌. அதாவது குர்‌ஆன்‌ வெளிப்படையாகச்‌ சொல்லும்‌ விளக்கத்தை புறம்‌ தள்ளிவிட்டு வழிகேடான உட்பொருள்‌ ஒன்றை ஆதாரமுன்றி வழங்கும்‌ தஸப்சீர்‌ முறையாகும்‌.

அல்லாஹ்‌ பற்றிய நம்பிக்கை

அல்லாஹ்வின்‌ தோற்ற அமைப்பு மனிதப்‌ படைப்பை ஒத்தது என்று முதலில்‌ யூதர்கள்தாம்‌ நம்பினர்‌. அதன்‌ பின்னர்‌ முஸ்லிம்கள்‌ மத்தியில்‌ அந்த நம்பிக்கை பரப்பியவர்களாக ராஃபிழாக்கள்‌ கணிக்கப்படுகின்றனர்‌. அவர்களில்‌ பின்வருவோர்‌ முக்கியமானவர்கள்‌.

ஹிஷாம்‌ பின்‌ அல்ஹகம்‌,
ஹிஷாம்‌ பின்‌ சாலிம்‌ அஜவாலீகி,
யூனுஸ்‌ பின்‌ அப்திர்‌ ரஹ்மான்‌ அல்கும்மி,
அபூ ஜஃபர்‌ அல்‌அஹ்வல்‌ ஆகியோராகும்‌.

இவர்களில்‌ ஹிஷாம்‌ பின்‌ அல்ஹகம்‌ என்பவர்‌ முதலாவது நபராகவும்‌, பிரசித்தி பெற்றவராகவும்‌ விளங்குவதாக இமாம்‌ இப்னு தைமிய்யா அவர்கள்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

அல்லாஹ்வுக்கு உடல்‌ அமைப்பு சார்ந்த உருவம்‌ கற்பிக்கும்‌ நடைமுறை ராஃபிழாக்களின்‌ முன்னோர்களிடம்‌ ஹிஜ்ரீ நானூறு காலப்‌ பகுதி வரை காணப்பட்டது. அதன்‌ பின்‌ வந்தவர்களிடம்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளைப்‌ பாழடிக்கும்‌ பழக்கம்‌ முஃதஸிலா சிந்தனை தோன்றியது என இமாம்‌ அபுல்ஹசன்‌ அல்‌அஷ்‌அரீ அவர்கள்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

அதாவது அல்லாஹ்வின்‌ அமைப்பானது மனித அமைப்பைப்‌ போன்றது என்ற சிந்தனையில்‌ இருந்து மாறி, அவன்‌ எதுவும்‌ அற்றவன்‌ என்ற சிந்தனைக்‌ கோட்பாட்டைத்‌ தோற்றுவித்தனர்‌.

“தனது இரட்சகன்‌ மனித உடல்‌ அமைப்பைக்‌ கொண்டவன்‌, முடிவுறும்‌ ஓர்‌ எல்லைக்குரியவன்‌, அவன்‌ நீளமானவன்‌, ஆழமானவன்‌, அகலமானவன்‌, அவனது நீள அல்ஹகம்‌ அளவு தனது அகலத்தைப்‌ போன்றது” என ஹிஷாம்‌ பின்‌ என்பவன்‌ கூறியதாக இமாம்‌ அப்துல்‌ காதிர்‌ அல்பக்தாதீ அவர்கள்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

“மனித உருவத்தை ஒத்தவன்தான்‌ அல்லாஹ்‌” என்று அல்லாஹ்வை மனிதர்களுக்கு ஒப்பிட்டு ஹிஷாம்‌ பின்‌ ஸாலிம்‌ அல்ஜவாலிகி என்பவன்‌ பேசினான்‌.

அல்லாஹ்வை மனிதனுக்கு ஒப்பிட்டுப்பேசும்‌ நடைமுறை யூதர்களிடம்‌ காணப்பட்டதால்‌ ஷீஆக்களின்‌ முன்னோடிகள்‌ என்ற நிலையில்‌ உள்ளோரின்‌ இவ்வாறான கருத்துகள்‌ யூதர்களிடம்‌ இருந்து பிரதிபண்ணப்பட்டதாக இருக்கலாம்‌ என்று அறிஞர்கள்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

ஷீஆ மதம்‌ யூதச்‌ சிந்தனையின்‌ வெளிப்பாட்டில்‌ வளர்ந்ததாக அடையாளப்படுத்தப்படுவதும்‌ இங்கு கவனிக்கத்‌ தக்கதாகும்‌. அல்லாஹ்‌ உடல்‌ அமைப்புடன்‌ உள்ளவனா? தோற்ற அமைப்பில்‌ உள்ளவனா? என்று கருத்து முரண்பாடுகள்‌ ஷீஆக்கள்‌ மத்தியில்‌ காணப்பட்டு, பின்னர்‌ அவன்‌ எந்த உருவமும்‌ அற்றவன்‌ என்று நம்புவதுதான்‌ தவ்ஹீத்‌ என்று அவர்களின்‌ அறிஞர்களால்‌ தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்தத்‌ தீர்ப்பையும்‌ மீறிச்‌ சிலர்‌ தமது முன்னோர்களான ஹிஷாம்‌ மற்றும்‌ அவரது ஸஹாக்களின்‌ கருத்தையே பிரச்சாரம்‌ செய்வோம்‌ எனக்‌ கூறியதாக ஷீஆ ஆய்வு நூல்கள்‌ குறிப்பிடுகின்றன.

இந்த நிலை ஹிஜ்ரி‌ மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ இறுதிக்‌ கட்டத்தில்‌ மாறுபட்டதாக அதே ஆய்வுகள்‌ குறிப்பிடுகின்றன;

அது பற்றியும்‌ கவனிப்போம்‌.

அல்லாஹ்வின்‌ பண்புகளை முழுமையாகப்‌ பாழடித்தல்‌

இது ஷிஆக்களில்‌ உருவான இரண்டாவது பெரும்‌ வழிகேடாகும்‌. இது, ஹிஜ்ரீ மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ இறுதியிலும்‌ நான்காம்‌ நூற்றாண்டிலும்‌ பரவலாகக்‌ காணப்பட்டது.

இந்தச்‌ சிந்தனையின்‌ பின்னணியில்‌ முஃதஸிலாக்களின்‌ கருத்தியல்‌ தாக்கம்‌ இருந்தது.

முஃதஸிலாக்களின்‌ தஃப்சீர்களைப்‌ படித்த ஷீஆ மத அறிஞர்களான‌ அஷ்ஷரீஃப் அல்முர்தனா என்ற புனைப்‌ பெயரில்‌ பிரபல்யமான மூஸவி மற்றும்‌ அபூஜஃபர்‌ அத்தூசீ போன்றோர்‌ இக்கருத்தியலை விளக்கி நூல்களை எழுதினர்‌. அது முஃதஸிலா சிந்தனையைப்‌ பிரதிபலிப்பதாக இருந்தது.

இதனால்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ வழிமுறையில்‌ ஷீஆக்களுக்கும்‌ முஃதஸிலாக்களுக்கும்‌ இடையில்‌ நெருக்கமான கொள்கை உறவு காணப்படுவதை அறிந்து கொள்ளலாம்‌.

அதாவது (நஸ்‌) நேரடிச்‌ சான்றாதாரங்களைவிடப்‌ பகுத்தறிவை முற்படுத்துவதும்‌, பண்புகளைப்‌ பாழடிக்கும்‌ வழிமுறையாகும்‌. அஸ்மா, ஸிஃபாத்‌ விஷயத்தில்‌ தமது நிலைப்பாடு முஃதஸிலாக்களின்‌ நிலைப்பாட்டை ஒட்டியதாகும்‌ என்று ஷீஆ மதத்தின்‌ பிரபல அறிஞரான இப்னுல்‌ முதஹ்ஹிர்‌ அல்ஹுவி என்பவர்‌ தெளிவாகவே குறிப்பிடுகின்றார்‌.

அவர்களில்‌ சிலரே தமது நிலைப்பாடும்‌ இஸ்லாமியத்‌ தர்க்கவியலாளர்களின்‌ நிலைப்பாடுதான்‌ என்ற கருத்தில்‌ உள்ளனர்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌.

ஸைதிய்யாக்கள்‌ என்ற பிரிவினர்‌ அகீதா விவகாரத்தில்‌
முஃதஸிலாக்களை முழுமையாகப்‌ பிரதிபலிக்கின்றனர்‌. அதனால்தான்‌ இமாம்‌ ஷஹ்ருஸ்தானி அவர்கள்‌, அடிப்படை விஷயத்தில்‌ (அகீதாவில்‌) ஸைதியாக்கள்‌ முஃதஸிலாக்களின்‌ கருத்தில்‌ அணுவும்‌ மாறாது இருக்கின்றனர்‌”எனக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

அறிஞர்‌ நாஸிர்‌ அல்கிஃபாரீ என்பவர்‌ இவ்வாறு குறிப்பிடுகின்றார்‌:

அஸ்மா, ஸிஃபாத்‌ விஷயத்தில்‌ நவீன காலத்தவர்களான ஷீஆக்களின்‌ நிலைப்பாடும்‌ முஃதஸிலாக்களின்‌ அடிப்படையை அணுவும்‌ பிசகாத வழிமுறையாகும்‌. இந்த விஷயத்தில்‌ அவர்கள்‌ இரண்டாம்‌ கட்டப்போக்கினையே இன்றும்‌ கைக்‌ கொள்கின்றனர்‌.

குர்‌ஆன்‌ படைக்கப்பட்டது,

மறுமையில்‌ அல்லாஹ்வைக்‌ காணமுடியாது,

அல்லாஹ்வுக்கெனப்‌ பிரத்தியேகமான பண்புகள்‌ இல்லை போன்ற முஃதஸிலாக்‌ கோட்பாடுகளுடன்‌,

அல்லாஹ்‌ உடல்‌ அமைப்பிலோ, அல்லது ஓர்‌ தோற்ற அமைப்பிலோ இல்லை,

அவனுக்கு அசைவும்‌ இல்லை அடக்கமும்‌ இல்லை,

அவன்‌ காலமாகவும்‌ இல்லை,

அவனுக்கென்று ஓர்‌ இடமில்லை,

மேலும்‌ அவர்கள்‌ அல்லாஹ்வைக்‌ குறித்து அல்லாஹ்‌ பரம்பொருள்‌, அல்லது அணுபோன்றவன்‌ என்ற அசாத்தியமான பண்புகளால்‌ அல்லாஹ்வின்‌ தன்மை குறித்து விளக்குவார்கள்‌.
(பார்க்க: கலாநிதி: நாஸிர்‌ அல்கிஃபாரியின்‌ உசூலு மதாஷஹிபிஷ்ஷீஆ, அல்‌ இஸ்னை அஷரிய்யா)

குல்லாபிய்யா, மாத்ரூதிய்யா, அஷ்‌அரிய்யா.

குல்லாபிய்யா:

அப்துல்லாஹ்‌ பின்‌ சயீத்‌ பின்‌ குல்லாப்‌ அல்கத்தான்‌ அல்பஸரீ என்பவரது சிந்தனையைப்‌ பெற்றோர்‌ இப்பெயரில்‌ அழைக்கப்படுகின்றனர்‌. இவர்‌ ஹிஜ்ரீ 240 இல்‌ மரணித்தார்‌. இவரே அஷ்‌அரிய்யா சிந்தனையின்‌ உண்மையான நிறுவனராவார்‌.

குல்லாபியா என்ற பிரிவினர்‌ இவரது பெயரில்தான்‌ அழைக்கப்படுகின்றனர்‌. குல்லாபியா பிரிவினரின்‌ அகீதா கோட்பாட்டு நிறுவனராக இவர்‌ அறிமுகப்படுத்தப்படுகின்றார்‌.

அகீதாவில்‌ இவர்‌ தோற்றுவித்த சிந்தனையை அபுல்‌ ஹசன்‌ அல்‌அஷ்‌அரீ என்பவர்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ அகீதா கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கு முன்னரான அவரது இரண்டாவதுகால கட்டப்பகுதியில்‌ ஏற்று நடைமுறைப்படுத்தினார்‌.

அஷ்‌அரிய்யா சிந்தனையின்‌ வெளிப்பாடுகள்‌ என்பது குல்லாபியா பிரிவினரின்‌ பரிணாம வளர்ச்சியாகும்‌ என்பதை ஆய்வின்போது அறிய முடிகின்றது.

மாத்ரூதிய்யா: 

அபூமன்ஸுர்‌ அல்மாத்ரூதி என்பவர்‌ பெயரில்‌ உருவான பிரிவினரை மாத்ரூதிய்யா என அழைக்கின்றனர்‌. 

இதன்‌ நிறுவனரின்‌ முழுப்‌ பெயர்‌: அபூமன்சூர்‌ முஹம்மத்‌ பின்‌ முஹம்மத்‌ பின்‌ மஹ்மூத்‌ அஸ்ஸமர்கந்தி, அல்மாத்ரூதி என்பதாகும்‌.

இரஷ்யாவின்‌ சமர்கந்து நகரத்தில்‌ உள்ள மாத்ரீத்‌ அல்லது -மாதுரீத்‌- என்ற கிராமத்தில்‌ பிறந்த காரணத்தால்‌ அதனுடன்‌ இணைத்துப்‌ பேசப்படுகின்றார்‌. இருப்பினும்‌ இவரைப்‌ பற்றிய
குறிப்புகள்‌ மிக அரிதாகவே உள்ளன.

இவர்‌ அபூ ஹனீஃபா இமாமின்‌ மத்ஹபைப்‌ பின்பற்றியவர்‌ என்பதால்‌ ஹனஃபி மத்ஹப்‌ சார்ந்த மக்கள்‌ பலர்‌ இவரது அகீதா சிந்தனையைச்‌ சரிகண்டனர்‌. ஆனால்‌ அபூ ஹனீஃபா இமாமின்‌ சிந்தனை இவரது சிந்தனைக்கு முரண்பட்டது என்பது
இங்கு குறிப்பிடத்‌ தக்கதாகும்‌.

மாத்ரூதிய்யாப்‌ பிரிவின்‌ அகீதாக்‌ கோட்பாடு அஷ்‌அரிய்யா கோட்பாட்டுடன்‌ முழுமையாகப்‌ பொருந்திச்‌ செல்கின்றது. அதாவது அல்லாஹ்வின்‌ பெயர்களை நிலைப்படுத்தி, சில பண்புகள்‌ போக ஏனைய பண்புகளை நிராகரிப்பதாகும்‌.

ஒருவர்‌ அஸ்மா, ஸிஃபாத்தில்‌ அஷ்‌அரிய்யாக்களின்‌ நிலைப்பாடு பற்றி அறிவதால்‌ மாத்ரூதிய்யாக்கள்‌ பற்றி எளிதாக அறிந்து கொள்ள முடியும்‌

அஷ்‌அரிய்யா: 

இப்பிரிவு அபுல்ஹசன்‌ அலீ பின்‌ இஸ்மாயீல்‌ அல்‌அஷ்‌அரீ அல்பஸர்‌ என்ற அறிஞரின்‌ பெயருடன்‌ இணைத்துப்‌ பேசப்படும்‌ பிரிவாகும்‌.

இமாம்‌ அஷ்‌அரி (ரஹ்‌) அவர்கள்‌ ஹிஜ்ரீ 260 அல்லது 270 இல்‌ பிறந்து, ஹிஜ்ரீ 324 இல்‌ மரணமானார்கள்‌.

அபுல்‌ ஹசன்‌ அஷ்‌அரீ அவர்கள் முக்கிய மூன்று கட்டங்களைக்‌ கடந்து வந்துள்ளார்கள்‌.

முதலாவது கட்டம்‌: சுன்னாப்‌ பிரிவினரின்‌ போக்கை எதிர்த்து முஹ்தஸிலா சிந்தனையைப்‌ பரப்புதல்‌.

இமாம்‌ அபுல்‌ ஹசன்‌ அஷ்‌அரீ அவர்கள்‌ முஃதஸிலாவாதியான அபூ அலீ அல்‌ ஜூ(ப்‌)பாயி என்பவரை ஆசிரியராக எடுத்து முஃதஸிலா கோட்பாட்டை அவரது ஆரம்பக்‌ காலங்களில்‌ முழுமையாகச்‌ சரிகண்டு போதனை செய்தார்கள்‌.

இந்தச்‌ சிந்தனையில்‌ நாற்பது வருடங்கள்‌ கழித்தார்கள்‌. அவர்களின்‌ வாழ்நாளில்‌ பெரும்பகுதியை அந்தச்‌ சிந்தனையில்‌ கழித்துள்ளார்கள்‌ என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.

பின்னர்‌, பஸராவின்‌ பள்ளி ஒன்றின்‌ மிம்பர்‌ மீதேறி, தமது நிலைப்பாட்டில்‌ இருந்து இன்றே தான்‌ மீண்டதாக மக்கள்‌ முன்‌ அறிவித்ததோடு முஃதஸிலா சிந்தனைகளுக்கு எதிராகவும்‌ குரல்‌ கொடுத்தார்‌.

இரண்டாவது கட்டம்‌: முஃதஸிலா போக்கில்‌ இருந்து விலகி, குல்லாபிய்யா நிறுவனரான அபூ முஹம்மத்‌ ஸயீத்‌ பின்‌ குல்லாபின்‌ சிந்தனையைப்‌ பின்பற்றியமை. இக்காலப்பகுதியில்‌ அல்லாஹ்வின்‌ யதார்த்தம்‌ தொடர்பான பண்புகளை நிலைபடுத்தி, அவனது நாட்டம்‌ தொடர்பான ஸிபாத்துகளை நிராகரித்து வாழ்ந்தார்‌.

குல்லாபியாக்களின்‌ அகீதாக்‌ கோட்பாட்டைத்தான்‌ தற்கால அஷ்‌அரிய்யாக்கள்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ அகீதா என்று போதிக்கின்றனர்‌ என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய அம்சமாகும்‌.

மூன்றாவது கட்டம்‌: அஸ்மா, ஸிஃபாத்‌ விஷயத்தில்‌ அஹ்லுஸ்ஸுன்னாாக்களின்‌ வழிமுறையைப்‌ பின்பற்றியமை.

அவரது இறுதிக்‌ காலத்தில்‌ தமது நிலைப்பாட்டினை முழுமையாக மாற்றிக்‌ கொண்டு, அல்‌இபானா அன்‌ உசூலித்தியானா, மகாலாதுல்‌ இஸ்லாமிய்யீன்‌, அல்மூஜஸுல்‌ கபீர் போன்ற நூல்களை எழுதி தமது அகீதாக்‌ கோட்பாடு இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பலின்‌ கோட்பாட்டையும்‌, அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ கோட்பாட்டையும்‌ ஒத்தது என்று உலகுக்கு உணர்த்தியுள்ளார்கள்‌.

 قلت: رأيت لبي الحسن أربعة تواليف في الأصول يذكر فيها قواعد مذهب السلف في الصفات، وقال فيها: تمركما جاءت، ثم قال: وبذلك أقول، وبه أدين، ول تؤول. ((سير أعلم النبلء - (ج 15 / ص 86)

இமாம்‌ அபுல்ஹசன்‌ அவர்களுக்கு அடிப்படைக்கோட்பாட்டில்‌ நான்கு தொகுப்புகளை நான்‌ கண்டேன்‌. அவற்றில்‌ ஸிஃபாத்துகள்‌ விஷயத்தில்‌ ஸலஃபுகளின்‌ நிலைப்பாட்டை அவர்கள்‌ குறிப்பிட்டு, அவை வந்திருப்பது போன்று நடத்தப்பட வேண்டும்‌ எனக்‌ கூறியுள்ளதுடன்‌, அதைத்தான்‌ நான்‌ பேசுவேன்‌; அதையே மார்க்கமாகவும்‌ எடுத்து நடப்பேன்‌; அவற்றிற்குத்‌ தவறான விளக்கம்‌ தரப்படமாட்டாது. (சியர்‌- இமாம்‌ தஹபி)

எனினும்‌ அபுல்‌ ஹசன்‌ அஷ்‌அரீ (ரஹ்‌) அவர்கள்‌ தமது ஆரம்பக்‌ கால கட்டங்களில்‌ அங்கீகரித்த சயீத்‌ பின்‌ குல்லாபின்‌ என்பவரது அகீதாக்‌ கோட்பாட்டையே தற்கால அஷ்‌அரிய்யாக்கள்‌ சரி கண்டுள்ளனர்‌.

அதனால்‌ அவர்கள்‌ அவர்களின்‌ கோட்பாடு குல்லாபியாக்களின்‌ கோட்பாடே அன்றி இமாம்‌ அஷ்‌அரியின்‌ கோட்பாடு அல்ல என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌. அதுதான்‌ சரியான பிரயோகமாக இருக்க முடியும்‌.

மேலும்‌ இமாம்‌ அஷ்‌அரீ அவர்கள்‌ தமது இறுதிக்‌ காலத்தில்‌ அதில்‌ இருந்து முழுமையாக வாபஸ்‌ பெற்றுக்‌ கொண்டார்கள்‌ என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்‌.

இதனால்தான்‌ ஷாஃபி மத்ஹபைப்‌ பின்பற்றுவோர்‌ தம்மை மத்ஹபால்‌ ஷாஃபி, அகீதாவால்‌ அஷ்‌அரி என்று கூறி, முரண்பட்ட தத்துவத்தை மாணவர்களுக்கு இன்று வரை போதனை செய்கின்றனர்‌.

இமாம்‌ அபுல்‌ ஹசன்‌ அஷ்‌அரீ அவர்களின்‌ காலப்பகுதி (ஹிஜ்ரீ 270 - 324) க்கு இடைப்பட்ட காலப்பகுதியாகும்‌. இதுகாலம்‌ வரை மக்கள்‌ என்ன அகீதாக்‌ கோட்பாட்டில்‌ இருந்தார்கள்‌? என்பது இங்கு தவிர்க்க முடியாத கேள்வியாக இருப்பது போன்று இந்தக்‌ கோட்பாடு ஸஹாபாக்கள்‌, தாபியீன்கள்‌ போன்றோரின்‌ காலத்து அகீதாக்‌ கோட்பாட்டை உள்ளடக்கியது என்றும்‌ எடுக்க முடியாது என்பது மற்றொரு பார்வையாகும்‌.

மத்ஹபால்‌ ஷாஃபி, அகீதாவால்‌ ஷாஃபி என்ற பெறுமானம்‌ மிக்கதொரு கோட்பாட்டை மாணவர்கள்‌ மத்தியில்‌ போதிப்பதை விடுத்து, காலாவதியான அகீதா கோட்பாட்டைப்‌ போதிப்பது அவர்களில்‌ உள்ள நடுநிலையாளர்கள்‌ மத்தியில்‌ பலத்த சந்தேகத்தையும்‌ தோற்றுவித்துள்ளது.

அஸ்மா, ஸிஃபாத்தில்‌ அஷ்‌அரிய்யாக்களின்‌ நிலைப்பாடு:

அஷ்‌அரிய்யாக்கள்‌ அல்குர்‌ஆன்‌, சுன்னாவை ஆதாரமாகக்‌ கொண்டு தமது அகீதாக்‌ கோட்பாட்டை நிறுவியவர்களாகத்‌ தெரியவில்லை. முஃதஸிலா, ஜஹ்மிய்யா, குல்லாபிய்யா போன்ற பிரிவினரிடம்‌ காணப்பட்ட அஸ்மா, ஸிஃபாத்‌ சிந்தனையைத்தான்‌ தமது கோட்பாடாக அறிமுகம்‌ செய்கின்றனர்‌ என்பதை அவர்கள்‌ பற்றிய ஆய்வுகள்‌ மூலம்‌ அறிய முடிகின்றது.

இவர்களின்‌ நிறுவனர்களாக அபுல்‌ ஹசன்‌ அல்‌அஷ்‌அரீ (ரஹ்‌) அபூபக்ர்‌ அல்பாகில்லானி, அல்‌ஃபக்ருர்ராஸி ஆகிய மூவர்‌ அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றனர்‌.

இம்மூவரில்‌ அபுல்‌ ஹசன்‌ அல்‌அஷ்‌அரி‌ (ரஹ்‌) அவர்களின்‌ நிலைப்பாடு பற்றி நாம்‌ அறிந்ததே! அல் பாகில்லானி தெளிவான வழிகேட்டை உடையவர்‌ என்பதை அவர்‌ பற்றிய வாசிப்பின்‌ மூலம்‌ அறிந்து கொள்ளலாம்‌.

ஆனால்‌ பக்ருர்ராஸி என்பவர்‌ தர்க்கவியலில்‌ பிரசித்தி பெற்று விளங்கினார்‌. இவர்‌ குர்‌ஆன்‌, சுன்னாவுடன்‌ பகுத்தறிவு முரண்படுகின்ற போது பகுத்தறிவே முன்னிலைப்படுத்தப்படல்‌ வேண்டும்‌ என்ற வழிகேட்டுக்‌ கோட்பாட்டைக்கொண்டிருந்ததோடு அதனை உலகில்‌ அதிகமாகப்‌ பரப்பியவர்‌ என்பது பலருக்குத்‌ தெரியாது இருக்கலாம்‌.

இது பற்றி ராஸியின்‌ அத்தஃப்சீர்‌ அல்கபீர்‌ என்ற தஃப்சீர்‌ ராஸியில்‌ அல்லது கிதாபு அஸாஸித்தக்தீஸ்‌ என்ற ராஸியின்‌ நூலில்‌ காணமுடியும்‌.

இவரது சிந்தனைக்கு மறுப்புரையாக இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ نقضالتأسيس நக்ளுத்தஃஸீல் என்ற கிரந்தத்தை முஸ்லிம்‌ உலகுக்கு வழங்கியது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்‌.

இருப்பினும்‌ பக்ருர்ராஸி அவர்கள்‌ தமது இறுதி வேளையில்‌ குர்‌ஆனிய வழிமுறையே சிறந்தது என்றும்‌,
பகுத்தறிவின்‌ பாதை வழிகேடு என்றும்‌ கூறியதாக அறிஞர்கள்‌ சுட்டிக்காட்டுகின்றனர்‌. (அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்‌)

அஷ்‌அரிய்யாப்‌ பிரிவினர்‌ அல்லாஹ்வின்‌ அனைத்துப்‌ பெயர்களையும்‌ நிலைப்படுத்தினாலும்‌ குறிப்பிட்ட சில
பெயர்கள்‌, அவற்றின்‌ பண்புகளை மட்டுமே அஸ்மா, ஸிஃபாத்‌ பகுதியில்‌ நம்பி, நிலைப்படுத்துகின்றனர்‌. மீதமான அனைத்துப்‌ பண்புகளையும்‌ நிராகரிக்கின்றனர்‌. அல்லது தவறான விளக்கம்‌ தருகின்றனர்‌ என்பதே உண்மை.

அஷ்‌அரிய்யாக்கள்‌ நிலைப்படுத்தும்‌ பெயர்கள்‌, பண்புகள்‌

அஷ்‌அரிய்யாக்கள்‌ பின்வரும்‌ குறிப்பிட்ட சில பெயர்கள்‌, பண்புகளை மட்டும்‌ நம்பி நிலைப்படுத்துகின்றனர்‌.

என்றும்‌ உயிருள்ளவன்‌,

நன்கு அறிந்தவன்‌,

‌வல்லமையுள்ளவன்‌,

செவியுறுபவன்‌,

பார்ப்பவன்‌,

நாடுபவன்‌,

பேசுபவன்‌ ஆகிய பெயர்களாகும்‌.

இவற்றில்‌ முதகல்லிம்‌, முரீத்‌ ஆகிய இரு பெயர்கள்‌ அல்லாஹ்வின்‌ பெயர்களில்‌ இணைக்கப்பட்டிருப்பது தவறாகும்‌ என முன்னர்‌ சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அஷ்‌அரிய்யாக்கள்‌, அவர்களோடு இணைத்துப்‌ பேசப்படுகின்ற மாத்ரூதிய்யாப்‌ பிரிவினர்‌ பின்வரும்‌ பண்புகளை மட்டும்‌ நிலைப்படுத்துகின்றனர்‌.

வாழ்வு,
அறிவு,
ஆற்றல்‌, வல்லமை,
கேள்வி,
பார்வை,
நாட்டம்‌,
பேச்சு
ஆகிய ஏழு பண்புகளை அல்லாஹ்வின்‌ பண்புகளாக நிலைப்படுத்துகின்றனர்‌.

அதே வேளை, அல்பாகில்லானி, அபுல்மஆலீ அல்ஜுவைனி ஆகிய அறிஞர்கள்‌ அறிதல்‌, அடைதல்‌, அடைவு என்ற எட்டாவது ஓர்‌ பண்பையும்‌ சுட்டிக்காட்டியுள்ளனர்‌.

இது அல்‌இல்மு என்ற பண்பின்‌ பொருளில்‌ கட்டுப்படலாம்‌ என்பதனாலோ என்னவோ அஷ்‌அரிய்யாக்கள்‌ பண்புகள்‌ ஏழு என்று மட்டுப்படுத்தியுள்ளனர்‌.

இந்தப்‌ பண்புகளை ஸிஃபாத்துல்‌ மஆனி, பொருள்‌ சார்ந்த பண்புகள்‌ என்றும்‌, அஸ்ஸிஃபாத்துத்‌ தாத்தியா அல்லாஹ்வின்‌ உள்ளமையுடன்‌ தொடர்பான பண்புகள்‌ என்றும்‌ அழைக்கின்றனர்‌.

இவை ஒவ்வொரு பண்பும்‌ அல்லாஹ்வின்‌ யதார்த்தத்தோடும்‌, உள்ளமையோடும்‌ தொடர்புடையதால்‌ இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

பொருத்தம்‌, மகிழ்ச்சி, சிரிப்பு, கோபம்‌, வெறுப்பு, அதிருப்தி போன்ற அல்லாஹ்வின்‌ நாட்டத்துடன்‌ தொடர்பான வேறு பண்புகளை அஷ்‌அரிய்யாக்கள்‌ அங்கீகரிப்பதில்லை.

பகுத்தறிவால்‌ சிந்திக்கின்ற போது இவை அல்லாஹ்வுக்கு அவசியம்‌ இருந்தாக வேண்டிய பண்புகள்‌ என்று முடிவு செய்ய முடியும்‌. அதற்கு ஆதாரம்‌ தேடவேண்டிய அவசியம்‌ இல்லை என்பதை அடிப்படையாகக்‌ கொண்டு இவை‌ அஸ்ஸிஃபாத்துல்‌ அக்லிய்யா, பகுத்தறிவு சார்ந்த பண்புகள்‌ என்றும்‌ அழைக்கப்படுகின்றன.

அத்துடன்‌, இவை அல்லாஹ்வின்‌ உள்ளமையுடன்‌ தொடர்புபடுவதால்‌ அஸ்ஸிஃபாதுல்‌ வுஜுதிய்யா “உள்ளமை சார்ந்த பண்புகள்‌” என்றும்‌ அழைக்கப்படுகின்றன. அதே வேளை, பண்புகள்‌ என்பது படைப்புகளின்‌ பண்புகள்‌ போன்று புதிய தோற்றத்தைக்‌ குறிப்பதாக அமைந்தால்‌, அவை புதிய நிகழ்வைக்‌ கொண்டவையாகும்‌; எனவே அவை அல்லாஹ்வுக்கு உரியவையாக இருக்க முடியாது. மாறாக, அவை படைப்பினங்களுக்கு உரிய பண்புகளாகும்‌ என்ற காரணத்தின்‌ அடிப்படையில்‌ அவற்றை நிராகரிக்கின்றனர்‌.

உதாரணமாக அல்லாஹ்வின்‌ கருணை, கோபம்‌, சிரிப்பு, வெறுப்பு, மன்னிப்பு, அல்லாஹ்‌ அடிவானத்திற்கு இறங்கிவருதல்‌ போன்ற இன்னோரென்ன அல்லாஹ்வின்‌ செயல்‌ சார்ந்த, அவனது விருப்பத்துடனும்‌ நாட்டத்துடனும்‌ தொடர்புடைய பண்புகளைக்‌ குறிப்பிடலாம்‌.

இவை மீண்டும்‌ மீண்டும்‌ நடப்பதானது புதியதொரு நிகழ்வைத்‌ தோற்றுவிக்கின்றது. அதனால்‌ அவை படைப்பினங்கள்‌ தொடர்பான பண்புகளாகும்‌. எனவே அவற்றை அல்லாஹ்வின்‌ பண்புகளாக அங்கீகரிப்பது படைப்பினங்களுக்கு அவனை ஒப்பிட்டதாகக்‌ கொள்ளப்படும்‌ என்று வாதிடுகின்றனர்‌.

இவற்றை அல்லாஹ்வின்‌ தகுதிக்குத்‌ தோதுவாக நிலைப்படுத்தப்படுவதனால்‌ அவனுக்கு எவ்விதக்‌ குறையும்‌ வரப்போவதில்லை. மாறாக அது அவனுக்குப்‌ பெருமையாகவே அமையும்‌ என்பதால்‌ அஹ்லுஸ்ஸுன்னாப்‌ பிரிவினர்‌ அவற்றைப்‌ படைப்பினங்களுக்கு ஒப்பிடாது, அல்லாஹ்வின்‌ தகுதிக்குத்‌ தோதுவாக நிலைப்படுத்தியுள்ளனர்‌.

மாத்ரீதிய்யாக்கள்‌ என்போர்‌ அஷ்‌அரிய்யாக்கள்‌ குறிப்பிடும்‌ ஏழு பண்புகளோடும்‌ - அத்தக்வீன்‌ - ஆக்குதல்‌, உருவாக்கம்‌ என்ற பொருளில்‌ அமைந்த எட்டாவது ஓர்‌ பண்பை அதிகமாகக்‌ குறிப்பிடுகின்றனர்‌.

பண்புகள்‌ என்பன புதிய நிகழ்வுகளை அறிவுறுத்துபவையாக இருப்பின்‌ அஷ்‌அரிய்யாக்களைப்‌ போன்று அவற்றை மாத்ரீதியாக்களும்‌ நிராகரிக்கின்றனர்‌.

உதாரணமாக கோபம்‌. இது ஓர்‌ முறை ஏற்பட்டு, அது அடங்கியதும்‌ பின்னர்‌ ஏற்படும்‌ போது அது மாற்றத்தை
உள்ளடக்கிய ஓர்‌ புதிய நிகழ்வாகக்‌ கொள்ளப்படும்‌. அதை ஒருவர்‌ யதார்த்தமாகத்‌ தேடிக்‌ கொள்வது அல்ல. மாறாக வெளியில்‌ இருந்து வந்து சேர்வதாகும்‌. எனவே அவ்வாறான பண்புகள்‌ புதியவை, புதிய நிகழ்வுகள்‌ சார்ந்தவை, படைக்கப்பட்டவை, அவை படைப்பினங்களின்‌ பண்புகளாகவே இருக்க வேண்டும்‌. அவற்றை அல்லாஹ்வின்‌ பண்புகளாகக்‌ கொள்ள முடியாது என வாதிடுகின்றனர்‌.

முன்னர்‌ கூறப்பட்டுள்ள எட்டு பண்புகள்‌ அல்லாத ஏனைய ஸிஃபாத்துகளை அஷ்‌அரிய்யாக்கள்‌ போன்றே மாத்ரீதியாக்களும்‌ நிராகரிக்கின்றனர்‌. அல்லது, அவற்றை அங்கீகரித்து வெளிப்படையான பொருள்‌ இன்றி அஷ்‌அரிய்யாக்கள்‌ போன்று பொருள்களைச்‌ சிதைத்து தவறான விளக்கம்‌ தருகின்றனர்‌.

அது மட்டுமின்றி, தமது நிலைப்பாடு சரி என்றும்‌, ஸலஃபுகளான முன்னோர்கள்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ விஷயத்தில்‌ தவறான வழியில்‌ இருந்தனர்‌ என்றும்‌ நம்புகின்றனர்‌.

ஆரம்பகால குல்லாபிய்யாக்கள்‌, அஷ்‌அரிய்யாக்கள்‌ அல்லாஹ்வின்‌ நாட்டம்‌, அவனது விருப்பம்ஆ கிய பண்புகளோடு தொடர்பான பண்புகளைத்‌ தவிர மேற்படி வந்துள்ள பண்புகளை நிலைப்படுத்துகின்றனர்‌.

அல்லாஹ்வின்‌ நாட்டம்‌, விருப்பம்‌ ஆகிய பண்புடன்‌ தொடர்பான பண்புகளை நிலைப்படுத்துவது அல்லாஹ்வின்‌ ஆதியான -தாத்‌- யதார்த்தத்‌ தன்மையோடு புதியவை கலந்து விடும்‌ என்ற அச்சமே இதற்கான காரணம்‌ என்றும்‌ வாதிடுகின்றனர்‌.

அல்மாத்ரீதிய்யா

பொதுவாக இஸ்லாத்தில்‌ தோன்றிய பிரிவுகள்‌ யாவும்‌ ஓர்‌ சிந்தனையை அல்லது ஓர்‌ தனிமனித, அல்லது குழுவின்‌ சிந்தனையைப்‌ பிரதிபலிப்பதாகவே காணப்படுகின்றது. அந்த வகையில்‌ மாத்ரீதிய்யா பிரிவினரும்‌ இதில்‌ இருந்து விதிவிலக்கானவர்கள்‌ இல்லை.

இப்பிரிவினர்‌ அபூமன்சூர்‌ அல்மாத்ரீதி என்பவருடன்‌ இணைத்துப்‌ பேசப்படுகின்றனர்‌. அஷ்‌அரிய்யாப்‌ பிரிவினர்‌ அபுல்‌ ஹசன்‌ அஷ்‌அரீ (ரஹ்‌) அவர்களின்‌ மரணத்தின்‌ பின்னர்‌ அவருடன்‌ இணைத்து அறியப்பட்டது போன்று இப்பிரிவினரும்‌ அறியப்படுகின்றனர்‌.

மாத்ரீதிய்யா பிரிவினர்‌ கடந்து வந்த கால
கட்டங்கள்‌

1. நிறுவிய காலம்‌ (ஹிஜ்ரீ 333- முதல்‌...)

இக்காலப்‌ பகுதி முஃதஸிலாப்‌ பிரிவினர்களுக்கும்‌ மாத்ரீதிய்யாக்களுக்கும்‌ இடையில்‌ கடுமையான வாக்குவாதங்கள்‌ நடந்தேறிய கால கட்டம்‌ என்று அறியப்படுகின்றது.

இக்காலத்தின்‌ முக்கியமானவர்களுள்‌ ஒருவராக முஹம்மத் பின்‌ முஹம்மத்‌ மஹ்மூத்‌ அல்மாத்ரூதி அஸ்ஸமர்கந்தி என்பவர்‌ அறியப்படுகின்றார்‌. யூப்பிரடீஸ்‌ நதிக்கு அப்பாலுள்ள ஸமர்கந்து மாகாணத்தின்‌ நகரங்களில்‌ ஓர்‌ நகர்தான்‌ மாத்ரீத்‌ என்ற நகரம்‌. இந்த நகரத்துடன்‌ இணைத்து அபூ மன்ஸுர்‌ அல்மாத்ரீதி அறியப்படுகின்றார்‌.

2. உருவாக்க அல்லது அறிமுகக்‌ காலம்‌ (333- 500)

இமாம்‌ அல்மாத்ரீதி அவர்களின்‌ மரணத்தின்‌ பின்னரான அவரது மாணவர்களினதும்‌, அவர்களின்‌ கருத்தால்‌ தாக்கம்‌ பெற்றவர்களினதும்‌ பங்களிப்புக்‌ காலம்‌ என்றும்‌ இதனைக்‌ குறிப்பிட முடியும்‌. ஸமர்கந்தில்‌ வெளியான முதல்‌ தர்க்கவியல்‌ பிரிவினர்‌ என்று இவர்கள்‌ அறியப்படுகின்றனர்‌. இவர்கள்‌ அகீதாவில்‌ இமாம்‌ மாத்ரீதி அவர்களின்‌ போக்கையும்‌ கலை மற்றும்‌ சட்டவியல்‌ அம்சங்களில்‌ இமாம்‌ அபூஹனீபாவின்‌ போக்கையும்‌ சரி கண்டு தமது பிரச்சாரங்களை முடுக்கிவிட்டனர்‌.

இக்காலப்‌ பகுதியில்‌ இமாம்‌ மாத்ரீதியின்‌ கொள்கைச்‌ சார்பாக பல நூல்களைத்‌ தொகுத்து தமது பிரச்சாரங்களை முன்னெடுத்தனர்‌. இக்காலப்பகுதியில்‌ மாத்ரீதிய்யா சிந்தனை அதன்‌ உச்ச நிலையில்‌ கொடிகட்டிப்‌ பறந்தது என்பார்கள்‌ அறிஞர்கள்‌.

இக்காலத்தின்‌ சிந்தனை முன்னோடிகளாக அபுல்காசிம்‌ இஸ்ஹாக்‌ பின்‌ முஹம்மத்‌ பின்‌ இஸ்மாயீல்‌ அல்ஹகீமுஸ்‌ ஸமர்கந்தி மரணம்‌ ஹிஜ்ரீ (342) என்பவரும்‌, அப்தில்‌ கரீம்‌ பின்‌ மூசா பின்‌ ஈசா அல்பஸ்தவி அபூ முஹம்மத்‌ மரணம்‌ ஹிஜ்ரீ (390) என்பவரும்‌ அறியப்படுகின்றனர்‌. இவர்களைத்‌ தொடர்ந்து இன்னும்‌ பலர்‌ மாத்ரீதிய்யா கோட்பாட்டை முன்னெடுத்துள்ளனர்‌ என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்‌.

3.  தொகுப்பாக்க மற்றும்‌ கோட்பாடுகள்‌ நிறுவுதல்‌ காலம்‌:

மாத்ரீதிய்யாக்களின்‌ அகீதா கோட்பாட்டை நிறுவுதலும்‌ நூல்கள்‌ தொகுப்பாக்கக்‌ காலமும்‌ என அறியப்படும்‌ இந்தக்‌ காலப்பகுதி(ஹிஜ்ரீ 500-700) வரை என அறிஞர்களால்‌ வரையறை செய்யப்படுகின்றது. இது மாத்ரீதிய்யாக்களின்‌ காலக்‌ கட்டங்களில்‌ மிக முக்கியக்‌ காலக்‌ கட்டமாகக்‌ கொள்ளப்படுகின்றது.

இக்கால அறிஞர்கள்‌:
அபுல்‌ முயீன்‌ அந்நசஃபி (438-508) என்ற மைமூன்‌ பின்‌ முஹம்மத்‌ பின்‌ முஃதமத்‌ அந்நஸஃபி அல்மக்ஹுலி, நஜ்முத்தீன்‌ உமர்‌ அந்நஸஃபி (537-462) என்ற அபூ ஹஃப்ஸ்‌ நஜ்முத்தீன்‌ உமர்‌ பின்‌ முஹம்மத்‌ அல்ஹனஃபி அந்நஸஃபி ஆகிய இருவரும்‌ பிரிசித்தி பெற்று விளங்கினார்கள்‌.

4. விரிவாக்க மற்றும்‌ பரவலாக்கல்‌ காலம்‌ (ஹிஜ்ரீ 700 - 1300)
இது மாத்ரீதிய்யா சிந்தனையின்‌ முக்கியக்‌ காலப்‌ பகுதியாகக்‌ கொள்ளப்படுகின்றது. மாத்ரீதிய்யாக்களின்‌ செல்வாக்கு ஓங்கி வளரவும்‌, அவர்களின்‌ சிந்தனைகள்‌ பரவவும்‌ உஸ்மானிய சாம்ராஜ்ய சுல்தான்கள்‌ முக்கியப்‌ பங்கு வகித்தனர்‌.

அதனால்‌ புவியின்‌ கிழக்கு, மேற்கு, அரபி, அஜமிகள்‌ வாழும்‌ பிரதேசங்கள்‌, இந்தியா, துர்கி, ரோம்‌, பாரசீகம்‌ ஆகிய நாடுகள்‌ இதன்‌ சிந்தனைக்கு உந்தப்பட்டன.

இதன்‌ விளைவாகவே இந்திய தேசத்தில்‌ தேவ்பந்து மற்றும்‌ நத்வதுல்‌ உலமா போன்ற அரபுக்‌ கலாநிலையங்கள்‌ அமையப்‌ பெற்றன. தேவ்பந்து மத்ரசாவில்‌ ஹதீஸ்‌, ஹதீஸ்‌ விரிவுரை போன்ற பாடங்கள்‌ போதிக்கப்பட்ட போதும்‌ இன்றுவரை அது சூஃபிஸ சிந்தனைத்தாக்கம்‌ உள்ள ஓர்‌ கல்லூரியாகவே விளங்குகின்றது. கலீல்‌ அஹ்மத்‌ ஸஹாரன்பூரி, மற்றும்‌ பல அறிஞர்களின்‌ நூல்கள்‌, உரைகள்‌ இதற்குச்‌ சான்றாகும்.

அவ்வாறே நத்வதுல்‌ உலமாவின்‌ பாடப்‌ புத்தகங்கள்‌ ஹனஃபி மாத்ரீதிய்யா சிந்தனையின்‌ வெளிப்பாடாகவே நோக்கப்படுகின்றன.

5. பரேலவி மத்ரசா:

இக்கல்லூரியானது அப்துல்‌ முஸ்தபா (முஸ்தபாவின்‌ அடிமை) என்ற புனைப்‌ பெயரில்‌ அறிமுகமான சூஃபிஸ சிந்தனையில்‌ ஊறிப்போன, கப்ருவணங்கி மாத்ரூதி‌ சிந்தனையாளரான அஹ்மத்‌ ரிழாகான்‌ என்பருடன்‌ இணைத்துப்‌ பேசப்படுகின்றது. ஹிஜ்ரீ 1272 முதல்‌ இதன்‌ காலப்பகுதியாகும்‌.

இந்தக்‌ காலப்‌ பகுதியில்‌ இணைவைத்தல்‌, மண்ணறை வணக்கத்தின்‌ பக்கமாக அழைத்தல்‌, தேவ்பந்து மத்ரசாவிற்கு எதிர்ப்புத்‌ தெரிவித்தல்‌ போன்ற அம்சங்கள்‌ தெளிவாகக்‌ காணப்பட்டன. மட்டுமின்றி, அஹ்லுஸ்ஸுன்னா கோட்பாட்டில்‌ நடக்கின்ற முஸ்லிம்கள்‌ காஃ.பிர்களாகப்‌ பார்க்கப்பட்டனர்‌.

6. மத்ரசதுல்‌ கெளஸரி (ஹிஜ்ரீ 1296-1371)

முஹம்மத்‌ ஸாஹித்‌ அல்கெளஸரி என்பவர்‌ பெயரில்‌ இது அறியப்படுகின்றது. அஹ்லுஸ்ஸுன்னா முஸ்லிம்களும்‌ அவர்களின்‌ கொள்கையைப்‌ பறைசாட்டுகின்ற நூல்களும்‌ கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்ட காலமாகும்‌.

கெளஸரி என்ற ஹனஃபி, மாத்ரீதியா கொள்கையில்‌ கடும்‌ போக்காளராகக்‌ கொள்ளப்படுகின்றார்‌. ஸல‌ஃபுகளில்‌ தலை சிறந்த இமாம்களான இப்னு குஸைமா, அபுல்ஹசன்‌ அல்‌அஷ்‌அரீ, அல்‌ஆஜுர்ரீ, அத்தாரகுத்னீ, அத்தஹபீ ஆகியோரது கிரந்தங்களான முறையே அத்தவ்ஹீத்‌, இபானா, அஷ்ஷரீஆ, அஸ்ஸிஃபாத்‌, அல்வுலுவ்வு போன்றவையும்‌ பல கிரந்தங்களும்‌ இவரால்‌ கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

அல்லாஹ்வுக்கு உருவம்‌ கற்பிப்போர்‌, வடிவம்‌ கொடுப்போர்‌ போன்ற ஆதாரமில்லாத கடுமையான வார்த்தைகள்‌ கொண்டு விமர்சிக்கப்பட்டன. இவர்‌ தவஸ்ஸுல்‌ என்ற வாதத்தை முன்வைத்து இணைவைப்பு, மற்றும்‌ கப்ர்‌ வணக்கத்தின்‌ பக்கம்‌ மக்களைத்‌ தூண்டினார்‌ என்பதே இவரைப்‌ பற்றிய சுருக்கமான விமர்சனமாகும்‌.


மார்க்க அடிப்படைகளைப்‌ பெறும்‌ வழிகள்‌:

மாத்ரீதிய்யாக்கள்‌ மார்க்க அடிப்படைகளைப்‌ பெறுவதற்குப்‌ பின்வரும்‌ இரண்டு வழிமுறைகளை முன்வைக்கின்றனர்‌.

1. அல்‌அக்லிய்யாத்‌, பகுத்தறிவு சார்ந்தது என்று அழைக்கப்படும்‌ இப்பகுதி அல்‌இலாஹிய்யாத்‌, 'இறைகோட்பாட்டுடன்‌ தொடர்புடையது என்றும்‌ கூறப்படும்‌. இப்பகுதியில்‌ கோட்பாட்டு அம்சங்கள்‌ பகுத்தறிவின்‌ மூலம்‌ நிலைப்படுத்தப்படும்‌, நக்ல்‌ எனும்‌ சான்றுகள்‌ அதைத்‌ தொடர்ந்ததாக விளங்கும்‌. அத்தவ்ஹீத்‌, மற்றும்‌ ஸிஃபாத்கள்‌ தொடர்பான விஷயங்கள்‌ இதில்‌ இடம்‌ பெறும்‌.

2. அஷ்ஷரயிய்யாத்‌-இது(அஸ்ஸம்யிய்யாத்‌) என்றும்‌ அழைக்கப்படுகின்றது. பகுத்தறிவானது ஓர்‌அம்சத்தை இருப்பதாகவோ, இல்லை என்றோ உறுதிப்படுத்துகின்ற அம்சங்கள்‌ இதில்‌ இடம்‌ பெறும்‌. இதில்‌ புத்தியைக்‌ கொண்டு சிந்திக்க இடம்‌ இல்லை.

உதாரணம்‌, நுபுவ்வத்‌, மண்ணறை வேதனை, மறுமை நாள்‌ தொடர்பான அம்சங்கள்‌.

அல்குர்‌ஆன்‌, அஸ்ஸுன்னா ஆகிய மூலாதாரங்களே அங்கீகரிக்கப்பட்டதும்‌, அனைவரும்‌ அங்கீகரிக்கின்ற நடைமுறையுமாகும்‌. அதனால்‌ இது மார்க்கம்‌ அங்கீகரிக்காத பிரிவாகும்‌.

பகுத்தறிவை முன்னிலைப்படுத்தி மார்க்க அடிப்படைகளை அணுகும்‌ முறையானது பகுத்தறிவுக்கு உடன்பாடான மார்க்க அம்சங்களை அங்கீகரிப்பதும்‌ இல்லாத போது அதனை நிராகரிப்பதும்‌ என்ற கோட்பாட்டை ஃபலாஸிஃபாக்கள்‌ எனப்படும்‌ தத்துவியலாளர்கள்‌ முன்வைத்தனர்‌. இதன்‌ தாக்கம்‌ மாத்ரீதியாக்களிடம்‌ ஊடுருவி உள்ளது. அதனால்‌ மார்க்கத்தின்‌ சான்றுகளை அணுகும்‌ முறையிலும்‌ அவர்கள்‌ தவறிழைத்தனர்‌. சரியான பகுத்தறிவு சரியான சான்றுடன்‌ முரண்படாது என்பது அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ நிலைப்பாடாகும்‌.

அஸ்மா, ஸிஃபாத்தில்‌ மாத்ரீதிய்யாக்களின்‌ நிலைப்பாடு:

அல்லாஹ்வின்‌ அழகிய பெயர்களை அவர்கள்‌ நிலைப்படுத்தியுள்ளனர்‌. இதில்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு உடன்‌ பட்டுள்ளனர்‌. இருப்பினும்‌, அல்லாஹ்வின்‌ பெயர்களில்‌ இடம்‌ பெறாத தயாரிப்பாளன்‌, பழமையானவன்‌‌ குறித்த ஓர்‌ உருவம்‌ போன்ற பெயர்களை அல்லாஹ்வின்‌ பெயர்களாகக்‌ குறிப்பிடுகின்றனர்‌. அதற்குச்‌ சரியான ஆதாரம்‌ கிடையாது.

அல்லாஹ்வின்‌ பெயர்களாக வருவதற்கும்‌ அவனைப்‌ பற்றி அறிவிப்பதற்கும்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்கள்‌ விதித்துள்ள வேறுபாடுகளை இவர்கள்‌ வேறுபடுத்தி நோக்குவதில்லை. அல்லாஹ்வைப்‌ பற்றி அறிவிப்பதற்குப்‌ பொருத்தமான சொற்களைக்‌ கொண்டு அறிவிக்கலாம்‌. ஆனால்‌ பெயர்கள்‌ அவ்வாறு அல்ல. அவை தவ்கீஃபி சார்ந்ததாகும்‌. அதாவது குர்‌ஆன்‌, சுன்னாவில்‌ அவை இடம்‌ பெற வேண்டும்‌.

மாத்ரீதிய்யா சிந்தனையின்‌ அச்சாணியாக விளங்கும்‌ அபூ மன்சூர்‌ அல்மாத்ரீதி அவர்கள்‌ முர்ஜிஆ, ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷ்‌அரிய்யா, குல்லாபியா போன்ற பிரிவுகளின்‌ சிந்தனைத்‌ தாக்கம்‌ பெற்றவராக விளங்கிய காரணத்தால்‌ அவரைப்‌ போன்று அஸ்மா, ஸிஃபாத்தில்‌ பொருள்‌ பாழடிப்பு, கருத்துச்‌ சிதைவு போன்ற குறைபாடுகளுக்கு மாத்ரீதிய்யாக்களும்‌ உட்படுவது தவிர்க்க முடியாததாகும்‌.


மாத்ரீதிய்யா அகீதாவின்‌ உண்மை நிலை:

அல்லாஹ்‌ இயல்பில்‌ மனிதன்‌ அவனை வணங்கி வழிபடுபவனாகப்‌ படைத்திருக்க, அதற்கு மாறாக அல்லாஹ்வை அறிவதற்குப்‌ பகுத்தறிவுதான்‌ முதன்மையானது என ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷ்அரிய்யா பிரிவுகள்‌ போன்று இவர்களும்‌ வாதிடுகின்றனர்‌.

பருவ வயதை அடைந்த ஒருவர்‌ முதலாவது தடவை கலிமாவைப்‌ பொருள்‌ அறிந்து மொழிவது என்பதே அடிப்படையாகும்‌. அல்லாஹ்வைப்‌ பகுத்தறிவைக்‌ கொண்டுதான்‌ அறிய வேண்டும்‌ என்றிருப்பின்‌ இறைத்தூதர்கள்‌ அனுப்பப்பட்டு, வேதங்கள்‌ வழங்கப்பட்டிருக்க மாட்டாது என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்க.

பகுத்தறிவானது நன்மை, தீமையைத்‌ தீர்மானிக்கப்‌ புறப்பட்டால்‌ நிச்சயமாக அது மோசமான விளைவையே கொண்டுவரும்‌. இதற்கு இன்றைய மனிதச்‌ சட்டங்களால்‌ ஆட்சி செய்யப்படும்‌ நாடுகள்‌ ஓர்‌ உதாரணமாகும்‌.

அகீதா சார்ந்த அம்சங்களில்‌ ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்களை அங்கீகரிப்பதில்லை. சட்டங்கள்‌ சார்ந்த கிளை அம்சங்களில்‌ மட்டும்‌ அங்கீகரித்தல்‌. அஷ்‌அரிய்யாக்களிடமும்‌ இந்த நிலைப்பாடு காணப்படுகின்றது.

இந்தப்‌ போக்கு குர்‌ஆன்‌, சுன்னாவுக்கு முரண்பாடான கோட்பாடாகும்‌. நபித்தோழர்கள்‌ காலத்தில்‌ முதவாதிர்‌, ஆஹாத்‌ என்ற பிரிவுகொண்டு அகீதா விவகாரங்கள்‌ அணுகப்படவில்லை என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்க.

அல்குர்‌ஆன்‌ அல்லாஹ்வின்‌ யதார்த்தமான பேச்சு அல்ல என்றும்‌, மாறாக அது அல்லாஹ்வில்‌ இருந்தும்‌ புறப்பட்ட செவிமடுக்க முடியாத ஓர்‌ பேச்சு என்றும்‌, அதன்‌ வாசகத்தை மட்டுமே செவியேற்கலாம்‌ என்றும்‌ வாதிடுகின்றனர்‌. அதாவது குர்‌ஆன்‌ படைக்கப்பட்டது என்ற வாதம்‌.

ஈமான்‌ என்பது உள்ளத்தால்‌ உண்மைப்படுத்தி, அங்க, அவயவங்களால்‌ நடைமுறைப்படுத்துவதாகும்‌, வழிப்பட்டு நடப்பதால்‌ அது அதிகரிக்கின்றது; பாவம்‌ செய்வதால்‌ குறைகின்றது என்ற அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ விளக்கத்திற்கு மாறாக ஈமான்‌ என்பது உண்மைப்படுத்துவதாகும்‌; அது கூடவோ, குறையவோ மாட்டாது என்றும்‌ வாதிடுகின்றனர்‌.

அல்லாஹ்‌ வணங்கி வழிபடத்‌ தகுதியானவன்‌ என்ற அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ விளக்கத்திற்கு மாறாக அல்லாஹ்‌ என்பவன்‌ புதிதாக ஒன்றை உருவாக்கும்‌ ஆற்றல்‌ பெற்றவன்‌ என வாதிடுவதன்‌ மூலம்‌ அல்லாஹ்‌ என்பவன்‌ படைப்பாளன்‌ என்று அங்கீகரித்தால்‌ போதும்‌ என்ற பொருள்‌ தருகின்றனர்‌.


மாத்ரீதிய்யா சிந்தனையின்‌ செல்வாக்கு:

மாத்ரீதிய்யாவின்‌ சிந்தனையைப்‌ பிரிதிபலிக்கின்ற நாடுகளாக ஹனஃபி மத்ஹப்‌ செல்வாக்குள்ள நாடுகள்‌ சுட்டிக்காட்டப்படுகின்றன. குறிப்பாக, இந்தியா, பங்களாதேஷ்‌, பாகிஸ்தான்‌, ஆப்கானிஸ்தான்‌, சீனா, இத்தாலி, இரஷ்யக்குடியரசுகள்‌ போன்ற நாடுகள்‌ முக்கியமானவையாகும்‌.

அஷ்‌அரிய்யாக்கள்‌ சட்டத்துறையில்‌ ஷாஃபி மத்ஹபையும்‌, அகீதாவில்‌ குல்லாபிய அஷ்‌அரிய்யா சிந்தனையையும்‌ முன்னிலைப்படுத்துவது போல மாத்ரீதிய்யாக்கள்‌ ஹனஃபி மத்ஹபையும்‌, மாத்ரீதிய்யாக்‌ கொள்கையையும்‌ கடைப்பிடிக்கின்றனர்‌.

ஆக இரு முக்கியப்‌ பிரிவினரும்‌ அடிப்படையான அகீதா அம்சத்தில்‌ தமது இமாம்களை முன்மாதிரியாகக்‌ கொள்ளவில்லை என்பதே உண்மை

மற்றொரு பிரிவினர்‌

அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌ பண்புகள்‌ விஷயத்தில்‌ எவ்விதக்‌ கருத்தும்‌ கூற முற்படாத மற்றோரு பிரிவினரும்‌ இருக்கின்றனர்‌. அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ பற்றி வரும்‌ வசனங்களை, ஹதீஸ்களை வெளிப்படையான விளக்கத்தில்‌ விளக்குவது வழிகேடானது என்றும்‌ அல்லாஹ்வின்‌ பெயர்‌ என்பது பெயர்‌ வைக்கப்பட்ட அவனது யதார்த்தத்தை மட்டுமே குறிக்கின்ற காரணத்தால்‌ அவை ஓர்‌ தாத்தையே குறிக்கும்‌ என்றும்‌ பல பெயர்கள்‌ கொண்டு அவன்‌ அழைக்கப்படுவது அவனது ஓர்மைத்‌ தன்மைக்கு எதிரானது என்றும்‌ கூறுகின்றனர்‌.

அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ மறுப்பு:

இவர்கள்‌ மறுக்கின்ற இவ்வாறான பண்புகள்‌ ஆரம்பம்‌ முதல்‌ அல்லாஹ்விடம்‌ இருந்து வருபவை என்றும்‌, அவை புதிதாக உண்டாகியவை அல்ல என்றும்‌, அவற்றை அல்லாஹ்‌ நாடுகின்ற போதுதான்‌ நடைமுறைப்படுத்துகின்றான்‌ என்றும்‌ குறிப்பிடுகின்ற அஹ்லுஸ்ஸுன்னாக்கள்‌ அவை நடக்கின்ற போது புதியவையாக இருந்தாலும்‌ அவை அல்லாஹ்வுடன்‌ தொடர்புடைவையே அன்றி மனிதர்களின்‌ நிகழ்வுகளுடன்‌ தொடர்புடையவை அல்ல. எனவே அவற்றை அல்லாஹ்வின்‌ தகுதிக்குத்‌ தோதுவாக நம்புவதுதான்‌ கடமை என்றும்‌ குறிப்பிடுகின்றனர்‌.

அஷ்‌அரிய்யாக்கள்‌ குறிப்பிடும்‌ இருவகைப்‌ பண்புகள்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளை அஷ்‌அரிய்யாக்கள்‌ இரண்டாக நோக்குகின்றனர்‌.

1. இவை அல்லாஹ்வின்‌ எதார்த்தம்‌ மீது அறிவிக்கின்ற, அவனது பொதுப்படையான உள்ளமையை உறுதி செய்கின்ற ஸிஃபத்தாகும்‌. இது الوجود المطلق என்று அழைக்கப்படுகின்றது.

2. சாத்தியமில்லாத அல்லது இறைத்‌ தகுதிக்கு அப்பாற்பட்ட பண்புகள்‌.

அல்லாஹ்வில்‌ இருக்கமுடியாத-பண்புகள்‌ ஐந்து வகைப்படும்‌:

1- ஆதி முதல்‌ இருந்து வருதல்‌. ஆரம்பம்‌ முடிவில்லாத தன்மை

2- முடிவின்றித்‌ தொடர்ந்து நிலையாக இருத்தல்‌.

3- புது நிகழ்வுத்‌ தன்மைகளுக்கு மாற்றம்‌. அதாவது அல்லாஹ்வின்‌ படைப்புகளுக்குப்‌ போன்று புதிய புதிய நிகழ்வுகளை அங்கீகரிக்காத தன்மை, அல்லது படைப்பினங்களுக்கு மாற்றமான தன்மை.

இந்த விதியினால்‌ அல்லாஹ்வின்‌ திருப்தி, கருணை, கோபம்‌, நேசம்‌, அன்பு, பாசம்‌, சிரிப்பு, அர்ஷின்‌ மீதிருத்தல்‌, பேசுவது போன்ற அவனது செயல்‌ சார்ந்த பண்புகள்‌ பாழடிக்கப்பட்டன.

4- இடம்‌, திசைகளை விட்டு நீங்கி, பிறர்‌ துணையின்றித்‌ தானாக நிலைத்திருத்தல்‌. இந்த விதியின்‌ மூலம்‌ அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதிருப்பது தகர்க்கப்பட்டு, அவன்‌ எங்கும்‌ இல்லை; எதிலும்‌ இல்லை என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது.

5-‌ நிகரற்ற தனித்துவம்‌ - தனித்தன்மை என்பனவாகும்‌.

இவற்றில்‌ ஒன்றை அல்லாஹ்வின்‌ பேரில்‌ நடைமுறைப்படுத்துகின்றபோது அதற்கு எதிரானதை இல்லாதொழிப்பது அவசியமாகக்‌ கொள்ளப்படும்‌. உதாரணமாக தனிமை, அல்லது தனித்தவனாக இருத்தல்‌ என்ற பண்புக்கு எதிரான பண்பு பலவின்பாலாகும்‌. அதாவது அல்லாஹ்‌ ஒருவன்‌, பலர்‌ அல்ல என்பது இங்கு தெளிவாகும்‌.

அதனால்‌ இது مهمات الأمهات முக்கியமானவற்றுள்‌ தலையானவை என்ற பொருளில்‌ அழைக்கப்படுகின்றன.

இவர்கள்‌ அஸ்மா, ஸிஃபாத்துகளை அங்கீகரித்திருக்கின்றார்களே என்ற ஐயம்‌ இங்கு எழலாம்‌. ஆம்‌. இவர்கள்‌ குறிப்பிட்ட சில பண்புகளைத்தான்‌ அங்கீகரிக்கின்றனர்‌. தமது குறுகிய கோட்பாட்டினால்‌ அல்லாஹ்வின்‌ பல நூறு பண்புகளை மறுக்கின்றனர்‌.

உதாரணமாக, கோபம்‌, சிரிப்பு, வெறுப்பு, நேசம்‌, தீர்ப்பிற்காக வருவது, முகம்‌, கை, பேச்சு, அர்ஷின்‌ மீதிருத்தல்‌ போன்ற இன்னோரென்ன பண்புகளைக்‌ குறிப்பிடலாம்‌.

அல்லாஹ்வுக்கு ஏழு பண்புகள்‌ மட்டும்‌ உண்டு என முடிவு செய்ததைப்‌ போன்று ஏனைய பண்புகளிலும்‌ முடிவு செய்யாமல்‌ இருப்பது அஷ்‌அரிய்யாக்களின்‌ அறியாமையாகும்‌.

அத்துடன்‌, ஏழு பண்புகளை என்ன அடிப்படையைத்‌ தழுவி நிலைப்படுத்தினார்களோ அதே விதிகளின்‌ அடிப்படையில்‌ அல்லாஹ்வின்‌ ஏனைய பண்புகளை நிலைப்படுத்துவதுதான்‌ அறிவுடமையாகும்‌. அதைத்தான்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்கள்‌ கடைப்பிடித்துள்ளனர்‌.

பண்புகளை நிலைப்படுத்துவதால்‌ அவை படைப்பினங்களின்‌ பண்புகளுக்கு ஒப்பாகின்றன. எனவே, அதனாலும்தான்‌ அவற்றை நாம்‌ நிராகரிக்கின்றோம்‌ என்ற அவர்களின்‌ இன்னொரு வாதமும்‌ தவறானதாகும்‌.

ஏனெனில்‌, அல்லாஹ்வின்‌ தகுதிக்குத்‌ தோதுவாக, அவனது படைப்பினங்களின்‌ பண்புகளுக்கு ஒப்பிடாது அவற்றை நம்பவேண்டும்‌ என்பதுதான்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ நிலைப்பாடாகும்‌.

முஷப்பிஹா: 

அல்லாஹ்வையும்‌, அவனது பண்புகள்‌ செயற்பாடுகள்‌ என்பவற்றையும்‌ அவனது படைப்பினங்களின்‌ பண்புகளுக்கும்‌ செயற்பாடுகளுக்கும்‌ ஒப்பிடுவோர்‌.

இஸ்லாமிய வரலாற்றில்‌ ராஃபிழாக்கள்‌ எனப்படும்‌ ஷீஆக்களில்‌ இருந்துதான்‌ இப்பிரிவினர்‌ அறியப்பட்டார்கள்‌. இவர்கள்‌ ஸபயிய்யா என அறிஞர்களால்‌ அடையாளப்படுத்தப்படுகின்றனர்‌.

யூதன்‌ அப்துல்லாஹ்‌ பின்‌ ஸபஃ என்பவனது சிந்தனையைப்‌ பிரதிபலிப்பதால்‌ இந்தப்‌ பெயர்‌ கொண்டு இந்தப்‌ பிரிவினர்‌ அழைக்கப்படுகின்றனர்‌.

இவனே முதன்‌ முதலில்‌ அலீ (ரழி) அவர்களைக்‌ கடவுள்‌ நிலைக்கு உயர்த்திப்‌ பேசினான்‌. இவன்தான்‌ அலீ (ரழி) அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ ஒளியில்‌ இருந்து படைக்கப்பட்டவர்கள்‌; அவனது அவதாரம்‌ என்ற கருத்தையும்‌ விதைத்தான்‌.

இந்தக்‌ கருத்தை அங்கீகரித்த ஓர்‌ பிரிவினர்‌ கலீஃபா அலீ (ரழி) அவர்களால்‌ தீயில்‌ போட்டுக்‌ கொழுத்தப்பட்ட போது “நெருப்பால்‌ வேதனை செய்கின்ற அதிகாரம்‌ அல்லாஹவுக்குரியது” எனவே அலீ (ரழி) அவர்கள்‌ கடவுள்தன்மை உள்ளவர்‌ என்பது இப்போது உறுதியாகிவிட்டது எனத்‌ தமது கொள்கைக்கு நியாயம்‌ கூறினார்கள்‌.

ஹிஷாம்‌ பின்‌ அல்ஹகம்‌ அர்ராஃபிழி, மற்றும்‌ ஹிஷாம்‌ பின்‌ சாலிம்‌ அல்ஜவாலீகி, தாவூத்‌ அல்ஜவாலீகி, முகாதில்‌ பின்‌ சுலைமான்‌ ஆகியோர்‌ இந்தச்‌ சிந்தனைகளை முதலில்‌ விதைத்தவர்கள்‌ என்பதால்‌ அவர்களின்‌ பெயர்களோடு இணைத்து ஹாஷிமிய்யாப்‌ பிரிவினர்‌ என்று இவர்கள்‌ அழைக்கப்பட்டனர்‌.

அல்லாஹ்வின்‌ உடல்‌ அமைப்பு பற்றி எல்லை மீறிப்‌ பேசிய அபூ அப்தில்லாஹ்‌ பின்‌ முஹம்மத்‌ பின்‌ கர்ராம்‌ அஸ்ஸிஜிஸ்தானி என்பவனைப்‌ பின்பற்றும்‌ கர்ராமிய்யா பிரிவினர்‌ இந்தச்‌ சிந்தனையில்‌ வந்தவர்களாவர்‌.

ஆரம்பக்‌ காலங்களில்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளைப்‌ படைப்பினங்களின்‌ பண்புகள்‌ போன்று ஓப்பிட்டுக்கூறிய இந்தப்பிரிவினர்‌ பிற்பட்ட காலங்களில்‌ அல்லாஹ்வை அவனது படைப்புகளுக்கு ஒப்பிட்டுப்‌ பேசத்‌ தொடங்கினர்‌. பின்னர்‌ படைப்புகளில்‌ சிலரை அவனது அவதாரமாகக்‌ கருதி அவர்களிடம்‌ மன்றாடினர்‌.

வேறு சிலர்‌ அல்லாஹ்வும்‌ அடியானும்‌ ஒன்று என்று கூறினர்‌. அவனே அனைத்தும்‌ என்று கூறினர்‌. இது காலப்போக்கில்‌ அத்வைதச்‌ சிந்தனைக்கும்‌, அவ்லியா வழிபாட்டிற்கும்‌ அடித்தளமாக அமைந்த சிந்தனையாக மாறியது.

இந்தச்‌ சிந்தனை அப்துல்காதிர்‌ அல்ஜீலானி, காஜாமுயீனுத்தீன்‌ ஜிஸ்தி, ஷாஹுல்‌ ஹமீத்‌, முகைதீன்‌ இப்னு அரபி, அபுல்‌ ஹசன்‌ அஷ்ஷாதுலி போன்ற சாதாரண மனிதர்களை அல்லாஹ்வின்‌ அந்தஸ்தில்‌ உயர்த்தி, மனிதர்கள்‌ தமது தேவைகளை வேண்டும்‌ நிலைக்குக்‌ கொண்டு சென்றது.

இதனால்‌ அப்துல்‌ காதிர்‌ ஜீலானி (ரஹ்‌) போன்றோர்‌ மிகப்‌ பெரும்‌ உதவியாளர்‌, மகத்தான துணை (அச்சாணி) போன்ற பெயர்கள்‌ கொண்டு அழைக்கப்பட்டனர்‌.

அக்தாப்கள்‌, அவ்லியாக்கள்‌, அப்தால்கள்‌ எனப்படுவோரே உலகை இயக்குகின்றார்கள்‌; அவர்களில்‌ ஏழுபேர்‌ இயக்குகின்றார்கள்‌ இருவர்‌ இயக்குகின்றனர்‌ நால்வர்‌ இயக்குகின்றனர்‌ போன்ற இறை நிராகரிப்புக்‌ கொள்கை இவ்வாறுதான்‌ முஸ்லிம்‌ உலகில்‌ புகுந்தது என்று சுட்டிக்காட்டுகின்றது.

வஹ்ததுல்‌ வுஜூத்‌ பிரிவினர்‌:

அல்லாஹ்‌ என்ற யதார்த்தத்தில்‌ இருந்தே உலகில்‌ அனைத்தும்‌ தோன்றின. அவனே அனைத்தினதும்‌ மூலமாக விளங்குகின்றான்‌. அவனில்‌ இருந்து பிரிந்ததே அனைத்தும்‌ என்ற சிந்தனையே இது.

சுருக்கமாகக்‌ கூறினால்‌, அனைத்தும்‌ அவனே என்ற கோட்பாட்டை முன்வைப்போர்‌ வஹ்ததுல்‌ உஜுத்‌ பிரிவினர்‌ என்று அழைக்கப்படுகின்றனர்‌.

உலகில்‌ பெயர்கள்‌ வேறாகவும்‌, நிறங்கள்‌ பலதாகவும்‌, தெய்வங்கள்‌ பலதாகவும்‌ தென்பட்ட போதும்‌ அனைத்தும்‌ அவனது உள்ளமைதான்‌; அனைத்தும்‌ அவனேதான்‌ என்ற இந்த வழிகேடு மிகவும்‌ ஆபத்தானதாகும்‌. இந்தச்‌ சிந்தனைக்‌ கோட்பாடு அத்வைதத்தின்‌ அச்சாணியாக விளங்குகின்றது.

அது மட்டுமின்றிப்‌, படைப்பாளனும்‌, படைப்பும்‌ ஒன்று என்ற ஃபிர்‌அவ்னியச்‌ சிந்தனையை விடப்‌ பெரிய வழிகேடாக இந்தக்‌ கோட்பாடு கொள்ளப்படுகின்றது. இந்தச்‌ சிந்தனையால்‌ பாதிக்கப்பட்ட பலர்‌ அல்லாஹ்வின்‌ அவதாரமாகத்‌ தம்மை அறிமுகம்‌ செய்து மக்களை வழிகெடுத்தனர்‌.

ஓர்‌ அடியான்‌ அல்லாஹ்வின்‌ நிலையை அடைந்து விட்டால்‌ அவன்‌ அவனைத்‌ தொழுவதால்‌ என்ன பயன்‌?
எனக்‌ கேள்வி எழுப்புகின்றனர்‌. இது அல்லாஹ்வை அவனது படைப்பினங்களை விட்டுப்‌ பிரித்து நோக்குகின்ற தவ்ஹீத்‌ கோட்பாட்டை முற்றாக நிராகரித்து, அவனே அனைத்தும்‌ என்ற சூஃபித்துவத்தின்‌ முக்தி நிலையான குஃப்ரிய்யத்தை அறிமுகம்‌ செய்வதாக அமைகின்றது.

இந்தக்‌ கோட்பாட்டைத்தான்‌ மன்சூர்‌ அல்கல்லாஜ்‌, இப்னுல்‌ ஃபாரிள்‌ இப்னு அரபி போன்ற வழிகேட்டின்‌ முன்னோடிகள்‌ போதித்தனர்‌. இது இமாம்‌ கஸ்ஸாலியின்‌ இஹ்யா உலூமித்தீன்‌ என்ற நூலில்‌ ஆங்காங்கு அங்கீகாரமாகப்‌ பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக இல்முல்‌ முகாஷஃபாத்‌ (மறைஞானத்‌ தத்துவங்கள்‌) என்ற பகுதியில்‌ இவ்வாறான வழிகேடுகள்‌ இடம்‌ பெற்றுள்ளன. அதைப்‌ பின்வரும்‌ பகுதியில்‌ கவனிக்கலாம்‌.

முஹம்மத்‌ நபியின்‌ ஒளியில்‌ இருந்தே அனைத்தும்‌ படைக்கப்பட்டன என்று சூஃபிகளும்‌, அலீ அவர்களின்‌
பிரகாசத்தில்‌ இருந்துதான்‌ மனிதர்கள்‌ படைக்கப்பட்டனர்‌ என்று ஷீஆக்களும்‌ முன்வைக்கின்ற கோட்பாட்டுக்கும்‌, அத்வைதக்‌ கோட்பாட்டிற்கும்‌ இடையில்‌ இறுக்கமான உறவு இருப்பதை மறுக்க முடியாது.

தவ்ஹீத்‌ என்பது அல்லாஹ்வை வணக்க வழிபாடுகளில்‌, அவனது இறையியற்‌ பண்புகளில்‌ ஓர்மைப்படுத்திடும்‌ கொள்கைக்‌ கோட்பாடுகளைப்‌ பொதுவாகக்‌ குறித்தாலும்‌ அல்லாஹ்வும்‌, அவனது படைப்பும்‌ ஒன்று எனப்‌ பார்ப்பதும்‌ சூஃபித்துவச்‌ சிந்தனை மேலோங்கி இருந்த காலத்தில்‌ அறிஞர்களால்‌ தவ்ஹீதி - அத்தைவதி - என்று அழைக்கப்பட்டது. 

இமாம்‌ கஸ்ஸாலீ அவர்களின்‌ தவ்ஹீத்‌ பற்றிய பார்வை 

இமாம்‌ கஸ்ஸாலீ அவர்கள்‌ பற்றிய அறிமுகக்‌ குறிப்பு:

அபூ ஹாமித்‌ அல்கஸ்ஸாலீ என்ற புனைப்‌ பெயரில்‌ அறியப்படும்‌ இமாம்‌ கஸ்ஸாலீ (ரஹ்‌) அவர்கள்‌ குராசான்‌ மாகாண தூஸ்‌ நகரில்‌ உள்ள குக்கிராமமான கஸாலாவில்‌ ஹிஜ்ரீ 450 இல்‌ பிறந்து ஹிஜ்ரீ 505 இல்‌ மரணமானார்கள்‌.

கி.பி. 1058-1111 காலப்பகுதியில்‌ வாழ்ந்த தத்துவமேதைகளில்‌ ஒருவராகவும்‌, சூஃபிசச்‌ சிந்தனையாளராகவும்‌ காணப்பட்ட இமாம்‌ கஸ்ஸாலி அவர்கள்‌ தலை சிறந்த அறிஞர்களுள்‌ ஒருவராக விளங்கினார்‌ என்பதை மறுக்கமுடியாது.

இருநூறுக்கும்‌ அதிகமான நூல்களைத்‌ தொகுத்தளித்த இவரது நூல்களுள்‌
إحياء علوم الدين
تهافت الفلسفة
مقاصد الفلسفة
المنقذ من الضلل
المستصفى من علم الأصول
المنخول من علم الأصول
الوجي
فضائح الباطنية
போன்ற நூல்கள்‌ அவரது அறிவைப்‌ பறைசாற்றவல்லவையாக விளங்குகின்றன. அவற்றுள்‌ சில இன்றும்‌ இஸ்லாமியச்‌ சட்டக்கலையின்‌ முன்னோடி நூல்களாக விளங்குகின்றன.

தர்க்கவியல்‌ போன்ற வழிமுறைகள்‌ உச்ச நிலையில்‌ காணப்பட்ட இமாம்‌ அவர்களின்‌ காலமும்‌ பல நகர்வுகளையும்‌, மாறுதல்களையும்‌, திருப்புமுனைகளையும்‌ கொண்டதாகவே இருந்துள்ளன என்பதை அவரது வாழ்வியல்‌ சரித்திரம்‌ கூறுகிறது.

இவர்‌ ஒரு கட்டத்தில்‌ சூஃபித்துவத்தில்‌ ஊறித்திளைத்தவராக விளங்கியதோடு வஹ்ததுல்‌ உஜூத்‌ (யதார்த்தமும்‌, உள்ளமையும்‌ ஒன்றே) என்ற வழிகெட்ட கொள்கையையும்‌, அதன்‌ கொள்கையாளர்களையும்‌ சரிகண்டுள்ளார்‌ என்பதற்கு அவரது இஹ்யா என்ற நூல்‌ சான்றாக விளங்குகின்றது. அந்த நூலில்‌ இருந்தே சில கருத்துகள்‌ இங்கு முன்வைக்கப்படுகின்றன.

இருப்பினும்‌ இவர்‌ மரணிக்கின்ற போது புகாரிக்‌ கிரந்தம்‌ அவரது நெஞ்சின்‌ மீதிருந்த நிலையில்‌ மரணித்ததாக அறிஞர்கள்‌ குறிப்பிடுகின்றனர்‌. அல்லாஹ்வே அது பற்றி நன்கறிந்தவன்‌. 

இமாம்‌ கஸ்ஸாலீயின்‌ பார்வையில்‌ தவ்ஹீதின்‌ படித்தரங்கள்‌:

ஏற்கெனவே நாம்‌ குறிப்பிட்ட தவ்ஹீத்‌ கோட்பாட்டுக்கு நேர்‌ முரணான வேறு நான்கு வகையான தவ்ஹீத்‌ பற்றி இமாம்‌ கஸ்ஸாலீ அவர்கள்‌ முன்வைக்கின்றார்கள்‌. அவற்றில்‌ ஓர்‌ வகையானது “உள்ளமை ஒன்றுதான்‌”, ஒன்றில்‌ இருந்துதான்‌ அனைத்தும்‌ பிறக்கின்றன” என்ற அத்வைதக்‌ கோட்பாடாகும்‌.

அது பற்றி இமாம்‌ கஸ்ஸாலீ அவர்கள்‌ பின்வருமாறு விளக்கம்‌ தருகின்றார்கள்‌. தவ்ஹீத்‌ நான்கு படித்தரங்களைக்‌ கொண்டது எனக்‌ குறிப்பிட்டதன்‌ பின்னர்‌ அவை:

1- லுப்‌, (உட்பகுதி),

2- லுப்புல்லுப்‌, (உட்பகுதியின்‌ உட்பகுதி)

3- கிஷர்‌, (வெளிப்பகுதி),

4- கிஷருல்‌ கிஷ்ர்‌ (தோல்‌, அல்லது வெளிப்பகுதிக்கு மேலிருக்கும்‌ பகுதி) என நான்கு கிளைகளைக்‌ கொண்டதாகும்‌.

முதலாவது படித்தரம்‌: ஒருவர்‌ தமது இதயத்தை உயிரோட்டமற்ற நிலையில்‌ வைத்து, அல்லது ஏனோ! தானோ என்ற பாராமுகமான, அலட்சியமான நிலையில்‌ நாவினால்‌ லாஇலாஹ இல்லல்லாஹ என்று கூறுவதாகும்‌. இது முனாஃபிக்குகளின்‌ தவ்ஹீத்‌ ஆகும்‌.

இரண்டாவது நிலை: அதன்‌ பொருள்‌ பற்றி அறிந்தவராக அதை மொழிவதாகும்‌. இது முஸ்லிம்களில்‌ உள்ள சாதராண பொதுமக்களின்‌ தவ்ஹீத்‌ ஆகும்‌.

மூன்றாவது நிலை: அல்லாஹ்வின்‌ பிரகாசத்தின்‌ ஊடாக கஷ்‌ஃபு என்ற வழிமுறையால்‌ பார்ப்பதாகும்‌. அது நெருக்கத்திற்குரியவர்களின்‌ நிலையாகும்‌. அவர்‌ அதிகமான அ௧, புலக்காட்சிகளைக்‌ காண்பார்‌. அதிகப்படியான காட்சிகளுக்குள்ளும்‌ அவை அனைத்தும்‌ அடக்கி ஆளுகின்ற தனித்தவனாகிய அல்லாஹ்விடம்‌ இருந்து வெளிப்படுவதாக அவர்‌ காண்பார்‌.

நான்காவது நிலை: உள்ளமையில்‌ இருப்பதை ஒன்றென நோக்குவதாகும்‌. (அதாவது அனைத்தும்‌ அவனே என்ற கோட்பாடு) இது ஸித்திகீன்களின்‌ அகப்‌ பார்வையாகும்‌. சூஃபிகள்‌ இதற்கு தவ்ஹீதின்‌ இன்பத்தில்‌ ஒருவர்‌ தம்மை மாய்த்தல்‌- அழித்தல்‌- எனப்‌ பெயரிட்டுள்ளனர்‌.

ஏனெனில்‌, அவன்‌ இவ்வாறான நிலையில்‌ ஒன்றைத்‌ தவிர வேறு எதையும்‌ பார்ப்பதில்லை. (ஏன்‌) அவன்‌ தன்னைக்‌ கூட (பிரித்து) வேறாக நோக்குவதில்லை. இவன்‌ தன்னை அனைத்துடனும்‌ ஓர்மையாக்கும்‌ தவ்ஹீதில்‌ தன்னை அவன்‌ ஈடுபடுத்தவில்லையானால்‌ அவன்‌ தனது தவ்ஹீதை அழித்தவனாகின்றான்‌. ((அதாவது படைப்புகளில்‌ இருந்து வேறுபட்ட ஒருவனாகப்‌ பார்ப்பதை விட்டுத்‌ தோல்வி கண்டுள்ளான்‌ என்பது பொருளாகும்‌)) (இஹ்யா உலாமித்தீன்‌)

காணும்‌ பொருள்‌ யாவும்‌ அவனேதான்‌. அல்லது அனைத்தும்‌ அல்லாஹ்வாகவே தெரிய வேண்டும்‌ என்பதை மற்றோரு இடத்தில்‌ உறுதி செய்கின்றார்‌ இமாம்‌ கஸ்ஸாலி அவர்கள்‌:

“நான்காவது வகை முவஹ்ஹித்‌ என்பதாகும்‌. இவனது பார்வையில்‌ ஒருவனைத்‌ தவிர வேறு எதுவும்‌ இவனுக்குத்‌ தென்படுவதில்லை. வெளிப்படையில்‌ தெரியும்‌ பலவற்றை அதிகமானது என்ற காரணத்தால்‌ அவற்றையும்‌ பல்வேறுபட்டவையாக நோக்காது, (உள்ளமையில்‌) அதை ஒன்றாக நோக்க வேண்டும்‌. அதுவே -தவ்ஹீதின்‌- ஓர்மைப்படுத்தலில்‌- உச்ச நிலையாகும்‌.”

சூஃபித்துவச்‌ சிந்தனைத்தாக்கம்‌ மேலோங்கிய காலத்தில்‌ “ஒருவர்‌ தம்மை “முவஹ்ஹித்‌”, “தவ்ஹீதி” எனக்‌ கூறினால்‌ “யாவும்‌ அவனே” என்ற அத்வைதச்‌ சித்தாந்தத்தைத்‌ தாக்கம்‌ கொண்டவர்‌ என்பது இதன்‌ அர்த்தமாகும்‌.

இதன்‌ பொருளில்தான்‌ இமாம்‌ கஸ்ஸாலி அவர்களும்‌ முவஹ்ஹித்‌ என்ற சொற்பிரயோகத்தைக்‌ கையாண்டுள்ளார்கள்‌ என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்‌.

சூஃபித்துவச்‌ சிந்தனை செல்வாக்குச்‌ செலுத்திய காலத்தில்‌ முவஹ்ஹித்‌ என்று ஒருவர்‌ அழைக்கப்பட்டால்‌ அவர்‌ தீய வஹ்ததுல்வுஜுத்‌ சிந்தனையால்‌ தாக்கப்பட்டவர்‌ என்பது பொருளாகும்‌.

இக்கருத்தினை இமாம்‌ தஹபீ (ரஹ்‌) அவர்கள்‌ பின்வருமாறு அவர்களின்‌ நூலான சியரில்‌ உறுதி செய்துள்ளார்கள்‌:

நீ ஒரு மனிதனுடன்‌ சுன்னா பற்றிப்‌ பேசும்போது “சுன்னா வேண்டாம்‌; அல்லாஹ்வின்‌ வேதத்தைப்‌ பற்றி மட்டும்‌ பேசு எனக்‌ கூறும்‌ ஒருவனை நீ கண்டால்‌, “நிச்சயமாக அவன்‌ ஒரு வழிகேடன்‌” என்று புரிந்து கொள்‌.

நமக்கு அல்லாஹ்வின்‌ வேதமும்‌ வேண்டாம்‌, ஆஹாதான ஹதீஸும்‌ வேண்டாம்‌; பகுத்தறிவைக்‌ கூறு எனத்‌ தத்துவம்‌ பேசும்‌ பித்‌அத்வாதியை நீ கண்டால்‌, “அவன்‌ அபூ ஜஹ்ல்‌” என்று புரிந்துகொள்‌!

“சான்றுகளையும்‌, பகுத்தறிவையும்‌ ஒரு புறம்‌ தள்ளிவிட்டு, இறை இன்பத்தில்‌ திளைப்பதையும்‌, இறை உரையாடலையும்‌ பற்றிப்‌ பேசு” என்று கூறுகின்ற சூஃபிகளின்‌ வழிநடக்கும்‌ தவ்ஹீதியை - அத்வைதியை - நீ கண்டால்‌ நிச்சயமாக அவன்‌ மனித உருவத்தில்‌ வெளிப்பட்டுள்ள ஷைத்தான்‌; அல்லது அவனில்‌ ஷைத்தான்‌ இறங்கி விட்டான்‌ என எண்ணிக்‌ கொள்‌. அவனிடம்‌ நீ அண்மிக்கும்‌ நிலை வந்தால்‌ அவனை விட்டு வெருண்டோடிவிடு; அல்லது அவனைக்‌ கீழே வீழ்த்தி ஆயத்துல்‌ குர்சியை அவன்‌ மீது ஓது. அவனது குரல்வளையை நெருக்கிவிடு” என்று இமாம்‌ அபூகிலாபா வழியாக அய்யூபுஸ்ஸிக்தியானி அவர்கள்‌ மூலம்‌ இமாம்‌ தஹபீ அவர்கள்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.
(அஸ்ஸியர்‌)

இந்த வரிசையில்தான்‌ தஃப்சீர்‌ ஆசிரியர்களுள்‌ ஒருவரான சூஃபிஸவாதியான, அபூ ஹய்யான்‌ என்பவரை அபூ ஹய்யான்‌ அத்தவ்ஹீதி என அடையாளப்படுத்தி சுன்னாவாதியான மற்றோர்‌ அபூஹய்யானில்‌ இருந்து அறிஞர்கள்‌ பிரித்து நோக்கினார்கள்‌.

முஹ்யித்தீன்‌ இப்னு அரபியும்‌ அத்வைதமும்‌

யாவும்‌ அவனே! எல்லாம்‌ அவனே! நானும்‌ அவனே! நீயும்‌ அவனே! பாலுடன்‌ நீர்‌ கலந்திருப்பது போன்று மனிதன்‌ அல்லாஹ்வின்‌ யதார்த்தத்தோடு கலந்துள்ளான்‌ என்ற அத்வைதக்‌ கோட்பாட்டைத்தான்‌ முஹ்யித்தீன்‌ இப்னு அரபி முன்வைத்தார்‌. இஸ்பைனில்‌ பிறந்து தத்துவக்கலைகளைப்‌ படித்த இப்னு அரபியின்‌ வழிகேடுகளை விதைக்க ஈராக்கின்‌ பக்தாத்‌ நகரம்‌ ஓர்‌ பசுந்தரையாகக்‌ காணப்பட்டது.

மன்பவுல்‌ ஃபிதன்‌ - குழப்பங்களின்‌ தோற்றுவாய்‌- என வர்ணிக்கப்படும்‌ கூஃபா, ஈராக்‌, பஸ்ரா போன்ற நகரங்களில்‌ இவரது வஹ்ததுல்‌ வுஜுத்‌ - காணும்‌ பொருள்‌ யாவும்‌ கடவுளே! என்ற அத்வைதக்‌ கருத்து அமோக வரவேற்பைப்‌ பெற்றது ஆச்சரியமல்ல.

இவ்வாறானவர்களின்‌ சிந்தனைத்தாக்கம்‌ இமாம்‌ கஸ்ஸாலீ போன்ற அறிஞர்களிடம்‌ ஊடுருவியதுதான்‌ ஆச்சரியமாகும்‌. அல்லாஹ்வின்‌ அருள்‌ பெற்றவர்களைத்தவிர பலர்‌ தவறான இச்சிந்தனைக்கு உட்பட்டிருந்தனர்‌ என்பதுதான்‌ உண்மை.

இருந்தும்‌, அவர்களில்‌ தமது இறுதி நேரத்தில்‌ அகீதா கோட்பாடு பற்றிய தமது நிலைப்பாடுகளை மாற்றிக்‌ கொண்ட பலர்‌ இருக்கின்றனர்‌. அவர்களில்‌ இமாம்‌ கஸ்ஸாலீ அவர்களும்‌ ஒருவர்‌ என்று குறிப்பிடப்படுகின்றது.

அவரது இறுதிக்‌ கட்ட நிலைப்பாட்டில்‌ ஏற்பட்ட மாற்றம்‌ பற்றி தஹாவியாவின்‌ விரிவுரையாளர்‌ அவர்கள்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்‌.

“இமாம்‌ கஸ்ஸாலீ (ரஹ்‌) அவர்களும்‌ அவ்வாறுதான்‌. அவரது இறுதி நிலை எதுவும்‌ பேசாத நிலைப்பாட்டிலும்‌, மெளனத்திலும்‌, தத்துவவியல்‌ சார்ந்த கோட்பாடுகளில்‌ தடுமாற்றத்திலும்தான்‌ முடிந்தது. பின்னர்‌, அவை அனைத்து விதமான வழிகளையும்‌ புறம்‌ தள்ளிவிட்டு நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ ஹதீஸ்களைப்‌ படிப்பதில்‌ ஆர்வம்‌ காட்டினார்‌. ஸஹீஹுல்‌ புகாரீ அவரது நெஞ்சின்‌ மீதிருந்த நிலையில்‌ இமாம்‌ அவர்கள்‌ மரணமானார்கள்‌.”  ط الأوقاف السعودية - (1 / 177)

இருந்தாலும்‌ இப்னு அரபி தமது இணைவைப்புச்‌ சார்ந்த கருத்துகளில்‌ இருந்து மீண்டதாக எவ்வித ஆதாரங்களையும்‌ அறிஞர்கள்‌ தரவில்லை. மாறாக அவரையும்‌, அவரது நச்சுக்கருத்துகளையும்‌ விமர்சனம்‌ செய்தே வந்துள்ளனர்‌.

எனினும்‌, இப்னு அரபியும்‌ அவரைப்‌ போன்றவர்களும்‌ முனாஃபிக்குகளும்‌, ஸின்தீக்குகளும்‌ (சமயத்‌ துரோகிகள்‌), அத்வைதிகளும்‌ ஆவர்‌. இத்தகையோர்‌ நரகின்‌ அடித்தட்டில்‌ இருப்பர்‌ என்று தஹாவியின்‌ விரிவுரையாளர்‌ குறிப்பிடுகின்றார்‌.

பல துறைகளில்‌ சிறந்து விளங்கிய அறிஞரான இமாம்‌ தஹபீ (ரஹ்‌) அவர்கள்‌ இப்னு அரபி பற்றி தமது சியர்‌ என்ற பிரபல்யமான நூலில்‌ பல இடங்களில்‌ விமர்சனம்‌ செய்துள்ளதைப்‌ பார்க்கின்றோம்‌.

“அவரது தொகுப்புகளில்‌ மிகவும்‌ கீழ்த்தரமானது “அல்‌ஃபுஸஸ்‌” ஆகும்‌. அதில்‌ இருப்பது இறைநிராகரிப்பு இல்லை என்றால்‌ உலகில்‌ இனி இறைநிராகரிப்பு என்பதே இருக்காது. அல்லாஹ்விடம்‌ மன்னிப்பும்‌, ஈடேற்றமும்‌ வேண்டுகின்றோம்‌. அல்லாஹ்தான்‌ அவருக்கு அபயம்‌ அளிக்க வேண்டும்‌. (சியர் (سير أعلم النبلء - (23 / 48)‌) அதே நூவில்‌ மற்றோர்‌ இடத்தில்‌:

அல்லாமா இப்னு தக்கில்‌ ஈத்‌ அவர்கள்‌ இப்னு அப்திஸ்ஸலாம்‌ என்பவர்‌ மூலம்‌ இப்னு அரபி பற்றிக்‌ குறிப்பிடுகின்ற போது அவன்‌ கெட்ட ஷைகும்‌, பொய்யனும்‌ ஆவான்‌ எனக்‌ குறிப்பிட்டதாகச்‌ சுட்டிக்காட்டியதோடு (சியர் 23 / 225), மற்றோரு - இடத்தில்‌:

அவன்‌ இழிவுபடுத்தப்படவேண்டிய கெட்ட ஷைகும்‌ பொய்யனும்‌ ஆவான்‌” எனக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌. (ஸியர் 49/23‌)

இப்னு அரபி ஓர்‌ இறைமறுப்பாளர்தாம்‌ என்பதை உறுதிப்படுத்த இமாம்‌ ஷிஹாபுத்தீன்‌ அல்பிகாயி (ரஹ்‌)
அவர்களின்‌ “தன்பீஹால்‌ ஃகபீ இலா தக்‌ஃபீரிற இப்னு அரபி” என்ற நூலையோ, அல்லது அப்துர்ரஹ்மான்‌ அல்வகீல்‌ (ரஹ்‌) அவர்களின்‌ “ஹாதிஹி ஹியஸ்ஸுஃபிய்யா” என்ற நூலையோ படித்துப்‌ பயன்பெறலாம்‌.

அல்லாஹ்வை நிராகரித்த பிர்‌அவ்ன்‌ ஈமானில்‌ உயர்‌ நிலை அடைந்தவன்‌, அல்லாஹ்வுக்கு இணைவைத்த சிலைவணங்கிகள்‌, காஃபிர்கள்‌ அனைவரும்‌ அல்லாஹ்‌ அல்லாததை வணங்கினாலும்‌ யதார்த்தத்தில்‌ அல்லாஹ்வைத்தான்‌ வணங்கினார்கள்‌.

நானும்‌ அவனே! நான்‌ தூய்மையானவன்‌! போன்ற தீய சிந்தனைகளை விதைத்த இப்னு அரபி, இப்னுல்‌ பாரிள்‌, கல்லாஜ்‌ அபூ தாலிப்‌ போன்ற மக்கா காஃபிர்களையும்‌ பேசுகின்ற மெளலவிகள்‌ “ரழியல்லாஹு அன்ஹு” என்று குறிப்பிடுவோராக இருக்கின்றனர்‌ என்றால்‌ இவர்களின்‌ இஸ்லாமிய அறிவு பற்றி என்னவென்பது?

தவ்ஹீத்‌ பற்றிய ஸகரிய்யா மெளலானாவின்‌ பார்வை

ஸகரிய்யா மெளலானா அவர்கள்‌ இந்தியத்‌ துணைக்‌ கண்ட சூஃபியாக்கள்‌ மத்தியில்‌ பிரபலமானவர்களுள்‌ ஒருவர்‌. ஹதீஸ்களை ஸஹீஹ்‌, ளயீஃப்‌, மவீழூஃ என்ற தரப்படுத்தலின்றி சேகரிக்கும்‌ பணியில்‌ அவர்‌ தம்மை ஈடுபடுத்தியதால்‌ சிலரால்‌ முஹத்திஸ்‌ என்றும்‌ அழைக்கப்படுகின்றார்‌.

பல அரபு, உருது நூல்களின்‌ ஆசிரியரான இவர்‌ நம்‌ மத்தியில்‌ அறிமுகமான தப்லீகே நிஸாப்‌, ஹஜ்ஜின்‌ சிறப்புகள்‌, ஸதகாவின்‌ சிறப்புகள்‌, அமல்களின்‌ சிறப்புகள்‌ போன்ற பல நூல்களின்‌ ஆசிரியராகவும்‌ விளங்குகின்றார்‌.

அவற்றில்‌ காணப்படும்‌ மார்க்கத்திற்கு முரணான நூற்றுக்‌ கணக்கான முரண்பாடுகள்‌, சூஃபித்துவச்‌ சிந்தனைகள் என்பன‌ அறிஞர்களால்‌ சுட்டிக்காட்டப்படுகின்றன.

செய்யித்‌ தாலிப்‌ ரஹ்மான்‌ என்பவர்‌

இந்தியத்‌ துணைக்‌ கண்ட தப்லீக்‌ ஜமாத்தின்‌ “அகீதா கோட்பாடும்‌, அறிமுகமும்‌” என்ற தலைப்பில்‌ எழுதிய நூவில்‌ ஸகரிய்யா மெளலானாவின்‌ அகீதா அத்வைதம்‌ சார்ந்தது என்று குறிப்பிடுகின்றார்‌.

அந்நூலில்‌ தப்லீக்‌ ஜமாத்தின்‌ கோட்பாடுகளில்‌ காணப்படும்‌ முரண்பாடுகள்‌, மற்றும்‌ அதில்‌ இருந்து விலகிய சகோதரர்கள்‌ பற்றிய செய்திகளோடு ஸகரிய்யா மெளலானாவின்‌ அகீதா கோட்பாடு பற்றியும்‌ ஆங்காங்கு விவரிக்கின்றார்‌.

ஒரு பழுத்த சூஃபியின்‌ நம்பிக்கை எதுவோ அதுவே அவரது நம்பிக்கையாக இருந்தது என்பதை ஸகரிய்யா மெளலானாவின்‌ நூல்கள்‌ மூலம்‌ அறிய முடிவதாக அவர்‌ தமது வாதங்களை முன்வைத்துள்ளார்‌. அவரது நூலில்‌ இருந்து சில செய்திகள்‌ இங்கு தரப்படுகின்றன.

அவற்றில்‌ ஸகரிய்யா மெளலானா அவர்களின்‌ “வஹ்ததுல்‌ வுஜுத்‌” பற்றிய கருத்து முக்கியத்துவம்‌ வாய்ந்ததாகும்‌. ஸகரிய்யா மெளலானா அவர்கள்‌ வஹ்ததுல்‌ வுஜுத்‌ பற்றிக்‌ குறிப்பிடுகின்ற போது:

அத்வைதக்‌ கோட்பாடு என்பது சூஃபித்துவத்தின்‌ ஆரம்பமாகும்‌ (மே:ப.நூல்‌:ப: 154இல்‌) குறிப்பிட்டுள்ளார்‌.

தம்‌ முரீதுகளுள்‌ ஒருவரோடு உரையாடிக்‌ கொண்டிருந்த மெளலானா அவர்கள்‌ அவரிடம்‌;

தற்பொழுது முழு பலத்தையும்‌ பிரயோகித்து தஸவ்வுஃப்‌ சிந்தனையின்‌ பக்கம்‌ மக்களை அழைக்கவும்‌, அதன்வழி நடக்கவும்‌ காலம்‌ பொருத்தமானதாகவும்‌, உகந்ததாகவும்‌ மாறி இருக்கின்றது என அவரது தவ்ஹீத்‌ அத்வைதச்‌ சிந்தனையை முன்வைத்த பதிவும்‌ இடம்‌ பெற்றுள்ளது.

குறிப்பு: ذكرواعتكافكيأهميت என்ற மெளலானாவின்‌ நூலில்‌ இருந்து இச்செய்தி பெறப்பட்டதாக செய்யத்‌ தாலிப்‌ மேற்படி நூல்‌: பக்‌: 154 இல்‌ குறிப்பிடுகின்றார்‌.

தமது குஃப்ர்‌, மற்றும்‌ இணைவைப்பு வார்த்தைக்காகச்‌ சிரச்சேதம்‌ செய்யப்பட்டு கழுமரத்தில்‌ ஏற்றப்பட்ட மன்சூர்‌ அல்‌ ஹல்லாஜ்‌ என்ற அத்வைதியைப்‌ பற்றிக்‌ கருத்துத்‌ தெரிவித்த ஸகரிய்யா மெளலானா அவர்கள்‌:

அல்லாஹ்வுடன்‌ ஒழுக்கத்தைக்‌ கடைப்பிடிப்பதை விட்டதற்காகத்தான்‌ இந்த மன்சூர்‌ (ஹல்லாஜ்‌) கழுமரத்தில்‌ ஏற்றப்பட்டார்‌. “அனல்‌ ஹக்‌” நான்‌ சத்தியமானவன்‌ (அல்லாஹ்வின்‌ பெயர்களில்‌ ஒன்று) என்ற அவரது வார்த்தை உண்மையானதாகவும்‌, வாய்மையானதாகவும்‌ இருந்தது. இருப்பினும்‌ அவர்‌ அதைப்‌ பகிரங்கப்படுத்தி இருக்க வேண்டிய அவசியம்‌ இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்‌.

(குறிப்பு: وليكامل என்ற மெளலானாவின்‌ நூலில்‌ இருந்து ஆசிரியரால்‌ அதே நூல்‌ ப: 154 இல்‌ தரப்பட்டுள்ளது.)

ஹஜ்ஜின்‌ சிறப்பு என்ற நூலில்‌ ஷைகுகளின்‌ தலைவர்‌ ஷிப்லி என்பவர்‌ மூலம்‌ பின்வரும்‌ கருத்தை மெளலானா தெரிவிக்கின்றார்‌.

ஹஜருல்‌ அஸ்வதை முத்தம்‌ கொடுத்தவர்‌ அல்லாஹ்வோடு முஸாஃபஹா செய்தவர்‌ போன்றவராவார்‌. தூய்மையான அல்லாஹ்வுடன்‌ யார்‌ முஸாஃபஹா செய்துவிட்டாரோ அவர்‌ முழுமையான பாதுகாப்பைப்‌ பெற்றவராகிவிட்டார்‌. (ஹஜ்ஜின்‌ சிறப்பு)

(இதுவும்‌ மேற்படி நூல்‌ பக்‌: 163 இல்‌ இடம்‌ பெற்றுள்ளது)

இவ்வாறான அத்வைதச்‌ சிந்தனைகளைத்‌ தமது நூல்களில்‌ ஸகரிய்யா மெளலானா அவர்கள்‌ எடுத்தெழுதுவதால்‌ அவரது அகீதாக் கோட்பாடு சூபித்துவம்‌ சார்ந்ததுதான்‌ என்பது புலனாகின்றது.

அகீதாவில்‌ தெளிவும்‌, சுன்னா பற்றிய அறிவும்‌ உள்ள சமூகம்‌ உருவாக்கப்படுவதுதான்‌ தஃவாவின்‌ உயரிய நோக்கமாகும்‌. எனவே இவ்வாறான நூல்களையும்‌, வழிகெட்ட சிந்தனைகளையும்‌ மக்கள்‌ மத்தியில்‌ பரப்புவது பற்றி தப்லீக்‌ ஜமாத்‌ மெளலவிகள்‌ தம்மை மீள்‌ பரிசீலனை செய்வது காலத்தின்‌ தேவையாகும்‌.

அவற்றில்‌ இருந்து தாமும்‌ தம்‌ சகோதரர்களும்‌ முற்றாக
விலகி, சுன்னா சார்ந்த சிந்தனைகளை உள்ளடக்கிய நூல்களை பரப்ப எடுக்கப்படும்‌ முயற்சி நன்மை தருவதாக அமைவதோடு, தாமும்‌ தம்‌ மக்களும்‌ இணைவைப்பில்‌ இருந்தும்‌, இஸ்லாத்திற்கு முரணான சிந்தனைகளில்‌ இருந்தும்‌ பாதுகாப்புப்‌ பெறவும்‌ சந்தர்ப்பமாக அமையும்‌ என்பது நமது கருத்தாகும்‌.

இவ்வாறான உயரிய பணியைத்தான்‌ இமாம்கள்‌ ஸலஃபுகள்‌ மார்க்கத்திற்காக ஆற்றினார்கள்‌. அறிவார்ந்த பெறுமதி மிக்க அவர்களின்‌ நூல்கள்‌ இதற்குத்‌ தக்க சான்றுகளாகும்‌.

அஸ்மா ஸிஃபாத்தை விளக்குவதில்‌ ஆரம்பக்கால இமாம்களின்‌ போக்குகள்‌ ஸஹாபாக்களுக்குப்‌ பிற்பட்ட காலத்தில்‌ மார்க்கத்தின்‌ பெயரால்‌ முளைத்த சில புல்லுருவிகளால்தான்‌ அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ பாழடிக்கப்பட்டு, அவற்றிற்குத்‌ தவறான விளக்கங்கள்‌ கொடுக்கப்பட்டன என்பதை “அஸ்மா, ஸிஃபாத்‌” பற்றி ஆய்வு செய்கின்ற போது அறிய முடிகின்றது. அது பற்றி விளக்குவதே இந்தத்‌ தொடரின்‌ நோக்கமாகும்‌.

அஸ்மா, ஸிஃபாத்‌ (அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌) விஷயத்தில்‌ ஆரம்பக்‌ காலத்தில்‌ வாழ்ந்த ஸஹாபாக்கள்‌, தாபியீன்கள்‌, அவர்களின்‌ வழிவந்த அறிஞர்கள்‌ அனைவரும்‌ அவற்றின்‌ பொருள்களைப்‌ பாழடிக்காது, சிதைக்காது, இப்படித்தான்‌ என்ற வடிவமோ, முறைமையோ அவற்றிற்குக்‌ கற்பிக்காது, அவற்றின்‌ உண்மையான பொருளைத்‌ தந்து நம்பி வந்தனர்‌.

உதாரணமாக, அல்லாஹ்வின்‌ இருகரம்‌, அல்லது அவனது வலது கரம்‌, முகம்‌, பாதங்கள்‌, கெண்டைக்கால்‌, சிரிப்பு, மகிழ்ச்சி போன்ற அல்குர்‌ஆன்‌, மற்றும்‌ ஸஹீஹான ஹதீஸ்களில்‌ வந்திருக்கின்ற அல்லாஹ்வின்‌ பண்புகளுக்குச்‌ சுய விளக்கம்‌ கொடுக்காது, அவற்றிற்கு முறைமை, வடிவம்‌ எதுவும்‌ கற்பிக்காது அவற்றின்‌ வெளிப்படையான பொருளில்‌ நம்பினர்‌.

இதுவே ஸஹாபாக்கள்‌, மற்றும்‌ தாபியீன்கள்‌, அவர்களின்‌ வழிவந்தோரின்‌ கொள்கையாக இருந்து வந்தது. தாபியீன்களின்‌ இறுதிக்காலத்தில்‌ வந்த ஜஹ்ம்‌ இப்னு ஸஃப்வான்‌ மற்றும்‌ அவனைப்‌ பின்பற்றிய பிஸ்ர்‌ பின்‌ ஃகியாஸ்‌,‌ ஆகிய இருவரின்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ பற்றிய தவறான சிந்தனையைச்‌ சரிகண்டு, அதைப்‌ பரப்புவோர்‌ வரும்‌ வரை அஸ்மா, ஸிஃபாத்தின்‌ தெளிவான இந்நிலைப்பாடு மக்கள்‌ மத்தியில்‌ நிலைத்து, நீடித்துக்‌ காணப்பட்டதாக இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ சுட்டிக்காட்டுவது இங்கு கவனிக்கத்தக்கதாகும்‌. (மஜ்மூஃ அல்‌ஃபதாவா) “அஸ்மா, ஸிஃபாத்‌” விஷயத்தில்‌ அறிஞர்களின்‌ நிலைப்பாட்டை, தாபியீன்கள்‌ காலத்தில்‌ பிரசித்திபெற்று விளங்கிய நாற்பெரும்‌ இமாம்களில்‌ ஒருவரான இமாம்‌ அவ்ஸாயீ (ரஹ்‌) பின்வருமாறு உறுதி செய்கின்றார்கள்‌.

நாங்களும்‌, எண்ணற்ற தாபியீன்களும்‌ உயர்ந்தவனாகிய அல்லாஹ்‌ அர்ஷின்‌ மேல்‌ இருப்பவன்‌ என்று கூறும்‌ அதேவேளை சுன்னாவில்‌ வந்துள்ள அனைத்துப்‌ பண்புகளைக்‌ கொண்டும்‌ நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தோம்‌ எனக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

இமாம்‌ அவ்ஸாயீ (ரஹ்‌) அவர்களின்‌ இக்கருத்தினை இமாம்‌ பைஹகீ (ரஹ்‌) அவர்கள்‌ அல்‌அஸ்மா, வஸ்ஸிஃபாத்‌ என்ற தமது கிரந்தத்தில்‌ பதிவு செய்துள்ளார்கள்‌.

இக்கருத்தினை இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ தாபியீன்கள்‌ மத்தியில்‌ காணப்பட்ட இஜ்மாவான நிலை என்று சுட்டிக்காட்டுகின்றார்கள்‌.

ஆரம்பக்‌ காலங்களின்‌ இமாம்கள்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ கோட்பாட்டை விளக்கி, அது பற்றிய தெளிவை மக்களுக்கு வழங்குவதிலும்‌, அவற்றிற்கு எதிராக எழுப்பப்படும்‌ சந்தேகங்களை நிவர்த்தி செய்வதிலும்‌, அவற்றில்‌ தமது நிலைப்பாடு பற்றி விளக்குவதிலும்‌ பெருமளவு தமது முயற்சிகளைச்‌ செலவு செய்துள்ளனர்‌.

அந்த வகையில்‌ பின்வரும்‌ அறிஞர்கள்‌ குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றார்கள்‌. அவர்களுள்‌ சிலர்‌ தனித்‌ தொகுப்பாகவும்‌, சில போது ஒரு கிரந்தத்தின்‌ முக்கிய ஒரு அத்தியாயமாகவும்‌ அது பற்றி எழுதி இருக்கின்றனர்‌.

மற்றும்‌ சிலர்‌ ஹதீஸ்களுக்கு விளக்கவுரை எழுதுகின்ற போது அது பற்றிய தெளிவை வழங்கி இருக்கின்றனர்‌. மேலும்‌ பலர்‌ சுன்னா என்ற தலைப்பின்கீழ்‌ எழுதிய பல நூல்கள்‌ “அகீதா” பற்றியதாக இருந்திருக்கின்றது. அவர்களின்‌ கிரந்தங்கள்‌, ஆக்கங்கள்‌ பற்றிப்‌ பின்வரும்‌ தொடர்களில்‌ சுருக்கமாகத்‌ தரப்படுகின்றது. 

இமாம்கள்‌ மற்றும்‌ கிரந்தங்கள்‌ பற்றிய விவரம்‌

சான்றுகளைத்‌ தவறாக விளக்க முற்பட்டோர்‌ “சிந்தனைப்‌ பிரிவினர்‌” என அழைக்கப்பட்டாலும்‌ அறிஞர்கள்‌ பார்வையில்‌ இந்த உம்மத்தின்‌ வழிகேட்டிற்கான வாயில்களைத்‌ திறந்தவர்கள்‌ என்றே இவர்கள்‌ அடையாளப்படுத்தப்படுகின்றனர்‌.

அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகளை நிலைப்படுத்தி,
அவற்றை அவனது படைப்பினங்களுக்கு ஒப்பிடாது, திரிபு செய்யாது, பாழடிக்காது நம்பிக்கை கொள்வது அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ வழிமுறை என்பதை முன்னைய தொடர்களில்‌ கண்டோம்‌.

அவற்றில்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ பற்றிய நிலைப்பாடுகள்‌ பற்றி எடுத்துக்‌ கூறப்பட்டிருப்பினும்‌ அஸ்மா, ஸிஃபாத்தைத்‌ தவறாக விளங்கி, விளக்கியவர்களையும்‌, ஸஹாபாக்கள்‌, ஸலஃபுகளின்‌ நிலைப்பாடுகளில்‌ இருந்து சறுகியோரின்‌ நிலைப்பாடு பற்றியும்‌ இங்கு விரிவாக நோக்கப்படுகின்றது.

1- இமாம்‌ முஹம்மத்‌ பின்‌ இஸ்மாயீல்‌ அல்புகாரீ (ஹிஜ்ரீ 194- 256)

ஸஹீஹான ஹதீஸ்‌ தொகுப்பின்‌ முன்னோடியும்‌, இஸ்லாமிய ஷரி‌ஆத்துறையில்‌ பிரசித்த பெற்ற அறிஞர்களுள்‌ ஒருவருமான இமாம்‌ புகாரி‌ (ரஹ்‌) பல இஸ்லாமிய நூல்களை முஸ்லிம்‌ சமூகத்திற்குத்‌ தந்த மாமேதைகளுள்‌ ஒருவர்‌.

புகாரீக்‌ கிரந்தம்‌ அதிசயமான அவரது படைப்பாகும்‌. இஸ்லாம்‌ அனைத்தையும்‌ உள்ளடக்கிய உயர்வான மார்க்கம்‌ என்பதை புகாரீ அவர்கள்‌ தமது தொகுப்பின்‌ மூலம்‌ உலகுக்கு உணர்த்தியுள்ளார்கள்‌.

“97 கிதாபுகள்‌” என்ற பெரிய தலைப்பின்கீழ்‌ பல உப தலைப்புகள்‌ இடம்‌ பெறச்‌ செய்து குர்‌ஆன்‌, சுன்னாவில்‌ இருந்து தமது கருத்துக்கு அணி சேர்த்துள்ள இமாம்‌ அவர்களின்‌ கிரந்தம்‌ வஹீ என்ற பாடத்துடன்‌ ஆரம்பமாகி தவ்ஹீத்‌ என்ற அத்தியாயத்துடன்‌ முடிவடைகின்றது.

புகாரிக்‌ கிரந்தம்‌ அல்குர்‌ஆனுக்கு அடுத்தபடியான அந்தஸ்தில்‌ அஹ்லுஸ்ஸுான்னா உலகில்‌ இன்றும்‌ மதிக்கப்படுகின்றது. அறிஞர்‌ ஃபுஆத்‌ அப்துல்‌ பாகீ என்பவரின்‌ கணிப்பின்‌ பிரகாரம்‌ ஸஹீஹ்‌ புகாரீயில்‌ 7593 ஹதீஸ்கள்‌ காணப்படுகின்றன.

ஒருவர்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ பற்றிய இவரது நிலைப்பாடு பற்றித்‌ தெளிவாகப்‌ புரிந்து கொள்ள இவரது கிரந்தத்தில்‌ இறுதி அத்தியாயமாக இடம்‌ பெறும்‌ கிதாபுத்‌ தவ்ஹீத்‌ என்ற தவ்ஹீத்‌ பற்றிய அத்தியாயத்தைப்‌ படிக்க வேண்டும்‌.

அதில்‌ அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ பற்றி இமாம்‌ அவர்களால்‌ குர்‌ஆன்‌, சுன்னாவின்‌ ஆதாரங்கள்‌ தெளிவாக எடுத்தெழுதப்பட்டிருக்கின்றன.

அவ்வாறே, இமாம்‌ அவர்கள்‌ خلق أفعال العباد ‌என்ற நூலில்‌ முஅத்திலா, (அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகளைப்‌ பாழடிப்போர்‌), மற்றும்‌ ஜஹ்மிய்யா, (பண்புகளை நிராகரித்து, குர்‌ஆன்‌ படைக்கப்பட்டது என வாதிடுவோர்‌ போன்ற) வழிதவறிய சிந்தனைப்‌ பிரிவுகளின்‌ தவறான கருத்துகளை மறுத்துரைத்துள்ளதோடு ஜஹ்மிய்யாக்கள்‌ பற்றிய இஸ்லாமிய அறிஞர்களின்‌ தீர்ப்புகளையும்‌ பதிவு செய்துள்ளார்கள்‌.

அல்லாஹ்வின்‌ பேச்சை மறுமையில்‌ சமீபமாக இருப்பவர்கள்‌ செவிமடுப்பது போன்ற தூரத்தில்‌ இருப்பவர்களும்‌ செவிமடுப்பர்‌ என்ற செய்தியைப்‌ பதிவு செய்த இமாமவர்கள்‌ இது அல்லாஹ்‌ அல்லாத வேறு படைப்புகள்‌ எவருக்கும்‌ உரிய பண்பு அல்ல என விளக்கிய பின்னர்‌, அல்லாஹ்வின்‌ சப்தமானது படைப்புகளின்‌ சப்தத்திற்கு ஒப்பானது அல்ல என்பதற்கு இதில்‌ ஆதாரம்‌ உள்ளது. ஏனெனில்‌ அல்லாஹ்வின்‌ சப்தமானது சமீபத்தில்‌ உள்ளவர்கள்‌ செவிமடுப்பதைப்‌ போல தூரமாக இருப்போரும்‌ செவிமடுப்பர்‌. வானவர்கள்‌ அவனது சப்தத்தால்‌ மூர்ச்சை ஆகிவிடுவர்‌. அதே வேளை வானவர்கள்‌ தமக்குள்‌ அழைப்பதால்‌ அவ்வாறு மூர்ச்சை ஆகுவதில்லை. அல்லாஹ்வுக்கென்று நிகரானவர்களை ஆக்காதீர்கள்‌ என்று அல்லாஹ்‌ குறிப்பிடுகின்றான்‌. அதனால்‌ அல்லாஹ்வின்‌ ஸிஃபாத்‌ என்ற பண்பில்‌ எவ்வித நிகரும்‌, ஒப்பும்‌ கிடையாது. அவனது பண்புகள்‌ எதுவும்‌ அவனது படைப்புகளில்‌ இல்லை. (கல்கு அஃப்‌ஆலீல்‌ இபாத் (ج 1 / ص 98) ‌)

இந்நூலில்‌ அல்லாஹ்வின்‌ பேச்சு, இறைச்‌ சந்திப்பு, இறை தரிசனம்‌, அல்லாஹ்‌ அடிவானத்திற்கு இறங்கிவருதல்‌, மறுமையில்‌ அவனைக்‌ கண்களால்‌ நேரடியாகப்‌ பார்த்தல்‌ போன்ற அல்லாஹ்வின்‌ பண்புகளைப்‌ பாழடிப்போர்‌ பற்றிய அறிஞர்‌ பெருமக்களின்‌ அற்புதமான கருத்துகளை இமாம்‌ புகாரீ அவர்கள்‌ பதிவு செய்யத்‌ தவறவில்லை என்பது இங்கு நோக்கத்தக்கதாகும்‌.

இமாம்‌ புகாரீ (ரஹ்‌) அவர்களால்‌ மறுக்கப்படும்‌ ஐஹ்மிய்யா சிந்தனையில்‌ வந்தவர்களாகத்‌ தற்கால அஷ்‌அரிய்யாக்கள்‌ நோக்கப்படுவர்‌ என்பது ஆய்வின்‌ போது தெரிய வருகின்றது.

எனவே அஷ்‌அரிய்யாக்‌ கோட்பாட்டைச்‌ சரிகாணும்‌ சகோதரர்கள்‌ இமாம்‌ அவர்களின்‌ “தல்குஅஃப்‌ஆலீல்‌ இபாத்‌” நூலைப்‌ படிப்பதன்‌ மூலம்‌ தமது தவறுகளைச்‌ சீர்‌ செய்து கொள்ளலாம்‌ என்பது நமது பார்வையாகும்‌.

அவ்வாறே, இமாம்‌ அவர்களின்‌ கிரந்தமான ஸஹீஹ்‌ புகாரீயின்‌ இறுதி அத்தியாயமான “கிதாபுத்‌ தவ்ஹீத்‌” அத்தியாயத்தைப்‌ ஆராய்கின்ற போது “அஸ்மா, ஸிபாத்‌” தொடர்பான பல அம்சங்கள்‌ குர்‌ஆன்‌, சுன்னாவின்‌ அடிப்படையில்‌ பதிவு செய்யப்பட்டுள்ளதைக்‌ காண முடியும்‌. அந்த வகையில்‌ பின்வரும்‌ பண்புகள்‌ முக்கியமானவையாகும்‌.

அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌,

அல்லாஹ்வின்‌ பாதம்‌,

அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌ பண்புகளைக்‌ கொண்டு பிரார்த்தித்தல்‌, பாதுகாப்பு வேண்டுதல்‌,

அல்லாஹ்வின்‌ உள்ளமையை உறுதி செய்யும்‌ -தாத்‌-

அல்லாஹ்வின் முகம்‌.

அல்லாஹ்வின்‌ கண்காணிப்பு.

அல்லாஹ்வின்‌ இரு கரங்கள்‌.

அல்லாஹ்வின்‌ ரோஷம்.

‌அல்லாஹ்‌ அவனது அர்ஷின்‌ மீதிருப்பது

அல்லாஹ்வை அடியார்கள்‌ மறுமையில்‌ பார்ப்பது

அல்லாஹ்வின்‌ அன்பு, கருணை, கோபம்‌

அல்லாஹ்வின்‌ கட்டளைகள்‌.

அல்லாஹ்வின்‌ நாட்டம்‌

அல்லாஹ்வின்‌ பேச்சு.

அல்லாஹ்வும்‌ அடியானும்‌ நேரில்‌ பேசுதல்‌ போன்ற மற்றும்‌ பல முக்கியமான அம்சங்கள்‌ தெளிவான ஆதாரங்களுடன்‌ முன்வைக்கப்பட்டுள்ளன.

2. இமாம்‌ முஸ்லிம்‌ பின்‌ அல்‌-ஹஜ்ஜாஜ்‌ (ஹிஜ்ரீ 206-261)

ஸஹீஹ்‌ முஸ்லிம்‌ கிரந்தத்தின்‌ ஆசிரியரான இமாம்‌ முஸ்லிம்‌ (ரஹ்‌) அவர்கள்‌ இமாம்‌ புகாரீயின்‌ பிரசித்தி பெற்ற மாணவர்களுள்‌ ஒருவர்‌. இவரது நூலான முஸ்லிம்‌ கிரந்தம்‌ “கிதாபுகள்‌” என்ற தலைப்பிலும்‌ பின்னர்‌ அவை பாடங்கள்‌ என்றும்‌ பிரிக்கப்பட்டுள்ளது.

அதில்‌ மொத்தம்‌ “54 கிதாபுகள்‌” காணப்படுகின்றன. முதாலாவது பாடம்‌ ஈமான்‌. இறுதிப்பாடம்‌ தஃப்சீர்‌ பற்றியதாகும்‌.

இவரது கிரந்தத்தில்‌ காணப்படும்‌ மொத்த ஹதீஸ்களின்‌ எண்ணிக்கை 7275 ஆகும்‌.

இமாம்‌ முஸ்லிம்‌ (ரஹ்‌) அவர்கள்‌ முஸ்லிம்‌ உலகுக்குப்‌ பல நூல்களைத்‌ தொகுத்தளித்தவர்‌ என்பதை இவரது வாழ்வியல்‌ சரித்திரம்‌ மூலம்‌ அறிய முடிகின்றது.

அல்லாஹ்வின்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ தொடர்பான பல ஹதீஸ்களைத்‌ தமது அல்ஜாமிவுஸ்ஸஹீஹ்‌ என்ற முஸ்லிம்‌ கிரந்தத்தில்‌ பல்வேறு இடங்களில்‌ பதிவு செய்துள்ளார்கள்‌ ஈமான்‌ என்ற பகுதியில்‌:

அல்லாஹ்வை இவ்வுலகில்‌ பார்க்கலாமா?

உறக்கம்‌ அவனுக்கு அவசியம்‌ அற்றது,

அமல்கள்‌ அவனளவில்‌ உயர்த்தப்படுகின்றன,

முஃமின்கள்‌ மறுமையில்‌ அல்லாஹ்வைத்‌ தமது கண்களால்‌ பார்த்தல்‌,

அல்லாஹ்‌ வானவர்களோடு பேசுதல்‌,

அல்லாஹ்‌ ஆதம்‌ நபியோடு பேசுதல்‌ போன்ற அம்சங்கள்‌ உள்ளடங்கலான பல ஹதீஸ்களை அங்கு பதிவு செய்துள்ளார்கள்‌.

குறிப்பு: இமாம்‌ முஸ்லிமின்‌ கிரந்தத்திற்குப் பாடத் தலைப்பிட்டவர்‌ இமாம்‌ நவவீ ஆவார்‌.

மறுமை, சுவர்க்கம்‌, நரகம்‌ என்ற பகுதியில்‌:

இறை நிராகரிப்பாளர்களோடு அல்லாஹ்‌ கோபமாகப்‌
பேசுதல்‌,

ஆதம்‌ நபியுடன்‌ அல்லாஹ்‌ பேசுதல்‌,

அல்லாஹ்‌ தனது பாசத்தை வெளிப்படுத்தி சுவர்க்கவாசிகளுடன்‌ பேசி, அவனது திருப்தியை அவர்கள்‌ மீது இறக்கி, கோபிக்கமாட்டேன்‌ என்பதாக வாக்களித்தல்‌ போன்ற அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ சார்ந்த பல ஹதீஸ்களைப்‌ பதிவு செய்துள்ளார்கள்‌

3- இமாம்‌ அபூதாவூத்‌ (ரஹ்‌) அவர்கள்‌: (ஹிஜ்ரீ 202-275)

ஹதீஸ்கலை இமாம்களின்‌ வரிசையில்‌ கணிக்கப்படும்‌ இமாம்‌ அபூதாவூத்‌ (ரஹ்‌) அவர்கள்‌ தமது சுனன்‌ கிரந்தத்தை 35 கிதாபுகளாகவும்‌, 1871 பாடத்‌ தலைப்பிலும்‌ அமைத்துள்ளார்கள்‌. இதில்‌ 5274 ஹதீஸ்கள்‌ காணப்படுகின்றன.

சுனன்‌ அபீதாவூத்‌ கிரந்தத்தில்‌ சுன்னா என்ற அத்தியாயத்தின்‌ கீழும்‌, باب فِي الْجه ِميَِّ என்ற தலைப்பின்‌ கீழும்‌, பின்வரும்‌ அம்சங்கள்‌ இமாம்‌ அவர்களால்‌ பதிவு செய்யப்பட்டுள்ளன:

முர்ஜிஆ கொள்கைக்கு எதிரான மறுப்பு,

ஜஹமிய்யாக்கள்‌ பற்றிய தெளிவும்‌ நிலைப்பாடும்‌ அல்லாஹ்வை மறுமையில்‌ நேரில்‌ காணுதல்,‌

அல்லாஹ்வின்‌ கரம்‌,

மறுமையில்‌ அல்லாஹ்‌ கோபமாகப்‌ பேசுதல்‌,

அல்லாஹ்வின்‌ கேள்வி, பார்வை என்பதில்‌ ஜஹ்மிய்யாக்களின்‌ நிலைப்பாடும்‌, மறுப்பும்‌,

இரவின்‌ மூன்றில்‌ ஓர்‌ பகுதி கழிந்த பின்னர்‌ கீழ்‌ வானத்திற்கு அல்லாஹ்‌ இறங்கி வருதல்‌,

அல்குர்‌ஆன்‌ அல்லாஹ்வின்‌ பேச்சு,

அல்லாஹ்‌ வானவர்களுடன்‌ பேசுதல்‌,

சிபாரிசு போன்ற பல அடிப்படையான அம்சங்கள்‌ பதிவு செய்யப்பட்டுள்ளன.

இமாம்‌ அபூதாவூத்‌ (ரஹ்‌) அவர்கள்‌ தமது சுனன்‌ என்ற
நூலில்‌ “ஜஹ்மிய்யாக்கள்‌” என்ற தலைப்பின்கீழ்‌ பல நபிமொழிகளைப்‌ பதிவு செய்துள்ளார்கள்‌. அவற்றில்‌:

அல்லாஹ்வை மறுமையில்‌ பார்த்தல்‌,

அல்லாஹ்‌ அடிவானத்திற்கு இறங்கி வருதல்‌,

மறுமையில்‌ பரிந்துரை பற்றிய நபிமொழிகள்‌ எனப்‌ பல நபிமொழிகள்‌ பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அதில்‌, “ஐஹ்மிய்யாக்களுக்கு மறுப்பு” என்ற தலைப்பும்‌ ஒன்றாகும்‌. அதன்கீழ்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளை விளக்குகின்ற பின்வரும்‌ நபிமொழி பதிவு செய்யப்பட்டுள்ளது.

மறுமை நாளில்‌ அல்லாஹ்‌ வானங்களைச்‌ சுருட்டித்‌ தனது வலக்கரத்தால்‌ அவற்றைப்‌ பிடித்துக்கொண்டு நானே அரசன்‌! மக்களை அடக்கி, ஒடுக்கி வாழ்ந்த மன்னர்கள்‌ எங்கே? பெருமைக்காரர்கள்‌ எங்கே என்று அறைகூவல்‌ விடுத்த பின்னால்‌, பூமிகளை மற்றோரு கையில்‌ சுருட்டி எடுத்துக்கொண்டு நானே அரசன்‌! மக்களை அடக்கி, ஒடுக்கி வாழ்ந்த மன்னர்கள்‌ எங்கே? பெருமைக்காரர்கள்‌ எங்கே? என்று கேட்பான்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (சுனன் அபூதாவூத்)

இங்கு அல்லாஹ்வின்‌ வலது கரம்‌, மற்றொரு கரம்‌ என்று வந்திருப்பதற்குத்‌ தவறான விளக்கம்‌ தரும்‌ ஜஹ்மிய்யாக்களுக்கு மறுப்பு என்று தலைப்பிடப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்‌ தக்கதாகும்‌.

இந்த ஹதீஸை விளக்குகின்ற அபூதாவூதின்‌ விரிவுரையான عون المعبود இல்‌ இவ்வாறு விளக்கம்‌ தரப்பட்டுள்ளது. அஸ்ஸுமரில்‌ இடம்‌ பெறும்‌ 67வது வசனமான:

“அவர்கள்‌ அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறைப்‌ பிரகாரம்‌ மதிக்கவில்லை. பூமிகள்‌ அனைத்தும்‌ மறுமையில்‌ அவனது பிடிக்குள்‌ இருக்கும்‌. வானங்கள்‌ அவனது வலக்கரத்தினால்‌  சுருட்டப்பட்டுக்‌ காணப்படும்‌; அவர்கள்‌ இணைவைப்பதை விட்டு அவன்‌ தூய்மையானவனாகிவிட்டான்‌” என்ற திருமறை வசனத்தை ஆதாரமாகக்‌ காட்டிய பின்னர்‌ இமாம்‌ இப்னு கஸீர்‌ அவர்களின்‌ விளக்கம்‌ தரப்பட்டுள்ளது.

இவ்வசனத்துடன்‌ தொடர்பான பல நபிமொழிகள்‌ இடம்‌ பெற்றிருப்பதாகக்‌ குறிப்பிட்டுள்ள இமாம்‌ அவர்கள்‌: இதிலும்‌ இது போன்ற செய்திகளிலும்‌ கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறையாவது ஸலஃபுகளின்‌ போக்காகும்‌ : அதாவது அவை வந்திருப்பது போன்று முறை கற்பிக்காது, திரிபு செய்யாது அவற்றை நடத்திச்‌ செல்வதாகும்‌ எனக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌. (அவ்னுல்‌ மஃபூத்‌)

4- இமாம்‌ திர்மிதீ (ரஹ்‌) அவர்கள்‌: (ஹிஜ்ரீ 209-279)

முழுப்பெயர்‌ அபூசா முஹம்மத்‌ பின்‌ ஈசா பின்‌ ஸவ்ரா அத்திர்மித்‌ என்பதாகும்‌. திர்மிதீ எனச்‌ சுருக்கமாக அழைக்கப்படுவார்கள்‌. இமாம்‌ புகாரி‌ (ரஹ்‌) அவர்களின்‌ முக்கியமான மாணவர்களுள்‌ ஒருவராக விளங்கினார்கள்‌.

அல்ஜாமிஃ, அல்‌இலல்‌, ஷமாயில்‌ முஹம்மதிய்யா போன்ற நூல்களின்‌ தொகுப்பாசிரியராக விளங்கும்‌ திர்மிதீ (ரஹ்‌) அவர்களின்‌ ஜாமிவுத்‌ திர்மிதீ என்ற நூல்‌ முஸ்லிம்‌ உலகில்‌ பிரசித்திப்‌ பெற்ற நூலாகவும்‌, இஸ்லாமியச்‌ சட்டங்களையும்‌, ஸஹபாக்கள்‌, தாபியீன்கள்‌, ஃபுகஹாக்களின்‌ கருத்துகளையும்‌ கவனமாகவும்‌, நுணுக்கமாகவும்‌ உள்ளடக்கிய ஒரு பொக்கிஷமாகவும்‌ கொள்ளப்படுகின்றது.

இவரது நூலில்‌ ஹசன்‌, ஹசன்‌ ஸஹீஹ்‌, ஹசன்‌ ஸஹீஹ்‌ கரீப்‌, ஜய்யித்‌ போன்ற கலைச்‌ சொற்கள்‌ மூலம்‌ தமது ஆய்வின்‌ முடிவை முன்வைத்ததன்‌ முதலாவது நபராக இமாம்‌ திர்மிதீ‌ (ரஹ்‌) அவர்கள்‌ கணிக்கப்படுகின்றார்கள்‌.

திர்மிதீ கிரந்தத்தில்‌ மறுமை, மற்றும்‌ தீர்ப்பு என்ற அத்தியாயத்தில்‌:

மறுமையில்‌ அல்லாஹ்வை அடியார்கள்‌ காணுதல்‌,

அல்லாஹ்வும்‌ அடியானும்‌ நேரில்‌ பேசுதல்‌ போன்ற அம்சங்களைப்‌ பதிவு செய்துள்ள திர்மிதீ அவர்கள் “ஒரு அடியான்‌ செலவு செய்கின்ற தூய்மையான பொருளை அல்லாஹ்‌ தனது வலக்கரத்தினால்‌ அங்கீகரிக்கின்றான்‌” என்ற நபிமொழியை விளக்குகின்ற போது அஸ்மா, ஸிஃபாத்தின்‌ தனது நிலைப்பாடு ஸலஃபுகளின்‌ நிலைப்பாட்டை ஒத்தது என்பதைப்‌ பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்‌:

இந்த ஹதீஸிலும்‌, அஸ்மா, ஸிஃபாத்‌ தொடர்பான இது
போன்ற இன்னும்‌ பல ஹதீஸ்களிலும்‌, அல்லாஹ்‌ ஒவ்வோர்‌ இரவிலும்‌ அடிவானத்திற்கு இறங்கி வருவதிலும்‌ அறிஞர்கள்‌ கருத்துக்‌ கூறுகின்ற போது : “இவற்றின்‌ அறிவிப்புக்கள்‌ ஆதாரப்பூர்வமாக இடம்‌ பெற்றுள்ளன. அவற்றை நம்ப வேண்டும்‌; சந்தேகம்‌ கொள்ளக்கூடாது, அது எப்படி? எவ்வாறு? என்று கேள்வி கேட்கவும்‌ கூடாது என்றும்‌ அறிஞர்‌ பெருமக்கள்‌ பலர்‌ கூறியுள்ளனர்‌.

இக்கருத்தைப்‌ போன்று, இமாம்களான மாலிக்‌, சுஃப்யான்‌ பின்‌ உயைனா, அப்துல்லாஹ்‌ பின்‌ முபாரக்‌ போன்ற அறிஞர்கள்‌ வழியாகவும்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள்‌ அனைவரும்‌ அவை வந்திருப்பது போன்று, இப்படித்தான்‌ என்று முறைகூறாது அவற்றை நீங்கள்‌ நடத்திச்‌ செல்லுங்கள்‌ எனத்‌ தீர்ப்பளித்துள்ளனர்‌. இவ்வாறுதான்‌ அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆவைச்‌ சேர்ந்த அறிஞர்களும்‌ கூறியுள்ளனர்‌.”

தொடர்ந்து விவரிக்கின்ற இமாம்‌ திர்மிதீ (ரஹ்‌) அவர்கள்‌:

இது அல்லாஹ்வின்‌ விஷயத்தில்‌ ஒப்பீட்டை உருவாக்கிவிடும்‌ எனக்‌ கூறி, ஜஹமிய்யாக்கள்‌ இந்த அறிவிப்புகளை மறுத்துள்ளனர்‌. அல்லாஹ்‌ தனது அருள்மறையில்‌ பல இடங்களில்‌ கரம்‌, கேள்வி, பார்வை பற்றிக்‌ குறிப்பிட்டுள்ளான்‌. ஆனால்‌ அவற்றை ஐஹமிய்யாக்கள்‌ தப்பும்‌ தவறுமாக அறிஞர்கள்‌ பலரது விளக்கங்களுக்கு நேர்‌ மாறாக விளக்கமளித்துள்ளதோடு, ஆதம்‌ நபியை அல்லாஹ்‌ அவனது கரத்தினால்‌ படைக்கவில்லை என்றும்‌, கை என்பதன்‌ கருத்து, சக்தி, ஆற்றல்‌ என்றும்‌ கூறுகின்றனர்‌ எனக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

இமாம்‌ இஸ்ஹாக்‌ பின்‌ இப்ராஹீம்‌ அவர்கள்‌ இது பற்றிக்‌ குறிப்பிடுகின்ற போது: அல்லாஹ்வின்‌ கரம்‌ மற்றோரு கரம்‌ போன்றது என்றும்‌, அல்லது அவனது கேள்வி மற்றோரு மனிதரின்‌ கேள்விப்புலன்‌ போன்றது என்றும்‌ கூறுவதுதான்‌ ஒப்பீடாகும்‌.

இப்படித்தான்‌ என்று குறிப்பிடாது கை,கேள்வி, பார்வை என அல்லாஹ்‌ அல்குர்‌ஆனில்‌ குறிப்பிட்டது போன்று பொதுப்படையாகக்‌ கூறினால்‌ அது ஒப்பீடு அல்ல. ஏனெனில்‌ அல்லாஹ்‌ அல்குர்‌ஆனில்‌, “அவனைப்‌ போன்று எப்பொருளும்‌ இல்லை. அவன்‌ கேட்பவன்‌, நன்கு பார்ப்பவன்‌” எனக்‌ குறிப்பிட்டுள்ளான்‌ என்பதாக இமாம்‌ திர்மிதீ அவர்கள்‌ விளக்குகின்றார்கள்‌. (திர்மதீ)

மறுமையில்‌ உங்களுள்‌ எவரும்‌ தமக்கும்‌ தமது இரட்சகனுக்கும்‌ இடையில்‌ எந்த மொழிபெயர்ப்பாளரும்‌, திரையும்‌ இல்லாமல்‌ பேசுவான்‌ என்ற நபிமொழி பற்றிக்‌ குறிப்பிடும்‌ இமாம்‌ திர்மிதீ அவர்கள்‌:

இது ஹசன்‌ ஸஹீஹ்‌ தரத்தில்‌ அமைந்த செய்தியாகும்‌. இதனை எங்களுக்கு வகீஃ‌ அவர்கள்‌ ஒரு நாள்‌ அஃமஷ்‌ அவர்கள்‌ வழியாக அபுஸ்ஸாயிப்‌ அவர்கள்‌ அறிவித்ததாகக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

இந்த ஹதீஸை வகீஃ அவர்கள்‌ அறிவித்து முடிந்ததும்‌ குராசானில்‌ இருப்போர்‌ இந்த ஹதீஸை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதில்‌ உள்ள நன்மையை அல்லாஹ்விடம்‌ எதிர்பார்க்கட்டும்‌. ஏனெனில்‌ ஐஹமிய்யாக்கள்‌ இதனை மறுக்கின்றார்கள்‌ எனக்‌ குறிப்பிட்டார்கள்‌... (திர்மிதீ‌)

5- அஹ்மத்‌ பின்‌ ஷுஐப்‌ அல்குராசானி அந் நஸயீ (ஹிஜ்ரி 215- 302)

அஸ்ஸுனன்‌ அல்குப்ரா, அஸ்ஸுனன்‌ அஸ்ஸுக்ரா (அல்முஜ்தபா), அல்குனா அள்ளுஅஃபா போன்ற பல நூல்களின்‌ ஆசிரியராக விளங்கும்‌ இமாம்‌ நசயீ (ரஹ்‌) அவர்கள்‌ குராசான்‌ நகர்‌ பெற்றெடுத்த ஹதீஸ்‌ அறிவியல்‌ துறையில்‌ சிறந்த அறிஞர்களுள்‌ ஒருவராகத்‌ திகழ்ந்தார்கள்‌.

இமாம்‌ நசயீ அவர்களுக்கு كتابالنعوتالأسماءوالصفات அஸ்மா ஸிஃபாத்‌ பற்றிய வர்ணிப்பு என்ற தலைப்பிலும்‌ ஒரு நூல்‌ உண்டு. அதில்‌ : 

அல்லாஹ்வின்‌ திருநாமங்கள்‌, மற்றும்‌ அவற்றைக்‌ கொண்டு பிரார்த்தனை செய்தல்‌,

அல்லாஹ்வின்‌ கருணை,

அல்லாஹ்வின்‌ கோபம்‌,

அல்லாஹ்வின்‌ கண்ணியம்‌,

அல்லாஹ்வின்‌ வல்லமை,

அல்லாஹ்வின்‌ முகத்தைக்‌ கொண்டு பாதுகாப்பு வேண்டுதல்‌,

அல்லாஹ்வின்‌ வெறுப்பு,

அல்லாஹ்வின்‌ திருப்தி,

அல்லாஹ்வின்‌ நேசம்‌,

அல்லாஹ்வின்‌ மன்னிப்பும்‌, தண்டனையும்‌ போன்ற பண்புகளை குர்‌ஆன்‌, சுன்னாவின்‌ நிழலில்‌ விளக்கியுள்ளார்கள்‌.

இதன்மூலம்‌ அஷ்‌அரிய்யாக்கள் கூறுவது போன்று அல்லாஹ்‌ ஏழு பண்புகளைக்‌ கொண்டு மட்டும்‌ வர்ணிக்கப்படுபவன்‌ அல்ல என்றும்‌, மாறாக அவன்‌ பல பெயர்கள்‌, பண்புகளுக்குரியவன்‌ என்பதையும்‌ உணர்த்தியுள்ளார்கள்‌.

6- இமாம்‌ இப்னு மாஜா (ரஹ்‌) அவர்கள்‌
(ஹிஜ்ரீ 209-279)

முஹம்மத்‌ பின்‌ யஸீத்‌ பின்‌ இப்னு மாஜா என்ற பெயரில்‌ அறியப்படும்‌ இமாம்‌ இப்னு மாஜா (ரஹ்‌) அவர்களின்‌ கிரந்தத்தில்‌ ஸஹீஹ்‌, ஹசன்‌, ளயீஃப்‌, மவ்ழூஃ எனப்‌ பலவகையான ஹதீஸ்களில்‌ (4000) ற்கும்‌ மேற்பட்ட ஹதீஸ்கள்‌ அறிவிக்கப்பட்டிருப்பினும்‌ அதில்‌ மவ்ழூஃ (இட்டுக்கட்டப்பட்டவையாக) சில ஹதீஸ்கள்‌ இடம்‌ பெற்றிருப்பது அறிஞர்களால்‌ சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

ஆரம்பக்‌ கால அறிஞர்கள்‌ ஸஹீஹுல்‌ புகாரி‌, ஸஹீஹ்‌ முஸ்லிம்‌, சுனன்‌ அபீதாவூத்‌, சுனன்‌ அத்திர்மிதீ, சுனன்‌ நசயீ ஆகிய ஐந்து கிரந்தங்களையும்‌ அடிப்படையான ஐந்து ஹதீஸ்‌ தொகுப்பு நூல்களாக அடையாளப்படுத்தி இருப்பினும்‌ இப்னு மாஜாவில்‌ காணப்பட்ட ஒழுங்கமைப்பு, சட்டம்‌ தொடர்பான அம்சங்கள்‌ என்பனவற்றைக்‌ கருத்தில்‌ கொண்டு ஹதீஸ்‌ கிரந்தங்களின்‌ வரிசையில்‌ அதனை ஆறாவது கிரந்தமாக இணைத்துக்‌ கொண்டனர்‌ என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்‌.

சுனன்‌ இப்னு மாஜா என்று அறியப்படும்‌ அவரது நூலில்‌
இமாம்‌ அவர்கள்‌: “ஜஹ்மிய்யாக்கள்‌ மறுத்துரைப்பது பற்றிய “பாடம்‌” என்ற 'அத்தியாத்தின்‌ கீழ்‌:

அல்லாஹ்வைப்‌ பார்ப்பது,

அல்லாஹ்வின்‌ சிரிப்பு,

அல்லாஹ்‌ அர்ஷினமீதிருப்பது,

அல்லாஹ்‌ அடியானுடன்‌ இரகசியமாக உரையாடுதல்‌,

அல்லாஹ்‌ அடியார்களுடன்‌ நேரடியாக உரையாடுதல்‌,

அல்லாஹ்‌ சுவர்க்கவாதிகளுடன்‌ உரையாடுவது,

அல்லாஹ்வின்‌ கேள்வியின்‌ விசாலம்‌,

அல்லாஹ்வின்‌ கருணை,

அல்லாஹ்வின்‌ வலக்கரம்‌, அவனது பிடி, வானங்களையும்‌, பூமியையும்‌ சுருட்டித்‌ தனது வலக்கரத்தில்‌ வைத்துக்‌ கொள்ளுதல்‌ போன்ற இன்னோரென்ன அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ பற்றிய பல ஆதாரப்பூர்வமான செய்திகளைப்‌ பதிவு செய்துள்ளதன்‌ மூலம்‌ அஸ்மா, ஸிஃபாத்தில்‌ தமது நிலைப்பாடு முன்‌ சென்ற அறிஞர்களைப்‌ போன்றதுதான்‌ என்பதை உணர்த்தியுள்ளார்கள்‌.

7- இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ முஹம்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹ்‌) அவர்கள்‌ (ஹிஜ்ரீ 164-241)

ஹதீஸ்‌ கலை அறிஞர்களில்‌ முக்கியப்‌ பாத்திரங்களில்‌ ஒருவரான இமாம்‌ அஹ்மத்‌ (ரஹ்‌) அவர்களின்‌ முக்கிய மாணவர்களாக இமாம்களான ஷாஃபிஈ, புகாரீ முஸ்லிம்‌, அபூதாவூத்‌(ரஹ்‌) போன்றோர்‌ இடம்‌ பெறுகின்றனர்‌. இமாம்‌ ஷாஃபிஈ அவர்கள்‌ இவரது ஆசிரியரும்‌, மாணவரும்‌ என்பது ஓர்‌ சிறப்பாகும்‌.

இமாம்‌ அஹ்மத்‌ அவர்கள்‌ ஃபகீஹ்‌, முஹத்திஸ்‌ என்று அறிஞர்களால்‌ புகழ்ந்துரைக்கப்படுகின்றார்கள்‌.

அல்குர்‌ஆன்‌ படைக்கப்பட்டது என்ற கோட்பாட்டை முஃதஸிலாக்கள்‌ அப்பாசிய கலீபா மஃமூனின்‌ காலத்தில்‌ முன்வைத்த போது இமாம்‌ அஹ்மத்‌ அவர்கள்‌ அதனைப்‌ பகிரங்கமாக எதிர்த்து அதற்காகச்‌ சிறையும்‌ சென்றார்கள்‌. அதனால்‌ இவரது காலம்‌ அறிஞர்கள்‌ மீது அநீதிகள்‌ கட்டவிழ்த்து விடப்பட்ட, சோதனைகள்‌ நிரம்பிய காலமாகக்‌ கொள்ளப்படுகின்றது.

இமாம்‌ அஹ்மத்‌ அவர்கள்‌ அர்ரத்து அலல்ஜஹுமிய்யா, முஸ்னத்‌, உஸுலுஸ்ஸுன்னா அஸ்ஸுஹ்த்‌ போன்ற பல நூல்களின்‌ ஆசிரியராக விளங்குகின்றார்கள்‌. அவற்றில்‌ “முஸ்னத்‌ அஹ்மத்‌” பிரபல்யமான ஹதீஸ்‌ தொகுப்பாகும்‌.

முஸ்னதில்‌ நாற்பதாயிரம்‌ (40,000) ஹதீஸ்கள்‌ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்‌, அவற்றில்‌ 300 ஹதீஸ்கள்‌ மூன்று அறிவிப்பாளர்களை மட்டும்‌ கொண்டவை என்றும்‌ அறிஞர்கள்‌ சுட்டிக்காட்டுகின்றார்கள்‌.

இவரது கிரந்தம்‌ நபித்தோழர்களின்‌ சிறப்புகளின்‌ அடிப்படையில்‌ அமைக்கப்பட்டதாகும்‌. கிட்டத்தட்ட (904) நபித்தோழர்களின்‌ அறிவிப்புகளைப்‌ படித்தரங்களாக அமைத்திருப்பது இதன்‌ சிறப்பம்சமாகும்‌.

முஸ்னதில்‌ இமாம்‌ அஹ்மத்‌ அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ ரோஷம்‌ பற்றிய ஓர்‌ ஹதீஸைப்‌ பதிவு செய்த பின்னர்‌:

இந்த ஹதீஸை விட ஜஹ்மிய்யாக்களுக்கு எதிரான கடுமையான ஒரு ஹதீஸ்‌ இருக்கமுடியாது என்று இந்த ஹதீஸ்‌ அறிவிப்பாளர்களில்‌ ஒருவரான உபைதுல்லாஹ்‌ அல்கவாரீரி கூறினார்கள்‌ எனக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌. அவ்வாறே ஸனாதிகாக்களுக்கும்‌ ஜஹ்மிய்யாக்களுக்கும்‌ மறுப்பு என்ற மற்றோரு நூலும்‌ இமாம்‌ அவர்களுக்கு உண்டு. அதில்‌ ஜஹம்‌ பின்‌ ஸஃப்வான்‌ என்பவன்‌ பற்றியும்‌,

அவனது கொள்கைக்‌ கோட்பாடு பற்றியும்‌,

அவன்‌ எடுத்து வைக்கும்‌ வாதங்கள்‌ பற்றியும்‌ தெளிவாகவும்‌ விரிவாகவும்‌ விளக்கியதுடன்‌,

அல்லாஹ்வின்‌ பேச்சு, பண்புகள்‌ பற்றியும்‌ தெளிவுபடுத்தி உள்ளார்கள்‌.

இந்த நூலானது இமாம்‌ அஹ்மத்‌ (ரஹ்‌) அவர்களின்‌ அகீதாக்‌ கோட்பாடு பற்றிய தெளிவையும்‌, பிரிவுகள்‌ பற்றிய அவர்களின்‌ அறிவின்‌ ஆழத்தையும்‌ உணர்த்துவதாகவே அமைந்துள்ளது.

அவ்வளவு விரிவான, விசாலமான, தெளிவான பல செய்திகளை அதில்‌ முன்வைத்துள்ளார்கள்‌.

8- இமாம்‌ சுலைமான்‌ பின்‌ அஹ்மத்‌ அத்தபரானீ
(ஹிஜ்ரீ 260- 360)

ஷாம்‌ தேசம்‌ பெற்றெடுத்த இமாம்‌ தபரானி (ரஹ்‌) அவர்கள்‌ ஹதீஸ்‌, தப்சீர்‌, ஃபிக்ஹ்‌ போன்ற துறைகளில்‌ பிரசித்தி பெற்ற அறிஞர்களுள்‌ ஒருவராகத்‌ திகழ்ந்தார்கள்‌. ஹதீஸ்‌ திறனாய்வாளராகவும்‌, புதுமையான படைப்பாளருமான முக்கிய அறிஞராகவும்‌ கணிக்கப்படுகின்றார்கள்‌.

ஜஹ்மிய்யா, முஃதஸிலா போன்ற வழிகேட்டுச்‌ சிந்தனையாளர்கள்‌ வாழ்ந்த முக்கிய காலத்தவர்‌ என்பதால்‌ அவர்களின்‌ கொள்கைப்‌ பிறழ்வு பற்றித்‌ தனியான தொகுப்புகளை வெளியிட்டார்கள்‌.

அல்முஃஜமுல்‌ கபீர்‌,

அல்முஃஜமுல்‌ அவசத்‌,

அஸ்ஸிஃபாத்‌,

தலாயிலுன்‌ நுபுவ்வா,

கிதாபுத்தஃப்சீர்‌,

அர்ரத்து அலல்‌ ஐஹுமிய்யா,

அர்ரத்து அலல்‌ முஃதஸிலா போன்ற நூல்களின்‌

ஆசிரியரான இமாம்‌ தபரானி (ரஹ்‌) அவர்கள்‌ நூற்றுக்கும்‌ அதிகமான நூல்களைப்‌ பல்வேறு தலைப்புகளில்‌ எழுதியவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இமாம்‌ தாரகுத்னீ (ரஹ்‌) அவர்கள்‌ அல்முஃஜம்‌ அல்கபீரில்‌ ஜஹ்மிய்யாக்கள்‌ பற்றி அவர்‌ இட்டிருக்கும்‌ தலைப்பின்‌ ஊடாக ஜஹ்மிய்யாக்கள்‌ பற்றிய அவரது பார்வையின்‌ கடுமை நமக்குப்‌ புலனாகின்றது.

“மறுமையில்‌ கண்ணியமிக்க அல்லாஹ்வைப்‌ பார்க்கும்‌ விஷயத்தில்‌ வழிகெட்ட ஜஹ்மிய்யாக்களின்‌ இறை நிராகரிப்பு பற்றிய பாடம்‌” எனத்‌ தலைப்பிட்டு அல்லாஹ்வை மறுமையில்‌ பார்க்கலாம்‌ என்பதை அறிவுறுத்தும்‌ பல நபிமொழிகளை அங்கு பதிவு செய்துள்ளார்கள்‌. (1425/المعجم الكبير للطبراني - (2

பார்க்கப்பட இயலுமான ஒருவன்‌ சுத்த சூனியமாக இருக்க முடியாது. மாறாக அவனுக்கென்ற தோற்றமும்‌, ஓர்‌ அமைப்பும்‌ இருக்கின்றது என்பதை உணர்த்தவே இவ்வாறான கருத்துகளைப்‌ பிரதிபலிக்கும்‌ அறிவிப்புகளைத்‌ தமது நூல்களில்‌ அறிஞர்கள்‌ பதிவு செய்துள்ளார்கள்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்க.

9- இமாம்‌ அபுல்‌ ஹசன்‌ அத்தாரகுத்னீ (ஹிஜ்ரீ 306-385)

பக்தாத்‌ நகரத்தின்‌ தாரகுத்ன்‌ பிரதேசம்‌ பெற்றெடுத்த தலை சிறந்த ஹதீஸ்‌ மற்றும்‌ ஃபிக்ஹ்‌ அறிஞர்களுள்‌ ஒருவரான இமாம்‌ தாரகுத்னீ (ரஹ்‌) அவர்கள்‌ இமாம்‌ ஷாஃபிஈ (ரஹ்‌) அவர்களின்‌ மாணவர்‌ என்று கூறப்படும்‌ அளவு அவரது கருத்தால்‌ தாக்கம்‌ பெற்றவர்‌. முஸ்லிம்‌ உலகுக்குப்‌ பல நூல்களைத்‌ தந்தவர்‌.

ஹதீஸ்‌ துறையில்‌, “இலல்‌” எனும்‌ அறிவியல்‌ ஆராய்ச்சித்‌ துறையில்‌ மிகப்‌ பிரசித்தி பெற்ற இமாம்களுள்‌ ஒருவராகக்‌ கணிக்கப்படும்‌ இமாம்‌ தாரகுத்னீ அவர்கள்‌ விலை மதிப்பிட முடியாத பல நூல்களின்‌ ஆசிரியராக விளங்குகின்றார்கள்‌.

“கிதாபுஸ்ஸிஃபாத்‌”, அர்ருஃயா”, “அந்நூஸுல்”‌ “பளாயிலுஸ்ஸஹாபா”, போன்ற நூல்களை அகீதா துறையிலும்‌, அல்‌இலல்‌, சுனன்‌, அல்‌இல்ஸாமாத்‌ போன்ற நூல்களை ஹதீஸ்‌ துறையிலும்‌ எழுதியுள்ளார்கள்‌ என்பது முக்கியக்‌ குறிப்பாகும்‌.

அஸ்ஸிஃபாத்‌ என்ற நூலில்‌:

அல்லாஹ்வின்‌ இரு கரம்‌,

அல்லாஹ்வின்‌ விரல்கள்‌ என்பதைக்‌ குறிக்கும்‌ ஹதீஸ்‌,

மறுமையில்‌ அல்லாஹ்வை நேரடியாகப்‌ பார்த்தல்‌,

அல்லாஹ்வின்‌ சிரிப்பு,

அல்லாஹ்‌ தனது வலக்கரத்தினால்‌ தர்மத்தை அங்கீகரித்து அருள்பாலிப்பது,

அவனது குர்சி,

அல்லாஹ்வின்‌ இரு பாதங்கள்‌,

அவன்‌ வானங்களைப்‌ படைக்குமுன்னர்‌ எங்கிருந்தான்‌?

அவனது பாதத்தை நரகில்‌ வைக்கின்ற வரை நரகம்‌ நிரம்பாது போன்ற செய்திகளை ஆதாரத்துடன் அறிவித்த பின்னர்‌.

“இவை ஆதாரப்பூர்வமானவையாகும்‌. ஹதீஸ்துறை அறிஞர்களும்‌, இந்த ஹதீஸ்கள்‌ ஃபுகஹாக்களும்‌ ஒருவருக்கெதிராக மற்றவர்‌ கருத்துக்‌ கூறி இருப்பினும்‌ இவை நம்மிடம்‌ முற்றிலும்‌ உண்மையானவையாகும்‌. அவற்றில்‌ நாம்‌ சந்தேகம்‌ கொள்ளமாட்டோம்‌. இருப்பினும்‌, (அல்லாஹ்வாகிய) அவன்‌ தனது பாதத்தை எவ்வாறு வைக்கின்றான்‌? அவன்‌ எவ்வாறு சிரிக்கின்றான்‌? எனக்‌ கேள்வி கேட்கப்பட்டால்‌ இது விளக்கமளிக்க முடியாததாகும்‌. யாரும்‌ இதற்கு விளக்கமளித்ததை நாம்‌ செவியுறவில்லை என்று கூறுவோம்‌” எனக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌. الصفات للدارقطني - تحقيق علي ناصر فقيهي  - (1 / 69

அல்லாஹ்வின்‌ விரல்கள்‌, பாதம்‌, அவனது கரம்‌ போன்ற இன்னோரன்ன பண்புகள்‌ பற்றி வருகின்ற ஹதீஸ்களில்‌ தமது நிலைப்பாடு என்ன என்பது பற்றி விளக்குகின்ற இமாம்‌ தாரகுத்னீ அவர்கள்‌ வகீஃ என்ற அறிஞர்‌ வழியாகப்‌ பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்‌.

இந்த ஹதீஸ்கள்‌ வந்துள்ளதைப்‌ போன்று நாம்‌ ஏற்றுக்‌
கொள்வோம்‌. இது எப்படி? என்றோ ஏன்‌ வந்தது? என்றோ நாம்‌ கேட்கமாட்டோம்‌ என்றும் الصفات للدارقطني - تحقيق علي ناصر فقيهي - (1 / 71 ‌, 

மற்றோரு இடத்தில்‌:

அல்லாஹ்‌ குர்‌ஆனில்‌ தன்னைப்‌ பற்றி வர்ணித்துள்ள அனைத்தையும்‌ மனனம்‌ செய்வதுதான்‌ அதன்‌ விளக்கமாகும்‌. அதற்கு எப்படி? என்றோ, உதாரணம்‌ கூறுவதோ அல்ல எனக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌.

அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதிருப்பதை அறிவித்த பின்னால்‌ இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்‌:

أشهد أنك فوق العرش ، فوق سبع سموات ، ليسكما يقول أعداؤك الزنادقة((الصفات للدارقطني - (1 / 58 من المكتبة الشاملة ))

நிச்சயமாக நீ ஏழு வானங்களுக்கும்‌ மேல்‌ அர்ஷின்‌ மீதிருப்பவன்‌ என்று நான்‌ சாட்சியம்‌ சொல்கின்றேன்‌. உனது விரோதிகளான (மார்க்கத்தில்‌ உள்ளிருக்கும்‌) மார்க்கத்துரோகிகள்‌ கூறுவது போன்றல்ல எனக்‌ குறிப்பிட்டார்கள்‌. (அஸ்ஸிஃபாத்‌)

பிறிதோர்‌ இடத்தில்‌ மறுமையில்‌ அல்லாஹ்வின்‌ தரிசனம்‌ பற்றி விளக்குகின்ற போது:

قيل لبن عيينة: هذه الأحاديث التي تروى في الرؤية. قال: حق على ما سمعنا ممن نثق به ونرضاه (الصفات للدارقطني - تحقيق علي ناصر فقيهي - (1 / 70)

இமாம்‌ சுஃப்யான்‌ பின்‌ உயைனாவிடம்‌ அல்லாஹ்வை மறுமையில்‌ காணுவது பற்றி அறிவிக்கப்படும்‌ ஹதீஸ்கள்‌ பற்றிய நிலைப்பாடு பற்றிக்‌ கேட்கப்பட்டபோது: நாம்‌ நம்பகமானவர்களாகக்‌ கொள்கின்றவர்கள்‌, நாம்‌ யாரைப்‌ பொருந்திக்‌ கொள்கின்றோமோ அவர்கள்தாம்‌ நபித்தோழர்கள்தாம்‌, இவற்றை அறிவித்துள்ளார்கள்‌ எனக்‌ குறிப்பிட்டார்கள்‌. (தாரகுத்னீ அஸ்ஸிஃபாத்‌)

இவ்வாறான செய்திகள்‌ மூலம்‌ அஸ்மா ஸிஃபாத்தில்‌ தமது நிலைப்பாட்டை உலகுக்கு இமாம்‌ அவர்கள்‌ தெளிவுபடுத்தியுள்ளார்கள்‌ என்பதை நாம்‌ புரிந்து கொள்ளலாம்‌.

இமாம்‌ தாரகுத்னீ (ரஹ்‌) அவர்கள்‌ அர்ருஃயா என்ற தமது நூலின்‌ முன்னுரையில்‌:

هذاكتاب حافل جمعت فيه ما ورد من النصوص الواردة فيكتاب الله تعالى ، وأحاديث النبي صلى الله عليه وسلم المتعلقة برؤية الباري جل وعل ، وبعض أمور الآخرة (الرؤية للدارقطني – (1 / 1

“இந்த நூல்‌ முக்கியத்துவமும சிறப்பும்‌ வாய்ந்த நூலாகும்‌. இதில்‌ கண்ணியமிக்க உயரந்தவனாகிய அல்லாஹ்வைப்‌ பார்ப்பது மற்றும்‌ மறுமை தொடர்பான சில விஷயங்களை அல்குர்‌ஆனிய வசனங்களிலும்‌, நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ ஹதீஸ்களிலும்‌ வந்துள்ள சான்றுகளை அடிப்படையாகக்‌ கொண்டு நான்‌ ஒன்று சேர்த்துள்ளேன்‌” எனக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌.

10- அபூ முஹம்மத்‌ ஹுசைன்‌ அல்‌ பஃகவீ (944) (ஹிஜ்ரீ 433-516)

குராசான்‌ மாகாணத்தின்‌ மர்வில்‌ பிறந்த இமாம்‌ பஃகவீ (ரஹ்‌) அவர்கள்‌ தஃப்சீர, ஹதீஸ்‌ போன்ற துறைகளில்‌ சிறந்த அறிஞராகக்‌ கொள்ளப்படுபவர்‌ இமாம்‌ பஃகவீ (ரஹ்‌) அவர்களின்‌ معالمالتنزيل என்ற நூல்‌ தஃப்சீர்களின்‌ வரிசையில்‌ இடம்‌ பெறும்‌ முக்கிய நூலாகும்‌.

இமாம்‌ அவர்கள்‌  شرح السنة للبغوي ‌ என்ற நூலில்‌ “ஜஹ்மிய்யாக்களுக்கு மறுப்பு” என்ற தலைப்பிட்ட பின்னர்‌: “நிச்சயமாக அல்லாஹ்‌ உறங்குவதில்லை. உறங்குவது அவனுக்கு அவசியமும்‌ இல்லை. அவனே நீதித்தட்டை (பாவங்கள்‌ காரணமாக)த்‌ தாழ்த்துகின்றான்‌. (நன்மைகள்‌ காரணமாக) அதை அவனே உயர்த்துகின்றான்‌. இரவின்‌ செயல்கள்‌ பகலின்‌ செயல்களுக்கு முன்னர்‌ அவனளவில்‌ உயர்த்தப்படுகின்றன, பகலின்‌ செயல்கள்‌ இரவின்‌ செயல்களுக்கு முன்னால்‌ உயர்த்தப்படுகின்றன” என்ற
நபிமொழியின்‌ மூலமும்‌ “அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதிருப்பதை உணர்த்தும்‌ விதமாக அமைந்துள்ள மற்றோர்‌ அறிவிப்பான “நிச்சயமாக அவன்‌ அவனது ஏழு வானங்களுக்கும்‌ மேல்‌ அர்ஷின்‌ மீதிருக்கின்றான்‌” என்ற மற்றோர்‌ அறிவிப்பின்‌ மூலமும்‌ அதை உறுதி செய்துள்ளார்கள்‌. (ஷரஹுஸ்ஸுன்னா)

11- அபூஹாதம்‌ முஹம்மத்‌ இப்னு ஹிப்பான்‌ (ஹிஜ்ரீ 270-354)

ஸிஜிஸ்தான்‌ மாகாணத்தில்‌ பிஸ்த்‌ என்ற நகரில்‌ பிறந்தவரான இமாம்‌ அவர்கள்‌ முஹத்திஸ்‌ முஅர்ரிஹ்‌, (வரலாற்றாரிசிரியர்‌), புவியியலாளர்‌, பேரறிஞர்‌ என்ற சிறப்புப்‌ பெயர்கள்‌ கொண்டு அழைக்கப்படுகின்றார்கள்‌.

அல்முஸ்னதுஸ்‌ ஸஹீஹ்‌ அலத்தகாஸீம்‌ வல்‌அன்வாஃ என்றழைக்கப்படும்‌ ஸஹீஹ்‌ இப்னு ஹிப்பான்‌, அல்ஜரஹ்‌ வத்தஃதீல்‌, தஃப்சீருல்‌ குர்‌ஆன்‌ போன்ற மற்றும்‌ பல நூல்களின்‌ ஆசிரியராக விளங்கும்‌ இமாம்‌ அவர்கள்‌ முஸ்லிம்‌ உலகுக்கு அறிவியல்‌ பொக்கிஷங்கள்‌ பலதை விட்டுச்‌ சென்றுள்ளார்கள்‌ என்பதை மறுக்க முடியாது.

ஸஹீஹ்‌ இப்னு ஹிப்பான்‌ முஸ்லிம்‌ உலகால்‌ வாசிக்கப்படும்‌ நிலை உருவானால்‌ மக்கள்‌ சுன்னா, பித்‌ஆ பற்றி மிகத்‌ தெளிவாகவும்‌ இலகுவாகவும்‌ அடையாளம்‌ கண்டு கொள்வர்‌ என்பது நமது கருத்தாகும்‌.

“அடியார்களின்‌ செயல்கள்‌ அல்லாஹ்வின்‌ பக்கம்‌ உயர்த்தப்படுகின்றன” என்ற ஹதீஸை இமாம்‌ இப்னு ஹிப்பான்‌ அவர்கள்‌ அறிவித்த பின்னர்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்‌:

இந்தச்‌ செய்திகளும்‌, இவ்வகை சார்ந்த அம்சங்களும்‌ பொதுப்படையாகவே வந்துள்ளன. ஹதீஸ்‌ துறையில்‌ பரிச்சயமற்றவர்களுக்கு அஹ்லுல்‌ ஹதீஸ்‌ குழுவினர்‌ அல்லாஹ்வுக்கு உருவகம்‌ கற்பிப்பவர்கள்‌ என்ற தோற்றப்பாட்டைக்‌ கொடுக்கின்றது. அப்படி எந்த ஓர்‌ அஹ்லுல்‌ ஹதீஸ்‌ பிரிவினரது எண்ணங்களிலும்‌ ஊசலாடுவதைவிட்டு அல்லாஹ்‌ பாதுகாக்க வேண்டும்‌. இந்தச்‌ செய்திகள்‌ மக்களின்‌ பழக்கத்தில்‌ உள்ள சொற்களால்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளை இப்படித்தான்‌ என்ற முறை கற்பிக்காது உதாரணத்தின்‌ அடிப்படையில்‌ பொதுப்படையாகக்‌ கூறப்பட்டிருக்கின்றன. நமது இரட்சகன்‌ அவனது படைப்பினங்களில்‌ இருந்தும்‌, அல்லது அவனது படைப்புகளின்‌ பண்புகள்‌ எதற்கும்‌ ஒப்பாக்கப்படுவதை விட்டு உயர்ந்தவனாகிவிட்டான்‌. ஏனெனில்‌ அவனைப்‌ போன்று எதுவும்‌ கிடையாது. (ஸஹீஹ்‌ இப்னு ஹிப்பான்‌)

இரவின்‌ மூன்றில்‌ ஓர்‌ பகுதி மீதமாக இருக்கின்ற போது அல்லாஹ்‌ கீழ்வானத்திற்கு இறங்கி வருவதாக வந்துள்ளன ஆதாரப்பூர்வமான நபிமொழி பற்றி விளக்குகின்ற போது இமாம்‌ இப்னு ஹிப்பான்‌ அவர்கள்‌:

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வின்‌ பண்புகளுக்கு முறை கற்பிக்கப்படமாட்டாது. மேலும்‌ அவை படைப்பினங்களுக்கு ஒப்பு, உவமையாக்கப்படவும்‌ மாட்டாது எனக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌. (ஸஹீஹ்‌ இப்னு ஸிப்பான்‌). அவ்வாறே அல்லாஹ்வின்‌ பேச்சையும்‌ விளக்கியுள்ளார்கள்‌.

அல்லாஹ்வின்‌ செயற்பாடு பற்றித்‌ தொடர்ந்து விளக்குகின்ற போது :

அவ்வாறுதான்‌ அவன்‌ விரும்பியபடி இறங்கி வருவான்‌. அவனது இறங்குதலைப்‌ படைப்பினங்களின்‌ இறங்குதலுக்கோ, அவர்கள்‌ இறங்குவதைப்‌ போன்று என்றோ ஒப்பிட்டுக்‌ கூற முடியாது. அவனது பண்புகள்‌ எதுவும்‌ அவனது படைப்பினங்களின்‌ பண்புகளுக்கு ஒப்பாக்கப்படுவதை விட்டு அவன்‌ பரிசுத்தமானவனாகி விட்டான்‌. (இப்னு ஹிப்பான்‌)

கண்ணியமிக்க முஹம்மத்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தம்‌ உம்மத்தினர்‌ புரிந்து கொள்ளாத அமைப்பில்‌ அவர்களை விழித்துப்‌ பேசவில்லை. கருத்துகள்‌ புரிந்து கொள்ள முடியாத மொழி நடையில்‌ எதுவும்‌ அவர்களின்‌ வழிமுறையில்‌ இருக்கவே இல்லை. (ஷரீஆவின்‌) ஒரு வழிமுறை ஸஹீஹானதாக இருப்பின்‌ அது அறிவிக்கப்படுவதும்‌, பொருள்‌ இன்றி வந்தபடி அதை ஏற்றுக்‌ கொள்வதும்தான்‌ ஒருவரின்‌ கடமை என எவராவது வாதிட்டால்‌ அவர்‌ நிச்சயமாகத்‌ தூதுத்துவத்தில்‌ குறை கண்டுவிட்டார்‌. இருப்பினும்‌, அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ இடம்‌ பெற்றுள்ள செய்திகளாக இருப்பின்‌ அவற்றில்‌ முறை கற்பிக்காது, அவற்றை மனிதர்கள்‌ நம்புவது கடமையாகும்‌.
(இப்னு ஹிப்பான்‌)

12- உஸ்மான்‌ பின்‌ சயீத்‌ அத்தாரிமீ (ஹிஜ்ரீ 200-280)

ஸிஜிஸ்தானில்‌ பிறந்த மாமேதை தாரிமீ (ரஹ்‌) அவர்கள்‌ சுனன்‌ அத்தாரிமீ‌, அர்ரத்து அலல்‌ ஜஹ்மிய்யா, அர்ரத்து அலா பிஷ்ரில்‌ முரீஸி போன்ற தலை சிறந்த நூல்களின்‌ ஆசிரியராகவும்‌ விளங்குகின்றார்கள்‌.

பித்‌அத்வாதிகளான ஜஹ்மிய்யாக்களுடன்‌ கடும்‌ போக்குடையவர்‌ என்று அறியப்பட்டார்கள்‌. சுனன்‌ அத்தாரிமீ‌ என்ற பிரபல நூலின்‌ ஆசிரியரான இமாம்‌ தாரிமீ அவர்கள்‌ ஜஹ்மிய்யாக்களுக்கு மறுப்பு என்ற நூலில்‌ பின்வரும்‌ அம்சங்களைப்‌ பதிவு செய்துள்ளார்கள்‌:

அர்ஷ்‌ பற்றிய நம்பிக்கை,

சொர்க்கத்தின்‌ படித்தரங்கள்‌,

அல்லாஹ்‌ இறங்கி வரும்‌ சந்தர்ப்பங்கள்,

மறுமையில்‌ அல்லாஹ்வைக்‌ காணுதல்‌,

குர்‌ஆன்‌ அல்லாஹ்வின்‌ யதார்த்தமான பேச்சு என்பதற்கான சான்றுகள்‌,

குர்‌ஆன்‌ படைக்கப்பட்டது அல்ல என்பதற்கான ஆணித்தரமான ஆதாரம்‌,

குர்‌ஆன்‌ அல்லாஹ்வின்‌ பேச்சு அல்லது இல்லை என்பது பற்றிய நிலைப்பாட்டில்‌ கருத்துத்‌ தெரிவிக்காது மெளனிப்போருக்கான மறுப்பு,

ஜஹ்மிய்யாக்கள்‌ காஃபிர்கள்‌ என்பதற்கான தெளிவான சான்றுகள்‌..

போன்ற முக்கிய பல செய்திகளை இடம்‌ பெறச்‌ செய்துள்ள இமாம்‌ அவர்களின்‌ நூலில்‌ குர்‌ஆன்‌ அல்லாஹ்வின்‌ பேச்சுதான்‌ என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அரபுக்கல்லூரி விரிவுரையாளர்கள்‌, மாணவர்கள்‌ அதில்‌ இருந்து பயன்‌ பெற்றால்‌ அகீதாவில்‌ தெளிவு பெறலாம்‌ என்பது நமது கருத்தாகும்‌.

இமாம்‌ அவர்கள்‌ ;الرد على الجهمية என்ற தமது நூலில்‌ அல்லாஹ்வைப்‌ பின்வருமாறு வர்ணித்து பெரியதொரு முன்னுரையை அமைத்துள்ளார்கள்‌. அதில்‌ அல்லாஹ்வின்‌ அழகிய பெயர்கள்‌, பண்புகள்‌ பற்றிய வழிமுறையில்‌ தமது நிலைப்பாட்டைத்‌ தெளிவாக விளக்கியுள்ளார்கள்‌.

 ونصفه بما وصف به نفسه ، ووصفه به الرسول ، فهو الله الرحمن الرحيم ، قريب ، مجيب ، متكلم قائل ، وشاء مريد ، فعال لما يريد  ، الأول قبلكل شيء ، والآخر بعدكل شيء ، له الأمر من قبل ومن بعد وله الخلق والأمر تبارك الله رب العالمين ، وله الأسماء الحسنى ، يسبح له ما في السموات والأرض وهو العزيز الحكيم ، يقبض ويبسط ، ويتكلم ، ويرضى ويسخط ، ويغضب ، ويحب ، ويبغض ، ويكره ، ويضحك ، ويأمر وينهى ،

அவன்‌ தன்னை வர்ணித்துள்ளது போலவும்‌, அவனை அவனது தூதர்‌ வர்ணித்துள்ளது போலவும்‌ அவனை நாம்‌ வர்ணிப்போம்‌. அவன்‌, அல்லாஹ்‌, அர்ரஹ்மான்‌, அர்ரஹீம்‌, சமீபமானவன்‌, பதில்‌ அளிப்பவன்‌, பேசுபவன்‌, கூறுபவன்‌, நாடுபவன்‌, தான்‌ விரும்பியதைச்‌ செய்பவன்‌, அனைத்திற்கும்‌ முன்னால்‌ ஆரம்பமானவன்‌, அனைத்திற்கும்‌ பின்னரும்‌ இறுதியானவன்‌, முன்னரும்‌, பின்னரும்‌ அதிகாரம்‌ அவனுக்கே உரியது, அகிலங்களின்‌ அதிபதியாகிய அல்லாஹ்‌ உயர்ந்தவனாக, மகத்துவம்‌ மிக்கவனாக ஆகிவிட்டான்‌. வானங்களிலும்‌, பூமியிலும்‌ இருப்பவை அவனுக்கே உரியன. அவன்‌ யாவற்றையும்‌ மிகைத்தவன்‌; ஞானமிக்கவன்‌; (கொடுப்பதைச்‌) சுருக்கிக்‌ கொள்கின்றான்‌; விரித்துக்‌ கொடுக்கின்றான்‌; பேசுகின்றான்‌; பொருந்திக்‌ கொள்கின்றான்‌; கோபம்‌ கொள்கின்றான்‌; சினம்‌ கொள்கின்றான்‌; நேசிக்கின்றான்‌; கோபிக்கின்றான்‌; வெறுக்கின்றான்‌; சிரிக்கின்றான்‌; ஏவுகின்றான்‌; தடுக்கின்றான்‌...

ذو الوجه الكريم ، والسمع السميع والبصر البصير ، والكلم المبين ، واليدين والقبضتين ، والقدرة والسلطان والعظمة ، والعلم الأزلي ، لم يزل كذلك ول يزال ، استوى على عرشه فبان من خلقه ، ل تخفى عليه منهم خافية ، علمه بهم محيط ، وبصره فيهم نافذ ، ليسكمثله شيء وهو السميع البصير .

அவன்‌ சங்கையான முகம்‌ உடையவன்‌; செவிமடுக்கும்‌ தன்மை உடையவன்‌; செவியுறுபவன்‌; அவன்‌ பார்க்கின்றான்‌; பார்வையுடையவன்‌. அவன்‌ பார்ப்பவன்‌; தெளிவாகப்‌ பேசுபவன்‌; இரு கரங்களை உடையவன்‌; இரண்டாலும்‌ பிடிக்கும்‌ ஆற்றல்‌ உடையவன்‌; வல்லமை, ஆற்றல்‌, சக்தி, மகிமை உடையவன்‌; ஆதிமுதல்‌ இருந்து வருபவன்‌; அவன்‌ அப்படியே தொடராக இருந்தவன்‌; இருப்பவன்‌; அவன்‌ தனது படைப்புக்களுடன்‌ கலக்காது அவர்களைவிட்டுப்‌ பிரிந்து அர்ஷின்‌ மீது நிலை பெற்றவன்‌; எதுவும்‌ அவனை விட்டு மறைந்திருக்காது. அவனது அறிவால்‌ அவன்‌ அனைத்தையும்‌ சூழ்ந்துள்ளான்‌. அவனது பார்வை அவர்கள்மீது செல்லுபடியாகிக்‌ கொண்டிருக்கும்‌. அவனைப்‌ போன்று எதுவும்‌ இல்லை; அவன்‌ கேட்பவன்‌; பார்ப்பவன்‌.‌

فبهذا الرب نؤمن ، وإياه نعبد ، وله نصلي ونسجد ، فمن قصد بعبادته إلى إله بخلف هذه الصفات ، فإنما يعبد غير الله ، وليس معبوده بإله ، كفرانه ل غفرانه (الرد على الجهمية للدارمي 

இந்த இரட்சகனையே நாம்‌ நம்பிக்கை கொள்கின்றோம்‌. அவனையே நாம்‌ வணங்குகின்றோம்‌. அவனையே தொழுது, சுஜுதும்‌ செய்கின்றோம்‌. இவ்வாறான பண்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கடவுளை வணங்க யார்‌ நாடிச்‌ செல்கின்றானோ அவன்‌ அல்லாஹ்‌ அல்லாததையே வணங்குகின்றான்‌. அவனால்‌ வணங்கப்படும்‌ தெய்வம்‌ (உண்மையான) தெய்வமாகாது. அது நிராகரிக்கப்படல்‌ வேண்டும்‌. அதனால்‌ மன்னிப்புப்‌ பெற முடியாது.

இமாம்‌ தாரமீயின்‌ காலத்தில்‌ ஜஹ்மிய்யா சிந்தனைத்‌ தாக்கம்‌ பெற்ற பலர்‌ இருந்தனர்‌. அவர்களுள்‌ பிஷ்ருல்‌ முரீசீ என்பவன்‌ முக்கியமான ஒருவன்‌.

இவன்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளை நிராகரிக்கின்ற இவனது சித்தாந்தத்தை யூதப்பரம்பரையில்‌ வந்தவனிடம்‌ ஜஹத் பின் திர்ஹம் என்பவன்‌ மூலம்‌‌ ஜஹ்ம்‌ பின்‌ ஸஃப்வான்‌ என்பவனிடம்‌ இருந்து எடுத்துக்‌ கொண்டான்‌. பிஷரும்‌ யூதப்பரம்பரையில்‌ வந்தவனே! இவன்‌ ஐஹ்மிய்யாக்களின்‌ தலைவனாகிய ஜஹம்‌ பின்‌ ஸஃப்வானை நேரில்‌ சந்திக்கவில்லை. மாறாக அவனது சீடர்களைச்‌ சந்தித்தவன்‌. இந்த பிஷ்ர்‌ அல்முர்சீ அல்லாஹ்வின்‌ பண்புகளை நிராகரிக்கின்ற வழிமுறையை யூதர்களின்‌ வழித்தோன்றல்கள்‌ மூலம்‌ பெற்றே பரப்பினான்‌. இவனது சிந்தனையை அங்கீகரிப்போராகவே அஷ்‌அரிய்யாக்கள்‌ பார்க்கப்படுகின்றனர்‌. இவன்‌ அறிஞர்களால்‌ காஃபிர்‌ என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளான்‌.

இவனைப்‌ பற்றி இமாம்‌ இப்னு ஹஜர்‌ அவர்கள்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்‌:

بشر بن غياث المريسي: مبتدع ضال ل ينبغي أن يروى عنه (لسان الميزان لبن حجر - (1 / 218

‌பிஷர்‌ பின்‌ கியாஸ்‌ அல்முரீசீ என்பவன்‌ பித்‌அத்வாதியும்‌, வழிகேடனும்‌ ஆவான்‌. அவனிடமிருந்து ஹதீஸ்கள்‌ அறிவிக்கப்படலாகாது. (விசானுல்‌ மீஸான்‌)

அவனுக்கு எதிராக இமாம்‌ தாரமீ அவர்கள்‌ எழுதிய மறுப்பு நூலான “அர்ரத்து அபிஷ்ரில்‌ முரீசி”, அல்லது “ஜஹ்மிய்யா சிந்தனையாளன்‌ பிடிவாதம்பிடித்த முரீசீ அல்லாஹ்வின்‌ மீது அபாண்டமாகக்‌ கூறியவற்றிற்கு உஸ்மான்‌ பின்‌ சயீத்‌ தாரமீயின்” மறுப்பு என்ற நூல்‌ முக்கியமானதாகும்‌.

அதில்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளான கேள்வி, பார்வை, இரு கரம்‌, முகம்‌ போன்ற அல்லாஹ்வின்‌ பண்புகள்‌, மற்றும்‌ அவற்றை மறுப்போருக்கான உறுதியானதும்‌ தெளிவானதுமான மறுப்பு போன்ற பல தெளிவுகள்‌ இடம்‌ பெற்றுள்ளன.

இவை பிஷ்ருல்‌ முரீசீக்கு எதிரான மறுப்புகளாக இருப்பினும்‌ நவீன காலத்தில்‌ அந்தச்‌ சிந்தனைகளை உள்வாங்கிய அஷ்‌அரிய்யா, மாத்ரூதிய்யா, முஃதஸிலா போன்ற அனைத்துச்‌ சிந்தனைப்‌ பிரிவுகளுக்கும்‌ போதுமான, தெளிவான மறுப்பாகவே அவற்றைக்‌ கொள்ள முடியும்‌.

இமாம்‌ அவர்களின்‌ மேற்படி இரண்டு நூல்களையும்‌ அரபுக்கல்லூரி விரிவுரையாளர்கள்‌ படிப்பதன்‌ மூலம்‌ நிச்சயமாக அகீதாவில்‌ தெளிவைப்‌ பெறலாம்‌.

13- அஹ்மத்‌ பின்‌ ஹுசைன்‌ அபூபக்ர்‌ அல்பைஹகீ (ஹிஜ்ரீ 384- 458)

பல நூல்களின்‌ ஆசிரியரான இமாம்‌ பைஹகீ (ரஹ்‌) அவர்கள்‌ ஹதீஸ்‌ கலையில்‌ போற்றப்படும்‌ அறிஞராகக்‌ காணப்பட்டார்கள்‌. அனைத்து மாணவர்களும்‌ ஷாஃபிஈ (ரஹ்‌) அவர்களுக்குக்‌ கடன்பட்டுள்ளார்கள்‌, ஆனால்‌ பைஹகீ அவர்களுக்கு ஷாஃபிஈ கடமைப்பட்டுள்ளார்‌ என்று கூறப்படும்‌ அளவு ஷாஃபிஈ இமாமின்‌ போக்குகள்‌ பற்றி விரிவாக அறிந்தவராகக்‌ காணப்பட்டார்கள்‌.

அல்‌அஸ்மா, வஸ்ஸிபாத்‌, அஸ்ஸுனன்‌, வல்‌ஆஸார்‌, மனாகிபுஷ்ஷாஃபிஈ போன்ற பல நூல்களின்‌ ஆசிரியரான இமாம்‌ அவர்கள்‌ விலைமதிப்பிட முடியாத அறிவியல்‌ பொக்கிஷங்களைச்‌ சமூகத்திற்காக விட்டுச்சென்றவர்‌ என்பதில்‌ சந்தேகமில்லை.

இமாம்‌ அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ பற்றித்‌ தனது அல்‌அஸ்மா, வஸ்ஸிஃபாத்‌ என்ற நூலில்‌ இவ்வாறு விளக்குகின்றார்கள்‌.

قال البيهقي رحمه الله : كتاب أسماء الله جل ثناؤه وصفاته التي دل كتاب الله تعالى على إثباتها ، أو دلت عليه سنة رسول الله صلى الله عليه وسلم ، أو دل عليه إجماع سلف هذه الأمة قبل وقوع الفرقة وظهور البدعة (الأسماء والصفات للبيهقي ـ موافق للمطبوع - (1 / 16

அல்லாஹ்வின்‌ வேதம்‌ அறிவித்த, அல்லது அவனது திருத்தூதரின்‌ சுன்னாவும்‌ அறிவித்த, அல்லது பித்‌அத்கள்‌ வெளியாகி, பிரிவுகள்‌ தோன்றுவதற்கு முன்‌ இந்த உம்மத்தின்‌ முன்னோர்களின்‌ ஏகமனதான முடிவு (இஜ்மா) அறிவித்து, நிலைப்படுத்தியுள்ள புகழுக்குரிய அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ பற்றிய அத்தியாயம்‌ எனத்‌ தலைப்பிட்டுள்ள இமாம்‌ பைஹகீ அவர்கள்‌ தமது நூலில்‌ அல்லாஹ்வின பண்புகளுடன்‌ தொடர்பான:

சிரிப்பு الضحك
முகம்‌ الوجه
விரல்‌ الأصبع
பாதம்‌ صفة القدم
கண்‌ العين
இரு கரங்கள்‌ اليدان/ اليدين
வலது கரம்‌ மணிக்கட்டு اليمين والكف
கெண்டைக்கால்‌ الساق
போன்ற ஸிஃபத்துகள்‌ பற்றிய செய்திகளை அல்குர்‌ஆன்‌, அஸ்ஸுன்னாவில்‌ இருந்து தெளிவாக விளக்கியுள்ளார்கள்‌.

குறிப்பு: இமாம்‌ பைஹகீ அவர்களின்‌ அஸ்மா ஸிஃபாத்‌ விளக்கங்கள்‌ சிலபோது அஷ்‌அரிய்யா கருத்துகள்‌ போன்று இடம்‌ பெற்றிருப்பினும்‌ அவரது பார்வை பெரும்பாலும்‌ ஸலஃபுகளின்‌ கருத்துகளுக்கு உடன்பட்டவையாகவே காணப்படுகின்றது.

அத்துடன்‌, அஷ்‌அரிய்யாக்கள்‌ மறுக்கின்ற தவறாக விளக்கம்‌ தருகின்ற அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ பலவற்றை இமாம்‌ பைஹகீ அவர்கள்‌ அங்கீகரித்து, நிலைப்படுத்தியுள்ளார்‌கள்‌ என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்‌.

14- அபூ முஹம்மத்‌ அப்துல்லாஹ்‌ இப்னு குதைபா அத்தைனவரி (ஹிஜ்ரீ 213-276)

ஹிஜ்ரீ மூன்றாம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்த சிறந்த மாமேதைகளுள்‌ ஒருவராகக்‌ கணிக்கப்படும்‌ இமாம்‌ குதைபா (ரஹ்‌) அவர்கள்‌ அரபுமொழி, அரபு இலக்கியம்‌ போன்ற துறைகளில்‌ திறமைமிக்கவராகவும்‌, முரண்பாடுள்ளவையாக முன்வைக்கப்படும்‌ ஹதீஸ்களுக்குத்‌ தெளிவான விளக்கங்களைத்‌ தருவதிலும்‌ பிரசித்தி பெற்றவர்‌.

குர்‌ஆன்‌, மற்றும்‌ ஹதீஸ்களில்‌ இடம்‌ பெறும்‌ அறிமுகமற்ற, பொருள்‌ மயக்கமாக உள்ள வசனங்கள்‌, சொற்களை விளக்கும்‌ வகையில்‌ இவரால்‌ சில நூல்கள்‌ எழுதப்பட்டிருப்பது பெரும்‌ அருளாகும்‌.

பதினைந்திற்கும்‌ மேற்பட்ட நூல்களை எழுதி முஸ்லிம்‌
சமூகத்தின்‌ அறிவுத்தேவையைப்‌ பூர்த்தி செய்தவர்களுள்‌ ஒருவர்தாம்‌ இமாம்‌ இப்னு குதைபா (ரஹ்‌)அவர்கள்‌.

இவற்றில்‌ தஃவீலு முக்தலஃபில்‌ ஹதீஸ் ‌என்ற நூலும்‌ ஒன்றாகும்‌. இது வெளிப்படையில்‌ முரண்பாடாகத்‌ தெரிகின்ற ஹதீஸ்கள்‌, குர்‌ஆனுக்கு முரண்பாடானவை என்று வழிதவறிய சிந்தனைப்‌ பிரிவினரால்‌ விமர்சிக்கப்படும்‌ ஹதீஸ்கள்‌ என்பனவற்றிற்கு விரிவான விளக்கத்தைத்‌ தாங்கிய நூலாகக்‌ கொள்ளப்படுகின்றது.

ஹதீஸ்களில்‌ முரண்பாடுகள்‌ பற்றி நவீன காலத்தில்‌ முன்வைக்கப்படுகின்ற வாதங்களில்‌ பெரும்பாலானவை கவாரிஜ்‌, முஃதஸிலா, ஜஹ்மிய்யா, மூதகல்லிமூன்‌ போன்ற வழிதவறிய சிந்தனைப்‌ பிரிவுகளால்‌ முன்வைக்கப்பட்டு அவற்றிற்குத்‌ தக்க பதில்கள்‌ அளிக்கப்பட்டுள்ளன என்பதை அந்த நூலை வாசிக்கின்ற போது புலனாகின்றது.

“அடியார்களின்‌ இதயங்கள்‌ அல்லாஹ்வின்‌ விரல்களில்‌ இருவிரல்களுக்கிடையில்‌ இருக்கின்றன. அவற்றை அவன்‌ விரும்பியவாறு புரட்டுவான்‌ என்ற ஹதீஸில்‌ விரல்கள்‌ என்று வருவதைக்‌ கவனத்தில்‌ கொண்டு அல்லாஹ்வின்‌ அருள்கள்‌ என்று பொருள்கொள்வோரின்‌ கருத்தை மறுத்துரைக்கின்ற இமாம்‌ இப்னு குதைபா (ரஹ்‌) அவர்கள்‌:

அப்படியானால்‌ எனது இதயத்தை மார்க்கத்தில்‌ நிலைப்படுத்துவாயாக என்ற வாசகம்‌ ஏன்‌ எனக்‌ கேள்வி எழுப்புவதோடு, இஸ்பஃ விரல்‌ என்பதற்கு நீ தரும்‌ பொருள்‌ என்ன என நம்மிடம்‌ யாராவது வினவினால்‌ விரல்‌ என்பது இங்கு அருள்‌ என்று பொருள்‌ கொள்ள முடியாது என்றும்‌, இதன்‌ பொருள்‌,

சூரா அஸ்ஸுமரில்‌ இடம்‌ பெற்றுள்ள 67ஆம்‌ வசனமான:

“அவர்கள்‌ அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறைப்‌ பிரகாரம்‌ மதிக்கவில்லை. பூமிகள்‌ அனைத்தும்‌ மறுமையில்‌ அவனது பிடிக்குள்‌ இருக்கும்‌. வானங்கள்‌ அவனது வலக்கரத்தால்‌ சுருட்டப்பட்டுக்‌ காணப்படும்‌... என்ற இறைமறை வசனத்தில்‌ வருவது போன்ற பொருளாகும்‌ எனக்‌ குறிப்பிட்ட பின்னர்‌,

நமது விரல்களைப்‌ போன்ற விரல்‌ என்றோ, நமது கரங்களைப்‌ போன்ற கரம்‌ என்றோ, நமது பிடிகளைப்‌ போன்ற பிடி என்றோ நாம்‌ கூறமாட்டோம்‌. ஏனெனில்‌ தூய்மை மிக்க அல்லாஹ்வின்‌ (பண்புகள்‌) எதுவும்‌ நமக்கு ஒப்பாகமாட்டாது என விளக்கினார்கள்‌. ((தஃவீலு முக்தலஃபில்‌ ஹதீஸ்‌))

அவனது இரு கரங்களும்‌ வலதுதான்‌ என்ற ஹதீஸ் பற்றிய விமர்சனத்திற்கு விளக்கமளிக்கும்‌ இமாம்‌ அவர்கள்‌:

இது ஸஹீஹான ஹதீஸே என்றும்‌, இது (அல்லாஹ்வுக்குச்‌) சாத்தியமற்றது அல்ல என்றும்‌ நாம்‌ கூறுவோம்‌ என்று குறிப்பிடுகின்றார்கள்‌. ((இமாம்‌ இப்னு குதைபா: தஃவீலு முக்தலஃபில்‌ ஹதீஸ்))

இந்த விளக்கம்‌ அஸ்மா, ஸிஃபாத்தில்‌ இமாம்‌ இப்னு குதைபா(ரஹ்‌) அவர்களின்‌ நிலைப்பாட்டைத்‌ தெளிவாகப்‌ எடுத்துக்காட்டுகின்றது.

வானங்கள்‌ அவனது வலக்கரத்தினால்‌ சுருட்டப்பட்டிருக்கும்‌ என்ற குர்‌ஆன்‌ வசனத்தில்‌ “வானங்கள்‌ அவனது வல்லமையினால்‌, அல்லது அருளினால்‌ சுருட்டப்பட்டிருக்கும்‌ என்று விளக்கம்‌ தருவது அல்குர்‌ஆனிய வசனங்களை அதன்‌ சரியான, வெளிப்படையான பொருளில்‌ இருந்து திருப்புவதும்‌, அது கூறவரும்‌ உண்மையான கருத்தைப்‌ பாழடிப்பதுமாகும்‌.

நிச்சயமாக நீதியாளர்கள்‌ என்போர்‌ அல்லாஹ்விடம்‌ அர்ரஹ்மானாகிய அவனது வலக்கரத்தின்‌ பக்கமாக(வலதில்‌) இருப்பார்கள்‌. அவனது இரு கரங்களும்‌ வலதாகும்‌. இத்தகையோர்‌ தமது தீர்ப்பிலும்‌, தமக்குரிய குடும்ப விவகாரங்களிலும்‌ நீதியாக நடப்பவர்கள்‌ என்று நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (முஸ்லிம்‌ - 3406)

நிச்சயமாக அல்லாஹ்வின்‌ வலது கரம்‌ நிரம்பியே இருக்கின்றது. இரவு பகலாக அவன்‌ வாரி வழங்குவதால்‌ அதில்‌ எவ்விதக்‌ குறைவும்‌ வரப்போவதில்லை (புகாரி‌, 686, முஸ்லிம்‌- 1658, 1659)

இங்கு வலது எனத்‌ தெளிவாகக்‌ கூறப்பட்டுள்ளதை அருள்‌ என்று விளக்குவது அல்லாஹ்வின்‌ பண்பைப்‌ பாழடிப்பதாகும்‌.

இந்த ஹதீஸ்களில்‌ வலது என்றும்‌ இரு கரம்‌ என்றும்‌ தெளிவாக வந்திருக்கின்ற போது அவற்றைச்‌ சக்தி, வல்லமை என்று மனிதப்‌ பண்புகளுக்கு ஒப்பிட்டு விளக்குவது பெரும் பாவமாகும்‌.

மேற்கண்ட ஹதீஸில்‌ இடம்‌ பெற்றுள்ள வலது கரம்‌ என்பதை அவனது படைப்பினங்களின்‌ வலதிற்கு ஒப்பிடாது நம்புவதுதான்‌ கடமையாகும்‌. அல்லாஹ்வுடன்‌ தொடர்புபடுத்தி வரும்‌ அவனது பண்புகள்‌ மனிதர்களிடம்‌ காணப்படும்‌ பண்புகள்‌, உறுப்புகள்‌, அங்கங்கள்‌ பற்றியதாக இருந்தால்‌ அவை அனைத்துப்‌ பண்புகளையும்‌ மனிதப்‌ பண்புகளுக்கு ஒப்பிடுவது அவற்றின்‌ வெளிப்படையான பொருளில்‌ விளக்காது, அவற்றிற்குத்‌ தவறான பொருள்‌ தந்து, அவற்றின்‌ பொருளைப்‌ பாழடிப்பது இஸ்லாமியச்‌ சான்றுகளைக்‌ கையாளும்‌ முறையில்‌ காணப்படும்‌ முறைகேடாகும்‌.

15- முஹம்மத்‌ பின்‌ இஸ்ஹாக்‌ அல்‌அஸ்பஹானீ (இப்னு மன்தா) (ஹிஜ்ரீ 310- 395)

மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ அரை இறுதிப்‌ பகுதியில்‌ வாழ்ந்த ஹதீஸ்‌ கலை அறிஞர்களில்‌ இமாம்‌ இப்னு மன்தா அவர்களும்‌ ஒருவர்‌.

اليمان

الرد على الجهمية

معرفة الصحابة

التوحيد ومعرفة أسماء الله عزوجل وصفاته على التفاق والتفرد

போன்ற பெறுமதிமிக்க நூல்களின்‌ ஆசிரியராவார்‌. அஸ்மா ஸிஃபாத்‌ கோட்பாட்டை உலகுக்கு விளக்குவதில்‌ இவருக்குப்‌ பெரும்‌ பங்குண்டு.

அல்குர்‌ஆனில்‌ இடம்‌ பெற்றுள்ள வசனங்களையும்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ பொன்மொழிகளையும்‌ அணுகும்‌ முறை பற்றி “அத்தவ்ஹீத்‌” என்ற நூலில்‌ பின்வருமாறு பதிவு செய்கின்றார்கள்‌.

நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அர்களிடமிருந்து அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ பற்றி வந்துள்ள செய்திகள்‌ முதவாதிர்‌ தரத்தில்‌ அமைந்த செய்திகளாகவும்‌, அல்லாஹ்வின்‌ வேதத்திற்கு உடன்பட்டவையாகவும்‌ வந்துள்ளன. அவற்றைப்‌ பின்வந்தோர்‌ (கலஃபுகள்‌) முன்னோர்களிடம்‌ (சலஃபுகளிடம்‌) இருந்து நூற்றாண்டு நூற்றாண்டாக ஸஹாபாக்கள்‌, தாபியீன்கள்‌ முதல்‌, எமது காலம்‌ வரை அல்லாஹ்வின்‌ பண்புகளை நிலைப்படுத்தும்‌ வழியிலும்‌, அறிந்தும்‌, அதைக்‌ கொண்டு நம்பிக்கை கொண்டும்‌, அவற்றிற்குக்‌ கட்டுப்பட்டு நடந்தும்‌ வந்துள்ளனர்‌.

இந்த நடைமுறையானது, அரபுக்களிடம்‌ அறியப்பட்ட ஒன்றாகவும்‌, அவற்றிற்குத்‌ தவறான விளக்கம்‌ தரவேண்டிய எதுவிதத்‌ தேவையும்‌ அற்றவையாகவும்‌ காணப்பட்டது எனக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌. (அத்தவ்ஹீத்‌)

இமாம்‌ இப்னு மன்தாவின்‌ கூற்றை இமாம்‌ அபுல்காசிம்‌ அல்‌அஸ்‌ஃபஹான்‌ (ரஹ்‌) அவர்கள்‌ الحجة في بيان المحجة வில்‌ பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்‌.

ஹிஜாஸ்‌, திஹாமா, ஏமன்‌, இராக்‌, சிரியா, எகிப்து போன்ற பிரதேசங்களில்‌ உள்ள நமது அறிஞர்கள்‌ அனைவரும்‌ படைப்பாளனாகிய அல்லாஹ்‌ தனக்கென்று நிலைப்படுத்தியுள்ள (அவனது) முகத்தை அவனது படைப்பினங்களில்‌ ஒருவருக்கும்‌ ஓப்பிடாது, அவனுக்கு உதாரணம்‌ கற்பிக்காது நிலைப்படுத்துகின்றார்கள்‌. நமது இரட்சகனாகிய அல்லாஹ்‌ படைப்பினங்களுக்கு ஒப்பாகுவதைவிட்டுத்‌ தூய்மையாகி, பாழடிப்போரின்‌ கூற்றுகளைவிட்டு உயர்ந்தவனாகவும்‌ உள்ளான்‌ என இமாம்‌ இப்னு மன்தா (ரஹ்‌) அவர்கள்‌ கூறியதாகக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

16-இமாம்‌ இஸ்மாயீல்‌ அல்‌அஸ்‌ஃபஹானீ (ஹிஜ்ரீ 457 - 535)
தல்ஹா பின்‌ உபைதுல்லாஹ்‌ (ரழி) அவர்களின்‌ பரம்பரையில்‌ வந்தவரான இமாம்‌ அபுல்‌ காசிம்‌ அல்‌அஸ்‌ஃபஹான்‌ (ரஹ்‌) அவர்கள்‌ தலை சிறந்த அறிஞர்களுள்‌ ஒருவர்‌ என்பதில்‌ சந்தேகமில்லை.

ஷாஃபிஈ இமாமின்‌ போக்கில்‌ கவரப்பட்டவராக இருந்த இமாம்‌ அவர்கள்‌ தாம்‌ வாழ்ந்த காலத்தில்‌ சமூகத்திற்குத்‌ தேவையான கல்வியை உள்ளடக்கிய அறிவியல்‌ பொக்கிஷங்களை விட்டுச்‌ சென்றவர்‌ என்பதில்‌ சந்தேகமில்லை.

கிதாபுல் இமாமத் என்ற பிரசித்தி பெற்ற தமது நூலின்‌ மூலம்‌ ஷீ‌ஆக்களால்‌ கிளரப்பட்ட கிலாபத்‌, இமாமத்‌ பற்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்தவர்‌ என்று குறிப்பிட முடியும்‌.

“அஸ்மா, ஸிஃபாத்‌ கோட்பாட்டை மிகத்தெளிவாக நிறுவிய நூல்களின்‌ இமாம்‌ அல்‌அஸ்‌ஃபஹான்‌ (ரஹ்‌) அவர்களின்‌ الحجة في بيان المحجة  என்ற நூல்‌ மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

அஸ்மா, ஸிஃபாத்‌ தொடர்பான பல விதிகளை அதில்‌ அவர்கள்‌ பதிவு செய்துள்ளார்கள்‌. அவர்களின்‌ முத்தான கருத்துகள்‌ சில, அவற்றின்‌ முக்கியத்துவம்‌ கருதி இங்கு எடுத்தெழுதப்படுகின்றது.

சுன்னா என்பது அஸர்‌ رثأ மற்றும்‌ ஹதீஸைப்‌ பின்பற்றுவதும்‌, (தேவையற்ற விமர்சனங்களில்‌ இருந்து) பாதுகாப்பாக இருப்பதும்‌, (சான்றுகள்‌ வந்துள்ள பிரகாரம்‌) அங்கீகரிப்பதும்‌, அல்லாஹ்வின்‌ பண்புகளை ஒப்புவமை கூறாது நம்பிக்கை கொள்வதும்‌, பாழடிக்காதிருப்பதும்‌, தவறான விளக்கம்‌ தராதிருப்பதுமாகும்‌ என விளக்கியதன்‌ பின்னால்‌ அல்லாஹ்வின்‌ சில பண்புகள்‌ பற்றி எடுத்தெழுதி விட்டு...

அல்லாஹ்வின்‌ தூதரின்‌ ஹதீஸ்களில்‌ ஸஹீஹானதாக வந்துள்ள அல்லாஹ்வின்‌ ஸிஃபத்துகளின்‌ (பண்புகளில்‌) தஃப்சீர்‌ விளக்கம்‌ என்பது அவை (மேலோட்டமான பொருள்‌ கொண்டு) வாசிக்கப்படுவதுதான்‌ என்று இமாம்கள்‌ ஏகோபித்துள்ளனர்‌. அவை வந்துள்ளவாறு நீங்கள்‌ அவற்றை நடத்திச்‌ செல்லுங்கள்‌ என்று அவர்கள்‌ குறிப்பிட்டுள்ளனர்‌.

இவை அனைத்தும்‌ முறைமை இன்றியும்‌, தவறான விளக்கமின்றியும்‌, ஈடேற்றம்‌ பெற்றவர்களின்‌ நம்பிக்கையைப்‌ போன்று ஈமான்‌ கொள்வதும்‌, அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு வழிப்படுவதுமாகும்‌.

மேகத்தின்‌ நிழலில்‌ அவர்களிடம்‌ அல்லாஹுவும்‌, வானவர்களும்‌ வருவதையா அவர்கள்‌ எதிர்பார்க்கின்றனர்‌ அப்போது காரியம்‌ முடிக்கப்பட்டுவிடும்‌, அல்லாஹ்வின்‌ பக்கமே அனைத்து விஷயங்களும்‌ மீட்டப்படும்‌ (அல்பகரா: 210) என்றும்‌, 

வானவர்கள்‌ அணியணியாக நிற்கின்ற போது உமது இரட்சகன்‌ வருவான்‌. (அல்‌ஃபஜ்ர்‌: 22) போன்ற குர்‌ஆனில்‌ கூறப்படும்‌ அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ அனைத்தையும்‌ முறைமை கற்பிக்காது, தவறான விளக்கமும்‌ கூறாது ஈமான்‌ கொள்வதாகும்‌ என அவர்கள்‌ மேலும்‌ குறிப்பிடுகின்றார்கள்‌...

அவர்கள்‌ தொடர்ந்து கூறுகையில்‌...

... நிச்சயமாக அல்லாஹ்‌
கேட்பவன்‌,
பார்ப்பவன்‌,
யாவற்றையும்‌ அறிந்தவன்‌,
நுட்பமானவன்‌
அவன்‌ பேசுகின்றான்‌.
பொருந்திக்‌ கொள்கின்றான்‌.
கோபிக்கின்றான்‌. சிரிக்கின்றான்‌,
ஆச்சரியப்படுகின்றான்‌.

மறுமையில்‌ தனது நல்லடியார்களைக்‌ கண்டு சிரித்தவனாக வெளிப்படுகின்றான்‌.

ஓவ்வோர்‌ இரவிலும்‌ அடிவானத்திற்கு இறங்கி, பிரார்த்தனை செய்து அழைப்போர்‌ உண்டா? அவருக்குப்‌ பதில்‌ அளிக்கின்றேன்‌, பிழைபொறுக்கத்‌ தேடுவோர்‌ உண்டா? நான்‌ அவருக்குப்‌ பிழை பொறுக்கின்றேன்‌, (தவ்பா) பாவ மன்னிப்புக்கேட்போர்‌ உண்டா? நான்‌ அவருக்கு மன்னிப்புத்‌ தருகின்றேன்‌ என ஃபஜ்ர்‌ உதயம்‌ வரை கூறுகின்றான்‌.

அடியார்கள்‌ அவனைப்‌ பார்ப்பதில்‌ சந்தேகப்படாதவாறு தமது கண்களால்‌ அல்லாஹ்வை மறுமையில்‌ நேரடியாகக்‌ காண்பார்கள்‌. பார்ப்பதற்காக முரண்பட்டுக்‌ கொள்ளவோ, போட்டி போட்டுக்‌ கொள்ளவோ மாட்டார்கள்‌. (1/249 அல்ஹுஜ்ஜா)

அஹ்லுஸ்ஸுன்னாவினர்‌ அல்லாஹ்‌ அவனது வேதத்தில்‌ பொதுப்படையாகக்‌ கூறியவற்றைப்‌ பொதுப்படையாகவும்‌, அவனது தூதர்‌ அவர்கள்‌ பொதுப்படையாகக்‌ கூறியவற்றைப்‌ பொதுப்படையாகவும்‌ நோக்குவார்கள்‌. உதாரணமாக:

கேள்வி,
பார்வை,
முகம்‌,
ஆன்மா,
பாதம்‌,
சிரிப்பு.

இவற்றில்‌ இப்படித்தான்‌ என்ற முறைமை கற்பிக்காது, உதாரணப்படுத்தாது, அவனது பண்புகளை ஐஹ்மிய்யாக்கள்‌ நிராகரித்தது போன்று நிராகரிக்காது, இல்லாமல்‌ செய்யாது அவர்கள்‌ நடந்து கொள்வார்கள்‌... தொடர்ந்து அவர்கள்‌ குறிப்பிடுகின்ற போது:

பகுத்தறிவைக்‌ கொண்டு நாம்‌ அல்லாஹ்வின்‌ தூதரின்‌ வழிமுறையை முரண்பாடு காணமாட்டோம்‌. ஏனெனில்‌ மார்க்கம்‌ என்பது பகுத்தறிவு கூறுவதற்கு அமைவாக நடக்காமல்‌ (வஹிக்கு) வழிப்படுவதும்‌, கட்டுப்பட்டு நடப்பதும்‌ பகுத்தறிவாகும்‌. சுன்னாவைப்‌ பாழடிப்பதற்கு இட்டுச்‌ செல்வது அறியாமையே அன்றி பகுத்தறிவு அல்ல என்றும்‌ குறிப்பிடுகின்றார்கள்‌. (அல்ஹுஜ்ஜா)

இமாம்‌ அல்‌அஸ்‌ஃபஹான்‌ அஷ்ஷாஃபிஈ (ரஹ்‌) அவர்களின்‌ வரிகளை இமாம்‌ தஹபீ அவர்கள்‌ தமது அல்‌ உலுவ்வில்‌ இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்‌.

இவர்‌, ஹிஜ்ரீ 535 இல்‌ மரணமானவர்‌. இமாம்‌ ஷாஃபிஈ (ரஹ்‌) அவர்களின்‌ போக்கில்‌ வாழ்ந்தவர்‌. இவரும்‌ இமாம்களான மாலிக்‌, அவ்ஸாயீ, ஷாஃபிஈ, ஹம்மாத்‌ பின்‌ ஸைத்‌, அஹ்மத்‌, யஹ்யா பின்‌ சயீத்‌ அல்கத்தான்‌, அப்துர்ரஹ்மான்‌ பின்‌ மஹ்தீ‌, இஸ்ஹாக்‌ பின்‌ ராஹோயா (ராஹவைஹீ‌) போன்றவர்களின்‌ நிலைப்பாடு எதுவோ அதுதான்‌ தமது நிலைப்பாடும்‌ என விளக்கியதாக இமாம்‌ தஹபீ அவர்கள்‌ அல்‌உலுவ்‌ என்ற பிரசித்தி பெற்ற அவர்களின்‌ நூலில்‌ உறுதி செய்த பின்னர்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்‌.

அல்லாஹ்‌ தன்னைப்‌ பற்றி வர்ணித்துள்ள அனைத்திலும்‌ அவற்றைப்‌ படித்து ஒதுவதுதான்‌ அதன்‌ விளக்கமாகும்‌. அதாவது அவற்றிற்கு வெளிப்படையான பொருள்‌ தந்து நடைமுறைப்படுத்துவதும்‌, பிழையான விளக்கம்‌ தராமல்‌ இருப்பதும்தான்‌ அதற்குரிய தஃப்சீராகும்‌. (அல்‌உலுவ்‌) இவை இமாம்‌ அஸ்‌ஃபஹான்‌ (ரஹ்‌) அவர்களின்‌ பெறுமானமிக்க வரிகளாகும்‌.

17- அபூ உஸ்மான்‌ அஸ்ஸாபூனீ (373-449)‌

ஹிஜ்ரீ நான்காம்‌ நூற்றாண்டு காலப்‌ பகுதியில்‌ வாழ்ந்த
அறிஞரான அபூ உஸ்மான்‌ அஸ்ஸாபூன்‌ (ரஹ்‌) அவர்கள்‌ இமாம்‌ அவர்கள்‌ தஃப்சீர்‌ மற்றும்‌ ஹதீஸ்‌ துறையில்‌ சிறந்த முன்னோடியாக விளங்கினார்கள்‌.

ஷாஃபிஈ மத்ஹப்‌ அறிஞர்‌ என்று போற்றப்படும்‌ இமாம்‌ ஸாபூனீ (ரஹ்‌) அவர்கள்‌ அஸ்மா ஸிஃபாத்தில்‌ வழிதவறிய பிரிவுகளுக்கு முகம்‌ கொடுத்த முக்கியமான சுன்னா அறிஞர்களுள்‌ ஒருவராவார்‌.

( عقيدة السلف أصحاب الحديث) என்ற பெறுமதிவாய்ந்த நூலின்‌ ஆசிரியரான இவர்‌, அதில்‌ “அஸ்மா ஸிஃபாத்‌ கோட்பாட்டில்‌ சல‌ஃபுகளின்‌ நிலைப்பாடு பற்றி மிகத்‌ தெளிவாக விளக்கியுள்ளார்கள்‌.

அவ்வாறே, குர்‌ஆனிலும்‌, ஸஹீஹான ஹதீஸ்களிலும்‌ வந்துள்ள அல்லாஹ்வின்‌ கேள்வி, பார்வை, கண்‌, முகம்‌, அறிவு, சக்தி, வல்லமை, கண்ணியம்‌, மகத்துவம்‌, நாட்டம்‌, சொல்‌, பேச்சு, பொருத்தம்‌, கோபம்‌, வாழ்வு, விழித்திருத்தல்‌, மகிழ்ச்சி, சிரிப்பு போன்ற இன்னோரென்ன அவனது பண்புகளை அவனால்‌ இரட்சிக்கப்பட்டு, வளர்க்கப்படும்‌ படைப்பினங்களுக்கு எவ்வித ஒப்பீடும்‌ செய்யாது குறிப்பிட்டு வந்துள்ள அனைத்து ஸிஃபாத்துகளிலும்‌ இதுவே அவர்களின்‌ நிலைப்பாடாக இருக்கின்றது.

இதில்‌ அல்லாஹ்வும்‌, அவனது தூதர்‌ முஹம்மத்‌ (ஸல்‌) அவர்களும்‌ கூறியவற்றினுள்‌ கூட்டாது, சேர்க்காது, முறை கற்பிக்காது, ஒப்பிட்டுக்‌ கூறாது, திரிபு, மாற்றம்‌ எதுவும்‌ செய்யாது, தலைகீழாக மாற்றியமைக்காது அரபுக்கள்‌ அறிந்துள்ள சொல்லை விட்டுச்‌ செய்தியைத்‌ தடம்புரளச்‌ செய்யாது, வெறுக்கப்பட்ட தவறான விளக்கம்‌ தராது, வெளிப்படையான, நேரடியான பொருள்‌ தந்து செயல்படுவார்கள்‌. அதன்‌ முறைமைக்கான அறிவை அல்லாஹ்விடம்‌ விட்டுவிடுவார்கள்‌. அவர்கள்‌ அதன்‌ யதார்த்தமான விளக்கம்‌ பற்றி அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும்‌ அறியமுடியாது என்று மனதால்‌ ஏற்றுக்‌ கொள்வார்கள்‌.
(عقيدة السلف أصحاب الحديث)) (ص: 37 - 39)

இமாம்‌ அஸ்ஸாபூனீ (ரஹ்‌) அவர்கள்‌ மற்றோர்‌ இடத்தில்‌:

அல்குர்‌ஆன்‌, சுன்னா, வழிநடக்கும்‌ அஹ்லுல்‌ ஹதீஸ் மக்கள்‌ தமது இரட்சகனை அவனது வேதம்‌ மொழிந்துள்ளவாறும்‌, அவனது இறைத்தூதர்‌ அவர்களின்‌ சரியான ஹதீஸ்கள்‌ மூலம்‌ சாட்சியம்‌ கூறியவாறும்‌, நம்பகமானவர்கள்‌ அதை அறிவித்துத்‌ தந்துள்ள பிரகாரமுமே நம்புகின்றனர்‌. அவனது ஸிஃபத்துகளை (பண்புகளை) அவனின்‌ படைப்புகளின்‌ பண்புகளுக்கு ஒப்பிடாமலும்‌, அவற்றிற்கு உதாரணம்‌ கற்பிக்காமலும்‌ நம்பிக்கை கொள்வார்கள்‌. அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ பேச்சுகளை முஃதஸிலா மற்றும்‌ ஜஹ்மிய்யாக்கள்‌ அதன்‌ இடத்தை விட்டுத்‌ திரித்துக்‌ கூறியது போன்று இவர்கள்‌ திரித்துக்‌ கூறவும்‌ மாட்டார்கள்‌. அல்லாஹ்‌ தனது வேதத்தில்‌ இப்லீசைப்‌ பார்த்து, “இப்லீசே! நான்‌ எனது இரு கரம்‌ கொண்டு படைத்தவனுக்கு நீ சுஜுத்‌ செய்ய உன்னைத்‌ தடுத்தது எது? என்று இடம்‌ பெற்றுள்ள வசனத்தில்‌ இரு கை என்று வருவதை அப்படியே நம்புவார்கள்‌.

أم البراهين .. في الرد التفصيلي على مذهب الأشعرية والماتردية ، ل  بن عبد الله العلي حامد பார்க்க:

இப்படி எண்ணற்ற அறிஞர்கள்‌ அஸ்மா, ஸிஃபாத்தில்‌ தமது நிலைப்பாடுகள்‌ பற்றி எடுத்தெழுதி இருப்பதை ஆய்வு செய்கின்ற போது இதுவே சரியான வழிமுறை என்றும்‌, அஸ்மா ஸிஃபாத்‌ கோட்பாட்டில்‌ தடம்புரண்ட பிரிவினர்‌ பிற்பட்ட காலத்தில்‌ தோன்றியோர்‌ வழியில்தான்‌ செல்கின்றனர்‌ என்பதும்‌ புலனாகின்றது.

இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ பன்முக ஆளுமை கொண்டவராக இருப்பதால்‌ குறிப்பாக ஷீஆக்கள்‌, அவ்லியா வழிபாட்டாளர்கள்‌ போன்ற அசத்தியவாதிகளுக்கு எதிராகச்‌ செயல்படுவதிலும்‌ அவர்களின்‌ வாதங்களை முறியடிப்பதிலும்‌ முன்னணி வகிப்பதால்தான்‌ அகீதாவின்‌ கோட்பாட்டை இப்னுதைமிய்யா அவர்கள்‌ புதிதாக நிறுவினார்கள்‌ என்ற பொய்யான தோற்றம்‌ மாணவர்கள்‌ மத்தியில்‌ காண்பிக்கப்படுகின்றது.

உண்மை அதுவல்ல. மாறாக பல இஸ்லாமிய அறிஞர்‌ பெருமக்கள்‌ இந்தக்‌ கோட்பாடு பற்றி விரிவாகவும்‌, தெளிவாகவும்‌ தமது நூற்களில்‌ ஆரம்ப நூற்றாண்டுகளில்‌ பேசி இருப்பது இந்த உம்மத்தின்‌ அகீதா கோட்பாடு பற்றித்‌ தற்போது முன்வைக்கப்படுகின்ற விதிமுறைகள்‌ புதியவை அல்ல என்பதுவே உண்மையாகும்‌.

இந்தக்‌ கோட்பாட்டை நிறுவ விரும்பிய அஹ்லுஸ்ஸுன்னாப்‌ பிரிவினர்‌ அஸ்ஸுன்னா என்ற தலைப்பில்‌ பல நூல்கள்‌ எழுதியுள்ளனர்‌ என்பதைப்‌ பின்வரும்‌ தொடரில்‌ இடம்‌ பெறும்‌ நகல்‌ மூலம்‌ நீங்கள்‌ அறிந்துகொள்ள முடியும்‌.

18- இமாம்‌ ஷம்ஷுத்தீன்‌ அத்தஹபி (ஹிஜ்ரீ 673- 748)

வரலாறு, ஹதீஸ்‌ திறனாய்வு ஆகிய துறைகளை ஓர்‌ சேரப்பெற்ற தலை சிறந்த இமாம்களுள்‌ ஒருவராக விளங்கிய இமாம்‌ தஹபீ (ரஹ்‌) அவர்கள்‌ இருநூறுக்கும்‌ அதிமான நூல்களின்‌ ஆசிரியராகவும்‌ உள்ளார்கள்‌.

சியர்‌, லிசானுல்‌ மீஸான்‌, அல்‌இபர்‌, தத்ரிகதுல்‌ ஹுப்பாழ்‌ போன்ற நூல்கள்‌ இமாம்‌ தஹபியின்‌ அறிவின்‌ தரத்தை உலகுக்கு உணர்த்தும்‌ நூல்களாகும்‌. அவரது العلو للعلي الغفار  என்ற நூலானது அகீதாவில்‌ அவரது நிலைப்பாடு எப்படிப்பட்டது என்பதை விளக்குகின்றது.

அல்லாஹ்வின்‌ கரம்‌ பற்றி வந்துள்ள செய்திகள்‌ அதிகமானதும்‌, நம்பகத்தன்மை வாய்ந்ததும்‌ எனக்‌ குறிப்பிட்ட பின்னர்‌:

நபித்தோழர்களும்‌, தாபியீன்களும்‌, அவர்களுக்குப்‌ பின்‌ வந்தோரும்‌ நாட்டுப்புறத்தவர்‌, பாமரன்‌, பெண்மணி, சிறுவன்‌, பொதுமக்கள்‌ உள்ளடங்கலாக அனைவரும்‌ வேறுபாடின்றி தஃவீல்‌ என்ற பிழையான விளக்கம்‌ பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்கள்‌ ஸிஃபாத்‌ தொடர்பான இந்த இறை வசனங்கள்‌, ஹதீஸ்களைச்‌ செவிமடுப்பார்கள்‌. இமாம்கள்‌, தாபியீன்கள்‌ என்போர்‌ அவை பற்றிப்‌ பல்லாயிரக்கணக்கான மக்கள்‌ மன்றத்தில்‌ பேசுவார்கள்‌. அவர்கள்‌ யாரும்‌ அவற்றில்‌ ஓர்‌ பண்பைக்‌ கூடத்‌ தவறாக விளக்கவில்லை. பொதுமக்களை அல்லாஹ்‌ படைத்த அந்த இயல்பு வழியிலும்‌, அவர்களின்‌ விளக்கத்திலும்‌ அவர்கள்‌ விட்டுவிட்டார்கள்‌.

இவை, இமாம்‌ தஹபியின்‌ அல்‌ உலுவ்வு‌ கரம்‌ என்ற பண்பை அல்லாஹ்வுக்கு நிலைப்படுத்தல்‌ என்ற தலைப்பில்‌ வந்துள்ள வரிகளாகும்‌.

19- இமாம்‌ இப்னு ரஜப்‌ அல்ஹன்பலீ (ஹிஜ்ரீ 736-795)

பக்தாதின்‌ சிறந்த ஹதீஸ்‌ கலை அறிஞர்களுள்‌ இமாம்‌ இப்னு ரஜப்‌ (ரஹ்‌) அவர்களும்‌ ஒருவர்‌. புகாரீக்‌ கிரந்தத்திற்கு பத்ஹுல்‌ பாரீ‌ என்ற தலைப்பில்‌ விரிவுரை எழுதிய மாமேதை.

ஷரஹ்‌ இலல்‌ அத்திர்மிதீ‌, ஜாமிவுல்‌ உலூம்‌ வல்ஹிகம்‌ போன்ற இவரது நூல்கள்‌ மதிப்பிட முடியாத அறிவியல்‌
சொத்துகளாகும்‌.

இமாம்‌ இப்னு ரஜப்‌ (ரஹ்‌) அவர்களுக்கு புகாரீயின்‌ விளக்க உரை உண்டு. அதில்‌ அவர்கள்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்‌.

நபித்தோழர்களோ, தாபியீன்களோ (அல்லாஹ்வின்‌ பண்புகள்‌) எதையும்‌ (வெளிப்படையான விளக்கம்‌ தராது தவறான விளக்கம்‌) தஃவீல்‌ செய்யவில்லை. அதன்‌ வெளிப்படையான விளக்கத்தில்‌ இருந்து அதை வெளியேற்றவுமில்லை. மாறாக அவற்றை வந்துள்ளவாறே அங்கீரித்து, நம்பிக்கை கொண்டு நடைமுறைப்படுத்தியதாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. (இப்னு ரஜப்‌- ஃபத்ஹுல்‌ பாரீ‌)

20- இமாம்‌ அஹ்மத்‌ அலீ அல்‌ மிக்ரீஸீ (ஹிஜ்ரீ 764- 845)

எகிப்து நகரில்‌ பிறந்த தலை சிறந்த பிரபல வரலாற்று ஆசிரியர்களுள்‌ ஒருவரான இமாம்‌ தகிப்யுத்தீன்‌ அல்மிக்ர்ஸீ (ரஹ்‌) அவர்கள்‌ ஹிஜ்ரீ ஒன்பதாம்‌ நூற்றாண்டில்‌ எகிப்திய ஆய்வாளர்களிடம்‌ தனி இடத்தைப்‌ பிடித்தவர்‌.

மனிதப்‌ படைப்பு, சமயங்கள்‌, எகிப்தின்‌ புராதன வரலாறு என்பன போன்ற பல வரலாற்று நிகழ்வுகளை மட்டும்‌ ஆராயாது இஸ்லாமிய வரலாறு பற்றியும்‌, இஸ்லாமிய சமயத்தில்‌ புகுந்துள்ள புதிய சிந்தனைகள்‌, அதன்‌ தோற்றம்‌, வரலாறு என்பன பற்றியும்‌ மிகத்தெளிவாக முன்வைத்த அறிஞர்‌. இவர்‌ பல நூல்களின்‌ ஆசிரியராகவும்‌ விளங்குகின்றார்‌.

الخطط المقريزية  என்றழைக்கப்படும்‌ தமது நூலில்‌
இஸ்லாமிய மார்க்கத்தின்‌ தொடக்கம்‌ முதல்‌ அஷ்‌அரிய்யாக்‌ கொள்கை பரவும்‌ வரையான காலப்பகுதிவரை வாழ்ந்த முஸ்லிம்களின்‌ நம்பிக்கைக்‌ கோட்பாடு என்ற பாடத்தலைப்பின்‌ கீழ்‌ விரிவான பல தகவல்களைப்‌ பகிர்ந்து கொள்கின்றார்கள்‌. அதில்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ பற்றியதும்‌ உள்ளடங்கி இருக்கின்றது.

அல்லாஹ்வுக்கு ஏழு பண்புகள்‌ மட்டும்‌ அல்ல. அவற்றிற்கும்‌ அதிகமான பண்புகள்‌ அல்லாஹ்வுக்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய பின்னர்‌, அவற்றில்‌ நபித்தோழர்களின்‌ நிலைப்பாடு பற்றிப்‌ பின்வருமாறு விளக்குகின்றார்கள்‌.

இவ்வாறுதான்‌ நபித்தோழர்கள்‌ (அல்லாஹ்‌ அவர்களைப்‌ பொருந்திக்‌ கொள்வானாக) சங்கைமிக்க அல்லாஹ்விற்கு முகம்‌, கரம்‌ போன்ற இன்னோரன்ன பண்புகளை அவனது படைப்புகளுக்கு ஒப்பிடாமல்‌ நிலைப்படுத்தினார்கள்‌. (அல்லாஹ்‌ அவர்களைப்‌ பொருந்திக்‌ கொள்வானாக) அவர்கள்‌ அதை ஒப்பிடாமல்‌ நிலைப்படுத்தி, பாழடிக்காது அல்லாஹ்வைப்‌ பரிசுத்தப்படுத்தினார்கள்‌. அவர்கள்‌ (இது போன்ற) எந்தவிதத்‌ தவறான விளக்கங்களுக்கும்‌ அவர்கள்‌ தம்மை ஈடுபடுத்தவில்லை. பண்புகள்‌ வந்தது போன்று அனைத்தையும்‌ நடாத்திச்‌ செல்லுதல்‌ என்ற விதியின்படி அவர்கள்‌ ஏகமனதான முடிவில்‌ இருந்தனர்‌. அல்லாஹ்வின்‌ தனித்‌ தன்மைக்கு ஆதாரமாக அவர்கள்‌ அல்குர்‌ஆன்‌, மற்றும்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ சுன்னா ஆகிய இரண்டையுமே ஆதாரமாகக்‌ கொண்டனர்‌. அவர்களுள்‌ ஒருவர்‌ கூடத்‌ தத்துவவியலாளர்களின்‌ கோட்பாடுகளிலோ, தர்க்கவியல்‌ விஷயங்களிலோ ஈடுபாடு காட்டவில்லை.

(குறிப்பு; இத்தகவலைப்‌ பெற மதீனாப்‌ பல்கலைக்கழ
அறிஞர்‌ அப்துல்‌ முஹ்ஸின்‌ அப்பாத்‌ அவர்களின்‌ فطق .ينادلا என்ற நூல்‌ வழிகாட்டியது).

அகீதாக்‌ கோட்பாட்டை நிறுவிய முக்கிய நூல்கள்‌ சில

அகீதா துறைக்கு அறிஞர்கள்‌ எவ்வளவு முக்கியத்துவம்‌
வழங்கியுள்ளனர்‌ என்பதை உணர்த்தும்‌ வகையில்‌ அமைந்துள்ள முக்கியமான சில நூல்கள்‌ கீழே தரப்படுகின்றன:

அகீதா துறைசார்‌ அறிஞர்களின்‌ பங்களிப்பு:

புதிய சிந்தனைகள்‌ தோன்றிய போதெல்லாம்‌ அதனை முறியடிப்பதில்‌ அகீதா துறை சார்ந்த அறிஞர்கள்‌, ஹதீஸ்‌ துறை இமாம்கள்‌ என்ற வித்தியாசமின்றி அகீதாவின்‌ பாதுகாப்பிற்கு அரணாக அனைவரும்‌ செயற்பட்டுள்ளனர்‌ என்பதே உண்மையாகும்‌.

அகீதாவின்‌ அறிவியல்‌ பொதிந்த நூல்களாக ஹதீஸ்கலை அறிஞர்களின்‌ நூல்களான புகாரீ, முஸ்லிம்‌, திர்மிதீ, அபீதாவூத்‌, தாரமீ, தாரகுத்னீ போன்ற இன்னும்‌ பல கிரந்தங்கள்‌ உள்ளடங்கும்‌.

அகீதா, அஸ்மா ஸிஃபாத்தின்‌ முக்கியத்துவத்தை விளக்கி அத்தவ்ஹித்‌, அல்‌ஈமான்‌, அஸ்ஸுன்னா, அர்ருஃயா போன்ற தலைப்புகளில்‌ இமாம்களால்‌ கிரந்தங்கள்‌ எழுதப்பட்டிருப்பதைப்‌ பார்க்கின்றோம்‌.

இத்துறைக்குப்‌ பங்களிப்பு நல்கிய அறிஞர்கள்‌ முன்னோர்கள்‌, பின்வந்தோர்‌ என்று இரு சாராராக இருக்கின்றனர்‌. அவர்களின்‌ பங்களிப்புகள்‌ இருவிதமாக அமைந்ததாக அறிஞர்கள்‌, ஆய்வாளர்கள்‌ என்போரால்‌ சுட்டிக்காட்டப்படுகின்றது.

(1) முன்னோர்கள்‌ என்ற பெயர்களுக்குரிய அறிஞர்களின்‌ நூல்கள்‌ அல்குர்‌ஆனிய வசனங்களையும்‌, அதற்குத்‌ துணையான ஹதீஸ்களையும்‌ உள்ளடக்கி இருந்துள்ளது. அவை பல பெயர்களில்‌ வெளிவந்துள்ளன.

அல்‌ஈமான்‌: இந்தத்‌ தலைப்பில்‌ இமாம்களான அபூபக்ர்‌ இப்னு அபீஷைபா, அபூ உபைத்‌ அல்காசிம்‌ பின்‌ சல்லாம்‌, அபூ உமர்‌ அல்‌அதனீ‌, இப்னு மன்தா போன்ற அறிஞர்கள்‌ நூல்களை எழுதி உள்ளனர்‌.

அஸ்ஸுன்னா: முஹம்மத்‌ பின்‌ நஸ்ர்‌ அல்மரவஸீ, இப்னு அபிஆஸிம்‌, அல்ஹல்லால்‌, இமாம்‌ அஹ்மத்‌ அவர்களின்‌ மகன்‌ அப்துல்லா, அல்லாலகாயி, இப்னு ஷாஹீன்‌ மற்றும்‌ பலர்‌.

அர்ரத்து (மறுப்பு) உதாரணமாக

1- ‏في اللفظ والرد على الجهمية ஆசிரியர்‌: இமாம்‌ இப்னு
குதைபா அத்தீனுர்‌

2- الرد على الجهمية ஆசிரியர்‌: உஸ்மான்‌ பின்‌ சயீத்‌ அத்தாரிமீ

 3- الرد على بشر المريسي ஆசிரியர்‌: உஸ்மான்‌ பின்‌ ஸயீத்‌
அத்தாரிமீ

4- الرد على الجهمية ஆசிரியர்‌: இமாம்‌: முஹம்மத்‌ பின்‌ இஸ்ஹாக்‌ பின்‌ யஹ்யா (இப்னு மன்தா)

5- الرد على الزنادقة والجهمية ஆசிரியர்‌: இமாம்‌: அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ அஷ்ஷைபானீ(ரஹ்‌)

அத்தவ்ஹீத்‌:அறிஞர்களான இமாம்‌ இப்னு தவ்ஹித்‌, இப்னு மன்தா போன்ற அறிஞர்களின்‌ நூல்கள்‌ இத்தலைப்பில்‌ எழுதப்பட்டுள்ளது. அஸ்மா, ஸிஃபாத்தை உள்ளடக்கிய தலைப்புகள்‌: உதாரணமாக
அர்ருஃயா,
அஸ்ஸிஃபாத்‌,
அந்நுஸுல்‌ 
இந்தத்‌ தலைப்புக்களின்கீழ்‌ இமாம்‌ தாரகுத்னீ அவர்களால்‌ எழுதப்பட்டுள்ளன. 

இவை அல்லாது
அத்தஃவீலாத்‌,
அஷ்ஷரீஆ,
அல்ஹுஜ்ஜா,
அகீதது அஹ்லிஸ்ஸுன்னா வல்ஜமாஆ,
இஃதிகாது அஹ்லிஸ்ஸுன்னா வல்ஜமாஆ,
அல்‌அகீததுத்‌ தத்முரிய்யா, 
அல்ஹமவிய்யா, 
அல்‌அகீததுல்‌ வாசிதிய்யா, போன்ற நூல்கள்‌.

பிற்காலத்தில்‌ வந்த அறிஞர்கள்‌ ஹதீஸ்கலை அறிஞர்களின்‌ நூல்களை மேற்கோள்காட்டித்‌ தமது ஆதாரங்களை முன்வைத்து நூல்களை எழுதி உள்ளனர்‌. உதாரணமாக:

الرد على المعتزلة القدرية الأشرار ليحى العمراني

شرح العقيدة الطحاوية لبن أبي العز الحنفيرحمه الله

العلو للإمام الذهبي رحمه الله

منهاج السنة لبن تيمية رحمه الل

درء تعارض العقل والنقل لبن تيميةرحمه الله

اجتماع الجيوش السلمية لبن القيم رحمه الله

شرح السنة للإمام البربهاري رحمه الله

இவை “அஸ்மா, ஸிஃபாத்‌” கோட்பாடு தொடர்பாக அறிஞர்களால்‌ எழுதப்பட்ட முக்கிய சில கிரந்தங்கள்‌ பற்றிய சுருக்கமாகும்‌.

இது அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள்‌ அகீதாவைப்‌ பாதுகாப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளின்‌ பெறுமானத்தை நமக்கு உணர்த்துகின்றது.

இஸ்லாமியப்‌ பிரச்சாரத்தின்‌ போது அகீதா, அக்லாக்‌ ஆகிய இருபகுதிகள்‌ பிரதான இடத்தை வகிப்பதை நபி (ஸல்‌) அவர்களின்‌ மக்கா கால தஃவா நிகழ்வுகள்‌ உணர்த்துகின்றன.

அகீதாவின்‌ அடிப்படையாக விளங்குகின்ற “லாயிலாஹ இல்லல்லாஹ்‌” என்ற உயர்மிகு கலிமா தவ்ஹீதின்‌ மூன்று வகைகளையும்‌ உள்ளடக்கிய உன்னத வார்த்தையாகும்‌. 

இருந்தும்‌, இம்மூன்று வகையிலும்‌ உள்ளடங்கியுள்ள கருத்துகள்‌ தஃவாக்‌ களத்தில்‌ பேசப்படுவதாக நமது அறிவுக்கு எட்டியவகையில்‌ நாம்‌ காணவில்லை.

சிலர்‌ “தவ்ஹீதுர்‌ ரூபூபிய்யா“வை மட்டும்‌ பேசுபவர்களாகவும்‌, மற்றும்‌ சிலர்‌ “உலூஹிய்யாவை” மட்டும்‌ பேசுபவர்களாகவும்‌ இருக்கின்றனர்‌. குறிப்பிட்ட சிலரே அந்த இரண்டு வகைகளோடும்‌ இணைத்து“அஸ்மா ஸிஃபாத்‌” பற்றிப்‌ பேசுவோராக இருக்கின்றனர்‌.

இதில்‌ ஆச்சரியம்‌ என்னவென்றால்‌ தஃவாவின்‌ முன்னோடிகளான அமைப்பு சார்ந்த சகோதரர்கள்‌ “அஸ்மாஸிஃபாத்‌” பற்றிய பேச்சு சமூகத்தைக்‌ கூறுபோடும்‌ என்ற வாதப்பிரதி வாதங்களை முன்வைத்து சமூகத்தைத்‌ தொடர்ந்து இது பற்றிய அறியாமையில்‌ இட்டுச்‌ செல்வோராக இருக்கின்றனர்‌.

இதனால்‌ வழிகெட்ட சிந்தனைப்‌ பிரிவுகள்‌ என அறிஞர்களால்‌ அடையாளப்படுத்தப்பட்டோர்‌ உருவாகி, அதன்‌ மூலம்‌ அஹ்லுஸ்ஸுன்னா மக்களின்‌ அகீதாவைப்‌ பாழ்படுத்தும்‌ துரதிருஷ்டமானதொரு நிலையைக்‌ கவனிக்க முடிகின்றது.

அத்தோடு, குர்‌ஆன்‌, சுன்னா அடிப்படையில்‌ தம்மைப்‌ பயிற்றுவித்துக்‌ கொண்ட தஃவா அமைப்புகளின்‌ அசமந்தப்போக்கு காரணமாக தவ்ஹித்‌ சார்ந்த அமைப்புகளில்‌ பெரும்பாலான தாயிக்கள்‌ அஸ்மா, ஸிஃபாத்தில்‌ மற்ற அமைப்பினரைப்‌ போன்று தெளிவற்றவர்களாக, அல்லது தவறான விளக்கம்‌ தருபவர்களாக அல்லது தவ்ஹீத்‌ பெயரில்‌ புதிய கொள்கையைப்‌ போதிப்பவராக, போதிப்பவர்களுக்குப்‌ பின்னால்‌ செல்வோராக மாறிவிடும்‌ நிலை காலத்தின்‌ சாட்சியமாகும்‌.

அதிலும்‌ குறிப்பாக குர்‌ஆன்‌, சுன்னா வழிநடப்போராகவும்‌, தாமே சுவர்க்கத்தின்‌ வாரிசுகள்‌ போன்றும்‌ பிரச்சாரம்‌ செய்வோர்‌ அஸ்மா, ஸிஃபாத்தில்‌ வங்கரோத்து நிலையில்‌ இருப்பதையும்‌ அதன்‌ காரணமாக நாள்தோறும்‌ ஸஹீஹான பல ஹதீஸ்கள்‌ மறுக்கப்படும்‌ நிலையையும்‌ காண்கின்றோம்‌.

எனவே அகீதா பற்றிய தெளிவுள்ள, தூய்மையான சமூகத்தைத்‌ தோற்றுவித்து, அகீதா வட்டத்தில்‌ உருவாக்கப்படும்‌ புதிய பித்‌அத்துகளைச்‌ சமூகத்தில்‌ இருந்து களைந்திட அனைவரும்‌ முயற்சிப்போமாக!

தஃப்சீர்‌ துறை சார்ந்த நூல்கள்‌.

அல்குர்‌ஆனிய விரிவுரைகள்‌ ஊடாக அகீதாவின்‌ முக்கியத்துவம்‌ அதன்‌ அவசியம்‌ பற்றி விளக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள்‌ பலர்‌ தமது குர்‌ஆனிய விளக்க உரைகளில்‌ (தஃப்சீர்களில்‌) “அஸ்மா, ஸிஃபாத்‌” பற்றிப்‌ பேசியுள்ளார்கள்‌. அவர்களில்‌ பின்வருவோர்‌ முக்கியமானவர்களாகக்‌ கருதப்படுகின்றனர்‌.

குர்‌ஆனிய விளக்கவுரையின்போது “அஸ்மா, ஸிஃபாத்‌” தொடர்பாக அறிஞர்களால்‌ விரிவுரை செய்யப்பட்டிருக்கும்‌ நடைமுறையானது குர்‌ஆனிய வசனங்கள்‌ கருத்தால்‌, பொருளால்‌, விளக்கத்தால்‌ சிதைக்கப்படுகின்றபோது அவற்றைப்‌ பாதுகாப்பதன்‌ அவசியத்தையும்‌, அறிஞர்களின்‌ முயற்சிகளையும்‌ உணர்த்துகின்றது.

இல, கிரந்தம், இமாம், ஹிஜ்ரி:

1
معالم التنزيل
أبو محمد الحسين بن مسعود البغوي رحمه الله
516

2
التفسير القيم
الإمام ابن القيم رحمه الله
751

3
تفسير القرآن العظيم (تفسير ابن كثير)
أبو الفداء إسماعيل بن عمر بن كثير القرشي الدمشقي رحمه الله
774

4
محاسن التأويل (تفسير القاسمي)
جمال الدين بن محمد سعيد بن قاسم القاسمي رحمه الله
1332

5
أضواء البيان
محمد الأمين الشنقيطي رحمه الله
1393

தஃப்சீர்‌ துறை இமாம்கள்‌, கிரந்தங்கள்‌ பற்றிய விவரங்கள்‌.

மேற்கண்ட இமாம்கள்‌ மட்டும்‌ சலஃபுகளின்‌ கோட்பாட்டைத்‌ தமது தஃப்சீர்களில்‌ நிறுவியவர்கள்‌ கிடையாது. மாறாகப்‌ பலர்‌ இருக்கின்றனர்‌. அவர்களில்‌ இமாம்களான அபூ ஜஃபர்‌ அத்தபரீ, இப்னு கஸீர்‌, மற்றும்‌ இப்னுல்‌ கய்யிம்‌ போன்றோர்‌ பிரசித்தி பெற்ற அறிஞர்கள்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொண்டு அவர்களின்‌ கருத்துகள்‌ இங்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

1. இமாம்‌ அபூஜஃபர்‌ அத்தபரீ (ரஹ்‌) அவர்கள்‌ 

தஃப்சீர்‌ துறைக்கு வழிகாட்டிய முன்னோடி என அழைக்கப்படும்‌ இமாம்‌ தபரீ (ரஹ்‌) அவர்கள்‌,

الَّرحمن عَلى الْعر ِش استـوى
“அர்ரஹ்மான்‌ அர்ஷின்‌ மீதானான்‌” என்ற வசனத்தை விளக்குகின்றபோது,

لرحمن على عرشه ارتفع وعل. ((جامع البيان للطبري - (18 / 270)

“அர்ரஹ்மான்‌ அர்ஷின்‌ மீது உயர்ந்துவிட்டான்‌” என்ற கருத்தின்‌ ஊடாக சல‌ஃபுகள்‌ முன்வைக்கின்ற “அர்ஷின்‌ மேலானான்‌ என்ற கருத்திற்கு உடன்பட்டுள்ளதைப்‌ பார்க்கின்றோம்‌.

ஆதம்‌ நபி தொடர்பாக இடம்‌ பெற்றுள்ள குர்‌ஆன்‌ வசனங்களுக்கான விளக்கங்களைத்‌ தபரி (ரஹ்‌) அவர்கள்‌ தெளிவாக எழுதியுள்ளார்கள்‌. அல்லாஹ்வின்‌ இரு கரம்‌ கொண்டு ஆதம்‌ நபி (அலை) அவர்கள்‌ படைக்கப்பட்டது அவரது சங்கையையும்‌, சிறப்பையும்‌ உணர்த்தவே என்பதாக விளக்கி இருப்பதன்‌ மூலம்‌ அல்லாஹ்வின்‌ இருகரம்‌ என்பதை வெளிப்படையான பொருள்‌ கொண்டே அவர்கள்‌ விளக்கியுள்ளார்கள்‌ என்பது புலனாகின்றது.

“நிச்சயமாக நான்‌ களிமண்ணில்‌ இருந்து ஒரு மனிதனைப்‌ படைக்கப்போகின்றேன்‌. அவனை நான்‌ சீரமைத்ததும்‌ அவனுக்கு எனது உயிரில்‌ இருந்து ஊதுவேன்‌. அப்போது நீங்கள்‌ ஸஜுதில்‌ வீழ்ந்து விடுங்கள்‌ என்று உமது இரட்சகன்‌ வானவர்களிடம்‌ கூறியதை நினைவு கூர்வீராக (ஸாத்‌: 69-72) என்ற வசனத்தை விளக்குகின்ற இமாம்‌ தபரீ (ரஹ்‌) அவர்கள்‌ :

ஆதம்‌ நபியைப்‌ படைப்பதை அல்லாஹ்‌ உறுதி கொண்டதும்‌ “நிச்சயமாக நான்‌ சூடான களிமண்ணில்‌ இருந்து எனது இரு கரத்தினாலும்‌ ஒரு மனிதனைப்‌ படைக்கப்‌ போகின்றேன்‌ எனக்‌ குறிப்பிடுவது அவரது கண்ணியத்திற்கும்‌ அவனது காரியத்தின்‌ மகிமைக்கும்‌, அவரைச்‌ சிறப்பிக்கவுமாகும்‌ என விளக்கியுள்ள இமாம்‌ தபரீ (ரஹ்‌) அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ இருகரம்‌ என்பதன்‌ பொருளைச்‌ சிதைக்காது விளக்கி இருப்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்‌.

2. இமாம்‌ இப்னு கஸீர்‌ (ரஹ்‌) அவர்கள்‌

“பின்பு அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீது நிலை பெற்றான்‌ என்ற பொருள்‌ கொண்ட வசனம்‌ பற்றி விளக்கும்‌ இமாம்‌ இப்னு கஸீர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ இதில்‌ பல வாதப்பிரதிவாதங்கள்‌ கொண்டவர்கள்‌ மனிதர்கள்‌ உள்ளனர்‌. அதுபற்றி விவரிக்கும்‌ தருணம்‌ இதுவல்ல எனக்‌ கூறிவிட்டு:

இந்த இடத்தில்‌ மாலிக்‌, அவ்ஸாயீ‌, ஸவ்ரீ‌, லைஸ்‌ பின்‌ ஸஃத்‌, ஷாபிஈ, அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌, இஸ்ஹாக்‌ பின்‌ ராஹோயா (ராஹவைஹீ), மற்றும்‌ முஸ்லிம்களில்‌ உள்ள பல ஆரம்பக்கால, பிற்கால முன்னோர்களான நல்லவர்கள்‌ வழி நடக்க வேண்டும்‌ எனக்‌ கூறிய பின்னர்‌ அந்த வழிமுறையானது அவை வந்திருப்பது போன்று முறைமை கற்பிக்காது, உதாரணப்படுத்தாது, பாழடிக்காது நடத்துவதாகும்‌... என விளக்கியுள்ளார்கள்‌. தொடர்ந்து அவர்கள்‌ குறிப்பிடுகின்ற போது:
(இதன்‌ போது) அல்லாஹ்வைப்‌ படைப்பினங்களுக்கு ஒப்பிடுவோரின்‌ மனங்களில்‌ படிந்திருக்கும்‌ உதாரணம்‌ இங்கு தேவையற்றதாகும்‌.

ஏனெனில்‌, அவனைப்‌ போன்று எதுவும்‌ இல்லை. அவன்‌ கேட்பவன்‌; பார்ப்பவன்‌. (அஷ்ஷுரா: 11) என்று அல்குர்‌ஆன்‌ குறிப்பிடுகின்றது. மேற்கண்ட இமாம்கள்‌ குறிப்பிடுவது போன்றுதான்‌ விஷயம்‌. அவர்களில்‌ இமாம்‌ புகாரீயின்‌ ஆசிரியரான நுஜம்‌ பின்‌ ஹம்மாத்‌ அல்குஸாயியும்‌ ஒருவர்‌. அவர்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்‌.

“யார்‌ அல்லாஹ்வை அவனது படைப்பினங்களுக்கு ஒப்பிடுகின்றானோ நிச்சயமாக அவன்‌ காஃபிராகிவிட்டான்‌. எவன்‌ அல்லாஹ்‌ தன்னைப்‌ பற்றி அறிமுகப்படுத்தியதை நிராகரிக்கின்றானோ நிச்சயமாக அவனும்‌ நிராகரித்துவிட்டான்‌. அல்லாஹ்‌ தன்னைப்‌ பற்றி வர்ணித்திருப்பதிலோ. அவனது தூதர்‌ அவனைப்‌ பற்றி வர்ணித்திருப்பதிலோ படைப்புகளுக்கு எவ்வித ஒப்புவமையும்‌ இல்லை. யார்‌ தெளிவாக வந்துள்ள அல்குர்‌ஆனிய வசனங்களையும்‌, ஸஹீஹான ஹதீஸ்களையும்‌ அல்லாஹ்வின்‌ தகுதிக்குப்‌ பொருத்தமான முறையில்‌ நிலைப்படுத்துகின்றாரோ, மேலும்‌, யார்‌ குறைபாடுள்ள
பண்புகளை அவனை விட்டு விலக்கிவிட்டாரோ நிச்சயமாக அவர்‌ நேர்வழி நடந்துவிட்டார்‌. (தஃப்சீர்‌ இப்னு கஸீர்‌)

இந்தக்‌ கருத்தை இமாம்‌ இப்னு கஸீர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ அஸ்மா ஸிஃபாத்‌ பற்றி இடம்‌ பெறும்‌ அல்குர்‌ஆனிய வசனங்களுக்கான விரிவுரைகளில்‌ பல சந்தர்ப்பங்களில்‌ உறுதி செய்துள்ளார்கள்‌ என்பது கவனிக்கத்தக்கதாகும்‌.

3. இமாம்‌ இப்னுல்‌ கய்யிம்‌ (ரஹ்‌) அவர்கள்‌:

முஸ்லிம்‌ உலகில்‌ பிரசித்தி பெற்ற அறிஞர்களுள்‌ இப்னுல்‌ கையிம்‌ (ரஹ்‌) அவர்களும்‌ ஒருவர்‌. இவர்களால்‌ அகீதா, தஃப்சீர்‌, ஹதீஸ்‌, ஆதாப்‌, அக்லாக்‌, சியர்‌ போன்ற அனைத்துத்‌ துறைகளிலும்‌ பல நூல்கள்‌ எழுதப்பட்டுள்ளன.
அவற்றில்‌ ميقلا نبال ميقلا ريسفتلا என்ற தலைப்பிலான நூல்‌ முக்கியமானதாகும்‌. அதில்‌ “அல்லாஹ்வை விசுவாசிக்கும்‌ முறை இரண்டு வகையானது” என்பதில்‌ முதலாவது வகை பற்றி விளக்கிய பின்னர்‌, அதன்‌ இரண்டாவது வகை பற்றிப்‌ பின்வருமாறு விளக்கி உள்ளார்கள்‌.

இரண்டாவது: கண்ணியமிக்க அல்லாஹ்வை அவனது பரிபூரணமான பண்புகளைக்‌ கொண்டு தனிமைப்படுத்துவதும்‌, தெளிவான முறையில்‌ அல்லாஹ்‌ தனக்கென நிலைப்படுத்தியுள்ள பண்புகளையும்‌, அவனது தூதர்‌ முஹம்மத்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ நிலைப்படுத்தியவற்றையும்‌ நிலைப்படுத்துவதுமாகும்‌. அத்தோடு அல்லாஹ்வின்‌ பண்புகளை,

தஃதீல்‌ (பாழடித்தல்‌)

தஹ்ரீஃப்‌ (திரிபுபடுத்துதல்‌)

தம்ஸீல்‌ (உருவகப்படுத்தல்‌)

தக்யீஃப்‌ (முறைமை கற்பித்தல்‌)

தஷ்பீஹ்‌ (ஒப்புவமையாக்குதல்‌) 

போன்ற பண்புகளில்‌ இருந்து தூய்மைப்படுத்துவதுடன்‌, தூய்மையான அந்த நாயனுக்குரிய உயரிய பெயர்கள்‌, பண்புகள்‌ நிலைப்படுத்தப்படுவதுடன்‌, படைப்பினங்களுக்கு ஒப்பாக்கப்படுவதை அவனைவிட்டு நீக்கப்படல்‌ வேண்டும்‌. அதை இவ்வாறு விளக்கியுள்ளார்கள்‌.

உருவகப்படுத்தாத, படைப்புக்கு உதாரணம்‌ கூறாத நிலைப்படுத்தல்‌,

திரிபு, பாழடிப்புச்‌ செய்யாத தூய்மைப்படுத்தல்‌,

அவனைப்‌ போன்று எதுவும்‌ இல்லை,

அவன்‌ கேட்பவன்‌, பார்ப்பவன்‌ என்ற விதிகள்‌

அடங்கிய வரிகளால்‌ தனது விளக்கத்தை அலங்கரித்துள்ள இமாம்‌ இப்னுல்‌ கையிம்‌ அவர்களின்‌ இக்கூற்றுகளை அவரது “அத்தஃப்சீர்‌ அல்கையிம்‌” என்ற நூலில்‌ காணமுடியும்‌.

4- அல்‌அஃராஃப்‌.. வசனம்‌ 156,157-ஐ விளக்கும்‌ மஹாசினுத்தஃவீல்‌ தஃப்சீரின்‌ ஆசிரியரான இமாம்‌ காசிமீ அவர்கள்‌ :

அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆப்‌ பிரிவினர்‌ அல்லாஹ்‌ தன்னை வர்ணித்திருப்பது போலவும்‌, அல்லாஹ்வின்‌ தூதர்‌ முஹம்மத்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ அவனை வர்ணித்துள்ள பிரகாரமும்‌ திரிபுபடுத்தல்‌, கருத்துப்பாழடிப்பு, முறைமை, உதாரணம்‌ கூறுதல்‌ ஆகியவை இல்லாமல்‌ அவனை நம்பிக்கை கொள்கின்றனர்‌ எனக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌.

மேகக்‌ கூட்டங்களுள்‌ அல்லாஹ்‌ அவர்களிடம்‌ வருவதையா அவர்கள்‌ எதிர்பார்க்கின்றார்கள்‌. அப்போது காரியம்‌ முடிக்கப்பட்டு விடும்‌. அனைத்துக்‌ காரியங்களும்‌ அல்லாஹ்வின்‌ பக்கமே மீட்டப்படுகின்றன. (அல்பகரா: 210).

அவர்கள்‌ அவர்களிடம்‌ வானவர்கள்‌ வருவதை அல்லது உமது இரட்சகன்‌ வருவதை, அல்லது உமது இரட்சகனின்‌ அத்தாட்சிகளுள்‌ சில வருவதையா எதிர்பார்க்கின்றார்கள்‌. (அல்‌அன்‌ஆம்‌: 158)

(மறுமையில்‌) வானவர்கள்‌ அணியணியாக நிற்கின்ற நிலையில்‌ உமது இரட்சகன்‌ (தீர்ப்பிற்காக) வருவான்‌. (அல்‌ஃபஜ்ர்‌: 21)

,ليوأتلا نساحم ‌ இன்‌ ஆசிரியரான இமாம்‌ காசிம்‌ (ரஹ்‌) அவர்கள்‌ மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கின்ற போது, “இவ்வாறான வசனங்களில்‌ சலஃபுக்களின்‌ நடைமுறையைத்தான்‌ கையாள வேண்டும்‌ எனக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌. அதாவது,

(தஹ்ரீஃப்‌) கருத்துத்‌ திரிபு,

(தஃதீல்‌) பொருள்‌ சிதைவு,

(தக்யீஃப்‌) முறைமை, அல்லது வடிவம்‌ கற்பித்தல்‌,

(தம்ஸீல்‌)உதாரணம்‌ கூறுதல்‌ போன்ற நிலைகளில்‌ இருந்து விடுபட்டு விளக்குவதாகும்‌ எனக்‌ குறிப்பிட்ட பின்னர்‌,

“அவனது பண்புகளில்‌ கூறப்படும்‌ விளக்கம்‌ அவனது யதார்த்தம்‌ பற்றிய விளக்கம்‌ போன்றதாகும்‌.” அதாவது-தாத்‌- உள்ளமையான யதார்த்தத்தில்‌ எவ்வாறு அவனது படைப்பினங்கள்‌ கூட்டுச்‌ சேர முடியாதோ அவ்வாறே அவனது பண்புகளிலும்‌ அவனது படைப்புகள்‌ கூட்டுச்‌ சேரமுடியாது” என்பதாகக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌. கோட்பாடுகள்‌ வரலாறுகள்‌ பற்றி விளக்கும்‌ கிரந்தங்கள்‌

கோட்பாட்டு ரீதியாகத்‌ தடம்புரண்டோர்‌ பற்றியும்‌, ஹதீஸ்‌ அறிவிப்பாளர்கள்‌ பற்றியும்‌ எழுதப்பட்டுள்ள நூல்களில்‌ “அஸ்மா ஸிஃபாத்‌” கோட்பாடு பற்றிய விதிகள்‌ இமாம்களால்‌ எழுதப்பட்டுள்ளன.

உதாரணமாக :

இமாம்‌ புகாரீ‌ (ரஹ்‌) அவர்களின்‌ அத்தாரீகுல்‌ கபீர்‌,

இமாம்‌ தஹபீ (ரஹ்‌) அவர்களின்‌ சியர்‌ அஃலாமின்‌ நுபலா,

இமாம்‌ இப்னு ஹஜர்‌ (ரஹ்‌) அவர்களின்‌ லிசானுல்‌ மீஸான்‌, தஹ்தீபுத்தஹ்தீப்‌,

இமாம்‌ இப்னு அத்‌ (ரஹ்‌) அவர்களின்‌ “அல்காமில்‌ ஃபிள்ளுஅஃபா”

இமாம்‌ கதீப்‌ அல்பக்தாதீயின்‌ “தாரீகு பக்தாத்‌”

இமாம்‌ இப்னு கஸீர்‌ (ரஹ்‌) அவர்களின்‌ அல்பிதாயா வந்நிஹாயா,

இமாம்‌ இப்னுல்‌ அஸீர்‌ அவர்களின்‌ ஜாமிவுல்‌ உஸுல்‌ போன்ற நூல்களைக்‌ குறிப்பிட முடியும்‌.


ஹசன்‌ ஸக்காஃப்‌ பற்றிய முக்கியக்‌ குறிப்புகள்‌

இலங்கைவாழ்‌ அஷஅரிய்யாக்களின்‌ உண்மை நிலைபற்றி உணர்த்தவே ஷீஆவாதியான ஹசன்‌ ஸக்காஃப்‌ பற்றி இங்கு எடுத்தெழுதப்படுகின்றது.

ஷாஃபிஈ மத்ஹபைப்‌ பயன்படுத்தி, அஷ்‌அரீ என்ற பெயரில்‌ ஷீஆவாக மறைந்து வாழும்‌ நவீன இப்னு ஸபஃ ஜமாத்தைச்‌ சேர்ந்த ஒருவர்‌ என்று இவரைப்‌ பற்றிச்‌ சுருக்கமாகக்‌ கூறலாம்‌.

வாழ்க்கைக்‌ குறிப்பு பற்றிய சுருக்கம்‌:

-இவரது பெயர்‌ ஹசன்‌ அஸ்ஸக்காஃப்‌ என்பதாகும்‌. ஜோர்டான்‌ அம்மானில்‌ 1961-இல்‌ பிறந்த ஸக்காஃப்‌ தமது சிறுவயது முதல்‌ மார்க்கத்தைப்‌ படித்துவருபவராகக்‌ கூறப்படுகின்றது.

-இவர்‌ தமது வழிகேடுகளை நியாயப்படுத்துவதற்காக நாற்பதிற்கும்‌ அதிகமான சிறிய, பெரிய நூல்களை எழுதிய இவர்‌, தமது நூல்களை பொய்‌, இருட்டடிப்பு, ஹதீஸ்‌ மறுப்பு, ஜஹ்மிய்யா சிந்தனை போன்றவற்றால்‌ நிரப்பியுள்ளதோடு, சாதாரண ஓர்‌ பொதுமனிதன்‌ பேசக்‌ கூச்சப்படும்‌ அசிங்கமான வார்த்தைகளைத்‌ தமது எதிரிகள்மீது அள்ளி வீசியுள்ளார்‌.

-இவரது கடுமையான விமர்சனத்தில்‌ இருந்து நபித்தோழர்கள்‌ முதல்‌ சாதாரண அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள்வரை யாரும்‌ விடுபடவில்லை.

-சல‌ஃபியச்‌ சிந்தனையாளர்களாக அடையாளப்படுத்‌தப்பட்டுள்ள பல இமாம்களை நரகவாதிகள்‌, நரகத்து நாய்கள்‌, வழிகேடர்கள்‌, காஃபிர்கள்‌, தீயவர்கள்‌, வழிகெட்டவர்கள்‌, அலீயின்‌ எதிரிகள்‌ போன்ற அசிங்கமான, தீய வார்த்தைகள்‌ கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்‌.

-ஆரம்ப காலங்களில்‌ வஹ்ததுல்‌ உஜுத்‌ (எல்லாம்‌ அவனே) கொள்கையில்‌ ஊறித்திளைத்தவராக இருந்த ஸக்காஃப்‌, காலப்போக்கில்‌ ராஃபிழாக்களின்‌ நூல்களைப்‌ படித்து அவற்றால்‌ கவரப்பட்டு அவர்களுக்குக்‌ குரல்‌ கொடுப்பவராகவும்‌ திரைமறைவில்‌ ஷீஆப்‌ பிரச்சாரகராகவும்‌ செயல்பட்டு
வருகின்றார்‌.

அபூபக்ர்‌ (ரழி) அவர்களின்‌ தலைமைப்பதவி முஸ்லிம்களின்‌ இஜ்மாவால்‌ ஏற்படவில்லை என்று கூறுகிறார்‌.

அபூபக்ர்‌ (ரழி) சிறந்தவரல்ல, மாறாக சய்யிதுனா அலீதான்‌ சிறந்தவர்‌.

- நடமாடும்‌ சுவர்க்கவாதி என்று நற்செய்தி கூறப்பட்ட நபித்தோழர்‌ அப்துல்லாஹ்‌ பின்‌ சலாம்‌ (ரழி) அவர்கள்‌ பற்றி வந்துள்ள நபிமொழியைக்‌ கிண்டல்‌ செய்து, அது புகாரீயில்‌ இடம்‌ பெற்றிருப்பது கவலைக்குரியது என்றுரைக்கிறார்‌.

-“அஸ்னை அல்மதாலிப்‌ பீ நஜாதி அபீதாலிப்‌” என்ற நூலில்‌ அபூதாலிப்‌ நரகத்தில்‌ இருந்து விடுதலை பெற்றவர்‌ என்று கூறி, தமது கூற்றிற்கு ஆதாரமாக ஷீஆவாதியான தூசி என்வரின்‌ கூற்றை மேற்கோள்காட்டி அபூ தாலிப்‌ நரகவாதி என்று நபி (ஸல்‌) அவர்கள்‌ அறிவித்துள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைக்‌ குழிதோண்டிப்‌ புதைத்துவிட்டு, அபூதாலிபை முஸ்லிமாக்கியுள்ளார்‌.

அபூதாலிப்‌ முஸ்லிமாக இருந்தார்‌ என்பது இமாமிய்யாக்களின்‌ (முஸ்லிம்களின்‌ அல்ல) ஏகமனதான முடிவு. அதில்‌ அவர்கள்‌ கருத்து முரண்பட்டுக்‌ கொள்ளவில்லை என்று அஷ்ஷைக்‌ அத்தூசி தமது தஃப்சீர்‌ அத்திப்யானில்‌ குறிப்பிட்டுள்ளதாகச்‌ சுட்டிட்காட்டும்‌ ஸக்காஃபின்‌ நிலைபற்றி அறிந்து கொள்ளாத இலங்கை அஷ்‌அரிய்யாக்கள்‌ பற்றி என்னவென்பது!

சலஃபிகள்‌ சிந்தனைத்‌ தெளிவற்றவனாக இருப்பதால்‌ அவர்கள்‌ சய்யிதுனா ஜஃபருத்‌ தய்யார்‌, அல்லது அபூஉ௨பைதா (சய்யதினா அல்ல) ஆகியோரின்‌ மண்ணறைகளுக்குச்‌ சென்று சலஃபிகள்‌ இவர்களின்‌ பொருட்டால்‌ அல்லாஹ்‌ தமக்குச்‌ சரியானதை ஞானோதயம்‌ வழங்கும்படி வேண்டிட - (அல்‌இஃகாஸா  பிஅதில்லதில்‌ இஸ்தஃகாஸா) ஷிர்க்கான உபதேசம்‌ செய்து தனது நூலில்‌ ஷாத்தானிய உபதேசம்‌ செய்யும்‌ இந்த வழிகேடனின்‌ நிலை பற்றி என்னவென்பது?

-ஜஹம்‌ பின்‌ ஸஃப்வான்‌ தீய வழிகேடன்‌ என்று இமாம்கள்‌ தீர்ப்பளித்துள்ள நிலையில்‌ இல்லை, இல்லை அவன்‌ சிறந்த ஆலீம்‌ என்று கூறுகிறார்‌ ஸக்காஃப்‌.

- இவர்‌ தமது நூல்களில்‌ முஆவியா (ரழி) அவர்களைத்‌
தாராளமாகத்‌ திட்டித்‌ தீர்த்துள்ளார்‌. முஆவியாதான்‌ அஹ்லுல்பைத்தினரைத்‌ திட்டுவதற்கு அடித்தளமிட்டவர்‌ என உளறுகின்றார்‌.

நபித்தோழர்களான அபூஹுரைரா, மற்றும்‌ அபூசயீத்‌ அல்குத்ரீ (ரழி) ஆகிய இருவர்‌ மூலமாகத்தான்‌ ஹதீஸ்கள்‌ என்ற பெயரில்‌ அபத்தங்கள்‌ இஸ்லாத்தில்‌ வந்து சேர்ந்தன என்று கூறுகிறார்‌.

- தஜ்ஜால்‌ பற்றிய ஹதீஸ்‌ புகாரீ‌, முஸ்லிமில்‌ இடம்‌ பெற்றிருந்தாலும்‌ நாம்‌ அதை நம்புவதில்லை என்று கூறுகிறார்‌.

- நபி (ஸல்‌) அவர்களின்‌ மனைவியர்‌ அஹ்லுல்பைத்தினர்‌ அல்ல என்று கூறுகிறார்‌.

- பெரும்பாவங்கள்‌ செய்த நிலையில்‌ நரகில்‌ நுழையும்‌
முஸ்லிம்கள்‌ நரகில்‌ இருந்து ஒரு நாள்‌ சொர்க்கத்தில்‌ நுழைவிக்கப்படுவர்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியதை மறுத்துரைக்கும்‌ ஸக்காஃப்‌ ஸைதிய்யாக்கள்‌, ராஃபிழாக்கள்‌, இஃபாழியாக்கள்‌ போன்ற எமது பிரிவினர்‌ நரகில்‌ இருந்து வெளியேற மாட்டார்கள்‌ என்று குறிப்பிடுகின்றனர்‌ எனக்‌ கூறி ராஃபிழாக்களைச்‌ சரிகாணுகின்றார்‌.

-அஹ்லுஸ்ஸுன்னாக்கள்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளை அவற்றின்‌ வெளிப்படையான பொருளில்‌ விளங்குவதனால்‌ அவர்கள்‌ அல்லாஹ்வுக்கு உருவகம்‌ கற்பிப்போர்‌ என்பதாகக்‌ கூறி, அவர்களைக்‌ காஃபிர்கள்‌ என்று கூறுகிறார்‌.

இவர்‌ விவாத நேரங்களில்‌ சத்தியத்தைத்‌ தெரிந்து கொண்டே மறைப்பார்‌; அல்லது மறுப்பார்‌.

-நபி(ஸல்‌) அவர்களின்‌ ஹதீஸ்களில்‌ தமது மனோஇச்சைக்கு உடன்படாத அனைத்து ஹதீஸ்களையும்‌ மறுப்பார்‌, அல்லது அப்படி ஒரு ஹதீஸ்‌ இல்லை என்று தர்க்கம்‌ செய்வார்‌. அது அவருக்குக்‌ கைவந்த கலையாகும்‌.

-நாற்பதுக்கும்‌ அதிகமான நூல்களை எழுதி பொய்‌, அவதூறு, பித்‌அத்கள்‌, கற்பனைக்‌ கதைகள்‌, திரிபுகள்‌ போன்ற இன்னோரென்ன இருட்டடிப்புகளால்‌ தமது நூல்களை நிரம்பி வழியச்‌ செய்துள்ளார்‌. இவர்தாம்‌ அஷ்‌அரிய்யா பெருமக்களின்‌ ஆன்மிகத்‌ தலைவர்‌.!

-இமாம்‌ இப்னுல்‌ ஜவ்ஸீ என்பவரது “தஃப்வுத்தஷ்பீஹ்‌ பி அகுஃப்பித்‌ தன்ஸீஹ்‌” என்ற நூலுக்கு விமர்சன விளக்கம்‌ எழுதியுள்ள ஸக்காஃப்‌ அதில்‌ டன்‌ கணக்கில்‌ பொய்களை அவிழ்த்திருக்கின்றார்‌.

-இந்நூலில்தான்‌ ஷரீ‌ஆவின்‌ சான்றுகளுக்குப்‌ புறம்பான விளக்கமளிப்பதும்‌, அவற்றிற்குப்‌ பொருள்‌ கூறாதிருப்பதும்‌ முன்னோர்களது வழிமுறை என்றும்‌ முன்னோர்கள்‌ மீது தமக்கே உரிய இயல்பான பாணியில்‌ பொய்களைக்‌ கூறியுள்ளார்‌.

-அந்ந நூலில்‌ முஆவியா (ரழி) அவர்களை விமர்சனம்‌ செய்திருப்பது இவரது ஷீஆச்‌ சிந்தனையை உறுதி செய்கின்றது.

-முதவாதிர்‌ என்ற ஹதீஸின்‌ தரத்தில்‌ உயர்‌ நிலையில்‌ காணப்படும்‌ ஹதீஸ்களை மறுத்துரைப்பவராக இருக்கின்றார்‌.

உதாரணமாக “இரவின்‌ இறுதிப்பகுதி கழிந்ததும்‌ அல்லாஹ்‌ அடிவானத்திற்கு இறங்கி அடியார்களை அழைப்பது பற்றிய ஹதீஸுன்‌ நூஸுலைக்‌ குறிப்பிட முடியும்‌.

-இவர்‌, இதற்கு விளக்கமளிக்கின்ற போது அல்லாஹ்‌ ஒரு வானவரை இறக்கி வைக்கின்றான்‌ என்று “பத்ஹுல்‌ பாரி, என்ற நூலை ஆதாரமாகக்‌ கொண்டு, மறுத்துரைக்கப்பட வேண்டிய இமாம்‌ நஸயீ அவர்களின்‌ அறிவிப்பை சுட்டிக்காட்டித்‌ தமது வழிகேட்டிற்கு வலுச்சேர்த்துள்ளார்‌ என்று அறிஞர்‌ அல்பானீ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடுவது இங்கு கவனிக்கத்தக்கதாகும்‌.

-இவர்‌ முஆவியா (ரழி) அவர்கள்‌ பற்றிய தமது கருத்தை வெளியிடுகின்றபோது இமாம்‌ இப்னுல்‌ ஜவ்ஸயின்‌, «دفع شبه التشبيه بأكف التنزيه» என்ற நூலில்‌ “அப்துர்ரஹ்மான்‌ பின்‌ காலித்‌ பின்‌ வலீத்‌ என்பவரது மரணத்திற்குச்‌ சூத்திரதாரியாக முஆவியா செயல்பட்டார்‌ என்றும்‌, முஆவியாவே இவருக்கு விஷம்‌ பருகச்‌ செய்து அவரை மரணிக்கச்‌ செய்தவர்”‌ என்றும்‌ குறிப்பிட்டுள்ளதாக ஷேக்‌ அல்பானி‌ அவர்கள்‌ தமது சில்சிலாவில்‌ குறிப்பிட்டிருப்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்‌.

-இதுவும்‌ ஸக்காஃபிடம்‌ காணப்படும்‌ ஷீஆக்களின்‌ வாடை என்பதை அறியாத இலங்கை அஷ்‌அரிய்யாக்கள்‌ அவரை நவீன முஹத்திஸாக, ஆன்மிகத்‌ தலைவராக, தங்களாக நோக்குவது எவ்வளவு பெரும்‌ அறியாமை என்று சிந்திக்கக்‌ கடமைப்பட்டுள்ளனர்‌.

- வானவர்கள்‌ அணியணியாக நிற்கும்‌ நிலையில்‌ உமது இரட்சகன்‌ (மறுமையின்‌ தீர்ப்புக்காக) வருவான்‌ என இடம்பெற்றுள்ள அல்லாஹ்வின்‌ வருகை பற்றிய வசனத்தை இப்னுல்‌ ஜவ்ஸியின்‌ நூலொன்றின்‌ விளக்கவுரையில்‌ இமாம்‌ இப்னு கஸீர்‌ அவர்களின்‌ நூலான “அல்பிதாயா வந்நிஹாயாவில்‌” அல்லாஹ்வின்‌ கூலிதான்‌ இதன்‌ விளக்கம்‌ என்றும்‌, அது சரியான அறிவிப்பாளர்‌ வரிசையில்‌ இடம்‌ பெற்றிருப்பதாகவும்‌ இமாம்‌ அஹ்மத்‌ அவர்களின்‌ கருத்தாகவும்‌ கூறி அவர்கள்‌ மீது பொய்யுரைத்தவர்‌.

-இவர்‌ அகீதாக்கோட்பாடுகளில்‌ மட்டுமின்றி, சாதாரண
பிஃக்ஹ்‌ மசாயில்களிலும்‌ ஆதாரமாகக்‌ கொள்ள முடியாத பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட பல அறிவிப்புகளைத்‌ தமது வேறு நூல்களில்‌ எழுதியுள்ளார்‌.

-கத்தம்‌, பாத்திஹா, மரண நேரத்தில்‌ இருப்பவரின்‌ கால்‌, மற்றும்‌ தலைமாட்டில்‌ அமர்ந்தவாறு யாசீன்‌ ஓதுவது, மரணித்தவருக்கு மண்ணறையில்‌ குர்‌ஆன்‌ ஓதுவது போன்ற பலவீனமான செய்திகளை மார்க்கமாக்கியுள்ளார்‌.

-இவர்‌ ஷாஃபிஈ மத்ஹப்‌ என்றுரைக்கிறார்‌. ஆனால்‌ மத்ஹபுக்கு மாற்றமாகப்‌ பல அம்சங்களை அவரது தொழுகை என்ற நூலில்‌ பதிவு செய்துள்ளார்‌ என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்‌.

-அல்லாஹ்வை இம்மையிலோ, அல்லது மறுமையிலோ
காணமுடியாது எனவாதிடும்‌ இவர்‌, இது ஸைதிய்யாக்கள்‌, ஷீஆக்கள்‌, அஹ்லுல்பைத்தினர்களின்‌ நம்பிக்கைக்‌ கோட்பாடு என்றும்‌ குறிப்பிடுகின்றார்‌.

-புகாரி, முஸ்லிம்‌, திர்மிதீ‌ போன்ற இமாம்களின்‌ கிரந்தங்களின்‌ நம்பகமான அறிவிப்பாளர்களைக்‌ குறை கண்டிருப்பதோடு, அவர்கள்‌ மீது பொய்யுரைத்து, தமது கொள்கைக்கு வலுச்சேர்க்க இவர்‌ எடுத்த முயற்சிகள்‌ முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சி தரும்‌ செய்தியாகும்‌.

-இவர்‌ யார்‌ ஷீஆவாதியா? அல்லது சுன்னாவாதியா? என்ற எதுவித ஆய்வுமின்றி அவரது கருத்துகளை உறுதி செய்யாத இலங்கை அஷ்‌அரிய்யாக்கள்‌ அவரது நூலில்‌ இடம்‌ பெற்றுள்ள அம்சங்களை வேதவாக்காக நம்பிப்‌ பிரச்சாரம்‌ செய்வதோடு, சலஃபியச்‌ சிந்தனையாளர்களை அல்லாஹுவுக்கு உடல்‌ அமைப்பு இருப்போராகச்‌ சித்தரித்துப்‌ பொய்ப்பிரச்சாரம்‌ செய்வது பற்றி நாம்‌ விழிப்பாகவும்‌ எச்சரிக்கையாகவும்‌ இருக்க வேண்டும்‌.

-இவரது பொய்யான வாதங்களைப்‌ பேனாமுனை கொண்டு அறிஞர்கள்‌ முறியடித்தது மட்டுமின்றி, விவாத அரங்குகளிலும்‌ இவரது சுய உருவத்தைத்‌ தோலுரித்துக்காட்டி, தமது சத்தியவழியை நிலை நிறுத்தியுள்ளனர்‌. அல்ஹம்துவில்லாஹ்‌.

மேலதிகத்‌ தகவல்களுக்கு:

1- مجموع رسائل السقاف للسقاف.
2- الكشـاف عن ضللتحسن السقـاف للشيخ /علون القصيمي
3-الوقفات الخمس مع حسن السقاف، للستاذ/ عائض بن سعد الدوسري
4- السعاف في الكشف عن حقيقة حسن السقاف ، للستاذ/ غالب الساقي
5- السلسلة للمحدث الألباني -رحمه الله
ملتقى أهل الحديثwww.ahlalhdeeth.com
شبكة الدفاع عن السنة
www.dd-sunnah.net/forum/showthread.php?t=26875
ملتقى العقيدةwww.alagidah.com போன்ற நூல்களையும்‌, இணைய தளங்களையும்‌ பார்ப்பதுடன்‌, அஷ்ஷைக்‌ அத்னான்‌ அர்கஊர்‌ அவர்கள்‌ ஸக்காஃபுடன்‌ நடத்திய அறிவியல்‌ பண்பாட்டு விவாத அரங்குகளையும்‌ பார்த்துப்‌ பயன்‌ பெற முடியும்‌.

இலங்கை அஷ்‌அரிய்யாக்கள்‌

இலங்கையில்‌ உள்ள அரபுக்‌ கல்லூரிகளின்‌ பாடத்திட்டத்தில்‌ பெரும்‌ அறிவியல்‌ வீழ்ச்சி காணப்படுவதோடு, அகீதா அறிவில்‌ வர்ணிக்கமுடியாத வரட்சி நிலவுவதையும்‌ தொடர்ந்து காண முடிகின்றது.

சாதாரண “பிக்ஹ்மசாயில்கள்‌” பற்றிய தெளிவின்மையை ஓர்‌ புறம்‌ தள்ளிவைத்தாலும்‌ “அகீதா” பற்றிய அடிப்படை அறிவுகள்‌ பற்றிய வறுமை நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பகுதியாகும்‌.

குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்ற போது குறையற்ற சிந்தனையின்‌ பக்கம்‌ சென்றே அவற்றை நிரப்ப முயற்சிக்க வேண்டும்‌. அந்த நிலையில்‌ இருந்து அஷ்‌அரிய்யா அரபுக்கல்லூரிகள்‌ விடுபட்டபவையாகத்‌ தென்படவில்லை.

அத்துடன்‌, இலங்கை அஷ்‌அரிய்யாக்கள்‌ அகீதாப்‌ பாடத்தின்‌ முக்கியத்துவம்‌ பற்றி உணராதவர்களாகவும்‌, அதன்‌ அவசியம்‌ பற்றி உணர்த்தப்படாதவர்களாகவும்‌ இருக்கின்ற இந்த அசட்டைப்‌ போக்குத்தான்‌ இக்கல்லூரிகளின்‌ ஆசிரியர்கள்‌ மாணவர்களை அகீதா பற்றிய உதாசீனப்‌ போக்கைத்‌ தோற்றுவித்துள்ளது எனக்‌ குறிப்பிடலாம்‌.

இன்றும்‌ அகீதா குறித்த அடிப்படை அறிவற்றவர்களாகவே மாணவர்கள்‌ மெளலவிப்பட்டம்‌ பெற்று வெளியேறுகின்றனர்‌.

சில கல்லூரிகள்‌, தொப்பி, தலைப்பாகை, ஜுப்பா, மிஸ்வாக்‌ போன்ற சாதாரண கிளை அம்சங்களுக்கு வழங்குகின்ற முன்னுரிமையை அகீதாவில்‌ வழங்காதிருப்பது இந்தக்‌ கோட்பாடு பற்றிய வாசத்தை நுகர இன்னும்‌ பல ஆண்டுகள்‌ சென்றாலும்‌ ஆச்சரியப்படுவதற்கில்லை.

இங்கு ஒன்றைச்‌ சுட்டிக்காட்டியாக வேண்டும்‌. அதாவது சர்வதேச அளவில்‌ பிரசித்தி பெற்று விளங்கும்‌ சில இஸ்லாமிய அறிஞர்‌ பெருமக்களின்‌ கருத்துகளுக்கு அதிக அழுத்தமும்‌, மதிப்பும்‌ வழங்குகின்ற முற்போக்குச்‌ சிந்தனைகள்‌ மூலம்‌ சமூகத்தை மாற்ற விரும்புகின்ற முன்னோடிகள்‌ கதையும்‌ இதுவாகத்தான்‌ இருக்கின்றது.

அஷ்ஷைக்‌ யூசுஃப்‌ கர்ளாவீ அவர்களின்‌ அஷ்‌அரிய்யா
பற்றிய நிலைப்பாடு

இஸ்லாமியச்‌ சமூகத்தில்‌ அறியப்பட்ட மிகச்‌ சிறந்த அறிஞர்களுள்‌ ஷேக்‌ கர்ளாவீ அவர்களும்‌ ஒருவர்‌. ஷீஆக்கள்‌ பற்றிய அவரது பார்வை சலஃபிய அறிஞர்களின்‌ பார்வையில்‌ இருந்து நீண்டகாலமாக வேறுபட்டிருந்தது.

அரபு வசந்தப்‌ புரட்சியின்‌ பின்னர்‌ ஷீஆக்கள்‌, ஹிஸ்புல்லாக்கள்‌ பற்றிய தமது நிலைப்பாடு பற்றி அவர்‌ வெளியிட்ட கருத்துகள்‌ அவரது தெளிவான நிலைப்பாட்டைப்‌ படம்பிடித்துக்காட்டியது.

இவரது கருத்தானது சுன்னா அறிஞர்கள்‌ மத்தியில்‌ ஓரளவு ஐக்கியத்தையும்‌, அவர்‌ மேல்‌ உள்ள மரியாதையையும்‌ சற்று உயர்த்தியது. ஈரானின்‌ ஆன்மிகத்தலைவர்‌ எனக்‌ கூறப்படும்‌ ரஃப்ஸன்ஜானி என்பவரிடம்‌ “சன்னி முஸ்லிமின்‌ இரத்தத்தை ஒட்டுவது ஹராம்‌ என்று ஃபத்வா வழங்கத்தயாரா?” என்று ஆவேசத்துடன்‌ கேள்வி எழுப்பியவர்தாம்‌ ஷேக்‌ கர்ளாவீ அவர்கள்‌.

அவர்‌ அஷ்‌அரிய்யாக்கள்‌ பற்றி வெளியிட்டுள்ள கருத்துகளிலும்‌ இதே போன்றதொரு நிலைப்பாட்டை
எதிர்காலத்தில்‌ கூறமாட்டார்‌ என்று முடிவாகக்‌ குறிப்பிட முடியாது.

பல ஆண்டுகள்‌ கழிந்தும்‌ சத்தியத்தைச்‌ சத்தியமாக அங்கீகரிக்கும்‌ அவரது போக்கைக்‌ கொண்டு அப்படித்தான்‌ நாம்‌ இப்போது முடிவு செய்ய முடியும்‌ நிலை இருக்கின்றது. (அல்லாஹ்வே மிக அறிந்தவன்‌)

அஸ்ஹரில்‌ அஷ்‌அரிய்யாக்கள்‌ உள்ளனரே! என்று அவரிடம்‌ கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்‌ அளித்த ஷேக்‌ கர்ளாவீ அவர்கள்‌ “அஸ்ஹர்‌ ஷரீஃபில்‌ மட்டுமா? உலகில்‌ அதிகமானவர்கள்‌ அஷ்‌அரிய்யாக்கள்தாமே!” எனக்‌ கூறினார்‌.

இக்கருத்தினை மறுத்து “ஆரம்ப நூற்றாண்டுகளிலும்‌, அதன்‌ பின்னரும்‌ வாழ்ந்த பல அறிஞர்கள்‌ சலஃபியச்‌ சிந்தனையும்‌, அஹ்லுஸ்ஸுன்னாக்களுமாக வாழ்ந்து மரணித்துள்ளனர்‌. இது பற்றி அறியாதவராகப்‌ பதில்‌ அளித்துள்ளாரோ ஷேக்‌ அவர்கள்‌; இது பற்றி அறியவில்லையா எனக்‌ கேள்வி தொடுக்கப்பட்டுகின்றது.

‌”ரஃப்வுல்‌ லிஸாம்‌, அன்‌ முகாலஃபத்தில்‌ கர்ளாவீ லிஷரீஅத்தில்‌ இஸ்லாம்‌” என்ற நூலின்‌ “ஆசிரியர்‌ அஹ்மத்‌ பின்‌ முஹம்மத்‌ பின்‌ மன்சூர்‌ அல்‌உஸைனீ” என்பவர்‌ இஸ்லாமியச்‌ சிந்தனைப்‌ பிரிவுகள்‌ பற்றிய ஷேக்‌ கர்ளாவியின்‌ நிலைப்பாடு பற்றி ஷேக்‌ கர்ளாவீ அவர்களின்‌ நூல்களில்‌ ஒன்றான “உஜுதுல்லாஹ்‌” “அல்லாஹ்வின்‌ உள்ளமை” என்ற தலைப்பில்‌ எழுதிய நூலினை ஆதாரமாக்க கொண்டு பின்வருமாறு விமர்சனம்‌ செய்துள்ளார்‌.

(அல்லாஹ்வின்‌) ஸிஃபாத்‌ (பண்புகள்‌) பற்றிய விஷயத்தில்‌ கத்தார்‌, மற்றும்‌ சவூதி அரேபியாவில்‌ உள்ளவர்கள்‌ ஒருவருடன்‌ ஒருவர்‌ முரண்பட்டு விவாதம்‌ செய்து, முடிவில்லாத வாதப்பிரதிவாதம்‌ செய்து, அது பற்றிய பேச்சும்‌ நீண்டு சென்றுகொண்டிருந்த போது அந்த எனது சகோதரர்களிடம்‌, நமது இன்றைய காலத்தில்‌ போர்‌ அஷ்‌அரிய்யாக்களுடனோ, மாத்ரூதிய்யா உடனோ, முஸதஸிலா, ஜஹ்மிய்யாக்களோடோ அல்ல. மாறாக, நமது பெரும்‌ யுத்தம்‌ என்பது அல்லாஹ்வை முழுமையாக நிராகரிக்கின்ற நாத்திகர்களோடும்‌, நபித்துவத்தையும்‌, வேதத்தையும்‌ நிராகரிக்கின்றவர்களோடுதான்‌ இருக்க வேண்டும்‌. இன்னும்‌ நமது போர்‌ அல்லாஹ்வை அவனது உள்ளமையின்‌ முழுமையாக நிராகரிப்போரோடுதான்‌ இருக்க வேண்டும்‌. அல்லாஹ்வுக்கு ஓர்‌ இடம்‌ இல்லை என்பவர்களோடு அல்ல. மேலும்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளுக்குத்‌ தவறான விளக்கமளிப்போருக்கு எதிரானதாகவும்‌ அவசியமில்லை. மாறாக அவனை முழுமையாக மறுப்போருக்கு எதிராகத்தான்‌ அமைய வேண்டும்‌. இந்த நோக்கில்‌ இருந்து நாம்‌ திசை திருப்பப்படும்‌ எந்தப்‌ போரானாலும்‌ அது முஸ்லிம்‌ அணிக்குள்‌ பலவீனத்தைத்‌ தோற்றுவிக்கும்‌ போராகவும்‌, போரில்‌ இருந்து புறமுதுகிட்டு ஓடுவதாகவுமே அமையும்‌ என்று கூறி இருக்கின்றேன்‌. (இது ஷேக்‌ கர்ளாவியின்‌ வரிகளாகும்‌)

رفع اللثام عن مخالفة القرضاوي لشريعةالسلم (ص:121
பார்க்க:அல்லது, www.sahab.net
இது ஷேக்‌ அவர்களின்‌ அகீதாக்‌ கோட்பாட்டை நிறுப்பதற்கான அளவுகோலாக நாம்‌ அங்கீகரிக்க முடியாதவாறு அவர்களின்‌ இணைய தளத்தில்‌ சலஃபிய “அஸ்மா சிஃபாத்‌” சிந்தனையை அவர்கள்‌ சரிகண்டதற்கான சான்றுகளும்‌ வாசகங்களும்‌ இடம்‌ பெற்றிருக்கின்றன.

அவர்‌ அஷ்‌அரிய்யா கோட்பாட்டைச்‌ சரிகண்டாரா? இல்லையா? அல்லது எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்‌ என்ற கருத்தில்‌ இதனைக்‌ கூற வந்தாரா? என்பது பற்றிய எவ்விதத்‌ தெளிவும்‌ அற்ற ஒரு நிலை இங்கு காணப்படுகின்ற போதும்‌ இப்னுல்‌ கய்யிம்‌ அவர்கள்‌ நிறுவிக்காட்டும்‌ அகீதாக்‌ கோட்பாடு இறுக்கமான, நேர்த்தியான கோட்பாடு, என்று ஷேக்‌ கர்ளாவீ அவர்கள்‌ புகழ்ந்துரைப்பது பற்றியும்‌ இங்கு
நாம்‌ அவரது கருத்துகள்‌ பற்றிப்‌ பரிசீலிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

குவைத்தில்‌ இருந்து வெளிவரும்‌ “அல்முஜ்தமஃ” சஞ்சிகையை மேற்கோள்காட்டி www.alukah.net ‌ என்ற இணைய தளம்‌ ஷேக்‌ கர்ளாவீ அவர்களின்‌ பின்வரும்‌ கருத்தினை வெளியிட்டுள்ளது. அதாவது,

إَّن مذهب السلف في الآيات والأحاديث التي تتعلق بصفات الله تبارك وتعالى أن يُِمُّروها على ما جاءت عليه ويسكتوا عن تفسيرها أو تأويلها) مجلة المجتمع عدد 1370 تاريخ 1420/5/25هـ

“அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ தொடர்பாக வந்துள்ள அல்குர்‌ஆன்‌, மற்றும்‌ ஹதீஸ்களை வந்தபடியே நடத்துவது சலஃபுக்களின்‌ கொள்கையாகும்‌. அதற்கு தஃப்சீர்‌ (கருத்துச்‌) செய்வதில்‌ இருந்தும்‌, தவறாக விளக்கம்‌ தருவதில்‌ இருந்தும்‌ அவர்கள்‌ மெளனமாக இருப்பார்கள்‌”

தஃப்சீர்‌ செய்தல்‌ என்பதை முறைமை கற்பித்தல்‌ என்பது பொருள்‌ கொள்ளப்படுமாக இருப்பின்‌ அதை அங்கீகரிக்க முடியும்‌. ஆனால்‌ அதற்கு வெளிப்படையான கருத்துகள்‌ கொள்வது பிழையான வழிமுறை என்றிருப்பின்‌ அதுவும்‌ சலஃபுகளின்‌ கொள்கை அல்ல என்பதை நாம்‌ அறிந்து கொள்ள வேண்டும்‌.

இருந்தாலும்‌ ஷேக்‌ கர்ளாவீ அவர்கள்‌ ஷீஆக்கள்‌ பற்றிய தமது நிலைப்பாட்டினைப்‌ பல ஆண்டுகளுக்குப்‌ பின்னர்‌ மீளப்‌ பெற்றது போன்று அஷ்‌அரிய்யாக்கள்‌ பற்றிய அவரது கருத்தையும்‌ மீளப்‌ பெறமாட்டார்‌ என்றும்‌ உறுதியாகக்‌ கூற
முடியாது.

மற்றோர்‌ எகிப்திய அறிஞரான இமாம்‌ ஹசனுல்‌ பன்னா (ரஹ்‌) அவர்கள்‌ அவரது “ரசாயிலுல்‌ பன்னா” வில் “சலஃபுகளின்‌ போக்கு, கருத்தை அல்லாஹ்விடம்‌
ஒப்படைப்பதாகும்‌” (அதாவது வெளிப்படையான பொருள்‌ கொள்வதல்ல) என்பதாக, அஸமா, ஸிஃபாத்‌” பற்றிய தமது நிலைப்பாடு பற்றி எழுதியுள்ள கருத்தானது பிற்கால அஷ்‌அரிய்யாக்களின்‌ கருத்தாகும்‌. இது மிகவும்‌ ஆபத்தான, வழிகெட்ட கருத்தாகும்‌. இது பற்றியும்‌ விமர்சனம்‌ எழுந்திருப்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்‌. 

இலங்கை அஷ்‌அரிய்யாக்களின்‌ அகீதாச்‌ சிந்தனை

“சலஃபிய அஸ்மா, ஸிஃபாத்‌ சிந்தனை உண்மைக்குப்‌ புறம்பானது, கலஃபிய சிந்தனைதான்‌ சரியானது” என்பது இலங்கை அஷ்‌அரிய்யாக்களின்‌ அகீதாச்‌ சிந்தனையாகும்‌.

இலங்கை அஷ்‌அரிய்யாக்களிடம்‌ ஸஹாபாக்களின்‌ காலத்திற்குப்‌ பின்‌ தோற்றம்‌ பெற்ற ஜஹ்மிய்யா, முஃதஸிலா, குல்லாபியா, அஹ்லுல்கலாம்‌ போன்ற பிரிவினரிடமிருந்து இறக்குமதி செய்துகொண்ட கலவைச்‌ சிந்தனைகள்‌ காணப்படுவதே உண்மை.

அதனால்தான்‌. இவர்கள்‌ தமது கோட்பாடுகளுக்கு ஆதரவாகப்‌ பேசுகின்ற வழிகேடர்கள்‌ ஷீஆக்களாக இருந்தாலும்‌ அவர்களின்‌ நூல்களில்‌ இருந்து முழுமையாகக்‌ “காப்பி அன்ட்‌ பேஸ்ட்‌” செய்வோராகவும்‌, சொந்தமாகச்‌ சிந்தித்து முடிவு செய்ய முடியாதவர்களாகவும்‌ இருக்கின்றனர்‌.

இஸ்லாமிய அடிப்படை அறிவாகிய அகீதாக்‌ கோட்பாட்டைப்‌ போதிப்பதற்காக இலங்கை, தென்னிந்தியா போன்ற நாடுகளில்‌ அஷ்‌அரிய்யா மத்ரசாக்களில்‌ “நூறுள்ளலாம்‌” “ஜவ்ஹரதுத்தவ்ஹீத்‌” போன்ற நூல்கள்‌ பாடத்திட்டங்களில்‌ முக்கியமாக உள்வாங்கப்பட்டிருக்கின்றன. அவை பற்றிய சில குறிப்புகள்‌ மூலம்‌ அஷ்‌அரிய்யாக்‌ கோட்பாட்டில்‌ எவ்வளவு பலவீனம்‌ காணப்படுகின்றது என்ற உண்மையினை நாம்‌ அறிந்து கொள்ள முடியும்‌.

ஜவ்ஹரதுத்‌ தவ்ஹீது நூல்‌ பற்றிய அறிமுகக்‌ குறிப்பு:

இது 144 அரபுக்கவிதை அடிகளைக்‌ கொண்டது. அதன்‌ பிரதம ஆசிரியராக ஹிஜ்ரீ 1041இல்‌ மரணமான புர்ஹானுத்தீன்‌ இப்ராஹீம்‌ அல்லகான்‌ அல்மாலிக்‌ என்பவர்‌ விளங்குகின்றார்‌. இவர்‌ ஓர்‌ எகிப்திய அறிஞர்‌ என்று சுருக்கமாகக்‌ குறிப்பிட முடியும்‌.

விரிவுரைகள்‌, விளக்கங்கள்‌:

இந்தக்‌ கவிதை வரிகளுக்குச்‌ சிலர்‌ அடிக்குறிப்புகள்‌ வழங்கியுள்ளனர்‌. மற்றும்‌ சிலர்‌ விரிவுரை செய்துள்ளனர்‌. அவர்களுள்‌ குறிப்பிடத்தக்க கவிதை ஆசிரியரான இப்ராஹிம்‌ அவர்களுக்கு மட்டும்‌ மூன்று விரிவுரைகள்‌ உண்டு.

இந்நூலுக்கு அடிக்குறிப்புகள்‌ வழங்கியதில்‌ ஹிஜ்ரீ 1276 காலப்‌ பகுதியில்‌ ஷைகுல்‌ அஸ்ஹராக இருந்த இப்ராஹீம்‌ அல்பாஜுர்‌ (அல்பைஜுரீ) என்பவரது விரிவுரைக்குறிப்புகளும்‌ முக்கியமானதாகும்‌. அது ةرهوج ىلع ديرمل ةفحت ديحوتل எனபெயரிடப்பட்டிருந்தது.

حاشية المام البيجورى على جوهرة التوحيد المسمى تحفة المريد على جوهرة التوحيد என்றும்‌ அது அழைக்கப்படுகின்றது.

இலங்கைவாழ்‌ அஷ்‌அரிய்யாக்கள்‌ அகீதாப்‌ போதனைக்காக இந்தக்‌ கவிதைகளையும்‌, அவற்றின்‌ விரிவுரைகளையும்‌ தாங்கிய நூல்களைத்‌ தமது பாடத்திட்டத்தினுள்‌ இணைத்துள்ளனர்‌.

அல்லாஹ்‌ ஜிப்ரீல்‌ (அலை) அவர்களோடு பேசினான்‌. அதில்‌ சப்தம்‌ இருந்தது. அந்தப்‌ பேச்சை ஜிப்ரீல்‌ (அலை) அவர்கள்‌ செவிமடுத்தார்கள்‌. பின்னர்‌ அதனை முஹம்மத்‌ நபி (ஸல்‌) அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்‌. அதுவே அல்லாஹ்வால்‌ இறக்கப்பட்ட அவனது பேச்சாகிய குர்‌ஆனாகும்‌. இதையும்‌ இவர்‌ இங்கு நிராகரித்துள்ளார்‌.

இந்நூலில்‌ இவரால்‌ முன்வைக்கப்படும்‌ அகீதாக்‌ கோட்பாடு குர்‌ஆன்‌, சுன்னாவில்‌ இருந்து பெறப்பட்டுள்ள தகவல்கள்‌ என்பதை விட அஷ்‌அரிய்யாக்கள்‌ முன்வைக்கின்ற அகீதாக் ‌ கோட்பாடு பற்றிய கவிதை அடிகள்‌ என்று குறிப்பிட முடியும்‌. அத்தோடு, அவற்றில்‌ மட்டுப்படுத்தப்பட்ட அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள் பற்றிச்‌ சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன்‌, அவற்றிற்குத்‌ தவறான விளக்கம்‌ தருவதற்கும்‌ அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றே குறிப்பிட முடியும்‌.

அவரது கவிதை அடி ஒன்றில்‌:

فُكُّل َخْيٍر ِفي اتِّـبَاِع َمْن َسَلف ... َوُكُّل َشٍر في ابْتَداِع ِمْن َخَل ْف

சலஃபுகளைப்‌ பின்பற்றுவதில்தான்‌ அனைத்து நன்மைகளும்‌ உண்டு.

கலஃபுகள்‌ உருவாக்கிய புதிய நவீனங்களில்தான்‌ அனைத்துத்‌ தீமைகளும்‌ உண்டு என்றும்‌ குறிப்பிடும்‌ இவர்‌ பின்வருமாறு முரண்படுகின்றார்‌.

படைப்பினங்களுக்கு ஒப்பானது போன்ற நிலையைக்‌ கொண்டுள்ள அனைத்துச்‌ சான்றாதாரங்களையும்‌,

ஒன்று அதற்கு நீ (தஃவீல்‌) மாற்றுப்‌ பொருள்‌ தந்திடு; அல்லது தூய்மையை நாடி அதற்குப்‌ பொருள்‌ கூறாதிருப்பாயாக.

அதாவது கரம்‌, முகம்‌ என்று வரும்‌ பண்புகளை அதன்‌ வெளிப்படையான பொருள்‌ தருவது படைப்பினங்களுக்கு ஒப்பிடுவதாகும்‌. அதைத்‌ தூய்மைப்படுத்த அவற்றின்‌ பொருள்‌ பற்றி எதுவும்‌ பேசாதே என்பது இதன்‌ பொருளாகும்‌ எனக்‌ கூறி அதை சலஃபுகளின்‌ கொள்கை என்று கூறி அவர்கள்‌ மீது பொய்யுரைத்துள்ளார்‌.

இந்த இரு நூல்களும்‌ தவிர ஏனைய நால்கள்‌ அஷ்‌அரிய்யாக்களின்‌ அகீதாப்‌ பாடப்பிரிவில்‌ இணைத்துக்‌ கொள்ளப்பட்டுள்ளதா? என்பது பற்றி நாம்‌ அறியோம்‌.

நூறுள்ளலாம்‌ நூல்‌ பற்றிய அறிமுகக்‌ குறிப்பு:

இந்த நூல்‌ அஷ்‌அரிய்யாச்‌ சிந்தனையை உள்ளடக்கிய சில அரபுக்கவிதைவரிகளைக்‌ கொண்டதாகும்‌. இதன்‌ ஆசிரியராக முஹம்மத்‌ நவவீ பின்‌ உமர்‌ அத்ததாரீ, அல்பன்தீனீ அல்ஜாவீ என்பவர்‌ என எழுதப்பட்டுள்ளது.

இதில்‌ ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷ்‌அரிய்யா போன்ற பிற்காலச்‌ சிந்தனைப்‌ பிரிவுகளின்‌ அகீதாக்‌ கோட்பாடு
அல்லாஹ்வின்‌ பண்புகளாக உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, அவை அஷ்‌அரிய்யாக்களின்‌ சரியான கோட்பாடாகவும்‌ உறுதி
செய்யப்படுகின்றது.

இந்தக்‌ கவிதைகளை “நூறுள்ளலாம்‌ ஸபீ ஷரஹி அகீததில்‌ அவாம்‌” “பொதுமக்களுக்கான கஸீதாவுக்கான விரிவுரை ” என்ற பெயரில்‌ “அஹ்மத்‌ அல்‌ மர்ஸுகி” என்பவரது விரிவுரை ஒன்றும்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூறுள்ளலாம்‌‌ ஸபீ ஷரஹி அகீததில்‌ அவாம்‌ பொதுமக்களின்‌ அக்தாவை உள்ளடக்கிய கவிதைத்‌ தொகுப்பின்‌ விரிவுரை-என்ற பெயரில்‌ أبو عبد المعطي محمد بن عمر بن علي نووي என்பவரது பெயரிலும்‌ இந்நூல்‌ வெளி வந்திருப்பது அது பற்றிய தேடல்‌ மூலம்‌ அறிய முடிகின்றது.

அல்லாஹ்வின்‌ உள்ளமை, அவனது பண்புகள்‌, அவனுக்கு இருக்க முடியாத பண்புகள்‌, நபிமார்களின்‌
பண்புகள்‌ என்பவனவற்றை உள்ளடக்கிய இந்தப்‌ பாடல்‌ வரிகள்‌ அஷ்‌அரிய்யாக்கள்‌ அங்கீகரித்தும்‌, அங்கீகரிக்காததுமான அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகளோடு ஆரம்பமாகின்றது.

இதில்‌ குர்‌ஆன்‌, சுன்னாவில்‌ இடம்பெறாத முதகல்லிம்‌,
கதம்‌, மவ்ஜுத்‌ போன்ற சொற்பிரயோகங்கள்‌ அல்லாஹ்வின்‌ பெயர்களாக இடம்‌ பெற்றிருப்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்‌.

அஷ்‌அரிய்யாக்கள்‌ பற்றிய அறிமுகத்தில்‌ இது பற்றித்‌
தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

இந்நூலுக்கு மெளலவி அமீனுத்தீன்‌ ஸாஹிர்‌ என்பவர்‌ எழுதிய அடிக்குறிப்புகளில்‌ அகீதா தொடர்பான பல தவறுகள்‌ நம்மால்‌ சுட்டிக்காட்டப்பட வேண்டியவைகளாக இருப்பினும்‌ அல்லாஹ்வின்‌ பேச்சை உள்ளடக்கிய ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மறுத்து, ஸக்காஃபின்‌ வழி நின்று அவற்றின்‌ நேரடிப்‌ பொருளைச்‌ சிதைத்து, அவர்‌ செய்துள்ள இருட்டடிப்பு பற்றிய விமர்சனத்தை மட்டும்‌ முக்கியமானதாக எடுத்து நோக்கவிருக்கின்றோம்‌.

நூறுள்ளலாம்‌ நூலிற்கான அடிக்குறிப்புகள்‌ பற்றிய விமர்சனம்‌:

ஷாஃபிஈ மத்ஹப்‌ சார்ந்த சூஃபிசச்‌ சிந்தனையைக்‌ கொண்ட இலங்கை மற்றும்‌ தென்னிந்திய அரபு மத்ரசா மாணவர்களுக்கான அகீதாப்‌ பாட நூலாக இது அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இலங்கையில்‌ அஷ்‌அரிய்யா கோட்பாட்டைப்‌ போதிப்பதில்‌ முக்கிய இடத்தை வகிக்கின்ற நூலாக இந்நூல்‌ விளங்குகின்ற காரணத்தால்‌ அஷ்‌அரிய்யா மாணவர்களின்‌ நலனைக்கருத்தில்‌ கொண்டு இந்நூலுக்குச்‌ சகோதரர்‌ அமீனுத்தீன்‌ ஸாஹிர்‌ என்பவர்‌ அடிக்குறிப்பு எழுதியுள்ளார்‌.

அந்த நூலின்‌ உள்ளடக்கம்‌ பற்றிய முழுமையான தகவலை நாம்‌ வழங்க வேண்டிய அவசியம்‌ இல்லாதிருப்பினும்‌ மெளலவி அமீனுத்தீன்‌ ஸாஹிர்‌ அவர்களால்‌ இருட்டடிப்புச்‌ செய்யப்பட்ட அடிக்குறிப்புகளில்‌ இருந்து முக்கியமானதை மட்டும்‌ நோக்கவிருக்கின்றோம்‌. இவர்‌ வழிகெட்ட ஸக்காஃபின்‌ போக்கை எவ்வாறு சரிகண்டுள்ளார்‌ என்பதை இதன்‌ மூலம்‌ உறுதி செய்து கொள்ள முடியும்‌.

அமீனுத்தீன்‌ ஸாஹிர்‌ அவர்கள்‌ “நூறுள்ளலாம்”‌ நூலுக்கு எழுதிய அடிக்குறிப்புக்கு கொழும்பு மர்கஸ்‌ ஆலீம்களுள்‌ முக்கிய இருவரும்‌, அவர்களுடன்‌ நெருக்கமான தொடர்புடைய மற்றோர்‌ ஆலீமும்‌ இணைந்து அணிந்துரையும்‌, புகழுரையும்‌ வழங்கி அந்நூலுக்கு ஆசிர்வாதம்‌ வழங்கியதன்‌ பின்னணியில்‌ இந்நூல்‌ அச்சிட்டு வெளியிடப்பட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்‌.

இக்கருத்தை நாமாக இட்டுக்கட்டியோ, அல்லது மிகைப்படுத்தியோ கூறவில்லை. அது பற்றிய விளக்கத்தை அவரது நூலின்‌ முகவுரையில்‌ காணமுடியும்‌.

வழிகெட்ட அஷ்‌அரிய்யாச்‌ சிந்தனைக்கு உரமூட்டி, ஷாஃபி இமாமை அக்தாவில்‌ புறம்‌ தள்ளி, அவரது பெயரில்‌ உள்ள மத்ஹப்‌ பெயரை ஃபிக்ஹில்‌ பயன்படுத்திக்‌ கொண்டு, நபித்தோழர்களைத்‌ தூசித்து, ஷீஆவுக்குள்‌ மறைந்தும்‌, ஒழிந்தும்‌ வாழும்‌ ஸக்காஃப்‌ என்பவரது நூல்களில்‌ இருந்து இவரது குறிப்புகள்‌ பரவலாகப்‌ பெறப்பட்டு, ஆங்காங்கு இடம்‌ பெற்றிருப்பது இவரது நூலை வாசிக்கின்றபோது தெரிகின்றது.

இது “அஸ்மா, ஸிஃபாத்‌ பற்றிய இவரது அறியாமையை
வெளிப்படுத்துவது ஒருபுறம்‌ இருக்க இவர்‌ ஷீஆ, சுன்னா பற்றிய தெளிவற்றவர்‌ என்பதைப்‌ புலப்படுத்துகின்றது.

மேற்கண்ட நூலுக்கு تطييب الأنام بتحقيق وتعليق نور الظلام 

என நூலாசிரியர்‌ பெயரிட்டுள்ளார்‌. காலி “கன்ஸுல்‌ கைராத்‌”, அரபுக்கல்லூரி, மற்றும்‌ காரைதீவு மாவடிப்பள்ளி “ஸஃதிய்யா அரபுக்கல்லூரி” ஆகிய இரு கல்லூரிகள்‌ இந்நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளன.

இந்நூல்‌ “இறைத்தூதர்‌ முஹம்மத்‌ நபியின்‌ ஆன்மாவுக்கும்‌, பின்னர்‌ அவரது பெற்றோருக்கும்‌ சமர்ப்பணம்‌” என்று நூலில்‌ உள்ள அட்டைப்‌ பகுதியில்‌ பொறிக்கப்பட்டுள்ளது.

முஹம்மத்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ ஆன்மாவுக்குச்‌ சமர்ப்பணம்‌ உண்டா? என்ற வாதப்பிரதிவாதங்கள்‌ இருக்க அவர்கள்‌ போதித்த அகீதாக்‌ கோட்பாடு எதுவும்‌ இதில்‌ இல்லாமல்‌, அவர்களின்‌ போதனைகள்‌ மறுக்கப்பட்டு, அல்லது திரிபுபடுத்தப்பட்ட நிலையில்‌ அவர்களின்‌ ஆன்மாவுக்குச்‌ சமர்ப்பணம்‌ செய்யப்படுவதானது இறை நிராகரிப்புடன்‌ அமல்‌ செய்வதற்கு சமமானதாகும்‌.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய மெளலவி ஸல்மான்‌ அவர்கள்‌ “இது மிகச்‌ சிறந்த விரிவுரை” என்றும்‌ இதனால்‌ தமது மனம்‌ குளிர்ந்து போனதாகவும்‌ குறிப்பிட்டுப்‌ புகழ்ந்துரைத்திருப்பது இவர்களின்‌ அகீதாக்‌ கோட்பாடு அஷ்‌அரிய்யா கோட்பாடுதான்‌ என்பதை உறுதி செய்கின்றது.

“அள்‌அஃபுல்‌ வரா” என்ற புனைப்பெயரில்‌ தம்மை அறிமுகப்படுத்தியுள்ள ஷுஐப்‌ அஷ்ஷாபி, அல்‌அஷ்‌அரீ என்பவர்‌ இந்நூலை அரைவாசிப்‌ பகுதிக்கு மேல்‌ வரிவரியாக வாசித்ததாகவும்‌, அது பற்றி அளவில்லா மகிழ்ச்சி அடைந்ததாகவும்‌, முழுமையாக வாசிக்காமலே இது சிறந்த முயற்சியும்‌, விளக்க உரையும்‌ என்றும்‌ தனது பாராட்டை வெளியிட்டுள்ளார்‌.

முஹம்மத்‌ இல்யாஸ்‌ முஹம்மத்‌ என்பவர்‌ மார்க்கத்தின்‌ அடிப்படை தவ்ஹீத்‌, ஈமான்‌ என்றும்‌, அது பற்றிய விஷயத்தில்‌ கவனம்‌ செலுத்துவது அவசியம்‌ என்றும்‌ குறிப்பிட்டு இந்நூலுக்குத்‌ தமது ஆசிர்வாதக்‌ கருத்துகளைப்‌ பதிவு செய்து நூலின்‌ ஆசிரியரை ஊக்குவித்திருப்பதைப்‌ பார்க்கின்ற போது கொழும்பு தப்லீக்‌ மர்கஸில்‌ உள்ளவர்களும்‌ அகீதாக்‌ கோட்பாட்டில்‌ அஷ்‌அரிய்யாக்கள்‌ என்பது புலனாகின்றது.

அஷ்‌அரிய்யாக்கள்‌ பார்வையில்‌ அல்லாஹ்வின்‌ பேச்சு

அஷ்‌அரிய்யாக்கள்‌ அல்லாஹ்‌ பேசுகின்றான்‌ என்பதையோ, அவனுக்குப்‌ பேச்சு இருக்கின்றது என்பதையோ நம்பிக்கை கொள்ளாதவர்கள்‌. அவர்களிடம்‌ “ அல்லாஹ்வின்‌ பேச்சு என்பது المعنى القائم بالنفس அதாவது “மனதில்‌ நிலைகொண்டுள்ள கருத்து” அல்லது “வெறும்‌ மனக்குமுறல்‌”
என்பதாகும்‌.

மறுப்பிற்கான காரணம்‌:

மனிதர்களின்‌ பேச்சு என்பது சொற்கள்‌, சப்தங்கள்‌ அடங்கியதாகும்‌. அவை அவர்களின்‌ நாவினால்‌ வெளிப்படுகின்றன. எனவே அல்லாஹ்வின்‌ பேச்சை மனித பேச்சுக்கு ஒப்பிடுவது பொருத்தமற்றதாகும்‌. அதனால்‌ அல்லாஹ்வின்‌ பேச்சு என்பது அவனின்‌ உள்மனதில்‌ தங்கி இருக்கும்‌ காலமெல்லாம்‌ அது அவனது பேச்சாகக்‌ கொள்ளப்படும்‌.

அது வெளிப்படும்‌ போது புதியதொரு நிகழ்வாக வெளிப்படுகின்றது. எனவே புதிய நிகழ்வு என்பது அவனது தகுதிக்கு அப்பாற்பட்டதாகும்‌. அது படைப்பினங்களுடன்‌ தொடர்புபட்டதாகும்‌. அந்த வரிசையில்‌ அல்குர்‌ஆன்‌ புதிய வார்த்தைகளாகும்‌. எனவே புதியது படைக்கப்பட்டதாகும்‌. அதனால்‌ அல்குர்‌ஆனும்‌ படைக்கப்பட்டுள்ளது.

அது எப்படி என்றெல்லாம்‌ அல்லாஹ்‌ அவனது சப்தத்தை ஓர்‌ மரத்தின்‌ மீது படைத்தான்‌. அதனை ஜிப்ரீல்‌ (அலை) கொண்டு வந்து முஹம்மத்‌ நபியின்‌ உள்ளத்தில்‌ போட்டார்கள்‌. அதனால்‌ அல்குர்‌ஆன்‌ அல்லாஹ்வின்‌ யதார்த்தமான பேச்சு அல்ல. அது படைக்கப்பட்டதாகும்‌ என்று வாதிடுகின்றனர்‌.

இவ்வளவு சுற்றிவளைப்புகளும்‌ ஏனென்றால்‌ அல்லாஹ்வின்‌ யதார்த்தமான பேச்சாகிய அல்குர்‌ஆனை அவனது பேச்சு இல்லை. மாறாக, அது படைக்கப்பட்ட வார்த்தைகளினால்‌ அமைந்தது என்று கூறவும்‌, அல்லாஹ்வும்‌ பேசுகின்றான்‌; மனிதர்களும்‌ பேசுகின்றனர்‌. இரண்டிலும்‌ சப்தம்‌ வெளிப்படுகின்றது. எனவே இரண்டும்‌ ஒன்றாக இருப்பது சாத்தியமற்றது என்றும்‌ கூறி அல்லாஹ்வின்‌ பேச்சை நிராகரிக்கவே இந்தக்‌ கோட்பாட்டை உருவாக்கினர்‌.

அல்லாஹ்‌ ஆதம்‌ நபியை அழைத்துப்‌ பேசினான்‌; ஷைத்தானுடன்‌ உரையாடினான்‌; மூசா நபியுடன்‌ பேசினான்‌; வானவர்களுடன்‌ பேசுகின்றான்‌ போன்ற தெளிவான செய்திகள்‌ திரிபுபடுத்தப்படுவது பற்றி நாம்‌ சிந்திக்க வேண்டும்‌.

உலகத்தில்‌ மரத்தில்‌ பேச்சைப்‌ படைத்தான்‌ என்று ஏற்றுக்‌ கொண்டாலும்‌ வானவர்களோடு பேசுகின்ற போது வானில்‌ எந்த மரத்தில்‌ படைப்பானோ தெரியவில்லை.

மெளலவி அமீனுத்தீன்‌ ஸாஹிர்‌ தமது நூலின்‌ அடிக்குறிப்பில்‌ அல்லாஹ்வின்‌ -கலாம்‌- பேச்சு பற்றி வந்துள்ள ஹதீஸ்கள்‌ பலவீனமானவை என்ற ஓர்‌ வாதத்தை வழிகெட்ட ஸக்காஃபின்‌ வரிகளில்‌ முன்வைத்துள்ளார்‌. அதாவது ஸக்காஃப்‌ கூறிய காரணத்தை இவரும்‌ கூறுகின்றார்‌.

அல்லாஹ்‌ மறுமையில்‌ அடியார்களை எழுப்புவான்‌. சமீபத்தில்‌ இருப்பவர்‌ போன்று தூரமாக இருப்பவரும்‌ செவிமடுக்கின்ற சப்தத்தின்‌ மூலம்‌ அவன்‌ அவர்களை அழைப்பான்‌ என்று நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

இந்தச்‌ செய்தி புகாரீயில்‌ தஃலீக்‌ தரத்தில்‌ அமைந்த செய்தியாக 6926 இலக்கமாக மறுமை தொடர்பான குர்‌ஆன்‌, மற்றும்‌ ஹதீஸ்களுடன்‌ இணைத்து இடம்‌ பெற்றுள்ளது.

மேலும்‌ இந்தச்‌ செய்தி, அல்முஃஜமுத்தபரானீ‌, ஷரஹுஸ்ஸுன்னா, மற்றும்‌ முஸ்தத்ரக்‌ அல்ஹாகிம்‌, இமாம்‌ புகாரியின்‌ ஹல்கு அஃப்‌ஆலீல்‌ இபாத்‌ ஆகிய நூல்களிலும்‌ இடம்‌ பெற்ற ஸஹீஹான செய்தியாகும்‌.

அல்லாஹ்‌ அடியார்களோடு உரையாடும்‌ மேற்கண்ட ஆதாரப்பூர்வமான செய்தியை இவர்‌ அப்பட்டமாக மறுத்துரைத்துள்ளார்‌. தமது அடிக்குறிப்பில்‌ பித்‌அத்வாதிகள்‌ (சலஃபுகள்‌) அல்லாஹ்வின்‌ பேச்சுக்கு மூன்று ஹதீஸ்களை ஆதாரமாகக்‌ கொள்கின்றனர்‌ எனக்‌ குறிப்பிட்டு அம்மூன்று செய்தியையும்‌ வரிசைப்படுத்துகின்றார்‌.

அதில்‌ முதலாவது ஹதீஸாக மேற்கண்ட ஹதீஸை முன்வைத்து அதனை இமாம்‌ புகாரீ அவர்கள்د ابعلا لاعفأ قلخ என்ற நூலில்‌ இதைப்‌ பதிவு செய்துள்ளதாகக்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

இவரது வாதம்‌:

(1) இந்த ஹதீஸின்‌ அறிவிப்பாளர்‌ தொடரில்‌ இடம்‌ பெற்றுள்ள

عبدالله بن محمد بن عقيل என்பவர்‌ மிகவும்‌ பலவீனமானவர்‌;
அவரை ஆதாரத்திற்குக்‌ கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்‌.

(2) இந்த அறிவிப்பில்‌ இடம்‌ பெற்றுள்ள மற்றோர்‌ அறிவிப்பாளரான அல்காசிம்‌ பின்‌ அப்தில்‌ வாஹித்‌ என்பவரை இப்னு ஹிப்பான்‌ அவர்கள்‌ ஆதாரமாகக்‌ கொள்ள முடியாது என்றும்‌ சுட்டிகாட்டி இருக்கின்றார்‌.

மறுப்பு:

(1) இது அப்துல்லாஹ்‌ பின்‌ உனைஸ்‌ (ரழி) அவர்களின்‌
அறிவிப்பாக புகாரீ‌, முஃஜமுத்தபரானீ‌, முஸ்தத்ரக்‌ அல்ஹாகிம்‌ போன்ற நூல்களில்‌ இடம்‌ பெற்றுள்ளது.

(2) இவ்விருவர்‌ பற்றியும்‌ அறிஞர்களின்‌ நூல்களில்‌ ஆராய்கின்ற போது இவரது ஆய்வில்‌ குறைபாட்டையும்‌, ஓர்‌ தலைப்பட்சமான பார்வையையும்‌ நமக்கு உணர்த்துகின்றது.

பல அறிஞர்களின்‌ கருத்தில்‌ எது இவர்களுக்குச்‌ சாதகமானதாக இருந்ததோ அதை மட்டும்‌ எடுத்து அந்த ஹதீஸை மறுத்துள்ளார்‌.

இவ்விருவர்‌ பற்றிய தேடலில்‌ மற்றவர்களுடன்‌ இணைந்து வருகின்ற போது இவர்கள்‌ ஆதாரத்திற்கு‌ கொள்ள முடியுமானவர்கள்‌ என்றும்‌, சில அறிவிப்பாளர்‌ வரிசையில்‌ தனித்து வருகின்ற போது ஆதாரத்திற்குக்‌ கொள்ள முடியாதவர்கள்‌ என்றும்தான்‌ அறிஞர்கள்‌ முடிவு செய்கின்றனர்‌.

“நான்‌ யாருக்குப்‌ பொறுப்பாளராக இருந்தேனோ, அவருக்கு அலீயும்‌ பொறுப்பாளராவார்‌” என்ற ஹதீஸ்‌ அறிவிப்பிலும்‌ இந்த “அப்துல்லாஹ்‌ பின்‌ முஹம்மத்‌ பின்‌ அகீல்‌” இடம்‌ பெறுகின்றார்‌.

பார்க்க: )سير أعلام النبلاء - )8 /335 

இவரது அறிவிப்பை விலாயத்‌ விஷயத்தில்‌ ஆதாரமாகக்‌ கொள்கின்ற ஷீஆப்‌ பிரிவைச்‌ சேர்ந்த ஸக்காஃப்‌ என்பவர்‌ அலீ (ரழி) அவர்கள்‌ சிறப்புப்‌ பற்றிய இந்தச்‌ செய்தியை ஆதாரமாக எடுக்கின்றார்‌. அதே வேளை அல்லாஹ்வின்‌ பேச்சு தொடர்பாக வருகின்ற மேற்படி செய்தியை மறுக்கின்றார்‌. இதன்‌ இரகசியம்‌ என்ன? அல்லாஹ்வின்‌ பேச்சு என்ற பண்பு அந்த ஹதீஸில்‌ உள்ளடங்கி உள்ளது. அதனை ஏற்பதால்‌ அல்லாஹுவுக்குப்‌ பேச்சு என்ற பண்ணை சலஃபுகள்‌ நிலைப்படுத்தியாக வேண்டும்‌ என்ற நிர்ப்பந்தம்‌ ஏற்படும்‌. அதனால்‌ அதனை மறுக்கின்றார்‌.
இது இவரது உச்சக்கட்ட மனோ இச்சையாகும்‌ என்பதை நாம்‌ சிந்திக்க வேண்டும்‌.

சரி, சகோதரர்‌ அமீனுத்தீன்‌ ஸாஹிர்‌ அவர்கள்‌ குறிப்பிடுவது போன்று இந்தச்‌ செய்தி இவரது ஆய்வினால்‌ கண்டுபிடிக்கப்பட்டதா என்றால்‌? இல்லை. நாம்‌ ஏற்கெனவே சுட்டிக்காட்டிய ஜோர்டானியக்‌ கப்பலின்‌ சரக்கு என்பது தெளிவாகின்றது.

இது பற்றிய தெளிவான விளக்கத்தை சவூதி அரேபியா கஸீமைச்‌ சேர்ந்த நவீன முஹத்திஸ்களுள்‌ ஒருவர்‌ என அறியப்படும்‌ ஷேக்‌ நாஸிர்‌ அல்வான்‌ அவர்கள்‌ ஸக்காஃபின்‌ دفعالتشبي என்ற நூலுக்கு எழுதிய மறுப்புரை மூலம்‌ அறிந்து கொள்ள முடிகின்றது.

சகோதரர்‌ அமீனுத்தன்‌ முன்வைக்கின்ற அனைத்துக்‌ காரணங்களையும்‌ ஸக்காஃப்‌ முன்வைத்திருக்கின்றார்‌. அதனால்‌ ஸக்காஃபுக்கான ஷேக்‌ அல்வான்‌ அவர்களின்‌ மறுப்பையே அமீனுத்தீனுக்குரிய மறுப்பாக நாம்‌ முன்வைத்துள்ளோம்‌.

ஸக்காஃபுக்கான ஷேக்‌ நாஸிர்‌ அல்வான்‌ அவர்களின்‌ மறுப்பு:

1- இதை புகாரீ மட்டும்‌ அறிவிக்கவில்லை. மாறாக இமாம்‌ அஹ்மத்‌ அவர்களும்‌ தமது முஸ்னதில்‌ ஹும்மாம்‌ பின்‌ யஹ்யா என்பவர்‌ அல்காசிம்‌ பின்‌ அப்தில்‌ வாஹித்‌ அல்மக்கீ என்பவரிடம்‌ இருந்தும்‌, அவர்‌ அப்துல்லாஹ்‌ பின்‌ முஹம்மத்‌ பின்‌ அகீல்‌ இடமிருந்தும்‌, இப்னு அகீல்‌ ஜாபிர்‌ (ரழி) அவர்களிடம்‌
செவிமடுத்ததாகவும்‌ அறிவித்துள்ளார்கள்‌.

இப்னு அகீல்‌ பற்றி இமாம்‌ புகாரீ (ரஹ்‌) அவர்கள்‌ “இவர்‌ ஹதீஸை எடுத்துக்‌ கொள்ள நெருக்கமானவர்‌”
என்று குறிப்பிட்டுள்ள வார்த்தையை மதிப்பீடு செய்துள்ள ஹதீஸ்கலை அறிஞர்கள்‌ இமாம்‌ புகாரீ அவர்கள்‌ அவரது அறிவிப்பை மறுக்கவில்லை என்பதற்கான ஆதாரமாகும்‌ எனச்‌ சுட்டிக்காட்டியுள்ளதோடு, இவரது ஹதீஸ்‌ ஹசன்‌ தரத்தில்‌ அங்கீகரிக்க முடியுமானது என்பதும்‌ அறிஞர்களால்‌ சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இமாம்களான அஹ்மத்‌, இஸ்ஹாக்‌ பின்‌ இப்ராஹிம்‌, ஹுமைதீ போன்ற அறிஞர்கள்‌ இவரை ஆதாரமாகக்‌ கொண்டதாக இமாம்‌ திர்மிதீ அவர்கள்‌ தமது ஜாமிஃ கிரந்தத்தில்‌ சுட்டிக்காட்டி இருப்பதையும்‌ கவனத்தில்‌ கொண்டு ஸக்காஃப்‌ கூறுவது போன்று அவர்‌ ஆதாரத்திற்குக்‌ கொள்ள முடியாதவர்‌ அல்ல என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்ளவும்‌.

காசிம்‌ பின்‌ அப்தில்‌ வாஹித்‌ என்ற அறிவிப்பாளரை இப்னு ஹிப்பான்‌(ரஹ்‌) அவர்கள்‌ “நம்பகமானவர்‌” என்று குறிப்பிட்டிருக்க அவர்‌ நம்பகமற்றவர்‌ எனக்‌ கூறியதாகப்‌ பொய்யுரைத்துள்ள ஸக்காஃபின்‌ பொய்‌ பற்றி அறியாத சகோதரர்‌ அமீனுத்தீன்‌ அவர்களின்‌ நிலை பற்றி என்னவென்பது!

அப்துல்லாஹ்‌ பின்‌ அஹ்மத்‌ கூறுகின்றார்‌:

எனது தந்தையிடம்‌ : “அல்லாஹ்‌ மூசா நபியுடன்‌ பேசியது சப்தம்‌ இல்லாமலாமே” என ஒரு கூட்டத்தினர்‌ பேசிக்கொள்வது பற்றிக்‌ கேட்டபோது எனது தந்‌தை அவர்கள்‌: 
அவ்வாறன்று, “கண்ணியமிக்க உமது இரட்சகன்‌ சப்தத்துடன்தான்‌ பேசினான்‌. இந்த ஹதீஸ்கள்‌ வந்திருப்பது போன்றுதான்‌ நாம்‌ அவற்றை அறிவிப்போம்‌” எனக்‌ குறிப்பிட்டதாக இமாம்‌ அஹ்மத்‌ அவர்களது மகன்‌ அப்துல்லாஹ்‌ குறிப்பிடுகின்றார்‌:

கண்ணியமிக்க அல்லாஹ்‌ வானவர்களோடு பேசுகின்ற போது சங்கிலியை வெண்ணிறக்‌ கல்மீது இழுப்பதால்‌ ஏற்படும்‌ (சலங்கைச்‌) சப்தம்‌ ஏற்படும்‌ என்ற இப்னு மஸ்‌ஊத்‌ அவர்களின்‌ அறிவிப்பை அப்துல்லாஹ்‌ (ரஹ்‌) அவர்கள்‌ அறிவித்துள்ளார்கள்‌.
(பார்க்க: இமாம்‌ அஹ்மத்‌ அவர்களின்‌ அஸ்ஸுன்னா)

ஹில்யாவின்‌ ஆசிரியரான இமாம்‌ அபூ நயீம்‌ அல்‌அஸ்‌ஃபஹான்‌ அவர்கள்‌ அல்குர்‌ஆன்‌ பற்றிக்‌ குறிப்பிடுகின்ற போது :

நிச்சயமாக அல்குர்‌ஆன்‌ ஓதப்படுதல்‌, பாதுகாக்கப்படுதல்‌, செவியுறப்படுதல்‌, எழுதப்படல்‌, மொழியப்படுதல்‌ ஆகிய எல்லாவகையிலும்‌ அல்லாஹ்வின்‌ யதார்த்தமான வார்த்தையாகும்‌. ஆனால்‌ அதை எடுத்து வாயால்‌ கூறும்‌ போதோ, அல்லது மொழிபெயர்க்கும்‌ போதோ அல்ல எனக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌. இந்தக்‌ கருத்துகளையும்‌ அஷ்‌அரிய்யாக்கள்‌ சிந்திக்கக்‌ கடமைப்பட்டுள்ளனர்‌.

சகோதரர்‌ அமீனுத்தீன்‌ அவர்கள்‌ அல்லாஹ்‌ ஆதம்‌ நபியுடன்‌ பேசுதல்‌, அடியார்களோடு பேசுதல்‌ போன்ற புகாரீயில்‌ இடம்‌ பெற்றுள்ள அறிவிப்புகளை அவை ஸஹீஹான செய்திதான்‌; ஆனால்‌ பித்‌அத்வாதிகள்‌ கூறுவது போன்று அல்லாஹ்‌ பேசுவது அல்ல. மாறாக வானவர்கள்‌ பேசுதல்‌ எனப்‌ பொருள்‌ மாற்றம்‌ செய்து அதில்‌ ஆதாரம்‌ இல்லை என்று (ஆதாரம்‌ இல்லாமல்‌)
தமது அறிவீனத்தை வெளிப்படுத்தியுள்ளார்‌.

இவரோடு ஹிஷாம்‌ ஃபத்தாஹ்‌ என்பவரையும்‌ இணைத்துக்‌ கொள்ள முடியும்‌. இவர்‌ அஷ்‌அரிய்யாக்களின்‌ கருத்துகளை ஸக்காஃபின்‌ கருத்துகள்‌ ஊடாக நிறுவ முயற்சிக்கின்றார்‌.

இவருடைய அறியாமைக்கு ஸக்காஃபாவின்‌ பின்வரும்‌ நூல்கள்‌ முக்கியமாகத்‌ துணை நின்றிருப்பது தெரியவருகின்றது.

1 إلقاء الحجر

2 دفع شبه التشبيه

3 شرح العقيدة الطحاوية மற்றும்‌ பல நூல்கள்‌.

இவர்‌ தமது நூலுக்கு: “அல்புர்கான்‌ ஃபிர்ரத்தி அலா மன்‌ யுஸ்ஃ‌பிது வில்லாஹில்‌ மகான்‌, வல்‌அர்கான்‌” எனப்‌ பெயரிட்டு வெலிகம ளஃபர்‌ மதனீ என்பவருக்கும்‌, சலஃபிய வஹ்ஹாபிகளுக்கு மறுப்பாகவே வெளியிடுவதாகத்‌ தமது கருத்தை அவரது முன்னுரையில்‌ பதிவு செய்துள்ளார்‌. இதற்கு ஸக்காஃபின்‌ வசன நடைகளைத்‌ தாராளத் தன்மையோடு உபயோகித்திருக்கின்றார்‌.

இவர்‌ தமது சரக்குகளை ஜோர்டான்‌ துறைமுகத்தில்‌ இருந்தே நூறுவீதம்‌ இறக்குமதி செய்திருக்கின்றார்‌. இதற்குப்‌ பலர்‌ ஆக்கமும்‌ ஊக்கமும்‌ அளித்ததாக அவர்‌ தமது நூலின்‌ முன்னுரையில்‌ சுட்டிக்காட்டியுள்ளார்‌.

குர்‌ஆன்‌,சுன்னாவில்‌ இருந்து ஆதாரம்‌ எதையும்‌ முன்வைத்ததாக நம்மால்‌ அறிய முடியவில்லை. மாறாக யார்‌யாரோ என்னென்னவோ சொன்னார்கள்‌ என்ற நிலையில்‌ தமது வாதங்களை முன்வைத்துள்ளார்‌.

அதனை வாசிக்கின்ற போது ஜஹ்மிய்யாக்கள்‌ முதல்‌ மாத்ரூதிய்யாக்கள்‌, பிற்கால அஷ்‌அரிய்யாக்கள்‌ போன்றோர்‌ வரை தோன்றியுள்ள பிரிவுகளின்‌ கருத்துகளை சக்காஃபின்‌ ஊடாகச்‌ சரிகண்டு அவர்‌ தமது வாதங்களை முன்வைக்கின்றார்‌.

நமது கேள்வி?

இப்போது நமது கேள்வி என்னவென்றால்‌ மறுமையில்‌ அல்லாஹ்வைப்‌ பார்ப்போம்‌, சந்திப்போம்‌ என்று வருகின்ற குர்‌ஆன்‌, சுன்னாவின்‌ ஆதாரங்களை என்ன செய்வது? அது உண்மையானதா? அல்லது பொய்யானதா? மறுமையில்‌ அல்லாஹ்வைச்‌ சந்திப்போம்‌, பேசுவோம்‌ என்று வருகின்றதே அப்படியானால்‌ அல்லாஹ்‌ புதிய உருவம்‌ எடுத்து வருவானா? புதியது என்பது அல்லாஹ்வுக்குரியதா? படைப்பினங்களுக்கு உரியதா? இது பற்றிக்‌ கொஞ்சம்‌ சிந்தித்தால்‌ சத்தியம்‌ ஒரு நாள்‌ புலப்படும்‌ இன்ஷா அல்லாஹ்‌.

அல்லாஹ்வின்‌ பேச்சுப்‌ பற்றிய இமாம்‌ புகாரீயின்‌ தலைப்பு:

இமாம்‌ புகாரீ (ரஹ்‌) அவர்கள்‌ அவர்களின்‌ கிரந்தத்தில்‌
“மறுமையில்‌ நபிமார்களோடும்‌, மற்றவர்களோடும்‌ கண்ணியமிக்க அல்லாஹ்வின்‌ பேச்சுப்‌ பற்றிய பாடம்‌ எனத்‌ தலைப்பிட்டுள்ளார்கள்‌. அதில்‌:

அல்லாஹ்‌ மறுமையில்‌ அடியார்களோடு பேசுதல்,‌ அடியான்‌ அல்லாஹ்வோடு உரையாடுதல்‌ போன்ற ஆதாரப்பூர்வமான பல நபிமொழிகளைப்‌ பதிவு செய்து அல்லாஹ்வுக்கென யதார்த்தமான பேச்சு உண்டு என்பதை அந்த அத்தியாயத்தில்‌ உறுதி செய்துள்ளார்கள்‌.

உதாரணங்கள்‌:

அல்லாஹ்விடம்‌ சிபாரிசு வேண்டும்‌ நபி (ஸல்‌) அவர்களோடு..

முஹம்மதே! உமது தலையை உயர்த்துங்கள்‌;
மன்றாடுங்கள்‌; அதற்காக பதில்‌ தரப்படும்‌; கேளுங்கள்‌; வழங்கப்படுவீர்‌! பரிந்துரை செய்வீர்‌ பரிந்துரைக்கு அங்கீகாரம்‌ வழங்கப்படுவீர்‌! (புகாரீ, 4343, 6080, 6086) ஆகிய இலக்கங்கள்‌

சுவர்க்கவாதிகளில்‌ இறுதி மனிதன்‌ அல்லாஹ்வுடன்‌ உரையாடுவது. அல்லாஹ்‌ அவனுடன்‌ உரையாடுவது பற்றி வந்துள்ள நபிமொழிகள்‌.

சுவர்க்கவாதிகள்‌ அல்லாஹ்வுடன்‌ உரையாடி நான்‌ எனது பொருத்தத்தை உங்கள்மீது இறக்கி (ஹலாலாக்கி) விட்டேன்‌. எனவே நான்‌ இதன்‌ பிறகு என்றுமே உங்கள்‌ மீது கோபிக்க மாட்டேன்‌ என அறிவிப்பான்‌. (புகாரீ, 6067, 6964, முஸ்லிம்‌, 5057)

மறுமையில்‌ அடியார்களோடு அல்லாஹ்‌ நேரடியாக உரையாடுதல்‌.

"மறுமை நாளில்‌ உங்களுள்‌ ஒருவரும்‌ தம்‌ இரட்சகனோடு உரையாடாது இருக்கமாட்டார்‌. அவருக்கும்‌ அவருடைய இரட்சகனுக்கும்‌ இடையில்‌ எந்த மொழிபெயர்ப்பாளரும்‌ இருக்கமாட்டார்‌. (புகாரீ, 6889, 6958 முஸ்லிம்‌, 1688).

மற்றோர்‌ அறிவிப்பில்‌: “அல்லாஹ்வுக்கும்‌ அடியானுக்கும்‌ இடையில்‌ யாதொரு திரையோ, மொழிபெயர்ப்பாளரோ இல்லாதிருக்கின்ற போது அல்லாஹ்‌ அடியானுடன்‌ பேசுவான்‌: என்று இடம்‌ பெற்றிருப்பதைப்‌ பார்க்கின்றோம்‌.

“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி. ஒன்று அவன்‌ நோன்பு திறக்கின்ற போது ஏற்படும்‌ மகிழ்ச்சி, மற்றது. அவன்‌ தன்‌ இரட்சகனைச்‌ சந்திக்கின்றபோது” என்ற செய்தியில்‌ (புகாரீ, 1945) இல்‌ இடம்‌ பெற்றுள்ளது.

அல்லாஹ்வின்‌ சந்திப்பை உணர்த்துகின்ற அல்குர்‌ஆனிய வசனங்கள்‌.

நபியே! நீர்‌ கூறுவீராக! நானும்‌ உங்களைப்‌ போன்ற ஒரு மனிதரே! வணங்கிவழிபடத்தகுதியான உங்கள்‌ இரட்சகன்‌ ஒருவனே! எனவே யார்‌ தன்‌ இரட்சகனின்‌ சந்திப்பை ஆதரவு வைக்கின்றாரோ அவர்‌ நல்ல செயல்களைச்‌ செய்து கொள்வதோடு தன்‌ இரட்சகனுக்கு வணக்கம்‌ புரிவதில்‌ யாரையும்‌ இணையாக்க வேண்டாம்‌. (அல்கஹ்‌ஃப்‌: 110).

“எவர்கள்‌ அல்லாஹ்வின்‌ சந்திப்பைப்‌ பொய்ப்பித்தார்களோ நிச்சயமாக அவர்கள்‌ நட்டமடைந்து விட்டனர்‌” (அல்‌ அன்‌ஆம்‌: 31)

யார்‌ அல்லாஹ்வைச்‌ சந்திக்க விரும்புகின்றாரோ அல்லாஹ்வும்‌ அவரைச்‌ சந்திக்க விரும்புகின்றான்‌ (புகாரீ, முஸ்லிம்‌)

மறுமையில்‌ அல்லாஹ்வின்‌ சந்திப்பை உறுதிப்படுத்துகின்ற நூற்றுக்கணக்கான அல்குர்‌ஆனிய வசனங்கள்‌, மற்றும்‌ பல நூறு நபிமொழிகள்‌.

இவர்கள்‌ நம்பிக்கை கொள்வது போன்று அல்லாஹ்‌ உருவமற்றவனாக, ஒன்றுமில்லாதவனாக இருப்பின்‌ அவனை எவ்வாறு பார்க்க முடியும்‌? சந்திக்க முடியும்‌? அவனுடன்‌ எப்படிப்‌ பேசுவது? அவனது பேச்சு எப்படி அடியார்களை வந்தடையும்‌? போன்ற பல கேள்விகள்‌ எழுகின்றனவே!

ஒரு முஸ்லிமிடம்‌ இவ்வாறான நம்பிக்கை காணப்பட முடியுமா? என்ற கேள்வி எழுகின்றபோது அல்லாஹ்‌ அல்குர்‌ஆனில்‌ அறிவித்துத்‌ தந்தது போன்று அவன்‌ தனக்குரிய அழகிய தோற்றத்தோடு இருப்பான்‌ என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்‌. இல்லை அவன்‌ ஒரு ஐஹ்மியாக, முஃதஸிலியாக, நாத்திகனாக இருக்கின்ற நிலை உருவாகும்‌.

எனவே அகிலங்களின்‌ அதிபதியாகிய அல்லாஹ்வுக்கென அழகிய, நம்மால்‌ வர்ணிக்க முடியாத ஒரு தோற்றம்‌, அழகிய உருவம்‌ நிச்சயம்‌ அவனுக்குண்டு என்பதில்‌ சந்தேகமில்லை.


அகீதாக்‌ கோட்பாட்டின்‌ யதார்த்த நிலைகள்‌

1- அகீதாக்‌ கோட்பாடு என்பது அல்குர்‌ஆன்‌, அஸ்ஸுன்னாவில்‌ இருந்து பெறப்படுவதாகும்‌. எனவே அதற்குரிய வியாக்கியானங்கள்‌ தனிமனிதச்‌ சிந்தனைகள்‌, அனுமானங்கள்‌ போன்றவற்றில்‌ இருந்து பெறுவது முற்றிலும்‌ விலக்கப்பட்டுள்ளது.

2- அல்லாஹ்வின்‌ செயல்‌ சார்ந்த, அல்லது நிலையான அவனது பண்புகள்‌ பற்றி நபித்தோழர்கள்‌ அறியாதவர்களாக இருக்கவில்லை. “அன்‌ஃபால்‌” (போரில்‌ கிடைக்கப்‌ பெறும்‌ பொருட்கள்‌) “யதாமா” (அநாதைகள்‌), “அஹில்லா” (குலைப்பிறைகள்‌) “ஹம்ர்‌” (மது), “மைசிர்‌” (சூது), “ஹைள்‌” (மாதவிடாய்‌) போன்ற அம்சங்கள்‌ பற்றி நபி (ஸல்‌) அவர்களிடம்‌ கேட்டவர்கள்‌ அல்லாஹ்வின்‌ ஸிஃபத்துகள்‌ பற்றிக்‌ கேட்டிருக்க வேண்டும்‌.

அவ்வாறு கேட்காமல்‌ விட்டிருப்பதில்‌ இருந்து அதன்‌ யதார்த்தம்‌ எதுவோ அதுவே அவற்றின்‌ பொருளாகும்‌ என்பதை அவர்களின்‌ நிலைப்பாடு விளக்குகின்றது.

3- சான்றாதாரங்களான அல்குர்‌ஆன்‌, சுன்னாவில்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளாக இடம்‌ பெற்றுள்ள கை, முகம்‌, பாதம்‌, கண்கள்‌ போன்றவற்றை ஒருவர்‌ அல்லாஹ்வுக்கு இருப்பதாகக்‌ கூறினால்‌ அவை படைப்பினங்களுக்கும்‌ இருப்பதால்‌ அவர்‌ அல்லாஹ்வுக்குக்‌ குறிப்பிட்ட அப்பண்பில்‌ உருவம்‌ கற்பித்தவராகமாட்டார்‌.

ஏனெனில்‌ அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ பூரணத்துவமானவையாகும்‌. மனிதப்‌ பண்புகள்‌ குறைபாடுகள்‌ நிறைந்ததும்‌. நிரந்தத்தன்மை அற்றவையுமாகும்‌.

ஆனால்‌ அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ அவ்வாறானவை அல்ல. அவனது எந்தப்‌ பண்பிலும்‌ மனிதர்களோ, ஏனைய அவனது படைப்புகளோ கூட்டுச்‌ சேர முடியாது.

4- மக்கள்‌ அகீதா, மற்றும்‌ தவ்ஹீத்‌ அம்சங்கள்‌ தொடர்பான விஷயங்களில்‌ கருத்து முரண்படுவதற்கான முக்கியக்‌ காரணியாக அவர்கள்‌ அல்குர்‌ஆனில்‌ இருந்தும்‌, நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ பொன்மொழிகளில்‌ இருந்தும்‌, சரியான அரபி மொழி அறிவில்‌ இருந்தும்‌ தூரமாகி இருப்பதோடு, தபரீ, இப்னு கஸீர்‌, அல்பஃகவீ, அபூஹாதம்‌ போன்ற அறிஞர்களின்‌ தஃப்சீர்‌ ஆசிரியர்களினதும்‌, புகாரீ‌, முஸ்லிம்‌, திர்மித்‌ போன்ற ஹதீஸ்கலை அறிஞர்களினதும்‌ சிந்தனைகள்‌ பற்றிய நிலைப்பாடும்‌ மற்றொரு காரணியாகும்‌.

5- இஸ்லாமிய உம்மத்‌ தன்‌ இரட்சகன்‌ விஷயத்தில்‌ அஸ்மா ஸிஃபாத்‌ கோட்பாட்டில்‌ அவனை அவனது தகுதிக்குத்‌ தோதுவாக ஆண்டாண்டுகாலம்‌ நம்பியே வந்தது.

எப்போது இந்த உம்மத்தில்‌ கிரேக்கச்‌ சிந்தனை ஊடுருவி, கிரேக்கக்‌ நூல்களின்‌ மொழியாக்கமும்‌ புகுத்தப்பட்டதோ அப்போதிருந்தே கிரேக்கத்தின்‌ கடவுள்‌ பற்றிய கோட்பாடும்‌, அதன்‌ மொழிநடையும்‌, அவர்கள்‌ கையாளும்‌ கலைச்‌ சொற்களும்‌ இதனுள்ளும்‌ செல்வாக்குச்‌ செலுத்த ஆரம்பித்தன. அதனால்‌ அவை காலப்போக்கில்‌ இஸ்லாமியச்‌ சொற்பிரயோகங்களை மிகைக்கத்‌ தொடங்கின.

உதாரணமாக அல்லாஹ்வை உலகை இயக்கும்‌ சக்தி என அழைத்தல்‌, அவன்‌ அர்ஷில்‌ மீதிருப்பதை விடுத்து அவனுக்கு திசை, இடம்‌ போன்றதைக்‌ கற்பித்தல்‌ போன்ற சுன்னாவில்‌ வராத  சொற்பிரயோகங்கள்‌ பாவனைக்கு வந்ததையும்‌, பகுத்தறிவைக்‌ கொண்டு இஸ்லாமியச்‌ சான்றுகளை அணுகும்‌ புதிய முறையையும்‌ குறிப்பிட முடியும்‌.

அல்லாஹ்வின்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ கோட்பாட்டில்‌ முன்னோர்கள்‌ கொண்டிருந்த நம்பிக்கைக்கு முரணான சொற்பிரயோகங்கள்‌ மிகவேகமாக ஊடுருவின.

அதன்‌ விளைவாக அஸ்மா ஸிஃபாத்தில்‌ பல முரண்பாடுகள்‌, சிக்கல்கள்‌, குளறுபடிகள்‌ எழுந்தன. இறை வசனங்கள்‌ திரிபுபடுத்தப்பட்டன; பகுத்தறிவைக்‌ கொண்டு ஹதீஸ்கள்‌ மறுக்கப்பட்டன. குர்‌ஆனுக்கு முரண்படுவதாகக்‌ காரணம்‌ காட்டி பல நபிமொழிகள்‌ நிராகரிக்கப்பட்டன.

ஹதீஸ்கள்‌ பலவற்றை “ஆஹாத்‌” வகை சார்ந்தவை என்ற புதிய வாதத்தை முன்வைத்து அகீதாவில்‌ அவற்றை அங்கீகரிக்க முடியாது என்ற புதிய கோட்பாடு தோற்றுவிக்கப்பட்டது.

இதனால்‌, ஆண்டாண்டு காலம்‌ நம்பி, நடைமுறைப்‌படுத்தப்பட்டு வந்த பல நபிமொழிகள்‌ ஓரங்கட்டப்பட்டன; உதாசீனப்படுத்தப்பட்டன; கிண்டல்‌ செய்யப்பட்டன.

ஒவ்வொரு பிரிவும்‌ தமக்கென ஒரு கோட்பாட்டைத்‌ வகுத்துக்‌ கொண்டு, தாமே சரியான பாதையில்‌ நடப்பவர்கள்‌ என்ற வாதப்‌ பிரதிவாதங்களில்‌ ஈடுபட்டன.. (இப்பகுதி அபூ ரம்லா முஹம்மத்‌ அல்மன்சூர்‌ என்ற ஆய்வாளரின்‌ استواء الله على العرش بين تسليم السلف وتأويل الخلف என்ற ஆய்வின்‌ முன்னுரையிலி‌ருந்து சிறு மாற்றத்துடன்‌ தரப்படுகின்றது)

இஸ்தவா, இஸ்திவாஃ ஆகிய சொற்களின்‌ பொருள்‌
விளக்கம்‌

அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதிருப்பதை அவனது தகுதிக்குத்‌ தோதுவாக நம்பி, உறுதி செய்கின்ற அஹ்லுஸ்ஸுன்னாப்‌ பிரிவினர்‌.

அல்லாஹ்‌ அர்ஷிலும்‌ இல்லை, அகிலத்தின்‌ உள்ளேயும்‌ இல்லை, வெளியிலும்‌ இல்லை, எங்கும்‌ இல்லை எனக்‌ கூறி அல்லாஹ்வை எங்கும்‌ இல்லாதவனாகவும்‌, இருப்பவனாகவும்‌ பிரச்சாரம்‌ செய்யும்‌ பிற்காலத்தவர்‌ ஆகிய இரு பிரிவினருக்கும் இடையில்‌ இந்த இஸ்திவாஃ அல்லது இஸ்தவா என்ற சொல்லை அடிப்படையாக ஒட்டிய விளக்கம்‌ காரணமாக இருப்பதை மறுக்க முடியாது.

அதுவே அல்லாஹ்‌ எங்கிருக்கின்றான்‌ என்ற கேள்வியின்‌ சரியான பதிலுக்கு அச்சாணியாகவும்‌, அதன்‌ தவறான விளக்கம்‌ அத்வைதத்தின்‌, அல்லது ஐஹமிய்யாச்‌ சிந்தனையின்‌ வாயிலாகவும்‌ அமைவதால்‌ அகீதாவாதியான முஃமினின்‌ பார்வையில்‌ இஸ்தவா, இஸ்திவாஃ பற்றிய தெளிவு அவசியமாகின்றது. அது அல்லாஹ்‌ அர்ஷின் மீதிருப்பதை உறுதி செய்கின்ற அடிப்படை நம்பிக்கையாகும்‌.

இஸ்தவா என்ற சொல்‌ அரபுகளிடம்‌ என்ன பொருள்‌ கொண்டு பேசப்பட்டுள்ளது. அதை அவர்கள்‌ எவ்வாறு புரிந்து கொண்டார்கள்‌ என்பதை முன்னைய தொடர்களில்‌ சலஃபுகளின்‌ கூற்றின்‌ ஊடாக நாம்‌ அறிந்துள்ளோம்‌.

அதன்‌ பொருள்‌ பற்றிய அறிவு அல்லாஹ்வைச்‌ சந்தேகமற்றவனாக நம்பிக்கை கொள்ள ஏதுவாக அமையும்‌. அஸ்மா, ஸிஃபாத்‌ பெயரில்‌ வழிதவறி அல்லாஹ்‌ எங்கும்‌ இல்லை என்ற தடுமாற்றமான நிலையில்‌ இருந்து ஒரு முஃமின்‌ தன்னைத்‌ தற்காத்துக்‌ கொள்ள உதவும்‌ என்பதைக்‌ காரணமாகக்‌ கொண்டு இஸ்தவா, இஸ்திவாஃ பற்றி இங்கு விளக்கமாகப்‌ பேசப்படுகின்றது.

இதில்‌ நமது சொந்தக்‌ கருத்துகள்‌ எதுவும்‌ இல்லை. இஸ்லாத்தை. குர்‌ஆன்‌, சுன்னாவைத்‌ தெளிவாக அறிந்த, இஸ்லாமிய உலகால்‌ இன்றும்‌ மதிக்கப்படுகின்ற அறிஞர்களின்‌ விளக்கங்களே பதிவு செய்யப்படுகின்றன என்பதை வாசகர்கள்‌ நெஞ்சங்கள்‌ கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌.

இஸ்தவா என்ற சொல்‌ பயன்படுத்தப்பட்டிருக்கும்‌ முறைகள்‌:

“இஸ்தவா” என்ற இறந்த கால அடிப்படைச்‌ சொல்லானது இஸ்திவாஃ என்ற பெயர்‌ வினைச்‌ சொல்லில்‌ இருந்து பிறந்ததாகும்‌. அல்குர்‌ஆன்‌, அல்ஹதீஸில்‌ இதன்‌ கிளைச்‌ சொற்கள்‌ பல இடம்‌ பெற்றிருப்பதைக்‌ காண முடிகின்றது.

அல்குர்‌ஆனில்‌ வானங்கள்‌, மற்றும்‌ பூமியைப்‌ படைத்த பின்னால்‌ வானத்தை நாடினான்‌ என்ற பொருளில்‌ (அல்பகரா:29), (அஸ்ஸஜ்தா 04) (ஃபுஸ்ஸிலத்‌ :11) ஆகிய இடங்களில்‌ பொருள்கொள்ளப்படுகின்றது.

“அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதானான்‌” என்ற வசனத்தில்‌ இஸ்தவா என்ற இறந்த கால வினைச்‌ சொல்‌ பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்குர்‌ஆனில்‌ ஏழு இடங்களில்‌ அது இடம்‌ பெற்றிருப்பது பற்றி முன்னர்‌ சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறந்தகாலத்தைக்‌ குறிக்கின்ற இஸ்தவா என்ற சொல்லின்‌ பெயர்வினைச்‌ சொல்லாகிய இஸ்திவா என்பதற்குரிய பொருளை மொழி அடிப்படையில்‌ அறிஞர்கள்‌ எவ்வாறு விளங்கினார்கள்‌; அல்லாஹ்வுடன்‌ தொடர்படுத்தி எந்த அடிப்படையில்‌ விளக்கினார்கள்‌ என்பது பற்றி நாம்‌ அறிந்து கொள்வதன்‌ மூலம்‌ அகீதாவின்‌ முக்கியப்‌ பகுதியை விளங்கியதாக எடுத்துக்‌ கொள்ள முடியும்‌.

பொருள்‌ விளக்கம்‌:

இஸ்தவா என்ற சொல்லின்‌ பொருளை அரபு அகராதியில்‌ ஆய்வு செய்கின்ற போது அதற்கு பின்வரும்‌ விளக்கங்கள்‌ சுட்டிக்காட்டப்பட்டிருப்பதைக்‌ காண முடியும்‌.

1- العلو / الارتفاع ‌, உயர்வு / உயர்தல்‌.

இக்கருத்தினைத்தான்‌ நூற்றுக்கணக்கான அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள்‌ உறுதி செய்கின்றனர்‌. அந்த வகையில்‌ இஸ்லாமிய அறிஞர்‌ பெருமக்களில்‌ சிலரது கருத்துகள்‌ மட்டும்‌ இங்கு பேசப்படுகின்றன.

இக்கருத்தினை தஃப்சீர்‌ துறைக்கு வழிகாட்டிய முன்னோடி இமாம்‌ என்ற சிறப்பினைப்‌ பெற்ற இமாம்‌ அபூஜஃபர்‌ அத்தபரீ அவர்கள்‌ உறுதி செய்துள்ளார்கள்‌.

“அர்ரஹ்மான்‌ அர்ஷின்‌ மீது உயர்ந்தான்‌” என்ற வசனத்தை விளக்குகின்றபோது,

“அர்ரஹ்மான்‌ அர்ஷின்‌ மீது உயர்வு பெற்றான்‌” என்ற கருத்தைக்‌ கூறி சலஃபுகளின்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ கோட்பாட்டிற்கு உடன்பாடான தனது கருத்தை வெளிப்படுத்தி இருப்பதைப்‌ பார்க்கின்றோம்‌.

2-  الاستيلاء ஆக்கிரமித்தல்‌. 

இக்கருத்தைக்‌ கூறுவோர்‌ “அல்லாஹ்‌ அர்ஷீன்மீது உயர்ந்தான்‌” என்பதற்குப்‌ பதிலாக “அல்லாஹ்‌ அர்ஷை ஆக்கிரமித்தான்‌” என்ற பொருள்‌ தந்தாலும்‌ அது அறிஞர்களால்‌ மறுத்துரைக்கப்பட்டுள்ளது.

“இஸ்தவா: (உயர்ந்தான்‌) என்ற சொல்லுக்கு “இஸ்தவ்லா” ஆக்கிரமித்தான்‌ என்ற பொருள்‌ பற்றி நாம்‌ அறியமாட்டோம்‌ என இமாம்‌ இப்னுல்‌ அஃராபீ என்பவர்‌ குறிப்பிடுவது பற்றி இங்கு சிந்திக்க வேண்டும்‌. (அல்பஹ்றுல்‌ முஹீத்‌)

3- நிலை பெற்றிருத்தல்‌

“நீயும்‌ உம்முடன்‌ இருப்பவர்களும்‌ கப்பலில்‌ சரியாக நிலை பெற்றதும்‌... (அல்முஃமினூன்‌: 28) வது வசனத்‌ தொடரில்‌ இடம்‌ பெற்றுள்ள சொல்லில்‌  استـويت என்ற சொல்லுக்கு விளக்கமாக இமாம்‌ இப்னு குதைபா (ரஹ்‌) அவர்கள்‌ تأويل مختلف الحديث ‌ என்ற அவரது நூலில்‌ குறிப்பிட்டிருப்பதைக்‌ காண முடிகின்றது.

இக்கருத்தை உறுதி செய்கின்ற குர்‌ஆனிய வசனங்களும்‌, ஹதீஸ்களும்‌ இடம்‌ பெற்றிருக்கின்றன.

நீங்கள்‌ அவற்றின்‌ முதுகுகளின்‌ மீது சரியாக (ஏற) அமரவும்‌, உங்கள்‌ இரட்சகனின்‌ அருட்கொடையை நீங்கள்‌ நினைவு கூர்வதற்காகவும்‌ (வாகன வசதியைத்‌ தந்தான்‌). (ஸுக்ருஃப்‌: 13) என்ற வசனத்தில்‌ ஒட்டகத்தில்‌ ஏறிச்‌ சரியாக அமர்வதற்கு இஸ்தவா என்ற சொல்‌ இடம்‌ பெற்றிருப்பதைப்‌ பார்க்கின்றோம்‌.

4- நாட்டம்‌, நாடினான்‌.

இக்கருத்தினை உறுதி செய்ய அதனோடு إلى  என்ற இணைச்‌ சொல்‌ சேர்ந்திருக்க வேண்டும்‌. இக்கருத்தினை உறுதி செய்கின்ற குர்‌ஆன்‌ வசனங்கள்‌ இடம்பெற்றிருப்பது முன்னர்‌ சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

5 முன்னோக்கினான்‌ என்ற கருத்தை இமாம்‌ தபரீ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌.

6- நேர்பெற்றது. நிலையானது. நேரானது, சீரானது.

(அப்பயிர்‌) வளர்ந்து தடித்து இறுக்கமானதாகி, அதனுடைய தண்டின்மீது அதுவாக நிலை பெற்று நேராகியதும்‌(அல்‌ஃபத்ஹ்‌: 29) என்ற வசனத்தில்‌ இடம்‌ பெற்றுள்ள فَاسْتَوٰى என்ற சொல்லின்‌ பொருள்‌ தானாக நிலை பெறுதல்‌ என்ற பொருள்‌ கொள்ளப்பட்டுள்ளது.

(ஜிப்ரீலாகிய அவர்‌), சக்திவாய்ந்தவரும்‌, சீராக அமையப்‌ பெற்ற படைப்புமாகும்‌. (அந்நஜ்ம்‌: 06) என்ற வசனத்தில்‌ சீரானது, நேர்த்தியானது என்ற பொருளில்‌ இடம்‌ பெற்றிருக்கின்றது.

அவர்‌ (மூசா) அவரது (உடல்‌ உளப்‌) பூரணத்‌ தன்மையை (நாற்பதாவது வயதெல்லையை) அடைந்த போது அவருக்கு நாம்‌ ஞானத்தையும்‌, அறிவையும்‌ வழங்கினோம்‌. அவ்வாறே நாம்‌ நல்லவர்களுக்குக்‌ கூலி வழங்குவோம்‌. (அல்கஸஸ்‌: 14) என்பது மனித வளர்ச்சியில்‌ ஏற்படும்‌ உள, உடல்‌ சீரமைப்பைக்‌ குறிக்க இஸ்தவா இடம்‌ பெற்றிருப்பதைப்‌ பார்க்கின்றோம்‌.

நிச்சயமாக அல்லாஹ்‌ ஏழு வானத்திற்கும்‌ மேல்‌ உள்ள அர்ஷின்‌ மீதிருக்கின்றான்‌. அவன்‌ தன்‌ படைப்பினங்களைவிட்டு வேறானவன்‌. அவனது அறிவு அவனது அனைத்துப்‌ படைப்புகளையும்‌ வியாபித்துள்ளது என்று முஸ்லிம்களில்‌ நபித்தோழர்கள்‌, தாபியீன்கள்‌. முஃமின்களில்‌ உள்ள அறிஞர்கள்‌ அனைவரும்‌ ஏகமனதான முடிவு செய்துள்ளனர்‌.


இமாம்‌ பஃகவீ (ரஹ்‌) அவர்கள்

பின்னர்‌ அவன்‌ அர்ஷின்‌ மீதானான்‌ என்பதை விளக்குகின்ற போது அதன்‌ மீது அவன்‌ உயர்வானான்‌ என்ற பொருளைத்‌ தந்துள்ளார்கள்‌.

الحافظ المام أبو عمر الطلمنكي المالكي (429 هـ

அல்ஹாஃபிள்‌ அல்‌இமாம்‌ அபூ உமர்‌ அத்தில்மன்கீ் (மரணம்‌ : ஹிஜ்ரீ: 429)

இமாம்‌ அபூஉமர்‌ அத்தில்மன்கீ அவர்கள்‌ الوصول إلى معرفة ‌ الأصول என்ற நூலில்‌ நீங்கள்‌ எங்கிருந்த போதும்‌ அல்லாஹ்‌ உங்களுடன்‌ இருக்கின்றான்‌. என்ற வசனத்தை விளக்குகின்ற போது அவனது அறிவால்‌ உங்களைச்‌ சூழ்ந்துள்ளான்‌ என விளக்கிய பின்னர்‌,

அல்லாஹ்‌ அவனுக்குரிய உண்மையான தாத்‌ (உள்ளமை அமைப்புடன்‌) அவன்‌ விரும்பியவாறு ஏழு வானங்களுக்கும்‌ மேல்‌ உள்ள தனது அர்ஷின்‌ மீதிருக்கின்றான்‌. அல்லாஹ்‌ தனது அர்ஷின்‌ மீதிருப்பதை அஹ்லுஸ்ஸுன்னாக்கள்‌ யதார்த்தம்‌ எனக்‌ கொள்வார்களே அன்றி, அது சிலேடையானது என்றோ, அல்லது இரு கருத்திற்கு இடமுள்ளது என்றோ பொருள்‌ கொள்ளமாட்டார்கள்‌ எனக்‌ குறிப்பிட்டு, இவ்வாறு குறிப்பிடுவது முஸ்லிம்களின்‌ ஏகோபித்த கருத்தாகும்‌ எனக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌.

இமாம்‌ பஃகவீ (ரஹ்‌) அவர்கள்‌

அல்‌இஃதிகாத்‌ என்ற அவர்களின்‌ கிரந்தத்தில்‌ அல்லாஹ்‌ அர்ஷின் மீதிருப்பதற்குப்‌ பதின்நான்கு திருமறை வசனங்களை மேற்கோள்காட்டிய பின்னர்‌, அனைத்தையும்‌ உயர்ந்ததுதான்‌ அல்லாஹ்வின்‌ அர்ஷ்‌ என்பதைப்‌ பின்வருமாறு நிறுவுகின்றார்கள்‌.

كل ما عل فهو سماء ، والعرش أعلى السماوات ((العتقاد للبيهقي / باب القول في الستواء - (1 / 64

'உயர்ந்தாக இருக்கின்ற அனைத்துக்கும்‌ (சமாவுன்‌) வானம்‌ என்றுதான்‌ பொருள்‌. அர்ஷி என்பது எல்லா வானங்களுக்கும்‌ மேல்‌ உயர்ந்ததாகக்‌ காணப்படுவதாகும்‌ என்று குறிப்பிட்டு தொடர்ந்து விளக்குன்ற போது:

وفيما كتبنا من الآيات دللة على إبطال قول من زعم من الجهمية أن الله سبحانه وتعالى بذاته فيكل مكان ، ((العتقاد للبيهقي - (1 / 66)

"நாம்‌ எடுத்தெழுதிய வசனங்களில்‌ அல்லாஹ்‌ தனது தாத்துடன்‌ (உள்ளமை அமைப்புடன்‌) எல்லா இடங்களிலும்‌ இருக்கின்றான்‌ என்ற ஜஹ்மிய்யாக்களின்‌ கருத்தை முறியடிக்கப்‌ (போதுமான) ஆதாரங்கள்‌ உண்டு” எனக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌. (அல்‌இஃதிகாத்‌ லில்பைஹகீ) மேலும்‌ அவர்கள்‌ இஸ்திவா பற்றிக்‌ குறிப்பிடுகின்ற போது,

...وقالوا : الستواء على العرش قد نطق به الكتاب في غير آية ،  ووردت به الأخبار الصحيحة ، فقبوله من جهة التوقيف واجب ، والبحث عنه وطلب الكيفية له غير جائز ((العتقاد للبيهقي - (1 / 66)

“அல்லாஹ்‌ அர்ஷின்மீதிருத்தல்‌” என்பது பற்றி அல்குர்‌ஆன்‌, ஒன்றுக்கும்‌ மேற்பட்ட பல வசனங்களில்‌ பேசி இருக்கின்றது. ஸஹீஹான ஹதீஸ்களிலும்‌ அது பற்றி வந்துள்ளன. அதை தவ்கீஃப்‌ (வந்திருப்பதைப்‌ போன்று நிலைப்படுத்தும்‌) முறையில்‌ அங்கீகரிப்பது வாஜிப்‌ ஆகும்‌. அது பற்றி ஆய்வு செய்வதும்‌. அதன்‌ முறைமை பற்றி ஆராய்வதோ அனுமதிக்கப்பட்டதல்ல.
(அல்‌இஃதிகாத்‌ லில்பைஹகீ‌)


ஹில்யாவின்‌ ஆசிரியர்‌ அல்ஹாஃபிள்‌ அல்கபீர்‌ அபூ நுஐம்‌ அல்‌அஸ்‌ஃபஹானீ‌ (ரஹ்‌) அவர்கள்‌. (மரணம்‌: ஹிஜ்ரீ: 430)

இமாம்‌ அபூ நுஐம்‌ அல்‌அஸ்ஃபஹானீ (ரஹ்‌) அவர்கள்‌ தமது வழிமுறை பற்றிக்‌ குறிப்பிட்ட போது :

“நமது வழி அல்குர்‌ஆனையும்‌, அஸ்ஸுன்னாவையும்‌, ஆரம்பச்‌ சமூகத்தவரால்‌ ஏகமனதாகத்‌ தீர்மானிக்கப்பட்டவற்றையும்‌, அவர்கள்‌ நம்பிக்கை கொண்டவற்றையும்‌ பின்பற்றுகின்ற சலஃபுகளின்‌ வழியாகும்‌” எனக்‌ குறிப்பிட்ட பின்னர்‌: அல்லாஹ்வின்‌ இஸ்திவா பற்றிப்‌ பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்‌.

وأن الأحاديث التي ثبتت في العرش واستواء الله عليه يقولون بها ويثبتونها من غير تكييف ول تمثيل وأن الله بائن من خلقه والخلق بائنون منه ل يحل فيهم ول يمتزج بهم وهو سبحانه مستو على عرشه في سمائه دون أرضه ) ، . قال الذهبي (فقد نقل هذا المام الجماع على هذا القول ولله الحمد ( أم البراهين .. في الرد التفصيلي على مذهب الأشعرية والماتردية (ل حامد بن عبد الله العلي- (ج 1 / ص 18) என்ற நூலில்‌ இருந்து பெறப்பட்டது.

அல்லாஹ்‌ அவனது அர்ஷின்‌ மீதிருப்பது பற்றியும்‌, அவனது இஸ்திவா பற்றியும்‌ உறுதியாக வந்துள்ள ஹதீஸ்களைக்‌ கொண்டு அவர்கள்‌ போதிப்பார்கள்‌. அவற்றை முறைமை கற்பிக்காது, உதாரணம்‌ கூறாது அவற்றை நிலைப்படுத்துவார்கள்‌. நிச்சயமாக அல்லாஹ்‌ தனது படைப்புகளோடு கலக்காதவனாக இருப்பது போன்று அவனது படைப்புகளும்‌ அவனுடன்‌ கலக்காதவையாகும்‌. அவன்‌ அவர்களிலோ (படைப்புகளாகிய) அவர்கள்‌ அவனிலோ சங்கமிக்கவோ ஒருவர்‌ மற்றொருவருடன்‌ கலந்தோ இல்லை. கண்ணியமிக்க அல்லாஹ்‌ வானத்தின்‌ மேல்‌ உள்ள தனது அர்ஷின்‌ மீதுள்ளான்‌. அவன்‌ பூமியில்‌ இல்லை.

இது பற்றிக்‌ குறிப்பிடும்‌ இமாம்‌ தஹபீ அவர்கள்‌ அபூ நுஐம்‌ அவர்கள்‌ இது முஸ்லிம்களின்‌ (இஜ்மா) ஏகமனதான முடிவு என்பதாக அறிவித்துள்ளார்கள்‌ எனச்‌ சுட்டிக்காட்டியுள்ளார்கள்‌.

 “ أم البراهين .. في الرد التفصيلي على مذهب الأشعرية والماتردية ل حامد بن عبد الله العلي- (ج 1 / ص 18) என்ற நூலில்‌ இருந்து பெறப்பட்டது.


இமாம்‌ அபூ நஸ்ர்‌ அஸ்ஸிஜிஸ்ஸீ (ரஹ்‌) அவர்கள்‌.(மரணம்‌: ஹிஜ்ரீ: 444)

தமது “இபானா” என்ற நாலில்‌ எமது இமாம்களான சுஃப்யான்‌ அஸ்ஸவ்ரீ, மாலிக்‌, ஹம்மாத்‌ பின்‌ சலமா, ஹம்மாத்‌ பின்‌ ஸைத்‌, சுஃப்யான்‌ பின்‌ உயைனா, புழைல்‌ பின்‌ இயாழ்‌, இப்னுல்‌ முபாரக்‌, அஹ்மத்‌, இஸ்ஹாக்‌ ஆகியோர்‌ நிச்சயமாக அல்லாஹ்‌ தனது உள்ளமையான தோற்றத்தோடு அர்ஷின்‌ மேல்‌ இருக்கின்றான்‌; அவனது அறிவுஞானம்‌ அனைத்து இடங்களிலும்‌ வியாபித்துள்ளது. அவன்‌ அடிவானத்திற்கு இறங்குகின்றான்‌; கோபிக்கின்றான்‌; திருப்தி கொள்கின்றான்‌; தான்‌ விரும்பியதைப்‌ பேசுகின்றான்‌ என்பதில்‌ ஒரே கருத்தில்‌ இருந்தனர்‌ எனக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.


ஷைகுல்‌ இஸ்லாம்‌ அபூ உஸ்மான்‌ அஸ்ஸாபூனீ (ரஹ்‌) அவர்கள்‌. (மரணம்‌: ஹிஜ்ரீ: 449)

 ثيدحلا باحصأ فلسلا ةديقع என்ற பிரசித்தி பெற்ற இவர்களது நூலில்‌: நிச்சயமாக அல்லாஹ்‌ ஏழு வானங்களுக்கும்‌ மேல்‌ உள்ள அவனது அர்ஷின்‌ மீதிருக்கின்றான்‌ என்று அஹ்லுல்‌ ஹதீஸ்‌ பிரிவினர்‌ நம்பிக்கை கொள்கின்றார்கள்‌; சாட்சியம்‌ சொல்கின்றார்கள்‌. மேலும்‌ அவர்கள்‌ அல்லாஹ்‌ தனக்கென நிலைப்படுத்தியுள்ள பண்புகளை நிலைப்படுத்தி அது பற்றி ஈமான்‌ கொள்கின்றார்கள்‌. கண்ணியமிக்க அல்லாஹ்வின்‌ செய்தியை உண்மைப்படுத்துகின்றார்கள்‌. அர்ஷின்‌ மீது அவன்‌ நிலைபெற்றுள்ளான்‌ என்று பொதுவாக அறிவித்துள்ளதை (அலட்டிக்கொள்ளாது) அதைப்‌ பொதுப்படையாக நம்புகின்றார்கள்‌. அதன்‌ வெளிப்படையான பொருளில்‌ நம்பும்‌ இவர்கள்‌ அதன்‌ முறைமை பற்றிய அறிவை அல்லாஹ்விடம்‌ சாட்டி விடுகின்றார்கள்‌.


ஷம்சுத்தீன்‌ அல்குர்துபீ (ரஹ்‌) அவர்கள்‌ மரணம்‌: ஹிஜ்ரீ: 671

அறிஞர்கள்‌ குறிப்பிடும்‌ இஸ்திவா பற்றிய தமது தீர்ப்புகளில்‌ தெளிவானது என்னவென்றால்‌ அதை நான்‌ முடிவாகக்‌ கூறாவிட்டாலும்‌, அல்லது அதைத்‌ தேர்வு செய்யாவிட்டாலும்‌ குர்‌ஆனிய வசனங்களும்‌, ஹதீஸ்களும்‌ அறிவித்து தெளிவாகத்‌ தெரிவது என்னவெனில்‌ அவன்‌ தனது குர்‌ஆனில்‌ அறிவித்துள்ளது போலவும்‌, தன்னுடைய நபியின்‌ நாவினால்‌ அறிவித்துத்‌ தந்துள்ளது போலவும்‌ - நிச்சமயாக அல்லாஹ்‌ அவனது அர்ஷின்‌ மீதிருக்கின்றான்‌ என்பதாகும்‌. அவன்‌ அவனது படைப்புகளில்‌ இருந்து நீங்கியவனாக இருக்கின்றான்‌. இதுதான்‌ நம்பகமானவர்கள்‌ அறிவித்துத்‌ தந்த ஒட்டுமொத்த முன்னோர்களினதும்‌ கருத்தாகும்‌.

அல்குர்துபீ (ரஹ்‌) அவர்கள்‌ தமது தஃப்சீரில்‌ இஸ்திவா பற்றிக்‌ குறிப்பிடுகின்ற போது,

சலஃபுஸ்ஸாலிஹீன்களுள்‌ ஒருவர்கூட அல்லாஹ்‌ யதார்த்தமாகவே அவனது அர்ஷின்‌ மீதிருப்பதை நிராகரிக்கவில்லை. அல்லாஹ்வின்‌ படைப்புகளில்‌ மகத்தான படைப்பாக அர்ஷ்‌ இருப்பதால்‌ அதைக்‌ கொண்டு அவன்‌ சிறப்புப்படுத்தி இருக்கின்றான்‌. அவர்கள்‌ இஸ்திவாவின்‌ முறை பற்றித்தான்‌ பொருட்படுத்தாதிருந்தார்கள்‌. ஏனெனில்‌ அதன்‌ யதார்த்தம்‌ அறியப்படமாட்டாது எனக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.
(பார்க்க: அல்ஜாமிஃ லிஅஹ்காமில்‌ குர்‌ஆன்‌- பாகம்‌: 1, பக்கம்‌: 2130)


இமாம்‌ தஹபீ (ரஹ்‌) அவர்கள்‌

அல்லாஹ்வை இஸ்திவா என்ற பண்பைக்‌ கொண்டு வர்ணிப்பதானது சான்றை நேரடியாகப்‌ பின்பற்றுவதும்‌, மார்க்கத்திற்குக்‌ கீழ்ப்படிவதும்‌, உயர்ந்தவனாகிய அல்லாஹ்‌ அவனைப்‌ பற்றி வர்ணித்ததை உண்மைப்படுத்துவதுமாகும்‌” என “அர்ஷ்‌” என்ற அவர்களது கிரந்தத்தில்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌. (கிதாபுல்‌ அர்ஷ்‌)


அப்துல்‌ வஹ்ஹாப்‌ அல்மாலிகீ (ரஹ்‌) அவர்கள்‌.

இவர்‌ இப்னு அபூஸைத்‌ அல்கைரவான்‌ என்பவரின்‌ -ரிசாலா- சிறுதொகுப்புக்கு‌ ஷரஹ்‌ முகத்திமத்‌ ரிசாலா இப்னு அபீஸைத்‌ அல்கைரவானீ என்ற பெயரில்‌ எழுதிய நூலில்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்‌.

இஸ்திவா என்ற பண்பிற்குத்‌ தவறான விளக்கம்‌ இன்றிப்‌ பொதுப்படையாகப்‌ பிரயோகிப்பது அவசியமாகும்‌. நிச்சயமாக அது அல்லாஹ்‌ தனது தாத்துடன்‌ (உண்மையான உள்ளமையுடன்‌) அர்ஷின்‌ மீதிருக்கின்ற பண்பாகும்‌.


இமாம்‌ அப்துல்‌ காதிர்‌ அல்ஜீலானீ (ரஹ்‌) அவர்கள்‌

அல்‌ஃகுன்யாவில்‌ அல்லாஹ்வை உயர்வைக்‌ கொண்டு பொதுப்படையாக வர்ணிப்பது தவறல்ல. அதிகமான ஹதீஸ்கள்‌, வெளிப்படையான பல குர்‌ஆனிய வசனங்கள்‌ அது பற்றிச்‌ சமிக்ஞை செய்திருக்கின்றன.

மேற்படி தகவல்கள்‌ استواءاللهعلىالعرش-(ج1/ص1 என்ற நூலின்‌ தழுவலாகும்‌.


இமாம்‌ ரபீஆ பின்‌ அப்திர்‌ ரஹ்மான்‌:

இமாம்‌ ரபீஆ பின்‌ அப்திர்ரஹ்மான்‌ அவர்களிடம்‌ “அல்லாஹ்‌” அர்ஷின்‌ மீதிருக்கின்றான்‌ எனக்‌ குறிப்பிடுகின்றான்‌, அவன்‌ எப்படி இருக்கின்றான்‌ எனக்‌ கேட்கப்பட்டபோது:

இஸ்திவா-அர்ஷின்‌ மீதிருத்தல்‌. என்பதன்‌ பொருள்‌ அறியப்படாதது அல்ல, அதன்‌ முறைமைதான்‌ பகுத்தறிவு கொண்டு விளங்க முடியாததாகும்‌. தூதுத்துவத்தை வழங்குவது அல்லாஹ்வின்‌ மீதுள்ள கடமையாகும்‌. அதை எடுத்துரைப்பது அவனது தூதர்‌ மீதுள்ள கடமையாகும்‌. அதற்கு அடிபணிந்து, கட்டுப்படுவது நம்மீதுள்ள கடமையாகும்‌” என விளக்கினார்கள்‌.

இக்கருத்தை இமாம்‌ மாலிக்‌ அவர்களின்‌ கருத்தாக அல்லாலகாயீ‌ (ரஹ்‌) அவர்கள்‌ ஷரஹ்‌ இஃதிகாதி அஹ்லிஸ்ஸுன்னா வல்‌ ஜமாஆ என்ற நூலில்‌ பதிவு செய்துள்ளதைப்‌ பார்க்கின்றோம்‌.


இமாம்‌ அவ்ஸாயீ‌ (ரஹ்‌) அவர்கள்‌ மூலம்‌ இமாம்‌ பைஹகீ அவர்கள்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்‌.

எண்ணிலடங்காத தாபியீன்கள்‌ இருக்கும்‌ போதே அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதிருப்பவன்‌: என்றே நாம்‌ கூறுபவர்களாக இருந்தோம்‌. சுன்னாவில்‌- நபியின்‌ ஹதீஸ்களில்‌: அவனது பண்புகள்‌ பற்றி வந்தவற்றை நம்புகின்றோம்‌. அவ்ஸாயி அவர்களிடம்‌ பின்பு அர்ஷின்‌ மீதானான்‌. என்ற வசனம்‌ பற்றிக்‌ கேட்கப்பட்டபோது, அவன்‌ வர்ணித்திருப்பது போன்றுதான்‌ (அதன்‌ விளக்கம்‌) எனப்‌ பதில்‌ அளித்தார்கள்‌.

இமாம்‌ பைஹகீ அவர்கள்‌

நாங்கள்‌ மாலிக்‌ அவர்களுடன்‌ இருந்து கொண்டிருந்தோம்‌. ஒரு மனிதர்‌ வந்து, “அபூஅப்திர்ரஹ்மான்‌ அவர்களே! அர்ரஹ்மான்‌ அர்ஷின்‌ மீதானான்‌ என வந்துள்ளதே! அவன்‌ எப்படி ஆனான்‌?” எனக்‌ கேட்டார்‌, உடனே மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ தமது தலையை அசைத்தார்கள்‌; அவர்களுக்கு வியர்த்துவிட்டது, பின்பு அவர்களின்‌ தலையை உயர்த்தி, “அர்ரஹ்மான்‌, அவன்‌ வர்ணித்திருப்பது போன்று அர்ஷின் மீதானான்‌; எவ்வாறு என்று கேள்விகேட்பது கூடாது; அவன்‌ விஷயத்தில்‌ எவ்வாறு என்று கேட்பது அவனைவிட்டு அகற்றப்பட்டுவிட்டது; நான்‌ உன்னை ஒரு பித்‌அத்வாதியாகவே பார்க்கின்றேன்‌” எனக்‌ கூறி, “உடனே அவனை வெளியேற்றுங்கள்‌” எனக்‌ கூறினார்கள்‌. (பத்ஹுல்‌ பாரீ)

தாபியீன்கள்‌ காலத்தில்‌ வாழ்ந்த நான்கு பெரும்‌ மேதைகளான

மதீனா நகர்‌ இமாம்‌ மாலிக்‌ பின்‌ அனஸ்‌ (மரணம்‌: 179).
சிரியா நாட்டு இமாம்‌ அவ்ஸாயீ (மரணம்‌: 157). எகிப்திய அறிஞரான லைஸ்‌ பின்‌ ஸஃத்‌ (மரணம்‌ :175) இராக்‌ இமாம்‌ சுஃயான்‌ அஸ்ஸவ்ரீ (மரணம்‌: 161). (ரஹ்‌)

போன்றோர்களது நிலைப்பாடுகளை அவதானித்தால்‌ முன்னர்‌ நாம்‌ சுட்டிக்காட்டி இருப்பது போன்று “அஸ்மா, ஸிஃபாத்‌” விஷயத்தில்‌ பிற்காலத்தில்தான்‌ பெருமளவு தவறான அணுகுமுறையும்‌ அதில்‌ சிதைவும்‌ ஏற்பட்டுள்ளன என்பதை உறுதி செய்ய முடியும்‌.

இமாம்களான இப்னு குஸைமா, அபூ அப்தில்லாஹ்‌ அல்ஹாகிம்‌ (ரஹ்‌) அவர்கள்‌, சுனன்‌ அபீதாவூதின்‌ விரிவுரையாளரான இமாம்‌ ஷம்சுல்‌ ஹக்‌ அல்‌அளீம்‌ ஆபாதீ்‌ (ரஹ்‌) போன்ற அறிஞர்கள்‌, “அல்லாஹ்வின்‌ பக்கம்‌ அமல்கள்‌ உயர்த்தப்படுகின்றன” என்ற ஹதீஸை விலாவரியாக விவரித்து, அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதிருப்பவன்‌ என்ற கருத்தை அங்கு முன்வைத்துள்ளனர்‌.

இமாம்‌ இப்னு குஸைமா மூலம்‌ ஹாகிம்‌ இமாம்‌ அவர்கள்‌, உலூமுல்‌ ஹதீஸ்‌ என்ற அவரது கிரந்தத்தில்‌ “இருபதாவது வகை” என்ற தலைப்பின்கீழ்‌ பின்வரும்‌ அறிவிப்பை இடம்‌ பெறச்‌ செய்துள்ளார்கள்‌.

யார்‌ அல்லாஹ்‌ அவனது ஏழு வானங்களுக்கும்‌ மேல்‌ இருக்கின்ற அர்ஷின்‌ மீதிருப்பதை உறுதியாக அங்கீகரிக்கவில்லையோ அவன்‌ காஃபிர்‌ ஆவான்‌. அவன்‌ அதற்காக “தவ்பா” செய்யுமாறு வேண்டப்படுவான்‌. அவ்வாறு செய்தால்‌ அவன்‌ மன்னிக்கப்படுவான்‌. இல்லாதபோது அவனது கழுத்து துண்டிக்கப்பட்டு, முஸ்லிம்களும்‌, இஸ்லாமிய அரசின்கீழ்‌ ஒப்பந்தத்துடன்‌ வாழும்‌ (திம்மிகளும்‌) அவனது சடலத்தின்‌ துர்வாடையால்‌ நோவினை  பெறாதிருக்கும்‌ பொருட்டு குப்பைத்தொட்டியில்‌ அவன்‌ வீசப்படல்‌ வேண்டும்‌. அவனது சொத்துகள்‌ போரின்றிப்‌ பெறப்பட்ட பொருள்களுக்குச்‌ சமமானதாகும்‌. முஸ்லிம்களில்‌ யாரும்‌ அவனுடைய வாரிசாக வரமுடியாது எனக்‌ குறிப்பிட்ட பின்னர்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறி இருப்பது போன்று “முஸ்லிம்‌ காஃபிருக்கு வாரிசாக வரமாட்டான்‌” என்பது காரணமாகும்‌ எனக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.
(அவனுல்‌ மஃபூத்‌)


இமாம்‌ அஹ்மத்‌ (ரஹ்‌):

இமாம்‌ அஹ்மத்‌ (ரஹ்‌) அவர்களிடம்‌ அல்லாஹ்வைப்‌ பற்றிக்‌ கேட்கப்பட்ட போது,

ஏழு வானத்திற்கும்‌ மேல்‌ அவனது அர்ஷின்‌ மீதிருக்கின்றான்‌. அவனது படைப்புகளைவிட்டு அவன்‌ வெளியானவனாவன்‌. அவனது ஆற்றலும்‌, அறிவும்‌ அனைத்து இடங்களிலும்‌ காணப்படுகின்றது எனக்‌ குறிப்பிட்டார்கள்‌. (பார்க்க: தஹ்தீப்‌ சுனன்‌ அபீதாவூத்‌- பாகம்‌: 2- பக்கம்‌: 405)


இமாம்‌ அப்துல்லாஹ்‌ பின்‌ முபாரக்‌ (ரஹ்‌) அவர்கள்‌:

இப்னுல்‌ முபாரக்‌ என்று அழைக்கப்படும்‌ இந்த இமாம்‌ அவர்கள்‌ ஹதீஸ்‌ துறையில்‌ பிரசித்தி பெற்ற அறிஞராவார்‌. இவர்கள்‌ இமாம்‌ புகாரீயின்‌ ஆசிரியர்களுள்‌ வரிசையில்‌ இடம்‌ பெற்றுள்ள அறிவிப்பாளர்களுள்‌ ஒருவராவார்‌.

அவர்களின்‌ கருத்தை அவனுல்‌ மஃபூதின்‌ ஆசிரியரான இமாம்‌ ஷம்சுல்‌ ஹக்‌ அல்‌அளீம்‌ ஆபாதீ அவர்கள்‌ பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்‌.

எமது இரட்சகன்‌ தனது ஏழு வானத்திற்கும்‌ மேல்‌ உள்ள அர்ஷின்‌ மீதிருக்கின்றான்‌. அவன்‌ தனது படைப்புகளில்‌ இருந்தும்‌ (ஒன்றரக்‌ கலக்காது) வேறானவன்‌ என்பதைத்தான்‌ நாம்‌ அறிவோம்‌ என்று பூமியின்‌ பக்கம்‌ சைகை செய்தவர்களாக அவன்‌ அங்கும்‌ இங்குமாக உள்ளான்‌ என்று ஜஹமிய்யாக்கள்‌ கூறுவதைப்‌ போன்று நாமும்‌ கூறமாட்டோம்‌ எனக்‌ கூறினார்கள்‌.
(அவனுல்‌ மஃபூத்‌)


இமாம்‌ ஷாஃபிஈ (ரஹ்‌) அவர்கள்‌:

யூனுஸ்‌ பின்‌ அப்தில்‌ அஃலா என்பவர்‌ குறிப்பிடுகின்ற செய்தியை இப்னு அபீஹாதிம்‌ அவர்கள்‌ ஷாஃபிஈ அவர்களின்‌ சிறப்புகள்‌ பற்றிய செய்தியில்‌ அவர்களிடம்‌ இருந்து செவியேற்றதாக பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்‌.

அல்லாஹ்வுக்குப்‌ பல பெயர்கள்‌, பண்புகள்‌ உண்டு;
அவற்றை யாரும்‌ நிராகரித்துவிட முடியாது. எவன்‌ மார்க்கத்தின்‌ சான்றாதாரம்‌ தனக்குக்‌ கிடைத்த பின்னரும்‌ முரண்படுகின்றானோ நிச்சயமாக அவன்‌ நிராகரித்துவிட்டான்‌. இருப்பினும்‌, மார்க்கத்தின்‌ சான்றாதாரம்‌ கிடைப்பதற்கு முன்னர்‌ அவன்‌ (அவனது) அறியாமையைக்‌ கொண்டு மன்னிக்கப்படுவான்‌. ஏனெனில்‌ இதன்‌ அறிவு பகுத்தறிவைக்‌ கொண்டோ, கண்ணால்‌ பார்ப்பதன்‌ மூலமோ, மூளையால்‌ சிந்திப்பபன்‌ மூலமோ பெறப்படுவதில்லை. இவ்வாறான பண்புகளை (அல்லாஹ்வுக்கு) நாம்‌ நிலைப்படுத்துவோம்‌. அவன்‌ தன்னை விட்டு நீக்கியவற்றை நாமும்‌ அவனை விட்டு நீக்கிவிடுவோம்‌. அவனைப்‌ போன்று எதுவும்‌ இல்லை என்று அவன்‌ கூறி இருக்கின்றான்‌, என அறிவித்துள்ளார்கள்‌. (ஃபத்ஹுல்‌ பாரீ‌)

இது ஷாஃபிஈ (ரஹ்‌) அவர்களின்‌ தீர்ப்பாகும்‌ என்பதை அஷ்‌அரிய்யாக்கள்‌ கவனத்தில்‌ கொள்ள கடமைப்பட்டுள்ளனர்‌.


இமாம்‌ அபூதாவூத்‌ அத்தயாலிஸீ (ரஹ்‌) அவர்கள்‌: 

அபூதாவூத்‌ அத்தயாலிஸீ (ரஹ்‌) அவர்கள்‌ வழியாக இமாம்‌ பைஹகீ (ரஹ்‌) அவர்கள்‌ இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்‌:

இமாம்களான, சுஃப்யான்‌ அஸ்ஸவீரீ, ஷுஃபா, ஹம்மாத்‌ பின்‌ ஸைத்‌, ஹம்மாத்‌ பின்‌ சலமா, ஷரீக்‌, அபூஅவானா ஆகியோர்‌ (அல்லாஹ்வுக்கு) திசை கற்பிக்காது, உதாரணம்‌, உருவகம்‌ கற்பிக்காது, இந்த ஹதீஸ்களை அறிவிப்பார்கள்‌. அவர்கள்‌ எப்படி? என்று கேட்கமாட்டார்கள்‌. (ஃபத்ஹுல்பாரீ‌).


இமாம்‌ திர்மிதீ (ரஹ்‌) அவர்கள்‌:

அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ தொடர்பான அம்சங்கள்‌ பற்றி இமாம்‌ திர்மிதீ‌ (ரஹ்‌) அவர்கள்‌ தமது “அல்ஜாமிஃ” என்ற நூலில்‌ விளக்கிய பின்னால்‌, இமாம்‌ மாலிக்‌, இப்னு உயைனா, இப்னுல்‌ முபாரக்‌ போன்ற பல இமாம்களை மேற்கோள்காட்டி அவர்களின்‌ கருத்துகளும்‌ இவ்வாறுதான்‌ இருந்தன என எடுத்தெழுதிய பின்னர்‌,

“இது (அல்லாஹ்வைப்‌ படைப்பினங்களுக்கு) ஒப்பிட்டுக்‌ கூறுதல்‌ என்ற வாதத்தை முன்வைத்து ஐஹமிய்யாக்கள்‌ இவற்றை நிராகரிக்கின்றனர்‌. ஒரு கையை மற்றொரு கைக்கும்‌, ஒரு செவிப்புலனை மற்றொரு செவிப்புலனுக்கும்‌ ஒப்பிட்டுக்‌ கூறுவதால்தான்‌ அல்லாஹ்வை அவனது படைப்பினங்களுக்கு ஒப்பிட்டுக்‌ கூறியதாகக்‌ கொள்ளப்படும்‌”, என்ற இமாம்‌ இஸ்ஹாக்‌ பின்‌ ராஹோயா (ரஹ்‌) அவர்களின்‌ ஜஹ்மிய்யாக்களுக்கான மறுப்பைப்‌ பதிவு செய்துள்ளார்கள்‌.


இமாம்‌ அபூஸமனைன்‌ (ரஹ்‌) அவர்கள்‌:

அல்லாஹ்‌ அர்ஷைப் படைத்து, அதை அவன்‌ படைத்துள்ள அனைத்துப்‌ படைப்பினங்களுக்கும்‌ மேல்‌ உயர்ந்திருத்தல்‌ எனும்‌ பண்பைக்‌ கொண்டு தனித்துவமானவனாகி விட்டான்‌. பின்னர்‌ அதன்‌ மீது அவன்‌ விரும்பிய முறையில்‌ நிலை பெற்றான்‌ (எப்படி என்பது நமக்குத்‌ தெரியாது). இது பற்றி அவன்‌ அல்குர்‌ஆனில்‌ அர்ரஹ்மான்‌ அர்ஷின்‌ மீது நிலை பெற்றான்‌. வானங்கள்‌, பூமி, அவ்விரண்டிற்கும்‌ இடைப்பட்டவைவை (யாவும்‌) அவனுக்குரியவையாகும்‌. பின்னர்‌, அவன்‌ அர்ஷின்‌ மீது நிலை பெற்றான்‌. அவன்‌ பூமிக்குள்‌ புகுவதையும்‌, அதில்‌ இருந்து வெளியேறுவதையும்‌, அதன்‌(வானின்‌) பக்கம்‌ உயர்வதையும்‌ அறிகின்றான்‌ என்றும்‌ அறிவித்துள்ளான்‌.

கண்களால்‌ பார்க்க முடியாதவாறு தூரத்தில்‌ இருப்பவனாகிய அவன்‌ தூயவன்‌ அவன்‌ தனது அறிவு, ஆற்றலால்‌ சமீபத்தில்‌ இருந்து இரகசியமானவற்றைச்‌ செவிமடுப்பவன்‌.


இமாம்‌ இப்னு ஹிப்பான்‌ அவர்கள்‌:

இரவின்‌ மூன்றில்‌ ஒரு பகுதி மீதமாக இருக்கின்றபோது அல்லாஹ்‌ கீழ்வானத்திற்கு இறங்கி வருவதாக வருகின்ற ஆதாரப்பூர்வமான நபிமொழி பற்றி விளக்கும்‌ இமாம்‌ அவர்கள்‌:

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வின்‌ பண்புகளுக்கு முறை கற்பிக்கப்படமாட்டாது. மேலும்‌ அவை படைப்பினங்களுக்கு ஒப்புவமையாக்கப்படவும்‌ மாட்டாது. எனக்‌ குறிப்பிட்ட பின்னர்‌ தொடர்ந்து விளக்குகின்ற போது, அல்லாஹ்வின்‌ பேச்சையும்‌ விளக்கியுள்ளார்கள்‌. (ஸஹீஹ்‌ இப்னு ஹிப்பான்‌).


இமாம்‌ அஸ்‌ஃபஹானீ (ரஹ்‌) அவர்கள்‌:

“அஸ்மா ஸிஃபாத்‌” கோட்பாட்டை மிகத்தெளிவாக நிறுவிய நூல்களில்‌ இமாம்‌ அஸ்‌ஃபஹான்‌ (ரஹ்‌) அவர்களின்‌  ةجحملا نايب يف ةجحلا என்ற நூல்‌ மிக முக்கியமானதாகும்‌.

அஸ்மா, ஸிஃபாத்‌ தொடர்பான பல விதிகளை அவர்கள்‌ அதில்‌ பதிவு செய்துள்ளார்கள்‌. அதில்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்‌:

... நிச்சயமாக அல்லாஹ்‌ தனது அர்ஷின்‌ மீதாகிவிட்டான்‌. (அதற்கு) முறைமை கூறவோ, உதாரணப்படுத்திடவோ, தவறான விளக்கம்‌ தரவோ முடியாது. இஸ்திவா என்ற நிலை (பண்பு அவனில்‌) அறியப்பட்டதாகும்‌. அதன்‌ முறைமை அறியப்படாததாகும்‌. அதனை நம்பிக்கை கொள்வதுதான்‌ கடமையாகும்‌. அதனை நிராகரிப்பது குஃப்ராகும்‌. கண்ணியமும்‌ உயர்வும்‌ மிக்கவனாகிய அவன்‌ நிச்சயமாக தனது அர்ஷின் மீதாகிவிட்டான்‌. கண்ணியம்‌ மிக்கவனாகிய அவன்‌, நிச்சயமாக தனது படைப்புகளைவிட்டு வெளிப்பட்டவன்‌. படைப்புகள்‌ அவனைவிட்டு வெளிப்பட்டவர்கள்‌. ஆகவே ஒன்று மற்றொன்றில்‌ மீது இறங்கவில்லை. சங்கமித்தலும்‌ இல்லை, இரண்டறக்‌ கலக்கவுமில்லை. அவன்‌ தனித்தவன்‌, தனது படைப்புகளில்‌ இருந்து வேறுபட்டவன்‌. அவன்‌ ஒருவன்‌; படைப்புகளின்‌ உதவிகளை விட்டுத்‌ தேவையற்றவன்‌. அவனது அறிவு அனைத்து இடங்களிலும்‌ வியாபித்துள்ளது. அவனது அறிவில்‌ இருந்து எந்த இடமும்‌ காலியாக இருக்காது.


இமாம்‌ இப்னு குஸைமா (ரஹ்‌) அவர்கள்‌:

இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ அவர்கள்‌ ஜஹ்மிய்யா, மற்றும்‌ முஃதஸிலாக்களின்‌ குரல்வளைகளை நெறித்தது போன்ற அசத்தியவாதிகளான ஜஹுமிய்யாக்களின்‌ குரல்வளைகளை நெறித்தவர்தாம்‌ இமாம்‌ இப்னு குஸைமா (ரஹ்‌) அவர்கள்‌.

ஹதீஸ்கலையில்‌ பிரசித்தி பெற்று விளங்கிய இவர்களுக்கு ஸஹீஹ்‌ இப்னு குஸைமா என்ற நூல்‌ உண்டு. ஜஹ்மிய்யாக்களுக்கு மறுப்பாக கிதாபுத்தவ்ஹீத்‌ என்ற நூல்‌ உண்டு.

அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதிருப்பதை நிராகரிப்பவன்‌ பற்றிய அவர்களது தீர்ப்பு மிகத்‌ தெளிவானதும்‌, உறுதியானதுமாகும்‌.

“எவன்‌ ஒருவன்‌ நிச்சயமாக அல்லாஹ்‌ தனது ஏழு வானத்திற்கும்‌ மேல்‌ அவனது படைப்புகளை விட்டு நீங்கி அவனது அர்ஷின்‌ மீதிருப்பதை அங்கீகரிக்கவில்லையோ அவன்‌ காஃபிராவான்‌. தவ்பா செய்யுமாறு அவன்‌ வேண்டப்படுவான்‌. தவ்பா செய்தால்‌ சரியாகிவிடும்‌. இல்லையானால்‌ அவனது கழுத்தைத்‌ துண்டித்து, முஸ்லிம்களும்‌, (திம்மிகள்‌) முஸ்லிம்‌ அல்லாத சிறுபான்மையினரும்‌ அவனது சடலத்தின்‌ துர்நாற்றத்தால்‌ வேதனைப்படாத பொருட்டு அவன்‌ குப்பைத்‌ தொட்டியில்‌ வீசப்படல்‌ வேண்டும்‌; அவனது சொத்துகள்‌ போரின்றி பெறப்படும்‌ சொத்தாக மாறும்‌; முஸ்லிம்கள்‌ அவனது வாரிசாக வர முடியாது. ஏனெனில்‌ காஃபிரானவனுக்கு முஸ்லிம்‌ வாரிசாக வருவதில்லை” எனக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌. (பார்க்க: தஹ்தீபுஸ்ஸுனன்‌).


இமாம்‌ இப்னு ஹஜர்‌ (ரஹ்‌) அவர்கள்‌:

இமாம்களின்‌ பெயரில்‌ நாம்‌ குறிப்பிட்டுள்ள மேற்படி தகவல்கள்‌ இமாம்‌ இப்னு ஹஜர்‌ அல்‌அஸ்கலானீ அவர்களின்‌ ஃபத்ஹால்பாரீ‌ எனும்‌ கிரந்தத்தில்‌ இடம்‌ பெற்றிருப்பவையாகும்‌.

மேலும்‌, அவர்கள்‌ இது பற்றி ஃபத்ஹுல்பாரீயில்‌

இமாம்‌ இப்னு பத்தால்‌ (ரஹ்‌) அவர்கள்‌ மூலம்‌ விளக்குகின்ற போது “இஸ்தவா” என்ற சொல்‌ “உயர்ந்தான்‌” என்ற பொருளைத்தரும்‌ என்று முஜாஹித்‌ (ரஹ்‌) அவர்கள்‌ கூறியதாகக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

இரத்தம்‌ சிந்தாமல்‌, வாள்‌ ஏந்தாமல்‌ “பிஷ்ர்‌ மன்னன்‌ (என்பவன்‌) ஈராக்கை ஆக்கிரமித்தான்‌” என்ற கவிதையில்‌ வரும்‌ இஸ்தவா என்ற சொல்லுக்கு (இஸ்தவ்லா) என்பதை ஆதாரமாகக்‌ கொள்ளும்‌ முஃதஸிலாக்கள்‌ அதற்கு அடக்கி, ஒடுக்கி ஆக்கிரமித்தல்‌, மிகைத்தல்‌ என்ற பொருள்‌ கொள்கின்றனர்‌.

ஜிஸ்மிய்யா, அல்லது முஜஸ்ஸிமா என்ற அல்லாஹுவுக்கு உருவம்‌ கொடுப்போர்‌ “நிலைத்திருத்தல்‌” எனப்‌ பொருள்‌ கொள்கின்றனர்‌, அஹ்லுஸ்ஸுன்னாக்கள்‌ “உயர்ந்தான்‌” என்ற பொருள்‌ தருகின்றனர்‌ என விளக்கிய பின்னர்‌,

முஃதஸிலாக்களின்‌ விளக்கம்‌ குழப்பமானதாகும்‌. ஏனெனில்‌ அவன்‌ (அல்லாஹ்‌) என்றும்‌ மிகைத்தவனாகவும்‌, அதிகாரம்‌ செலுத்துபவனாகவும்‌ இருந்து வருகின்றான்‌. அதனால்‌ இஸ்தாவா என்பதற்கு அவ்வாறு பொருள்‌ கொள்வது, “இல்லாமல்‌ இருந்து, பின்னர்‌ இந்தப்‌ பண்பு அவனுக்கு இருப்பதை” ச்‌ சுட்டிக்காட்டுகின்றது.

இதன்‌ உச்சக்கட்ட விளக்கம்‌ என்னவென்றால்‌, “அவன்‌ அதன்‌ (அர்ஷின்‌) விஷயத்தில்‌ மற்றவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டவனாக இருந்தான்‌; பின்னர்‌ அவனை வெற்றி கொண்டோரை அவன்‌ மிகைத்தான்‌” என்றாகிவிடுகின்றது. இது அல்லாஹ்வின்‌ விஷயத்தில்‌ சாத்தியமற்றதாகும்‌.

அவ்வாறே, முஜஸ்ஸிமா (அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ தொடர்பான சான்றுகளுக்கு மனிதர்களின்‌ உருவம்‌ கற்பிக்கும்‌) ஜஹ்மிய்யாக்களின்‌ விளக்கமும்‌ தவறானதும்‌, சத்தியத்திற்கு அப்பாற்பட்டதுமாகும்‌.

ஏனெனில்‌, “நிலைத்திருத்தல்‌” என்பது படைப்புகளின்‌
பண்பாகும்‌. இந்த விளக்கத்தினால்‌ (படைப்புடன்‌) ஒன்றரக்கலப்பும்‌, சங்கமமும்‌ ஏற்படுகின்றது. இது அல்லாஹ்வின்‌ பண்பில்‌ சாத்தியமற்றதாகும்‌. அவனது படைப்பினங்களுக்கே இது பொருத்தமானதாகும்‌.

“இஸ்தவா” என்ற சொல்லுக்கு “அலாஉயர்ந்தான்‌” என்ற விளக்கமே சரியான விளக்கமும்‌, சத்தியமான மத்ஹபும்‌ -போக்கும்‌- ஆகும்‌. அது அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ கருத்துமாகும்‌.

ஏனெனில்‌ அல்லாஹ்‌ தன்னைப்‌ பற்றி “உயர்வு” என்ற பண்பைக்‌ கொண்டு விளக்கியுள்ளான்‌. அவர்கள்‌ (காஃபிர்கள்‌ தேவையற்ற பண்புகளால்‌) அவனை வர்ணிப்பதைவிட்டு உயர்ந்தவனாகிய அவன்‌ தூயவன்‌.” உயர்வு என்ற பண்பு அல்லாஹ்வின்‌ யதார்த்தத்தோடு தொடர்பான பண்பாகும்‌.

யார்‌ “இஸ்தவா” என்ற சொல்லை இர்தஃபஅ -உயர்ந்தான்‌- என்ற பொருள்கொண்டு விளக்கினார்களோ அதிலும்‌ யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில்‌ அல்லாஹ்‌ தன்னைப்பற்றி அவ்வாறு வர்ணிக்கவில்லை; என இப்னு ஹஜர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌.

“இஸ்தவா” என்ற சொல்லுக்கு “அலாஉயர்வு பெற்றான்‌” என்ற விளக்கமே சரியான விளக்கமும்‌, சத்தியமான மத்ஹபும்‌-போக்கும்‌. என விளக்கிய இப்னு ஹஜர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ இர்தஃபஅ -உயர்ந்தான்‌- என்ற பொருள்படும்‌ சொல்லைக்‌ கொண்டு விளக்குவதைச்‌ சரிகாணாதது “அலா” என்ற சொல்‌ கருத்தில்‌ “இர்தஃபஅ” என்ற சொல்லைவிட ஆழமானதாகும்‌.

இருந்தும்‌ அதற்கு “இர்தஃபஅ” உயர்ந்தான்‌ என்ற சொல்லின்‌ பொருளும்‌ உண்டு என்பதை ஃபிக்ஹ்‌, தஃப்சீர்‌, ஹதீஸ்‌, தாரீஹ்‌, அரபுமொழியியல்‌ அறிவு, இலக்கணம்‌, குர்‌ஆன்‌ ஆகிய கலைகளில்‌ பிரசித்தி பெற்று விளங்கிய இமாம்‌ அபூஜஃபர்‌ முஹம்மத்‌ பின்‌ ஜரீருத்தபர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ மூலம்‌ இமாம்‌ இப்னுல்‌ கய்யிம்‌ (ரஹ்‌) அவர்கள்‌. “இஜ்திமாவுல்‌ ஜாயூஷில்‌ இஸ்லாமிய்யா” என்ற நூலில்‌ உறுதி செய்துள்ளார்கள்‌.

அல்ஹதீத்‌ அத்தியாயத்தில்‌ 59ஆம்‌ வசனமாக இடம்‌ பெற்றுள்ள “பின்பு அவன்‌ அர்ஷின்‌ மீதானான்‌” என்ற வசனத்தை விளக்கும்‌ இமாம்‌ தபரீ (ரஹ்‌) அவர்கள்‌ அவர்களது தஃப்சீரில்‌ "இஸ்தவாஃ என்பதற்கு அலா, இர்தஃப- “உயர்வானான்‌, உயர்ந்தான்‌” என்ற சொற்களைக்‌ கொண்டும்‌,

அதே அத்தியாயம்‌ நான்காவது வசனத்தில்‌ இர்தஃபஅ “உயர்ந்தான்‌” என்ற பொருளிலும்‌ விளக்கியுள்ளார்கள்‌.

இப்னு ஹஜர்‌ அவர்களின்‌ விளக்கத்தைவிட இப்னு ஜரீரின்‌ விளக்கம்‌ வலுவானதாகும்‌. ஏனெனில்‌ இப்னு ஜரீர்‌ அவர்கள்‌ இத்துறையில்‌ இப்னு ஹஜர்‌ அவர்களைவிட முன்னிலைப்படுத்தப்படுகின்றார்கள்‌ என்பது நமது கருத்தாகும்‌. (பார்க்க:இப்னுல்‌ கய்யிம்‌: இஜ்திமாவுல்‌ ஜாயூஷில்‌ இஸ்லாமிய்யா)


அபூ இஸ்மாயீல்‌ அல்ஹரவீ:

எனினும்‌ இமாம்‌ இப்னு ஹஜர்‌ அவர்கள்‌ “இஸ்தவா” என்ற சொல்லுக்கு “இஸ்தவ்லா” என்ற பொருள்‌ கொள்ளவில்லை என்பதைப்‌ பின்வரும்‌ ஆதாரத்தின்‌ மூலம்‌ அறிய முடிகின்றது.

அல்‌ஃபாரூக்‌ என்ற நூலில்‌ அபூ இஸ்மாயீல்‌ அல்ஹரவீ அவர்கள்‌ தாவூத்‌ பின்‌ ஹலஃப்‌ என்பவர்‌ வழியாக அறிவிக்கின்ற செய்தியை இமாம்‌ இப்னு ஹஜர்‌ அல்‌அஸ்கலானீ (ரஹ்‌) அவர்கள்‌ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்‌.

முஹம்மத்‌ பின்‌ ஸியாத்‌ என்றழைக்கப்படும்‌ மொழி வல்லுனரான அபூ அப்தில்லாஹ்‌ அல்‌அஃராபீ என்பவரோடு நாம்‌ இருந்து கொண்டிருந்தோம்‌. அப்போது அவரிடம்‌ ஒரு மனிதர்‌:
“அர்ரஹ்மான்‌ அர்ஷின் மீதானான்‌” என்றதும்‌ முஹம்மத்‌ பின்‌ ஸியாத்‌ அவர்கள்‌ அவன்‌ அறிவித்ததைப்‌ போன்றுதான்‌ அர்ஷின்‌ மீதிருக்கின்றான்‌' எனக்‌ கூறினார்‌. அவர்‌ குறுக்கிட்டு மீண்டும்‌ “அபூஅப்தில்லாஹ்‌ அவர்களே! அதன்‌ பொருள்‌- இஸ்தவ்லா- ஆக்கிரமித்தான்‌, ஆட்சியமைத்தான்‌” என்பதுதானே!” என்று கேட்டார்‌. அவர்‌ உடனே “உன்‌ வாயைப்‌ பொத்து! இஸ்தவ்லா என்று பொருள்‌ கொள்வதாயின்‌ அதற்கு எதிர்மறையான ஒன்று இருக்கின்றபோதுதான்‌ கொள்ள முடியும்‌. (அதாவது அர்ஷ்‌ ஆக்கிரமிக்கப்பட்டதாக இருப்பின்‌ இது பொருந்தும்‌)” எனக்‌ கூறினார்கள்‌.

“அர்ஷை ஆக்கிரமித்தான்‌, ஆட்சிசெய்தான்‌” என்ற பொருள்‌ அர்ஷுக்கு எந்த வகையிலும்‌ பொருத்தமற்றதாகும்‌ என மற்றோர்‌ அறிஞரை மேற்கோள்‌ காட்டியபின்‌ அந்த வசனத்தை அறிஞர்கள்‌ பின்வருமாறு விளக்கியுள்ளதாக இமாம்‌ இப்னு ஹஜர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌.

“இஸ்திவா” என்பது பொருள்‌ அறியப்படாதது அல்ல அதன்‌ முறைதான்‌ அறியப்படாததாகும்‌. அதனை உறுதியாக நம்புவது ஈமான்‌ ஆகும்‌. அதனை நிராகரிப்பது குஃப்ர்‌ ஆகும்‌. 


இமாம்‌ அபுல்‌ காசிம்‌ அல்லாலகாயீ (ரஹ்‌) அவர்கள்:‌ 

இஸ்திவா என்பது அறியப்படாத ஒன்றல்ல; அதற்கு முறை கற்பிப்பது அறியப்படவில்லை; அதை ஏற்றுக்‌ கொள்வது ஈமானாகும்‌; அதை மறுப்பது குஃப்ராகும்‌” என்று அபுல்‌ காசிம்‌ அல்லாலகாயீ‌ (ரஹ்‌) அவர்கள்‌ உம்மு சலமா (ரழி) அவர்கள்‌ மூலம்‌ அறிவிக்கின்றார்கள்‌.

பல அறிஞர்கள்‌ வழியாக இமாம்‌ பைஹகீ (ரஹ்‌) அவர்கள்‌:

இமாம்களான சுஃப்யான்‌ அஸ்ஸவ்ரீ‌, ஷுஃபா, ஹம்மாத்‌ பின்‌ ஸைத்‌, ஹம்மாத்‌ பின்‌ சலமா, ஷரீக்‌, அபூ அவானா ஆகியோர்‌ அல்லாஹ்வுக்குத்‌ திசையை வரையறை செய்யாது, உருவம்‌ கற்பிக்காது இந்த ஹதீஸ்களை அறிவிப்பார்கள்‌; எவ்வாறு என்று (முறை) கூறமாட்டார்கள்‌. அதுவே நமது கருத்தும்‌ என இமாம்‌ அபூதாவூத்‌ அவர்கள்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌.

இவ்வழியில்தான்‌ நமது முன்னோர்களான அறிஞர்‌ பெருமக்கள்‌ சென்றுள்ளார்கள்‌ என அபூதாவூத்‌ அவர்கள்‌ குறிப்பிட்டுள்ளதாக இமாம்‌ பைஹகீ‌ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

இமாம்‌ பைஹகீ (ரஹ்‌) அவர்கள்‌ அல்‌இஃதிகாத்‌ என்ற நூலில்‌ பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்‌.

அர்ஷின்‌ மீது இஸ்திவாவாகியது என்பது அல்குர்‌ஆன்‌ பல இடங்களில்‌ பேசி உள்ளது. ஆதாரப்பூர்வமான பல செய்திகளும்‌ அது பற்றி வந்துள்ளன. அதனை அவற்றில்‌ வந்த பிரகாரம்‌ அங்கீகரிப்பது கடமையாகும்‌. அது பற்றி ஆய்வு செய்வதும்‌, அதற்கு முறைமை தேடுவதும்‌ அனுமதிக்கப்பட்டது அல்ல. (அல்‌இஃதிகாத்‌)


முஹம்மது பின்‌ ஹசன்‌ அஷ்ஷைபானீ (ரஹ்‌) அவர்கள்:‌

கிழக்கில்‌ இருந்து மேற்கு வரையும்‌ உள்ள சட்ட வல்லுனர்கள்‌ (ஃபுகஹாக்கள்‌) இரட்சகனாகிய அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ பற்றிக்‌ குர்‌ஆனில்‌ வந்திருப்பவற்றையும்‌, நம்பகமானவர்கள்‌ மூலம்‌ அறிவிக்கப்படும்‌ ஹதீஸ்களையும்‌ (படைப்புகளுக்கு) ஒப்பிடாமலும்‌, விளக்கம்‌ கூறாமலும்‌ நம்பிக்கை கொள்வதில்‌ ஒருமித்த கருத்தில்‌ உள்ளனர்‌, யார்‌ அதில்‌ எதற்காவது முறைதந்து விளக்கம்தர முற்படுகின்றாரோ, மேலும்‌, (வழிகெட்ட) ஜஹ்மின்‌ கருத்தைப்‌ பிரதிபலிக்கின்றாரோ நிச்சயமாக அவர்‌ நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களும்‌, அவர்களின்‌ தோழர்களும்‌ இருந்த வழியில்‌ இருந்து வெளியேறிவிட்டார்‌. அவர்‌ அல்லாஹ்வை அவனுக்குப்‌ பொருத்தமில்லாத பண்புகளால்‌ வர்ணித்த காரணத்தால்‌ அல்ஜமாஆ (அகீதா) கட்டமைப்பை விட்டுப்‌ பிரிந்தவராகின்றார்‌; அவ்ஸாயீ, மாலிக்‌, ஸவ்ரீ, லைஸ்‌ பின்‌ ஸஃத்‌ ஆகியோரிடம்‌ பண்புகள்‌ பற்றிய ஹதீஸ்களைப்‌ பற்றிக்‌ கேட்டபோது,‌ “அவை வந்திருப்பது போலவே அவற்றை நீங்கள்‌ (அமுல்‌) நடத்துங்கள்‌ எனக்‌ கூறினார்கள்‌” என வலீத்‌ பின்‌ முஸ்லிம்‌ அவர்களின்‌ மூலமாக இமாம்‌ அல்லாலகாயீ (ரஹ்‌) அவர்கள்‌ அறிவித்துள்ளார்கள்‌. (பத்ஹுல்பாரீ)


இமாம்‌ இப்னு கஸீர்‌ (ரஹ்‌) அவர்கள்‌:

இமாம்‌ இப்னு கஸீர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ ஹிஜ்ரி எட்டாம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்த பிரசித்தி பெற்ற அறிஞர்களுள்‌ ஒருவராவார்‌.

இமாம்‌ தபரியைப்‌ போன்று தஃப்சீர்‌, ஹதீஸ்‌, தாரீஹ்‌ போன்ற துறைகளில்‌ சிறந்து விளங்கிய இவர்களின்‌ நூல்தான்‌ “தப்சீருல்‌ குர்‌ஆனில்‌ அழீம்‌ (தஃப்சீர்‌ இப்னு கஸீர்‌) என்ற நூல்‌ ஆகும்‌.

“பின்பு அவன்‌ அர்ஷின்‌ மீதானான்‌. என்ற வசனத்தை அவர்கள்‌ இவ்வாறு விளக்குகின்றார்கள்‌.

“அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதானான்‌” என்ற வசனம்‌ தொடர்பாக மனிதர்களுக்கு மத்தியில்‌ பல கருத்துகள்‌ எழுந்துள்ளன;

அவற்றைத்‌ தெளிவுபடுத்திட இந்த இடம்‌ பொருத்தமானது அல்ல.

இருப்பினும்‌, இவ்விஷயத்தில்‌ ஆரம்பக்கால, மற்றும்‌ பிற்கால இமாம்களாகிய மாலிக்‌, அவ்ஸாயீ, ஸவ்ரீ, லைஸ் பின்‌ ஸஃத்‌, ஷாஃபிஈ, அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌, இஸ்ஹாக்‌ பின்‌ ரஹாஹோயா (ராஹவைஹ்)‌ போன்ற சலஃபுஸ்ஸாலிஹீன்களின்‌ வழிநடப்பதே கடமையாகும்‌.

அதாவது அவை வந்திருப்பதைப்‌ போன்று முறைமை கற்பிக்காது, உவமானம்‌ கூறாது, கருத்தைச்‌ சிதைத்து, பொருளைப்‌ பாழடிக்காது அவற்றை நிலைப்படுத்துவதாகும்‌.

உவமானம்‌ கற்பிப்போரின்‌ மனதில்‌ அலைபாய்கின்றவை அல்லாஹ்வுக்குப்‌ பொருத்தமானவை கிடையாது. ஏனெனில்‌ அல்லாஹ்‌ அவனது படைப்புகளுக்கு ஒப்பாகமாட்டான்‌. அவனைப்‌ போன்று எதுவும்‌ இல்லை. அவன்‌ நன்கு செவியுறுபவன்‌, இவ்விஷயம்‌ எடுத்துக்‌ கொள்ளப்படவேண்டும்‌. அவர்களுள்‌ இமாம்‌ புகாரீயின்‌ ஆசிரியரான ஸம்மாத்‌ அல்குஸாமீ்‌ குறிப்பிடத்தக்கவர்‌.

அல்லாஹ்வை எவன்‌ அவனது படைப்புகளுக்கு ஒப்பிடுகின்றானோ நிச்சயமாக அவன்‌ நிராகரித்து விட்டான்‌. அல்லாஹ்‌ தன்னைப்‌ பற்றி வர்ணித்ததை எவன்‌ நிராகரிக்கின்றானோ நிச்சயமாக அவனும்‌ நிராகரித்துவிட்டான்‌; அல்லாஹ்‌ தன்னைப்‌ பற்றி வர்ணித்துள்ளவற்றிலும்‌, அவனது தூதர்‌ அவனைப்‌ பற்றி வர்ணித்துள்ளவற்றிலும்‌ எவ்வித ஒப்புவமையும்‌ கிடையாது என அவர்கள்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌.

அல்லாஹ்வின்‌ விஷயத்தில்‌ வந்துள்ள அல்குர்‌ஆன்‌ வசனங்களையும்‌, ஸஹீஹான ஹதீஸ்களையும்‌ யார்‌ அல்லாஹ்வுக்குத்‌ தகுதியான அடிப்படையில்‌ நிலைப்படுத்தி, குறைபாடுள்ள பண்புகளை அவனை விட்டு நீக்கிவிடுகின்றாரோ நிச்சயமாக அவர்‌ நேர்வழி நடந்து விட்டார்‌. இவ்வாறு இமாம்‌ இப்னு கஸீர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடுகின்றார்கள்‌. (தஃப்சீருல்‌ குர்‌ஆனில்‌ அழீம்‌ (تفسير القرآن العظيم لبن كثير - (3 / 426) 


இமாம்‌ பஃகவீ (4) அவர்கள்‌:

شرح السنة‌ என்ற நூலில்‌ இமாம்‌ பஃகவீ (ரஹ்‌) அவர்கள்‌
ஜஹமிய்யாக்களுக்கு மறுப்பு, என்ற தலைப்பிட்ட பின்னர்‌: நிச்சயமாக அல்லாஹ்‌ உறங்குவதில்லை. உறங்குவது அவனுக்கு அவசியமும்‌ இல்லை. அவனே நீதியை (பூமிக்கு) இறக்குகின்றான்‌. அதை அவனே உயர்த்துகின்றான்‌. இரவின்‌ செயல்கள்‌ பகலின்‌ செயல்களுக்கு முன்னர்‌ அவனளவில்‌ உயர்த்தப்படுகின்றன.. என்ற நபிமொழியில்‌ அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதிருப்பதை உணர்த்துவதற்காக மற்றோர்‌ அறிவிப்பான நிச்சயமாக அவன்‌ தனது ஏழு வானங்களுக்கும்‌ மேல்‌ உள்ள அர்ஷின்‌ மீதிருக்கின்றான்‌” எனக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌. (பார்க்க: ஷரஹுஸ்ஸுன்னா)

இதன்‌ மூலம்‌ “அர்ஷின்‌ மீதிருத்தல்‌” என்ற அல்லாஹ்வின்‌ பண்பை நிராகரிப்போர்‌ அஷ்‌அரிய்யாக்கள்‌ என்போராகப்‌ பிற்காலத்தில்‌ அறிமுகப்படுத்தப்பட்டாலும்‌ ஐஹமிய்யாக்கள்‌ தாம்‌ இந்தச்‌ சிந்தனையின்‌ முன்னோடிகள்‌ என்பதும்‌, நவீன அஷ்‌அரிய்யாக்களின்‌ விளக்கம்‌ ஜஹ்மிய்யாவின்‌ விளக்கம்தான்‌ என்பதும்‌ புலனாகின்றது.


அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ தொடர்பான விதிகள்‌ அஸ்மா, ஸிஃபாத்‌ என்பதன்‌ வரைவிலக்கணம்

அல்குர்‌ஆனிலும்‌, ஸஹீஹான சுன்னாவிலும்‌ வந்துள்ள அல்லாஹ்வின்‌ அழகிய பெயர்கள்‌ மற்றும்‌ அவனது உயரிய பண்புகளைக்‌ கருத்துச்‌ சிதைவு இன்றி, திரிபு செய்யாது, அவற்றிற்கு முறைமை, வடிவம்‌ கற்பிக்காது, உதாணரப்படுத்தாது அல்லாஹ்வின்‌ தகுதிக்குப்‌ பொருத்தமான முறையில்‌ அவற்றை ஈமான்‌ கொண்டு அங்கீகரித்து நடைமுறைப்படுத்துவதாகும்‌.


அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌ பற்றிய விதிகள்‌

முதலாவது விதி: அல்குர்‌ஆனிலும்‌, நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ பொன்மொழிகளிலும்‌ இடம்‌ பெறுகின்ற அனைத்து பெயர்களையும்‌, பண்புகளையும்‌ அவற்றில்‌ எவ்விதப்‌ பொருள்‌ மாற்றங்களும்‌ செய்யாது, அதன்‌ வெளிப்படையான பொருளில்‌ நிலைப்படுத்துதல்‌.

அரபு மொழியில்‌ அல்லாஹ்‌ இறக்கிய அல்குர்‌ஆனை நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ அந்த மொழியிலேயே அரபியர்களுக்கு எடுத்துரைத்தார்கள்‌. எனவே அல்லாஹ்வின்‌ பேச்சின்‌ உள்ளடக்கத்தையும்‌, அவனது தூதரின்‌ பேச்சின்‌ உள்ளடக்கத்தையும்‌ அது இறக்கப்பட்டுள்ள அமைப்பில்‌, பொருள்‌ சிதைவின்றி நிலைப்படுத்துவது அவசியமாகும்‌.

அவற்றைப்‌ பொருள்‌ மாற்றங்கள்‌ செய்வது அறிவின்றி அல்லாஹ்வின்மீது அபத்தமாக ஒன்றைக்‌ கூறியதாகவும்‌, மார்க்கத்தில்‌ தடை செய்யப்பட்ட ஒன்றைச்‌ செய்ததாகவும்‌ கொள்ளப்படும்‌.

வெட்கக்கேடானவற்றில்‌ வெளிப்படையானவற்றையும்‌, இரகசியமானதையும்‌, பாவத்தையும்‌, நியாயமின்றி வரம்பு மீறுவதையும்‌, எது பற்றி அல்லாஹ்‌ எந்த ஆதாரத்தையும்‌ இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாக்குவதையும்‌, நீங்கள்‌ அறியாததை அல்லாஹ்வின்‌ மீது இட்டுக்கட்டிக்‌ கூறுவதையுமே என்‌ இரட்சகன்‌ தடை செய்துள்ளான்‌ என்று (முஹம்மதே!) நீர்‌ கூறுவீராக!
(அல்‌அஃராஃப்‌: வசனம்‌ : 33).

எந்த வகையிலும்‌ எவ்விதக்‌ குறைபாடோ, குறைவோ அற்ற அழகிய பெயர்கள்‌ அல்லாஹ்வுக்கு இருப்பதாகவும்‌, அவனது படைப்புகளில்‌ எவரும்‌ அவற்றில்‌ அவனுடன்‌ கூட்டுச்‌ சேரவோ, நிகராகவோ முடியாது என்றும்‌ உறுதியாக நம்புதல்‌.

உதாரணமாக (அல்‌ ஹய்யு) என்ற பெயரை எடுத்துக்‌ கொள்ளலாம்‌. “என்றும்‌ உயிருடன்‌ இருப்பவன்‌” என்ற பொருளுடைய இப்பெயர்‌ அல்லாஹ்வின்‌ பெயர்களில்‌ ஒன்றாகும்‌. அது குர்‌ஆனிலும்‌, ஹதீஸிலும்‌ வந்திருப்பது போன்று நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

இரண்டாவது விதி : அஸ்மா, ஸிஃபாத்தை மறுப்பது
குஃப்ராகும்‌. 
“அவர்கள்‌ அர்ரஹ்மானை நிராகரிக்கின்றனர்‌” என்பதாகக்‌ குறிப்பிடுகின்றான்‌. (அர்ரஃத்‌: வசனம்‌: 30)

இந்த அடிப்படையில்‌ பார்க்கின்ற போது ஒருவரிடம்‌ அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ சார்ந்த நிராகரிப்பு காணப்படுகின்றபோது அது வழிகேட்டையும்‌, சிலபோது குஃப்ரையும்‌ ஏற்படுத்தும்‌ என்பதை அறியலாம்‌.

மூன்றாவது விதி : (இது பல கிளைகளையுடைய ஒரு விதியாகும்‌)

முதலாவது கிளை: அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌ அனைத்தும்‌ அழகில்‌ அதன்‌ உச்சத்தைத்‌ தொட்டவையாகவும்‌, எந்தரீதியிலும்‌ எவ்விதக்‌ குறைபாடுகளும்‌ அற்றவையாகவுமே இருக்கின்றன.

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள்‌ இருக்கின்றன.
(அல்‌அஃராஃப்‌: 180)

இதற்கு உதாரணமாக: அல்லாஹ்வின்‌ திருநாமங்களில்‌ ஒன்றான, அர்ரஹ்மான்‌ என்ற பெயரை எடுத்துக்கொள்ளலாம்‌. இது கருணை என்ற அல்லாஹ்வின்‌ மகத்தான ஒரு பண்பை எடுத்துக்‌ கூறுகின்றது. அதுவே “அர்ரஹ்மான்‌” எனும்‌ விசாலமான கருணையாரகும்‌.

அதற்காக காலத்தைத்‌ திட்டாதீர்கள்‌; அல்லாஹ்‌ காலமாக இருக்கின்றான்‌. (முஸ்லிம்‌) என்ற ஹதீஸின்‌ அடிப்படையில்‌ “அத்தஹ்ர்‌” “காலம்‌” என்ற பெயரும்‌ அல்லாஹ்வுக்கு இருப்பதாக விளங்கிக்‌ கொள்ளக்கூடாது. ஏனெனில்‌ மற்றொரு ஹதீஸின்‌ அறிவிப்பில்‌ இரவையும்‌, பகலையும்‌ மாறிமாறிவரச்‌ செய்கின்ற அதிகாரம்‌ என்‌ கைவசமே இருக்கின்றது என இடம்‌ பெற்றுள்ளது. ஆகவே “அல்லாஹ்‌ காலத்தை நிர்வகிப்பவன்‌” என்ற விளக்கமே இங்கு பொருத்தமானதாகும்‌.

இரண்டாவது கிளை : அல்லாஹ்வின்‌ திருநாமங்களுக்குக்‌ குறிப்பிட்ட எண்ணிக்கை கிடையாது. இதற்குப்‌ பின்வரும்‌ ஹதீஸை ஆதாரமாகக்‌ கொள்ளலாம்‌.

அல்லாஹ்வே! நான்‌ உனது அடியான்‌, உனது ஆண்‌ அடிமையின்‌ மகன்‌, உனது பெண்‌ அடிமையின்‌ மகன்‌, எனது நெற்றி முடி உன்கையில்‌ இருக்கின்றது, உனது சட்டம்‌ என்னில்‌ செல்லுபடியாகக்‌ கூடியதே! உனது தீர்ப்பு என்னில்‌ நீதியானதாகும்‌, நீ உனக்கென சூட்டிக்கொண்ட, அல்லது நீ உன்‌ வேதத்தில்‌ இறக்கிய, அல்லது உனது படைப்புக்களில்‌ ஒருவருக்குக்‌ கற்றுத்‌ தந்த, அல்லது மறைவான ஞானத்தில்‌ நீ தேர்வு செய்து வைத்துள்ள அனைத்துத்‌ திருநாமங்களைக்‌ கொண்டும்‌ உன்னிடம்‌ வேண்டுகின்றேன்‌. (முஸ்னத்‌ அஹ்மத்‌, இப்னு ஹிப்பான்‌).

மேற்கண்ட பிரார்த்தனையில்‌ அல்லாஹ்‌ தனது மறைவான ஞானத்தில்‌ தேர்வு செய்து வைத்திருக்கும்‌ திருநாமங்கள்‌. எனப்‌ பொதுப்படையாக இடம்‌ பெறுவதைக்‌ கவனத்தில்‌ கொண்டு அறிஞர்கள்‌ இந்த முடிவிற்கு வருகின்றனர்‌.

“அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள்‌ இருக்கின்றன; அவற்றை (பொருள்‌ அறிந்து) மனனம்‌ செய்து, மதிப்பிட்டுக்‌ கொள்வோர்‌ சுவர்க்கத்தில்‌ பிரவேசிப்பர்‌: (புகாரீ, 2531, முஸ்லிம்‌, 4835, 4836).
என நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறிய செய்திக்கும்‌ மேற்படி ஹதீஸிற்கும்‌ இடையில்‌ முரண்பாடு போன்றுள்ளதே இதனை எவ்வாறு அணுகுவது? என்ற கேள்வி எழலாம்‌.

பதில்‌ : அந்த ஹதீஸில்‌ தொண்ணூற்று ஒன்பது (99) பெயர்களைக்‌ கொண்டு மாத்திரம்‌ அல்லாஹ்வின்‌ திருநாமங்கள்‌ மட்டிடப்பட்டுள்ளதாகவோ, அவை அல்லாத வேறு பெயர்கள்‌ அவனுக்கு இல்லை என்றோ வரையறுத்துக்‌ கூறப்படவில்லை. மாறாக அவை, அவனது பெயர்களில்‌ உள்ளவையாகத்தான்‌ கூறப்பட்டுள்ளன.

இதைச்‌ சாதாரண உதாரணத்தின்‌ மூலம்‌ புரியலாம்‌. ஒருவர்‌ தம்மிடம்‌ தர்மம்‌ செய்வதற்கென நூறு தீனார்களை, அல்லது ரூபாய்களை வைத்திருப்பதாகக்‌ கூறினால்‌ அவரிடம்‌ மற்றைய செலவீனங்களுக்கு வேறு நாணயங்கள்‌ இல்லை என எவ்வாறு பொருள்‌ கொள்ள முடியாதோ, அதே போன்றுதான்‌ இந்த ஹதீஸின்‌ பொருளையும்‌ எடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌.
(இப்னு உஸைமீன்‌)

மூன்றாவது கிளை: அல்லாஹ்வின்‌ திருநாமங்கள்‌ தவ்கீஃபி வகை சார்ந்ததாகும்‌.

அதாவது அவை  “அல்குர்‌ஆனிலும்‌, நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ பொன்‌ மொழிகளிலும்‌ இடம்‌ பெற்றிருப்பது போன்று எவ்விதக்‌ கூடுதல்‌, குறைவுமின்றி, பொருள்‌ சிதைவின்றி, உள்ளதை உள்ள படி, பகுத்தறிவால்‌ நிலைப்படுத்துவதற்கு மாறாக, மார்க்க அடிப்படையைத்‌ தழுவி நிலைப்படுத்தப்படல்‌ வேண்டும்‌ என்பதாகும்‌. அதற்கு தவ்கீஃபி எனக்‌ கூறப்படும்‌.

அவற்றைப்‌ பகுத்தறிவால்‌ அறிவது சாத்தியமற்ற ஒன்றாகும்‌. பகுத்தறிவால்‌ அறிய முற்படுவதால்‌ அல்லாஹ்‌ தனக்கு சூட்டாத ஒன்றை நாம்‌ சூட்டும்‌ நிலையும்‌, அல்லது அவனது திருநாமங்களில்‌ ஒன்றை நாம்‌ நிராகரிக்கும்‌ நிலையும்‌ உருவாகும்‌.

எனவே அல்லாஹ்வுடன்‌ தொடர்புடைய இந்த விசயத்தில்‌ நாகரிகம்‌, பண்பாடு பேணி நடந்து கொள்வது அவசியமாகும்‌.

உதாரணமாக  “ஆரம்பமானவன்‌, என்ற பொருளில்‌ உபயோகிப்பதற்காக நம்‌ நாட்டு அரபுக்கல்லூரிகளில்‌ கற்பிக்கப்படுகின்ற “கதீம்‌” ‌“பழமையானவன்‌” அல்லது முதன்மையானவன்‌. என்ற பொருளைக்‌ கொண்ட பெயரையும்‌,

(متكلم) பேசுபவன்‌ (مريد) நாடுபவன்‌ என்ற பெயரையும்‌, الصانع உற்பத்தியாளன்‌ என்ற பெயரையும்‌ எடுத்துக்‌ கொள்ளலாம்‌. இவ்வாறான பெயர்கள்‌, அல்குர்‌ஆனிலோ, நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ ஆதாரப்பூர்வமான பொன்மொழிகளிலோ இடம்பெறாத காரணத்தினால்‌ அவற்றை அல்லாஹ்வின்‌ திருநாமங்களில்‌ உள்ளவையாக எடுத்துக்‌ கொள்ள முடியாது.

அல்கதீம்‌ -பழமையானவன்‌- என்ற பொருள்‌ கொண்ட சொல்லை ஆரம்பமானவன்‌ என்ற பொருளில்‌ விளக்கும்‌ நோக்கில்‌ குதர்க்கவாதிகள்‌ என இமாம்களால்‌ வரலாற்றில்‌ அடையாளம்‌ காட்டப்பட்ட -முதகல்லிமீன்‌- அஹ்லுல்கலாம்‌- எனப்படுவோர்‌ அல்லாஹ்வின்‌ திருநாமங்களில்‌ ஒன்றாக உபயோகித்துள்ளனர்‌.

இது அல்லாஹ்வின்‌ பெயர்களுள்‌ ஒன்றாக இடம்‌ பெறவில்லை, அரபியர்களின்‌ வழக்கில்‌ “கதீம்‌” என்ற சொல்‌ மற்றதைவிட முந்தியது என்ற அர்த்தம்‌ கொள்ளப்படுகின்றது. பழமையானது, புராதனமிக்கது, ஆதியானது என்பதைக் குறிக்கவும்‌ அந்தச்‌ சொல்‌ பாவிக்கப்படுகின்றது.

படைப்புகளில்‌ பழமை வாய்ந்தவை என்பதைக்‌ குறிக்கவும்‌, புதியதை முந்தியது என்பதைக்‌ குறிக்கவும்‌ “அல்கதீம்‌” என்ற சொல்‌ இடம்‌ பெற்றிருப்பது கவனிக்கத்தக்கதாகும்‌.

அவர்கள்‌ (தந்தையே) நீங்கள்‌ உங்கள்‌ பழைய கொள்கையில்தான்‌ (யூசுஃபை நேசிக்கும்‌ தவறில்தான்‌) இருக்கின்றீர்கள்‌ என அவர்கள்‌ கூறினர்‌. (யூசுஃப்‌: 95)

“நாம்‌ சந்திரனைப்‌ பல படித்தரங்களை உடையதாக நிர்ணயித்துள்ளோம்‌. அது பழைய (வளைந்த, காய்ந்து, சுருண்ட) பேரீச்சம்‌ பாளை போன்று (பிறையாக) ஆகும்‌ வரை (யாசீன்‌: 39)

இங்கு “அல்கதீம்‌” என்பது முந்தைய ஒரு செய்தியைக்‌
குறிக்கப்‌ பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்‌.

இந்த அடிப்படையில்தான்‌ இமாம்‌ ஷாஃபிஈ (ரஹ்‌) போன்ற அறிஞர்களின்‌ கூற்றை விளக்குகின்ற போது கதீம்‌ ஆரம்பமாகக்‌ கூறியது, ஜதீத்‌- புதிதாகக்‌ கூறியது என்ற பொருளில்‌ உபயோகித்திருக்கின்றனர்‌.

இது பற்றி விளக்குகின்ற சவூதி அரேபிய அறிஞர்களுள்‌ ஒருவரான ஸாலிஹ்‌ ஆலுஷ்‌ ஷேக்‌ அவர்கள்‌:

இவ்வாறான பெயர்களை சலபுகளிலும்‌, ஹலஃபுகளிலும்‌ உள்ள பெரும்பான்மையான அறிஞர்கள்‌ மறுத்துரைத்துள்ளனர்‌. அவர்களுள்‌ இப்னு ஹஸ்ம்‌ என்பவரும்‌ ஒருவராவார்‌.

அதனால்‌ தான்‌ “ஷரஹுல்‌ அகீததித்‌ தஹாவிய்யா, என்ற நூலின்‌ ஆசிரியர்‌ ஆரம்பம்‌ கூறமுடியாத ஆரம்பமானவன்‌ என விதிவிலக்களித்து பாடத்தலைப்பிட்டுள்ளதைப்‌ பார்க்கின்றோம்‌ என விளக்கியுள்ளார்கள்‌.  - صالح آل الشيخ - (ج 1 / ص 31

இமாம்‌ அபுல்மஆலீ அல்ஜுவைன்‌ (ரஹ்‌) அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ எடுக்கப்படுவது பற்றிப்‌ பின்வருமாறு விளக்குகின்றார்கள்‌.

அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகளில்‌ பொதுப்படையாக வந்துள்ளதை நாமும்‌ அவ்வாறே பொதுப்படையாகக்‌ கூறவேண்டும்‌; பொதுவாக மார்க்கம்‌ தடுத்துள்ளதை நாமும்‌ தடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌. எதில்‌ அனுமதி, மற்றும்‌ தடை வரவில்லையோ அதில்‌ நாம்‌ ஹலால்‌, ஹராம்‌ என்ற தீர்ப்பிற்கு வரக்‌ கூடாது. ஏனெனில்‌ மார்க்கம்‌ தொடர்பான சட்டங்கள்‌ மார்க்கத்தின்‌ மூலாதாரங்களில்‌ இருந்தே பெறப்படுகின்றன. நாம்‌ ஹலால்‌, அல்லது ஹராம்‌ என்று தீர்ப்பளிப்பதனால்‌ மார்க்கத்தின்‌ அடிப்படையில்‌ இல்லாத ஒரு சட்டத்தை
நிலைப்படுத்தியவர்களாகி விடுவோம்‌. (ஷரஹ்‌ ஸஹீஹ்‌
முஸ்லிம்‌).

இங்கு, அல்லாஹ்வுக்குரிய பெயர்களாக இருந்தாலும்‌ அது மார்க்க அடிப்படை மூலாதாரங்களில்‌ இருந்து வந்திருக்க வேண்டும்‌ என்பதை விளக்க வருகின்றார்கள்‌.

அது மாத்திரமல்லாது, அவை மார்க்கத்தின்‌ அடிப்படையில்‌ இல்லாத போது அல்லாஹ்வுக்கு ஒரு பெயரை ஆதாரமின்றித்‌ தன்னிச்சையாக நாமே நிலைப்படுத்துவதால்‌ ஏற்படும்‌ விபரீதம்‌ என்னவென்றும்‌ விளக்கியுள்ளார்கள்‌.

நான்காவது கிளை: அல்லாஹ்வின்‌ திருநாமங்கள்‌ ஒவ்வொன்றும்‌ அவனது தனித்துவமான (தாத்தின்‌) எதார்த்தமான உள்ளமையின்‌ மீதும்‌, அது பொதிந்திருக்கும்‌ பண்பின்‌ மீதும்‌ அறிவிப்பவையாகும்‌. அதனால்‌ அது பிறர்‌ மீது தாக்கம்‌ ஏற்படுத்தவல்லதாக இருப்பின்‌ அது பற்றியும்‌ நம்பிக்கை கொள்ளாது ஈமான்‌ முழுமை பெறுவதில்லை.

உதாரணமாக: “அல்‌அளீம்‌” என்ற பெயரை எடுத்துக்‌ கொள்ளலாம்‌. அதை அல்லாஹ்வின்‌ திருநாமங்களில்‌ ஒன்றாகவும்‌, அது அவனது யதார்த்தத்தின்‌ மீது அறிவிக்கக்‌ கூடியதாகவும்‌ “அல்‌அள்மஹ்‌” ((العظمة)) எனப்படும்‌ “மகத்துவம்‌, கண்ணியம்‌” என்ற உயர்வான பண்பின்மீது அறிவிக்கக்கூடியதாகவும்‌ இருக்கின்றது.

இது அவனில்‌ நிலை பெற்றிருக்கும்‌ பண்புகளுள்‌ ஒரு பண்பாகும்‌. அறிஞர்கள்‌ இதற்கு “அஸ்ஸிஃபதுல்லாஸிமா”, அல்லாஹ்வின்‌ அவசியமான பண்புகள்‌, எனப்‌ பெயரிட்டுள்ளனர்‌.

பிறர்‌ மீது தாக்கம்‌ செலுத்தும்‌ பெயருக்கு உதாரணமாக அர்ரஹ்மான்‌, “மிகப்பெரும்‌ கருணையாளன்‌. என்ற பொருளுடைய பெயரை எடுத்துக்‌ கொள்ளலாம்‌.

அது அல்லாஹ்வின்‌ யதார்த்தத்தின்‌ மீது அறிவிக்கின்ற
பெயர்களுள்‌ ஒரு பெயராகவும்‌, “அர்ரஹ்மான்‌” “அன்பு” “கருணை” என்ற பண்பின்‌ மீது அறிவிக்கின்ற ஒன்றாகவும்‌ இருப்பது மட்டுமின்றி, அக்கருணையானது பிறர்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌ அமைந்திருப்பதையும்‌ அறிவிக்கின்றது. இதனை அறிஞர்கள்‌ “அஸ்ஸிஃபதுல்‌ முதஅத்தியா, என அழைக்கின்றனர்‌. இப்பண்புகளை நம்பிக்கை கொள்ளாமல்‌ இறைநம்பிக்கை பூரணம்‌ அடைவதில்லை.

அல்லாஹ்வின்‌ திருநாமங்களை உறுதி செய்கின்றபோது பின்வரும்‌ அம்சங்கள்‌ கவனத்தில்‌ கொள்ளப்படல்‌ வேண்டும்‌.

1) அல்குர்‌ஆனிலும்‌, நபி (ஸல்‌) அவர்களின்‌ வழி காட்டுதலிலும்‌ இடம்‌ பெறும்‌ அனைத்துத்‌ திருநாமங்களையும்‌ எவ்விதக்‌ கூடுதல்‌ குறைவின்றி நம்புதல்‌.

அவனே அல்லாஹ்‌. அவன்‌ எத்தகையவன்‌ எனில்‌ அவனைத்‌ தவிர வணங்கப்படுவதற்குத்‌ தகுதியானவன்‌ யாருமில்லை. (அவன்‌) பேரரசன்‌, பரிசுத்தமானவன்‌, நிம்மதியளிப்பவன்‌, அடைக்கலம்‌ தருபவன்‌, கண்காணிப்பவன்‌ (யாவரையும்‌) மிகைத்தோன்‌. அடக்கிஆள்பவன்‌. பெருமைக்குரியவன்‌, அவர்கள்‌ இணைவைப்பதைவிட்டு அல்லாஹ்‌ தூயவன்‌.
(அல்ஹஷ்ர்‌: 23).

ஒரு மனிதர்‌ “யா அல்லாஹ்‌! நீ புகழுக்குரியவன்‌. நீயே வணக்கத்திற்குத்‌ தகுதியானவன்‌. பேருபகாரம்‌ புரிபவன்‌, வானங்களையும்‌, பூமியையும்‌ முன்‌ உதாரணமின்றிப்‌ படைத்தவனே! மாட்சிமையும்‌, சங்கையும்‌ மிக்கவனே! என்றும்‌ உயிர்வாழ்பவனே! (பேரண்டம்‌ முழுவதையும்‌) நிர்வகிப்பவனே! எனக்‌ கூறிப்‌ பிரார்த்திப்பதைக்‌ கண்ட நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌:

இவர்‌ அல்லாஹ்வை எதன்‌ பொருட்டால்‌ பிரார்த்தித்துள்ளார்‌ என்பதை நீங்கள்‌ அறிவீர்களா? என அவர்‌(நபித்தோழர்‌)களிடம்‌ வினவினார்கள்‌. அதற்கு “அல்லாஹ்வும்‌, அவனது தூதருமே அறிவர்‌” என அவர்கள்‌ பதிலளித்தனர்‌. உடனே அவர்கள்‌, “எனது உயிர்‌ எவன்‌ கைவசம்‌ இருக்கின்றதோ அவன்‌ மீது சத்தியமாக! நிச்சயமாக இவர்‌ எந்தப்பெயரின்‌ பொருட்டால்‌ பிரார்த்தனை செய்வதால்‌ பதிலளிக்கப்படுமோ, எப்பெயரின்‌ பொருட்டால்‌ கேட்பதால்‌ அதற்காகக்‌ கொடுக்கப்படுமோ அவ்வளவு மகத்துவம்‌ வாய்ந்த அல்லாஹ்வின்‌ திருநாமத்தின்‌ பொருட்டால்‌ அவனிடம்‌ பிரார்த்தனை செய்துள்ளார்‌” எனக்‌ கூறினார்கள்‌. (அபூதாவூத்‌, 1276, அஹ்மத்‌, 13081, 13297)

2) இந்தப்‌ பெயர்களை அல்லாஹ்வே தனக்குச்‌ சூட்டி இருக்கின்றான்‌. அவனது படைப்புகள்‌ யாரும்‌ அவனுக்குப்‌ பெயர்‌ சூட்டவில்லை. அவன்‌ அவற்றைக்‌ கொண்டே தன்னைப்‌ புகழ்ந்துரைத்துள்ளான்‌ என்றும்‌, அவற்றுள்‌ எதுவும்‌ புதிதாக தோற்றம்‌ பெற்றவை அல்ல என்றும்‌ நம்புதல்‌.

3) அல்லாஹ்வின்‌ அழகிய பெயர்கள்‌ எந்த ரீதியிலும்‌ எவ்விதக்‌ குறைபாடுகளும்‌ அற்ற பூரணத்தன்மையில்‌ உச்சநிலையில்‌ காணப்படும்‌ பொருள்கள்‌ மீது அறிவிப்பவையாகும்‌ என நம்புவதோடு, அந்தப்‌ பெயர்களை நம்புவது போன்று அதன்‌ கருத்துகளையும்‌ நம்புவது அவசியமாகும்‌.

4) அப்பெயர்களின்‌ யதார்த்தமான கருத்துகளுக்கு மதிப்பளிப்பதுடன்‌, அவற்றைத்‌ திரித்துக்‌ கூறாமலும்‌, அதன்‌ தத்ரூபமான கருத்துகளைச்‌ சிதைக்காமலும்‌ இருத்தல்‌.

5) அந்தப்‌ பெயர்கள்‌ வேண்டி நிற்கும்‌ சட்டங்களையும்‌,
அவற்றில்‌ இருந்து வெளிப்படும்‌ செயற்பாடுகள்‌, தாக்கங்கள்‌ ஆகியவற்றையும்‌ நம்புதல்‌.

மேற்கூறப்பட்ட ஐந்து அம்சங்களும்‌ தெளிவாக விளங்குவதற்காக அல்லாஹ்வின்‌ பெயர்களுள்‌ ஒன்றான, அஸ்ஸமீஉ, செவியேற்பவன்‌ என்ற பொருள்‌ கொண்ட பெயரை உதாரணமாகக்‌ கொண்டு விளங்க முற்படுவோம்‌.

அல்குர்‌ஆனிலும்‌, நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ பொன்‌ மொழிகளிலும்‌ இப்பெயர்‌ இடம்‌ பெறுகின்ற காரணத்தால்‌ அது அல்லாஹ்வின்‌ அழகிய திருநாமங்களுள்‌ ஒன்று என நம்புதல்‌.

அல்லாஹ்வே மேற்கண்ட பெயரைத்‌ தனக்குச்‌ சூட்டியுள்ளதாகவும்‌, அதனைக்‌ கொண்டு தன்னை அவன்‌ அழைத்திருப்பதாகவும்‌, சங்கைமிக்க அவனது வேதத்தில்‌ அதனை இறக்கியுள்ளான்‌ என்றும்‌ நம்புதல்‌.

அஸ்ஸமீஉ செவியேற்பவன்‌ என்ற இப்பெயர்‌, ஸம்‌ஃ செவிமடுத்தல்‌ - எனும்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளில்‌ உயர்வான ஒரு பண்பை மனிதப்‌ பண்புகளுக்கு ஒப்பிடாது உள்ளடக்கியுள்ளதாக நம்புதல்‌.

அஸ்ஸமீஉ என்ற பெயரிலிருந்து பெறப்பட்ட சம்‌உ (செவியுறுதல்‌) எனும்‌ பண்புக்கு மதிப்பளிப்பதுடன்‌, அதன்‌ கருத்தைத்‌ திரித்துக்‌ கூறாமலும்‌, அதனைப்‌ பாழடிக்காமலும்‌, வெளிப்படையான பொருளில்‌ நம்புதல்‌.

மனிதனது சகல அசைவுகளையும்‌ அல்லாஹ்‌ செவியுறுகிறான்‌ என்றும்‌, அவனது அனைத்துச்‌ சப்தங்களையும்‌ அல்லாஹ்வின்‌ செவிப்புலன்‌ வியாபித்துள்ளது என்றும்‌ ஒருவன்‌ நம்புகிற போது தவறான பேச்சுக்களைத்‌ தவிர்ப்பதற்கு வழிவகுப்பது மட்டுமின்றி, அல்லாஹ்வின்‌ கேள்விப்புலனை விட்டு எந்த ஒன்றும்‌ மறைய முடியாது என்ற பூரண நம்பிக்கை மனித உள்ளங்களில்‌ வளர்க்கப்படுகின்றது. அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ இவ்வாறான உயர்ந்த பண்புகளைத்தான்‌ அடியார்களிடம்‌ ஏற்படுத்துகின்றன.

ஒரு பெயர்‌ அல்லாஹ்வின்‌ பெயரில்‌ உள்ளடக்கப்பட மூன்று விதிமுறைகள்‌ அவசியமாகும்‌

1) அல்லாஹ்வின்‌ பெயரானது அல்குர்‌ஆனிலும்‌, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும்‌ இடம்பெற்ற பெயர்ச்‌ சொல்லாக இருப்பதோடு, அது வினைச்‌ சொல்லில்‌ இருந்தோ, அல்லது பெயர்‌ வினைச்சொல்லான மூலச்‌ சொல்லில்‌ இருந்தோ எடுக்கப்படாதிருத்தல்‌.

உதாணரமாக பஸீர்‌ பார்ப்பவன்‌ என்ற சொல்லை எடுத்துக்‌ கொண்டால்‌ இது அல்லாஹ்வின்‌ உயரிய திருநாமங்களில்‌ ஒன்றாகும்‌. இப்பெயரில்‌ இருந்து அல்பஸர்‌ஃ, பார்வை என்ற பண்பு பெறப்படுகின்றது.

அதேவேளை,

كلم பேச்சு,

إرادة நாட்டம்‌,

مشيئة நாட்டம்‌, விருப்பம்‌

போன்ற பண்புகளில்‌ இருந்து அவற்றின்‌ பெயர்களாக
متكلم என்ற சொல்லோ, அல்லது مريد என்பதோ, அல்லது شاٍء என்பதோ அல்லாஹ்வின்‌ பெயர்களாக எடுக்கப்படுவதில்லை என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்க.

2) அதைக்‌ கொண்டு (துஆ) பிரார்த்திக்கப்படல்‌ வேண்டும்‌. (உதாரணமாக ரஹ்மான்‌, ரஹீம்‌, கரீம்‌, மன்னான்‌, கஃபூர்‌...) இவை யா ரஹ்மான்‌!, யா ரஹிம்‌! யாகரீம்‌, யாமன்னான்‌ என்று அவனை அழைத்துப்‌ பிரார்த்திக்க இயலுகின்ற பெயர்களாகும்‌.

3) அவை எல்லா வகையிலும்‌ புகழையும்‌, பூரணத்‌ தன்மையையும்‌ உள்ளடக்கியதாக இருத்தல்‌. (ஸாலிஹ்‌ ஆலுஷ்ஷேக்‌: அல்‌அகீதா அத்தஹாவிய்யா 33-1)

மற்றொரு விதி:
அல்லாஹ்வின்‌ பெயர்‌ பொதுப்படையாக வருகின்ற போது அதில்‌ இருந்து பெயர்வினைச்‌ சொல்‌, வினைச்‌ சொல்‌ என்பவற்றை எடுக்க முடியும்‌. அவற்றைக்‌ கொண்டு அல்லாஹ்வைப்‌ பற்றி அறிவிக்க முடியும்‌.

உதாரணமாக (செவியேற்பவன்‌) சமீஉ என்ற பெயரை எடுத்துக்‌ கொண்டால்‌ அது பொதுவாக இடம்‌ பெறுவதால்‌ இதில்‌ இருந்து சமிஅ - செவியேற்றான்‌ என்ற வினைச்‌ சொல்‌, சம்வுன்‌ என்ற பெயர்‌ வினைச்சொல்‌ ஆகிய இரண்டையும்‌ எடுத்துக்‌ கொள்ளலாம்‌.

பஸீர்‌, மற்றும்‌ கதீர்‌ போன்ற பெயர்களோடும்‌ இவ்வாறே அணுக வேண்டும்‌. இதற்கு வினைச்‌ சொல்‌ பிறர்வினைச்‌ சொல்லாக இருக்க வேண்டும்‌.

உதணாரமாக அத்‌:58 வச:1, அத்‌:77 வச:33 இடங்களில்‌ இடம்‌ பெறும்‌ வினைச்‌ சொற்களை ஆதாரமாகக்‌ கொள்ள முடியும்‌.

அதேவேளை, வினைச்‌ சொல்‌ தன்வினை சார்ந்ததாக இருப்பின்‌ அதனைக்‌ கொண்டு அல்லாஹ்வைப்‌ பற்றி அறிமுகம்‌ செய்ய முடியாது. உதாரணமாக அல்ஹய்யு (என்றும்‌ உயிருள்ளவன்‌) என்ற சொல்லை எடுத்துக்‌ கொள்ளலாம்‌. இதில்‌ இருந்து பெயர்ச்சொல்‌, மற்றும்‌ பெயர்‌ வினைச்‌ சொல்‌ என்பவற்றை மட்டும்‌ எடுக்கலாம்‌. ஆனால்‌ உயிர்‌ வாழ்ந்தான்‌ என்ற இறந்தகாலச்‌ சொற்களை எடுக்க முடியாது. (இப்னுல்‌ கய்யிம்‌: பதாயிவுல்‌ ஃபவாயித்‌)


அல்லாஹ்வைப்‌ பற்றி அறிமுகம்‌ செய்வதன்‌ விதிமுறை

அல்லாஹ்வைப்‌ பற்றி அறிவிக்கும்‌ வாயில்‌ விசாலத்‌ தன்மை கொண்டதாகும்‌. அதில்‌ அஸ்மா, ஸிஃபாத்தில்‌ இடம்‌ பெறும்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ உட்பட இடம்பெறும்‌.

உதணாரமாக அஷ்ஷைவு (குறித்த ஒரு பொருள்‌, குறித்த ஒருவன்‌) மவ்ஜுத்‌, (இருப்பவன்‌), அல்காயிம்‌ பினஃப்சிஹி (தானே நிலையானவன்‌) போன்ற சொற்களைக்‌ கொண்டு அல்லாஹ்வைப்‌ பற்றி அறிவிப்பதைக்‌ கொள்ளலாம்‌.

இவற்றைப்‌ பயன்படுத்தி அல்லாஹ்வைப்‌ பற்றி அறிமுகப்படுத்தலாம்‌. ஆனால்‌ அவை அல்லாஹ்வின்‌ அழகிய பெயர்கள்‌, அவனது உயரிய பண்புகளில்‌ உள்ளடங்கமாட்டாது.

அஸ்மா, ஸிஃபாத்‌ தஃகீஃபீ சார்ந்ததாகும்‌. எனினும்‌ அல்லாஹ்வைப்‌ பற்றிய அறிவிப்பானது தவ்ஃகீபீ சார்ந்தது அல்ல. அவனைச்‌ சுட்டிக்காட்டுகின்ற பெயர்கள்‌, பண்புகள்‌ கொண்டு அவனை அறிமுகப்படுத்தலாம்‌.

அஸ்மா, ஸிஃபாத்‌ இரு வகைப்படும்‌.

முதலாவது வகை: அல்லாஹ்வுடன்‌ மட்டும்‌ தொடர்பானது. உதாரணமாக அல்‌இலாஹ்‌, ரப்புல்‌ ஆலமீன்‌ போன்ற பெயர்கள்‌, பண்புகள்‌. இவை எந்த வகையிலும்‌ அடியார்களுக்கு உரித்தாக முடியாது. இந்த அம்சத்தில்தான்‌ இணைவைப்பாளர்கள்‌ வழிகெட்டனர்‌; அல்லாஹ்வுக்கு இணை வைத்தனர்‌.
(இப்னு தைமிய்யா : மின்ஹாஜுஸ்ஸுன்னா அந்நபவிய்யா)

இரண்டாவது வகை: ஒட்டு மொத்த அடியார்களும்‌ பொதுவாக வர்ணிக்கப்படுகின்ற, பெயர்களில்‌ மட்டும்‌ கூட்டுச்‌ சேர்கின்ற பெயர்கள்‌, பண்புகள்‌. உதாரணமாக அல்ஹய்‌, அல்‌ஆலிம்‌, அல்காதிர்‌ போன்ற பெயர்கள்‌; அவற்றில்‌ எடுக்கப்படும்‌ பண்புகள்‌.

இவற்றில்‌ அல்லாஹ்வுக்கென வழங்கப்படுகின்ற தனித்துவமான தன்மைகளை அடியார்களுக்கென்று வழங்கிவிடமுடியாது. பொதுவாகப்‌ பண்புகள்‌ சமநிலைப்படுத்தி நிலைப்படுத்துவதனால்‌ ஒருவருக்கு இருப்பது போன்ற பண்பு மற்றவருக்கும்‌ இருக்கின்றது என்றாகிவிடும்‌. அவரிடம்‌ இருக்க முடியாத ஒரு பண்பு மற்றவரிடமும்‌ இருக்க முடியாதது என்றாகிவிடும்‌. இதனால்‌ இரு முரண்பாடுகள்‌ ஒன்றிணைவதை அவசியப்படுத்தும்‌ நிலை தோன்றுகின்றது. அதனால்‌ அல்லாஹ்வின்‌ விஷயத்தில்‌ இது செல்லுபடி அற்றதாகும்‌.
(இப்னு தைமிய்யா: மின்ஹாஜுஸ்ஸ ன்னா அந்நபவிய்யா)


அல்லாஹ்வின்‌ ஸிஃபாத்‌ (பண்புகள்‌) பற்றிய விதிகள்‌ வரைவிலக்கணம்‌ :

அல்குர்‌ஆனிலும்‌, நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ பொன்மொழிகளிலும்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளாக இடம்‌ பெறுகின்ற அனைத்து விதமான பண்புகளையும்‌ கருத்துச்‌ சிதைவின்றி நம்பிக்கை கொள்வதாகும்‌.

அல்லாஹ்‌ அல்குர்‌ஆனில்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றான்‌.

அல்லாஹ்வுக்கு உயரிய பண்புகள்‌ உள்ளன. (அந்நஹ்ல்‌: வச: 60)

மற்றோரிடத்தில்‌:

வானங்கள்‌, பூமியில்‌ அவனுக்கு உயர்ந்த பண்புகள்‌ உண்டு. (அர்ரூம்‌: 27)

“அல்லாஹ்வின்‌ கை கட்டப்பட்டுள்ளது” என்று யூதர்கள்‌ கூறுகின்றனர்‌. அவர்களின்‌ கைகளே கட்டப்பட்டிருக்கின்றன. அவர்களின்‌ இக்கூற்றினால்‌ அவர்கள்‌  சபிக்கப்பட்டனர்‌. அவ்வாறன்று; அவனது இரு கைகளும்‌ விரிக்கப்பட்டே இருக்கின்றன. அவன்‌ நாடியவாறு அள்ளிவழங்குவான்‌. (அல்மாயிதா. வச :64) என்ற வசனத்தை உதாரணமாக எடுத்துக்‌ கொள்ளலாம்‌.

மேற்கண்ட வசனத்தில்‌ அல்லாஹ்வின்‌ “இரு கரங்கள்‌” என்று இடம்‌ பெற்றிருப்பதை மனிதக்‌ கரங்களுக்கு ஒப்பிடாது, வடிவம்‌ கொடுக்காது, வெளிப்படையாக இருப்பது போன்று அவனது தகுதிக்குத்‌ தோதுவாக அவற்றைக்‌ “கரம்‌” என்று நிலைப்படுத்துவதே அல்லாஹ்‌ இறக்கிய வேதத்தை நம்பியதாகக்‌ கொள்ளப்படும்‌.

“கரங்கள்‌” என்ற பெயரில்‌ மட்டும்‌ மனிதக்‌ கரங்களுக்கும்‌ அல்லாஹ்வின்‌ கரங்களுக்கும்‌ இடையில்‌ ஒற்றுமை காணப்பட்டாலும்‌, அதன்‌ யதார்த்த நிலை பற்றி அல்லாஹ்வை அன்றி வேறு எவராலும்‌ அறியமுடியாது.

எனவே நமது கற்பனைகளுக்குத்‌ தென்படாத, அவனது தகுதிக்கே உரிய இரு கரங்கள்‌ அவனுக்குண்டு என்பதை நம்புவது நமது கடமையாகும்‌. அல்லாஹ்வின்‌ சகல பண்புகளிலும்‌ இதைக்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌.

மற்றோர்‌ உதாரணமாக “அர்ரஹ்மானாகிய அவன்‌ (அல்லாஹ்‌) அர்ஷின் மீதானான்‌” என்ற அல்குர்‌ஆன்‌ வசனத்திற்குத்‌ தரப்பட்டுள்ள தஃப்சீர்‌ அல்ஜலாலைன்‌ என்ற கிரந்தத்தில்‌ இடம்‌ பெறும்‌ விளக்கத்தை எடுத்துக்‌ கொள்ளலாம்‌.

 {الرحمن َعَلى العرش } وهو في اللغة سرير الملك { استوى } استواء يليق به تعالى . تفسير الجللين - (ج 5 / ص 352)

இங்கு அவனது தகுதிக்குத்‌ தோதுவாக “அர்ஷின்‌ மீதானான்‌” என்ற பொருள்‌ தரப்பட்டுள்ளது.

இந்தச்‌ செய்தி இடம்‌ பெற்றுள்ள தஃப்சீர்‌ நூலானது நம்‌ நாட்டு அரபுக்கல்லூரிகளில்‌ போதிக்கப்படுகின்ற தஃப்சீரகளுள்‌ ஒன்றாகும்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்க.

அல்லாஹ்வின்‌ பண்புகளான (ஸிஃபாத்‌) பின்வரும்‌ அடிப்படை விதிகள்‌ மீது அமையப்‌ பெற்றுள்ளது.

முதலாவது விதி :

எந்த வகையிலும்‌ எவ்விதக்‌ குறைபாடுகளோ, குறைவோ அற்ற பண்புகள்‌ அல்லாஹ்வுக்கு இருப்பதாகவும்‌, அவனது படைப்புகளில்‌ எவரும்‌ அவற்றில்‌ அவனுடன்‌ கூட்டுச்‌ சேரவோ, நிகராகவோ முடியாது என்றும்‌ உறுதியாக நம்புதல்‌. அவற்றின்‌ பொருளை நாம்‌ அறிந்தாலும்‌, அறியாவிட்டாலும்‌ சரியே!

உதாரணமாக “அல்ஹயாத்‌” “வாழ்வு” (உயிர்‌ வாழுதல்‌) அஸ்ஸம்‌உ, கேள்வி, அல்பஸர்‌,‌ பார்வை, அல்இல்ம்‌, அறிவு, அல்‌இஸ்ஸா, கண்ணியம்‌ போன்ற பண்புகளைக்‌ குறிக்க முடியும்‌.

இவற்றை அல்லாஹ்வின்‌ பண்பாக நோக்குகின்ற போது அவை அவனில்‌ பரிபூரணமானதும்‌, குறைகள்‌ அற்றவையுமாகும்‌. அவற்றை அவனது தகுதிக்குப்‌ பொருத்தமாக நிலைப்படுத்துவது அவசியமாகும்‌. பண்புகள்‌ அனைத்தும்‌ அவனில்‌ நிரந்தரமானதும்‌, பூரணமானதுமாகும்‌.

அவ்வாறே, ஆற்றல்‌, நாட்டம்‌, மற்றும்‌ இன்னபிற பூரணமான பல பண்புகள்‌ காணப்படுகின்றன. அவற்றை அல்லாஹ்‌ முன்னர்‌ இல்லாத நிலையில்‌ இருந்து பின்னர்‌ பெற்றுக்‌ கொள்ளவுமில்லை. அவை அவனைவிட்டு மறைந்து விடுவதும்‌ இல்லை.

இரண்டாவது விதி: 

அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ அவனது பெயர்களைவிட விரிவைக்‌ கொண்டதாகும்‌. அதாவது அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌ பண்புகளை மட்டும்‌ உள்ளடக்கிக்‌ கொள்ளும்‌. ஆனால்‌ அவனது பண்புகள்‌ அவ்வாறன்று. அவை அல்லாஹ்வின்‌ செயல்‌ சார்ந்த அனைத்துப்‌ பண்புகளையும்‌ உள்ளடக்கிக்‌ கொள்ளும்‌. அவனது செயல்களுக்கு முடிவுகள்‌ கிடையாது.

அத்தோடு அல்லாஹ்வின்‌ எண்ணிலடங்காத செயல்பாடுகளைக்‌ கொண்டு பெயர்கள்‌ எடுக்கப்படுவதில்லை. உதாரணமாக பிடித்தல்‌, வருதல்‌, நாடுதல்‌, கோபித்தல்‌ போன்ற பண்புகளைக்‌ குறிப்பிடலாம்‌.

இவற்றில்‌ இருந்து பிடிப்பவன்‌, வருபவன்‌, நாடுபவன்‌, கோபிப்பவன்‌ என்ற பெயர்ச்‌ சொல்கள்‌ எடுக்கப்படுவதில்லை.

மூன்றாவது விதி: 

அல்லாஹ்வும்‌, அவனுடைய திருத்தூதர்‌ முஹம்மத்‌ (ஸல்‌) அவர்களும்‌ அவனை விட்டு எந்தப்பண்புகளை விலக்கி இருக்கின்றார்களோ அவற்றிற்கு நேர்மாற்றமான, பரிபூரணமான பண்புகளைக்‌ கொண்டு அவன்‌ வர்ணிக்கப்படுவதை உறுதி செய்வதுடன்‌, உறக்கம்‌, இயலாமை, அறியாமை, மற்றும்‌ அவனது தகமையில்‌ இழுக்கையும்‌, அவப்பெயரையும்‌ ஏற்படுத்தவல்ல சகலவிதமான பண்புகளிலிருந்தும்‌ அவன்‌ தூயவன்‌; அவனுக்குரிய நிறைவான பண்புகளில்‌ அவனது படைப்புகள்‌ அவனுக்கு ஒப்பாகவோ, நிகராகவோ முடியாது என்றும்‌ உறுதியாக நம்புதல்‌.

உதாரணமாக: “சிறு தூக்கம்‌”, “உறக்கம்‌” ஆகிய பண்புகளை எடுத்துக்‌ கொண்டால்‌ அவற்றில்‌ சிறு தூக்கத்தை அல்லாஹ்வைவிட்டு தூய்மைப்படுத்துகின்ற போது (உறக்கமின்றி, திடகாத்திரமாக) என்றும்‌ நிலைத்திருத்தல்‌, எனும்‌ பூரணமான, அவற்றிற்கு எதிர்மறையான பண்புகள்‌ அவனில்‌ உறுதி செய்யப்படுகின்றன. அதே போன்று “உறக்கம்‌” என்ற பண்பை அல்லாஹ்வை விட்டு அகற்றி விடுகின்றபோது (உறக்கமோ, மரணமோ அற்ற) நிரந்தரமான வாழ்வு என்ற பண்பு அவனில்‌ நிலைப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறே, அல்லாஹ்வை விட்டு தூய்மைப்படுத்தப்படுகின்ற குறைபாடுள்ள ஒவ்வொரு பண்புகளுக்கும்‌ நேர்மாறான பரிபூரணமான பண்புகள்‌ அவனில்‌ காணப்படும்‌. அவன்‌ பரிபூரணமானவன்‌, எவ்விதக்‌ குறைபாடும்‌ அற்றவன்‌. அல்லாஹ்‌ கூறுகின்றான்‌:

“அவனைப்‌ போன்று எப்பொருளும்‌ கிடையாது. அவன்‌ செவியேற்பவன்‌, யாவற்றையும்‌ அறிந்தவன்‌.” (அஷ்ஷுரா: 11).

“உமது இரட்சகன்‌ அடியார்களுக்கு அநீதி இழைப்பவன்‌ அல்லன்‌, (ஃபுஸ்ஸிலத்‌: 46).

"வானங்களிலும்‌, பூமியிலும்‌ உள்ள எதுவும்‌ அல்லாஹ்வை இயலாமல்‌ ஆக்க முடியாது “ (ஃபாதிர்‌: 44)

"உமது இரட்சகன்‌ மறதியாளனாக இருக்கவில்லை”
(மர்யம்‌; 64).

நான்காவது விதி: 

அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ ஸுபூதிய்யா (நிலையானவை) என்றும்‌, சல்பிய்யா (ஒதுக்கப்பட்டவை, அல்லது அல்லாஹ்வின்‌ தன்மைக்குத்‌ தகாதவை) என்றும்‌ இரண்டு வகைப்படும்‌.

ஸுபூதிய்யாவிற்கு உதாரணமாக, ஆற்றல்‌, இருகரம்‌, இஸ்திவா, நுஸுல்‌ போன்ற பண்புகளைக்‌ குறிப்பிட முடியும்‌. இவை அல்லாஹ்வின்‌ புகழை விளக்கும்‌ பூரணமான பண்புகளாகும்‌.

சல்பிய்யாவிற்கு உதாரணமாக குருடு, ஊமை, அங்கக்குறைவு, செவிடு போன்ற குறைபாடான பண்புகளையும்‌, தூக்கம்‌, மறதி, இயலாமை, அசதி, மறதி போன்ற அவனது தகுதிக்குத்‌ தகாத பண்புகளையும்‌ குறிப்பிட முடியும்‌.

இவை அல்லாஹ்வின்‌ பெயரில்‌ குறைவையும்‌, அவனது தகுதிக்கு அப்பாலான தன்மையையும்‌ கொண்டவையாகும்‌.

அல்குர்‌ஆனில்‌ இவ்வாறு விளக்கப்படுகின்றது.

வணங்கி வழிபடுவதற்குத்‌ தகுதியானவன்‌ அல்லாஹ்வைத்தவிர வேறு எவரும்‌ இல்லை. (அவன்‌) நித்திய ஜீவன்‌, என்றும்‌ நிலையானவன்‌. சிறு உறக்கமோ, தூக்கமோ அவனைப்‌ பிடிப்பதில்லை (அல்பகரா: 255). இதன்‌ மூலம்‌ அல்லாஹ்‌ மரணமே இல்லாத, நிரந்தர வாழ்விற்குச்‌ சொந்தக்காரனாக விளங்குகின்றான்‌ என்பதையும்‌, உறக்கம்‌ அவனுக்கு ஏற்படுவதில்லை என்பதையும்‌ அறிய முடிகின்றது.

ஐந்தாவது விதி: 

அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ தவ்கீஃபீ சார்ந்ததாகும்‌. அதாவது அல்லாஹ்வும்‌, அவனுடைய தூதரும்‌ வழிகாட்டிய அமைப்பில்‌ அணுகப்பட வேண்டியதாகும்‌.

ஆறாவது விதி: 

அல்லாஹ்வுடன்‌ இணைத்துப்‌ பேசப்படுபவை குறித்த ஒன்றைக்‌ குறிப்பிடுவதாக இருப்பின்‌ அவை படைப்புகளில்‌ உள்ளடங்கியதாகக்‌ கொள்ளப்படும்‌.

உதாரணமாக அல்லாஹ்வின்‌ அடிமை, அல்லாஹ்வின்‌ ஒட்டகம்‌, அல்லாஹ்வின்‌ வீடு போன்ற பிரயோகங்கள்‌. இவற்றை அவனது பண்புகளாக எடுப்பதில்லை.

அல்லாஹ்வுடன்‌ இணைத்துப்‌ பேசப்படுபவை பண்புகள்‌ சார்ந்தவையாக இருப்பின்‌ அவற்றை அவனில்‌ நிலையான பண்புகளாகக்‌ கொள்ளப்படும்‌. உதாரணமாக , அஸஸம்‌உ, கேள்வி, அல்பஸர்‌ - பார்வை, அல்குத்ரா - வல்லமை போன்ற பண்புகளைக்‌ குறிப்பிட முடியும்‌.

ஏழாவது விதி : 

அல்லாஹ்வின்‌ தகைமைக்கு அப்பாற்பட்ட பெயர்கள்‌, பண்புகள்‌ விளக்கமாகவும்‌, சுருக்கமாகவும்‌ விவரிக்கப்பட்டுள்ளன.

சுருக்கமாக வந்துள்ளது என்பதன்‌ பொருள்‌ என்னவெனில்‌ அல்லாஹ்வின்‌ பரிபூரணத்‌ தன்மைக்கு முரண்படும்‌ அனைத்து வகையான குறைகளையும்‌, குறைபாடுகளையும்‌ உள்ளடக்கிய பண்புகளை அல்லாஹ்வைவிட்டு நீக்கி விடுவதாகும்‌.

உதாரணமாக அந்தி, உறக்கம்‌, மறதி, வாக்குறுதி மாறுதல்‌ போன்ற பண்புகள்‌.

அவனைப்‌ போன்று எதுவும்‌ (யாரும்‌) இல்லை (அஷ்ஷாுரா: 11)

அவனுக்கு நிகரானவரை நீர்‌ அறிவீரா? (மர்யம்‌: 65)

அவர்கள்‌ வர்ணிப்பதை விட்டு அல்லாஹ்‌ தூயவன்‌ (அல்‌அன்‌ஆம்‌: 100)

அல்லாஹ்வின்‌ தகைமைக்கு அப்பாற்பட்ட பெயர்கள்‌, பண்புகள்‌ விளக்கமாக வந்துள்ளன என்பதன்‌ பொருள்‌ குறைபாடுள்ள அனைத்து விதமான பண்புகளில்‌ இருந்தும்‌ அல்லாஹ்வைப்‌ பரிசுத்தப்படுத்துவதாகும்‌.

அல்லாஹ்வின்‌ தகுதிக்கு அப்பாற்பட்ட பண்புகள்‌ விவரமாக வந்தமைக்கான உதாரணம்‌:

அவன்‌, பெற்றோர்‌, உற்றார்‌, உறவினர்‌, மனைவி, மக்கள்‌, நிகரானவர்‌, எதிரானவர்‌ போன்றோரை விட்டுப்‌ பரிசுத்தப்படுத்தப்படுவான்‌.

அவ்வாறே அறியாமை, மறதி, வழிகேடு, சிறுதூக்கம்‌, உறக்கம்‌, இயலாமை, வீண்‌ செயற்பாடு, அசத்தியம்‌ ஆகிய பண்புகள்‌ அவனை விட்டு விலக்கப்படும்‌.(ஆதார நூல்‌: ஷரஹுல்‌ அகீதத்தில்‌ வாசிதிய்யா)

எட்டாவது விதி:

அல்லாஹ்வின்‌ தகைமைக்குரிய பெயர்கள்‌, பண்புகள்‌ விளக்கமாக இடம்‌ பெற்றுள்ளன.

அல்லாஹ்வுடன்‌ தொடர்பான பெயர்கள்‌, பண்புகள்‌ விவரமாகவும்‌ தெளிவாகவும்‌, அவனது தகுதிக்கு அப்பாற்பட்டவை சுருக்கமாகவும்‌ கூறப்பட்டுள்ளன.

ஒன்பதாவது விதி: 

அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ யாவும்‌ உயர்வானவையாகும்‌. அவை பூரணத்துவம்‌ நிறைந்தவை, புகழுக்குரியவை, மட்டுமின்றி, எவ்விதக்‌ குறைபாடுகளுக்கும்‌ அப்பாற்பட்டவையாகவும்‌ இருக்கின்றன.


அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ சில :

(الوجود)

(الحياة) வாழ்வு

(العلم) அறிவு

(السمع) கேள்வி

(البصر) பார்வை

(الحكمة) நுட்பம்‌, அறிவு, ஞானம்‌

(الرحمة) அன்பு, கருணை

(النفس)

(العجب)

(الغضب) கோபம்‌

(السخط) கோபம்‌

(الرضا) திருப்பொருத்தம்‌, திருப்தி

(العلو) உயர்வு

(العين) கண்‌

(اليدان) இருகரம்‌

(الإرادة) நாட்டம்‌

(المشيئة) விருப்பம்‌

(المحبة) நேசம்காட்டுதல்‌.

(الساق) கொ(கெ)ண்டைக்கால்‌

(الوجه) முகம்‌

(القدمان) இரு பாதங்கள்‌

(القدرة) ஆற்றல்‌, வல்லமை.

(القوة) சக்தி, வலிமை

(الِّضحك) சிரிப்பு

(الفرح) மகிழ்ச்சி

(اليقظة) விழிப்புணர்வு

(العزَ) கண்ணியம்‌

(الكبرياء) பெருமை

(النزول) அடிவானத்திற்கு இறங்கிவருதல்‌

(الكلام) பேச்சு

(الإستواء) அர்ஷின்மீதிருப்பதை விளக்கும்‌ இஸ்திவா

(المجيئ) (மறுமையில்‌) தீர்ப்பிற்காக வருதல்‌ போன்ற

இன்னோரென்ன உயரிய பல பண்புகள்‌.

“அல்லாஹ்வுக்கு உயரிய பண்பு உள்ளது (அந்நஹ்ல்‌:
61)

எனவே அல்லாஹ்‌ பரிபூரணமானவன்‌. ஆகவே அவனது
பண்புகள்‌ குறைகள்‌ அற்றவையாகவும்‌, பரிபூரணமிக்கவையாகவும்‌ பரிணமிப்பது இயல்பானதாகும்‌.

மேற்கண்ட பண்புகளை நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களும்‌, நபித்தோழர்களும்‌, அவர்களின்‌ வழி வந்த இமாம்களும்‌ மனிதர்களின்‌ பண்புகளுக்கு ஒப்பிடாமலும்‌, உவமானப்படுத்தாமலும்‌, அதற்கு வடிவம்‌ கற்பிக்காமலும்‌, அதன்‌ கருத்தைப்‌ பாழடிக்காமலும்‌, திரிக்காமலும்‌, சிதைக்காமலும்‌ உறுதிப்படுத்தியுள்ளனர்‌. எனவே நாமும்‌ அவ்வாறு உறுதி செய்வதும்‌, நம்பிக்கை கொள்வதும்‌ அவசியமாகும்‌.

அல்லாஹ்விடம்‌ இருக்க முடியாத முக்கிய பண்புகள்‌ சில :

பண்புகள்‌ குறைபாடுள்ளவையாக இருப்பின்‌ அவை இறையியல்‌ தன்மைக்கு அப்பாற்பட்டவையாகவும்‌, அல்லாஹ்வுடன்‌ இணைத்துக்‌ கூறுவது தடை செய்யப்பட்டவையாகவும்‌ கொள்ளப்படும்‌. உதாரணமாக:

(الموت) மரணம்‌

(الجهل) அறியாமை

(العحز), இயலாமை

(الصمم), செவிடு

(البكم), ஊமை

(العمى) குருடு

(الضعف) பலவீனம்‌,

(اللغوب التعب) களைப்பு, சோர்வு

(النوم) உறக்கம்‌

(النعس), சிறு உறக்கம்‌ -கண்‌ அயர்வு-

(الظلم) அநீதிஇழைத்தல்‌,

(الغفلة)

(النسان)

(الغلبة)

(الجوع) பசி,

(العطش) தாகம்‌,

(المرض) நோய்‌

போன்ற இறையியற் கோட்பாட்டிலும்‌, அதன்‌. தனித்துவமான தன்மையிலும்‌ குறைபாட்டை ஏற்படுத்துகின்ற அனைத்துவிதமான பண்புகளையும்‌ குறிப்பிட முடியும்‌.

மனிதர்களிடம்‌ காணப்படும்‌ குறைபாடுள்ள பண்புகள்‌ அல்லது மனித இயல்புக்கு அவசியமான பண்புகள்‌ அல்லாஹ்வுக்கு அவசியமற்றவை என்று கூறுவார்கள்‌.

உதாரணமாக: பசித்திருத்தல்‌, தாகித்தல்‌, மணம்முடித்தல்‌, உணவு உண்ணுதல்‌ போன்ற பல பண்புகளைக்‌ குறிப்பிட முடியும்‌. இவை இன்ற! மனித வாழ்வு சாத்தியமற்றதாகும்‌. ஆனால்‌ அல்லாஹ்‌ அப்படியான பண்புகளில்‌ இருந்து தூய்மையானவனாக இருக்கின்றான்‌.

அல்லாஹ்‌ தன்னை குறைபாடுள்ள சகலவிதமான பண்புகளைவிட்டுத்‌ தூய்மைப்படுத்தி இருப்பதுடன்‌, அவனை குறைபாட்டைக்‌ கொண்டு வர்ணிப்போரைத்‌ தண்டிப்பவனாகவும்‌ இருக்கின்றான்‌.

கடவுளாக இருப்பவன்‌ குறைபாடுள்ள பண்புகளுடையவனாக இருந்தால்‌ அவனைக்‌ கடவுள்‌ நிலையில்‌ வைத்து மதிக்க முடியாதல்லவா?

பிற்காலத்தில்‌ வரவிருக்கும்‌ தஜ்ஜாலைப்‌ பற்றி எச்சரித்த நபி (ஸல்‌) அவர்கள்‌,

நிச்சயமாக உங்கள்‌ இரட்சகன்‌ ஒற்றைக்‌ கண்‌ குருடன்‌ கிடையாது. ஆனால்‌ அந்த தஜ்ஜால்‌ ஒற்றைக்‌ கண்‌ குருடன்‌; அவனது ஒரு கண்‌ காய்ந்த (சூம்பிப்போன) திராட்சை போன்றிருக்கும்‌ எனக்‌ கூறினார்கள்‌. (புகாரீ, 3184, 4057, முஸ்லிம்‌, 247, 5218).

அல்லாஹ்‌ குறைபாடுள்ள இவ்வாறான பண்புகளைக்‌ கொண்டு வர்ணிக்கப்பட முடியாது என்பது மட்டுமின்றி, அவன்‌ பரிபூரணத்தன்மை நிறைந்தவன்‌ என்பதை இதன்‌ மூலம்‌ விளங்கலாம்‌.

அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ பற்றிய ஆய்வில்‌ அல்லாஹ்வின்‌ நிலையான பண்புகள்‌ விவரமாகவும்‌ நிலையற்ற பண்புகள்‌ சுருக்கமாகவும்‌ கூறப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள்‌ குறிப்பிடுகின்றனர்‌.

குறையும்‌, பூரணத்துவமும்‌ இருக்கும்‌ இரு நிலைப்‌ பண்பின்‌ நிலை? 

ஒரு பண்பானது ஒரு பகுதியில்‌ பூரண முடையதாகவும்‌, மறுபக்கம்‌ குறைபாட்டை உடையதாகவும்‌ இருப்பின்‌ அதனை அல்லாஹுவுக்குரிய பண்பாகவோ, அல்லது அவனுக்கு இல்லாததாகவோ முடிவு செய்யக்‌ கூடாது. மாறாக பூரணமிக்கப்‌ பகுதியில்‌ அதை அல்லாஹ்வுக்கு உரியதாகவும்‌, குறைபாடுள்ள பகுதியில்‌ அவனுக்கு அப்பாற்பட்டதாகவும்‌ எடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌.

உதாரணமாக: “சூழ்ச்சி செய்தல்‌”, “ஏமாற்றுதல்‌” “பழிதீர்த்தல்”‌ “பரிகசித்தல்‌" போன்ற பண்புகளை எடுத்துக்‌ கொள்ளலாம்‌. இவ்வாறான பண்புகளில்‌ ஈடுபடுவோரின்‌ செயல்பாட்டிற்கு எதிராக, அவற்றை முறியடிக்க, அதற்கு ஈடான கூலியை அவ்வப்போது வழங்குவதற்காக அல்லாஹ்‌ செயல்படுவதால்‌ அந்தப்‌ பண்புகளைக்‌ கொண்டு அவன்‌ வர்ணிக்கப்படுவான்‌.

அல்லாஹ்‌ சூழ்ச்சியை அவனாக ஆரம்பிப்பதில்லை; அவன்‌ யாரையும்‌ ஏமாற்றுவதில்லை; பரிகசிப்பதில்லை. எனினும்‌, அவ்வாறான செயற்பாடுகள்‌ அல்லாஹ்வின்‌ விரோதிகளால்‌ முஃமின்களுக்கு எதிராக, அவனது மார்க்கத்திற்கு விரோதமான முறையில்‌ நடத்தப்படுகின்ற போது அவன்‌ அதற்குப்‌ பதிலடி கொடுக்கின்றான்‌ என்பதே இதன்‌ விளக்கமாகும்‌.

அவர்களும்‌ சூழ்ச்சி செய்கின்றனர்‌; அல்லாஹ்வும்‌ சூழ்ச்சி செய்கின்றான்‌; ஆனால்‌ சூழ்ச்சி செய்வோரில்‌ அல்லாஹ்‌ மிகச்‌ சிறந்தவன்‌. (அல்‌அன்‌ஃபால்‌. வச: 30).

“அவர்களும்‌ கடுமையாகச்‌ சூழ்ச்சி செய்கின்றனர்‌; நானும்‌ (அவர்களுக்கு எதிராகச்‌) சூழ்ச்சி செய்கின்றேன்‌. (அத்தாரிக்‌:15-16)

“நயவஞ்சகர்கள்‌ அல்லாஹ்வை ஏமாற்றுகின்றனர்‌; அல்லாஹ்வும்‌ அவர்களை ஏமாற்றக்‌ கூடியவனாக இருக்கின்றான்‌. (அந்நிசா: 142).

மேற்கண்ட வசனங்களை அடிப்படையாகக்‌ கொண்டு ஒருவர்‌ அல்லாஹ்வை “சூழ்ச்சி”, “ஏமாற்றுதல்‌” ஆகிய பண்புகளைக்‌ கொண்டு வர்ணிக்க முடியுமா? எனக்‌ கேட்டால்‌ ஆம்‌, அல்லது இல்லை, என்ற எந்தப்‌ பதிலும்‌ கூறாது, அவ்வாறான பண்புகளில்‌ ஈடுபடுவோருக்குப்‌ பாடம்‌ புகட்டும்‌ வகையிலும்‌, அவர்களுக்குப்‌ பதில்‌ தரும்‌ வகையிலும்‌, அவர்களது செயல்களை மறுதலிக்கும்‌ வகையிலும்‌ அல்லாஹ்வும்‌ அவ்வாறு நடந்து கொள்கின்றான்‌ என்றே புரிந்துகொள்ள வேண்டும்‌.

இவற்றில்‌ இருந்து அல்லாஹ்வுக்குரிய பெயர்களோ, பண்புகளோ எடுக்கப்படுவதில்லை. சூழ்ச்சி என்பதைப்‌
அல்லாஹ்வின்‌ பண்பாகவோ, (காயித்‌, மாகிர்‌) சூழ்ச்சி செய்பவன்‌ என்ற பெயர்‌ அவனது பெயர்களில்‌ ஒரு பெயராக இவற்றில்‌ இருந்து பெறப்படுவதில்லை.

அவ்வாறே, இவ்வாறான பண்புகள்‌ அனைத்திலும்‌ இந்த விதிமுறை கடைப்பிடிக்கப்படும்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌. (அப்துல்‌ அஸீஸ்‌ அர்ராஜிஹ்‌: (ஷரஹுல்‌ அகீதா அத்தஹாவிய்யா)

நமது பிரதேச அரபுக்கல்லூரிகளில்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளாக “கேள்வி” “பார்வை” “விருப்பம்‌” “நாட்டம்‌” “வாழ்வு” “நேசம்‌” “பேச்சு” ஆகிய ஏழு பண்புகளை மட்டும்‌ வரையறை செய்தும்‌, நிலைப்படுத்தியும்‌ எஞ்சிய பல பண்புகளைப்‌ பாழடித்தும்‌, அல்லது அவற்றிற்குத்‌ தவறான விளக்கமளித்தும்‌ போதனை செய்து வருகின்றனர்‌.

அது ஸஹாபாக்களின்‌ வழிவந்த அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ அகீதாக்‌ கோட்பாட்டிற்கு அப்பாற்பட்ட கோட்பாடாகும்‌ என்பதைப்‌ பின்வரும்‌ செய்தியின்‌ மூலமும்‌, அதன்‌ விளக்கத்தின்‌ மூலமும்‌ அறியலாம்‌.

ஒரு படையின்‌ தளபதியாக இருந்த நபித்தோழர்‌ தொழுகையில்‌ இமாமாகவும்‌ இருந்தார்‌. அவர்‌, அல்‌ஃபாத்திஹா சூராவை ஓதி முடித்த பின்னர்‌, (மற்றொரு சூராவையும்‌ ஓதிய பின்னால்‌) அல்‌இக்லாஸ்‌ அத்தியாயத்தைக்‌ கொண்டு தமது ரகஅத்துக்களை முடிப்பவராக இருந்தார்‌. ஸஹாபாக்கள்‌ இதைப்‌ போர்க்‌ களத்தில்‌ பெரிது படுத்தவில்லை, மதீனாவை வந்தடைந்த பின்னர்‌ அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ அது பற்றி முறைப்பாடு செய்தார்கள்‌; அவரிடம்‌ ஏன்‌ இவ்வாறு செய்தார்‌ என விசாரிக்கும்படி நபி (ஸல்‌) அவர்கள்‌ பணித்தார்கள்‌. அவர்‌, அது அர்ரஹ்மானின்‌ பண்பாக இருக்கின்றது. அதை நான்‌ ஓதுவதை நேசிக்கின்றேன்‌ எனக்‌ கூறினார்‌, அதற்காக அல்லாஹ்‌ அவரை நிச்சயமாக நேசிப்பான்‌ என அவரிடம்‌ அறிவித்துவிடுங்கள்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (புகாரீ, முஸ்லிம்‌).

அந்த அடிப்படையில்தான்‌ அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ இமாம்களால்‌ பிரித்து நோக்கப்பட்டுள்ளன என்பதை நாமும்‌ புரிந்து கொள்ள வேண்டும்‌.

பண்புகள்‌ பற்றி விளக்குகின்ற இமாம்‌ இப்னு ஹஜர்‌ அல்‌அஸ்கலானீ‌ (ரஹ்‌) அவர்கள்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்‌.

இமாம்‌ பைஹகீ அவர்களும்‌, அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்களில்‌ ஒரு சாராரும்‌ அல்குர்‌ஆனிலும்‌, ஸஹீஹான ஹதீஸ்களிலும்‌ இடம்‌ பெற்றுள்ள அல்லாஹ்வின்‌ அனைத்துப்‌ பெயர்களையும்‌ இரு வகையாகப்‌ பிரித்துள்ளனர்‌.

முதலாவது வகை: ஒன்று அவனது உள்ளமைத்‌ தன்மையோடு தொடர்பான பண்புகள்‌. அவை என்றும்‌ இருந்து கொண்டும்‌, எப்போதும்‌ அவனை விட்டு நீங்காததுமான அவன்‌ தனக்கென உரித்தாக்கிக்‌ கொண்ட பண்புகளாகும்‌.

இரண்டாவது வகை: அவனது செயல்‌ தொடர்பான பண்புகள்‌. அவை அவன்‌ தனக்கென என்றும்‌ நிரந்தரமாக உரிமையாக்கிக்‌ கொண்ட பண்புகளாகும்‌.

அல்குர்‌ஆனிலும்‌, நபி (ஸல்‌) அவர்களின்‌ ஸஹீஹான பொன்மொழிகளிலும்‌ நிலைப்படுத்தி வந்தவற்றையும்‌, அத்தோடு ஏகமனதான முடிவு செய்யப்பட்டவற்றையும்‌ தவிர ஏனைய பண்புகளை நிலைப்படுத்தக்‌ கூடாது.

மேலும்‌ பகுத்தறிவைக்‌ கொண்டு நிலைப்படுத்தப்படும்‌ பண்புகளான வாழ்வு, அறிவு, நாட்டம்‌, கேள்வி, பார்வை, பேச்சு ஆகியவை அவனது யதார்த்தத்தோடு தொடர்புடைய பண்புகளாகும்‌.

அவ்வாறே படைத்தல்‌, உணவளித்தல்‌, உயிர்ப்பித்தல்‌,
மரணிக்கச்‌ செய்தல்‌, மன்னிப்பளித்தல்‌, தண்டித்தல்‌ ஆகிய பண்புகள்‌ அவனது செயல்பாட்டுடன்‌ தொடர்புடைய பண்புகளாகும்‌.

அவற்றில்‌ சிலது அல்குர்‌ஆனிலும்‌, அஸ்ஸுன்னாவிலும்‌ ஆதாரப்பூர்வமான அடிப்படையில்‌ நேரடியாக வந்துள்ளவையாகும்‌.

உதாரணமாக முகம்‌, கை, கண்‌ போன்ற பண்புகள்‌ அவனது (தாத்‌) யதார்த்தத்தோடு தொடர்பான பண்புகளாகும்‌; அர்ஷின்‌ மீதிருப்பதை குறிக்கும்‌ இஸ்திவா, அதில்‌ இருந்து இறங்குவதை விளக்கும்‌ -நுஸுல்‌ - மறுமையின்‌ தீர்ப்பின்‌ வருகை பற்றி விளக்கும்‌ மஜீஃ போன்ற பண்புகள்‌ அவனது செயல்பாடு சார்ந்த பண்புகளாகும்‌.

இந்தப்‌ பண்புகள்‌ ஆதாரப்பூர்வமான செய்திகளாக வந்திருப்பதால்‌ படைப்புகளுக்கு ஒப்பிடாதவாறு அவற்றை நிலைப்படுத்த வேண்டும்‌.

அவனது யதார்த்த நிலையுடன்‌ (தாத்‌ உடன்‌) தொடர்பான பண்புகள்‌ எப்போதும்‌, என்றும்‌ எதிர்காலத்திலும்‌ அவனில்‌ நிலையாகக்‌ காணப்படும்‌. அவனது செயல்‌ சார்ந்த பண்புகள்‌ அவனில்‌ நிலைத்திருப்பவையாகும்‌. அவன்‌ அவற்றை நேரடியாகச்‌ செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்‌
என்பதில்லை.

மாறாக

அவன்‌ ஒரு காரியத்தைச்‌ செய்யவேண்டும்‌ என்று நாடினால்‌ அதற்கு“ஆகிவிடு“என்று அவன்‌ கூறியதும்‌ அது உடனே ஆகிவிடும்‌” (யாசீன்‌: 82) என்ற குர்‌ஆனிய வசனத்தை அடிப்படையாகக்‌ கொண்டு இதை விளங்க முடியும்‌. (பத்ஹுல்பாரீ)


பண்புகளின்‌ கிளைகள்‌

முதலாவது கிளை:

அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ இரு வகைப்படும்‌.

ஸுபூதிய்யா (நிலைத்திருப்பவை)

சல்பிய்யா (சாத்தியமற்றவை)

ஸுபூதிய்யா: அல்லாஹ்‌ தன்னில்‌ நிலைப்படுத்திய “வாழ்வு”, “அறிவு”, ஆற்றல்‌, சக்தி போன்ற அல்லாஹ்வை விட்டுப்‌ பிரிக்க முடியாத, நிலையானதாகக்‌ காணப்படும்‌ பண்புகளைக்‌ குறிக்கும்‌.

அவற்றை அல்லாஹ்‌ தன்னில்‌ நிலைப்படுத்தியது போல்‌ நாமும்‌ நிலைப்படுத்துவது அவசியமாகும்‌. ஏனெனில்‌ அவை பற்றிப்‌ பூரணமாக அறிந்திருக்கும்‌ அல்லாஹ்வே அவற்றைத்‌ தன்னில்‌ நிலைப்படுத்தியுள்ளான்‌.

சல்பிய்யா: அல்லாஹ்‌ தன்னைவிட்டு அகற்றிய “அநீதி”
“உறக்கம்‌” “அறியாமை” “ஓய்வு” “இயலாமை” போன்ற பண்புகளைக்‌ குறிக்கும்‌. அவற்றை அல்லாஹ்‌ தனது தகைமைக்கு அப்பாற்பட்டவையாக ஒதுக்கியுள்ள காரணத்தால்‌ நாமும்‌ அவ்வாறு ஒதுக்கிவிடுவது அவசியமாகும்‌. அவ்வாறே குறைபாடுள்ள ஒவ்வொரு பண்புக்கும்‌ நேர்மாறான. பூரணமான பண்புகளைக்‌ கொண்டு அவன்‌ வர்ணிக்கப்படுவதையும்‌ உறுதி செய்ய வேண்டும்‌. அப்போதுதான்‌ அவை பூரணத்தன்மை பெறும்‌.

உதாரணமாக:

“உமது இரட்சகன்‌ யாருக்கும்‌ அநீதி இழைக்கமாட்டான்‌” (அல்கஹ்‌ஃப்‌. வச:49) என்ற வசனத்தில்‌ அநீதி எனும்‌ தீய பண்பை அல்லாஹ்வை விட்டு நீக்கினால்‌ அதற்கு மாற்றமானது “பரிபூரணமான நீதி” எனும்‌ பண்பு அவனில்‌ நிலைப்படுத்தப்படுகின்றது என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

இவ்விதியை விளக்க முற்படும்‌ அறிஞர்கள்‌ “அல்லாஹ்‌ நிலைப்படுத்தப்பட வேண்டிய பெயர்கள்‌, பண்புகளைக்‌ கொண்டும்‌. நிலைப்படுத்தப்பட முடியாத பெயர்கள்‌, பண்புளைக்‌ கொண்டும்‌ வர்ணிக்கப்பட்டுள்ளான்‌” என்ற விதியை முன்வைப்பர்‌.

அவனில்‌ நிலைப்படுத்த வேண்டிய பெயர்கள்‌, பண்புகளுக்கு உதாரணமாக: “அலீம்”‌ (அறிந்தவன்‌) “கதீர்‌”,  (ஆற்றல்மிக்கவன்‌) போன்ற உதாரணத்தையும்‌,

நிலைப்படுத்தப்பட முடியாதவற்றிற்கு

“அவன்‌ யாரையும்‌ பெறவுமில்லை; பிறரால்‌ பெறப்படவுமில்லை; அவனுக்கு நிகராக எவரும்‌ இல்லை.” (அல்‌இக்லாஸ்‌; 3-4)

“அவனை சிறு உறக்கமோ (அசதியோ), உறக்கமோ பிடிப்பதில்லை. (அல்பகரா: 255) என்பன போன்ற உதாரணங்களை முன்வைப்பர்‌.

இரண்டாவது கிளை:

ஸுபூதிய்யா வகை சார்ந்த பண்புகள்‌ இரு வகைப்படும்‌.

தாதிய்யா (யதார்த்தத்துடன்‌ தொடர்புடையவை) 

ஃபிஅலிய்யா (செயல்களுடன்‌ தொடர்பானவை)

தாதிய்யா என்பது: இப்பண்புகளைக்‌ கொண்டு அல்லாஹ்‌ ஆதி முதல்‌ வர்ணிக்கப்பட்டுக்‌ கொண்டிருந்தது போன்று, என்றும்‌ அதே நிலையில்‌ வர்ணிக்கப்படுபவனாக இருப்பான்‌.

உதாரணமாக: “பார்வை”, “கேள்வி”, “பாதம்‌”, இரு கரம்‌”, “முகம்‌” “பேச்சு” போன்ற பண்புகளைக்‌ கூறலாம்‌. (மேற்கண்ட பண்புகளை அல்லாஹ்வுக்கு இல்லாதிருந்து, மனிதனைப்‌ போன்று பின்னர்‌ அவன்‌ அதைப்‌ பெற்றுக்‌ கொண்டான்‌ என நம்பக்கூடாது).

ஃபிஅலிய்யா என்பது, இவை அல்லாஹ்வுடைய நாட்டத்துடன்‌ தொடர்புடையவை. அவன்‌ விரும்பினால்‌ அவற்றை நடைமுறைப்படுத்துவான்‌. விரும்பாவிட்டால்‌ அவற்றைச்‌ செய்யாது விட்டுவிடுவான்‌.

உதராணமாக: “அர்ஷின்‌ மீது உயர்தல்‌, தினமும்‌ (இரவின்‌ மூன்றில்‌ ஒரு பகுதி கழிந்த பின்‌ அடிவானத்திற்கு) இறங்கி வருதல்‌, (மறுமையில்‌ தீர்ப்பு வழங்க) வருகை தருதல்‌, இணைவைக்காது மரணிப்போருக்கு நாடினால்‌ மன்னித்தல்‌ போன்ற அல்லாஹ்வின்‌ நாட்டத்துடன்‌ தொடர்புடைய பண்புகளைக்‌ குறிப்பிட முடியும்‌. அவை அல்லாஹ்வின்‌
செயற்பாடுகளுடன்‌ தொடர்புடையதாக இருப்பதால்‌ “அஸ்ஸிஃபாதுல்‌ ஃபிஅலிய்யா” என அழைக்கப்படுகின்றது.

பண்புகளானது சிலவேளை இருகோண கணிப்பின்‌ அடிப்படையில்‌ “தாதிய்யா” சார்ந்ததாகவும்‌, “ஃபிஅலிய்யா” சார்ந்ததாகவும்‌ இருக்கும்‌. உதாரணமாக “அல்லாஹ்வின்‌ பேச்சு” இது பண்பின்‌ அடிப்படைகளைக்‌ கவனத்தில்‌ கொண்டு “அல்லாஹ்வின்‌ எதார்த்தத்துடன்‌ (தாத்துடன்‌) தொடர்புடையதாக இருக்கின்றது.

ஏனெனில்‌ அல்லாஹ்‌ ஆரம்ப நிலையில்‌ பேசிக்‌ கொண்டிருந்தது போன்று, என்றும்‌ பேசிக்கொண்டே இருப்பான்‌. இவ்வகையில்‌ இது “தாதிய்யா” சார்ந்ததாகி விடுகின்றது.

அதே வேளை பேச்சைச்‌ செயல்பாடுகளுடன்‌ இணைத்துப்‌ பார்க்கின்றபோது அது “ஃபிஅலிய்யா” செயல்‌ சார்ந்தவையாக இருக்கின்றது. அது அவனது நாட்டத்துடன்‌ தொடர்புடையதாகின்றது. ஆகையால்‌ அவன்‌ நாடினால்‌ விரும்பிய நேரத்தில்‌, விரும்பியவற்றைக்‌ கொண்டு பேசுகின்றான்‌ என விளங்க வேண்டும்‌.

ஃபிஅலிய்யா இரு வகைப்படும்‌.

அஸ்ஸிஃபாதுல்‌ முதஅத்தியா (அல்லாஹ்வுடன்‌ தொடர்புடையவை)

அஸ்ஸிஃபாதுல்‌ லாஸிமா (பிறர்‌ மீது தாக்கம் செலுத்துபவை)

“அர்ஷின்‌ மீது உயர்தல்‌” “நள்ளிரவில்‌ அடிவானத்திற்கு இறங்குதல்‌”, “தீர்ப்பு நாளில்‌ வருகை தருதல்‌” போன்ற பண்புகள்‌ “அஸ்ஸிஃபாத்துல்‌ ஃபிஅலிய்யா அல்லாஸிமா” சார்ந்தவையாக இருக்கின்றது.

“கருணை”, “கோபம்‌”, போன்ற பண்புகள்‌ அல்லாஹ்வின்‌ படைப்புகளுடன்‌ தொடர்புடையவையாக இருப்பதால்‌ அவை “அஸ்ஸிஃபாதுல்‌ ஃபிஅலிய்யா அல்முதஅத்தியா” வகை சார்ந்தவையாக மாறிவிடுகின்றன.

நான்காவது கிளை:

அல்லாஹ்வின்‌ சகல பண்புகளையும்‌ நோக்கி மூன்று
கேள்விகள்‌ எழுப்பப்படல்‌ வேண்டும்‌.

முதலாவது கேள்வி : அவை யதார்த்தமானவையா? அது
ஏன்‌?

இரண்டாவது கேள்வி: அவற்றிற்கு வடிவம்‌ கற்பிப்பது ஆகுமானதா? அது ஏன்‌?

மூன்றாவது கேள்வி : அவை படைப்பினங்களின்‌ பண்புகளை ஒத்தவையா? அது ஏன்‌?

முதலாவது கேள்விக்கான பதில்‌ ஆம்‌. அவை யதார்த்தமானவையே! அடிப்படையில்‌ அல்லாஹ்வின்‌ பேச்சை அதன்‌ உண்மை நிலையில்‌ வைத்தே புரிதல்‌ வேண்டும்‌. தெளிவான ஆதாரமின்றி அதன்‌ உண்மை நிலையிலிருந்து வேறு நிலைக்குக்‌ கொண்டு செல்வது அனுமதியற்ற ஒரு விசயமாகும்‌.

இரண்டாவது கேள்விக்கான பதில்‌: அல்லாஹ்வின்‌ பண்புகளுக்கு வடிவம்‌ கற்பிப்பது கூடாது. அல்லாஹ்‌ அல்குர்‌ஆனில்‌:
"அவர்கள்‌ அவனை முழுமையாக அறிந்து கொள்ளமாட்டார்கள்‌” (தாஹா: வச:110) எனக்‌ குறிப்பிடுகின்றான்‌.

"எவன்‌ அல்லாஹ்வை அவனது படைப்புகளுக்கு ஒப்பிடுகின்றானோ அவன்‌ நிராகரித்துவிட்டான்‌. எவன்‌ அல்லாஹ்‌ தன்னைப்பற்றி அறிமுகம்‌ செய்ததை நிராகரிக்கின்றானோ அவனும்‌ நிராகரித்தவன்‌ ஆவான்‌. அல்லாஹ்‌ தன்னைப்‌ பற்றி அறிவித்ததிலோ, அல்லது அவனது தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ அறிமுகப்படுத்தியதிலோ (படைப்புகளுக்கு) எந்தவிதமான ஒப்புதலும்‌ கிடையாது என இமாம்‌ புகாரீ (ரஹ்‌) அவர்களின்‌ ஆசிரியரான நயீம்‌ பின்‌ ஹம்மாத்‌ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடுகிறார்கள்‌. (ஆதார நூல்‌: அல்‌உலுவ்‌. ஆசிரியர்‌: இமாம்‌ தஹபீ (ரஹ்‌).

மூன்றாவது கேள்விக்கான பதில்‌: அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ அவனது படைப்புகளின்‌ பண்புகளுக்கு எவ்வகையிலும்‌ ஒப்பானதல்ல.

அல்லாஹ்‌ தன்னைப்பற்றி அறிமுகம்‌ செய்கின்ற போது:

அவனைப்‌ போன்று எப்பொருளும்‌ இல்லை, அவன்‌ யாவற்றையும்‌ செவியேற்பவனும்‌, நன்கு பார்ப்பவனுமாவான்‌ (அஷ்ஷுரா:11)

நான்காவது விதி: முஅத்திலாக்கள்‌ (அல்லாஹ்வின்‌ பண்புகளைப்‌ பாழடிப்போருக்கான) பதில்‌.

அல்லாஹ்வின்‌ திருநாமங்களை, அல்லது அவனது பண்புகளை நிராகரிப்போரை அல்லது அதில்‌ இருட்டடிப்புச்‌ செய்வோரை அல்லது அவற்றைப்‌ பாழடிப்போரை "முஅத்திலாக்கள்‌ என அழைக்கின்றனர்‌. இவர்கள்‌ ‘முஅவ்விலாக்கள்‌' அல்லாஹ்வின்‌ திருநாமங்களில்‌, அவனது பண்புகளில்‌ “தவறான வியாக்கியானம்‌ செய்வோர்‌” முஹர்ரிஃபூன்‌ திரித்துக்‌ கூறுவோர்‌” எனவும்‌ அழைக்கப்படுவர்‌.

இவர்கள்‌ கூறும்‌ எந்தக்‌ கூற்றிற்கும்‌ அல்குர்‌ஆனிலிருந்தோ, அல்லது சலஃபுகள்‌ அதாவது நபித்தோழர்கள்‌, தாபியீன்கள்‌, தபஉத்தாபியீன்கள்‌, அவர்களின்‌ வழி நடந்த இமாம்களான அபூஹனீபா, மாலிக்‌, அஹ்மத்‌, புகாரீ‌, முஸ்லிம்‌, ஹம்மாத்‌ பின்‌ சைத்‌, அவ்ஸாயீ, ஷாஃபி, ஷுஅபா பின்‌ ஹஜ்ஜாஜ்‌ போன்ற மூன்று நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட முன்னோர்களின்‌ விளக்கங்களிலிருந்தோ, எந்தவிதமான தெளிவான சான்றுகளும்‌ கிடையாது என்பதே இவர்களுக்கு நாம்‌ கூற விரும்புவதாகும்‌.


அல்லாஹ்வின்‌ பெயர்களை, பண்புகளைப்‌ பாழடிப்பதால்‌ ஏற்படும்‌ விபரீதங்கள்‌.

அல்லாஹ்வின்‌ பண்புகளைப்‌ பாழடிப்போர்‌ அவற்றை மனிதர்களின்‌ பண்புகள்‌ போன்று முதன்முதலில்‌ கற்பனை செய்வதாலேயே இந்நிலைக்கு ஆளாகின்றனர்‌ என்பதை முன்னர்‌ நாம் சுட்டிக்காட்டினோம்‌. அதனால்‌ ஏற்படும்‌ விபரீதம்‌ என்னவென்று பின்வருமாறு கவனிப்போம்‌.

1) அல்லாஹ்வின்‌ பெயர்களும்‌, பண்புகளும்‌ மனிதர்களின்‌ பண்புகள்‌ போன்றவைதாம்‌ எனக்‌ கற்பனை செய்து, அதன்‌ பின்‌ அவற்றிற்கு வடிவம்‌ கற்பித்தமை.

2) அதனால்‌ “நுஸுல்‌” “மஜீஉ” “இஸ்திவா” போன்ற அல்குர்‌ஆன்‌, மற்றும்‌ ஹதீஸின்‌ தெளிவான சான்றுகளில்‌ இடம்‌ பெறும்‌ பண்புகளை இருட்டடிப்புச்‌ செய்தமை, அல்லது அவற்றிற்குத்‌ தவறான வியாக்கியானம்‌ தந்தமை.

3) அல்லாஹ்வின்‌ பரிபூரணமான பண்புகளை உலகின்‌ சடப்‌ பொருள்களுக்கும்‌, இல்லாமைக்கும்‌, சாத்தியமற்றவைக்கும்‌ உதாரணம்‌ காட்டியமை.

4) அதன்‌ பின்‌ அல்லாஹ்வின்‌ “ஸிஃபாத்‌” பண்புகளைப்‌ பாழடித்தமை, நிராகரித்தமை போன்ற பல தவறுகள்‌. மேற்கண்ட செயலை அரபு மொழியில்‌ தஅதீல்‌ பாழடித்தல்‌ எனக்‌ கூறப்படும்‌.

பாழ்படுத்தல்‌, ஏதாவது ஒன்று பாராமுகமாக விடப்படுதல்‌ போன்ற சொல்லாடலைக்‌ குறிக்க அரபியில்‌ تعطيل ‌ என அழைக்கப்படுகின்றது.

அல்லாஹ்வுக்கு நிலைப்படுத்த வேண்டிய பண்புகளை இல்லாதொழிப்பதை‌ தஅதீல்‌ என அகீதா துறைசார்‌ அறிஞர்களால்‌ அடையாளப்படுத்தப்படுகின்றது. அது எந்த வகையில்‌ அமைந்தாலும்‌ சரியான சொல்லாடலாகவே கொள்ளப்படும்‌!

தஅதீல்‌ என்பது பின்வரும்‌ தோற்றங்களில்‌ அமையலாம்‌ என்றும்‌ அறிஞர்கள்‌ குறிப்பிடுகின்றனர்‌:

-வணக்கத்தில்‌ தஅதீல்‌ என்பது அதில்‌ இணைவைத்தல்‌, தூய்மையற்ற நிலை, முகஸ்துதி போன்றவையும்‌ சுட்டிக்காட்டப்படுகின்றன. இது வணக்கத்தில்‌ மட்டும்‌ அல்ல மாறாக, இறை திருப்தியை நோக்கமாகக்‌ கொள்ளப்படும்‌ அனைத்துச்‌ செயற்பாடுகளிலும்தான்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்க.

-படைத்தவனை முழுமையாக நிராகரித்தல்‌.

-அவனது பெயர்கள்‌, பண்புகளை வெளிப்படையான பொருளில்‌ அல்லாது, தவறான விளக்கம்‌ தந்து பாழடித்தல்‌.

-அவனது பண்புகளைப்‌ பாழமடித்தல்‌. உதாரணமாக பார்ப்பவன்‌ ஆனால்‌ பார்வை என்ற பண்பில்லை; கேட்பவன்‌ கேள்வி என்ற பண்பில்லை போன்ற பாழடிப்புகள்‌ போன்றவற்றைக்‌ குறிப்பிட முடியும்‌.

-இதில்‌, அவனது செயல்பாடுகளைப்‌ பாழடித்தல்‌ என்பதும்‌ உள்ளடக்கப்படும்‌.

தஅதீல்‌ -பாழடிப்பின்‌ மேலும்‌ ஐந்து வகைகள்‌:

-பொதுவான பாழடிப்பு. உதாரணம்‌: அல்லாஹ்வை முழுமையாக நிராகரித்தல்‌.

-இறையியற்‌ கோட்பாட்டில்‌ பாழடிப்பு. உதாரணம்‌: அல்லாஹ்வுடன்‌ பிறரை வணங்குதல்‌.

-அல்லாஹ்வின்‌ பெயர்களையும்‌, அவற்றின்‌ பொருள்களையும்‌ சிதைத்தல்‌, பாழடித்தல்‌.

-அல்லாஹ்வின்‌ பெயர்களையும்‌, பொருள்களையும்‌ சிதைத்தல்‌, பாழடித்தல்‌. இதில்‌ சிலர்‌ சில பெயர்கள்‌, பண்புகளை ஏற்று பலதைப்‌ பாழடிப்பர்‌. அவர்களில்‌ ஜஹ்மிய்யா, முஃதஸிலா போன்றோர்‌ முக்கியமானவர்கள்‌. ஜஹ்மிய்யாக்கள்‌ ஸிஃபாத்துகளை (பண்புகளை) நிராகரித்து, பெயர்களை மட்டும்‌ நிலைப்படுத்துவர்‌. அவர்களுள்‌ சிலர்‌ அவ்விரண்டையும்‌ ஒட்டுமொத்தமாக நிராகரிப்பர்‌.

முஃதஸிலாக்கள்‌ அல்லாஹ்வின்‌ பெயர்களை மட்டும்‌ நம்புகின்றனர்‌; அவனது அனைத்துப்‌ பண்புகளையும்‌ நிராகரிக்கின்றனர்‌.

-அஷ்‌அரிய்யாக்கள்‌ அல்லாஹ்வின்‌ பெயர்களை நிலைப்படுத்துகின்றனர்‌. ஆனால்‌ அவனது பண்புகளில்‌ ஏழு பண்புகளைத்‌ தவிர ஏனைய பண்புகளை மறுக்கின்றனர்‌; அல்லது அவற்றிற்குத்‌ தவறான விளக்கம்‌ தருகின்றனர்‌.

அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆப்‌ பிரிவினர்‌ அல்லாஹ்வை “ருபூபிய்யா”, “உலூஹிய்யா”, “அல்‌அஸ்மா வஸ்ஸிஃபாத்‌” ஆகிய மூன்று பகுதிகளையும்‌ நிலைப்படுத்தி, அவனது பெயர்கள்‌ பண்புகளைப்‌ பாழடிக்காது, படைப்பினங்களுக்கு அவற்றை ஒப்பிடாது, அவற்றின்‌ வெளிப்படையான பொருளில்‌ அவனது தகுதிக்குத்‌ தோதுவாக நிலைப்படுத்தி அல்லாஹ்வை நம்புகின்றனர்‌; மதிக்கின்றனர்‌.

“தஹ்ரீஃப்”

அல்லாஹ்வின்‌ வசனங்களையும்‌, அவனது தூதரின்‌ ஆதாரப்பூர்வமான பொன்மொழிகளையும்‌ “திரித்துக்‌ கூறுதல்‌” (تحريف‌) “தஹ்ரீஃப்‌” எனப்படும்‌. இது தஅதீல்‌ போன்ற மற்றொரு வகையாகும்‌.

தஹ்ரீஃபின்‌ வகைகள்‌

“தஹ்ரிஃப்‌ லஃப்ளீ” (சொல்‌, இலக்கண மரபுகள்‌ சார்ந்த திரிபு) 

“தஹ்ரிஃப்‌ மஅனவி” (பொருள்‌ சார்ந்த திரிபு)

முப்ததிஆக்‌ (பித்‌அத்வாதி) களுள்‌ சிலர்‌ வகல்லமல்லாஹு மூசா தக்லீமா, “அல்லாஹ்‌ மூசா (அலை) அவர்களுடன்‌ பேசினான்”‌ என இடம்‌ பெற்றுள்ள வசனத்தில்‌ அல்லாஹ்வின்‌ உண்மையான பேச்சை மறுத்துரைப்பதற்காக

“வகல்லமல்லாஹு மூசா தக்லீமா: "அல்லாஹ்வை மூசா அழைத்தார்”‌ என விளக்கம்‌ தருவர்‌.

அந்த விளக்கத்தை மறுத்துரைக்கும்‌ அஹ்லுஸ்ஸுன்னா, வல்ஜமாஆ- பிரிவினர்‌ அல்லாஹ்வின்‌ பேச்சை நிலைப்படுத்திக்‌ கூறுகின்றபோது பின்வரும்‌ ஆதாரங்களை முன்வைக்கின்றனர்‌.

(குறிக்கப்பட்ட) நமது எல்லைக்கு மூசா வந்தபோது, அவருடைய இரட்சகன்‌ அவருடன்‌ பேசினான்‌. உடனே முசா, என்‌ இரட்சகனே! நான்‌ உன்னைப்‌ பார்ப்பதற்கு எனக்கு உன்னைக்‌ காட்டுவாயாக! என்று கூறினார்‌. உன்னால்‌ என்னைக்‌ காண முடியாது; இருந்தாலும்‌ நீ இந்த மலையை நோக்கிப்பார்‌. அது அதன்‌ இடத்தில்‌ நிலையாக இருக்குமானால்‌ என்னை நீ காணுவாய்‌; என (அல்லாஹ்‌) கூறினான்‌. அவரது இரட்சகன்‌ மலைக்குக்‌ காட்சி தந்தபோது அது அதைச்‌ சுக்குநூறாக்கியது. மூசாவும்‌ உடனே மூர்ச்சையானார்‌. அவர்‌ தெளிவடைந்ததும்‌, நீ தூயவன்‌. (உன்னைத்‌ துதிக்கின்றேன்‌) நான்‌ உன்னிடம்‌ பாவமீட்சி வேண்டுகிறேன்‌; இன்னும்‌ நான்‌ இறை நம்பிக்கையாளர்களுள்‌ முதன்மையானவனாகி விடுகிறேன்‌ எனக்‌ கூறினார்‌. (அல்‌அஃரா.ப்‌: 143 )

மேற்கண்ட வசனத்தில்‌ இடைத்‌ தரகர்கள்‌ இன்றி மூசா
(அலை) அவர்களுடன்‌ பேசியதை விளக்கிட “அவருடைய இரட்சகன்‌ அவருடன்‌ பேசினான்‌” என அல்குர்‌ஆனில்‌ இடம்பெற்றுள்ளது.

"அவரை அவருடைய இரட்சகன்‌ துவா” என்ற தூய பள்ளத்தாக்கில்‌ வைத்து அழைத்ததை நினைவு கூர்வீராக: (அந்நாஸிஆத்‌:16).

வலப்‌ பக்கமாக உள்ள தூர்சீனா மலையின்‌ பக்கமாக இருந்து அவரை (மூசாவை) நாம்‌ அழைத்தோம்‌. (மர்யம்‌: 52).

இப்படியான அல்குர்‌ஆனிய வசனங்கள்‌ சப்தத்தை உள்ளடக்கிய அல்லாஹ்வின்‌ யதார்த்தமான பேச்சை உறுதி செய்கின்ற வசனங்களாகும்‌. இவற்றையும்‌ திரித்து, “அல்லாஹ்‌ தனது பேச்சை மரம்‌ ஒன்றில்‌ படைத்தான்‌; அதனைத்தான்‌ வானவர்‌ மூலம்‌ மூசா நபி (அலை) அவர்கள்‌ செவிமடுத்தார்கள்‌” என விளக்குவது பெரும்‌ குற்றமாகும்‌.

அதனைத்‌ திரிபு செய்து விளக்குவதையே “தஹ்ரீஃப்‌ லஃப்ளீ” (சொல்‌, இலக்கண மரபு சார்ந்த திரிபு) எனக்‌ கூறப்படும்‌.

மற்றும்‌ சிலர்‌.

“அர்ரஹ்மானாகிய அல்லாஹ்‌ அர்ஷின்மீதானான்‌” (தாஹா:05) என்பதற்குப்‌ பதிலாக “அல்லாஹ்‌ அர்ஷை
ஆக்கிரமித்தான்‌” ஆட்சி செய்தான்‌ எனப்‌ பொருள்‌ கொள்வர்‌. இது தஹ்ரீஃப்‌ மஅனவீ பொருள்‌ சார்ந்த தஹ்ரீஃப்‌ எனக்‌ கூறப்படும்‌.

இதனால்‌ அல்லாஹ்வை அவனது நிலையான இருப்பிடமான கண்ணியமிக்க “அர்ஷை” விட்டு நகர்த்தி, உலகின்‌ எல்லா இடங்களிலும்‌ இருப்பவன்‌ என்ற “அத்வைத”ச்‌ சிந்தனைக்கு இட்டுச்‌ செல்லும்‌ ஆபத்து உருவாகின்றது.

குறிப்பு: அல்குர்‌ஆனில்‌ இடம்‌ பெற்றுள்ள பசுமாடு என்பது அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்‌ என்றும்‌, பிர்‌அவ்ன்‌, ஹாமான்‌ என்பது அபூபக்ர்‌, உமர்‌ (ரழி) ஆகியோர்‌ என்றும்‌ அல்லாஹ்வின்‌ வழியில்‌ இருந்து தடம்‌ புரண்டோர்‌ நபித்தோழர்கள்‌ என்றும்‌ “ஷீஆப்‌ பிரிவினர்‌”, குர்‌ஆனுக்குப்‌ பல இடங்களில்‌ தரும்‌ தவறான விளக்கமும்‌ இவ்வகையுடன்‌ தொடர்புடையதாகும்‌.

இது பற்றிய அதிகப்படியான தெளிவை ஷீ‌ஆக்களில்‌ தஃப்சீர்கள்‌ என்ற தலைப்பில்‌ அறிஞர்களால்‌ எழுதப்படும்‌ செய்திகளைப்‌ பார்த்துப்‌ பயன்‌ பெறுக.


“அஸ்மா, ஸிஃபாத்தில்‌ தஅதீல்‌”

ஓர்‌ இடத்தைக்‌ காலி செய்து, அதனைக்‌ கவனிக்காது, பாழ்பட்டுப்போக விட்டுவிடுவதற்கு அரபு மொழியில்‌ “தஅதீல்” என்ற சொல்‌ உபயோகிக்கப்படுகின்றது.

அந்த அடிப்படையில்‌ அல்லாஹ்வின்‌ பெயர்களை, பண்புகளை மறுத்துரைப்பதற்கு, அதன்‌ கருத்துகளைப்‌ பாழடிப்பதற்கு “அகீதா” துறை சார்ந்த அறிஞர்களால்‌ “தஅதீல்‌” என்று அழைக்கப்படுகின்றது.

அது சார்ந்த கொள்கைப்‌ போக்குடையோரை “முஅத்திலா” என்று அறிஞர்கள்‌ அழைக்கின்றனர்‌.

தஅதீலின்‌ வகைகள்‌

தஅதீல்‌ குல்லி (முழுமையான பாழமடிப்பு)

தஅதீல்‌ ஜுஸ்யீ (பகுதிவாரியான பாழமடிப்பு)


“முஃதஸிலாக்கள்‌”, “ஐஹ்மிய்யாக்கள்‌” போன்றோரால்‌ அல்லாஹ்வின்‌ ஒட்டு மொத்த பெயர்கள்‌, பண்புகள்‌ பாழடிக்கப்படுவதை, “தஅதீல் குல்லி” என்றும்‌, (அஷ்‌அரிய்யாக்கள்‌) போன்றோரால்‌ ஏழு “ஸிஃபாத்துகளை” (பண்புகளை)த்‌ தவிர ஏனைய பண்புகள்‌ மறுக்கப்படுதல்‌, அல்லது தவறான விளக்கம்‌ தருதல்‌ ஆகியவற்றை “தஅதீல் ‌ ஜுஸ்யீ” என்றும்‌ அழைக்கப்படும்‌.

மஇய்யா பற்றிய விளக்கம்‌

அல்குர்‌ஆனிலும்‌, நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ பொன்மொழிகளிலும்‌ அல்லாஹ்‌ தனது படைப்புகளுடன்‌ இருப்பதைப்‌ பிரதிபலிக்கின்ற சொல்லாக இடம்‌ பெறும்‌ இடைச்சொல்லான “مع” என்ற சொல்‌ இடம்‌ பெறுவதுண்டு.

அல்லாஹ்‌ உங்களுடன்‌ இருக்கிறான்‌, பொறுமையாளர்களுடன்‌ இருக்கிறான்‌, நன்மை செய்வோருடன்‌ இருக்கிறான்‌, உண்மையாளர்களுடன்‌ இருக்கிறான்‌ போன்ற கருத்தில்‌ வரும்‌ அனைத்து வசனங்களிலும்‌ “ مع உடன்‌” என்ற சொல்‌ இணைந்தும்‌ இடம்‌ பெறுவது வழக்கமாகும்‌.

பின்வரும்‌ வசனங்களையும்‌ அதுபோன்ற வசனங்களையும்‌ படித்துப்பாருங்கள்‌.

நான்‌ உங்களுடன்‌ இருக்கின்றேன்‌. எனவே நம்பிக்கை கொண்டவர்களை நீங்கள்‌ உறுதிப்‌ படுத்துங்கள்‌ என்று (பத்ர்‌ போரின்‌ போது) வானவர்களுக்கு உம்‌ இரட்சகன்‌ கூறியதை நினைவு கூர்வீராக! என அல்‌அன்‌ஃபால்‌ 21ஆம்‌ வசனத்தில்‌ “நான்‌ உங்களுடன்‌ இருக்கின்றேன்‌” என இடம்‌ பெற்றுள்ளது.

அவ்வாறே மூசா, ஹாரூன்‌ (அலை) அவர்களை நோக்கி,

நீங்கள்‌ இருவரும்‌ அச்சப்பட வேண்டாம்‌. நான்‌ உங்களுடன்‌ இருக்கின்றேன்‌. செவிமடுத்துக்‌ கொண்டிருக்கின்றேன்‌; பார்த்துக்‌ கொண்டிருக்கின்றேன்‌ என்று கூறினான்‌. (தாஹா: 46)

அபூபக்ரே! என்ன நினைக்கின்றீர்கள்‌? நாம்‌ இருவரோடும்‌ மூன்றாவதாக அல்லாஹ்‌ இருக்கின்றான்‌ என்று நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (முஸ்லிம்‌: 4389) என்ற செய்தியிலும்‌ சரி,

அல்லாஹ்‌ நபிமார்களாகிய மூசா, ஹாரூன்‌ (அலை) ஆகிய இருவருடன்‌ இருப்பதைக்‌ குறிப்பாகக்‌ குறிப்பிடுகின்ற வசனத்திலும்‌ சரி குறிப்பான நெருக்கத்தைக்‌ குறிக்கின்ற காரணத்தால்‌ அதனை மஇய்யா ஹாஸ்ஸா எனக்‌ கூறப்படும்‌.

இது பிறரால்‌ நாம்‌ அநீதி இழைக்கப்படுகின்றபோது அல்லாஹ்‌ எம்முடன்‌ இருக்கின்றான்‌ எனக்‌ கூறுகின்ற நமது வார்த்தைப்‌ பிரயோகத்தை ஒத்ததாகும்‌.

இவ்வாறு இடம்‌ பெறும்‌ செய்திகளைக்‌ கவனித்த அத்வைதிகள்‌ “அல்லாஹ்‌ தனது படைப்புகளுடன்‌ பாலையும்‌ நீரையும்‌ போன்று இரண்டறக்‌ கலந்திருக்கின்றான்‌” என விளக்கமளிக்கின்றனர்‌.

அல்குர்‌ஆனில்‌, அஸ்ஸுன்னுவில்‌ இடம்‌ பெற்றுள்ள இவ்வாறான செய்திகளுக்கு அல்லாஹ்வும்‌ அடியானும்‌ ஒன்று என்றும்‌, பாலும்‌ நீரும்‌ போல்‌ அல்லாஹ்‌ அடியார்களுடன்‌ கலந்திருக்கின்றான்‌ போன்ற அர்த்தம்‌ கொள்கின்றனர்‌.

எனவே இது பற்றிய தெளிவு அவசியமானதாகும்‌. “அஹ்லுஸ்ஸுன்னா வல்‌ ஜமாஆ” அறிஞர்கள்‌ அது பற்றி அளிக்கும்‌ விளக்கம்‌ என்னவென்பது பற்றிப்‌ பின்வருமாறு நோக்கவிருக்கின்றோம்‌.

மஇய்யாவின்‌ வகைகள்‌

“மஇய்யா ஆம்மா” (பொதுவான நெருக்கத்தைக்‌ குறிப்பது) 

“மஇய்யா ஹாஸ்ஸா (குறிப்பான நெருக்கத்தைக்‌ குறிப்பது)

அல்லாஹ்வின்‌ உதவி, அவனது பக்கபலம்‌, உறுதுணை ஆகிய பண்புகளை விளக்கி வருவதை “மஇய்யா ஆம்மா” எனக்‌ கூறப்படும்‌.

அல்லாஹ்வின்‌ அறிவு, ஆற்றல்‌, அவனது கண்காணிப்புடன்‌ தொடர்புடைய பண்புகளை விளக்கி வருவதை “மஇய்யா ஹாஸ்ஸா” என்றும்‌ கூறப்படும்‌.

ஹிஜ்ரத்‌ பயணத்தின்‌ போது நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ அபூபக்ர்‌ ஸித்த்க்‌ (ரழி) அவர்களிடம்‌ கவலைப்பட வேண்டாம்‌, நிச்சயமாக அல்லாஹ்‌ நம்முடன்‌ இருக்கிறான்‌. (அத்தெளபா: வசனம்‌: 40), எனக்‌ கூறியதாகக்‌ குறிப்பிடும்‌ குர்‌ஆன்‌ வசனத்தில்‌ அல்லாஹ்வின்‌ விஷேடமான கண்காணிப்பு உள்ளதால்‌ அதற்கு “மஇய்யா ஹாஸ்ஸா” என விளக்கப்படுகின்றது.

நிச்சயமாக அல்லாஹ்‌ (அவனை) அஞ்சுவோருடனும்‌, பேருபகாரம்‌ செய்வோருடனும்‌ இருக்கிறான்‌” (அந்நஹ்ல்‌: வச:128) என்ற வசனத்தில்‌ இந்தப்‌ பண்புள்ள அனைவருக்கும்‌ அல்லாஹ்வின்‌ விஷேடக்‌ கூலி இருப்பதால்‌ இதனை “மஇய்யா ஆம்மா” விற்கு ஆதாரமாகக்‌ கொள்வர்‌ என்பதை இமாம்‌ இப்னு ரஜப்‌ அல்‌-ஹன்பலீ (ரஹ்‌) தமது 'ஜாமிவுல்‌ உலூம்‌ வல்ஹகீம்‌ என்ற நூலில்‌ முன்வைக்கிறார்கள்‌.

"சந்திரன்‌ எம்முடன்‌ இருக்க நாம்‌ பயணித்துக்‌ கொண்டிருந்தோம்‌” என்பதில்‌ வானில்‌ உள்ள அல்லாஹ்வின்‌ படைப்பான சந்திரன்‌ நம்முடன்‌ இணைந்திருக்காத நிலையில்‌ இவ்வாறு கூறுகின்றோம்‌ என்றால்‌ அதன்‌ படைப்பாளன்‌ நம்முடன்‌ கலந்திருக்கத்தான்‌ வேண்டுமா? எனக்‌ கேள்வி எழுப்புகிறார்‌ பேரறிஞர்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌.

மஅ (உடன), நஹ்னு (நாம்‌)

அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதிருப்பதை நிராகரித்துப்‌ பேசுவோருக்கு அல்லாஹ்‌ உங்கள்‌ -உடன்‌- இருக்கின்றான்‌, நாம்‌ அறிவோம்‌ போன்ற முதஷாபிஹாத்‌ வசனங்களும்‌, அந்தக்‌ கருத்தில்‌ அமைந்த ஹதீஸ்களும்‌ அல்லாஹ்‌ அனைத்து இடங்களிலும்‌ இருக்கின்றான்‌ என்பதை விளக்கிடும்‌ ஆதாரமற்ற ஆதாரங்களாகி விடுகின்றன.

இவ்வாறான வசனங்களைப்‌ பயன்படுத்தித்தான்‌ ஆரம்பக்‌ காலத்தில்‌ சூஃபிகள்‌ வழிகெட்டனர்‌, மட்டுமின்றி மனிதன்‌ கடவுள்‌ நிலைக்கு உயர்வான்‌ என்ற தவறான கோட்பாட்டையும்‌ இது போன்ற வசனங்கள்‌ மூலமே விளக்கி, மக்களிடம்‌ தம்மையும்‌, ஏனைய படைப்பினங்களையும்‌ அல்லாஹ்‌ என வர்ணித்தனர்‌.

இந்தக்‌ கருத்தியல்‌ தாக்கம்‌ பெற்ற அனைவரும்‌ இவ்வாறே வழிகெட்டனர்‌. இதனால்தான்‌ அபூயஸீத்‌ அல்பிஸ்தாமியைக்‌ காண்பது அல்லாஹ்வைக்‌ காண்பதைவிட எழுபது மடங்கு மேலானது என்று சூஃபித்துவத்தின்‌ பெயரால்‌ வாதிட்டனர்‌.

“நீங்கள்‌ எங்கிருந்தபோதும்‌ அவன்‌ உங்களுடன்‌ இருக்கிறான்‌; நீங்கள்‌ செய்பவற்றை அல்லாஹ்‌ பார்த்துக்‌ கொண்டருக்கின்றான்”‌ (அல்ஹதீத்‌ 04)

மூவர்‌ இரகசியம்‌ பேசும்‌ போது அவன்‌ நான்காமவனாக
இல்லாமல்‌ இல்லை. ஐவர்‌ இரகசியம்‌ பேசும்‌ போது அவன்‌ ஆறாமவனாக இல்லாமல்‌ இல்லை (அல்முஜாதலா. வச: 7)

அவன்‌ (மனிதன்‌) அளவில்‌ (அவனது) பிடரி நரம்பை விட நாம்‌ சமீபமாக இருக்கின்றோம்‌: (காஃப்‌. 16) 

போன்றபொருள்களில்‌ அமைந்த அல்குர்‌ஆனிய வசனங்களையும்‌, நபிகள்‌ நாயகத்தின்‌ பொன்மொழிகளையும்‌ ஆதாரமாகக்‌ கொண்டு அல்லாஹ்‌வை எங்கும்‌ நிறைந்தவனாகக்‌ கற்பனை செய்கின்றனர்‌. இது பல வகையில்‌ தவறானதாகும்‌. அது பற்றி இங்கு விளங்கிக்‌ கொள்வோம்‌.

மஅ/ உடன்‌ என்ற வார்த்தை அல்குர்‌ஆனில்‌ பல்வேறு இடங்களில்‌ ஒவ்வொரு மாதிரியான சந்தர்ப்பங்களில்‌, பல்வேறு அர்த்தங்களை அடிப்படையாகக்‌ கொண்டு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஒரு சில இடங்களில்‌ கண்காணிப்பு, அறிவு, உற்று நோக்குதல்‌ போன்ற பொருளிலும்‌, மற்றும்‌ சில இடங்களில்‌ உதவி, பக்கபலம்‌, பாதுகாப்பு போன்ற பொருளிலும்‌ இடம்‌ பெற்றிருக்கின்றது.

“நீங்கள்‌ எங்கிருந்த போதும்‌ அவன்‌ உங்களுடன்‌ இருக்கிறான்‌; நீங்கள்‌ செய்பவற்றை அல்லாஹ்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கின்றான்‌.” (அல்ஹதீத்‌: 4) என்பதற்கு அவனது அறிவு, ஆற்றல்‌, வல்லமை ஆகியவற்றால்‌ அவன்‌ உங்களுடன்‌ இருக்கிறான்‌” என்றும்‌, “நீங்கள்‌ எங்கிருந்த போதிலும்‌ என்பதற்கு “அறிவால்‌ அவன்‌ உங்களைச்‌ சூழ்ந்துள்ளான்‌” என்பதும்‌ அதன்‌ விளக்கமாகும்‌.

இது அல்குர்‌ஆனுக்குத்‌ தரப்படும்‌ சரியான விளக்கமே அன்றித்‌ தவறான, அல்லது திரிபு சார்ந்த விளக்கமல்ல.

ஆரம்பக்கால அறிஞர்கள்‌ (சலஃபுகள்‌) இந்தப்‌ பொருளை முன்வைத்தே “அஹ்லுல்ஹுலூல்‌ வல்‌ இத்திஹாத்‌” “அல்லாஹ்‌ படைப்புகளுடன்‌ இரண்டறக்‌ கலந்திருப்பவன்‌” “எல்லாம்‌ அவனே” என்ற வழிகெட்ட சிந்தனைப்‌ பிரிவினருக்கு மறுப்புக்‌ கூறினர்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்க.

“மூவர்‌ இரகசியம்‌ பேசும்‌ போது அவன்‌ நான்காமவனாக இல்லாமல்‌ இல்லை. ஐவர்‌ இரகசியம்‌ பேசும்‌ போது அவன்‌ ஆறாமவனாக இல்லாமல்‌ இல்லை” அதைவிடக்குறைந்தவர்களோ, அதிகமானவர்களோ இருந்தாலும்‌ அவன்‌ அவர்களுடன்‌ இருந்தே தீருவான்‌. பின்னர்‌ அவர்கள்‌ செய்து கொண்டிருந்தவை பற்றி மறுமையில்‌ அவன்‌ அவர்களுக்கு அறிவிப்பான்‌. நிச்சயமாக அல்லாஹ்‌ யாவற்றையும்‌ அறிந்தவனாக இருக்கின்றான்‌ (அல்முஜாதலா வச:7)

இது போன்ற வசனங்களை ஆதாரமாகக்‌ காட்டி அல்லாஹ்‌ எங்கும்‌ வியாபித்திருப்பவன்‌ என்ற சிந்தனைப்‌ போக்குடையோர்‌ முன்வைக்கும்‌ திருமறை வசனத்தின்‌ பொருள்‌ பற்றியும்‌, அவர்களுக்குக்‌ கூற வேண்டிய பதில்‌ பற்றியும்‌ இமாம்‌ அல்‌ஆஜுர்ரீ (ரஹ்‌) அவர்களிடம்‌ வினவப்பட்டபோது

அது கண்ணியமிக்க அல்லாஹ்வின்‌ அறிவால்‌ சூழ்தல்‌ என்றும்‌, அல்லாஹ்‌ அவனது அர்ஷின்‌ மீதிருக்கிறான்‌ என்றும்‌, அவர்களையும்‌, அவனுக்குப்‌ பின்னால்‌ இருக்கும்‌ சகல பொருள்களையும்‌ அவனது அறிவு வியாபித்துள்ளது என்றும்‌ பொருள்‌ கொள்ளப்படும்‌ என்றும்‌ விளக்கப்படும்‌. இவ்வாறே அறிஞர்கள்‌ விளக்கியுள்ளனர்‌; இவ்வசனத்தின்‌ ஆரம்பமும்‌, இறுதியும்‌ அறிவையே அறிவிக்கின்றது என்றும்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌.

குறிப்பு: இவை இமாம்‌ ஷவ்கானீ (ரஹ்‌) அவர்களின்‌ “அல்‌ ஃபத்ஹுர்ரப்பானி” என்ற நூலுக்கான முஹம்மத்‌ சுப்ஹி ஹசன்‌ ஹல்லாக்‌ அவர்களின்‌ அடிக்குறிப்புகளில்‌ இருந்து பெறப்பட்டது.

மூவரின்‌ இரகசியத்தில்‌ அவன்‌ நான்காமவனாக இல்லாமல்‌ இல்லை என்ற கருத்தை இமாம்‌ இப்னு கஸீர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ விளக்குகின்ற போது “அது அல்லாஹ்‌ தனது அறிவால்‌ அவர்களைச்‌ சூழ்ந்திருப்பதையே குறிக்கும்‌” என்று குறிப்பிடுகின்றார்கள்‌. அத்துடன்‌, “இதனால்தான்‌ ஒட்டுமொத்த அறிஞர்களும்‌ உடன்‌ இருக்கிறான்‌” என்பது அவனது அறிவால்‌ அவன்‌ சூழ்ந்திருப்பதைக்‌ குறிக்கின்ற “மஇய்யாா என விளக்கம்‌ தருகின்றனர்‌, என்றும்‌ சுட்டிக்காட்டுகிறார்கள்‌. (ஆதார நூல்‌:இப்னு கஸீர்‌) அதே போன்று,

"நாம்‌ அவன்‌ அளவில்‌ (அவனது) பிடரி நரம்பை விடச்‌ சமீபமாக இருக்கின்றோம்‌” என்ற வசனம்‌ மனிதர்களின்‌ செயற்பாடுகளைப்‌ பதிவு செய்கின்ற மலக்குகளைக்‌ குறிக்கும்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்க. சூஃபிய்யாக்கள்‌ கூறுவது போன்று அல்லாஹ்‌ அவனது படைப்புகளுடன்‌ பாலும்‌, நீரும்‌ போன்று இரண்டறக்‌ கலந்து, ஒட்டிக்‌ கொண்டிருக்கவில்லை.

நீங்கள்‌ எங்கிருந்த போதும்‌ அவன்‌ உங்களுடன்‌ இருக்கிறான்‌; நீங்கள்‌ செய்பவற்றை அல்லாஹ்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கின்றான்‌' (அல்ஹூத்‌: 04). என்ற வசனத்திற்கு, அதன்‌ மூலம்‌ அவன்‌ அவனது அறிவைக்‌ கொண்டு நாடியுள்ளானே அன்றி, அவனது உண்மையான உள்ளமையை (தாத்தை) நாடவில்லை என்பது இதன்‌ அர்த்தமாகும்‌ என்று இமாம்‌ பைஹகீ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

உஸுலுஸ்‌ ஸுன்னா நூலின்‌ ஆசிரியரான இமாம்‌ அபூ ஸமனைன்‌ (ரஹ்‌) அவர்கள்‌ “அர்ரஹ்மான்‌ அர்ஷின்‌ மீதானான்‌...” என்பதைக்‌ குறிக்கும்‌ மற்றொரு வசனத்தை விளக்குகின்ற போது:

“தூரத்தில்‌ இருந்தும்‌ கண்ணால்‌ (உலகில்‌) பார்க்கப்பட முடியாதவனும்‌, தனது அறிவாலும்‌, ஆற்றலாலும்‌ சமீபத்தில்‌ இருந்து இரகசியங்களைச்‌ செவியேற்பவனுமாகிய அல்லாஹ்‌ தூயவன்‌” எனக்‌ குறிப்பிட்டுள்ளதோடு இது அஹ்லுஸ்‌ ஸுன்னாக்களின்‌ கருத்து என்றும்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌. (பார்க்க: உஸுலுஸ்ஸுன்னா லிஅபீஸமனைன்‌. 1-3).


ஆஹாத்‌, முத்தவாதிர்‌ சிந்தனையும்‌ அதற்கான தெளிவும்‌

ஹதீஸ்‌ கலை என்பது பிற்காலத்தில்‌ தோன்றிய ஒரு கலையாகும்‌. சுன்னாவின்‌ பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான வழிமுறையாகக்‌ கொள்ளப்படுகின்ற இக்கலை முத்தவாதிர்‌, ஃகரிப்‌, ஆஹாத்‌ எனப்‌ பிரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்படுகின்ற செய்தி ஆஹாத்‌ என்றும்‌, பலர்‌ வழியாக அறிவிக்கப்படுகின்ற செய்தி முத்தவாதிர்‌ என்றும்‌ பிரிக்கப்படுகின்றது.

நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறிய செய்திகளில்‌ பலர்‌ அறிவித்தவை, ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்பட்டவை என்ற பகுப்பாக்கக்‌ கோட்பாடு நபித்தோழர்களிடம்‌ காணப்பட்ட வழிமுறை அல்ல.

மாறாக, ஹதீஸ்களை அறிவித்த அறிவிப்பாளர்கள்‌ எண்ணிக்கை பற்றிய துல்லியமான அறிவுக்காகவும்‌, முரண்பாடுகளின்‌ போது ஒன்றைவிட மற்றொன்று பலமிக்கது என்று நிறுவுவதற்காகவும்‌ அறிஞர்களால்‌ தூர நோக்குடன்‌ கொண்டுவரப்பட்ட ஒரு விதியாகும்‌.

பலர்‌ வழியாக அறிவிக்கப்பட்டதை அங்கீகரிப்பது, ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்படுவதை அகீதாவில்‌ புறம்‌ தள்ளி, சாதாரண ஃபிக்ஹ்‌ மசாயில்களில்‌ நடைமுறைப்படுத்துவது என்ற கோட்பாட்டின்‌ அடிப்படையில்‌ அது நிறுவப்படவில்லை என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌.

ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்களின்‌ தராதரம்‌ பற்றிய
அஷ்‌அரிய்யாக்களின்‌ நிலைப்பாடு.

ஆஹாதான ஹதீஸ்களின்‌ தராதரம்‌ பற்றிய அஷ்‌அரிய்யாக்களின்‌ நிலைப்பாடு முஃதஸிலாக்களின்‌ நிலைப்பாடாகும்‌. அதாவது “ஆஹாத்‌ வகை” சார்ந்த ஹதீஸ்கள்‌ உறுதியான நம்பிக்கை அளிக்கும்‌ விதத்தில்‌ கூறப்பட்டவை அல்ல. அவை சந்தேகமான அடிப்படையில்‌ அமைந்தவையாகும்‌.

எனவே ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்களை அகீதாவில்‌ அங்கீகரிக்க முடியாது என்று அங்கீகரிக்க முடியாத காரணத்தைக்‌ கூறி, புதிய கோட்பாட்டைத்‌ தோற்றுவித்த முஃதஸிலாக்களுடன்‌ ஒரு தோணியில்‌ பயணிப்பவர்களாக அஷ்‌அரிய்யாக்கள்‌ இருப்பது இவ்விரு பிரிவினருக்கும்‌ இடையில்‌ காணப்படும்‌ நம்பிக்கைக்‌ கோட்பாட்டிலுள்ள உடன்பாட்டை உறுதி செய்கின்றது.

பலவீனமான ஹதீஸ்களை‌ பக்கங்களால்‌ நிரப்பி, அவற்றைக்‌ கொண்டு அமல்கள்‌ செய்து, அதன்மூலம்‌ மறுமையில்‌ ஈடேற்றத்தை எதிர்பார்க்கின்ற இந்தப்பிரிவினர்‌ ஆஹாத்‌ வகை சார்ந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு அர்த்தமற்ற விளக்கம்‌ தருவது ஆச்சரியமாக இருக்கின்றது.

பலவீனமான ஹதீஸ்களைவிட ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்கள்‌ ஆதாரப்பூர்வமானவையாக இருந்தும்‌ அவற்றை அங்கீகரிக்க மறுக்கும்‌ போக்கு மறைமுகமான ஹதீஸ‌ மறுப்பைத்‌ தெளிவுபடுத்துகின்றது.

ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்களை மட்டும்‌ இவர்கள்‌ நிராகரிக்கவில்லை. மாறாக தமது கோட்பாடுகளுக்கு ஒத்துவராத முத்தவாதிர்‌ தரத்தில்‌ அமைந்த ஹதீஸ்‌, தரத்தில்‌ உயர்‌ நிலையில்‌ காணப்படும்‌ ஹதீஸ்களையும்தான்‌ மறுத்துள்ளனர்‌.

அதனால்‌ இவர்கள்‌ மறைமுகமான நிலையில்‌ பகுதி சார்ந்த ஹதீஸ்‌ மறுப்புக்‌ கோட்பாட்டாளர்கள்‌ என்பதே உண்மை.

அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ நிலைப்பாடு

ஆஹாத்‌ ஹதீஸ்களை ஆதாரமாகக்‌ கொள்வதிலும்‌ அவற்றைக்‌ கொண்டு செயல்படுத்துவதிலும்‌ நபித்தோழர்களின்‌ நிலைப்பாடு எதுவோ அதுவே அஹ்லுஸ்ஸான்னாக்களின்‌ நிலைப்பாடாகும்‌.

நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களுக்குச்‌ சூனியம்‌ செய்யப்பட்டதை ஆதாரப்பூர்வமானதாக அங்கீகரிக்கும்‌ அஷ்‌அரிய்யா, மாத்ரீதிய்யா பிரிவுகளிடம்‌ ஆஹாத்‌ ஹதீஸ்‌ வகை பற்றிய நிலைப்பாட்டில்‌ முரணபாட்டையும்‌, குழப்பத்தையும்‌ தெளிவின்மையையும்‌ எடுத்துக்‌ காட்டுகின்றது. ஏனெனில்‌, அந்த ஹதீஸ்‌ ஆஹாத்‌ வகை சார்ந்ததாகும்‌.

ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்களை அஷ்‌அரிய்யாக்கள்‌ அகீதா அம்சங்களில்‌ அங்கீகரிப்பதில்லை. இருந்தும்‌ அதனை இலங்கைவாழ்‌ அஷ்‌அரிய்யாக்கள்‌ அங்கீகரிக்கின்றனர்‌ என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்‌.

ஹபருல்‌ ஆஹாத்‌ நிராகரிப்புச்‌ சிந்தனை

முஸ்லிம்‌ உலகில்‌ தோன்றிய புதிய சிந்தனைப்‌ பிரிவுகளால்‌ குர்‌ஆன்‌ சுன்னாவின்‌ சிந்தனைக்கு மாற்றமான பல புதிய கோட்பாடுகள்‌ முன்வைக்கப்பட்டன. அவற்றில்‌ “ஹபருல்‌ ஆஹாத்‌” பற்றிய சிந்தனையும்‌ முக்கியமானதாகும்‌.

இந்தப்‌ புதிய சித்தாந்தம்‌ இஸ்லாத்தில்‌ புதிய சித்தாந்தமாக இருந்தது மட்டுமின்றி, “அஸ்மா, ஸிஃபாத்‌” தொடர்பாக வந்துள்ள பல அல்குர்‌ஆனிய வசனங்களும்‌, ஹதீஸ்களும்‌ தவறாகவும்‌, திரிபுபடுத்தியும்‌ திரிபுபடுத்தப்படவும்‌ காரணமாக இருந்ததோடு, நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள்‌ நிராகரிக்கப்படவும்‌ அந்தக்‌ கோட்பாடு வழியமைத்துக்‌ கொடுத்தது என்பதை மறுக்க முடியாது.

இஸ்மாயீல்‌ பின்‌ இப்ராஹிம்‌ பின்‌ உலையா (ம: ஹி: 218) என்ற முஃதஸிலா சிந்தனையாளர்தான்‌ ஹதீஸ்களில்‌ எண்ணிக்கை பற்றிய சிந்தனையை முன்வைத்ததில்‌ பிரபலமாகப்‌ பேசப்படுகின்றார்‌.

இந்தத்‌ தகவல்கள்‌ أحمد بن عوض الله بن داخل اللهيبي الحربي என்பவர்‌ الماتريديةدراسًةوتقويما என்ற தலைப்பில்‌ எழுதிய ஆய்வில்‌ இருந்து இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்யப்பட்டுப்‌ பகிர்ந்து கொள்ளபட்டவையாகும்‌.

இமாம்‌ ஷாஃபிஈ (ரஹ்‌) அவர்கள்‌ :

இமாம்‌ ஷாஃபிஈ (ஹ்‌) அவர்கள்‌ கலைகளுக்கான அடிப்படைகளை நிறுவியவர்களுள்‌ முன்னணி மேதையாவார்‌.

அல்‌- உம்மு, அர்‌-ரிஸாலா போன்ற பிரிசித்தி பெற்ற நூல்களின்‌ உரிமையாளரான இமாம்‌ அவர்கள்‌ ரிஸாலா ‌என்ற நூலில்‌ சான்றுகளை அணுகும்‌ அடிப்படைகள்‌ பற்றி எடுத்தெழுதி உள்ளார்கள்‌.

அர்ரிசாலாவில்‌ “ஒருவரால்‌ அறிவிக்கப்படுவதை நிலைப்படுத்தி ஆதாரமாகக்‌ கொள்ளுதல்‌” என்ற தலைப்பில்‌ “ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்படும்‌ செய்தியை நிராகரிக்காது, புறம்‌ தள்ளாது அங்கீகரித்துச்‌ செயல்படுத்துதல்‌ என்ற தலைப்பிட்டு,

ولو جاز لحد من الناس أن يقول في علم الخاصة أجمع المسلمون قديما وحديثا على تثبيت خبر الواحد والنتهاء إليه بأنه لم يعلم من فقهاء المسلمين أحد إل وقد ثبته جاز لي ، ولكن أقول لم أحفظ عن فقهاء المسلمين انهم اختلفوا في تثبيت خبر الواحد بما وصفت . (الرسالة - (ج 1 / ص 457

ஹபருல்‌ ஆஹாத்‌ விவகாரத்தில்‌ ஆரம்பக்‌ கால மற்றும்‌ பிற்கால ஹதீஸ்‌ கலை அறிஞர்‌ பெருமக்கள்‌ ஏகமனதாக அங்கீகரித்து, அதை ஆதாரமாகக்‌ கொள்வதிலும்‌, இறுதியில்‌ அதன்‌ பக்கம்‌ சட்டத்திற்காகச்‌ சென்றடைவதிலும்‌ முனைப்புடன்‌ ஆர்வம்‌ காட்டினர்‌ என்பது ஒருவர்‌ உறுதியிட்டுக்‌ கூற முடிகின்ற போது முஸ்லிம்‌ ஃபுகஹாக்கள்‌ அனைவரும்‌ அதனை உறுதியாக அங்கீகரித்துள்ளனர்‌. இருப்பினும்‌ நான்‌ கூறுகின்றேன்‌ : முஸ்லிம்‌ ஃபுகஹாக்கள்‌ நான்‌ கூறிய பிரகாரம்‌ ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்படும்‌ செய்திகளை ஆதாரமாகக்‌ கொள்வதில்‌ அவர்கள்‌ தமக்குள்‌ முரண்படவில்லை என்று எனக்கு அறுதி இட்டுக்‌ கூறிட முடியும்‌. இது ஷாஃபிஈ (ரஹ்)‌ அவர்களின்‌ ஆழமான கருத்தாகும்‌.

ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்கள்‌ அகீதாவில்‌ நிராகரிக்கப்படலாகாது

ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்படும்‌ ஹதீஸ்கள்‌ ஆஹாத்‌ என அழைக்கப்படுகின்றன. ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்களை அகீதாவில்‌ அங்கீகரிக்க முடியாது எனக்‌ காரணம்‌ காட்டி அல்லாஹ்வின்‌ பண்புகளை நிராகரிக்கும்‌ நிலை ஜஹ்மிய்யாக்கள்‌, முஃதஸிலாக்கள்‌ முதல்‌ அஷ்‌அரிய்யாக்கள்‌, மாத்ரூதிய்யாப்‌ பிரிவினர்‌ வரை கையாண்ட மிக மோசமான செயற்பாடாகும்‌.

அல்குர்‌ஆன்‌ முத்தவாதிர்‌ தரத்தில்‌ அமைந்தது. அதைத்தான்‌ அகீதாவில்‌ அங்கீகரிப்பதாகக்‌ கூறிக்‌ கொண்டு அதில்‌ இடம்‌ பெறும்‌ கருணை, கோபம்‌, மன்னிப்பு போன்ற அல்லாஹ்வின்‌ பண்புகளை நிராகரித்து, தமக்குள்‌ முரண்பட்டுக்‌ கொண்ட இந்தக் குழுக்கள்‌, குறைந்த பட்சம்‌ இவர்கள்‌ குர்‌ஆனில்‌ வந்துள்ள பண்புகளையாவது நிலைப்படுத்தி இருந்தால்‌ நிச்சயமாகத்‌ தமது கோட்பாட்டில்‌ நிலையானவர்கள்‌ என்று அவர்களை நம்பமுடியும்‌.

அதே போன்று முஃதஸிலாக்கள்‌ அல்லாஹ்‌ அடிவானத்திற்கு இறங்கிவரும்‌ செய்தி முத்தவாதிராக இருந்தும்‌ அதை மறுக்கின்றனர்‌. இதுவும்‌ முரணபாடாகும்‌. இமாம்கள்‌ பலர்‌ இது பற்றிப்‌ பேசியுள்ளார்கள்‌; சுருக்கமாக இங்கு தரப்படுகின்றது.

இமாம்‌ புகாரீ (ரஹ்‌)

இது பற்றி இமாம்‌ இப்னு ஹஜர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ ஃபத்ஹுல்‌ பாரியில்‌ குறிப்பிடும்‌ செய்தி முக்கியமானதாகும்‌.

இமாம்‌ புகாரீ (ரஹ்‌) அவர்களது கிரந்தத்தில்‌ “அத்தவ்ஹீத்‌ அத்தியாயத்தில்‌” அல்லாஹ்வின்‌ உயர்வான பண்புகளை உள்ளடக்கிய ஹதீஸ்களை ஒவ்வொரு பாடத்திலும்‌ இமாம்‌ அவர்கள்‌ உள்ளடக்கி உள்ளார்கள்‌. அத்துடன்‌, அவற்றிற்குத்‌ துணையாக அல்குர்‌ஆனிய வசனங்களையும்‌ கொண்டு வந்துள்ளார்கள்‌.

அவர்களின்‌ போக்கு (அஹ்பாறுல்‌ ஆஹாத்)‌ ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்களை நம்பிக்கைக்‌ கோட்பாட்டில்‌ ஆதாரமாக எடுக்காது விடுவதை அனுமதிக்கக்‌ கூடாது என்பதை சுட்டிக்காட்டவும்‌, மேலும்‌

; َوأََّن َمْن أَنَْكَرَها َخالَ َف الِْكتَاب َوالُّسنَّة َجِميًعا ، فتح الباري لبن حجر - )20 / 444 من الشاملة ) 

அவற்றை நிராகரிப்போர்‌ நிச்சயமாக குர்‌ஆன்‌, சுன்னா ஆகிய இரண்டிற்கும்‌ முழுமையாக முரண்பட்டவர்கள்‌ என்று சைக்கினையாகச்‌ சுட்டிக்காட்டிடவும்தான்‌ என இமாம்‌ இப்னு ஹஜர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடுகின்றார்கள்‌. அவர்கள்‌ தொடர்ந்து கூறுகின்ற போது:

“அர்ரத்து அலல்‌ ஜஹ்மிய்யா” என்ற நூலில்‌ இமாம்‌ இப்னு அபீஹாதம்‌ அவர்கள்‌ இமாம்‌ புகாரியின்‌ ஆசிரியர்களுக்கு ஆசிரியரான சல்லாம்‌ பின்‌ முதீஃ அவர்கள்‌ வழியாக அறிவிக்கும்‌ செய்தியில்‌ ஐஹ்மிய்யாக்கள்‌ பற்றிக்‌ குறிப்பிடும்போது இவ்வாறு கேள்வி எழுப்பியதாகக்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

அவர்களுக்கு (ஜஹ்மிய்யாக்களுக்கு) என்ன கேடு பிடித்திருக்கின்றது. இந்த ஹதீஸ்களில்‌ அவர்கள்‌ எதைத்தான்‌ நிராகரிக்க முடியும்‌? அல்லாஹ்வின்‌ மீது சத்தியமாக ஹதீஸில்‌ இடம்பெறும்‌ எந்த ஒன்றிற்கும்‌ குர்‌ஆனில்‌ அதே போன்றதொரு செய்தி இல்லாமல்‌ இருப்பதில்லை. நிச்சயமாக அல்லாஹ்‌ செவியுறுபவனும்‌, பார்ப்பவனுமாவான்‌. “அல்லாஹ்‌ உங்களுக்கு அவனது நஃப்ஸைப்பற்றி (தன்னைப்‌ பற்றி) எச்சரிக்கின்றான்‌” “அந்நாளில்‌ பூமிகள்‌ அனைத்தும்‌ அவனது பிடியில்‌ இருக்கும்‌; வானங்கள்‌ அவனது வலக்கரத்தில்‌ சுருட்டப்பட்டிருக்கும்‌” “நான்‌ எனது இரு கரங்களாலும்‌ படைத்தவனுக்கு நீ சுஜுத்‌ செய்யாமல்‌ இருக்க உனக்கென்ன நேர்ந்தது?” “மூசாவுடன்‌ அல்லாஹ்‌ பேசினான்‌” “அர்ர்ஹ்மான்‌ அர்ஷின் மீதானான்‌” என்று அல்லாஹ்‌ கூறுகின்றான்‌ எனக்‌ குறிப்பிட்டார்கள்‌. (ஃபத்ஹுல்‌ பாரீ‌) (20 / 444) فتح الباري لبن حجر )

இமாம்‌ ஷாஃபிஈ (ரஹ்‌)

ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்டுகின்ற செய்திகளை அகீதாவிலும்‌ ஆதாரமாகக்‌ கொள்ளலாம்‌ என்பதை நிரூபிக்கின்ற செயற்பாடாக இமாம்‌ ஷாஃபிஈ (ரஹ்‌) அவர்கள்‌ தமது ரிசாலா என்ற நூலில்‌, ஒருவர்‌ வழியாக அறிவிக்கப்படும்‌ செய்திகளை உறுதிப்படுத்துவது பற்றிய ஆதாரம்‌ எனத்‌ தலைப்பிட்டு அது பற்றிய தமது நிலைப்பாட்டைத்‌ தெளிவுபடுத்தி உள்ளதைப்‌ பார்க்கின்றோம்‌.

இமாம்‌ முஸ்லிம்‌ (ரஹ்‌)

மாமேதை இமாம்‌ முஸ்லிம்‌ (ரஹ்‌) அவர்கள்‌ தமது முஸ்லிம்‌ கிரந்தத்தின்‌ முன்னுரையில்‌ பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்‌.

பிறிதொரு நம்பகமான ஒருவர்‌ வழியாக வரும்‌ நம்பகமான ஒருவர்‌ வழியான செய்தியானது ஆதாரப்பூர்வமானதாகும்‌.

அதைக்‌ கொண்டு செயல்படுவது அவசியமாகும்‌. (பார்க்க: முஸ்லிமின்‌ முன்னுரை)

இது இமாம்‌ முஸ்லிமின்‌ தெளிவான நிலைப்பாட்டை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இது பற்றிய மேலும்‌ பல தெளிவினை இமாம்களான தாரகுத்னீ, பைஹகீ, இப்னுஹிப்பான்‌ போன்ற அறிஞர்களின்‌ நூல்களில்‌ பெற முடியும்‌.


அஸ்மா, ஸிஃபாத்தைத்‌ தவறாக விளக்கியதன்‌ காரணமும்‌ விளைவும்‌

அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகளை அவை மார்க்கச்‌ சான்றுகளில்‌ வந்திருப்பது போன்று விளக்கமளிப்பதை விடுத்து புதிய வழிமுறையைக்‌ கடைப்பிடிப்பது மார்க்க ஆதாரங்கள்‌ பாழடிக்கப்படவும்‌, தவறான விளக்கம்‌ அளிக்கப்படவும்‌
காரணமாகின்றது.

அத்துடன்‌ படைத்தவன்‌ யார்‌, எங்குள்ளான்‌ என்ற கேள்விக்குத்‌ தெளிவற்ற பதிலை வழங்கும்‌ நிலை ஏற்படுகின்றது. இது இஸ்லாத்தின்‌ பெயரால்‌ தோன்றிய அனைத்துச்‌ சிந்தனைப்‌ பிரிவுகளிடமும்‌ காணப்பட்ட பொது நடைமுறையாகும்‌.

இவ்வாறான சிந்தனையாளர்கள்‌ பின்வரும்‌ காரணங்களை அடிப்படையாகக்‌ கொண்டே தமது கோட்பாடுகளை முன்வைக்க முனைந்தனர்‌.

படைப்புகளின்‌ குறைபாடுகளை விட்டுப்‌ படைப்பாளனாகிய அல்லாஹ்வைத்‌ தூய்மைப்படுத்துதல்‌ என்ற கோட்பாட்டில்‌ வழிகெட்டமை.

“புதுமையான பண்புகளை விட்டு அல்லாஹ்வைத்‌ தூய்மைப்படுத்துதல்‌” என்ற வாதத்தின்‌ அடிப்படையில்‌
அல்லாஹ்வின்‌ பண்புகளை நிராகரித்தல்‌. முஃதஸிலாக்கள்‌ இந்தக்‌ கோட்பாட்டைச்‌ சரிகண்டதன்‌ பயனாக அல்லாஹ்வின்‌ அனைத்து விதமான பண்புகளையும்‌ நிராகரித்தனர்‌. ஜஹ்மிய்யாக்கள்‌ சில பண்புகளை நம்பிப்‌ பலதை மறுத்தனர்‌.

இவர்களின்‌ வழியைத்தான்‌ அஷ்‌அரிய்யா, மாத்ரீதிய்யா போன்ற பிரிவினரும்‌ கடைப்பிடித்தனர்‌.

அல்லாஹ்வுக்கும்‌ அவனது படைப்பினங்களுக்கும்‌ இடையில்‌ பெயர்களில்‌ வெளிப்படையாகக்‌ காணப்படும்‌ உடன்பாடுகளைக்‌ கவனத்தில்‌ கொண்டு இவ்வாறு செய்யத்‌ துணிந்தனர்‌.

இதன்‌ விளைவு என்ன?

அல்லாஹ்வையும்‌ அவனது பண்புகளையும்‌ தெளிவின்றி, உறுதியற்றவர்களாக வாழ்ந்து அவனைப்‌ பற்றிய சரியான அறிவின்றி மரணித்தல்‌.

கோட்பாடுகளை நிறுவுவதில்‌ முரண்பாடு. ஒரு சில பண்புகளை அங்கீகரிப்பதும்‌, மற்றும்‌ பல பண்புகளை நிராகரிப்பதும்‌. உதாரணமாக மரணம்‌ என்பது அடியார்களுக்கு உண்டு என்பதைக்‌ குறிக்க توم என்ற சொல்‌ பாவிக்கப்படுகின்றது. அதுவே அல்லாஹ்வுக்கு மரணம்‌ இல்லை என்பதைக்‌ குறிக்கவும்‌ பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைச்‌ சரியாக விளங்கி, விளக்குவது போன்று மனிதப்‌ பண்புடன்‌ தொடர்பான அனைத்துப்‌ பண்புகளும்‌ அல்லாஹ்வைக்‌ குறிக்கப்‌ பயன்படுத்தப்படுவதால்‌ அவை படைப்பினங்களுக்கு ஒப்பாகின்றன எனக்‌ காரணம்‌ காட்டி அவற்றிற்குத்‌ தவறான விளக்கம்‌ தருவது முரண்பாடாகும்‌.

அல்லாஹ்வின்‌ பண்புகளை அவனது படைப்பினங்களின்‌ பண்புகளுக்கு ஒப்பிடுதல்‌ அல்லாஹ்வின்‌ பண்புகளில்‌ இழைக்கப்படுகின்ற மிகப்பெரும்‌ அந்தியாகும்‌. அதன்‌ பின்னர்‌ அவற்றின்‌ பொருள்கள்‌ சிதைக்கப்படுகின்றது; அல்லது பாழடிக்கப்படுகின்றது.

நபி (ஸல்‌) அவர்களும்‌, ஸஹாபாக்களும்‌, அவர்களின்‌ வழிநடந்த முன்னோர்களும்‌ கொண்டிருந்த சரியான விளக்கங்களுக்கு மாறாக தவறான விளக்கமளித்தல்‌.

மார்க்கத்தின்‌ பெயரால்‌ புதியதொரு வழிமுறையைத்‌
தோற்றுவித்தல்‌

அல்லாஹ்வின்‌ பண்புகளை மரணித்தவர்கள்‌, சடப்பொருள்கள்‌, இல்லாதவை போன்றவற்றிற்கும்‌ அவற்றின்‌ குறைபாடான பண்புகளுக்கும்‌ ஒப்பிடும்‌ பெரும்‌ பாவத்தைச்‌ செய்தல்‌.

அல்லாஹ்‌ எச்சரிக்கை செய்த திரிபு, பாழடிப்பு போன்ற யூதப்‌ பண்புகளுக்கு ஒப்பாகுதல்‌.

அரபு மொழி அறிவு வேண்டி நிற்கும்‌ பொருளுக்கு மாற்றமாகப்‌ பொருள்‌ கொண்டு அதன்‌ சரியான கருத்தில்‌ இருந்து திசை திரும்பி நடத்தல்‌

நம்பிக்கையில்‌ தடுமாற்றம்‌, நிலையற்ற தன்மை போன்ற இன்னோரன்ன விபரீதங்கள்‌.

(மஹாசினுத்‌ தஃவீல்‌) (ஜினாயத்து தஃவீலில்‌ பாசித்‌)

சரியான அறிவிலும்‌, சரியான சான்றிலும்‌ (தேடினால்‌) சலஃபிய வழிமுறைக்கு மாற்றமானதைக்‌ காணமுடியாது என்பதை அறிந்து கொள்‌. இந்தப்‌ பாட விசயத்தில்‌ குர்‌ஆனுக்கும்‌, சுன்னாவுக்கும்‌, இந்தச்‌ சமுதாயத்தின்‌ முன்னோர்களுக்கும்‌ மாறு செய்தவர்கள்‌ பெரும்‌ தடுமாற்றத்தில்தான்‌ உள்ளனர்‌. அல்லாஹ்வே (நீ) தூயவன்‌. எந்தப்‌ பகுத்தறிவைக்‌ கொண்டுதான்‌ குர்‌ஆன்‌, சுன்னா நிறுக்கப்பட முடியும்‌! (இமாம்‌ காசிம்‌)

அல்லாஹ்வின்‌ பண்புகளை உறுதி செய்கின்ற போது பின்வரும்‌ அம்சங்கள்‌ கவனத்தில்‌ கொள்ளப்படல்‌ வேண்டும்‌

1-அல்குர்‌ஆனிலும்‌, அஸ்ஸுன்னாவிலும்‌ இடம்‌ பெற்றுள்ள சகல பண்புகளையும்‌ திரிக்காமலும்‌, அதன்‌ கருத்தைச்‌ சிதைக்காமலும்‌ உண்மையான வடிவத்தில்‌ நிலைப்படுத்துதல்‌.

2-அல்லாஹ்‌ பரிபூரணமான பண்புகளைக்‌ கொண்டு வர்ணிக்கப்பட்டுள்ளான்‌ என்றும்‌, குறைபாடுகள்‌ உள்ள பண்புகளைவிட்டு தூயவன்‌ என்றும்‌ உறுதியாக நம்புதல்‌.

3-அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ எதுவும்‌ அவனது படைப்புகளின்‌ பண்புகளுக்கு எந்த வகையிலும்‌ ஒப்பற்றவையாகும்‌. மேலும்‌ எப்பொருளும்‌ அவனது பண்புகளிலோ, அவனது செயற்பாடுகளிலோ அவனுக்கு நிகரற்றவையாகும்‌. அல்லாஹ்‌ கூறுகின்றான்‌: அவனைப்‌ போன்று எப்பொருளும்‌ இல்லை. அவன்‌  செவியேற்பவன்‌; யாவற்றையும்‌ நன்கறிந்தவன்‌. (அஷ்ஷுரா:!॥).

ஆகவே அவனது பண்புகளின்‌ உண்மையான அமைப்பை அறிய முற்படுவதிலிருந்து முழுமையாக ஒதுங்கி இருப்பது அவசியமாகும்‌. ஏனெனில்‌ அதன்‌ உண்மையான அமைப்பை அவனது படைப்புகள்‌ எவரும்‌ அறிய முடியாது.

4-அந்தப்‌ பண்புகளிலிருந்து பெறப்படும்‌ சட்டங்களையும்‌, அவை மனித வாழ்வில்‌ ஏற்படுத்தும்‌ பிரதிபலிப்புகளையும்‌, தாக்கங்களையும்‌ நம்புதல்‌. ஏனெனில்‌ ஓவ்வொரு பண்பும்‌ ஓர்‌ இறைவழிபாட்டு முறையை போதிப்பவையாக இருக்கின்றது.

மேற்கூறப்பட்ட ஐந்து அம்சங்களும்‌ தெளிவாகுவதற்காக அல்லாஹ்வின்‌ பண்புகளுள்‌ ஒன்றான “இஸ்திவா” “உயர்தல்‌” என்ற பொருள்‌ கொண்ட பண்பை உதாரணமாகக்‌ கொண்டு விளங்க முற்படுவோம்‌.

1) மார்க்க மூலாதாரங்களில்‌ ஒன்றான அல்குர்‌ஆனில்‌ இப்பண்பானது இடம்‌ பெறுகின்ற காரணத்தால்‌ அதை நம்பி உறுதி செய்தல்‌. அர்ரஹ்மான்‌ (அல்லாஹ்‌) அர்ஷின்‌ மீதானான்‌. (தாஹா: வச:5 ) என்ற வசனம்‌ இக்‌ கூற்றை உறுதி செய்கின்றது.

2) அல்லாஹ்வின்‌ தகுதிக்கேற்ப “இஸ்திவா” “உயர்வு”
எனும்‌ பண்பைப்‌ பூரணமாக நிலைப்படுத்துதல்‌, அல்லாஹ்‌ தனது மகத்துவத்திற்கும்‌, தகுதிக்கும்‌ தோதுவாக அர்ஷின்‌ மீது யதார்த்தமாகவே அவன்‌ இருக்கின்றான்‌. இது அவனது உயர்வையும்‌, படைப்புகள்‌ மீதுள்ள அவனது மேலாண்மையையும்‌ காட்டுகின்றது.

3) படைப்பாளனான அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதிருப்பது மனிதர்களின்‌ செயலுக்கு எந்த வகையிலும்‌ நிகராகாது. அல்லாஹ்‌ அர்ஷ்‌ இல்லாமலும்கூட இருப்பதற்கு ஆற்றல்‌ மிக்கவன்‌. அவனது கண்ணியத்தையும்‌ உயர்வையும்‌ எடுத்துக்காட்டுவதற்காகவே அவன்‌ அர்ஷின்‌ மீதிருக்கின்றான்‌.

ஆனால்‌ அவனது படைப்புகளாகிய நாம்‌ அமர்விடம்‌ ஒன்று அவசியம்‌ தேவையுடையோராக இருக்கின்றோம்‌. அல்லாஹ்‌ கூறுகின்றான்‌: அவனைப்‌ போன்று எப்பொருளும்‌ கிடையாது. அவன்‌ செவியேற்பவன்‌; யாவற்றையும்‌ நன்கு அறிந்தவன்‌.
(அஷ்ஷுரா: வச: 11).

4) அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீது அமர்ந்துள்ள செயல்‌ மறைவானதாக இருக்கின்ற காரணத்தால்‌ அதன்‌ முறை பற்றிய ஆய்வில்‌ மூழ்குவதோ, அதற்கு வடிவம்‌ கொடுப்பதோ, அதை அதிகம்‌ அலட்டிக்‌ கொள்வதோ கூடாது.

5) இதன்‌ மூலம்‌ அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதிருந்து, அவனது
ஆற்றல்‌, வல்லமையால்‌ படைப்புகளை ஆட்சி செய்பவன்‌ என்ற சட்டத்தைப்‌ பெற முடிவதோடு, அவன்‌ எல்லாவற்றிற்கும்‌ மேல்‌ உயர்வான அர்ஷின்‌ மீது இருக்கின்றான்‌ என்பதையும்‌ நிலைப்படுத்தி நம்புதல்‌.

சலஃபுகளும்‌ இஸ்திவா கோட்பாடும்‌

நபித்தோழர்கள்‌, தாபியீன்கள்‌, தபஉத்தாபியீன்கள்‌, அவர்களின்‌ வழிவந்த இமாம்களான அபூஹனீஃபா, மாலிக்‌, ஷாஃபி, அஹ்மத்‌, புகாரி, முஸ்லிம்‌, திர்மிதீ, அபூதாவூத்‌, இப்னுமாஜா, ஹம்மாத்‌ பின்‌ ஸைத்‌, அவ்ஸாயீ, ஷுஅபா பின்‌ ஹஜ்ஜாஜ்‌, தாரமீ‌, இப்னு ஹுஸைமா (ரஹ்‌) போன்ற மூன்று நூற்றாண்டுக்குட்பட்டோர்‌, மற்றும்‌ அவர்களின்‌ அகீதாக்‌ கோட்பாட்டைச்‌ சரிகண்டோர்‌ சலஃபுகள்‌ என்று அழைக்கப்படுகின்றனர்‌.

“அல்‌ அஸ்மா வஸ்ஸிஃபாத்‌” கோட்பாட்டில்‌ சலஃபுகளின்‌ நிலைப்பாடு பற்றி அறியும்‌ ஒருவரால்‌ மட்டுமே அவற்றில்‌” வழி தவறிய பிரிவுகளான “அஷாயிரா” (அஷ்‌அரிய்யா), ஜஹ்மிய்யா, முஃதஸிலா, சூஃபிய்யா, முர்ஜிஆ, கத்ரிய்யா போன்ற பிரிவுகளின்‌ சிந்தனைத்தாக்கங்களிலிருந்து விடுபடமுடியும்‌.

அதனால்‌ சலஃபுகள்‌ அல்‌அஸ்மா வஸ்ஸிஃபாத்‌ கோட்பாட்டில்‌ என்ன நிலையில்‌ இருந்தனர்‌ என்பதை இங்கு சுருக்கமாக நோக்குவோம்‌.

ஒருவர்‌ இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்களிடம்‌: “அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதானான்‌” எனக்‌ கூறுகிறானே! எப்படி அமர்ந்திருப்பான்‌? என வினவினார்‌. அப்போது இமாமவர்கள்‌ அவரை ஒரு கணம்‌ ஏறெடுத்துப்‌ பார்த்துவிட்டு, தமது தலையைத்‌ தாழ்த்தியவராக

“இஸ்திவா என்பது அறியப்பட்டதாகும்‌; அதன்‌ முறை அறியப்படவில்லை; அது பற்றி நம்புவதுதான்‌ கடமை; அதன்‌ முறைபற்றிக்‌ கேள்வி எழுப்புவது “பித்‌ஆ” மார்க்கத்தில்‌ இல்லாத புதிய சித்தாந்தமாகும்‌. என பதிலளித்தார்கள்‌.

இக்கருத்து தாபியீன்களின்‌ வரிசையில்‌ இடம்‌ பெற்றுள்ள “ரப்‌ஆ பின்‌ அபீ அப்திர்ரஹ்மான்‌” என்ற இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்களின்‌ ஆசிரியர்‌ மூலமும்‌ உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று இமாம்களான மக்ஹுல்‌, சுஹ்ரீ, அவ்ஸாயீ, சுஃப்யானுஸ்ஸவ்ரீ‌, லைஃத்‌ பின்‌ ஸஅத்‌, போன்ற அறிஞர்கள்‌ “அல்‌ அஸ்மா வஸ்ஸிஃபாத்‌” பற்றி வினவப்படுகின்ற போது:

“அவை வந்திருப்பது போன்று முறை கற்பிக்காது, அவற்றை நடத்திச்‌ செல்லுங்கள்‌” எனப்‌ பதிலளிப்போராக இருந்தனர்‌.

மேலும்‌ இமாம்‌ அபூ ஹனீஃபா (ரஹ்‌) அவர்களிடம்‌ “முதிஉ அல்‌ பல்கீ” என்பவர்‌, “எனது இரட்சகன்‌ வானிலா? அல்லது பூமியிலா? இருக்கின்றான்‌ என்பதை நான்‌ அறியேன்‌ எனக்‌ கூறுபவர்‌ பற்றி தீர்ப்புக்‌ கேட்கப்பட்ட போது அவன்‌ நிராகரிப்பாளனாகிவிட்டான்‌. ஏனெனில்‌ அல்லாஹ்‌ அல்குர்‌ஆனில்‌ “அர்ரஹ்மான்‌ அர்ஷின்‌ மீதானான்‌. (தாஹா: 5) எனக்‌ கூறியுள்ளான்‌. அவனது “அர்ஷ்‌” அவனது வானங்களின்‌ மேல்‌ இருக்கின்றது எனக்‌ கூறினார்கள்‌. (ஆதார நூல்‌: ஷரஹுத்தஹாவிய்யா. அர்ஷ்‌ பற்றிய அத்தியாயம்‌)

இது போன்ற “அல்‌ அஸ்மா, வஸ்ஸிஃபாத்‌” விசயத்தில்‌ சலஃபுகளின்‌ நிலைப்பாட்டை விளக்கும்‌ இமாம்‌ அவ்ஸாயீ (ரஹ்‌) அவர்கள்‌.

தாபியீன்கள்‌ அதிகமானோர்‌ இருக்கின்ற போதே “நிச்சயமாக அல்லாஹ்‌ அவனது அர்ஷின்‌ மீதிருப்பதாக நாம்‌ கூறுவோராக இருந்தோம்‌, சுன்னாவில்‌ வந்துள்ள “ஸிஃபாத்‌” பண்புகளை விசுவாசிக்கிறோம்‌ எனக்‌ கூறினார்கள்‌. (பார்க்க; அல்‌உலுவ்‌ஃ பாகம்‌: - 2 பக்‌: 940 ஆசிரியர்‌: இமாம்‌ தஹபீ (ரஹ்‌) அவர்கள்‌)

இக்‌ கருத்தினை இமாம்‌ அபுல்‌ ஹசன்‌ அல்‌அஷ்‌அரீ (ரஹ்‌) அவர்கள்‌ தமது மகாலாதுல்‌ இஸ்லாமிய்யீன்‌, மற்றும்‌ அல்‌-இபானா அன்‌ உஸுலித்தியானா போன்ற நூல்களில்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்க.

“அல்லாஹ்வுக்கென பல பெயர்களும்‌, பண்புகளும்‌ இருக்கின்றன, அவற்றை எவரும்‌ அறியாமல்‌ இருக்க முடியாது. அவை பற்றிய தக்க சான்று ஒருவரை வந்தடைந்த பின்பும்‌ எவர்‌ அதற்கு மாறுசெய்கிறாரோ அவர்‌ நிராகரித்தவராவார்‌. அவை பற்றிய சான்று அவரை வந்தடையும்‌ முன்‌ அவர்‌ அறியாமைக்காக மன்னிக்கப்படுவார்‌ என இமாம்‌ “ஷாஃபிஈ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடும்‌ செய்தியை இமாம்‌ பைஹகீ (ரஹ்‌) அவர்கள்‌ “மனாகிபுஷ்‌ ஷாஃபிஈ எனும்‌ நூலில்‌ குறிப்பிடுகிறார்கள்‌.

“அல்லாஹ்‌ தன்னை வர்ணித்திருப்பது போன்று, அல்லது அவனது தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ அவனை வர்ணித்திருப்பது போன்று குர்‌ஆனையும்‌, ஹதீஸையும்‌ மீறாது அல்லாஹ்‌ வர்ணிக்கப்படல்‌ வேண்டும்‌ என இமாம்‌ அஹ்மத்‌ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடுகிறார்கள்‌. (ஆதார நூல்‌: இஜ்திமாவுல்‌ ஜுயூஷில்‌ இஸ்லாமிய்யா. (ஆசிரியர்‌: இமாம்‌ இப்னுல்‌ கய்யிம்‌ அல்ஜவ்ஸிய்யா (ரஹ்‌).

எவர்‌ அல்லாஹ்வை அவனது படைப்புகளுக்கு ஒப்பிடுகிறாரோ அவர்‌ நிராகரித்தவர்‌; எவர்‌ அல்லாஹ்‌ தன்னைப்பற்றி அறிமுகம்‌ செய்ததை நிராகரிக்கிறாரோ அவரும்‌ நிராகரித்தவர்‌; அல்லாஹ்‌ தன்னைப்‌ பற்றி அறிவித்ததிலோ, அல்லது அவனது தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ அறிமுகப்படுத்தியதிலோ (படைப்புகளுக்கு) எந்தவிதமான ஒப்புதலும்‌ கிடையாது என இமாம்‌ புகாரீ (ரஹ்‌) அவர்களின்‌ ஆசிரியரான நயீம்‌ பின்‌ ஹம்மாத்‌ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடுகிறார்கள்‌. (ஆதார நூல்‌: அல்‌உலுவ்‌. ஆசிரியர்‌: இமாம்‌ தஹபீ (ரஹ்‌).

மாலிக்‌ மத்ஹபின்‌ பிரசித்தி பெற்ற அறிஞரான இமாம்‌ இப்னு அப்தில்‌ பர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடும்போது.

அல்குர்‌ஆனிலும்‌, நபிகள்‌ நாயகத்தின்‌ வழிகாட்டுதவிலும்‌ இடம்‌ பெற்றுள்ள அனைத்துப்‌ பண்புகளையும்‌ நிலைப்படுத்தி, அவற்றை விசுவாசம்‌ கொள்வதிலும்‌, அவை யதார்த்தப்‌பூர்வமானவைதாம்‌; அவை இரு கருத்திற்குற்பட்டவையோ, அல்லது சிலேடையானவையோ அல்ல என்பதில்‌ “அஹ்லுஸ்‌ ஸுன்னா வல்‌ ஐமாஆ” வைச்‌ சார்ந்தோர்‌ ஒருமித்த கருத்தில்‌ இருக்கின்றனர்‌. எனினும்‌ அவர்கள்‌ அதில்‌ எந்த ஒன்றிற்கும்‌ முறைமை, (வடிவம்‌) கற்பிப்பதில்லை. ஜஹ்மிய்யா, முஃதஸிலா, கவாரிஜ்கள்‌ போன்ற நவீன பித்‌அத்வாதிகள்‌ இவற்றை மறுத்துரைப்பதுடன்‌, அவற்றை அதன்‌ உண்மையான பொருளில்‌ கையாளவும்‌ மாட்டார்கள்‌. அவற்றை நிலைப்படுத்திக்‌ கூறுவோரை அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிப்போர்‌” என்று தவறான கருத்துக்‌ கொள்வர்‌. ஆனால்‌ இதனை ஏற்றுக்‌ கொண்டவர்களிடம்‌ இப்பிரிவினர்‌ வணக்கத்திற்குரியவனை (அல்லாஹ்வை) நிலைப்படுத்தாதவர்களாகவும்‌ கணிக்கப்படுகின்றனர்‌.
இருப்பினும்‌ சத்தியமானது அல்குர்‌ஆனும்‌, நபிகள்‌ நாயகத்தின்‌ பொன்மொழிகளும்‌ முன்மொழிந்ததை எடுத்துரைப்போர்‌ சொல்வதிலேயே உள்ளது. அவர்கள்தாம்‌ “அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆ” பிரிவினர்‌ எனக்‌ குறிப்பிடுகிறார்கள்‌. (ஆதார நூல்‌: அத்தம்ஹீத்‌. பா: 7. பக்‌: 145),

நமது பிரதேசத்தின்‌ பெரும்பாலான அரபு மத்ரசாக்கள்‌
“சுன்னத்‌ வல்ஜமாஆ” அறிஞர்களின்‌ நூல்களையும்‌, கொள்கைக்‌ கோட்பாடுகளையும்‌ போதிப்பதற்கு மாறாக “அகீதா” கோட்பாட்டில்‌ வழி தவறிய பிரிவுகளான “அஷ்‌அரிய்யா” “ஜஹ்மிய்யா” போன்ற பிரிவினரின்‌ சிந்தனைக்‌ கோட்பாடுகளைப்‌ போதிக்கின்ற காரணத்தால்‌ “பானையில்‌ உள்ளதே அகப்பையில்‌ வரும்‌” என்பது போல மாணவர்களின்‌ கல்வி நிலை பரிதாபகரமானதாக இருக்கின்றது.

அல்குர்‌ஆனையும்‌, அஸ்ஸுன்னாவையும்‌ பிரச்சாரம்‌ செய்யும்‌ இலங்கை, இந்தியா போன்ற பிரதேசங்களில்‌ உள்ள சகோதர இஸ்லாமிய அமைப்புகளின்‌ அழைப்பாளர்களிடமும்‌ அஸ்மா, வஸ்ஸிஃபாத்‌ பற்றிய விசயத்தில்‌ ஒரு குழப்ப நிலையைக்‌ காண முடிகிறது. அதனால்‌ பிறரைச்‌ சீர்‌ செய்யு முன்னர்‌ தம்மை உறுதியானவர்களாக மாற்றிக்‌ கொள்வது ஈருலகிலும்‌ பயனை ஈட்டித்‌ தரும்‌ என்பதில்‌ ஐயமில்லை.

குறிப்பு: நாம்‌ எடுத்துக்காட்டிய சலஃபுகளின்‌ தீர்ப்புகளையும்‌, கோட்பாட்டு விதிகளையும்‌ “அல்‌அஸ்மா வஸ்ஸிஃபாத்‌” அனைத்திலும்‌ நடைமுறைப்படுத்துவதே “அஹ்லுஸ்ஸுன்னா வல்‌ ஜமாஆ” பிரிவினரின்‌ வழிமுறையாகும்‌.

இதற்கு அடிப்படையாக பண்புகளில்‌ ஒரு சிலவற்றில்‌ கடைப்பிடிக்கப்படும்‌ தீர்ப்பானது. மற்றைய பண்புகளிலும்‌ எடுத்துக்‌ கொள்ளப்படும்‌” என்ற பொருள்‌ தாங்கிய விதியை “அஹ்லுஸ்ஸுன்னாக்கள்‌ முன்வைப்பர்‌. மேலும்‌ அதிகப்படியான தகவல்களைப்‌ பெற ஆசிரியர்‌: இமாம்‌ தஹபீ (ரஹ்‌) அவர்களின்‌ அல்‌உலுவஃ என்ற நூலைப்‌ பார்வை இடுக).

அல்லாஹ்வின்‌ கரம்‌, இரு கரம்‌ என்பதன்‌ விளக்கம்‌

அல்லாஹ்வின்‌ ஏழு பண்புகளை மட்டும்‌ அங்கீகரித்துள்ள அஷ்‌அரிய்யா பிரிவினரும்‌, எட்டுப்பண்புகளை மட்டும்‌ அங்கீகரித்துள்ள மாத்ரூதிய்யாப்‌ பிரிவினரும்‌ அல்லாஹ்வுடைய பண்புகளாக வரும்‌ ஏனைய எல்லாப்‌ பண்புகளையும்‌ மறுக்கின்றனர்‌. அல்லது அதற்குத்‌ தவறான விளக்கம்‌ தருகின்றனர்‌ என்பது பற்றி முன்னைய பகுதிகளில்‌ குறிப்பிட்டிருந்தோம்‌. அந்த அடிப்படையில்தான்‌ அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ கரம்‌ என்றோ, இரு கரம்‌ என்றோ வருகின்ற பண்பை அல்லாஹ்வின்‌ அருள்‌ என அவர்களாகத்‌ தன்னிலை விளக்கம்‌ அளிக்கின்றனர்‌.

இது அஹ்லுஸ்ஸுன்னாக்களால்‌ “பொருள்‌ சார்ந்த திரிபு” என அழைக்கப்படுகின்றது. இதன்‌ உண்மையான விளக்கம்‌ பற்றி இப்போது நோக்கப்படுகின்றது.

அரபியில்‌ (இரு கரம்‌) என்ற இருமையைக்‌ குறிக்கும்‌ யதானி, அல்லது எதைனி என்று இடம்‌ பெறும்‌. இதற்கு இரு கரங்கள்‌, இருகரங்களை என நிலைமைக்குத்‌ தோதுவாகப்‌ பொருள்‌ கொள்ளப்படும்‌.

அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ விஷயத்தில்‌ இந்தச்‌ சொற்கள்‌ இடம்‌ பெறும்‌ பொழுது அதற்கு அருள்‌ அல்லது சக்தி என்பதில்‌ பயன்படுத்துவது தவறாகும்‌.

ஏனெனில்‌ ஒருமையான சொல்லைப்‌ பன்மைக்கும்‌, பன்மையான சொல்லை ஒருமைக்குமாகப்‌ பயன்படுத்துவது ஒரு சமூக மொழி வழக்கில்‌ உள்ளதாகும்‌.

உதாரணமாக, “நிச்சயமாக மனிதன்‌ நட்டத்தில்‌ இருக்கின்றான்‌” என்ற குர்‌ஆனின்‌ வசனத்திற்கு மனித இனம்‌ என்று பொருள்‌ கொள்ளப்படுவதுண்டு. அவ்வாறே, பன்மையான சொல்லை ஒருமைக்கும்‌, இருமைக்கும்‌ பயன்படுத்தப்படுவதுண்டு. “மனிதர்கள்‌ தங்களுக்கு எதிராகச்‌ சூழ்ச்சி செய்கின்றனர்‌” (ஆலுஇம்ரான்‌: 173) என்ற வசனத்தில்‌ இடம்‌ பெற்றுள்ள மனிதர்கள்‌ என்ற பன்மைச்‌ சொல்‌ இங்கு ஒருமையைக்‌ குறிக்கின்றது.

அவ்வாறே, “நீங்கள்‌ இருவரும்‌ தவ்பாச்‌ செய்து கொண்டால்‌ (நல்லது அவ்வாறில்லாத போது) உங்கள்‌ இருவரின்‌ உள்ளங்களும்‌ (அதன்‌ பக்கம்‌) சாய்ந்திருக்கும்‌ (66: 4) என்ற வசனத்தில்‌ பன்மையாக இடம்‌ பெற்றுள்ள “உள்ளங்கள்‌' என்ற பன்மைச்‌ சொல்‌ இருமைக்காகப்‌ பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒருமையைக்‌ குறிக்கும்‌ சொல்லை இருமையிலும்‌, இருமையைக்‌ குறிக்கும்‌ சொல்லை ஒருமையிலும்‌ பயன்படுத்தியதற்கான ஆதாரத்தை அரபு மொழிவழக்கில்‌ காண முடியவில்லை.

அந்த அடிப்படையில்‌ “அல்லாஹ்வின்‌ இரு கரங்கள்‌” என இடம்‌ பெறுவது எண்ணிக்கை பற்றியதாகும்‌. அதனால்‌ அதன்‌ சரியான எண்ணிக்கையில்‌ இருந்து நிலைமாறுவது அனுமதிக்கப்படவில்லை. உதாரணமாக “என்னிடம்‌ ஒரு மனிதன்‌ இருக்கின்றான்‌” எனக்‌ கூறி விட்டு, இருவர்‌ இருக்கின்றனர்‌ எனப்‌ பொருள்‌ கூற முடியாது, அவ்வாறே, “இருவர்‌ இல்லை” என்று கூறிய பின்னர்‌, ஓர்‌ இனத்தை நோக்கமாகக்‌ கொள்வது அர்த்தமற்றதாகும்‌.

ஒருவன்‌ என்று கூறி ஓர்‌ இனத்தைச்‌ சுட்டிக்‌ காட்டிப்‌ பயன்படுத்தப்படுவதுண்டு. ஓர்‌ இனம்‌ என்பது அனைவரையும்‌ உள்ளடக்கிக்‌ கொள்ளும்‌. அவ்வாறே இனத்தைக்‌ குறிக்கப்‌ பன்மையான சொல்லைப்‌ பயன்படுத்தவும்‌ முடியும்‌. அதில்‌ ஒருமை உள்ளடங்கும்‌. எனது இரு கரங்களாலும்‌ நான்‌ படைத்தவனுக்கு நீ சுஜுத்‌ செய்ய ஏன்‌ மறுத்தாய்‌ என இடம்‌ பெற்றுள்ள வசனத்தில்‌ இரு கரம்‌ என்பதை -குத்ரத்‌- வல்லமை” எனப்‌ பொருள்‌ கொள்ளவே முடியாது. ஏனெனில்‌ குத்ரத்‌ என்பது ஒரு பண்பை மட்டும்‌ குறிக்கின்றது. இருமையைக்‌ குறிக்கும்‌ இடத்தில்‌ ஒருமையைக்‌ குறிக்கின்றது என வாதிட முடியாது.

அவ்வாறே, அந்த வசனத்திற்கு -நிஅமத்‌- “அருட்கொடை என்றும்‌ பொருள்‌ கொள்ள முடியாது. ஏனெனில்‌ அல்லாஹ்வின்‌ அருள்கொடைகளை வரையறை செய்ய முடியாது. மதிப்பீடு செய்ய முடியாத அருட்கொடைகளை இருமையைக்‌ குறிக்கும்‌ சொல்லைக்‌ கொண்டு வரையறை செய்யவும்‌ முடியாது.

ஷைத்தான்‌ பற்றிக்‌ குறிப்பிடும்‌ வசனத்தில்‌ “எனது இரு கரம்‌ கொண்டு படைத்தவனுக்கு (ஆதத்திற்கு) நீ ஏன்‌ சுஜுத்‌ செய்ய மறுத்தாய்‌”? என்று இடம்‌ பெற்றுள்ள அல்குர்‌ஆன்‌ வசனத்தில்‌ 'பா' என்ற துணை எழுத்து இணைந்து வந்துள்ளது. அது ஒருவர்‌ தமது கரத்தினால்‌ யதார்த்தமாகச்‌ செய்ததைக்‌ குறிக்கவே அரபு வழக்கில்‌ பயன்படுத்தப்படும்‌ என்பதைக்‌ கவனத்தில்‌ கொள்ளல்‌ வேண்டும்‌. இவ்வாறு அறிஞர்‌ இப்னு தைமிய்யா அவர்கள்‌ குறிப்பிடுகின்றார்கள்‌. مجموع الفتاوى – (ج 6 / ص 366

அல்லாஹ்வின்‌ இருகரம்‌ என்பதை ‘குத்ரத்‌' என்று விளக்கலாமா?

இமாம்‌ அபூஹனீபா (ரஹ்‌) அவர்கள்‌ “அல்‌ஃபிக்ஹுல்‌ அக்பர்‌” என்ற தமது நூல்‌ பக்கம்‌ 302 இல்‌ “அல்லாஹ்வின்‌ கரம்‌ என்பதை அவனது ஆற்றல்‌ என்றோ, அல்லது அவனது அருள்‌ என்றோ கூறுவதால்‌ அவனது பண்பு பாழடிக்கப்படுகிறது. இவ்வாறு கூறுவது, விதியை மறுப்போரினதும்‌, -பகுத்தறிவால்‌ குர்‌ஆனையும்‌, ஹதீஸையும்‌ அணுகும்‌- முஃதஸிலாக்களினதும்‌ கூற்றாகும்‌. அவனது “கரம்‌” முறை அறியப்படாத ஒரு பண்பாகும்‌” எனக்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌.

நமது பிரதேச அஷ்‌அரிய்யா மெளலவிகள்‌ தாமே சத்திய வழிநடப்போர்‌ என்றும்‌, சலஃபியச்‌ சிந்தனைவாதிகள்‌ வழிகேடர்கள்‌ என்றும்‌ சமூகத்தில்‌ தம்மை அடையாளப்படுத்திக்‌ கொண்டு மேற்படி வசனத்திற்கு “நிஅமத்‌” (அருள்‌) “குத்ரத்‌” (சக்தி) என அதன்‌ உண்மையான பொருளைத்‌ திரித்துக்‌ கூறித்‌ தாமும்‌ வழிகெட்டு, மக்களையும்‌ வழிகெடுக்கின்றனர்‌.

மேற்படி வசனத்தில்‌ “இருமையைக்‌” குறிக்கும்‌ வாசகம்‌ பயன்படுத்தப்பட்டுள்ளதை நோக்கத்‌ தவறி விட்ட இம்மகான்கள்‌ “இரு சக்தி” “இரு அருள்‌” என்றல்லவா கூற வேண்டும்‌?

“அல்லாஹ்வின்‌ இரு கரம்‌” எனத்‌ தெளிவாக அல்லாஹ்‌
கூறியிருந்தும்‌ இந்த வழிகேட்டை அரங்கேற்றியுள்ளனர்‌. இவர்கள்‌ முதலில்‌ இந்த வசனத்தை மனிதனது கரத்திற்கு ஒப்பிட்ட பாவத்தைச்‌ செய்தனர்‌. பின்னர்‌ அதன்‌ பொருளைப்‌ பாழடிக்கின்ற இரண்டாவது பாவத்தைச்‌ செய்தனர்‌. மனிதக்‌ கரங்களுக்கு ஒப்பிட்டதே இந்தப்‌ பாவத்திற்கு அவர்களை இட்டுச்‌ சென்றது எனக்‌ குறிப்பிடமுடியும்‌.

ஆதம்‌ (அலை) அவர்களை அல்லாஹ்‌ தனது இருகரங்களாலும்‌ படைத்ததை ஷைத்தானிடம்‌ சுட்டிக்காட்டிய நிகழ்வில்‌ “இருகரம்‌” என அல்குர்‌ஆன்‌ குறிப்பிட்டிருப்பதை அதன்‌ விசேஷத்தன்மையை விளக்குவதற்கு என்பதை இங்கு கவனிக்க வேண்டும்‌. (ஸாத்‌- 75)

“அஹ்லுஸ்ஸுன்னா” பிரிவைச்‌ சேர்ந்த இமாம்களின்‌ விளக்கங்களைப்‌ புறம்‌ தள்ளிவிட்டு “அஷ்‌அரிய்யா” கோட்பாட்டில்‌ வழிதவறிய பிரிவினரைத்‌ தழுவி அகீதாவைப்‌ போதிக்கும்‌ இலங்கை போன்ற நாடுகளில்‌ ஒப்பு, உவமை அற்ற “இருகரம்‌ என்பதற்குப்‌ பதிலாக “அருட்கொடை” என நம்புவதைப்‌ பின்வருமாறு மறுத்துரைக்கின்றார்‌ பேரறிஞர்‌ இப்னு ஹஜர்‌ அல்‌அஸ்கலானீ‌ (ரஹ்‌) அவர்கள்‌.

படைக்கப்பட்டதால்‌ ஒரு படைப்பை (ஆதத்தை)ப்‌ படைப்பது சாத்தியமற்றதாக இருப்பதால்‌ “இரு கரங்கள்‌” என்பதற்குப்‌ பதிலாக “இரு அருள்கள்‌” எனப்‌ பொருள்‌ கொள்ள முடியாது. ஏனெனில்‌ “அருட்கொடைகள்‌” என்பது படைக்கப்பட்டதாகும்‌. (ஃபத்ஹுல்பாரீ. பாகம்‌. 13. பக்‌ :394)

மற்றோர்‌ இடத்தில்‌ வலது பற்றி இடம்‌ பெற்றுள்ள ஹதீஸை விளக்குகின்ற போது இமாம்‌ இப்னு ஹஜர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்‌.

குறித்த இந்த ஹதீஸில்‌ -எமீன்‌ வலது என்பது அல்லாஹ்வின்‌ தாத்துடன்‌ - உள்ளமையுடன்‌ - தொடர்பான பண்புகளுள்‌ ஒரு பண்பாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

அது (அல்லாஹ்வுக்கு) உருவம்‌ கற்பிக்கின்ற முஜஸ்ஸிமாக்கள்‌ (மனித உறுப்புகளுக்கு ஒப்பிட்டு அல்லாஹ்வின்‌ பண்புகளை நம்பிக்கை கொள்வோர்‌) தவிர உள்ள ஏனையோர்‌ பார்வையில்‌ உடலுறுப்பின்‌ அங்கமாகவும்‌ இல்லை.

இமாம்‌ திர்மிதீ‌ அவர்கள்‌ ஸதகாவின்‌ நன்மைகள்‌, பயன்பாடுகள்‌ பற்றி வந்துள்ள குர்‌ஆன்‌ வசனங்களிலும்‌, ஹதீஸ்களிலும்‌ இடம்‌ பெற்றுள்ள அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ பற்றி விளக்குகின்ற போது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளதைப்‌ பார்க்கின்றோம்‌.

அல்லாஹ்‌ தர்மத்தைத்‌ தனது வலக்கரத்தால்‌ எடுத்துக்‌ கொள்கின்றான்‌ என்ற ஹதீஸ்‌ “ஹசன்‌ ஸஹீஹ்‌” என்ற தரத்தில்‌ அமைந்ததாகும்‌. அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்‌ மூலமாக இது போன்ற செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹதீஸிலும்‌, ஸிஃபாத்துகள்‌ தொடர்பான இது போன்ற இன்னும்‌ பல ஹதீஸ்களிலும்‌, ஒவ்வோர்‌ இரவும்‌ அல்லாஹ்‌ அடிவானத்திற்கு இறங்குவதிலும்‌ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்‌.

அதாவது இவை பற்றி வரும்‌ அறிவிப்புகள்‌ ஆதாரமானவையாக இருக்கும்‌. அவற்றைக்‌ கொண்டு ஈமான்‌ கொள்ள வேண்டும்‌; சந்தேகிக்கக்‌ கூடாது. எப்படி என்றும்‌ கேட்பது கூடாது. மாலிக்‌, சூஃப்யான்‌ பின்‌ உயைனா, அப்துல்லாஹ்‌ பின்‌ அல்முபாரக்‌ ஆகியோர்‌, இவ்வாறான ஹதீஸ்களில்‌ எப்படி என்று கூறாது அவை வந்துள்ளவாறு செயல்படுத்துங்கள்‌ எனக்‌ கூறுவார்கள்‌. இவ்வாறே அஹ்லுஸ்ஸுன்னா வல்‌ ஜமாஆ அறிஞர்களின்‌ தீர்ப்பும்‌ இருந்தது. மேலும்‌ அவர்கள்‌ குறிப்பிடுகின்ற போது:

ஜஹ்மிய்யாக்கள்‌ (தற்போதைய அஷ்‌அரிய்யாக்கள்‌) இந்த அறிவிப்புகளை எல்லாம்‌ மறுத்துரைக்கின்றனர்‌. இது படைப்புகளுக்கு அல்லாஹ்வை ஒப்பிடுவது என்று காரணம்‌ கூறுகின்றனர்‌. அல்லாஹ்‌ அவனது வேதத்தில்‌ பல இடங்களில்‌ கை, கேள்வி, பார்வை பற்றிய பண்புகள்‌ பற்றிக்‌ குறிப்பிட்டுள்ளான்‌. ஜஹ்மிய்யாக்கள்‌ இதற்குத்‌ தவறான விளக்கமளித்து, அறிஞர்கள்‌ குழாம்‌ வழங்காத தஃப்சீரை அதற்குத்‌ தந்துள்ளனர்‌. அல்லாஹ்‌ ஆதம்‌ நபியை அவனது கரம்‌ கொண்டு படைக்கவில்லை; கரம்‌ என்பது சக்தி, ஆற்றல்‌ என்பதாக விளக்கமளித்தனர்‌.

அதற்கு மறுப்புத்‌ தெரிவிக்கின்ற அறிஞரான இஸ்ஹாக்‌ பின்‌ ராஹவைஹி (ராஹோயா) என்ற அறிஞர்‌ ஒரு கரம்‌ மற்றொரு கரம்‌ போன்றது, செவிப்‌ புலன்‌ இன்னொரு புலன்‌ போன்றது, பார்வை இன்னொரு பார்வை போன்றது என்று ஒப்பிட்டுக்‌ கூறினால்‌ அது உண்மையில்‌ ஒப்பீடு என்று குறிப்பிட முடியும்‌. ஆனால்‌ அல்லாஹ்‌ கூறியது போன்று பொதுவாக கரம்‌, கேள்விப்புலன்‌, பார்வை என்று கூறி, முறையைக்‌ கூறாது, உதாரணமும்‌ குறிப்பிடாது கூறுவது படைப்பினங்களின்‌ பண்புகளுக்கு ஒப்பிட்டதாக ஆகாது. ஏனெனில்‌ அல்லாஹ்‌ அவனது திருமறையில்‌ அவனைப்‌ போன்று எதுவும்‌ இல்லை, அவன்‌ செவியேற்பவன்‌, பார்ப்பவன்‌ எனக்‌ குறிப்பிட்டுள்ளான்‌ என விளக்கியுள்ளார்கள்‌. (சுனன்‌ திர்மிதீ‌).

இமாமுல்‌ ஹரமைன்‌ என்றழைக்கப்படும்‌ இமாம்‌ அபுல்‌ மஆலீ அல்ஜுவைனீ அவர்கள்‌ பற்றி “அஸ்மா, ஸிஃபாத்‌” விஷயத்தில்‌ தவறான வியாக்கியானம்‌ தந்தவர்களுள்‌ ஒருவராக இருந்து, பின்னர்‌ رسالة الفوقية والإستواء என்ற நூலில்‌ அந்தத்‌ தவறான சிந்தனையில்‌ இருந்து மீண்டவர்‌ என்பது குறிப்பிடத்‌தக்கதாகும்‌.

அவர்‌ தமது இறுதிக்‌ காலத்தில்‌ அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ கோட்பாட்டை ஏற்றார்‌.

அவரே பின்வரும்‌ வாசகங்களை மொழிந்துள்ளதாக இமாம்‌ அத்தஹபீ (ரஹ்‌) அவர்கள்‌ தமது “சியர்‌” எனும்‌ தமது நூலில்‌ சுட்டிக்காட்டியுள்ளார்கள்‌.

நான்‌ ஐம்பதாயிரத்தில்‌ ஐம்பதாயிரம்‌ (பல நூறு நூல்களை) வாசித்துள்ளேன்‌. பின்னர்‌ இஸ்லாமியர்களை அதில்‌ உள்ள அவர்களின்‌ இஸ்லாத்துடனும்‌, வெளிப்படையான அறிவு ஞானங்களுடனும்‌ விட்டுவிட்டேன்‌; ஆழ்‌ (அறிவுக்‌) கடலில்‌ முழ்கினேன்‌; இஸ்லாமிய அறிஞர்கள்‌ தடுத்த (தத்துவக்கலையில்‌) மூழ்கி முத்துக்குளித்தேன்‌. இவை யாவும்‌ சத்தியத்தைத்‌ தேடித்தான்‌ (செய்தேன்‌). கடந்த காலத்தில்‌ “தக்லீத்‌” எனும்‌ கண்மூடித்தனமான வழிமுறையில்‌ இருந்து வெருண்டோடினேன்‌; இப்போது சத்தியத்தின்‌ வார்த்தையின்‌ பக்கம்‌ உண்மையாகவே மீண்டுவிட்டேன்‌; நீங்கள்‌ பாட்டியரின்‌ இயற்கையான மார்க்கத்தை (அஹ்லுஸ்ஸுன்னாக்களின்‌ நம்பிக்கைக்‌ கோட்பாட்டைப்‌) பற்றிக்கொள்ளுங்கள்‌; சத்தியமான அல்லாஹ்‌ அவனது அருளால்‌ என்னை அடைந்து கொள்ளாதிருப்பின்‌ (எனது நிலை என்னவாய்‌ இருக்குமோ!) இதோ! நான்‌ பாட்டியரின்‌ இயற்கையான மார்க்கத்தில்‌ மரணிக்கின்றேன்‌. எனது இறுதி முடிவு “தூயதுதிச்சொல்லான” லாயிலாஹ இல்லல்லாஹ்வின்‌ மீது முடிக்கப்படவில்லையாயின்‌ இப்னுல்‌ ஜுவைனிக்குக்‌ கேடுதான்‌ (பார்க்க: சியர்‌. 18-471).

அஸ்மா, ஸிஃபாத்தில்‌ சரியான பார்வை அற்றவர்கள்‌ பற்றி இமாம்‌ இப்னு தைமிய்யா அவர்கள்‌ இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்‌.

அல்லாஹ்‌ தனக்காக நிலைப்படுத்தியுள்ள பண்புகளை எவன்‌ அவனை விட்டு இல்லாமல்‌ செய்கின்றானோ அவன்‌ “முஅத்தில்‌” (பண்புகளைப்‌ பாழடித்தவன்‌) ஆவான்‌. எவன்‌ அவற்றைப்‌ படைப்பினங்களின்‌ பண்புகளுக்கு நிகராக்குகின்றானோ அவன்‌ “முமஸ்ஸில்‌” உருவகம்‌ கற்பித்தவனாவான்‌; முஅத்தில்‌ எதுமில்லாத ஓன்றை வணங்குகின்றான்‌; முமஸ்ஸில்‌ மனிதனுக்கு ஒப்பிட்டவன்‌ சிலை வணங்குபவன்‌ ஆவான்‌. அல்லாஹ்வைப்‌ போன்று எப்பொருளும்‌ இல்லை எனக்‌ கூறுவதன்‌ மூலம்‌ அல்லாஹ்வுக்கு உருவகம்‌ கற்பிப்போருக்கு மறுப்பையும்‌, அவன்‌ நன்கு செவியுறுபவன்‌, பார்ப்பவன்‌ எனக்‌ கூறும்‌ மற்ற பகுதி அவனை யதார்த்தம்‌" இல்லாதவனாக நினைத்து வணங்குவோரின்‌ நிலையைப்‌ பற்றி மறுப்பதையும்‌ பார்க்கின்றோம்‌. (இப்னு தைமிய்யா, அல்ஜவாபுஸ்ஸஹீஹ்‌ விமன்‌ பத்தல தீனல்‌ மசீஹ்‌)

மஜ்மூஉஃபதாவா என்ற அவரது மற்றொரு கிரந்தத்தில்‌

َفالْ ُم َمثِّ ُل أَ ْع َشى َوالْ ُم َع ِّط ُل أَ ْع َمى (مجموع الفتاوى - (ج 5 / ص 196)

"உருவகம்‌ கற்பிப்பவன்‌ இரவில்‌, அல்லது பகலில்‌ பார்வையிழந்தவன்‌. (பண்புகளைப்‌) பாழ்படுத்துபவன்‌, கண்பார்வை இழந்தவன்‌ ஆவான்‌” என்று குறிப்பிடுகின்றார்கள்‌.

ஆறு ஹதீஸ்‌ கிரந்தங்களின்‌ அறிவிப்புகளிலும்‌ இடம்பெற்றுள்ள நம்பகமான அறிஞரான சயீத்‌ பின்‌ ஆமிர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ ஜஹ்மிய்யாக்கள்‌ பற்றி மேற்படி குறிப்பிடுகின்றார்கள்‌.

நவீன அஷ்அரிய்யாக்களின்‌ வாதங்களை ஆய்வு செய்கின்றபோது அவை ஆரம்பக்கால அஷ்‌அரிய்யாக்கள்‌, ஜஹ்மிய்யாக்கள்‌, முஃதஸிலாக்கள்‌ போன்றோரின்‌ கருத்துகளைப்‌ பிரதிபலிப்பவையாகவும்‌, அவர்களின்‌ விளக்கங்களை ஒத்ததாகவும்‌ இருப்பதைக்‌ காண முடிகின்றது.


அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌ தொடர்பான குறிப்புகள்‌

1- அல்லாஹ்வுக்கு 99 பெயர்களையும்விட இன்னும்‌ மேலதிகமான பல பெயர்கள்‌ உண்டு.

2- 99 பெயர்கள்‌ இவைதாம்‌ என அடையாளப்படுத்தும்‌ விதமாக ஸஹீஹான நபிமொழிகள்‌ எதுவும்‌ இடம்‌ பெறவில்லை என்பது ஹதீஸ்கலை அறிஞர்களின்‌ தீர்ப்பாகும்‌.

3 அல்லாஹ்வின்‌ சில பெயர்கள்‌ அவனது அடியார்கள்‌ பெயரிலும்‌ பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. உதாரணமாக
அஸீஸ்‌, ரஹீம்‌, ரவூப்‌, (பார்க்க: அந்நிசா: 128) சம்‌உ, பஸீர்‌ (பார்க்க: அத்தஹ்ர்‌: 02) இது பெயரில்‌ ஒற்றுமையையும்‌, பண்பில்‌ முழுமையாக முரண்பட்ட தன்மையையும்‌ குறிப்பதாகக்‌ கொள்ளப்படும்‌.

4- அல்லாஹ்வின்‌ பெயர்களுள்‌ சில அவனுக்கு மட்டும்‌ சூட்டி அழைக்கப்படும்‌. உதாணரமாக அல்லாஹ்‌, அர்ரஹ்மான்‌, அல்காலிக்‌, அல்பார்‌, அஸ்ஸமத்‌ போன்ற பெயர்கள்‌.

மேலும்‌ அல்லாஹ்வின்‌ சில பெயர்களைக்‌ கொண்டு அவனது படைப்புகள்‌ அழைக்கப்படுகின்றனர்‌.

5- இமாம்‌ இப்னு ஹஜர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ 99 திருநாமங்கள்‌ பற்றி பத்ஹுல்‌ பாரீ‌, தல்ஹீஸுல்‌ ஹபீர்‌ ஆகிய தமது நூல்களிலும்‌, முஹம்மத்‌ பின்‌ ஸாலிஹ்‌ அல்‌உஸைமீன்‌ (ரஹ்‌) அவர்கள்‌ அல்கவாயித்‌ அல்முஸ்லா என்ற நூலிலும்‌ இஜ்திஹாதின்‌ அடிப்படையில்‌ முன்வைத்துள்ள 99 பெயர்களுடன்‌ அஸ்ஸித்தீர்‌, அத்தய்யான்‌ என்ற இரு பெயர்களை அதிகப்படியான பெயர்களாக அஷ்ஷேக்‌ அப்துல்‌ முஹ்ஸின்‌ அல்‌அப்பாத்‌ (மதீனா முனவ்வரா பல்கலைக்கழகம்‌) அவர்கள்‌ முன்வைத்துள்ளார்கள்‌. அவை பற்றிய விவரம்‌ பின்னால்‌ தரப்படுகின்றது.

-அல்லாஹ்‌
-அல்‌ஆகிர்‌
-அல்‌அஹத்‌
-அலஅஃலா
-அல்‌அக்ரம்‌
-அல்‌இலாஹ்‌
-அல்‌அவ்வல்‌
-அல்பாரீ
-அல்பாதின்‌
-அல்பர்ரு
-அல்பஸீர்‌
-அத்தவ்வாப்‌
-அல்ஜப்பார்‌
-அல்ஜமீல்‌
-அல்ஹாஃபிழ்‌
-அல்ஹஸீப்‌
-அல்ஹஃபீழ்‌
-அல்ஹக்கு
-அல்ஹகம்‌
-அல்ஹகீம்‌
-அல்ஹலீம்‌
-அல்ஹமீத்‌
-அல்ஹய்யு
-அல்ஹயீய்
-அல்ஹாலிக்‌
-அல்ஹபீர்‌
-அல்ஹல்லாக்‌
-அத்தய்யான்‌
-அர்ரப்பு
-அர்ரஹ்மான்‌
-அர்ரஹீம்‌
-அர்ரஸ்ஸாக்‌
-அர்ரஃபீக்‌
-அர்ரகீப்‌
-அர்ரவூஃப்‌
-அஸ்ஸுப்பூஹ்‌
-அஸ்ஸித்தீர்‌
-அஸ்ஸலாம்‌
-அஷ்ஷாகிர்
-அஸ்ஸமீஉ
-அஸ்ஸய்யித்‌
-அஷ்ஷாஃபீஈ
-அஷ்ஷகூர்‌
-அஷ்ஷஹீத்‌
-அஸ்ஸமத்‌
-அத்தய்யிப்‌
-அள்ளாஹிர்‌
-அல்‌அஸீஸ்‌
-அல்‌அளீம்‌
-அல்‌அஃபுவ்வு
-அல்‌அலீம்‌
-அல்‌அலிய்யு
-அல்காலிப்‌
-அல்கஃப்பார்‌
-அல்கபூர்‌
-அல்கனீ
-அல்‌ஃபத்தாஹ்‌
-அல்காதிர்‌
-அல்காஹிர்‌
-அல்குத்தூஸ்‌
-அல்கதீர்‌
-அல்கரீப்‌
-அல்கஹ்ஹார்‌
-அல்கவிய்யு
-அல்கையூம்‌
-அல்கபீர்‌
-அல்கரீம்‌
-அல்கஃபீல்‌
-அல்லதீஃப்‌
-அல்முபீன்‌
-அல்முதஆலீ
-அல்முதகப்பிர்‌
-அல்மதீன்‌
-அல்முஜீப்‌
-அல்மஜீத்‌
-அல்முஹ்ஸின்‌
-அல்முஹீத்‌
-அல்முஸவ்விர்‌
-அல்முஉதீ
-அல்முக்ததிர்‌
-அலமுகத்திம்‌
-அல்முகீத்‌
-அல்மலிக்‌
-அல்மலீக்‌
-அல்மன்னான்‌
-அல்முஹைமின்‌
-அல்முஅஹ்ஹிர்‌
-அல்மவ்லா
-அல்முஃமின்‌
-அந்நஸீர்‌
-அல்ஹாதீ
-அல்வாஹித்‌
-அல்வாரிஸ்‌
-அல்வாஸிஃ
-அல்வித்ர்‌
-அல்வதூத்‌
-அல்வகீல்‌
-அல்வலிய்யு
-அல்வஹ்ஹாப்‌

குறிப்பு: மேற்கண்ட தகவல்கள்‌ அஷ்ஷைக்‌ அப்துல்‌ முஹ்ஸின்‌ அல்‌அப்பாத்‌ என்ற அறிஞரின்‌ قطفالجنيالدانيشرحمقدمة رسالة ابن أبي زيد القيرواني என்ற நூலில்‌ இருந்து பெறப்பட்டதாகும்‌.


அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, பண்புகள்‌ பற்றி அறிவதன்‌ பயன்கள்‌

1) அல்லாஹ்வை “ஈமான்‌” கொள்வதில்‌ முக்கிய அம்சங்களில்‌ ஒன்றாக விளங்குகிறது. இவ்வுலகிலுள்ள மக்கள்‌ அதிலுள்ள மிகத்தூாய்மையான ஒன்றைச்‌ சுவைக்காது இவ்வுலகைப்பிரிந்து சென்று விட்டனர்‌ என மாலிக்‌ பின்‌ தீனார்‌ (ரஹ்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. அப்போது அது என்ன என அவரிடம்‌ வினவப்பட்டது. “அதுதான்‌ இறைவன்‌ பற்றிய அறிவு” எனப்‌ பதிலளித்தார்கள்‌. (அஸ்ஸியர்‌: பாகம்‌: 5.பக்‌: 363).

ஆம்‌! அல்லாஹ்வைப்‌ பற்றிய அறிவற்றவர்கள்‌ கால்நடைகளாகவே இவ்வுலகில்‌ காட்சி தருவர்‌.

2) அவை மூலம்‌ அல்லாஹ்வை முன்னோக்குதல்‌, அழைத்து மன்றாடுதல்‌. 

நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ இரவு வணக்கத்திற்காக எழுகின்ற போது

அல்லாஹும்ம ரப்ப ஜிப்ராயில, வமீகாயீல, வஇஸ்ராஃபீல, ஃபாதிரஸ்ஸமாவாதி, வல்‌ அர்ழி, ஆலிமல்‌ கைபி, வஷ்ஷஹாதா, அன்த தஹ்குமு பை ன இபா திக, (கு) ஃபீமாகானூ ஃபீஹி யஹ்தலிஃபூன்‌. இஹ்தினீ லிமஹ்துலி (கு) ஃப ஃபீஹி மினல்‌ ஹக்கி, பிஇஸனிக இன்னக தஹ்தீ மன்தஷாவு இலா ஸிராதிம்‌ முஸ்தகீம்‌.

பொருள்‌: ஜிப்ரீல்‌, மீகாயீல்‌, இஸ்ராஃபீல்‌ ஆகிய (வான) வர்களின்‌ இரட்சகனே! வானங்களையும்‌, பூமியையும்‌ படைத்தவனே! மறைவானதையும்‌, வெளிப்படையானவற்றையும்‌ அறிபவனே! அடியார்கள்‌ முரண்பட்டுக்‌ கொள்பவற்றில்‌ நீயே (சரியான) தீர்ப்பளிப்பவன்‌. எந்தச்‌ சத்தியத்தில்‌ கருத்துக் குழப்பம்‌ ஏற்பட்டு விட்டதோ அதில்‌ எனக்கு உனது உத்தரவுப்படி நேர்வழிகாட்டுவாயாக! நீ விரும்பியோரை நேரான வழியில்‌ நடத்துபவனாக இருக்கின்றாய்‌ எனப்‌ பிரார்த்திப்பார்கள்‌.
(ஆதார நூல்‌ : முஸ்லிம்‌)

இங்கு நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வின்‌
பெயர்களை, பண்புகளை முன்னிலைப்படுத்திப்‌ பிரார்த்தித்திருப்பதை அறியலாம்‌.

3) அஸ்மா, ஸிஃபாத்தின்‌ மூலம்‌ அல்லாஹ்வை வணங்கி, வழிபடுதல்‌.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள்‌ இருக்கின்றன. அவை மூலம்‌ அவனை அழையுங்கள்‌. அவனது திருநாமங்களில்‌ திரித்துக்‌ கூறுவோரை நீங்கள்‌ விட்டு விடுங்கள்‌; அவர்கள்‌ எதனைச்‌ செய்து கொண்டிருந்தார்களோ அதற்காக அவர்கள்‌ கூலி கொடுக்கப்படுவார்கள்‌. (அல்‌ அஃராஃப்‌ 180).

4) அடியார்களின்‌ செயற்பாடுகளில்‌ அதன்‌ தாக்கம்‌ வெளிப்படுதல்‌.

ஓர்‌ அடியான்‌ தன்‌ நடவடிக்கைகளின்‌ போது அல்லாஹ்‌
மிக அறிந்தவன்‌; சகல பொருள்களையும்‌ சூழ்ந்து கொள்பவன்‌; பார்ப்பவன்‌; செவியுறுபவன்‌; தண்டிப்பவன்‌ என்றெல்லாம்‌ அறிகின்ற போது அவனுடைய செயற்பாடுகளில்‌ அல்லாஹ்வின்‌ கண்காணிப்பை அறிந்து செயல்படுவான்‌.

அதே போன்று “அல்லாஹ்‌ சக்தி வாய்ந்தவன்‌”, “குற்றங்களுக்குப்‌ பழிதீர்ப்பவன்‌”, “யாவற்றையும்‌ மிகைத்தோன்‌” என உணர்கின்ற போது தன்னில்‌ அல்லாஹ்வின்‌ அச்சத்தை அதிகரித்துக்‌ கொள்கின்றான்‌. இக்கருத்தையே நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ ஹதீஸில்‌ “அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள்‌ இருக்கின்றன; அவற்றை (பொருள்‌ அறிந்து) மனனம்‌ செய்து கொள்வோர்‌ சுவர்க்கத்தில்‌ பிரவேசிப்பர்‌” எனக்‌ கூறப்பட்டுள்ளது.

5) இவற்றின்‌ நேசம்‌ சொர்க்கத்திற்குச்‌ செல்லக்‌ காரணமாக அமைதல்‌

நபி (ஸல்‌) அவர்களின்‌ காலத்தில்‌ குபா பள்ளியில்‌ தொழுகை நடத்திய ஒரு மனிதர்‌ வழமையாக முதல்‌ மற்றும்‌ இரண்டாவது ரகஅத்துகளில்‌ ஓதப்படும்‌ அத்தியாயங்களை ஓதிய பின்‌ அல்‌ இக்லாஸ்‌ அத்தியாயத்தை ஓதியே தமது தொழுகையை முடிப்பவராக இருந்தார்‌. மக்கள்‌ சிலர்‌ விரும்பாத ஒன்றாக இருந்தும்‌ அதை விடாப்பிடியாக நின்று நிறைவேற்றுவார்‌.

இது பற்றி நபி (ஸல்‌) அவர்களிடம்‌ நபித்தோழர்கள்‌ முறைப்பாடு செய்தார்கள்‌; அவரிடம்‌ அது பற்றி விசாரித்த போது அதில்‌ அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ உள்ளடங்கி இருப்பதால்‌ அவற்றை நேசிக்கின்றேன்‌ என்று கூறினார்‌.

உன்னைச்‌ சொர்க்கத்தில்‌ பிரவேசிக்கச்‌ செய்துவிட்டது எனக்‌ கூறினார்கள்‌. (புகாரீ‌).

6) அல்லாஹ்வின்‌ பெயர்களையும்‌, பண்புகளையும்‌ திரித்துக்கூறும்‌ நவீன கோட்பாட்டாளர்கள்‌ (முப்ததிஆக்கள்‌) “ஸனாதிகாக்கள்‌” (இஸ்லாத்திற்கு உள்ளிருந்தே குழிபறிப்பவர்கள்‌, போன்ற வழி தவறிய கும்பல்களுக்கு மறுப்புக்‌ கூறுதல்‌.

இவர்களில்‌ ஒன்று அவற்றை முழுமையாக நிராகரிப்போர்‌; அல்லது சிலதை மறுத்துரைப்போர்‌. மற்றொன்று, அவற்றிற்கு உதாரணம்‌ கூறி, வடிவம்‌ கற்பிப்போர்‌ என்ற இரு நிலையிலுள்ளோரே இருக்கின்றனர்‌.


பிரிவுகளின்‌ தோற்றம்‌ பற்றிய சுருக்கம்‌

நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ காலத்தில்‌ ஹதீஸாகக்‌ கூறப்பட்டதை நபித்தோழர்கள்‌ முழுமனதுடன்‌ அங்கீகரித்துச்‌ செயல்பட்டனர்‌. உமர்‌ (ரழி) அவர்களின்‌ கொலையுடன்‌ ஃபித்னாவின்‌ வாசல்‌ திறக்கப்பட்டது.

வரலாற்றில்‌ ஃபித்னா நிகழ்வு என்றழைக்கப்படும்‌ உஸ்மான்‌ பின்‌ அஃப்பான்‌ (ரழி) அவர்களின்‌ கொடூரக்‌ கொலைச்‌ சம்பவத்தின்‌ பின்னர்‌ இஸ்லாமிய ஐக்கியத்தில்‌ பிளவுகள்‌ ஏற்பட்டு கோஷ்டிகள்‌ தோற்றம்‌ பெற்றன. ஜமல்‌, ஸிஃப்பீன்‌ போன்ற போர்கள்‌ நடந்தேறின.

நபித்தோழர்களின்‌ இறுதிக்‌ கால கட்டங்களில்‌ கத்ரிய்யா, முஃதஸிலா, ஐஹ்மிய்யா போன்ற பிரிவுகள்‌ தோன்றின.

முஸ்லிம்‌ ஜமாத்தினர்‌ வழிகெட்ட சிந்தனைப்‌ பிரிவுகளில்‌ இருந்து தம்மை அடையாளப்படுத்திக்‌ கொள்ளத்‌ தம்மை “அஹ்லுஸ்ஸுன்னா” என்று அழைத்ததோடு, தமது கொள்கைக்‌ கோட்பாடுகளுக்கு மாறான சிந்தனைவாதிகளை அவர்கள்‌ பிரதிபலித்த அந்தந்த சிந்தனையைக்‌ கொண்டு அழைத்தனர்‌.

அலீ (ரழி) அவர்களுடைய ஆட்சியின்‌ இறுதிக்காலப்‌ பகுதியில்‌ கவாரிஜ்கள்‌ தோன்றினர்‌; இவர்கள்‌ அல்குர்‌ஆனையும்‌, நபிமொழிகளையும்‌ அரையும்‌ குறையுமாகப்‌ புரிந்து மக்களைத்‌ தமது சிந்தனையின்‌ பால்‌ அழைத்தனர்‌. பெரிய ஸஹாபாக்களை காஃபிர்கள்‌ என்று கூறினர்‌.

இந்தக்கால எல்லையினுள்‌ அலீ (ரழி) அவர்களை எல்லை மீறி நேசிப்போரான ராஃபிழாக்கள்‌, மற்றும்‌ அவர்களை எல்லை மீறி தூசிப்போரான நவாஸிப்கள்‌ ஆகிய இரு பெரும்‌ பிரிவுகள்‌ தோன்றின.

ஹிஜ்ரீ இரண்டாம்‌ நூற்றாண்டளவில்‌ சுன்னாவின்‌ அறிவுப்‌ பாரம்பரியம்‌ பரவியதோடு தாபியீன்களின்‌ மத்திய காலப்‌ பகுதியில்‌ குராஸானில்‌ மூஜஸ்ஸிமா, (அல்லாஹ்வை உருவகப்படுத்தியோர்‌) போன்ற பிரிவுகள்‌ தோன்றின.

அப்பாசிய கலீபா மஃமூன்‌ என்பவரும்‌ இக்காலப்‌ பகுதியில்‌ ஆட்சியில்‌ இருந்தார்‌. இவர்‌ தர்க்கவியலில்‌ ஆர்வம்‌ காட்டினார்‌. சிறந்த மதிநுட்பம்‌ உடையவராகவும்‌, பகுத்தறிவிற்கு முன்னுரிமை வழங்குபவராகவும்‌ விளங்கினார்‌.

இவர்‌ ஆரம்பக்கால கிரேக்க நூல்களை பக்தாதிற்கு வரவழைத்து கிரேக்கத்‌ தத்துவங்களை அரபு மொழிக்கு மொழியாக்கம்‌ செய்தார்‌. இவர்‌ இதற்காக அயராது பாடுபட்டார்‌.

இதனால்‌ முஸ்லிம்‌ சமூகத்தில்‌ கிரேக்கத்‌ தத்துவங்கள்‌
உயிர்ப்பிக்கப்பட்டன. கிரேக்க நாகரிகத்திற்குப்‌ பெரும்‌ பங்களிப்புச்‌ செய்தவர்‌ என்ற கிரேக்கர்களின்‌ நிரந்தரப்‌ புகழுக்கு மஃமூனின்‌ இந்த மொழியாக்கச்‌ சேவை பேசப்பட்டது.

இதனால்‌, இஸ்லாமிய அறிவுப்‌ பாரம்பரியம்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக வழக்கொழிந்து, கிரேக்க நாகரிகத்தின்‌ செல்வாக்கு முஸ்லிம்களுக்குள்‌ ஊடுருவ ஆரம்பித்தது. இவ்வளவு காலமும்‌ தலைமறைவாகிக்‌ கிடந்த ஜஹ்மிய்யா, முஃதஸிலா, ராபிழிய்ய ஷீஆப்‌ பிரிவுகள்‌ தமது தலைகளை உயர்த்தத்‌ தொடங்கின.

“அல்குர்‌ஆன்‌ படைக்கப்பட்டது” என்ற முஃதஸிலாக்களின்‌ புதிய சிந்தனையில்‌ மஃமூன்‌ உறுதியாக இருந்ததோடு, அதற்கு உரமூட்டி வளர்த்தார்‌. இந்த வழிகேட்டினை அங்கீகரிக்காத ஆலிம்களைத்‌ தயவு தாட்சண்யம்‌ இன்றிப்‌ பெரும்‌ சோதனைக்குள்‌ தள்ளினார்‌.

இதுவரை முஸ்லிம்‌ சமூகம்‌ அல்குர்‌ஆன்‌, “அல்லாஹ்வின்‌ யதார்த்தமான பேச்சு” என்பதில்‌ ஏகோபித்த நிலையில்‌ இருந்து கொண்டிருந்தது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்‌.

அல்லாஹ்வுடன்‌ இணைத்து இடம்‌ பெற்றுள்ள “அல்லாஹ்வின்‌ ஒட்டகம்‌” “அல்லாஹ்வின்‌ இல்லம்‌” போன்ற சொற்றொடர்களை அல்லாஹ்வின்‌ கண்ணியத்தைக்‌ குறிக்க எவ்வாறு குறிப்பிடுவோமோ அவ்வாறுதான்‌ “அல்லாஹ்வின்‌ பேச்சு” என்பதும்‌ விளங்கப்படல்‌ வேண்டும்‌ என முஃதஸிலாக்கள்‌ விளக்கமளித்தனர்‌. இதனை அப்பாசிய ஆட்சியாளரான மஃமூன்‌ சரிகண்டார்‌.

அதுமட்டுமின்றி “இவை, அல்லாஹ்வுடன்‌ அவனது கண்ணியத்தை வெளிக்காட்ட வந்துள்ள வசனங்களே அன்றி, அவை அவனது பண்புகளைக்‌ குறிக்க வந்தவை அல்ல” என்றும்‌ முஃதஸிலாக்கள்‌ வாதித்தனர்‌.

அல்லாஹ்‌ தவிர்ந்த அனைத்துப்‌ படைப்புகளும்‌ படைக்கப்பட்டவையாக இருப்பின்‌, அல்குர்‌ஆனும்‌ படைக்கப்பட்டதுதான்‌ என்றும்‌ வாதித்தனர்‌.

முஃதஸிலாக்களின்‌ இந்த விளக்கத்தை மஃமூன்‌ அங்கீகரித்தது மட்டுமின்றி சுன்னா அறிஞர்களையும்‌, அஹ்லுஸ்ஸுன்னா மக்களையும்‌ இந்த வழிகேட்டுக்‌ கருத்தினை அங்கீகரிக்கும்படி வற்புறுத்தினார்‌.

சுன்னா அறிஞர்கள்‌ “அல்லாஹ்வின்‌ பண்புகளாக இடம்‌ பெற்றுள்ள வசனங்கள்‌ அவனது யதார்த்தமான பண்பைக்‌ குறிப்பவை” என்றும்‌, “முஃதஸிலாக்களின்‌ விளக்கம்‌ குர்‌ஆனுக்கும்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ விளக்கத்திற்கும்‌ முரணானதும்‌, புதுமையானதும்‌” என்று விளக்கமளித்தனர்‌.

இந்த வழிகேட்டைத்‌ தைரியமாக எதிர்த்துப்‌ போராடிய
அறிஞர்கள்‌ மஃமூனால்‌ சிறைப்பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டனர்‌. அவர்களில்‌ இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹ்‌) அவர்கள்‌ முக்கியமானவராவார்கள்‌.

மஃமூன்‌, வழிகெட்ட சிந்தனைகளை உள்வாங்கி பெரும்‌ சோதனையை முஸ்லிம்‌ சமூகத்தில்‌ தோற்றுவித்த நிலையில்‌ ஹிஜ்ரீ: 218இல்‌ மரணிக்கின்றார்‌.

((இந்தக்‌ குறிப்புகளில்‌ பெரும்பாலானவை இமாம்‌
தஹபீ (ரஹ்‌) அவர்களின்‌ )سير أعلام النبلاء - )11 / 236   என்ற கிரந்தத்தைத்‌ தழுவியதாகும்‌)

இப்பிரிவுகளே சூஃபிகள்‌, தரீக்காவாதிகள்‌, கப்ரு வணக்கம்‌ புரிவோர்‌ எனப்‌ பரிணாமம்‌ பெற்றுள்ளன என்ற உண்மையை உணர முடிகின்றது.

இவ்வாறு நோக்குகின்ற போது இவை வணக்கம்‌, நம்பிக்கை, நடைமுறை போன்ற எல்லா விவகாரங்களிலும்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ காலத்திலோ, அல்லது நபித்தோழர்களின்‌ காலத்திலோ இல்லாத கோட்பாடுகள்‌ கொண்ட பிரிவுகள்‌ என்பது முடிவாகின்றது.

அவை அறிஞர்களால்‌ அவ்வப்போது துல்லியமாக அடையாளப்படுத்தப்பட்டுத்‌ தெளிவாக விளக்கப்பட்டிருப்பதால்‌ அஹ்லுஸ்ஸுன்னா மக்களாகிய நாம்‌ வழிதவறிய சிந்தனைகள்‌, சித்தாந்தங்கள்‌ என்ன என்பது பற்றி அறிந்து கொள்ளக்‌ கிடைத்த ஒரு வாய்ப்பாகும்‌.

அவற்றில்‌ முக்கியப்‌ பிரிவுகள்‌, அவற்றின்‌ சிந்தனைகள்‌
பற்றி அல்லாஹ்‌ அருளால்‌ இந்நூலில்‌ தொகுக்கப்பட்டுள்ளது என்றே நாம்‌ நம்புகின்றோம்‌. அல்லாஹ்வே அதில்‌ பரகத்‌ செய்யப்‌ போதுமானவன்‌.


முடிவுரை

பிரிவுகள்‌ பற்றிய ஆய்வானது பொதுவாகப்‌ பிரிவுகளின்‌ போக்கைப்‌ பற்றி அறிந்து கொள்ள வழி அமைத்துத்‌ தருவதுடன்‌ அவர்கள்‌ வழிதவறிய பிரதானக்‌ கூட்டங்கள்‌ எவை என்பதையும்‌ அடையாளப்படுத்திட உதவி செய்கின்றது.

அந்த வகையில்‌ சான்றுகளைத்‌ திரித்து, வளைத்து, அதன்‌ சரியான பொருள்‌ இன்றி விளக்குவதில்‌ அஷ்‌அரிய்யாப்‌ பிரிவினரும்‌ முக்கியப்‌ பங்காளிகள்‌ என்பதும்‌ ஆஹாத்‌ ஹதீஸ்‌ மறுப்புச்‌ சிந்தனையால்‌ ஹதீஸ்‌ மறுப்புக்கொள்கைக்கு வித்திட்டோர்‌ என்பதும்‌ அவர்கள்‌ பற்றிய தேடல்‌ மூலம்‌ புலப்படுகின்றது.

சிந்தனைப்‌ பிரிவுகள்‌ பற்றி ஆராய்கின்றபோது அவை இஸ்லாமியச்‌ சமுதாயத்தின்‌ அரசியல்‌ ரீதியான பிரிவாக மட்டுமல்லாது ஆன்மிகம்‌, அரசியல்‌ சார்ந்த இரண்டையும்‌ உள்ளடக்கியதாகவே இருந்துள்ளதாகக்‌ கருதலாம்‌.

முஆவியா (ரழி), அலீ (ரழி) ஆகிய இரு கலிஃபாக்கள்‌ இடையில்‌ அகீதா சார்ந்த பிரிவோ, முரண்பாடோ காணப்படவில்லை.

மேற்கண்ட இஸ்லாமிய ஆட்சியாளர்‌ இருவரிடையிலும்‌ காணப்பட்ட பிளவைக்‌ காரணமாகக்‌ கொண்டு இஸ்லாமிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள்‌ (கவாரிஜ்கள்‌) முழு உலக இஸ்லாமியச்‌ சமுதாயத்தின்‌ எதிரிகளாகவும்‌ முதலாவது அகீதாப்‌ பிரிவாகவும்‌ தோற்றம்‌ பெற்றனர்‌.

சான்றுகளை அணுகும்‌ முறையில்‌ அவர்கள்‌ புதிய பல சித்தாந்தங்களைத்‌ தோற்றுவித்தனர்‌. அது மட்டுமின்றி, கலீஃபாக்களையும்‌, நபித்தோழர்களையும்‌ காஃபிர்களாகப்‌ பார்த்தனர்‌.

சான்றுகளைக்‌ கையில்‌ வைத்துக்கொண்டு சரியாக அணுகத்‌ தெரியாத, வழிகெட்ட முதல்‌ பிரிவினராக கவாரிஜ்கள்‌ அடையாளப்படுத்தப்படுகின்றனர்‌.

இறைமறுப்பாளர்கள்‌ பேரில்‌ இறங்கிய இறைமறை வசனங்களை கலீபாக்கள்‌, ஸஹாபாக்கள்‌ பேரில்‌ நடைமுறைப்படுத்தும்‌ அறியாமையும்‌, பாவம்‌ செய்த இஸ்லாமிய ஆட்சியாளருக்கு எதிராகக்‌ கிளர்ச்சி செய்யும்‌ பழக்கமும்‌ இவர்களிடம்‌ இருந்தே பின்னோர்களிடம்‌ பரவியது.

கிரேக்கத்தில்‌ ஒரு காலத்தில்‌ தத்துவம்‌ முன்னிலைப்படுத்தப்பட்டது. போன்று முஃதஸிலாக்களிடம்‌ பகுத்தறிவுக்கு முன்னுரிமை தரப்பட்டது.

தற்காலத்திலும்‌ பகுத்தறிவுக்கு முன்னுரிமை வழங்கும்‌ போக்கு சமூகத்தில்‌ காணப்படுகின்றது. இதனால்‌ சிறந்த நூற்றாண்டிலும்‌ அதற்குப்‌ பின்னரும்‌ காணப்பட்ட சிறந்த வழிமுறையைப்‌ பிழைகாணும்‌ துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஆரம்பக்காலச்‌ சமூகத்தை நாசத்தில்‌ தள்ளியது போன்று தற்காலச்‌ சமூகத்தையும்‌ மீண்டும்‌ நாசத்தில்‌ தள்ளிவிடும்‌ என்பது அனுபவ உண்மையாகும்‌.

சான்றுகளுக்குள்‌ காணப்படும்‌ முரணபாடுகளைச்‌ சரியாக அணுகிட முன்னோர்கள்‌ கொண்டிருந்த தெளிவான பார்வையும்‌, அவர்களின்‌ நடைமுறை பற்றிய தெளிவும்‌ ஓர்‌ ஆய்வாளனுக்கும்‌ அழைப்பாளனுக்கும்‌ எல்லாக்‌ காலங்களிலும்‌ இன்றியமையாததாகும்‌.

“சலஃபுகளின்‌ வழிமுறையைப்‌ பற்றிக்கொண்டு, பிற்காலத்தவர்‌ உருவாக்கியவைற்றைத்‌ தவிர்ந்து கொண்டவன்‌ பாக்கியசாலியாவான்‌” என்ற இமாம்‌ இப்னு ஹஜர்‌ அவர்களின்‌ மேற்கண்ட கூற்று அனைத்துத்‌ தரப்பினராலும்‌ சிந்திக்கப்பட வேண்டியதாகும்‌.

வழிதவறிய சிந்தனைப்போக்குடையோர்‌ யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ சான்றுகளை ஓரம்‌ கட்டிய நிலையில்‌ அவை தமது பகுத்தறிவுடனும்‌, சமகால நிகழ்வுடனும்‌ பொருந்திச்‌ செல்கின்றதா? என்ற கேள்வியை எழுப்பி அதற்குத்‌ தமது குறுகிய அறிவைக்கொண்டு தீர்ப்பளிக்க முயற்சி செய்ததன்‌ விளைவாகவே மார்க்கத்தில்‌ வழிகேட்டைத்‌ தாமே விலைகொடுத்து வாங்கிக்‌ கொள்ளும்‌ நிலைக்கு ஆளாயினர்‌.

சரியான அறிவிலும்‌, சரியான சான்றிலும்‌ (தேடினால்‌) சலஃபிய (ஆரம்பக்கால) வழிமுறைக்கு மாற்றமானதைக்‌ காணமுடியாது. இந்தக்‌ கோட்பாடு விஷயத்தில்‌ குர்‌ஆனுக்கும்‌, சுன்னாவுக்கும்‌, இந்தச்‌ சமுதாயத்தின்‌ முன்னோர்களுக்கும்‌ மாறு செய்தவர்கள்‌ பெரும்‌ குழப்பத்தில்‌ உள்ளனர்‌. அல்லாஹ்வே (நீ) தூயவன்‌. எந்தப்‌ பகுத்தறிவைக்‌ கொண்டுதான்‌ குர்‌ஆன்‌, சுன்னா நிறுக்கப்படுகின்றதோ!!! என்ற இமாம்‌ காசிமீ (ரஹ்‌) அவர்களின்‌ கூற்றானது மிக நிதானமாக அணுகப்பட வேண்டிய ஒன்றாகும்‌.

அஷ்‌அரிய்யா பிரிவினர்‌ அல்லாஹ்வை அனைத்து இடங்களிலும்‌ இருப்பவனாகவும்‌, இல்லாதவனாகவும்‌, உலகில்‌ எங்குமே இல்லாதவனாகவும்‌ நம்பிக்கை கொள்கின்றனர்‌.

“அர்ரஹ்மான்‌ அர்ஷின்மீதானான்‌” என்ற வசனத்திற்குக்‌
கண்ணியமும்‌, மகத்துவமும்‌ நிறைந்த அர்ரஹ்மான்‌ தன்‌ படைப்பினங்களுக்கு மேல்‌, அர்ஷின்‌ மீது உயர்ந்தவனாகிவிட்டான்‌ என்பதே சலஃபியச்‌ சிந்தனையாகும்‌.

“அர்ரஹ்மான்‌ அர்ஷின்மீதானான்”‌ என்று பொதுமக்கள்‌
மனதில்‌ பதிவாகியுள்ள இயல்பான இந்த நம்பிக்கைக்கு மாறாக யார்‌ எண்ணுகின்றானோ அவன்‌ ஜஹ்மியாக்களுள்‌ ஒருவனாவான்‌” என்ற கருத்தானது “அஸ்ஸுன்னா” என்ற நூலில்‌ இமாம்‌ அஹ்மத்‌ (ரஹ்‌) அவர்களால்‌ இமாம்‌ யஸீத்‌ பின்‌ ஹாரூன்‌ (ரஹ்‌) அவர்களின்‌ கூற்றாகப்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதிருப்பதை உறுதி செய்துள்ள பலநூறு இஸ்லாமிய அறிஞர்கள்‌ அது தொடர்பாகப்‌ பல நூறு ஃபத்வாக்களை வெளியிட்டிருப்பது “அஸ்மா, ஸிபாத்‌” மற்றும்‌ “அல்லாஹ்‌ அவனது அர்ஷின்‌ மீதிருப்பது, “மறுமையில்‌ தீர்ப்பிற்காக வருவது” “அவனது யதார்த்தமான பேச்சு” போன்ற அகீதா சார்ந்த விவகாரங்களைச்‌ சாதாரண ஒன்றாக எடுக்க முடியாது என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

“எவன்‌ ஒருவன்‌ நிச்சயமாக அல்லாஹ்‌ தனது ஏழு வானத்திற்கும்‌ மேல்‌ அவனது படைப்புகளைவிட்டு நீங்கி, அவனது அர்ஷின்‌ மீதிருப்பதை நம்பவில்லையோ அவன்‌ தவ்பா செய்யுமாறு வேண்டப்படுவான்‌. தவ்பா செய்தால்‌ சரியாவிடும்‌. இல்லையானால்‌ அவனது கழுத்தைத்‌ துண்டித்து, அவன்‌ குப்பைத்‌ தொட்டியில்‌ வீசப்படல்‌ வேண்டும்‌” என்ற இமாம்‌ இப்னு குஸைமா (ரஹ்‌) அவர்களின்‌ தீர்ப்பானது நவீன காலத்தில்‌ கொள்கையில்‌ விட்டுக்‌ கொடுப்பு, அவசியமற்ற ஐக்கியம்‌ பற்றிப்‌ பேசுவோர்‌ சிந்திப்பதற்கான வரிகளாகும்‌.

ஜஹ்மிய்யாக்கள்‌, கோட்பாட்டளவில்‌ யூத, கிறிஸ்தவர்களை விட மிகவும்‌ தீயவர்கள்‌. இருந்தும்‌ யூதர்களும்‌, கிறிஸ்தவர்களும்‌, ஏனைய சமயத்தவரும்‌ “அல்லாஹ்‌ அர்ஷின்‌ மீதிருப்பவன்‌” என்ற விஷயத்தில்‌ ஏகமனதான முடிவில்‌ இருக்கின்றனர்‌. ஆனால்‌ இவர்களோ அர்ஷின்மீது எதுவும்‌ இல்லை என்று கூறுகின்றனர்‌ என சயீத்‌ பின்‌ ஆமிர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடுகின்றார்கள்‌. (தத்கிரத்துல்‌ ஹுஃப்பாழ்‌)

“அஹ்லுஸ்ஸுன்னாவினருக்கு நெருக்கமான பிரிவினர்‌” என்ற பெயரைக்‌ கொண்ட அஷ்‌அரிய்யா பிரிவினர்‌ ஆஹாத்‌ வகை சார்ந்த ஹதீஸ்களையும்‌, முதவாதிர்‌ தரத்தில்‌ அமைந்த பல ஹதீஸ்களையும் ‌தமது விதிமுறைகளுக்கு மாற்றமானது எனக்‌ காரணம்‌ காட்டி அவற்றை மறுத்துரைப்பதைப்‌ பார்க்கின்ற போது இவர்கள்‌ சுன்னாவில்‌ நம்பத்தன்மையின்மையை‌ தோற்றுவித்த முக்கியக்‌ குழுவினர்‌ என்பதும்‌ உறுதியாகின்றது.

அல்லாஹ்வின்‌ அருளால்‌ “அஸமா, ஸிஃபாத்‌” பற்றிய சலஃபுகளின்‌ சரியான அணுகுமுறையும்‌, பார்வையும்‌ அவை பற்றிய அவர்களின்‌ நிலைப்பாடு என்னவென்பதும்‌ இயன்ற அளவு தெளிவாக இந்நூலில்‌ எடுத்தெழுதப்பட்டுள்ளது.

இதில்‌ குறைகள்‌ காணப்படின்‌ குறைபாடுகள்‌ நிறைந்த நானே பொறுப்பாளன்‌. அதில்‌ காணப்படும்‌ நிறைவுக்கும்‌, பூரணத்திற்கும்‌ அல்லாஹ்வே பெருமைக்குரியவன்‌.

அவன்‌ எனது குறைகளை மறைத்து, தவறுகளை மன்னித்து எனது மண்ணறை வாழ்வைப்‌ பிரகாசமாக்கிடப்‌ போதுமானவன்‌ என்பது எனது ஆள்மனக்‌ கிடைக்கையில்‌ பாயும்‌ அலைகளாகும்‌.

யா அல்லாஹ்‌! என்னையும்‌, என்‌ பெற்றோரையும்‌ உறவினர்களையும்‌, என்‌ மனைவி, மக்களையும்‌ எனக்கு அறிவைப்‌ புகட்டிய என்‌ ஆசிரியர்கள்‌, விரிவுரையாளர்கள்‌, உலக முஸ்லிம்கள்‌ அனைவரையும்‌ இவ்வுலகில்‌ மன்னித்து, மறுமையில்‌ அருளும்‌ செய்வாயாக!


உசாத்துணைகள்‌:

-1 القرآن الكريم 
-2 صحيح البخاري
 -3 صحيح مسلم
 -4 سنن أبي داود
 -5 جامع الترمذي
 -6 سنن ابن ماجه
 -7 سنن الدارمي
-8 صحيح ابن حبا
 -9 التوحيد لبن خزيمة رحمه الله
 -10 مسند أحمد بن حنبل لأحمد رحمه الله
 -11 خلق أفعال العباد للإمام البخاري رحمه الله
 -12 الرد على الجهمية للإمام أحمد بن حنبل الشيباني رحمه الله -13 السنة للإمام أحمد بن حنبل الشيباني رحمه الله -14 التمهيد 
لبن عبد البر رحمه الله -15 جامع العلوم والحكم للإمام ابن رجب الحنبلي رحمه الله -16 كتاب الفقه الأكبر (في علم التوحيد وعقائد السلم) للإمام الأعظم أبي حنيفة النعمان بن ثابت الكوفي -17 شرح العقيدة الطحاوية للشيخ صالح آل الشيخ -18 شرح العقيدة الطحاوية للشيخ ابن جبرين رحمه الله -19 الفتح الرباني للإمام الشوكاني تحقيق وتعليق :صبحي حسن حلق -20 جامع البيان للإمام أبي جعفر الطبري رحمه الله -21 تفسير ابنكثير لبنكثير رحمه الله -22 التفسير القيم لبن القيم رحمه الله -23 أضواء البيان في تفسير القرآن بالقرآن لمحمد أمين الشنقيطي رحمه الله -24 سير أعلم النبلء للإمام الذهبي رحمه الله -25 تذكرة الحفاظ للإمام الذهبي رحمه الله -26 تهذيب التهذيب للإمام ابن حجر رحمه الله -27 الرسالة للإمام الشافعي رحمه الله -28 الحجة في بيان المحجة للإمام أبو القاسم اسماعيل ابن محمد بن الفضل التيمي الأصبهاني رحمه الله -29 اجتماع الجيوش السلمية على غزو المعطلة والجهمية لبن القيم رحمه الله -30 عقيدة السلف أصحاب الحديث للإمام الصابوني رحمه الله -31 درء تعارض العقل والنقل لبن تيمية -32 مجموع الفتاوى لبن تيمية رحمه الله -33 النبوات لبن تيمية رحمه الله
-34 العلو للعلي العظيم للذهبي رحمه الل ìêL£õz 353
-9 التوحيد لبن خزيمة رحمه الله -10 مسند أحمد بن حنبل لأحمد رحمه الله -11 خلق أفعال العباد للإمام البخاري رحمه الله -12 الرد على الجهمية للإمام أحمد بن حنبل الشيباني رحمه الله -13 السنة للإمام أحمد بن حنبل الشيباني رحمه الله -14 التمهيد لبن عبد البر رحمه الله -15 جامع العلوم والحكم للإمام ابن رجب الحنبلي رحمه الله -16 كتاب الفقه الأكبر (في علم التوحيد وعقائد السلم) للإمام الأعظم أبي حنيفة النعمان بن ثابت الكوفي -17 شرح العقيدة الطحاوية للشيخ صالح آل الشيخ -18 شرح العقيدة الطحاوية للشيخ ابن جبرين رحمه الله -19 الفتح الرباني للإمام الشوكاني تحقيق وتعليق :صبحي حسن حلق -20 جامع البيان للإمام أبي جعفر الطبري رحمه الله -21 تفسير ابنكثير لبنكثير رحمه الله -22 التفسير القيم لبن القيم رحمه الله -23 أضواء البيان في تفسير القرآن بالقرآن لمحمد أمين الشنقيطي رحمه الله -24 سير أعلم النبلء للإمام الذهبي رحمه الله -25 تذكرة الحفاظ للإمام الذهبي رحمه الله -26 تهذيب التهذيب للإمام ابن حجر رحمه الله -27 الرسالة للإمام الشافعي رحمه الله -28 الحجة في بيان المحجة للإمام أبو القاسم اسماعيل ابن محمد بن الفضل التيمي الأصبهاني رحمه الله -29 اجتماع الجيوش السلمية على غزو المعطلة والجهمية لبن القيم رحمه الله -30 عقيدة السلف أصحاب الحديث للإمام الصابوني رحمه الله -31 درء تعارض العقل والنقل لبن تيمية -32 مجموع الفتاوى لبن تيمية رحمه الله -33 النبوات لبن تيمية رحمه الله -34 العلو للعلي العظيم للذهبي رحمه الله -35 كتاب العرش للإمام الذهبي تحقيق: محمد بن خليفة التميمي
 -36 البداية والنهاية لبنكثير رحمه الله -37 فتح الباري شرح صحيح البخاري للإمام ابن حجر رحمه الله -38 شرح النووي على مسلم للإمام النووي رحمه الله -39 عون المعبود شرج سنن أبي داود لشمس الحق العظيم الآبادي رحمه الله -40 الأجوية المرضية لتقريب التدمرية ل بلل جبسي الجزائري -41 تعليق مختصر على لمعة العتقاد لبن عثيمين رحمه الله -42 القواعد المثلى في أسماء الله وصفاته الحسنى لبن عثيمين رحمه الله -43 مقدمة أصول اليمان ، إصدار مجمع البحث العلمي بالجامعة السلمية بالمدينة المنورة -44 شرح اعتقاد أصول أهل السنة والجماعة للإمام الللكائي رحمه الله -45 نواقض توحيد الأسماء والصفات للدكتور ناصر القفاري -46 الرد القويم على المجرم الأثيم للدكتور ناصر الفقيهي -47 موقف أهل السنة والجماعة من الأشاعرة للدكتور سفر الحوالي -48 شرح العقيدة السفارينية للشيخ محمد بن صالح العثمين رحمه الله -49 جناية التأويل الفاسد ل محمد أحمد لوح (رسالة ماجستير بالجامعة السلمية ) -50 رفع اللثام عن مخالفة القرضاوي لشريعة السلم ل أحمد منصور العديني -51 المفسرون بين التأويل والثبات في آيات الصفات ل محمد المغرواي
-52 الديوبندية عقائدها وتاريخها ل سيد طالب الرحم -53 مجموع رسائل السقاف لحسن بن علي السقاف -54
-55 الدوسري
-56 السعاف في الكشف عن حقيقة حسن السقاف ، للستاذ/ غالب الساقي -57 سلسلتا المحدث الألباني رحمه الله -58 اتحاف أهل الفضل والنصاف بنقضكتاب ابن الجوزي وتعليقات السقاف للشيخ علوان القصيمي -59 التنكيل بما في تأنيب الكوثري من الأباطيل لعبد الرحمن يحي المعلمي رحمه الله -60 الماتريدية دراسًة وتقويماً ِل أحمد بن عوض الله بن داخل اللهيبي الحربي -61 تطييب الأنام بتحقيق وتعليق نور الظلم للخ أمين الدين زاهر -62 كتاب نور الظلم -63 كتاب جوهرة التوحيد -64 ا لمعجم الكبير للطبراني رحمه الله -65 الصفات للدارقطني - تحقيق علي ناصر فقيهي -66 الرؤية للدارقطني رحمه الله -67 الرد على الجهمية للدارمي رحمه الله -68 الرد على بشر المريسي أو نقض المام أبي سعيد عثمان بن سعيد على المريسي الجهمي العنيد فيما افترى على الله عز وجل من التوحيد للدارمي رحمه الله -69 كتاب النعوت الأسماء والصفات للنسائي رحمه الله -70 الأسماء والصفات للبيهقي رحمه الله -71 تأويل مختلف الحديث لبن قتيبة الدينوري -72 أم البراهين .. في الرد التفصيلي على مذهب الأشعرية والماتردية ، ل حامد بن عبد الله العلي -73 الختلف في اللفظ والرد على الجهمية لبن قتيبة الدينوري رحمه الله -74 محاسن التأويل للقاسمي رحمه الله -75 وجود الله للشيخ يوسف القرضاوي حفظه الله -76 السنة النبوية في كتابات أعداء السلم مناقشتها والرد عليها . عماد السيد الشربيني
الكشـاف عن ضللت حسن السقـاف للشيخ /علون القصيمي الوقفات الخمس مع حسن السقاف، للستاذ/ عائض بن سعد -77 أصول مذاهب الشيعة الثني عشرية للدكتور ناصر القفاري

அரபு இணையத்தளங்கள்

ww.ahlalhdeeth.com ملتقى أهل الحديث -78
ww.sunnah.net شبكة الدفاع عن السنة -79
ww.alagidah.com ملتقى العقيدة - 80
ww.dorar.net موقع الدرر السنية -81
82- ww.saaid.net

அல்லாஹ்வைப்‌ பற்றி அறிவதற்கான இச்சிறிய முயற்சி முழுமை பெற பூரண உதவி அளித்த அல்லாஹ்‌ ஒருவனுக்கே புகழ்‌ அனைத்தும்‌ உரித்தாகட்டும்‌. அல்ஹம்துலில்லாஹ்‌.

இவன்‌:
எம்‌. ஜே.எம்‌. ரிஸ்வான்‌ (மதனி)
E-mail: rizwanmadani71@yahoo.com

َرَّبَنا اْغِفْر ِلي َوِلَواِلَدَّي َوِلْلُمْؤِمِن َين َيْوَم َيُقوُم اْلَساُب  [إبراهيم : 41]

எமது இரட்சகனே! கேள்வி கணக்கு நாளின்‌ போது எனக்கும்‌ என்‌ பெற்றோருக்கும்‌ நம்பிக்கையாளர்களுக்கும்‌ மன்னிப்புத்‌ தருவாயாக (இப்ராஹிம்‌: 41)

Previous Post Next Post