பித்அத்வாதிகளுடன் தொடர்பை பேணுவது தொடர்காக இமாம் புழைல் பின் இயாழ் (ரஹி) அவர்களின் கூற்றுக்கள்

1. இமாம் புழைல் பின் இயாழ் ( رَحِمَهُ ٱللَّٰهُ‎ ) அவர்கள் கூறினார்கள் :
பித்அத்காரனுடன் உறவு வைத்துக் கொண்டிருப்பவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தைக் கொடுக்க மாட்டான் . ( நூல் அல் இபானா அல்குப்ரா : 439 ) ,

2. இமாம் புழைல் பின் இயாழ் ( رَحِمَهُ ٱللَّٰهُ‎ ) அவர்கள் கூறினார்கள் :
பித்அத்காரனுடன் உட்கார்ந்திருக்க வேண்டாம் ' ஏனெனில் , அவனுடன் உட்கார்ந்திருப்பவனுக்கு அல்லாஹ்வின் சாபம் இறங்கிவிடும் என்று அஞ்சுகிறேன் . ( நூல் : அல்லாலகார ஸுன்னா : 262 ) .

3. இமாம் புழைல் பின் இயாழ் (رحمه الله) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் பாதையில் நடந்து செல்லும் வேளை அங்கே பித்அத்காரனுடன், எவரேனும் அமர்ந்திருக்கக் கண்டால், (அப்பாதையில் செல்லாது) மற்றொரு பாதையால் சென்று விடுங்கள். ( நூல் : இப்னுல் ஜவ்ஸிதல்பீஸ் இப்லீஸ் : 16 )

4. இமாம் புழைல் பின் இயாழ் ( رَحِمَهُ ٱللَّٰهُ‎ ) அவர்கள் கூறினார்கள் :
 பித்அத்காரனை கண்ணியப்படுத்தும் ஒருவர், இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்ப்பதற்கு உதவி செய்தவர் ஆவார். மேலும், பித்அத்காரனுடன் சிரிப்பவர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது அல்லாஹ் இறக்கிவைத்த மார்க்கத்தை இழிவுபடுத்தியவராவார். மேலும் , தனது மகளை பித்அத்காரனுக்குத் திருமணம் செய்துவைப்பவர் , தனது மகளுடான உறவைத் துண்டித்துக் கொண்டவர் ஆவார். மேலும், ஒரு பித்அத்காரனுடைய ஜனாஸாவைத் தொடர்ந்து செல்பவர், திரும்பிவரும்வரை அல்லாஹ்வின் சாபம் அவருக்கு உண்டு. ( நூல் : அபூநுஐம் : ஹில்யா : 8-103, இப்னுல் ஜவ்ஸி தல்பீஸ் இப்லீஸ் ; 16 ) ,

5. இமாம் புழைல் பின் இயாழ் ( رَحِمَهُ ٱللَّٰهُ‎ ) அவர்கள் கூறினார்கள் :
எனக்கும் பித்அத்காரனுக்குமிடையில் ஒரு இரும்புத்திரை காணப்படுவதை நான் விரும்புகிறேன். ( நூல் : லாலகாக : 1149 ) 

6. இமாம் புழைல் பின் இயாழ் ( رَحِمَهُ ٱللَّٰهُ‎ ) அவர்கள் கூறினார்கள் :
பித் அத்காரனுடன் கோபித்துக் கொண்டிருப்பவர் குறைவாகவே அமல்கள் செய்தாலும் , அல்லாஹ் அவரை மன்னிக்கிறான் . ( நூல் : அபூநுஐம் : ஹில்யா : 8 : 103 )

7. ஸுன்னாவைப்‌ பின்பற்றுகின்ற ஒருவர்‌ பித்‌அத்காரனுடன்‌ உறவாடுவது நயவஞ்சகமாகும்‌.. மேலும்‌, பித்‌அத்காரனை விரட்டி விடுபவருக்கு மிகவும் பயங்கரமான மறுமை நாளில் அல்லாஹ் அபயமளிக்கிறான். மேலும், பித்அத் காரனை இழிவுபடுத்துபவரை சுவனத்தில்‌ நூறு அந்தஸ்த்துக்கள்‌ உயர்த்துகிறான்‌. எனவே, நீங்கள்‌ ஒருபோதும்‌ அல்லாஹ்வின்‌ மார்க்கத்தில்‌ பித்‌அத்‌ (நூதனங்கள்‌) செய்பவராக இருந்துவிடாதீர்கள்‌. 
(நூல்‌: அபூநுஐம்‌: ஹில்யா: 8:104)
أحدث أقدم