அரசியல் ஆய்வுகள், விமர்சனங்கள் பற்றி

ஒரு அரசியல் விஷயத்துல பரந்துபட்ட ஆழமான புரிதல் வேண்டும் என்று ஒருவர் சொல்வது அவர் நிறைய வாசித்திருக்கிறார் நிறைய செவியுற்று இருக்கிறார் என்பதை காட்டுகிறது உண்மை. ஆனால் அவர் நிறைய புரிர்திருக்கிறார், சிந்தித்து இருக்கிறார்  எனவே தான் நிறைய எழுதுகிறார் என்று என்னிவிடக் கூடாது. அவர் நிறைய குழம்பி போய் இருக்கிறார் என்பதே உண்மை!
 ‍‍‍‍‍‍ ‍‍
ஷீஆ ஸுன்னி முரண்பாடுகள், முதலாளித்துவம் சோசலிசம் கம்யூனிசம் முரண்பாடுகள், மேற்கு கலாச்சாரம் கிழக்கு கலாச்சாரம் முரண்பாடுகள், மதவாதிகள் மதச்சார்பின்மை முரண்பாடுகள், இஸ்லாமொபோபியா, தீவிரவாதம் சுதந்திரப் போராட்டம் இப்படி இன்னும் பல இடியாப்ப சிக்கல்களை மொத்தமாக ஒரே நாட்டின் பிரச்சினைக்குள் எழுதியிருப்பார்கள். அதை எல்லாம் வாசித்ததால் பிரச்சினை பற்றி ஆழமாக புரிந்திருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் எது உண்மையான வடிவம் என்று புரியமுடியாமல் குழம்பி போய் இருக்கிறார்கள்!
 ‍‍‍‍‍‍ ‍‍
ஒரு அரசியல் தீர்மானதிற்கு அந்த அரசியல் வாதி நினைத்தும் பாத்திராத  நோக்கங்களை எல்லாம் கற்பித்து எழுதியிருப்பார்கள், உருதி இல்லாததால் முடிவுகள் சொல்லாமல் பிரச்சினைக்கு இன்னும் பல கோணங்கள் இருப்பதாக சித்தரித்துவிட்டு முடிப்பது தான் அதிகம்னான journalistகள் செய்யும் வேலை. இவர்கள் மட்டும் தான் அவற்றை வாசிப்பதாக நினைக்கிறார்களோ அல்லது அவர்களுக்கு மட்டும் தான் ஆங்கிலம் தெரியும் என்று நினைக்கிறார்களோ என்னவோ அது அவர்கள் மட்டுமே ஆழமாக புரிந்ததாக நினைக்கிறார்கள்.
 ‍‍‍‍‍‍ ‍‍
இதனை அப்படியே அகீதாவையும் மார்க்கத்தையும் மேற்கத்தையானுக்கு வாடகைக்குவிட்டவர்கள் அதனை சுருக்கமாக தமிழில் எழுதுவதற்கு "இஸ்லாமிய" சஞிகைகள் வேறு! 
 ‍‍‍‍‍‍ ‍‍
அந்த குழப்பம் தான் பேச்சுக்கள் எழுத்துகள் நீல்வதற்கான காரணம், விவரிக்க முடியாததால் புது புது வார்த்தைகளும் வரும்! 

உண்மைலையே தெளிவான அறிவு பேச்சையும் எழுத்தையும் சுருக்கிவிடும், தெளிவாக விஷயத்தை விவரிப்பதையும் பொய்ன்டுக்கு பேசுவதையும் வளர்க்கும்.
 ‍‍‍‍‍‍ ‍‍
தொழுகை நீளமாகவும் குத்பா சுருக்கமாகவும் இருப்பது ஒரு மனிதனின் மார்க்க விளக்கத்தின் அடையாளம்” என நபி(ஸல்) அவர்கள் கூரினார்கள் (முஸ்லிம் 869)
 ‍‍‍‍‍‍ ‍‍
அபூதர்(ரலி) அறிவிக்கும் செய்தியில், நபி(ஸல்) அவர்கள் கூரினார்கள்:
"இன்று ஒரு காலத்தில் இருக்கிறீர்கள், உங்களில் அறிஞர்கள் அதிகமாகவும் பேச்சாளர்கல் குறைவாகவும் இருக்கிறீர்கள், இதில் யார் ஏவபட்டவற்றில் பத்தில் ஒன்றை விடுவாரோ அவர் அழிந்துவிடுவார். பின்னர் ஒரு காலம் வரும், உங்களில் அறிஞர்கள் குறைவாகவும் பேச்சாளர்கள் அதிகமாகவும் இருப்பீர்கள், அதில் யார் ஏவபட்டவற்றில் பத்தில் ஒன்றை கடைபிடிக்கிறாரோ அவர் தப்பிவிடுவார்" 
(முஸ்னத் அஹ்மத் 21372)
 ‍‍‍‍‍‍ ‍‍
இதிலிருந்து விடுபடுவது ஒன்றும் பெறிய வித்தையல்ல.

- வாசிப்பதையெல்லாம் "அறிவு" என்று மனதுக்குள் உள்வாங்காது இருப்பது. (Newspaper வாசிப்பது அறிவை வளர்க்கும் என்று பாடசாலையில் சொல்லி தந்தை மறுந்துவிட வேண்டியது தான், மொழியாற்றலை வளர்க்கலாம்)

- அகப்பார்வை! 
 ‍‍‍‍‍‍ ‍‍
அரசியல் நிலவரங்கள் பற்றி எழுதுவது ஒன்றும் பெறிய உன்னதமான செயல் அல்ல. சமுதாயத்தில் உள்ள பொதுமக்கள் எல்லாம் சமுதாயத்தின் பெறிய விஷயங்கள் பற்றி பேசுவதெல்லாம் ஆரோக்கியமானதல்ல, ஃபித்னாக்கள் பிரச்சினைகளை இன்னும் வளருமே தவிர முடிவுக்கு கொன்டுவர முடியாது. 
 ‍‍‍‍‍‍ ‍‍
நபிகளார்(ஸல்) அவர்கள் இதனை எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மக்களுக்கு மோசடியான ஒரு காலம் வர உள்ளது அதில் பொய்யனை உண்மைப்படுத்துவார்கள் உண்மையாளனை பொய்யனாக்குவார்கள் மோசடியாளனை நம்புவார்கள் நம்பிக்கையாளனை மோசடியாளன் என்று கருதுவார்கள் ருவைபிலா'க்கள் பேசுவார்கள் என்று கூறினார்கள். அப்போது ருவைபிலா'க்கள் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு மக்களின் பொது விஷயங்களில் பேசும் (சமூகத்தில்)  கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் என்று கூறினார்கள்."
அறிவிப்பாளர் அபூஹுரைரா(ரலி) 
(இப்னி மாஜா 4036)
 ‍‍‍‍‍‍ ‍‍
ஒவ்வொருவரும் தத்தமது தரத்தில் இருந்து அரசியலில் ஈடுபடவேண்டும் என்று சொல்வது  மேற்கத்தைய மனிதர்கள் தோற்றுவித்த சிதாந்தங்கள், பொருத்தமானது போல் தோன்றும் ஆனால் பிரச்சினைகள் அதிகரிக்கும், தலைவர்கள் மீதான அவனம்பிக்கை,  மனலுத்தங்கள், விரக்தி, ஏமாற்றம் மோசடி, நிம்மதியற்ற சூழல் தான் விளைவு. 
 ‍‍‍‍‍‍ ‍‍
- இப்னு அப்திஸ் ஸலாம், பறகஹதெனிய
أحدث أقدم