இறையடியார் ஒருவரின் ஈருலக வெற்றி என்பது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறையோடு இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்


«زاد المعاد» ت الرسالة الثاني (1/ 69):
«‌وَإِذَا ‌كَانَتْ ‌سَعَادَةُ ‌الْعَبْدِ ‌فِي ‌الدَّارَيْنِ ‌مُعَلَّقَةً بِهَدْيِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَجِبُ عَلَى كُلِّ مَنْ نَصَحَ نَفْسَهُ وَأَحَبَّ نَجَاتَهَا وَسَعَادَتَهَا أَنْ يَعْرِفَ مِنْ هَدْيِهِ وَسِيرَتِهِ وَشَأْنِهِ مَا يَخْرُجُ بِهِ عَنِ الْجَاهِلِينَ بِهِ، وَيَدْخُلُ بِهِ فِي عِدَادِ أَتْبَاعِهِ وَشِيعَتِهِ وَحِزْبِهِ، وَالنَّاسُ فِي هَذَا بَيْنَ مُسْتَقِلٍّ وَمُسْتَكْثِرٍ وَمَحْرُومٍ، وَالْفَضْلُ بِيَدِ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ.»

இப்னுல் கய்யிம்  அவர்கள் தமது ஸாதுல் மஆத் எனும் நூலில் (1/69) பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

   "இறையடியார் ஒருவரின் ஈருலக வெற்றி என்பது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறையோடு இணைக்கப்பட்டதாக இருக்கும் பட்சத்தில், தம்மீது அக்கறை உள்ள தனது ஈடேற்றத்தையும் நற்பேற்றையும் விரும்பக்கூடிய ஒவ்வொருவரும் நபிகளாரின் நடைமுறைகளையும் வரலாற்றையும் அறிந்துகொள்வது கடமையாகும். அன்னாரை அறிந்து கொள்ளாதோரின் கூட்டத்திலிருந்து வெளியேறி அன்னாரை பின்பற்றுவோர், அன்னாரின் ஆதரவாளர்கள், அண்ணாரின் அணியினரின் பட்டியலில் இணைந்து கொள்ளட்டும்!  இவ்விஷயத்தில் மக்கள் பல ரகத்தில் உள்ளனர். மிகக் குறைந்தவர்கள், அதிகமானவர்கள், இழப்படைந்தோர் என முவ்வகையினராக உள்ளனர். பேரருள் அல்லாஹ்வின் கையிலே உள்ளது. அதைத் தான் நாடியவர்களுக்கே அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான பேரருள் உடையவன்."
أحدث أقدم