ஜனாஸாவை சுமந்து செல்வோர் மௌனமாகவே செல்ல வேண்டும்.

இந்த நிலைப்பாடும் கருத்தும் ஷாஃபிஈ மத்ஹப் கருத்து நிறுவனர்களில் ஒருவரான இமாம் நவவி ரஹி அவர்களின் கருத்தும் மற்றும் பலரின் கருத்துமாகும்.  

திக்ர் நல்லது தானே எனக் காரணம் காட்டி ஜனாஸாவில் திக்ர் ஓதும் மௌலவி சகோதரர்களே!  

விபரம் கீழே தரப்படுகின்றது. போன காலம் போச்சுது. இப்பவாவது படிங்க. விரைந்து செயல்படுங்க.  ஷாஃபிஈ மத்ஹபையாவது  நிலை நிறுத்தினால் நிறைய சுன்னாக்கள் உயிர்ப்பிக்கப்படும்.

நூல் - அல்மஜ்மூஃ ஷரஹுல் - இமாம் நவவி ரஹி.

المجموع شرح المهذب   —   النووي (ت ٦٧٦)
(فَرْعٌ)
فِي مَسَائِلَ تَتَعَلَّقُ بِكِتَابِ الْجَنَائِزِ
(إحْدَاهَا) ..... (الثَّانِيَةُ) الْمُسْتَحَبُّ خَفْضُ الصَّوْتِ فِي السَّيْرِ بالجنازة ومعها فلا يشتغلوا بشئ غير الفكر فيما هي لا قية وَصَائِرَةٌ إلَيْهِ وَفِي حَاصِلِ الْحَيَاةِ وَأَنَّ هَذَا آخرها ولابد مِنْهُ وَقَدْ أَفْرَدَ ابْنُ الْمُنْذِرِ فِي الْإِشْرَافِ والبيهقي في السنن الكبير بَابًا فِي هَذِهِ الْمَسْأَلَةِ قَالَ ابْنُ الْمُنْذِرِ رَوَيْنَا عَنْ قَيْسِ بْنِ عُبَادِ - بِضَمِّ الْعَيْنِ وَتَخْفِيفِ الْبَاءِ - قَالَ " كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ ﷺ يَكْرَهُونَ رَفْعَ الصَّوْتِ عِنْدَ ثَلَاثٍ عِنْدَ الْقِتَالِ وَعِنْدَ الْجَنَائِزِ وَعِنْدَ الذِّكْرِ ""

சுருக்கப் பொருள்: 

தலைப்பு : ஜனாஸாவுடன் தொடர்பான மார்க்க சட்டங்கள்.

நபித்தோழர்கள் ஜனாஸாவோடு செல்கின்ற போது அது பற்றிய ஆழ்ந்த சிந்தனையிலேயே செல்வார்கள்.

ஜனாஸாவோடு செல்கின்ற போது சப்தம் தாழ்த்தி மௌனமாக செல்வதே சுன்னத்.

நபித்தோழர்கள் மூன்று கட்டங்களில் சப்தத்தை உயர்த்துவதை வெறுப்பவர்களாக இருந்தனர்.

1) போரின் போது.

 2) ஜனாஸாவை சுமந்து செல்லும் போது.

2) "திக்ர்"  செய்கின்ற போது. 

மக்கள் பேசிக்கொண்டு வருவதால்தான் திக்ர் கண்டு பிடித்தோம் எனக் கூறுவது மேற்படி  இமாம்களை தாம் விபரமானவர்கள் என்பது பொருளாகும்.

மௌனமே சுன்னத் என்ற முடிவிற்கு வந்தால் தேவையற்ற விளக்கங்கள் ஒழிந்து சுன்னா ஓங்கி ஒலிக்கும் .

தொகுப்பு:

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

أحدث أقدم