உள்ளங்களை சீர்படுத்துவதற்குரிய ஐந்து வழிகள்

- அஷ்ஷைஃக் அப்துர் ரஸ்ஸாக் அல்பத்ர் ஹஃபிதஹுல்லாஹ்

கேள்வி:

உள்ளங்களை சீர்செய்வதற்குரிய வழிகள் யாவை என்று இந்த கேள்வியாளர் கேட்கின்றார்.

பதில்: 

உள்ளத்தை சீர்செய்வதென்பது பல விடயங்களின் பக்கம் தேவையுடையதாய் இருக்கின்றது, பல விடயங்களின் பக்கம் தேவையுடையதாய் இருக்கின்றது. அல்லாஹ் ஒருவனே உதவிதேடப்படுபவன். 

முதலாவது விடயம்:

அழகிய முறையில் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது. ஏனெனில், உன்னுடைய உள்ளமானது அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது

(அல்லாஹ்வின் தூதர்) ﷺ  அவர்கள் ஸஹீஹான ஹதீஸில் கூறியது போல்: 

ما من قلب إلا هو بين أصبعين من أصابع الرحمن يقلبه كيف يشاء

அர்ரஹ்மானுடைய விரல்களின் இரு விரல்களுக்கு இடையில் இல்லாமலே தவிர எந்தவொரு உள்ளமும் இல்லை; தான் நாடியவாறு அதனைப் புரட்டுகின்றான். 

எனவே, அவன் நாடினால் அதனை சீர்படுத்துகின்றான், மேலும் அவன் நாடினால் அதனை (நேரான பாதையிலிருந்து) திருப்பிவிடுகிறான். 

எனவே, முதலாவது விடயம் ஒரு அடியான் அல்லாஹ்வினுடனான தனது தொடர்பை சரிப்படுத்துவது, மேலும் அல்லாஹ்வினுடனான தனது ஆதரவு வைத்தல் மற்றும் தனது உறுதியான நம்பிக்கை, இன்னும் அல்லாஹ்வின் மீதான தனது தவக்குல் (பொறுப்பு சாட்டுதல்) ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும். 

மேலும் தனது உள்ளத்தை சீராக்கவும், தனது நஃப்ஸை பரிசுத்தப்படுத்தவும், இன்னும் தன்னுடைய நஃப்ஸின் தீங்குகளை விட்டு தன்னை பாதுகாத்திடவும் அல்லாஹ்விடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி து'ஆ செய்து கேட்க வேண்டும்.

இந்த மிகப்பெரிய விடயத்தில் - உள்ளங்களின் சீர்த்தன்மை குறித்த விடயத்தில் - எப்பொழுதும் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவிடத்தின் பக்கமே அடைக்கலம் தேடவும், மேலும் அவனிடம் தொடர்ந்து வலியுறுத்தி து'ஆ செய்யவும் வேண்டும்.
 
இதன் காரணமாகவே, நபி ﷺ அவர்களிடமிருந்து இந்த விடயத்தில் நிறைய மகத்தான து'ஆக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளேன்; அவற்றை  கவனத்தில் கொள்வது ஒரு முஸ்லிமின் மீது அவசியமானதாக இருக்கின்றது.

இரண்டாவது விடயம்:

உள்ளம் சார்ந்த விடயங்கள், உள்ளங்களுடைய அமல்கள், மேலும் அதன் சீர்த்தன்மையின் முக்கியத்துவம் ஆகியவற்றைக் குறித்து வாசிப்பது மற்றும் (அது தொடர்பான கல்வியைக்) கற்றுக் கொள்வது

உள்ளங்களின் அமல்கள், உள்ளங்களை தூய்மைப்படுத்துவது, மேலும் உள்ளங்களுடைய நோய்கள் ஆகியவற்றைக் குறித்து உலமாக்கள் எழுதியுள்ளதை படிக்க வேண்டும். கல்வியானது அதனை உடையவருக்கு ஒளியும், வெளிச்சமும் ஆகும்.

எனவே, ஒரு அடியான் உள்ளத்தின் அந்தஸ்தையும், அதன் ஆபத்தையும் அறிந்தால், மேலும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் (அறிந்தால்), நிச்சயமாக அது அவனை அல்லாஹு தஆலாவின் அனுமதியைக் கொண்டு, அவனது உள்ளத்தின் சீர்த்தன்மைக்கு இட்டுச்செல்லும். எனவே, கல்வியானது ஒளியாகும். 

திட்டமாக (நபி) ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள்: 

إنما العلم بالتعلم وإنما الحلم بالتحلم

கல்வியென்பது கற்றலின் மூலமே, மேலும் சகிப்புத்தன்மை என்பது (நஃப்ஸை) சகிப்புத்தன்மையைக்கொண்டு பயிற்றுவிப்பதன் மூலமே ஆகும். 

கல்வியை சகிப்புத்தன்மைக்கு முன்பாக முற்படுத்தியுள்ளார்கள். ஏனெனில், கல்விதான் மனிதனுக்கு நன்மையின் வழியை அழகாக்கி கொடுக்கும். இதுவே இரண்டாவது விடயமாகும்.
 
மூன்றாவது விடயம்: 

நஃப்ஸுடன் போராடுவது

நிச்சயமாக அல்லாஹ் கூறியுள்ளான்: 

{وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا}

மேலும், நம்முடைய வழியில் (செல்ல) முயற்சிக்கின்றார்களே அத்தகையோர், நிச்சயமாக நாம் அவர்களை நம்முடைய (நேரான) வழியில் செலுத்துகின்றோம். (அல்குர்ஆன் 29:69)

மேலும் (நபி) ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள்: 

المجاهد من جاهد نفسه في طاعة الله

முஜாஹித் என்பவர், அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவதில் தன் நஃப்ஸுடன் போராடுபவர் ஆவார். 

எனவே, தனது உள்ளத்துடன் அவர் போராடுவார். உள்ளங்களின் பிணிகள் மற்றும் நோய்களான  நிராசையடைவது, நம்பிக்கையிழப்பது மற்றும் அதல்லாத மற்றவைகள் அவரை ஆட்கொண்டுவிடாது.
  
மாறாக அவர், நன்மை மற்றும் உயரிய அந்தஸ்துகளை நோக்கி மேலோங்கி செல்வதில் தனது உள்ளத்துடன் போராடுவார். 

நான்காவது விடயம்:

நல்லவர்கள் மற்றும் நன்மையின் அமர்வுகளில் தொடர்ச்சியாக இணைந்திருப்பது; அவர்கள் எத்தகைய மக்களெனில், அவர்களோடு அமர்பவர் அவர்களால் துர்பாக்கியமடையமாட்டார்

﴿وَاصْبِرْ نَـفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ﴾ 

தங்கள் இறைவனை அழைத்துக் கொண்டு (அவனுடைய மேன்மையான முகத்தையும் நாடுகின்றார்களே) அத்தகையோருடன் உம்மை நீர் தடுத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 18:28)

எனவே, நல்லோர்கள், சிறப்பிற்குரியவர்கள் மற்றும் கண்ணியத்திற்குரியவர்களுடன் தொடர்ச்சியாக இணைந்திருப்பதில் தனது உள்ளத்துடன் போர் செய்வார். ஏனெனில், அவர்களுடைய நட்பானது பயனுள்ள ஒன்றாகும்.


திட்டமாக (நபி) ﷺ அவர்கள் கூறினார்கள்:

المرء على دين خليله فلينظر أحدكم من يخالل

ஒரு மனிதர் அவருடைய உற்ற நண்பரின் மார்க்கத்தின் மீது இருக்கின்றார்; எனவே, உங்களில் ஒருவர் அவர் யாருடன் நட்பு பாராட்டுகிறார் என்பதை அவதானித்துக் கொள்ளட்டும்.

ஐந்தாவது மற்றும் இறுதியான விடயம்:

மறுமையுடைய நினைவில் எப்பொழுதும் அவர் இருப்பது

உள்ளங்களில் இருக்கக்கூடியவை, அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா பார்க்கக்கூடிய ஒன்றாகும், மேலும் மறுமை நாளில் ஒரு அடியான் அதனைக் குறித்து விசாரிக்கப்படுவான் (என்பதை எப்பொழுதும் அவர் நினைவில் கொள்வது).

இதனால்தான் அல்லாஹு தஆலா கூறியுள்ளான்: 

﴿إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ﴾

பரிசுத்தமான இதயத்துடன் அல்லாஹ்விடம் யார் வந்தாரோ அவர் தவிர (மற்றெவருக்கும் பயனளிக்காத நாள்.) (அல்குர்ஆன்  26:89)

ஆம். 

🔗https://youtu.be/ClxLGvpIHys?si=08UOZi-QEUS5kTLf

அரபியுடன் வாசிக்க:
https://docs.google.com/document/d/e/2PACX-1vTQXEuhr3-1cZCbuhQZTuh41RX-CryALLVi2Kb_VXl6G7mdilxK7CEcNOUlAp6QhhFqpYSotOZRccGL/pub  

மேலும் பல மொழிபெயர்ப்புகளைக் காண:
t.me/salafimaktabahmpm

- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
أحدث أقدم