தாயத்து அணியலாமா?


-உஸ்தாத் SM.இஸ்மாயீல் நத்வி

உடல் நலம் பாதிக்கப்படும் பொழுதும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மார்க்கத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் நமக்கு சில பிரார்த்தனைகளை செய்து கொள்ளுமாறு போதித்திருக்கிறார்கள், கண் திருஷ்டிகள் உடல் உபாதை இது போன்ற தருணங்களில் நாம் பிறருக்கும் ஓதியும் பார்க்கலாம் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடையமே அதற்கு "ருகிய்யா ",என்று அரபு மொழியில் கூறப்படும்   , ஆனால் ஓதுவதற்கும் படிப்பதற்கும் சக்தி இருந்தும் தாயத்துகளை போட்டுக் கொள்வது அதன் மீது நம்பிக்கை வைப்பது நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை இந்த தாயத்து தடுத்துவிடும் என்று நம்புவது அது இணை வைத்தல் ஆகும்.

தாயத்து தொங்க விடுவது ஷிர்காகும் இணை வைத்தலை ஏற்படுத்தும் இறைவனின் அதிருப்தியை பெற்று தரும் என்று பல ஆதாரங்கள் மார்க்கத்தில் உள்ளன பின்வரும் ஆதாரமும் இதற்கு சான்றாகும்.

17422 - حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَنْصُورٍ، عَنْ دُخَيْنٍ الْحَجْرِيِّ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ، فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا؟ قَالَ: " إِنَّ عَلَيْهِ تَمِيمَةً " فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا، فَبَايَعَهُ، وَقَالَ: " مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ

أخرجه من طرقٍ أحمد (17422)، والطبراني (17/319) (885)، والحاكم (7513). صحَّحه الألباني في ((صحيح الجامع)) (6394)، وقوَّى إسنادَه شعيب الأرناؤوط في تخريج ((مسند أحمد)) (17422)، ووثَّق رواته المنذري في ((الترغيب والترهيب)) (4/239)، والهيثمي في ((مجمع الزوائد)) (5/106)، وقال ابن باز في ((الفوائد العلمية من الدروس البازية)) (3/165): سَنَدُه لا بأسَ به.

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களிடம் பத்துப் பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் பைஅத் செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை. அப்போது அந்தக் கூட்டத்தினர், ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள்; ஆனால் இவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லையே ஏன்? என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தாயத்து இருக்கிறது என்று சொல்லி தமது கையை நுழைத்து அதைத் துண்டித்தார்கள். பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர் யார் தாயத்தைத் தொங்க விட்டுக் கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: அஹ்மத்,தப்ரானி,ஹாகிம்.
தரம்- ஸஹீஹ் 

தாயத்துகள் தொங்கவிடுவது இணைவைத்தலான ஷிர்க்கை வழி வகுக்கும் என்ற அடிப்படையான விஷயத்தை புரிந்து கொண்டால் இதை தவிர்த்து கொள்வார்கள் அதே நேரத்தில் மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதையும் நாம் சற்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

பின்வரும் நபிமொழி திர்மிதி அபுதாவூது போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது , இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் சைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடிஇருக்கிறார்கள் என்ற துவா வருகிறது, இந்த அறிவிப்பின் இறுதியில் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ்
ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது பருவ வயதை அடைந்த குழந்தைகள் அனைவருக்கும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடும் இந்த துவாவை சொல்லித் தருவார்கள் எந்த குழந்தைகள் பருவ வயதை அடைய வில்லையோ அவர்கள் கழுத்தில் அந்த துவாவை எழுதி கட்டி விடுவார்கள் என்று வருகிறது.

رواه أبو داود (3893) ، الترمذي (3528) ، وأحمد في "المسند" (6696) وغيرهم من طريق محمد بن إسحاق عن عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ( إِذَا فَزِعَ أَحَدُكُمْ فِي النَّوْمِ فَلْيَقُلْ : أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ ). . فَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو ، يُلَقِّنُهَا مَنْ بَلَغَ مِنْ وَلَدِهِ ، وَمَنْ لَمْ يَبْلُغْ مِنْهُمْ كَتَبَهَا فِي صَكٍّ ثُمَّ عَلَّقَهَا فِي عُنُقِهِ " .
وهذا الحديث في إسناده نظر ، إذ أنه من رواية محمد بن إسحاق ، وهو مدلس وقد عنعن.
وقد قال الترمذي : هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
وقال الشوكاني في "فتح القدير" (3588) : فِي إِسْنَادِهِ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ ، وَفِيهِ مَقَالٌ مَعْرُوفٌ .
وقال الألباني : حسن دون قوله : " فكان عبد الله بن عمرو يلقنها...". صحيح الترمذي (3528) ، وينظر أيضا : "السلسلة الصحيحة" (1/529) ، التعليق على مسند أحمد ، ط الرسالة (11/296) ، " النهج السديد " ، للدوسري ، رقم (111) .

இந்த நபி மொழியில் இருந்து விளங்கும் விடயம் சைத்தானின் தீங்கிலிருந்து இறைநம்பிக்கையாளர் அல்லாஹ்விடம் அவ்வப்பொழுது துவா கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற முக்கியத்துவம் தெரிகிறது.

ஷிர்க்கான வார்த்தைகளால் எழுதப்பட்ட தாயத்துக்கள் ஹராம் என்று நாம் அறிந்திருக்கிறோம் ஆனால் குர்ஆன் சுன்னாவில் இருந்து எழுதப்பட்ட துவாக்கள் ஊடாக தாயத்துக்களாக தொங்கவிடலாமா கூடுமா கூடாதா என்றால் அறிஞர்கள் இதில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருக்கிறார்கள்.

மேல் காணும் இந்த திர்மிதியின் நபி மொழியை அஷ்ஷைக் நாசுருதீன் அல்பானி அவர்கள் "ஹஸன் ", அங்கீகாரத்திற்கு நெருக்கமானது என்று கூறுகிறார்கள்.

ஒரு பலகீனமான நபிமொழி பல வழிகளில் வரும் பொழுது இந்த அங்கீகாரத்தை அடைகிறது இது ஹதீஸ் கலைச் சட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்று.

ஆனால் இமாம் ஷௌகானி போன்ற சில அறிஞர்கள் இந்த நபிமொழி ஆதாரம் அற்றது இதில் இடம்பெறும் முஹம்மது  பின் இஸ்ஹாக் என்ற அறிவிப்பாளர்  முதல்லிஸ் மறைப்பவர் .

எனவே இந்த நபிமொழியின் தரம் ஆதாரத்திற்கு அப்பாற்பட்டது என்ற கருத்தையும் கூறியிருக்கிறார்கள்.

யார் இந்த நபி மொழியை சரிகாணுகிறார்களோ அவர்களிடத்தில் குர்ஆன் ஹதீஸிலிருந்து எழுதப்பட்ட துவாக்களை தாயத்தாக தொங்கவிடலாம்
இது அவர்களிடத்தில் தடுக்கப்பட்ட தமாயிம், தாயத்து என்பதற்கு கீழ்வராது, இந்த கருத்துக்களை
இந்தியாவைச் சேர்ந்த அல்லாமா அஷ்ரஃப் அலீ தானவி ரஹிமஹுல்லாஹ் போன்றோர் கூடும் என்று கூறுவது இதற்கு உதாரணம்.

யார் இந்த நபி மொழியை பலவீனமாக பார்க்கிறார்களோ அவர்களிடத்தில் கூடாது.

கூடாது என்பதற்கு பல ஸஹீஹான அங்கீகாரம் மிக்க நபிமொழிகள் இருக்கின்றன.

அதிகமான மார்க்க அறிஞர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்,இப்னு அப்பாஸ்,ஹுதைஃபா,உக்பா பின் ஆமிர்,இப்னு அகீம் ரழியல்லாஹு அன்ஹும் போன்ற பல சஹாபாக்களும் தாபியீன்ங்களும் இமாம்களும் கூடாது என்று கூறுகிறார்கள்.

குர்ஆன் சுன்னாவில் இருந்து எழுதப்பட்ட துவாக்களை கட்டி தொங்க விடுவது கூடும் என்று இருந்தாலும் மார்க்க சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சில விடயங்கள் அவைகள் ஷிர்க்கை வழிவகுக்கும் என்று இருந்தால் அதுவும் கூடாது என்ற வேறொரு உஸுலுல் ஃபிக்ஹு சட்டத்தின் அடிப்படையில்
 ( سد للذرائع)
தாயத்துகளை தொங்கவிடுவது பொதுவாக கூடாது என்ற முடிவுக்கு வருகின்றனர்.

காரணம் இன்று அனாச்சாரங்களும் பித்அத்துகளும் தலைவிரித்து ஆடும் இந்த காலத்தில் இது போன்ற அனுமதிகளால் தடை செய்யப்பட்டு இருக்கக்கூடிய ஷிர்க்கான தாயத்துகளும் கட்டுவது கூடும் என்று எண்ணம் வந்துவிடும் என்பதால் இந்த மார்க்க தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

அல்லாஹு அஃலம்.
أحدث أقدم