திருமணம் என்பது ஷரியத்தின் ஒரு பகுதி என்றும், அது இறைத்தூதர்களின் வழிமுறை என்பதையும் சுன்னாஹ் (நபிவழி) காட்டுகிறது. ஒருவர் திருமணம் செய்து கொள்வது, அல்லாஹ்வின் உதவி கொண்டு பல தீமையான விடயங்களில் இருந்து தப்பிபதற்கும், பார்வையை தாழ்த்துவதற்கும், கற்பை பேணி காப்பதற்கும் உதவியாக உள்ளது.
நபி ﷺ அவர்கள் இதை தெளிவுபடுத்தி கூறினார்கள்
இளைஞர் சமுதாயமே! உங்களில் சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.
[ஸஹீஹ் அல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்]
மேலும் நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள்
யாருக்கு, ஸாலிஹான பெண்ணை (மனைவியாக) அல்லாஹ் வழங்கியுள்ளானோ, அவருக்கு அவருடைய மார்க்கத்தின் ஒரு பாதிக்கு அல்லாஹ் உதவி செய்துள்ளான். எனவே மீதமுள்ள இரண்டாவது பாதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சி நடந்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (رضي الله عنه)
இமாம் ஹாகிம் அல் நைசாபுரி(رحمه الله) மர்பூஉ (நபி ﷺ அவர்களை தொட்டு) வரகூடிய இந்த செய்தியை தங்களுடைய முஸ்தரக் அல் ஹாகிம்-2681 எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்
மேலும்,
“ஒருவர் திருமணம் செய்து கொண்டால், அவருடைய பாதி மார்க்கத்தை முழுமைபடுத்திவிட்டார் எனவே மீதமுள்ள பாதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சி நடந்துக் கொள்ளட்டும் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்
இதை பைஹகீ(رحمه الله) தன்னுடைய ஷுஅபுல் ஈமான்-5101 எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்
இந்த இரண்டு செய்திகளையும் இமாம் அல்பானி(رحمه الله) “ஹஸன் லிஹைரிஹி” (பல்வேறு பலவீனமான அறிவிப்புகள் ஒன்றுக்கு ஒன்று பலம் சேர்ப்பதால் ஹஸன் எனும் தரத்திற்கு உயர்ந்துள்ளது) என்ற தரத்தில் தங்களுடைய “ஸஹீஹ் அல் தர்கீப் வல் தர்ஹீப் எனும் நூலில்-1916 வது செய்தியாக பதிவு செய்துள்ளார்கள்…
-அல் லஜ்னா அல் தய்மா லில் பகூத் அல் இல்மியா வல் இஃப்தா-18/31