ஹதீஸ் பற்றிய தெளிவு
عن معاوية بن يحيى عن الزهري عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: (لا يؤذن إلا متوضئ)رواه الترمذي(٢٠٠)
உழு செய்தவரைத் தவிர மற்றவர் அதான்
கூறமாட்டார். (திர்மிதி)
ஹதீஸின் தரம்:
இமாம் முபாரக்பூரி இது பற்றிக் குறிப்பிடும் போது:
قال المباركفوري في التحفة(١/٢٤١): الحديث ضعيف من وجهين:
இது இரண்டு முறையில் பலவீனமான ஹதீஸாகும்.
في سنده معاوية بن يحيى الصدفي وهو ضعيف.
அதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் முஆவியா பின் யஹ்யா அஸ்ஸத்ஃபி என்பவர் பலவீனமானவர்.
وفيه انقطاع بين الزهري وأبي هريرة فإنه لم يسمع منه.
ஸுஹ்ரி அவர்களுக்கும் அபூ ஹுரைரா (ரழி) அவர்களுக்கும் இடையில் தொடர்பு அறுந்து காணப்படுவது. அவர் அந்த செய்தியை அபூ ஹுரைரா (ரழி) யிடம் இருந்து செவிமடுக்கவில்லை.
இமாம் முபாரக்பூரி-ரஹி-
நூல் துஹ்ஃபத்துல் அஹ்வதி.
தெளிவு:
உழுவுடனோ உழு இல்லாமலோ பாங்கு கூறலாம்.
உழுவோடு கூறுவது சிறப்பாகும்.
-தமிழில்
எம்.ஜே. எம். ரிஸ்வான்