ஆண்களின் தொடைப் பகுதி மறைக்கப்பட வேண்டிய 'அவ்றத்' ஆகும்

ஆண்களின் தொடைப் பகுதி மறைக்கப்பட வேண்டிய 'அவ்றத்'  ஆகும். அதை வெளிப்படுத்தாது மூடிக் கொள்.

ஜுர்ஹித் அல் அஸ்லமி றழி அவர்கள் அறிவித்துள்ளார்கள் :
"நபி ஸல் அவர்களுக்கு பக்கத்தால் ஒரு மனிதர் தன் தொடைப் பகுதி தெரியும் விதமாக நடந்து சென்றார். அப்போது நபி ஸல் அவர்கள் அம்மனிதரைப் பார்த்து, உனது தொடைப் பகுதியை வெளிக்காட்டாது மூடிக் கொள்.ஏனெனில், அப்பகுதி அவ்றத்- கட்டாயம் மறைக்கப்பட வேண்டிய பகுதி ஆகும் என நபி ஸல் அவர்கள் கூனார்கள்."

கோடை காலப் பகுதியில் அநேக வாலிபர்கள் வீதிகளில் கட்டையான காற்சட்டைகளை அணிந்து பொடுபோக்காக நடந்து கொள்கின்றனர். அவர்கள் தங்களுடைய அவ்றத் தொப்புள் முதல் முளங்கால் வரையானது என்பதைக் கூட பெரும்பாலும் விளங்காமல் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். உண்மையில், இரண்டு தொடைப் பகுதியும் மறைக்கப்பட வேண்டியவையாகும். ஒரு முஸ்லிம் தனது மனைவி மற்றும் தனது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட அடிமை ஆகியோரைத் தவிர மற்றையோருக்கு மத்தியில் அவ்றத்தை பேணிப் பாதுகாத்து நடக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளான்.


أحدث أقدم