இதுவும் ஒருவகை (குfப்ர்) நிராகரிப்புதான்; மனைவிமார்களே கவனமாக இருங்கள்!


          அஷ்ஷெய்க் அப்துல்லா பின் சுலைமான் அல்ஹுபைஷீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “கணவன் - மனைவிக்கிடையிலான உறவு வெறும் சடவாத ரீதியிலான உலகியல் நோக்கம் கொண்ட உறவோ, மிருக இச்சை கொண்ட உறவோ  கிடையாது; அது கண்ணியமான உயிரோட்டம் நிறைந்த உறவாகும். அவ்வுறவு  சீராக அமைந்து, தொடர்பும் உண்மையாக இருக்கும் சமயத்தில் மரணத்தின் பின்னர் மறுமை வாழ்க்கை வரைக்கும் அது நீண்டு செல்லும். அல்லாஹ் கூறுகிறான்: *“அவர்களும் அவர்களது மூதாதையர்கள், அவர்களது மனைவியர்கள், அவர்களது சந்ததிகள் ஆகியோரில் நல்லவர்களாக இருந்தவர்களும் நிலையான சுவனச் சோலைகளில் நுழைவார்கள்”*. (அல்குர்ஆன், 13:23) *“எவர்கள் நம்பிக்கை கொண்டு, அவர்களது சந்ததிகளும் அவர்களை ஈமானுடன் (இறைவிசுவாசத்துடன்)  பின்தொடர்கின்றார்களோ அவர்களுடன் அவர்களது சந்ததிகளையும் நாம் இணைத்து விடுவோம்”*. (அல்குர்ஆன்,52:21)

          இத்தகைய இந்த உறவைப் பாதுகாத்து, இதைப் பேணுகின்ற ஒன்றுதான் கணவன் - மனைவிக்கிடையில் நிலவ வேண்டிய  நல்லுறவாகும். ஒவ்வொரு தரப்பும் தத்தமக்கு வர வேண்டிய உரிமை என்ன? மற்றவருக்குத் தாம்  செய்ய வேண்டிய கடமை என்ன? என்பதை அறிந்துகொள்வதன் மூலமாகத்தான் இது  சாத்தியப்படும். மனைவி தன் கணவனின் சிறப்பையும், அவனுக்குச் செய்ய வேண்டிய கடமையையும் ஏற்றுக்கொள்வது இதில் ஒன்றாகும். இப்படி அவள் செய்யாமல் கணவன் செய்கின்ற உபகாரங்களுக்கு நன்றி மறந்து நிராகரித்து, அவனின் சிறப்பையும் மறுத்து நடப்பாளாக இருந்தால் அவள்  பெரும்பாவங்களில் ஒன்றில் நிச்சயம் விழுந்தே விடுவாள். இந்தப் பெரும்பாவ விடயத்தில் அச்சமூட்டும் வகையில் பல வகையான எச்சரிக்கை வந்திருக்கின்றது. அவற்றில் ஒன்றுதான் கீழ்க்காணும் நபிமொழி:

        சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மக்களுக்குச் செய்த பிரசங்கத்தில் நரகம் தனக்குக் காட்டப்பட்டபோது அதில் தான் பார்த்த சில காட்சிகளில் பின்வரும் விடயத்தை விபரித்தார்கள்: *“....நரகத்தை நான் கண்டேன். இன்றைய தினத்தைப் போன்று மிக பயங்கரமான காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை.  நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன்"* என்று கூறினார்கள். மக்கள் *"ஏன் (அது), அல்லாஹ்வின் தூதரே?"* என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  *"அவர்களின் நிராகரிப்பே காரணம்"* என்றார்கள். அப்போது,  *"இறைவனையா நிராகரிக்கிறார்கள்?"* என்று கேட்கப்பட்டது. அதற்கு, *"கணவன்மார்களை நிராகரி(த்து நிந்தி)க்கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் அவர்களில் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை ஒன்றை) அவள் கண்டுவிட்டால், "உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை"* என்று சொல்லிவிடுவாள் என்று நபியவர்கள் பதிலளித்தார்கள்”.  (முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் - 1659 )

[ நூல்: 'அல்கபாயிர் பைனஸ் ஸவ்ஜைனி', பக்கம் - 10,11 ]


                قال الشيخ عبدالله بن سليمان الحبيشي حفظه الله:-

           { إن العلاقة بين الزوجين ليست علاقة دنيوية مادية ولا شهوانية بهيمية، إنها علاقة روحية كريمة. وحينما تصلح هذه العلاقة وتصدق هذه الصلة فإنها تمتدّ إلى الحياة الآخرة بعد الممات. قال الله تعالى: *« جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرّيّاتهم »* < سورة الرعد، الآية: ٢٣ > ، وقال تعالى: *« والذين آمنوا واتّبعتهم ذرّيّتهم بإيمان ألحقنا بهم ذرّيّتهم »* < سورة الطور، الآية: ٢١ >.

       وإن ممّا يحفظ هذه العلاقة ويحافظ عليها المعاشرة بالمعروف، ولا يتحقق ذلك إلا بمعرفة كل طرف ما له وما عليه. ومن ذلك أن تعترف الزوجة لزوجها بفضله وحقه، فإن لّم تفعل وقابلت ذلك بكفران النعمة وجحود الفضل فقد وقعت في كبيرة من كبائر الذنوب؛ وقد تنوّع الوعيد ترهيبا في هذه المعصية العظيمة. ومن ذلك:

           أخرج الشيخان عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلّى الله عليه وسلم قال في خطبة الكسوف: *« ورأيت النار فلم أر في اليوم منظرا قط، ورأيت أكثر أهلها النساء »* قالوا: *« لم يا رسول الله؟ »*، قال: *« بكفرهنّ »*، قيل: *« يكفرن بالله؟ »*، قال: *« يكفرن العشير، ويكفرن الإحسان، لو أحسنت إلى إحداهنّ الدّهر ثم رأت منك شيئا، قالت: ما رأيت منك خيرا قطّ »* < مسلم، رقم الحديث: ١٦٥٩ >

*[* المصدر: ' الكبائر بين الزوجين'  للشيخ عبدالله بن سليمان الحبيشي، ص - ١٠، ١١ *]*

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم