*“ஒருவர் (தோழர்களுடன் உண்ணும் போதும்) தன் தோழர்கள் அனுமதிக்காத வரை, இரண்டு பேரீச்சம் பழங்களை ஒருசேர எடுத்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!”* என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
{ நூல்: புகாரி - 2489 }
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸுக்கு பின்வருமாறு விளக்கம் அளிக்கின்றார்கள்:
*“ பேரீச்சம் பழம் போன்றவற்றை உன்னுடன் பலர் இருக்கின்ற வேளையில் அவை ஒவ்வொன்றாக உண்ணப்பட வேண்டும் என்று வழமை இருக்கின்ற போது, நீ இரண்டு பேரீச்சம் பழங்களை ஒருசேர எடுத்து உண்ணாதே! ஏனெனில், உன்னுடன் இருக்கும் உன் சகோதரர்களுக்கு இது தீங்கை ஏற்படுத்தும். (இவ்வாறான நிலையில்) உனக்கு அனுமதி வழங்கப்பட்டாலே தவிர அவர்களை விட அதிகமாக நீ சாப்பிடாதே! 'ஒரே நேரத்தில் இரண்டு பேரீச்சம் பழங்களைச் சாப்பிட எனக்கு அனுமதி தாருங்கள்!' என்று அவர்களிடம் நீ கேட்டு, அதற்கு அவர்கள் உனக்கு அனுமதி தந்தால் (சாப்பிடுவதில்) பிரச்சினை இல்லை!*
*தனித்தனியாகச் சாப்பிடப்பட வேண்டிய சிறிய பழங்கள் சிலவற்றையும் மனிதர்கள் இவ்வாறுதான் ஒவ்வொரு பழமாக எடுத்து அவற்றைச் சாப்பிடுகின்ற போதும் இந்த வழமையின் படிதான் செல்ல வேண்டும். ஒருவர், தன்னோடு இருக்கும் தனது தோழரின் அனுமதியுடனேயன்றி (சாப்பிடுவதற்காக) இரண்டை ஒன்றாக இணைத்து எடுக்கக் கூடாது. தனது தோழர் சாப்பிடுவதை விட இவர் அதிகமாகச் சாப்பிட்டு விடுவதைப் பயப்படுவதே இதற்கான காரணமாகும்.”*
{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 4/217 }
❇➖➖➖➖➖➖➖➖❇
عن ابن عمر رضي الله عنهما قال: *{ نهى النبي صلى الله عليه وسلم أن يقرن الرجل بين التّمرتين جميعا حتى يستأذن أصحابه }* (رواه البخاري - ٢٤٨٩)
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:
*[ الشيئ الذي جرت العادة أن يأكل واحدة واحدة، كالتمر: إذا كان معك جماعة فلا تأكل تمرتين جميعا، لأن هذا يضرّ بإخوانك الذين معك، فلا تأكل أكثر منهم إلا إذا استأذنت وقلت: 'تأذنون لي أن آكل تمرتين في آن واحد!' ، فإن أذنوا لك فلا بأس.*
*وكذلك ما جاء في العادة بأنه يأكل أفرادا، كبعض الفواكه الصغيرة التي يلتقطها الناس حبة حبة ويأكلونها: فإن الإنسان لا يجمع بين اثنتين إلا بإذن صاحبه الذي معك، مخافة أن يأكل أكثر مما يأكل صاحبه]*.
{شرح رياض الصالحين ، ٤/٢١٧ }
❇➖➖➖➖➖➖➖➖❇
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா