பாவமன்னிப்புத் தேடுவதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்


         இமாம், அல்ஹாபிfழ் இப்னு ரஜப் அல்ஹன்பbலீ (ரஹ்) கூறுகின்றார்கள்:

         *“காலைப்பொழுதை அடைகின்ற போதும், மாலைப்பொழுதை அடைகின்ற போதும் பாவமன்னிப்பில் ஈடுபடவே வேண்டியது இறைவிசுவாசிக்கு அவசியமானதாகும். ஏனெனில், காலையிலா? அல்லது மாலையிலா? திடீரென்று அவருக்கு மரணம் வரும் என்று அவருக்குத் தெரியாது! எவரொருவர் பாவமன்னிப்பின்றி காலையை அல்லது மாலையை அடைகின்றாரோ அவர் அபாயத்திலேயே இருந்துகொண்டிருக்கிறார். பாவமன்னிப்புத் தேடாதவராக அல்லாஹ்வை அவர் சந்தித்து, அநியாயக்காரக் கூட்டத்தில் அவர் ஒன்று சேர்க்கப்படுவார் என்பதாக  அவர் விடயத்தில் அஞ்சப்படும்.*

              அல்லாஹ் கூறுகிறான்: *“எவர்கள் (இவற்றை விட்டும்) பாவமன்னிப்புத் தேடவில்லையோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்!”* (அல்குர்ஆன், 49:11)

{ நூல்: 'லதாஇபுfல் மஆரிப்f', பக்கம்: 344 }

❇➖➖➖➖➖➖➖➖❇

               قال الإمام الحافظ إبن رجب الحنبلي رحمه الله تعالى:

           *[ المؤمن لا ينبغي أن يصبح ويمسي إلا على توبة، فإنه لا يدري متى يفاجئه الموت صباحا أو مساءا. فمن أصبح أو أمسى على غير توبة فهو على خطر! لأنه يخشى أن يلقى الله غير تائب، فيحشر في زمرة الظالمين. قال الله تعالى: « ومن لّم يتب فأولئك هم الظالمون »*

{ لطائف المعارف،  ص - ٣٤٤ }

❇➖➖➖➖➖➖➖➖❇

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم