எவரையும் இழிவாகக் கருதாதீர்கள்


          இமாம் அல்மனாவீ (ரஹ்) கூறுகின்றார்கள்:

            *“எவரையும் இழிவாகக் கருதாமல் இருப்பது மனிதனுக்கு மிக அவசியமாகும். ஏனெனில், இழிவாகக் கருதப்படுபவர் சில வேளை உள்ளத்தால் மிகத் தூய்மையானவராகவும், செயலால் மிகப் பரிசுத்தமானவராகவும், எண்ணத்தால் நல்ல உளத்தூய்மை உள்ளவராகவும் இருக்கக்கூடும்! அல்லாஹ்வின் அடியார்களை இழிவாகக் கருதும் விடயம் நஷ்டத்தையே ஏற்படுத்தும். மேலும், இழிவையும் கேவலத்தையும் ஏற்படுத்தும்!”*

{ நூல்: 'பைfழுல் கதீர்', 05/380 }


          قال الإمام المناوي رحمه الله تعالى:-

            *[ فينبغي للإنسان أن لا يحتقر أبدا، فربما كان المحتقر أطهر قلبا وأزكى عملا وأخلص نية. فإن إحتقار عباد الله يورث الخسران ويورث الذّلّ والهوان ]*

{ فيض القدير ، ٥/٣٨٠ }

〰〰〰〰〰〰〰〰〰〰

➡ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

          *“முஸ்லிமான உன் சகோதரனைக் கேவலமாகக் கருதாதே! சாதாரண விடயத்தைக்கூட அவர் விளங்கவில்லையென்றாலும் அவரை நீ இழிவாகக் கருதிவிட வேண்டாம்! ஏனெனில், அறிவின் வாசலை அல்லாஹ் அவருக்குத் திறந்து கொடுத்து, அறிவில் அவர் கற்றுத் தேர்ந்து, அதன் மூலம் உன்னை விட நல்ல அறிவுள்ளவராக அவர் இருக்கலாம்!”*

{ நூல்: 'ஷர்ஹுல் அர்பbஈன் அந்நவவிய்யா', பக்கம்: 421 }


           قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:

            *[ لاتحقر أخاك المسلم، حتى لو لم يفهم مسألة بسيطة فلا تحقره! فلعل الله يفتح عليه ويتعلم من العلم ما يكون به أعلم منك ]*

{ شرح الأربعين النووية،  ص - ٤٢١ }

🌸➖➖➖➖➖➖➖➖🌸

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم