உன் வீட்டில் நீதான் தலைவனாக இருக்க வேண்டும்; உன் மனைவி அல்ல


         அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *“ 'ஆண்மகன்' என்ற வார்த்தையின் பொருளுக்கு ஏற்றாற்போல், உன் வீட்டில் ஆண்மகன் என்ற அடிப்படையில் தலைவனாக நீ இருந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகும்! (தேவைக்கு ஏற்றாற்போல் அடிக்கப்படும்) பலகை போன்று உன் வீட்டாரிடத்தில் நீ இருந்துவிடக் கூடாது.*

          அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமையொன்றில் குறைவு செய்யக்கூடியவர்களாக உன் குடும்பத்தாரை நீ கண்டுவிட்டால், (அதன் பாரதூரம் குறித்தும், அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்றும்) அவர்களுக்கு நீ ஏவி விடு! மேலும், ஏனைய விவகாரங்கள் ஒன்றில் இஸ்லாமிய ஷரீஅத்திற்கு முரணாக அவர்கள் நடப்பதாக நீ கண்டுவிட்டாலும்  மார்க்கத்தைக் கடைப்பிடித்து நடக்கும்படியாக அவர்களை நீ பணித்துவிடு. காரணம்,  நீ ஒரு பொறுப்புதாரியாக இருக்கின்றாய்!

          *கணவன், தனது குடும்பத்தார் விடயத்தில் பொறுப்புதாரியாக இருக்கின்றான்; அவனது பொறுப்பு குறித்து அவன் விசாரிக்கப்படுவான்!*  என்ற இந்த நபிமொழியின் அடிப்படையில், உன் குடும்பத்தாரை நிர்வகிக்கும் அதிகாரப் பொறுப்பை நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் உனக்குத் தந்திருக்கிறார்கள். இன்னார், அல்லது இன்னார் உன்னை இப்பொறுப்புக்கு நியமிக்கவில்லை; ஊர்த் தலைவரோ, அமைச்சரோ, ஆட்சித் தலைவரோ, வேறு எவரோ இவ்வதிகாரப் பொறுப்புக்கு உன்னை நியமிக்கவில்லை. மாறாக, நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள்தான் இவ்வதிகாரப் பொறுப்புக்கு உன்னை நியமித்தார்கள். எனவே, உனது வீட்டில் நீதான் தலைவனாவாய்!

   *“கணவன், தனது குடும்பத்தார் விடயத்தில் பொறுப்புதாரியாக இருக்கின்றான்; அவனது பொறுப்பு குறித்து அவன் விசாரிக்கப்படுவான்!”* என்ற இந்த நபிமொழியில்,   *“பொறுப்புதாரி”* என்று மட்டும் கணவன் குறித்துக் கூறி நபியவர்கள் மெளனமாகி விடவில்லை; அப்படிக் கூறியிருந்தால் விடயமும் இலகுவாகியிருக்கும்! என்றாலும், *“அவனது பொறுப்பு குறித்து அவன் விசாரிக்கப்படுவான்!”* என்றல்லவா நபியவர்கள் கூறிவிட்டார்கள்... !!

          *எனவே, மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் நீ நிற்பாட்டப்பட்டால் உனது பதில் எப்படி இருக்கும் என்பதை நீ (கொஞ்சம் சிந்தித்துப்) பார்த்துக்கொள்!!!*

{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 798 -ம் இலக்க நபிமொழிக்கான விளக்கம் }

 🌟➖➖➖➖➖➖➖➖🌟

           قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

               *{ والواجب أن تكون رجلا في بيتك! رجلا بمعنى الكلمة... لا أن تكون كأنك خشبة عند أهلك.... !!*

        *إذا رأيت أهلك مقصرين في واجب لله عزّ وجلّ مرهم به... وإذا رأيتهم يخالفون الشرع في شيئ من الأمور الأخرى فألزمهم بالشرع، لأنك مسؤول...*

أعطاك النّبي صلّى الله عليه و آله وصحبه وسلّم إمارة على أهلك: *« الرّجل راع في أهله ومسؤول عن رعيّته »*

➖مانصّبك فلان وفلان... وما نصّبك أمير البلد ولا الوزير ولا الملك ولا غيره... نصّبك محمد رسول الله صلّى الله عليه وسلّم، فأنت أمير في بيتك!

*« الرّجل راع في بيته ومسؤول عن رعيّته »* ولم يقل: راع، وسكت... ولو كان كذلك لهان الأمر... لكن قال: *« ومسؤول عن رعيّته »*!

            فانظر ماذا يكون جوابك إذا وقفت يوم القيامة بين يدي الله؟!!! }

 [ المصدر: شرح كتاب رياض الصالحين، الحديث رقم - ٧٩٨ ]

🌟➖➖➖➖➖➖➖➖🌟

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم