சுவர்க்கம் நுழைவதற்கு நற்செயல் மாத்திரம் போதாது ; அல்லாஹ்வின் அருளும் வேண்டும்


🎯 *“நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத்தும் செய்து, அல்லாஹ்வின் பாதையில் அறப்போரும் புரிந்தார்களோ அவர்களே அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைக்கின்றனர். அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன்!”* (அல்குர்ஆன், 02: 218) என்ற இவ்வசனத்தை அல்லாமா ஸாலிஹ் பின் fபவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) அவர்கள் இவ்வாறு விளக்குகின்றார்கள்:-

          *“ஈமான் (இறைநம்பிக்கை), ஹிஜ்ரத் (அல்லாஹ்வுக்காக நாடு துறந்து செல்லல்) , ஜிஹாத் (அறப்போர்)* ஆகிய இம்மூன்று முக்கிய வணக்க வழிபாடுகள் இறை நல்லடியார்களிடம் இருந்தும், தம்மை இவை (சுவர்க்கம் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்று) இவர்கள் உறுதிகொள்ளவில்லை; (மாறாக), அல்லாஹ்வின் அருளைத்தான் இவர்கள் ஆதரவு வைக்கின்றார்கள்!

          எனவே, தனது நற்செயலைக்கொண்டு மாத்திரம் (சுவர்க்கம் செல்லலாம் என்று)  மனிதன் பெருமிதம் கொள்ளக்கூடாது; அதனுடன் அல்லாஹ்வின் அருளையும் அவன் ஆதரவு வைத்துக்கொள்ள வேண்டும்!!”

{ நூல்: 'அத்தஃலீகு அலா ரிசாலதி உஜூபில் அம்ரி bபில்மஃரூfப்', பக்கம் :78 }

📖➖➖➖➖➖➖➖➖📖

🎯 يفسّر العلاّمة صالح بن فوزان الفوزان حفظه الله تعالى الآية: *« إنّ الّذين آمنوا والّذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رّحيم »* {سورة البقرة، الآية - ٢١٨ }

     *"إيمان - وهجرة - وجهاد* -

ومع هذا لا يجزمون لأنفسهم، إنما يرجون رحمة الله عزّ وجلّ. فلا يعجب الإنسان بعمله، وإنما يرجو معه رحمة الله!".

{ التعليق على رسالة وجوب الأمر بالمعروف، ص - ٧٨ }

📖📖👇👇👇👇👇👇📖📖

❇  *“எவரையும் அவரின் நற்செயல் சுவர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது; மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையால்தான் எவரும் சுவர்க்கம் புகமுடியும்)”* என்று நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள். அப்போது

மக்கள், *'தங்களையுமா (தங்களின் நற்செயல் சுவர்க்கத்தில் நுழைவிப்பதில்லை!), இறைத்தூதர் அவர்களே?!'* என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், *'(ஆம்) என்னையும்தான்; அல்லாஹ் (தன்னுடைய) கருணையாலும் அருளாளலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர'* என்று கூறிவிட்டு, *'எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள்; நிதானமாக நடந்துகொள்ளுங்கள்; உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம்! ஒன்றில் அவர் நல்லவராக இருப்பார்; அவர்(உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்!'* என்று கூறினார்கள். 

(நூல்: புகாரி - 5673)

☘➖➖➖➖➖➖➖➖☘

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم