அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“இடது கையால் சாப்பிடுவதும், குடிப்பதும் கூடுமா? என்ற இந்த விவகாரத்தில் கருத்துவேறுபாடு இருக்கிறது. அறிஞர்களில் சிலர் இதை 'மக்ரூஹ்'(வெறுக்கப்பட்டது) என்றும், வேறு சிலர் 'ஹராம்'(தடுக்கப்பட்டது) என்றும் தீர்ப்புக் கூறியுள்ளனர்.
'ஹராம்' என்பதே இதில் சரியான கருத்தாகும். காரணம், நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் இதை 'ஹராம்' என்பதாக வலியுறுத்தும் வார்த்தையைக்கொண்டு இணைத்தே கூறியிருக்கின்றார்கள். *'ஷைத்தான் தனது இடக் கையால்தான் உண்கிறான்; தனது இடக் கையால்தான் பருகுகிறான்'* (முஸ்லிம் - 4109) என்பதே நபிகளாரின் அவ்வார்த்தையாகும். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடப்பதை விட்டும் நாம் தடுக்கப்பட்டிருப்பதும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். அல்லாஹ் கூறுகிறான்: *'நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். எவன் ஷைத்தானின் அடிச்சுவடுளைப் பின்பற்றுகின்றானோ அவனுக்கு நிச்சயமாக ஷைத்தான் மானக்கேடான செயலையும், வெறுக்கத்தக்கதையுமே ஏவுவான்'.* (அல்குர்ஆன், 24:21) மனிதர்களிலுள்ள இறைமறுப்பாளர்களைப் பின்பற்றி அவர்களுக்கு ஒப்பாக நடப்பதே (எமது மார்க்கத்தில்) ஹராம் என்றால், இறைமறுப்பாளர்களான ஷைத்தான்களுக்கு ஒப்பாக நடப்பதென்பது கட்டாயம் தவிர்ந்து நடக்க வேண்டிய முதன்மை ஹராமாகும்.
எனினும், இடது கையால் உண்பதையோ குடிப்பதையோ பெரும்பாவங்களில் ஒன்றாக நாம் நோக்கமாட்டோம். *“ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டு கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், 'வலக் கையால் உண்பீராக!' என்று அவருக்குச் சொன்னார்கள். அவர், 'என்னால் முடியாது!' என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'உம்மால் முடியாமலே போகட்டும்!' என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது”.*(ஸஹீஹ் முஸ்லிம் - 4110) என்ற இந்த ஹதீஸைப் பொறுத்தவரை, இடக்கையால் சாப்பிட்ட அந்த மனிதர் தண்டிக்கப்பட்ட விதம் பெரியதோர் பாவத்தை அவர் புரிந்ததற்காகத்தான் என்று மேலோட்டமாகப் பார்க்கையில் தெரிகிறது. ஆனால், அவரோ பெருமை பிடித்தவராக இருந்து, நபியின் கட்டளைக்கு மாறு செய்ததற்காகவே அவ்வாறு தண்டிக்கப்பட்டார் என்பதாக *'அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது!'* என்ற நபியின் இக்கூற்று குறிப்பிடுகிறது.
அம்மனிதரிடம் இருந்த பெருமைத்தனத்திற்காகத்தான் அவருக்கெதிராக நபியவர்களும் பிரார்த்தித்தார்கள். எனவே, இப்போது ஒருவர் வந்து பெருமைத்தனத்தால் இடக்கை மூலம் சாப்பிட முற்படுகிறார்; வலக்கையால் சாப்பிடுவது தகுதியில்லை என்றும் அவர் கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். - அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! -. அப்போது நாம் அவரிடம், 'வலக்கையால் உமக்கு சாப்பிட முடியாதா?' என்று கேட்கிறோம். அதற்கு அவர், 'எனக்கு முடியாது!' என்று (பெருமை மேலீட்டால்) பதில் தருகிறார் என்றால், அவருக்கெதிராக நாம் பிரார்த்திக்கலாம் என்பதில் சந்தேகமே கிடையாது!.
இவ்வாறே, இறைமறுப்பாளர்களைப் பின்பற்றி இடது கையால் யார் சாப்பிடுகிறாரோ, குடிக்கிறாரோ அதுவும் மிகக் கடுமையான பாவமேயாகும். ஏனெனில், இன்று மக்களில் சிலர் இடது கையால் சாப்பிடுவதை நாகரிகமாகவும், முன்னேற்றமாகவும் பார்க்கின்றனர். 'விமானங்கள், ஏவுகணைகள், போர் விமானங்களைச் செய்தவர்கள் போன்றவர்களெல்லாம் முன்னேறியது இடக்கையால் உண்டு, இடக்கையால் பருகியதனால்தான்' என்பது மக்கள் சிலரின் கண்ணோட்டமாகும். (இஸ்லாத்தில்) மறுக்கப்பட்ட விடயங்களை இவர்கள் செய்வதன் காரணமாகத்தான் உற்பத்திகளிலும், தொழிநுட்பத்திலும் இவர்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்றும் இந்த மக்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்! அல்லாஹ்விடம் பாதுகாப்பை வேண்டுவோமாக!!”.
{ நூல்: 'ஷர்ஹுல் உஸூல் மின் இல்மில் உஸூல்', பக்கம்: 203,204 }
⚛➖➖➖➖➖➖➖➖⚛
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
{ هل يجوز الأكل والشرب بالشمال؟ هذا فيه خلاف. فمن العلماء من يقول: مكروه، ومنهم من يقول: حرام.
والصحيح أنه حرام؛ لأن النّبي صلّى الله عليه وسلم قرنه بما يدلّ على التحريم، وهو قوله: *« لا تأكلوا بالشمال، فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله »* (رواه مسلم، رقم الحديث : )، وقد نهينا عن اتباع خطوات الشيطان: *« يا أيها الذين آمنوا لا تتّبعوا خطوات الشيطان ومن يتّبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر »* (سورة النور، الآية:٢١). واذا كان التّشبّه بالكفار من بني آدم حراما، فالتّشبّه بالكفار من الشياطين من باب أولى.
ولا نجعل الأكل والشرب بالشمال كبيرة، أما حديث الرّسول صلّى الله عليه وسلم: أنه دعا على الرجل الذي أمره أن يأكل بيمينه فقال: لا أستطيع، فقال صلّى الله عليه وسلم: *« لا استطعت فما ردّها إلى فمه »* (رواه مسلم )، فهو يدلّ على أن هذا الرجل مستكبر؛ لأنه قال في الحديث: *« لا يمنعه إلا الكبر »* .
فلكبريائه دعا عليه النّبي عليه الصلاة والسلام؛ فإذا جاء أحد يريد أن يأكل بشماله تكبّرا ويقول: هذه لا تستحق أن آكلها باليمين -والعياذ بالله- فهذا بلا شك ندعو عليه، نقول: لا استطعت إذا قال: لا أستطيع.
وكذلك من يأكل بالشمال ويشرب بالشمال تقليدا للكفار هو أشدّ إثما؛ لأن بعض الناس الآن يرى أن الأكل بالشمال حضارة وتقدم، مثل الذين يصنعون الطيارات والصواريخ والنفاثات، لأن الذي رقى هؤلاء كونهم يأكلون بالشمال ويشربون بالشمال، وهذه نظرية بعض الناس: يظنون أنهم ما رقوا إليه من الصنائع والتكنولوجيا إلا من أجل أفعالهم المنكرة؛ نسأل الله العافية! }
[ شرح الأصول من علم الأصول للعثيمين، ص - ٢٠٣،٢٠٤ ]
⚛➖➖➖➖➖➖➖➖⚛
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா