அவரின் குணமே குர்ஆனாகத்தான் இருந்தது


🎯 சஅத் பின் ஹிஷாம் பின் ஆமிர் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

 “அன்னை ஆயிஷா (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்களிடம் நான்,

'இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! *அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!* எனக் கேட்டேன். அதற்கு  அவர்கள், 'நீர் குர்ஆனை ஓதவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (ஓதியிருக்கிறேன்!)' என்றேன்.  அப்போது ஆயிஷா (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்கள்,

*"நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் குணமே குர்ஆனாகத்தான் இருந்தது!"* என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் - 1357)

             இந்த நபிமொழிக்கு அறிஞர்கள் இருவர் இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்:

♦ இமாம் நவவீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *“நபியின் குணமே குர்ஆனாகத்தான் இருந்தது' என்பதன் பொருள்:* அதன் போதனையை அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள்; அதன் கட்டுப்பாட்டு வரம்புகளோடு நின்றுகொண்டார்கள்; அதன் ஒழுக்கப் போதனைகளைக் கடைப்பிடித்தார்கள்; அது கூறும் உதாரணங்களையும், சம்பவங்களையும் படிப்பினையாக எடுத்துக் கொண்டார்கள்; அதை ஆராயும் பணியில் ஈடுபட்டார்கள்; அழகிய முறையில் அதை ஓதி வந்தார்கள் என்பதாகும்!”.

{ நூல்: 'ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம்', 03/268 }

♦ இமாம் இப்னு ரஜப் அல்ஹன்பலீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “அது கூறும் ஒழுக்கப் போதனைகளைக் கடைப்பிடிப்பவர்களாகவும், அதில் பொதிந்திருக்கும் நற்பண்புகளை எடுத்து நடப்பவர்களாகவும் அவர்கள் காணப்பட்டார்கள். அத்தோடு,  எவற்றையெல்லாம் குர்ஆன் புகழ்ந்ததோ அவற்றிலெல்லாம் அவரின் திருப்தி இருந்தது; எவற்றையெல்லாம் அது இகழ்ந்ததோ அவற்றிலெல்லாம் அவரின் கோபமும் இருந்தது!.  இதுதான், *நபியின் குணமே குர்ஆனாகத்தான் இருந்தது!* என்பதன் பொருளாகும்”.

{ நூல்: 'ஜாமிஉல் உலூம் வல்ஹிகம்', 01/148 }

🔘➖➖➖➖➖➖➖➖🔘

🎯 عن سعد بن هشام بن عامر  رحمه الله تعالى قال، فقلت: *{ يا أم المؤمنين! أنبئيني عن خلق رسول الله صلّى الله عليه وسلم. قالت : ألست تقرأ القرآن؟ قلت: بلى؛ قالت: فإن خلق نبيّ الله صلّى الله عليه وسلم كان القرآن }* (صحيح مسلم، رقم الحديث: ١٣٥٧ )

♦قال الإمام النّووي رحمه الله تعالى: *« معناه: العمل به، والوقوف عند حدوده، والتأدّب بآدابه، والإعتبار بأمثاله وقصصه، وتدبّره، وحسن تلاوته »*

{ شرح صحيح مسلم، ٣/٢٦٨ }

♦قال الإمام إبن رجب الحنبلي رحمه الله تعالى: *« يعني: أنه كان يتأدّب بآدابه، ويتخلق بأخلاقه، فما مدحه القرآن كان فيه رضاه، وما ذمّه القرآن كان فيه سخطه »*

{ جامع العلوم والحكم، ١/١٤٨ }

🔘➖➖➖➖➖➖➖➖🔘

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post