அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“ஆண்கள் இன்று தமது தாடிகளை வழித்துக்கொள்கிறார்கள். நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களோ, *'நெருப்பு வணங்கிகள், இணைவைப்பாளர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு நீங்கள் மாறு செய்யுங்கள்!'* என்று கூறியிருக்கின்றார்கள். யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் நீ போய் பார்; அவர்களெல்லாம் தமது தாடிகளைச் சிரைக்காமல் அப்படியேதான் விட்டு வைத்திருக்கிறார்கள்; இவர்களுக்கு மாறு செய்து, நபியின் கட்டளையை அமுல்படுத்தும் விடயத்தில் நீ உண்மையாளனாக இருந்தால், உனது தாடியை நீ வழிக்க வேண்டும்! அத்தோடு இந்த தாடிக் கலாச்சாரத்தை முஸ்லிம்கள் வழமையாக்கிக்கொண்டதால்தான் அது முஸ்லிம்களின் கலாச்சார அடையாளமாகவும் மாறிப் போனது. மார்க்கத்தைப் பொறுத்தளவில் அது, எல்லாக் காலத்திற்கும் இடத்திற்கும் சரிப்பட்டு வரக்கூடியதாகவும் பொருத்தமானதாகவுமே இருக்க வேண்டும்!”.
(தாடியைக் குறை கண்டு, அதை விமர்சிக்கும் நோக்கில்) மனிதர்களில் ஒருவன் கூறுகின்ற கூற்றே மேற்படி கூற்றாகும். சுப்ஹானல்லாஹ்! ஆச்சரியமாகவே இருக்கிறது!! இவனுக்கு நாம் இவ்வாறு மறுப்புக் கொடுப்போம்:
*01)* கிறிஸ்தவர்கள், இணைவைப்பாளர்கள், யூதர்கள், நெருப்பு வணங்கிகள் ஆகிய இவர்களெல்லாம் (சிரைக்காது) தமது தாடிகளோடுதான் இருக்கிறார்கள் என்ற உன் வாதம் பொய்யானதாகும்; தற்போதைய நிலவரம் இதைப் பொய்ப்படுத்துகிறது. ஐரோப்பா மற்றும் ரஷ்யாவை நீ பார்! அங்கிருக்கும் இவர்களில் அதிகம்பேர் தமது தாடிகளைச் சிரைத்தே இருக்கிறார்கள். பொதுக் கண்ணோட்டத்தில் இவர்களை நாம் பார்க்கும்போது, இவர்களில் அதிகமானோர் தமது தாடிகளைச் சிரைத்திருப்பதாகவே கண்டுகொள்ள முடிகிறது.
*02)* ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் (432 ம் இலக்க ஹதீஸில்) வந்திருப்பதுபோல், தாடி வளர்த்தல் என்பது இயற்கை மரபாக வந்திருக்கும் சுன்னாக்களில் ஒன்றாகும். வெறுமனே இறைமறுப்பாளர்களுக்கு மாறு செய்வதற்காகத்தான் தாடி வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்பது, தாடி வளர்க்க வேண்டும் என்பதற்கான காரணி கிடையாது; இயற்கை மரபுக்கு உடன்பாடாக அது இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான் தாடி வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மர்ம உறுப்பின் முடிகளைக் களைதல், அக்குள் முடிகளை அகற்றுதல், நகங்களை வெட்டுதல், மீசையை ஒட்டக் கத்தரித்தல் ஆகிய இவை இயற்கை மரபாக வந்து நிரந்தர சுன்னாக்களாக நிலைத்திருப்பது போன்றுதான் இங்கே இந்த தாடி வைத்தல் சுன்னத்தும் இருந்துகொண்டிருக்கிறது!”.
{ நூல்: 'ஷர்ஹுல் உஸூல் மின் இல்மில் உஸூல்', பக்கம்: 462,463 }
📘➖➖➖➖➖➖➖➖📘
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
{ قال قائل من الناس: الناس الآن يحلقون لحاهم، والرّسول صلّى الله عليه وسلم قال: *« خالفوا المجوس والمشركين واليهود والنّصارى »*، يقول: 'إذهب وانظر إلى اليهود والنّصارى فإنهم يبقون لحاهم، فمخالفتهم إن كنت صادقا في تنفيذ أمر الرّسول صلّى الله عليه وسلم أن تحلق لحيتك!' ثم قال: 'وقد اعتاد المسلمون هذا الزّيّ فصار من زيّ المسلمين، والدّين صالح لكلّ زمان ومكان'. سبحان الله العظيم!
*نقول أوّلا:* دعواك أن النّصارى والمشركين واليهود والمجوس يبقون لحاهم دعوى كاذبة يكذبها الواقع، فانظر لأوروبا وروسيا أكثرهم حالق لحيته، فلو نظرنا لعمومهم لوجدنا الأكثر يحلق لحيته.
*ثم نقول ثانيا:* إن إعفاء اللّحية من الفطرة كما ثبت ذلك في صحيح مسلم (٤٣٢)، وليست العلة في إعفاء اللّحية مجرد المخالفة، بل موافقة الفطرة. وحينئذ تكون من السّنن الباقية كحلق العانة، ونتف الإبط، وتقليم الأظافر، وحف الشارب }
[ المصدر: شرح الأصول من علم الأصول للعثيمين، ص - ٤٦٢،٤٦٣ ]
📘➖➖➖➖➖➖➖➖📘
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா