இறைநம்பிக்கையாளரின் நிலை வியப்பாக இருக்கிறது


🎯 நபிகள் நாயகம்  (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக ஸுஹைப் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: *“இறைநம்பிக்கையாளரின் நிலை வியப்பாக இருக்கிறது! அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் அவருக்கு நன்மையாகவே அமைந்துவிடுகிறது.  இறைநம்பிக்கையாளருக்கே தவிர வேறெவருக்கும் இது கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால் அவர் நன்றி செலுத்துகிறார்; அது அவருக்கு நன்மையாக அமைகிறது!  அவருக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அவர் பொறுமை காக்கிறார்; அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது!”* (முஸ்லிம்- 5726)


               இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் அல்பத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           “இறைநம்பிக்கையாளர் தான் மகிழ்ச்சியாக இருக்கின்ற வேளையில், அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்திருக்கும் அருள் என்று அறிந்து கொள்கிறார்; எனவேதான், அதற்காக அவர் அல்லாஹ்வைப் புகழ்கிறார். அவர் துன்பத்தில் இருக்கின்ற வேளையில், தனக்கேற்பட்டிருக்கும் அச்சோதனை அல்லாஹ் விதித்தபடி நடந்திருக்கிறது என்றும், அல்லாஹ் நாடியது நடந்துவிட்டது; அவன் நாடாதது நடக்கவில்லை என்றும் அவர் அறிந்துகொள்கிறார். எனவேதான், அதற்காக அவர் பொறுமை காக்கிறார். இதனால் அவர், அருட்கொடைமிக்க மகிழ்ச்சியில் இருந்தபோது நன்றி செலுத்துவோரின் கூலியைப் பெற்றுக்கொள்கின்றார்; சோதனையான வாழ்வில் இருந்தபோது  (பொறுமை காத்ததால்) பொறுமையாளர்களின் கூலியை அவர்  பெற்றுக்கொள்கின்றார். இ(ப்பாக்கியமான)து,  இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவருக்கும் கிடைக்கமாட்டாது!”.

{ நூல்: 'அதருல் அத்கார் அஷ்ஷரஇய்யா', பக்கம்: 30 }

🎯 عن صهيب رضي الله عنه قال: قال رسول الله صلّى الله عليه وسلم: *{ عجبا لأمر المؤمن! إنّ أمره كلّه خير، وليس ذاك لأحد إلّا للمؤمن. إن أصابته سرّاء شكر، فكان خيرا له؛ وإن أصابته ضرّاء صبر فكان خيرا له }* ( رواه مسلم، رقم الحديث: ٥٧٢٦ )


          قال الشيخ عبدالرازق البدر حفظه الله تعالى:-

          { المؤمن في السّرّاء يعلم أنّها نعمة من الله فيحمد الله عليها؛ وفي الضّرّاء يعلم أنّ المصيبة بقضاء الله سبحانه وتعالى، وأن ماشاء الله كان وما لم يشأ لم يكن فيصبر عليها. فهو في النّعمة ينال ثواب الشاكرين، وفي المصيبة ينال ثواب الصابرين. وهذا لا يكون إلّا للمؤمن! }

[ أثر الأذكار الشرعية، ص- ٣٠ ]

🌅➖➖➖➖➖➖➖➖🌅

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post