🔅👉🏿 நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக சஹ்ல் பின் முஆத் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
*“கோபத்தின்படி செயல்படுவதற்கு சக்தி இருந்தும் அதை அடக்கிக்கொண்டவரை (மறுமையில்) படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைத்து, விரும்பிய சுவனத்துக் கன்னியை (ஹூருல் ஈனை) தெரிவு செய்துகொள்ளும்படியாகக் கூறுவான்”* (ஆதார நூல்கள்: ஸஹீஹ் சுனன் அத்திர்மிதீ - 2021, ஸஹீஹ் சுனன் அபீ தாவூத் - 4777, ஸஹீஹ் சுனன் இப்னுமாஜா - 4186)
அல்லாமா ரபீbஃ அல்மத்ஹலீ (ஹபிfழஹுல்லாஹ்) அவர்கள் இந்த நபிமொழியை இவ்வாறு விளக்கப்படுத்துகின்றார்கள்:-
“மடையனும், எதிரியும் சிலவேளை உன்னைக் கோபமூட்டுவார்கள். அந்நேரம், (நீ செய்ய வேண்டும் என்று) உன்னிடமிருந்து வேண்டப்படுவது என்ன தெரியுமா? நல்லவர்களில் ஒருவனாக நீ இருக்கின்ற வரைக்கும் கோபத்தை நீ அடக்கிக்கொள்ளல் வேண்டும். எனினும், இதைவிட மிகப்பெரிதாக உன்னிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது (கோபமூட்டியவரை) நீ மன்னித்துவிட வேண்டும் என்பதாகும். ஏனெனில் கோபத்தைப் பொறுத்தவரை, அதை உன்னால் அடக்க முடியும்! என்றாலும், உன் மனதில் (பாதிப்பின்) வலியொன்று இருக்கவே செய்யும். மன்னிக்கின்றபோது, அதனுடன் சேர்ந்து அனைத்துமே போய்விடுகின்றது.
விட்டுக்கொடுப்புடனான தாராளத்தன்மை, மனதில் இருக்கின்ற சந்தோசம் ஆகிய இவ்விரண்டும் அல்லாஹ்விடத்தில் விரும்படுகின்ற விடயமாகவும், அவனது நெருக்கத்தைப் பெற்றவர்களதும் நல்லவர்களினதும் பண்புகளில் ஒன்றாகவும் இருந்துகொண்டிருக்கின்றது. இதனால்தான் அல்லாஹுதஆலா, *“நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்”* (அல்குர்ஆன், 03:134) என்று கூறுகிறான். அதாவது, “கோபத்தை அடக்கி, மனிதர்களை மன்னிப்பவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்”.
{ நூல்: 'அல்மஜ்மூஉர் ராயிக்', பக்கம்:62 }
عن سهل بن معاذ رضي الله عنه أن رسول الله صلّى الله عليه وسلم قال: *« من كظم غيظا وهو قادر على أن ينفذه، دعاه الله تبارك وتعالى على رؤوس الخلائق، حتى يخيّره من أيّ الحور شاء »* (صحيح سنن الترمذي - ٢٠٢١ ، صحيح سنن أبي داود - ٤٧٧٧ ، صحيح سنن ابن ماجه - ٤١٨٦ للشيخ الألباني )
قال العلاّمة ربيع المدخلي حفظه الله تعالى: *« قد يغضبك السّفيه والعدوّ، فما هو المطلوب منك؟ »*
« المطلوب منك: كظم الغيظ حتى تكون من الأبرار . بل المطلوب منك أكبر من ذلك: وهو العفو؛ لأن الغيظ تكظمه، ولكن يبقى في نفسك شيئ من الألم. لكن العفو يذهب معه كلّ شيئ!
سماحة، طيب في النفس؛ هذا أمر محمود عند الله تبارك وتعالى، ومن صفات المقرّبين والأبرار. ولهذا قال سبحانه: *« والله يحبّ المحسنين »* (سورة آلعمران، الآية: ١٣٤) يعني: الكاظمين الغيظ والعافين عن النّاس من المحسنين »
[ المجموع الرائق، ص - ٦٢ ]
💢⛱⛱⛱⛱⛱⛱⛱⛱💢
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா