அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“(உன் தேவைகளை) அல்லாஹ்விடம் நீ கேட்டால், எல்லா நிலைமைகளிலும் இலாபமடைந்தவனாகவே நீ இருக்கின்றாய் என்று புரிந்துகொள்!
🔅ஒன்றில், நீ கேட்டதை அல்லாஹ் உனக்குத் தருவான்.
🔅அல்லது, மிகப்பெரும் தீங்கை உன்னை விட்டும் அவன் திருப்பி விடுவான்.
🔅அல்லது, அதை உனக்கான கூலியாக மறுமையில் தன்னிடம் அவன் சேமித்து வைத்திருப்பான்.
எனவே, யார் அல்லாஹ்வை(ப் பிரார்த்தித்து) அழைக்கின்றாரோ அவர் நஷ்டமடைந்துவிடமாட்டார். ஆதலால், பிரார்த்திப்பதை நீ அதிகப்படுத்து; அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்திப்பதை நீ அதிகப்படுத்து. அல்லாஹ்விடம் பிழைபொறுக்கத் தேடுவதையும், அவனின்பால் பாவமீட்சிக்காக மீள்வதையும் நீ அதிகப்படுத்திக்கொள். ஏனெனில் நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களே இவ்வாறு கூறுகின்றார்கள்: *“எனது உள்ளத்தின் மீதும் திரையிடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நூறு முறை நான் அல்லாஹ்விடம் பிழைபொறுக்கத்தேடி பாவமன்னிப்புக் கோருகிறேன்”* (முஸ்லிம், ஹதீஸ் இலக்கம்: 5234)
[ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 06/52 ]
قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
{ إعلم أنك إذا سألت الله فإنك رابح في كل حال؛ لأنه:
🔅إمّا أن يعطيك ما تسأل..
🔅أو يصرف عنك من السوء ما هو أعظم..
🔅أو يدّخر ذلك لك عنده يوم القيامة أجرا.
فمن دعا الله فإنه لا يخيب! فأكثر من الدعاء؛ أكثر من دعاء الله؛ أكثر من الإستغفار إلى الله والتوبة إليه. فإن الرسول صلّى الله عليه وسلم يقول: *« إنّه ليغان على قلبي؛ وإنّي أستغفر الله وأتوب إليه مائة مرّة »* (مسلم، رقم الحديث :٥٢٣٤)
[ المصدر: شرح رياض الصالحين، ٦/٥٢ ]
🌻➖➖➖➖➖➖➖➖🌻
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா