துருப்பிடிக்கும் உள்ளங்கள்! துருவகற்றுவது எவ்வாறு?


       சகோதரி நஜ்லா இப்ராஹீம்  அல்முஹன்தீ (உம்மு இப்ராஹீம்) கூறுகின்றார்கள்:-

         *“இரும்பு துருப்பிடிப்பது போல் உள்ளமும் துருப்பிடிக்கின்றது. இறைநினைவுடன் வாழ்வது கொண்டும்,  திக்ர் செய்வதன் மூலமும் அதை சுத்தப்படுத்த முடியும். வெண்மையான கண்ணாடி போன்று அதை விட்டு விடுகின்ற வரைக்கும் இது அதை சுத்தப்படுத்தும்!*

          *பொடுபோக்கு, பாவம் ஆகிய இரு விடயங்கள் மூலம் உள்ளம் துருப்பிடிக்கின்றது. இதை, இரு விடயங்கள் கொண்டு அகற்றி  சுத்தப்படுத்தலாம். பொடுபோக்கு என்ற துருவை விழிப்பாக இருத்தல் மற்றும் திக்ரின் மூலமும்,  பாவம் என்ற துருவை இஸ்திஃபார் மற்றும்  தவ்பாவின் மூலமும் அகற்றி  சுத்தப்படுத்தலாம். உள்ளம் துருப்பிடித்துவிட்டால் அது இருளடைந்து விடுகிறது; அப்போது, எப்படி இருக்க வேண்டுமோ அப்படியான அமைப்பில் யதார்த்தங்கள் அதிலே வெளிப்படாது போய்விடும். இந்தத் துருவானது, அதன்மேல் அடுக்கடுக்காகப் படிந்து அது கறுப்பாகிவிடும்போது அறிவும் சிந்தனையும் சீர்கெட்டு விடுகிறது. அப்போது அவ்வுள்ளம், சத்தியத்தை ஏற்கவும் செய்யாது; அசத்தியத்தை மறுக்கவும் மாட்டாது! இது, உள்ளத்திற்குக் கிடைக்கும் தண்டனைகளில் மிகப் பெரியதாகும். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருந்துகொண்டிருப்பது பொடுபோக்கும் மனோ இச்சையுமேயாகும். இவையிரண்டும் உள்ளத்தின் ஒளியைப் பறித்து, அதன் பார்வையையும் குருடாக்கி விடுகின்றன!”*

{ நூல்: 'fபழாஇலுத் துஆ' லி நஜ்லா இப்ராஹீம், பக்கம்: 51 }


          قالت نجلاء إبراهيم المهندي (أم إبراهيم) في كتابها فضائل الدعاء : 

        *{ القلب يصدأ كما يصدأ الحديد، وجلاؤه بالذكر، فإنه يجلوه حتى يدعه كالمرآة البيضاء.* 

           *ويصدأ القلب بأمرين: الغفلة والذنب، وجلاؤه بشيئين: باليقظة والذكر لجلاء الغفلة، والإستغفار والتوبة لجلاء الذنب. وإن القلب إذا صدأ أظلم فلم تظهر فيه صورة الحقائق كما هي عليه، فإذا تراكم عليه الصدأ واسودّ فسد تصوره وإدراكه! فلا يقبل حقا ولا ينكر باطلا، وهذا أعظم عقوبات القلب، وأصل ذلك من الغفلة واتباع الهوى، فإنهما يطمسان نور القلب ويعميان بصره }*

[ فضائل الدعاء، ص - ٥١ ]

➖➖➖👇👇👇👇➖➖➖

🎯 அல்லாஹ் கூறுகிறான்: *“அவ்வாறன்று; எனினும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களின் உள்ளங்கள் மீது துருவாகப் படிந்துவிட்டது”.* (அல்குர்ஆன், 83:14)

⚛➖➖➖➖➖➖➖➖⚛

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post