சகோதரர் *'அலி ஆலு ஹமூத்'* என்பவர் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு கூறுகிறார்:-
“(நாம் கூறுகின்ற) இந்த இரண்டு நேரடிக் காட்சிகளும் (மறுமையில்) உறுதியாக நடந்தே தீரும்:
*காட்சி- 01:* தனது செயல்கள் அடங்கிய பதிவேட்டுப் புத்தகத்தை தனது வலது கையால் ஒருவர் எடுத்திருப்பார். அவர், *“எனது பதிவேட்டுப் புத்தகத்தை நீங்கள் வாசித்துப் பாருங்கள்.🔅நிச்சயமாக நான் எனது விசாரணையைச் சந்திப்பேன் என உறுதி கொண்டிருந்தேன் எனக் கூறுவார்”.* (அல்குர்ஆன், 69:19,20).
*“இவர், உயர்ந்த சுவர்க்கத்தில் திருப்தியான வாழ்வில் இருப்பார்.🔅அதன் கனிகள் அண்மித்திருக்கும்”* (அல்குர்ஆன்,69:21-23). இதுதான் இவருக்கான கூலியாக இருக்கும்.
*காட்சி- 02:* தனது செயல்கள் அடங்கிய பதிவேட்டுப் புத்தகத்தை தனது இடக்கையால் ஒருவன் எடுத்திருப்பான். இவன் தனது நிலைமைக்காக வேதனைப்பட்டுப் புலம்பியவனாக, *“எனது பதிவேடு எனக்குக் கொடுக்கப்படாது இருந்திருக்க வேண்டுமே!🔅எனது விசாரணையை நான் அறியாதிருக்கவும் வேண்டுமே! எனக் கூறுவான்”* (அல்குர்ஆன், 69: 25,26). *“இவனைப் பிடியுங்கள்; இவனுக்கு விலங்கிடுங்கள்.🔅பின்னர் இவனை நரகத்தில் தள்ளி விடுங்கள்.🔅பின்னர், எழுபது முழங்களையுடைய சங்கிலியால் இவனைக் கட்டுங்கள்! (எனக் கூறப்படும்)”* {அல்குர்ஆன், 69:30-32}. இதுதான் இவனுக்கான கூலியாக இருக்கும்!.
இவ்விரு நேரடிக் காட்சிகளையும் அங்கு நாம் காணத்தான் போகின்றோம். சந்தேகமே இல்லாமல் இவ்விரண்டின் விரிவான வாழ்க்கையை அங்கே நாம் உறுதியாக வாழத்தான் போகின்றோம். அனைவரும் அங்கே வலப்பக்கம், அல்லது இடப்பக்கத்திற்கு பிரிந்து விடுவார்கள். அவ்விடத்தில்தான், *“எவர் நரகத்திலிருந்து தூரமாக்கப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுகின்றாரோ அவரே வெற்றிபெற்றவராவார்!”* (அல்குர்ஆன்,03:185) என்ற அல்லாஹ்வின் கூற்றின் யதார்த்தத்தை எம் கண்களால் நேரடியாகக் காண்போம். மேலும், இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் இன்பத்தைத் தவிர வேறெதுவுமில்லை என்பதையும் உண்மையாகவே புரிந்து கொள்வோம்.
யா அல்லாஹ்! உனது அருளைக்கொண்டு கேட்கிறோம்; செயல்கள் அடங்கிய தமது பதிவேட்டை தமது வலக்கரத்தால் எடுப்போரில் எங்களையும் நீ ஆக்கிவிடுவாயாக!”
{ முகநூலில் علي آل حمود என்பவர் }
🌷➖➖➖➖➖➖➖➖🌷
يقينا هذان المشهدان سيقعان:
*المشهد الأول:* شخص آخذ كتابه بيمينه يقول: *« إقرؤوا كتابيه🔅إنّي ظننت أنّي ملاق حسابيه »* (سورة الحاقة، الآية- ١٩،٢٠). وسيكون جزاؤه: *« فهو في عيشة راضية🔅في جنّة عالية🔅قطوفها دانية »* (سورة الحاقة، الآيات : ٢١ - ٢٣)
*المشهد الثاني:* شخص آخذ كتابه بشماله يندب حاله قائلا: *«ياليتني لم أول كتابيه🔅ولم أدر ما حسابيه»* (سورة الحاقة، الآيات: ٢٥ ،٢٦). وسيكون جزاؤه: *« خذوه فغلّوه🔅ثم الجحيم صلّوه🔅ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه »*
هذان المشهدان سنراهما وسنعيش تفاصيلهما قطعا ويقينا... وسينقسم الجميع إلى اليمين، أو الشمال... وعندها نرى بعين اليقين تحقق قول الله عزّ وجلّ *« فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز »* (سورة آل عمران، الآية - ١٨٥)، ونعرف حقا أن الحياة الدنيا ما هي إلا متاع الغرور.
اللهم إنا نسألك برحمتك أن تجعلنا ممّن يأخذ كتابه بيمينه!!
{ *علي آل حمود* في فيس بوك }
🌷➖➖➖➖➖➖➖➖🌷
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா