இதுதான் இறையச்சம்


🔅👉🏿  *“குழப்பம் ஏற்பட்டு விட்டால் இறையச்சத்தின் மூலம் அதை அணைத்து விடுங்கள்!”* என தல்க் இப்னு ஹபீப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியபோது, *“இறையச்சம் என்றால் என்ன?”* என்று அங்கிருந்தோர் அவரிடம் வினவினார்கள். அதற்கவர், *“அல்லாஹ்விடம் நற்கூலி கிடைப்பதை நீங்கள் ஆதரவு வைத்து, அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள (வழிகாட்டல் என்ற) ஒளியின் வழியில் அவனுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதாகும். மேலும், அல்லாஹ்வின்  தண்டனைக்குப் பயந்து, அவனிடமிருந்து வந்துள்ள (வழிகாட்டல் என்ற) ஒளியில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து நடப்பதை நீங்கள் விட்டு விடுவதாகும்!”* என்று பதிலளித்தார்கள்.

{ நூல்: 'பதாயிஉல் fபவாயித்', 02/96 }

🔅👉🏿 *“அஞ்ச வேண்டிய முறையில் அல்லாஹ்வை நீங்கள் அஞ்சுங்கள்!”* (அல்குர்ஆன், 03: 102) ௭ன்ற இவ்வசனத்திற்கு, இப்னு மஸ்ஊத் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் இப்படி விளக்கம் கூறுகின்றார்கள்: *“(அல்லாஹ்தான்) வழிபடப்பட வேண்டும்; அவன் மாறு செய்யப்படக்கூடாது. அவன் நினைவுகூரப்பட வேண்டும்; மறக்கப்படக் கூடாது. அவன் நன்றி செலுத்தப்பட வேண்டும்; அவன்  நன்றி மறக்கப்படக் கூடாது. செய்யும் வணக்க வழிபாடுகள் எல்லாமே  அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் என்ற வட்டத்துக்குள் வந்து விடுகின்றன!”.*

{ நூல்: 'ஜாமிஉல் உலூம் வல்ஹிகம்', 01/401 } 

➖➖➖➖➖➖➖➖➖➖

🔅👈🏿 قال طلق بن حبيب رحمه الله تعالى:    *«إذا وقعت الفتنة فأطفئوها بالتقوى »*.    قالوا    *« وما التقوى؟ »* قال: *«أن تعمل بطاعة الله على نور من الله، ترجو ثواب الله؛ وأن تترك معصية الله على نور من الله، تخاف عقاب الله »* (بدائع الفوائد : ٢/٩٦)

🔅👈🏿 قال إبن مسعود رضي الله عنه في قوله تعالى : *« إتّقوا الله حقّ تقاته »* - آل عمران  ١٠٢ - قال: *"أن يطاع فلا يعصى، ويذكر فلا ينسى، وأن يشكر فلا يكفر "*، وشكره يدخل فيه جميع فعل الطاعات }.

{ جامع العلوم والحكم:  ١/٤٠١ }

🌄➖➖➖➖➖➖➖➖🌄

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم