புலனுணர்வுத் தண்டனைகளுக்குப் பயப்படுவதுபோல், உள ரீதியான தண்டனைகளுக்கும் பயப்பட வேண்டும்!


        *“(தூதராகிய) அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ, அல்லது தமக்கு நோவினை தரும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக்கொள்ளட்டும்!”* (அல்குர்ஆன், 24: 63)  என்ற இவ்வசனத்திற்கு, அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கம்  கூறுகின்றார்கள்:-

         “(நபியின் கட்டளைக்கு மாறு செய்து நடக்கின்றவர்கள்) *தமக்குத் துன்பம் (குழப்பம்) ஏற்படுதல், அல்லது நோவினை தரும் வேதனை ஏற்படுதல்* ஆகிய இவ்விரண்டும் ஏற்படும் என்பது  குறித்தோ, அல்லது இவ்விரண்டில் ஒன்று ஏற்படும் என்பது குறித்தோ எச்சரிக்கையாக இருந்து கொள்ளட்டும்!

              நோவினை தரும் வேதனை ஏற்படுவதற்கு முன்னர், துன்பம் ஏற்படும் என்று இங்கு  துன்பத்தை அல்லாஹ் முதலாவதாகக் குறிப்பிடுகின்றான். இது, நபியின் கட்டளைக்கு மாறு செய்து நடக்கும்போது ஏற்படும் வறட்சி, பட்டினி, நிலநடுக்கம், வெள்ள அனர்த்தம் போன்ற புலனுணர்வுத் தண்டனைகளை விட, நபியின் கட்டளைக்கு மாறு செய்து நடக்கும்போது கிடைக்கும் உள நோய்களும்  உளக் குழப்பங்களும் மிகவுமே ஆபத்தானவை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. இது இவ்வாறிருந்தாலும், நேர்வழியை விட்டும் உள்ளங்கள் தடம்புரண்டு செல்லுதல், துன்பம் நேர்ந்து உள்ளங்கள் குழப்பமடைதல் போன்ற உள ரீதியான தண்டனைகளின் பக்கம் பொதுவாகக் கவனம் செலுத்தாதவர்களாகவே மனிதர்களில் அதிகமானோர் இருக்கின்றார்கள். இவர்கள் கவனம் செலுத்துவதெல்லாம் வெளிப்படையாகப் புலப்படுகின்ற  புலனுணர்வுத் தண்டனைகளின் பக்கம் மட்டும்தான்!.

         இந்தத் தண்டனைகளை நோக்குகின்ற விடயத்தில் மனிதர்கள் மூன்று வகையினராக இருக்கின்றனர்:

*01) உள்ளம் உயிருள்ளவன்:* இவன், உள ரீதியான தண்டனையையும், புலனுணர்வு ரீதியான தண்டனையையும் உணர்ந்து கொள்வான்.

*02) ஈமான் பலவீனமானவன்:* இவன், உள ரீதியான தண்டனையை உணர்ந்து கொள்ளாது புலனுணர்வு ரீதியான தண்டனையையே உணர்ந்து கொள்வான்.

*03) உள்ளம் செத்துப்போனவன்:* இவன், இதையும் உணராது, அதையும் உணராது 'இவையெல்லாம் வழமையான, இயற்கையான விடயங்கள்; எனவே நீங்கள் அமைதியாக இருங்கள்; பயப்படாதீர்கள்!' என்று கூறுவான்”.

{ நூல்: 'ஷர்ஹுல் உஸூல் மின் இல்மில் உஸூல்', பக்கம்: 151,152 }

🎁➖➖➖➖➖➖➖➖🎁

           قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله في تفسير قول الله تعالى: *« فليحذر الّذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم »* (سورة النور : الآية - ٦٣)

             { فليحذر من هذين الأمرين أو من أحدهما:

*١)* « أن تصيبهم فتنة ».

*٢)* « أو يصيبهم عذاب أليم ».

           بدأ بالفتنة قبل العذاب الأليم، إشارة إلى أن ما يحصل من المخالفة من مرض القلوب وفتنة القلوب أشدّ ممّا يحصل بالمخالفة من العذاب الأليم بالقحط والزلزال والفيضانات وما أشبه ذلك... مع أن كثيرا من الناس لا ينظرون إطلاقا إلى العقوبات القلبية، وهي ما يحصل بالقلوب من الزّيغ والفتنة؛ وإنّما ينظرون فقط إلى العقوبات الحسّيّة.

           فالناس في هذه العقوبات ثلاثة أقسام:

*القسم الأول:* حي القلب؛ يشعر بالعقوبة القلبية والعقوبة الحسّيّة.

*القسم الثاني:* ضعيف الإيمان؛ يشعر بالعقوبة الحسّيّة دون القلبية.

*القسم الثالث:* ميت القلب: لا يشعر بهذا ولا بهذا، ويقول: هذه أمور عادية وطبيعية فاسكنوا ولا ترتاعوا ! }.

[ شرح الأصول من علم الأصول للعثيمين، ص - ١٥١،١٥٢ ]

🎁➖➖➖➖➖➖➖➖🎁

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم