நான் கண்ணியமானவன்; பெருமைக்காரன் அல்லன்


🔅🎯       அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “இமாம் ஹசனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களைப் பார்த்து ஒருவர், *'நீங்கள் ஒரு பெருமைக்காரர்!'* என்று கூறினார். அப்போது இமாமவர்கள், *'நான் பெருமைக்காரன் அல்லன்; என்றாலும் நான் கண்ணியமானவன்!'* என்று அவருக்குக்  கூறிவிட்டு, *'கண்ணியம் என்பது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் உரியது. எனினும், (இதை)  நயவஞ்சகர்கள்  அறிந்து கொள்ளமாட்டார்கள்'* (அல்குர்ஆன், 63: 08) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்”.

{ நூல்: 'தரீகுல் ஹிஜ்ரதைன்' லிப்னில் கைய்யிம், பக்கம்: 105 }

🔅🎯  அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மேலும்  கூறுகின்றார்கள்: *கண்ணியத்தை ஆட்சியாளர்களின் வாசல்களில் போய் மக்கள் தேடுகிறார்கள்! ஆனால்,  அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடப்பதிலேயே தவிர  அதை வேறு எதிலும்  அவர்கள் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்!”*.

{ நூல்: 'தரீகுல் ஹிஜ்ரதைன்' லிப்னில் கைய்யிம், பக்கம்: 105 }

➖➖➖➖➖➖➖➖➖➖ 

🎯 قال العلّامة إبن القيم رحمه الله تعالى:-

          { قال رجل للحسن البصري رحمه الله: إنك متكبّر، فقال: لست بمتكبّر، ولكنّي عزيز. وقال تعالى: *« وللّه العزّة ولرسوله وللمؤمنين ولكنّ المنافقين لا يعلمون»* (سورة المنافقون: الآية - ٨ )

{ طريق الهجرتين وباب السعادتين لابن القيم، ص - ١٠٥ }

🎯 قال العلّامة إبن القيم رحمه الله تعالى: *« إن الناس يطلبون العزّة في أبواب الملوك، ولا يجدونها إلا في طاعة الله عزّ وجلّ »*. 

{ طريق الهجرتين وباب السعادتين لابن القيم، ص - ١٠٥ }

🌍➖➖➖➖➖➖➖➖🌍

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

أحدث أقدم