“(நோன்பு நோற்பதற்காக) சஹர் நேரத்தில் உட்கொள்ளப்படும் உணவு 'பbரக்கத்' எனும் இறையருள் பாக்கியமிக்கதாக இருக்கிறது. நோன்பு நோற்ற நாளில் அந்நோன்பைத் தொடர்வதற்கு நோன்பாளிக்கு ஒருவித தெம்பையும் சக்தியையும் கொடுக்கின்ற அம்சம் இந்த சஹர் உணவில் காணப்படுகின்றது. எனவேதான், நோன்பு நோற்கும் முன் சஹர் உணவு உண்ணும்படி இறைத்தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் எம்மைத் தூண்டுவதோடு மாத்திரம் நில்லாமல் அதிலுள்ள சிறப்பையும் அதற்காகக் கிடைக்கும் கூலியையும் எமக்குத் தெளிவுபடுத்திக் காட்டுகின்றார்கள்.
*“சஹர் உணவு உட்கொள்பவர்கள் மீது அல்லாஹ் 'ஸலவாத்' சொல்கிறான். (அதாவது, அவர்களுக்கு அருள் புரிகிறான்.) அவனது வானவர்களும் அவர்கள் மீது 'ஸலவாத்' சொல்கிறார்கள். (அதாவது, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிழைபொறுக்கத் தேடுகின்றார்கள்”)* என இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அருளியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(நூல்: 'அஸ்ஸில்சிலா அஸ்ஸஹீஹா' - 1654, 'ஸஹீஹுத் தர்கீப்' -1066, 'ஸஹீஹுல் ஜாமிஃ' - 1844 )
சஹர் நேரத்தில் உட்கொள்ளப்படும் உணவுக்கு *'அஸ்ஸஹூர்' السَّحور* என்று அரபு மொழியில் சொல்லப்படும். சுபஹ் அதானுக்கு சற்று முன்னரான தெளிவாகத் தெரியும் அதிகாலை உதயமே சஹர் உணவு உட்கொள்வதற்கான நேரமாகும்.
கடமையான ரமழான் கால நோன்புகள் நோற்கும் வேளைகளிலும், சுன்னத்தான நோன்புகள் நோற்கும் வேளைகளிலும் நோன்பு நோற்க நாடுபவர் தனது நோன்புக்கு பலம் சேர்க்கும் நோக்கில் சஹர் உணவு சாப்பிடுவது முக்கியத்துவமானது என்பதற்கான வழிகாட்டல் பணிப்புரைதான் நாம் மேலே குறிப்பிட்டுள்ள நபிமொழியில் காணப்படுகின்றது.
நபிமொழியில் வந்துள்ள *'அல்லாஹ்விடமிருந்து அவனது நல்லடியார்களுக்குக் கிடைக்கும் ஸலவாத்'* என்பது, அவர்களுக்கு அவனின் அருள் கிடைக்கிறது என்பது அதன் அர்த்தமாகும். *'வானவர்களின் ஸலவாத்'* என்பது, அவர்கள் அந்த நல்லடியார்களின் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளும்படி அல்லாஹ்விடம் கேட்கும் பிரார்த்தனையாகும். இது, சஹர் உணவு உண்பதை ஆர்வமூட்டுகின்ற விடயமும், 'சஹர் சாப்பிடுபவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் அருள்' மற்றும் 'வானவர்களின் பிரார்த்தனை' என்று நோன்புக்கு உதவியாக இருக்கின்ற இரு பயன்களை அறிவிப்புச் செய்கின்ற விடயமுமாகும்.
ஆகக் குறைந்தளவிலான உணவு, அல்லது குடிபானத்தைக்கொண்டு சஹர் செய்தாலும் அது சஹர் செய்ததாகிவிடும். அது, ஒரு மிடர் தண்ணீராக இருந்தாலும் சரியே!”.
*[ Omyma Abdelaziz Mahmoud* எனும் முகநூல் பக்கம் *]*
« السُّحورُ بَرَكةٌ، وفيه تَقويةٌ للصائِمِ على مُواصَلَةِ اليومِ، وقد حثَّنا النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ على التَّسحُّرِ، وبيَّن ما فيه من فضْلٍ وأجْرٍ، كما يقولُ في هذا الحديثِ: *{ إنَّ اللهَ وملائكَتَه يُصَلون على المُتَسحِّرينَ }*
[ المصدر: السلسلةالصحيحة - ١٦٥٤، صحيح الترغيب والترهيب - ١٠٦٦، صحيح الجامع - ١٨٤٤ ]
*والسَّحورُ:* هو الطَّعامُ الذي يُؤكَلُ في وَقتِ السَّحَرِ، وهو قُبَيلَ طُلوعِ الفَجرِ الصادِقِ.
وفي هذا أمْرٌ للإرشادِ إلى أهمِّيَّةِ أَكْلَةِ السُّحورِ في رَمَضانَ، ولِمَن أرادَ الصيامَ تطوُّعًا بِقَصدِ التَّقوِّي على الصَّوْمِ، وصَلاةُ اللهِ على عِبادِه رَحمةٌ، وصَلاةُ الملائِكَةِ دُعاءٌ بالمَغفِرَةِ، وهذا تَرغيبٌ في السُّحورِ، وإعلامٌ بأنَّ فيه فائدتيْنِ مِنَ الإعانَةِ على الصَّومِ، ومَحبَّةِ اللهِ لفاعِلِه ورَحمتِه له، ودُعاءِ الملائِكَةِ له بالمَغفِرَةِ، ويَحصُلُ السُّحورُ بأقَلِّ شَيءٍ من الطَّعامِ أو الشَّرابِ، ولو كانتْ شَربةً من ماء ».
🌹🌹🌹🌹👇👇🌹🌹🌹🌹
*✍🏻தமிழில்✍🏻*
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா.