ஆணவம் கொண்டு பெருமையடித்துத் திரிகின்ற ஒவ்வொருவனுக்கும் அவன் அறிவிலும் பலத்திலும் எவ்வளவுதான் உச்ச நிலையை அடைந்திருந்தாலும் *'அவன் பலவீனமானவன்தான்; பேராற்றல் மிக்க அல்லாஹ்விடம் தேவையுடையவன்தான்'* என்ற பெரும் பாடத்தைத்தான் இந்த 'கொரோனா' கற்றுத் தருகின்றது. அல்லாஹ் கூறுகிறான்: *“மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் தேவையுடையவர்கள்தான். அல்லாஹ்வோ (தனது படைப்பினங்களிடமிருந்து யாதொரு) தேவையற்றவனும் புகழுக்குரியவனும் ஆவான்”*. (அல்குர்ஆன், 35:15)
அல்லாஹ் பலமிக்கவன்; அவன் பேராற்றலுடையவன்; வல்லமை பொருந்திய கண்ணியத்திற்குரியவன்; அவன் படைப்பினங்களிடமிருந்து தேவையற்றவன் போன்ற தனித்துவமான பண்புகளைக்கொண்டவனாக இருக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்: *“அல்லாஹ்வை அவனது கண்ணியத்திற்கு ஏற்ற முறையில் அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவனது கைப்பிடிக்குள் இருக்கும். வானங்கள் அவனது வலது கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூய்மையானவன்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் உயர்ந்தவனாகிவிட்டான்”*. (அல்குர்ஆன், 39:67)
எனவே முஸ்லிம்களாகிய நாம், உயிர்க்கொல்லி நோயான இந்ந கொரோனாவை எம்மை விட்டும் தடுத்து, எம் பிரதேசங்கள் மற்றும் நாடுகளை விட்டும் அப்புறப்படுத்த அல்லாஹ் ஒருவனையே வணங்கி அவன் மீதே முழு நம்பிக்கை வைக்க வேண்டியதும் கட்டாயமாகும்.
[ بث الدعوة السلفية في فزان எனும் முகநூல் பக்கம்
*# ﻛﻮﺭﻭﻧﺎ*
ﻗﺪ ﺃﻋﻄﻰ ﻫﺬﺍ ﺍﻟﻮﺑﺎﺀ ﺩﺭﺳﺎ ﻋﻈﻴﻤﺎ ، ﻟﻜﻞ ﻣﺘﻜﺒﺮ ، ﻣﺘﻐﻄﺮﺱ ، ﻣﻬﻤﺎ ﺑﻠﻎ ﻓﻲ ﺍﻟﻌﻠﻢ ﻭﺍﻟﻘﻮﺓ .
ﺃﻧﻪ ﻋﺒﺪ ﺿﻌﻴﻒ ، ﻓﻘﻴﺮ ﺇﻟﻰ ﺍﻟﻠﻪ ﺳﺒﺤﺎﻧﻪ ﻭﺗﻌﺎﻟﻰ:
*۞ { ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺎﺱُ ﺃَﻧﺘُﻢُ ﺍﻟْﻔُﻘَﺮَﺍﺀُ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ ۖ ﻭَﺍﻟﻠَّﻪُ ﻫُﻮَ ﺍﻟْﻐَﻨِﻲُّ ﺍﻟْﺤَﻤِﻴﺪُ }* [ ﻓﺎﻃﺮ : 15 ]
ﻓﺎﻟﻠﻪ ﻫﻮ ﺍﻟﻘﻮﻱ ، ﺍﻟﻌﻈﻴﻢ ، ﺍﻟﻐﻨﻲ ، ﻗﺎﻝ ﺗﻌﺎﻟﻰ *: { ﻭَﻣَﺎ ﻗَﺪَﺭُﻭﺍ ﺍﻟﻠَّﻪَ ﺣَﻖَّ ﻗَﺪْﺭِﻩِ ﻭَﺍﻟْﺄَﺭْﺽُ ﺟَﻤِﻴﻌًﺎ ﻗَﺒْﻀَﺘُﻪُ ﻳَﻮْﻡَ ﺍﻟْﻘِﻴَﺎﻣَﺔِ ﻭَﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕُ ﻣَﻄْﻮِﻳَّﺎﺕٌ ﺑِﻴَﻤِﻴﻨِﻪِ ۚ ﺳُﺒْﺤَﺎﻧَﻪُ ﻭَﺗَﻌَﺎﻟَﻰٰ ﻋَﻤَّﺎ ﻳُﺸْﺮِﻛُﻮﻥَ }* [ ﺍﻟﺰﻣﺮ : 67 ]
ﻓﻌﻠﻴﻨﺎ ﺃﻥ ﻧﻌﺒﺪﻩ ﻭﺣﺪﻩ ، ﻭﻧﺘﻮﻛﻞ ﻋﻠﻴﻪ ﺟﻞ ﺷﺄﻧﻪ ، ﻟﻴﺪﻓﻊ ﻋﻨﺎ ﻫﺬﺍ ﺍﻟﺒﻼﺀ ، ﻭﻳﺼﺮﻑ ﻋﻦ ﺑﻼﺩﻧﺎ ﻫﺬﺍ ﺍﻟﻮﺑﺎﺀ .
[ بث الدعوة السلفية في فزان ]
➖➖➖➖➖➖➖➖➖➖
*✍🏻தமிழில்✍🏻*
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா.