*🌻நபிமொழி🌻*
நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூற தான் கேட்டதாக அபூ உமாமா (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் இவ்வாறு அறிவிக்கிறார்கள்:
*“நான் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது, (கனவில்) இரண்டு மனிதர்கள் என்னிடம் வந்து, என் முழங்கையின் மேற்பகுதியைப் பிடித்து கரடுமுரடான மலையொன்றுக்கு என்னைக் கொண்டுசென்றார்கள். அங்கு வைத்து அதில் ஏறும்படி அவ்விருவரும் என்னிடம் கேட்க, 'அதற்கான சக்தி என்னிடம் இல்லை' என்று நான் கூறினேன். அதற்கு அவர்கள், 'உமக்கு நாம் அதை இலகுபடுத்தித் தருகிறோம்' என்று கூறினர். நானும் ஏறினேன். அம்மலையின் நடுப்பகுதிக்கு நான் வந்தபோது, அங்கே கடும் அழுகுரல் சப்தங்களை கேட்கக்கூடியதாக இருந்தது. 'என்ன சப்தங்கள் இவை?' என அவ்விருவரிடமும் நான் கேட்டேன். 'நரகவாதிகளின் அழுகுரல் சப்தங்கள்' என்று அவர்கள் பதில் தந்தனர்.*
*பின்னர், நான் ஒரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு ஒரு கூட்டத்தார் குதிகால்கள் கட்டப்பட்டு தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்தனர். அவர்களின் வாய் ஓரங்களும் கிழித்துப் பிளக்கப்பட்டிருந்தன. அவற்றால் இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. 'இவர்கள் யார்?' என அவ்விருவரிடமும் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், 'இவர்கள்தான் நோன்பு திறப்பதற்குரிய நேரம் வரமுன்னர் காரணமெதுவுமின்றி இடைநடுவிலேயே நோன்பைத் திறந்தவர்கள்' என்று பதில் கூறினார்கள்”.*
[ நூல்: 'ஸஹீஹுத் தர்ஈப் வத்தர்ஹீப்' - 1005, 'அஸ்ஸஹீஹுல் ஜாமிஃ' - 483 ]
✍🏻 நவீன கால ஹதீஸ் துறை அறிஞர் இமாம் நாஸிருத்தீன் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
*“நோன்பு நோற்று, அந்நோன்பைத் திறப்பதற்குரிய நேரம் வரமுன்னர் வேண்டுமென்றே இடையில் நோன்பைத் திறந்தவருக்கான தண்டனைதான் இதுவாகும். இதுவே இப்படியென்றால், அடிப்படையிலேயே நோன்பு நோற்காதவரின் நிலை எப்படியிருக்கும்!!*
*ஈடேற்றம், ஆரோக்கியம் ஆகியவற்றை இம்மையிலும் மறுமையிலும் தரும்படி அல்லாஹ்விடம் நாம் கேட்போமாக!!*
[ நூல்: 'அஸ்ஸில்சிலா அஸ்ஸஹீஹா' - 3951 ]
▪️ قَالَ رسول الله صلّى الله عليه وسلم:
*(( بَينا أنا نائمٌ أتاني رجلانِ ، فأخذا بِضَبْعَيَّ فأتَيا بي جبلًا وعْرًا ، فقالا : اصعَدْ . فقلتُ : إنِّي لا أُطيقُهُ . فقال : إنَّا سَنُسَهِّلُهُ لكَ فصعدتُ ، حتَّى إذا كنتُ في سَواءِ الجبلِ إذا بأصواتٍ شديدةٍ . قلتُ : ما هذهِ الأصواتُ ؟ قالوا : هذا عُوَاءُ أهلِ النَّارِ ثمَّ انْطُلِقَ بي فإذا أنا بقَومٍ مُعلَقِينَ بعراقيبِهِم ، مُشَقَّقَةٌ أشداقُهُم ، تسيلُ أشداقُهُم دمًا. قال : قلتُ : مَن هؤلاءِ ؟ قال : الَّذينَ يُفطِرونَ قبلَ تحلَّةِ صَومِهِم ))*
👈🏽 صححه الألباني في
📚 صحيح الترغيب - رقم: (1005)
📚 الصحيح المسند - رقم: (483)
▪️ قال الإمام المحدث ناصر الدين الألباني رحمه الله :
«فهذه عقوبة من صام ثم أفطر عمداً قبل حلول وقت الإفطار، فكيف يكون حال من
لا يصوم أصلاً ؟!
نسأل الله السلامة والعافية في الدنيا والآخرة »
📚 السلسلة الصحيحة، الحديث رقم : (3951) .
➖➖➖🎀👇👇🎀➖➖➖
*✍🏻தமிழில்✍🏻*
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா.