மனைவியை மணவிலக்கு (தலாக்) செய்யும் விடயத்தில் அவசரப்பட்டு விடாதீர்கள்


        அல்லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “(மனைவியை) மணவிலக்குச் செய்யும் விடயத்தில் கணவன் அவசரப்படாமல் இருக்க வேண்டும். அவளுடன் அழகிய முறையில் உறவாடி அவன் குடும்பம் நடாத்துவதோடு, மனைவிக்கு அநீதியிழைப்பதிலும்,  அவள் உரிமைகளில் குறைவு செய்வதிலும் அவன் எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும்.

          இவ்வாறே மனைவி தன் கணவன் மீது பணிவு காட்டுவதோடு,  அவனைக் கோபமூட்டாமலும், அவனை வேதனை செய்யாமலும் இருக்க வேண்டியது கட்டாயமானதாகும். மேலும் அவள் தன் கணவனின் கோபத்தைக் கிளறி விட்டு அதனால் தலாக் சொல்லும் நிலைக்கு  அவனைப் போக வைக்காமல் அவனுடன்  இரக்கம், மென்மை, நல்ல பேச்சு ஆகியவற்றை அவள் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். 

         *“பொறுமையாளர்களுக்கு அவர்களது கூலி கணக்கின்றி வழங்கப்படும்”* (அல்குர்ஆன், 39:10) என்று அல்லாஹ் கூறுவது போல், எல்லா நிலைகளிலும் பொறுமையுடனும், அல்லாஹ்விடம் நற்கூலியை எதிர்பார்த்தும் செயல்பட வேண்டியது (கணவன், மனைவி ஆகிய) அனைவர் மீதும் கடமையாகும்.

           எனவே, மனைவி மூலம் இடம்பெறும் சில தவறுகளுக்கு கணவன் பொறுமையாக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும். இவ்வாறே மனைவியும் தனது கணவனிடமிருந்து ஏற்படுகின்ற சில  தவறுகள், சில குறைபாடுகள், இவைபோன்ற இன்னும் சில விடயங்களுக்காகப் பொறுமையாக இருப்பதும் மிகமிக அவசியமாகும். நபி (ஸல்லழ்ழாஹு) அலைஹி வசல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: *இறைவிசுவாசியான கணவன் இறைவிசுவாசியான தன் மனைவியை வெறுக்க வேண்டாம். அவளிடமிருந்து ஒரு பண்பை அவன் வெறுத்தாலும் அவளிடமிருக்கின்ற வேறொரு பண்பில் அவன் திருப்தி கொள்வான்”* (முஸ்லிம்) 

{ நூல்: 'மஜ்மூஉல் பfதாவா', 03/471 }


               قال العلاّمة عبدالعزيز بن باز رحمه الله تعالى:-

        { الواجب على الرجل أن لا يستعجل في الطلاق؛ وأن يعاشر بالمعروف، وأن يحذر ظلم المرأة وبخسها حقوقها.

          والواجب على الزوجة التواضع وعدم إغضاب الزوج وعدم إيذائه. وعليها أن تستعمل اللطف والرفق والكلام الطيب مع الزوج حتى لا تثير حفيظته فيطلق.

         وعلى الجميع الصبر والإحتساب في جميع الأحوال كما قال سبحانه وتعالى: *« إنّما يوفّى الصّابرون أجرهم بغير حساب »* (سورة الزمر، الآية: ١٠)

        فلا بدّ من الصبر على بعض العوج؛ ولابدّ للمرأة أن تصبر أيضا على ما قد يقع من الزوج من بعض الخلل أو بعض التقصير وما أشبه ذلك. قال رسول الله صلّى الله عليه وسلم: *« لايفرك مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر »* (رواه مسلم )

[ مجموع الفتاوى، ٣/٤٧١ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم