இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
“இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அதிகம் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களாக இருந்தார்கள் என்ற இவ்விடயத்தில் அவரை அழகிய முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டியது இறைவிசுவாசிக்கு அவசியமானதாகும். இப்னு உமர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் செய்தி இதை உறுதிப்படுத்துகிறது. *“எனது இரட்சகனே! எனது பாவத்தை நீ மன்னிப்பாயாக; என் பாவமன்னிப்பை நீ ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீ பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவனாகவும் இரக்கமுள்ளவனாகவும் இருக்கின்றாய்'* என்ற இப்பிரார்த்தனையை ஒரு அவையில் நூறு முறை, அல்லது அதைவிட அதிகமாகக் கேட்டதை நாம் எண்ணிக் கணக்கிடக்கூடியவர்களாக இருந்தோம்”. (நூல்: 'ஸஹீஹ் அபீதாவூத்' - 1516)
இவ்வாறே, அல்லாஹ் மனிதர்களைப் பாவங்கள் மூலம் சோதித்து அதற்கான மன்னிப்பை அவனிடம் அவர்கள் கேட்டுவிட்டால் அவர்களை அல்லாஹ் மன்னிக்கின்றான். இது, மனிதர்கள் மீது அல்லாஹ் புரிந்துள்ள அருட்கொடையுமாகும் என நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
*“நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் பாவம் செய்துவிட்டு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்”*. (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்' - 5304)
மனிதன் தனது இரட்சகனிடம் பாமன்னிப்புக் கேட்க வேண்டும்; பாவமன்னிப்புக் கேட்பதை அவன் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்; இதனால், அல்லாஹ்விடம் அவன் பாவமன்னிப்புக் கோரியவர்களின் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுக்கொள்கிறான் என்பதை இந்நபிமொழி தூண்டுகிறது.
எனவே, எனது அன்புச் சகோதரனே! பாவமன்னிப்புக் கோருவதை அதிகப்படுத்திக்கொள்வது உனக்கு அவசியமாகும்.
*«اللهـم اغفر لي، اللهم ارحمني، أستغفر الله وأتوب إليه»*
*(இறைவா! என்னை நீ மன்னித்துவிடு; எனக்கு நீ இரக்கம் காட்டு; அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புக்கோரி அவனிடம் நான் மீள்கிறேன்)* என்பன போன்ற பிரார்த்தனைகளை நீ அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் விடையளிக்கும் நேரத்துடன் உனது பிரார்த்தனையும் உடன்பட்டுவிட்டால் அந்நேரத்தில் அல்லாஹ் உன்னை மன்னித்துவிடுவான்.
இவ்வாறே, நரகவாதிகளில் பெண்கள் அதிகமாக இருப்பதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் பெண்களை அதிகமாக தர்மம் செய்யும்படியும், அதிகமாகப் பாவமன்னிப்புக் கோரும்படியும் பணித்தது பாவமன்னிப்புக் கோருதல் நரகம் நுழைவதைத் தடுக்கின்ற காரணிகளில் உள்ளது என்பதையே தெரிவிக்கின்றது”.
{நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 1/537}
✿ قـــــال العـلامـة الفـقيه ابـن عـثيمين رحـمہ الله تعالـــﮯ:
◄ { والـذي ينبـغي لـلإنسان أن يكـون لـه أسـوة حـسنة فـي رسـول الله ﷺ يكـثر الاستغفـار ، كـما قـال ابـن عمـر رضـي الله عـنهما « إننـا نـعد للـنبي ﷺ فـي المجـلس الواحـد مـئة مـرة أو أكـثر : رب اغـفر لـي وتـب علـي إنـك أنـت الـتواب الـرحيم »
◄ وكـذلك أخـبر ﷺ أن مـن نعـمة الله عـلى العـباد أنه إذا ابـتلاهم بالـذنوب فاستـغفروا الله غفـر لهـم وأنـه قـال : « لـو لـم تـذنبوا لذهـب الله تعـالى بـكم ثـم جـاء بـقوم يـذنبون فـيستغفرون الله تعالـى فيـغفر لـهم » وهـذا حـث علـى أن يستغـفر الإنـسان ربـه ويكـثر مـن الاستـغفار لأنـه ينـال بـذلك درجـة المـستغفرين الله عـز وجـل
◄ فعـليك يـا أخـي بكثـرة الاسـتغفار أكـثر مـن قـول *«اللهـم اغفر لي، اللهم ارحمني، أستغفر الله وأتوب إليه»* ، ومـا أشـبه ذلـك لعـلك تصـادف سـاعة إجـابة مـن الله عـز وجل فيـغفر لـك فـيه
◄ وكـذلك أمـر النبـي ﷺ النـساء أن يكـثرن مـن الصـدقة والاستـغفار حـيث رآهـن أكـثر أهـل النـار، فـدل هـذا عـلى أن الاسـتغفار مـن مـوانع دخـول الـنار
📓〘 شـرح ريـاض الصالحـين 〘1/537〙
➖➖➖➖➖➖➖➖➖➖
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத் (காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா