பிரார்த்தனை மிகப் பலமான ஆயுதமாகும்!


       அஷ்ஷெய்க் ஈஹாப் ஷாஹீன் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்'-

         “பிரார்த்தனை என்பது வணக்க வழிபாடுகளில் அதிக சிறப்புக்குரியதும், இறைவிசுவாசியின் ஆயுதங்களில் மிகப் பலமானதுமாகும். தெளிவு பெறுகின்ற நோக்கில் நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம் ஏதாவது ஒன்றைக் குறித்து கேள்வி கேட்டால், *“நபியே நீர் கூறும்!”*   என்ற அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டுதான் இறைச்செய்தி இறங்கியது. உதாரணமாக, *“(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். அவையிரண்டிலும் பெரும் கேடு இருக்கின்றது என்று நீர் கூறும்!”* (அல்குர்ஆன், 02:219) என்ற வசனத்தைக் குறிப்பிடலாம். நிறைய அல்குர்ஆன் வசனங்கள் இதுபோன்று  இருக்கின்றன. எனினும் பிரார்த்தனை விடயத்தில், *“(நபியே!) என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்...”* என்று அல்லாஹ் கூறிவிட்டு, அதற்கு *“நீர் கூறும்!”* என்று அவன் கூறாமல், *“நிச்சயமாக நான் அருகிலேயே இருக்கின்றேன்!”* (அல்குர்ஆன், 02:186) என்றுதான் அவன் கூறுகின்றான். “இந்த பிரார்த்தனை விடயத்தில் அல்லாஹ் இவ்வாறு செய்திருப்பதற்குக் காரணம், தனக்கும்  தனது அடியார்களுக்குமிடையில் எந்தவொரு இடைத்தரகரையும் தான்  ஏற்படுத்தவில்லை; அவர் மனிதர்களில் மிக சிறப்புக்குரியவரான நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்களாக இருந்தாலும் சரியே ௭ன்பதை தனது அடியார்களுக்கு அவன்  உணர்த்தி,  தன்னிடத்தில் இந்த வணக்க வழிபாட்டிற்கு இருக்கும் உயர் இடத்தைத் தெளிவுபடுத்துவதற்காக வேண்டித்தான்!” என்பதை நாம் புரிந்துகொள்ள  வேண்டும்.

         ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்  இறைத்தூதராவதற்கு மூசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பிரார்த்தனையும் காரணமாகவே இருந்திருக்கிறது. *“எனது குடும்பத்திலிருந்து எனது சகோதரர் ஹாரூனை ஓர் உதவியாளராக எனக்கு நீ ஏற்படுத்துவாயாக!”* (அல்குர்ஆன், 20:29,30) என்ற மூசா (அலைஹிஸ்ஸலாம்)  அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்துத்தான் அதற்கு விடையாக, *“மூசாவே! நீர் கேட்டவற்றைக் கொடுக்கப்பட்டு விட்டீர்”* (அல்குர்ஆன், 20:36) என்று கூறினான். 

          பிரார்த்தனையின் மூலம் அளவுகோல்கள் (நிலைகள்)  மாற்றமடைகின்றன. பலவீனன் பலசாலியாகவும், பலசாலி பலவீனனாகவும், கண்ணியமானவன் இழிவானவனாகவும், இழிவானவன் கண்ணியவானாகவும் மாறி விடுகின்றான். ஆதலால், அல்லாஹ்வின் அடியார்களே! பிரார்த்தனையின் பக்கம் நீங்கள் விரைந்து வாருங்கள்; இரவு, அல்லது பகல், அல்லது  பயணம், அல்லது ஊரில் இருக்கும் தருணம், அல்லது செல்வ நிலை, அல்லது வறுமை, அல்லது ஆரோக்கியம், அல்லது நோய் என்பவற்றோடு இணைக்கப்பட்டதாக இந்த வணக்க வழிபாடு இல்லை. (எல்லா நிலைகளிலும் இந்த வணக்க வழிபாட்டை நிறைவேற்ற முடியும்!).

          எனவே, உனக்காகவும், உன் பிள்ளைகளுக்காகவும், உன் மனைவிக்காகவும், முஸ்லிம்கள் அனைவருக்காகவும் நேர்வழியையும் சீர்திருத்தத்தையும் கேட்டுப் பிரார்த்திக்க நீ மறந்துவிடாதே!”.

[ நூல்: 'அல்fபுர்கான்' அரபு சஞ்சிகை, இதழ் - 965, திகதி 04/06/2019 ]


           قال الشيخ إيهاب شاهين حفظه الله تعالى،:-

          { الدعاء من أجلّ العبادات ومن أقوى أسلحة المؤمن. كان الصحابة عندما يسألون النّبي صلّى الله عليه وسلم عن شيئ كان الوحي ينزل بقوله تعالى *«قل»* ، كما قال تعالى: *« يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير... »* (سورة البقرة، الآية - ٢١٩)، ومثيلاتها كثيرة. أما في شأن الدعاء؛ فقد قال تعالى: *« وإذا سألك عبادي عنّي »* (سورة البقرة، الآية - ١٨٦) فلم يقل: "فقل"، وإنّما قال: *« فإنّي قريب »*! فلم يجعل الله بينه وبين عباده أي واسطة حتى أشرف الخلق صلّى الله عليه وسلم؛ ليبيّن مكانة هذه العبادة عنده تبارك وتعالى.

          فبدعاء موسى عليه السلام أصبح هارون نبيّا، واستجاب الله دعاء موسى - عليه السلام - قوله: *« واجعل لي وزيرا من أهلي هارون أخي »* (سورة طه، الآية - ٢٩،٣٠)؛ فاستجاب الله تعالى، قال: *«قد أوتيت سؤلك يا موسى »* (سورة طه، الآية - ٣٦).

          فبالدعاء تتغيّر الموازين؛ فيصبح الضعيف قويّا، والقويّ ضعيفا، والعزيز ذليلا، والذليل عزيزا؛ فهلمّوا عباد الله إلى الدعاء! فهذه العبادة غير مرتبطة بليل، أو نهار، أو سفر، أو حضر، أو غنى، أو فقر، أو صحة، أو مرض. فلا تنس أن تدعو لنفسك وأبنائك وزوجك بالهداية والصلاح ولعامة المسلمين }.

[ مجلة الفرقان، العدد - ٩٦٥،     التاريخ  ٢٠١٨/٦/٤م ]

🎇➖➖➖➖➖➖➖➖🎇

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم