இஸ்லாமிய மார்க்க மேதை 'ஷைகுல் இஸ்லாம்' இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் சிறைவாசம் அனுபவிப்பதற்காக சிறைக்குள் சென்ற போது, அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் தொழுகைகளைப் பாழ்படுத்தும் 'செஸ்' (shes), மற்றும் தாயக்கட்டு போன்ற பலவகை விளையாட்டுக்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததைக் கண்டார்கள். உடனே, அவர்களுக்கு மறுப்புத் தெரிவித்துவிட்டு, தொழுகையில் கண்டிப்பாகக் கவனம் செலுத்தும்படி அவர்களைப் பணித்ததோடு, நல்ல விடயங்களில் அவர்களுக்கு ஆர்வமும் ஊட்டினார்கள். முடிவில், தடுப்புக்காவலில் இருந்து கொண்டு கல்வியிலும் மார்க்கத்திலும் அவர்கள் ஈடுபாடு காட்டியது பாடசாலைகளில் இருந்து கொண்டு அவர்கள் ஈடுபாடு காட்டுவதை விடச் சிறப்பானதாக இருந்தது. இதனால், தடுத்து வைக்கப்பட்டவர்களில் விடுதலை செய்யப்பட்ட ஒரு தொகையினர் இமாம் அவர்களுடன் சிறையில் தங்கியிருப்பதையே சிறப்புக்குரியதாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்!.
{ நூல்: 'அல்உகூதுத் துர்ரிய்யா', பக்கம்: 178 }
☘➖➖➖➖➖➖➖➖☘
لمّا دخل شيخ الإسلام إبن تيمية السجن وجد المساجين مشتغلين بأنواع من اللعب كالشطرنج والنرد ونحو ذلك من تضييع الصلوات. فأنكر الشيخ عليهم، وأمرهم بملازمة الصلاة، ورغّبهم في أعمال الخير، حتى صار الحبس بما فيه من الإشتغال بالعلم والدين خيرا من المدارس! وصار خلق من المحابيس إذا أطلقوا يختارون الإقامة عنده (أي:البقاء فى السجن).
{ العقود الدرية، ص - ١٧٨ }
☘➖➖➖➖➖➖➖➖☘
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா