உண்மையான கண்ணியம், அந்தஸ்து, சந்தோசம் இறையச்சத்தில்தான் இருக்கிறது


👉🏿 இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:

          “அல்லாஹ்விடம் கண்ணியமானவனாகவும், அவனிடம் நல்ல அந்தஸ்துடனும் இருக்க நீ  விரும்பினால் இறையச்சத்தைக் கடைப்பிடித்துக்கொள். அல்லாஹ்வுக்காக வேண்டி அதிக அச்சத்தோடு வாழ்பவனாக மனிதன் இருக்கின்ற போதெல்லாம் அல்லாஹ்விடம் அவன் அதிக கண்ணியத்திற்குரியவனாகவே இருந்துகொண்டிருப்பான்!”.

{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்' , 1/523 }


              قال الإمام العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:

           [ فإذا كنت تريد أن تكون كريما عند الله وذا منزلة عنده فعليك بالتقوى. فكلما كان الإنسان لله أتقى كان عنده أكرم ]

{ شرح رياض الصالحين ١/ ٥٢٣ }

➖➖➖➖➖➖➖➖➖➖


👉🏿 இஸ்லாமிய மார்க்க மேதை இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) கூறுகின்றார்கள்:

         “காலம் ஒரே நிலையில் நிலைத்திருக்காது என்பதை நீ புரிந்து கொள்! ஒரு தடவை அது வறுமையாகவும், மற்றொரு தடவை அது செல்வச் செழிப்பாகவும், ஒரு தடவை அது கண்ணியமாகவும், மறு தடவை அது இழிவானதாகவும் இருக்கும். ஆனால், எல்லா நிலையிலும் *ஒரேயொரு அடிப்படையில்* தொடர்ந்து நிலைத்திருப்பவனே சந்தோசமானவன்; சீதேவி ஆவான்! *அதுதான், அல்லாஹ்வின் அச்சம் ஆகும்”.*

{ நூல்: 'ஸைதுல் ஹாத்திர்', பக்கம்:118 }


          قال الإمام العلامة إبن الجوزي رحمه الله تعالى:

           [ إعلم أن الزمان لا يثبت على حال. فتارة فقر، وتارة غنى! وتارة عزّ، وتارة ذلّ! . فالسعيد: من لازم أصلا واحدا على كل حال *وهو تقوى الله* ].

{ صيد الخاطر ،  ص -  ١١٨ }

☘➖➖➖➖➖➖➖➖☘

                  ✍தமிழில்✍

                  அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post