சஊதி அரேபிய நாட்டு அறிஞர் அஷ்ஷெய்க் ஸாலிஹ் பின் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:
“வியாபாரப் பொருளொன்றை நீ வாங்க விரும்பினால், கார் ஒன்றை வாங்க நீ விரும்பினால், அல்லது வீடு ஒன்றை, அல்லது ஏதேனும் பொருள் ஒன்றை நீ வாங்க விரும்பி, அதிலே உனக்கு அனுபவம் இல்லாவிட்டால் அனுபவசாலிகளிடம் சென்று அது குறித்துக் கேட்க, விசாரிக்க உனக்கு முடிகிறது! நீ தவறிழைத்து விடுவதையும், நீ நஷ்டமடைந்து விடுவதையும் பயந்துதானே இப்படியெல்லாம் செய்கிறாய்! எனவே, அனுபவசாலிகளிடமும், அதற்குரியவர்களிடமும் நீ கேட்டு தெளிவைப் பெற்றுக்கொள்; ஆலோசனையும் செய்து கொள்; இது, உலக விவகாரங்களில் நீ காட்டுகின்ற அக்கறை.
என்றாலும், மார்க்க விவகாரங்களில் நீ ஏன் அனுபவசாலிகளிடமும், அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர்களிடமும், அறிஞர்களிடமும் சென்று இப்படியெல்லாம் நீ கேட்காமல் இருக்கின்றாய்? உனது உலகப் பாதிப்புகளுக்காக இப்படியெல்லாம் பயந்து தவிர்ந்து கொள்ளும் நீ, உனது மறுமைப் பாதிப்புகளுக்குப் பயந்து ஏன் தவிர்ந்து கொள்ளாமல் இருக்கின்றாய்?”
{ அஷ்ஷெய்க் ஸாலிஹ் பின் பfவ்ஸான் அவர்களது இணையத்தளத்திலிருந்து... }
قال العلامة صالح بن فوزان الفوزان حفظه الله تعالى:
[ أنت إذا أردت أن تشتري سلعة، إذا أردت أن تشتري سيارة، أو تشتري بيتا، أو بضاعة وأنت ما عندك خبرة يمكن تذهب وتسأل أهل الخبرة! فاسأل أهل الخبرة، شاور واسأل أهل الصنف خوفا من أن تخطئ وأن تخسر، هذا في أمور الدنيا!
لماذا في أمور الدين ما تسأل أهل الخبرة وأهل التقوى وأهل العلم؟ لماذا تتحرز لدنياك، ولا تتحرز لدينك؟ ]
{ من موقع الشيخ صالح بن الفوزان الفوزان حفظه الله }
➖➖👇👇👇👇👇👇➖➖
👉🏿 அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிவுள்ளோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்”. (அல்குர்ஆன், 16: 43)
👉🏿 மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “அவர்கள், தமது காரியங்களைத் தமக்கிடையே கலந்தாலோசனை செய்வார்கள்”. (அல்குர்ஆன், 42:38)
👉🏿 மேலும் அல்லாஹ் கூறுகிறான்: “காரியங்களில் அவர்களுடன் நீர் ஆலோசனையும் செய்வீராக!”. (அல்குர்ஆன், 3:159)
🌿➖➖➖➖➖➖➖➖🌿
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா