நம்பகத்தன்மையை பாதுகாத்துக்கொள்ள நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்!


        நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்கள் கூறினார்கள்:

*“........மனிதன் ஒரு முறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனுடைய உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும் ஒரு முறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட) தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்துவிடும்........*

*பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்கமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கையாளர்கள் அரிதாகிவிடுவார்கள். மேலும், ஒருவரைப் பற்றி, 'அவரின் அறிவுதான் என்ன? அவரின் விவேகம்தான் என்ன? அவரின் வீரம்தான் என்ன?' என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால், அந்த மனிதருடைய இதயத்தில் கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது.........“* (நூல்: ஸஹீஹுல் புகாரி, ஹதீஸ் இலக்கம் - 6497)

           இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்)  அவர்கள் மேற்கண்ட நபிமொழியை பின்வருமாறு விளக்கப்படுத்துகிறார்கள்:

          “மனிதன் நம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில்  இரவில், அல்லது பகலில் ஒரு முறை உறங்குகிறான். உறக்கத்திலிருந்து அவன்  விழித்துப் பார்க்கின்றபோது அவனது உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை கழட்டி எடுக்கப்பட்டிருக்கிறது... அல்லாஹ் எங்களையும் உங்களையும் அவனது மார்க்கத்தில் உறுதியாக இருக்க வைக்க வேண்டும் என்று பிராத்திப்போமாக!. இதனால்தான், தூங்குகின்றபோது  திக்ருடனும்,  விழிக்கின்றபோது  திக்ருடனும் செயல்படும்படியாக  மார்க்கத்தில் மனிதனுக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

          தூங்கும்போது ஓத வேண்டிய 'அத்கார்'களையும், தூங்கி எழுந்தவுடன் ஓத வேண்டிய 'அத்கார்'களையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது எந்தளவுக்கு எமக்குக் கட்டாயமானதாக இருக்கின்றது!!

           ஆதலால், திக்ருடன் தூங்காதவர் அவர் தூங்கி எழும்பும்போது அவரது உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை கழட்டி எடுக்கப்பட்டு விடும் என்ற விடயம் அஞ்சப்படுகிறது”.

[ நூல்: 'ஷர்ஹு ஸஹீஹில் புகாரி', 8/395 ]

            

🎯 ‏ قال النبي ﷺ: *«..... ينام الرجل النَّومة فتقبض الأمانة من قلبه»* <صحيح البخاري - ٦٤٩٧>

     قال ابن عثيمين رحمه الله :

       { نسأل الله أن يثبِّتنا وإياكم ، ينام الرجل النَّومة في ليلٍ أو نهارٍ على أنه أمينٌ ، فإذا استيقظ إذا الأمانة منزوعةٌ من قلبه ، ولهذا شرع للإنسان أن ينام على ذكرٍ ، وأن يستيقظ على ذكرٍ ،

‏وما أجدر بنا أن نعلم أذكار النَّوم وأذكار الاستيقاظ ... 

لكن الذي لا ينام على ذكر يخشى أن تنزع الأمانة مِن قلبه إذا استيقظ }.

[شرح صحيح البخاري لابن عثيمين، ٨/٣٩٥ ]

🎁➖➖➖➖➖➖➖➖🎁

               *✍தமிழில்✍*

                அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

            

أحدث أقدم