நவீன கால ஹதீஸ் கலை அறிஞர் இமாம் நாஸிருத்தீன் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, *“இமாம் அவர்களே! நான் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் அதிகம் நோன்பு நோற்பவளாகவும், பணிகளையும் கடமைகளையும் நேர்த்தியாகச் செய்கின்ற ஒரு யுவதியாகவும், அல்குர்ஆனியத் தொடர்பு மூலம் ஆச்சரியத்தக்க இன்பத்தை அடைபவளாகவும் இருந்தேன்..! இப்போது நான், வணக்க வழிபாடுகளின் இன்பத்தையே இழந்துவிட்டேனே..! ஏன்? ”* என வினவினார்கள்.
அப்போது இமாம் அவர்கள், *“உங்கள் கணவர் விடயத்தில் நீங்கள் கவனம் செலுத்தி, அவரது கடமைகளை நிறைவேற்றுவதிலுள்ள செய்திகள் எல்லாம் எப்படி இருக்கின்றன?”* எனக் கேட்டார்கள்.
அதற்கு அப்பெண்மணி, *“இமாம் அவர்களே! உங்களிடம் நான் குர்ஆனைப் பற்றியும், நோன்பு, தொழுகை, வணக்க வழிபாட்டின் இன்பம் குறித்தும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்களோ என் கணவனைப் பற்றி என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களே!”* என்றார்கள்.
இதைச் செவிமடுத்த இமாம் அல்பானீ அவர்கள், *“ஆம்; உண்மைதான் சகோதரி. சில மனைவிமார்கள் ஈமானின் இன்பத்தையும், இறைக்கட்டுப்பாட்டின் சுவையையும், வணக்க வழிபாட்டின் தாக்கத்தையும் ஏன் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர் தெரியுமா?*
இதற்கான காரணத்தை இவ்வாறு கூறுகிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள்: *“மனைவி தன் கணவனின் கடமையை நிறைவேற்றும் வரைக்கும் ஈமானின் இன்பத்தையும், அதன் சுவையையும் பெற்றுக்கொள்ளமாட்டாள்”*.
[ நூல்: 'ஸஹீஹுத் தர்ஈப் வத்தர்ஹீப்' - 1939 ]
🎯 سألت امرأة الشيخ ناصر الدين الألباني رحمه الله فقالت: *«يا شيخ! قبل زواجي كنت فتاة صوّامة قوّامة... أجد لذة للقرآن عجيبة.... والآن فقدتّ حلاوة الطاعات... »*.
قال: *« ما هي أخبار اهتمامك بزوجك؟»*.
قالت: *« يا شيخ! أنا أسألك عن القرآن والصوم والصلاة وحلاوة الطاعة...! وأنت تسألني عن زوجي ؟! »*.
قال: *« نعم يا أختي... لماذا لا تجد بعض النساء حلاوة الإيمان ولذة الطاعة وأثر العبادة؟! »*
قال صلّى الله عليه وسلم: *{ ولا تجد المرأة حلاوة الإيمان حتى تؤدّي حق زوجها }*
[ صحيح الترغيب - 1939 ]
🌹🌹🌹🌹🎀🎀🌹🌹🌹🌹
*✍🏻தமிழில்✍🏻*
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா.