அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“நோயையும், அல்லாஹ்வின் செயலால் மனிதனுக்கு ஏற்படுகின்ற விரும்பத்தகாதவைகளையும் அவன் சபிப்பது என்பது மிக மோசமான காரியங்களில் உள்ளதாகும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! ஏனெனில், அல்லாஹ்வின் விதிப்படி ஏற்பட்ட நோயை மனிதன் சபிப்பதானது அல்லாஹ்வைத் திட்டுதல் என்ற இடத்திற்கு வந்து விடுகின்றது. எனவே, இதுபோன்ற வார்த்தையைச் சொல்லக்கூடியவர் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடிக்கொள்ள வேண்டும்; தனது மார்க்கத்தின்பால் அவர் திரும்பிவிட வேண்டும்; அல்லாஹ்வின் விதிப்பிரகாரமே நோய் ஏற்படுகிறது என்பதை அவர் புரிந்துகொள்ளவும் வேண்டும். மேலும், அவருக்கு ஏற்பட்ட சோதனை அவர் கையால் அவர் தேடிக்கொண்டதாகும். இவ்வகையில், அல்லாஹ் அவருக்கு அநியாயம் செய்யவில்லை; அவர்தான் தனக்குத்தானே அநியாயம் செய்தவராகிவிட்டார்!”.
{ நூல்: 'மஜ்மூஉ fபதாவா இப்னி உஸைமீன்', 03/126 }
قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
« وأمّا من يلعن المرض وما أصابه من فعل الله عزّ وجلّ فهذا من أعظم القبائح - والعياذ بالله - لأنّ لعنه للمرض الذي هو من تقدير الله تعالى بمنزلة سبّ الله سبحانه وتعالى. فعلى من قال مثل هذه الكلمة أن يتوب إلى الله تعالى، وأن يرجع إلى دينه، وأن يعلم أن المرض بتقدير الله، وأن ما أصابه من مصيبة فهو بما كسبت يده، وما ظلمه الله، ولكن كان هو الظالم لنفسه».
{ المصدر: 'مجموع فتاوى ابن عثيمين، ٣/١٢٦ }
➖➖👇👇👇👇👇👇➖➖
👉🏿🔅 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்: *“(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், (உடல் நலிவுற்றிருந்த) 'உம்முஸ் ஸாயிப்b' அல்லது 'உம்முல் முசய்யப்b' எனும் பெண்மணியிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றார்கள். அப்போது, 'உம்முஸ் ஸாயிபே! உம்முல் முசய்யபே! (என விழித்து) உமக்கு என்ன நேர்ந்தது? ஏன் நடுங்கிக்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், 'காய்ச்சல் வந்துவிட்டது; அதில் அல்லாஹ் வளம் சேர்க்காமல் இருக்கட்டும்!' எனக் கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், 'காய்ச்சலை ஏசாதீர்கள்! ஏனெனில் அது, இரும்பின் துருவை கொல்லனின் உலை அகற்றிவிடுவதைப் போன்று ஆதமுடைய பிள்ளைகளான மனிதர்களின் தவறுகளை அகற்றி விடுகிறது!' என்று கூறினார்கள்”*.
(நூல்: முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் - 5031)
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா