எங்கள் இரட்சகனே! எங்களை நீ நேரான வழியில் செலுத்துவாயாக


          அல்லாமா அப்துல் முஹ்சின் பின் ஹம்த் அல்அப்bபாத் அல்பத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *“நேரான வழியில் செலுத்தப்பட வேண்டும் என்ற ஒரு முஸ்லிமின் தேவை, உணவு மற்றும் குடிபானத்திற்கான அவனது தேவையை விட மிகப் பிரதானமானதாகும். ஏனெனில், உணவும் குடிபானமும் உலக வாழ்க்கையில் அவனுக்குத் தேவைப்படுகின்ற கட்டுச்சாதம்தான்; ஆனால் நேர்வழி என்பதோ, மறுமை வீட்டிற்காக அவனுக்குத் தேவைப்படுகின்ற கட்டுச்சாதமாகும்! இதனால்தான், fபர்ழோ அல்லது சுன்னத்தோ எதுவாக இருப்பினும், தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்துகளிலும் கட்டாயம் ஓத வேண்டிய 'அல்fபாத்திஹா' அத்தியாயத்தில், நேரான பாதைக்கு வழிகாட்டல் பெற்றுச் செல்வதற்கான  பிரார்த்தனையைக் கேட்கும்படியாக வந்துள்ளது!”*.

{ நூல்: 'கத்Fபுல் ஜனிய்யித் தானீ', பக்கம்: 113 }


           قال العلّامة عبدالمحسن بن حمد العبّاد البدر حفظه الله تعالى:-

          *« وحاجة المسلم إلى الهداية إلى الصراط المستقيم أعظم من حاجته إلى الطعام والشراب؛ لأن الطعام والشراب زاده في الحياة الدنيا! والصراط المستقيم زاده للدار الآخرة!!  ولهذا جاء الدعاء لطلب الهداية إلى الصراط المستقيم في سورة الفاتحة التي تجب قراءتها في كل ركعة من ركعات الصلاة، سواء كانت فريضة أو نافلة! »*

{ قطف الجني الداني، ص - ١١٣ }

🛣🛣🛣👇👇👇👇🛣🛣🛣

🎯 *“(யா அல்லாஹ்!) நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக!🔅(அது,) நீ யார் மீது அருள் புரிந்தாயோ அவர்களின் வழியாகும். 🔅(அது, உன்) கோபத்துக்கு உள்ளானவர்களினதோ, வழி தவறியவர்களினதோ வழி அன்று”.* (அல்குர்ஆன்: அல்fபாத்திஹா அத்தியாயம், 5,6,7 ம் வசனங்கள்)

🎯 *“எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புரளச் செய்து விடாதே! மேலும், உன்னிடமிருந்து அருளை எமக்கு வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளன்”.* (அல்குர்ஆன், 03: 08)

📖➖➖➖➖➖➖➖➖📖

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post