அல்லாஹ் அருளிய அருட்கொடைகளுக்கு நல்லவர்கள் நன்றி செலுத்துவார்கள்


 *{ துல்கர்னைன்* என்பவர், நல்லாட்சி புரிந்து வந்த உலகப் பேரரசர் ஒருவராவார். யஃஜூஜ், மஃஜூஜ் என்ற குழப்பக்கார கூட்டத்தாரின் தொல்லைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக இவ்வரசர், இரு மலைகளுக்கிடையில் வாழ்ந்து வந்த அக்கூட்டத்தினரை பாரிய இரும்புப் பாளங்களைக் கொண்ட தடுப்புச் சுவரின் மூலம் அடைத்து வைத்தார். எனினும், மறுமை நாள் நெருங்கும்போது அத்தடுப்புச் சுவர் உடைக்கப்பட்டு அவர்கள் வெளியில் வந்து குழப்பம் புரிவார்கள் என நபி «ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்» அவர்கள் கூறியதாக புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் செய்தி  பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. துல்கர்னைன் அவர்களின் செய்தி குறித்து அல்குர்ஆனின் 18 ம் அத்தியாயத்தில், 83 முதல் 98 வரையுள்ள வசனங்களில் பார்க்கலாம்! *}*

        சகோதரர் 'அப்துல்ஹக் ழியாfப்' (عبد الحق ضياف) என்பவர் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு கூறுகிறார்:-

         *“(யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரை அடைத்து வைப்பதற்காக) தடுப்புச் சுவரை துல்கர்னைன் அவர்கள்  கட்டியபோது, 'இது, எனது இரட்சகனிடமிருந்து (எனக்குக் கிடைத்துள்ள) அருளாகும்!' என்றுதான் கூறினார். 'எனது முயற்சியால் (எனது உழைப்பால்) இது கிடைத்தது' ௭ன்று அவர் சொல்லவே இல்லை! இவ்வாறுதான், நல்லவர்களுக்கு அல்லாஹ் தனது அருட்கொடைகளை வழங்கிவிட்டால், அவற்றை அல்லாஹ்வின் கொடைகள் என அவர்கள் ஏற்றுக்கொள்வதோடு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் போக்கும் அவர்களிடம் அதிகரித்துக்கொண்டிருக்கும்!”.*

🛣➖➖➖➖➖➖➖➖🛣


         قال عبدالحق ضياف في صفحته في فيس بوك:-

        *{ لمّا بنى ذوالقرنين السّدّ قال: « هذا رحمة من رّبّي » . ولم يقل إن هذا من جهدي! ، وهكذا الصّالحون إذا منّ الله عليهم بالنّعم إزداد شكرهم واعترافهم بها }*.

🛣➖➖➖➖➖➖➖➖🛣

               *✍தமிழில்✍*

                     அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post